*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 ஆய்வுக் கட்டுரை [ 01 ] 🔥*
*🔥 அல்லாஹ்*
⤵
*உருவமற்றவனா❓*
*✍🏻...தொடர் [ 01 ]*
*☄இறைவனின்*
*திருவுருவம்☄*
*🏮🍂பொதுவாக எல்லா மொழிகளிலும் உறுப்புக்களைப் பற்றி பேசும் போது அது நேரடிப் பொருளில் பயன்படுத்தப்பட்டாலும் சில இடங்களில் நேரடியான பொருள் அல்லாத வேறு கருத்திலும் பயன்படுத்தப்படுவதுண்டு.*
*🏮🍂"தலை வலிக்கிறது' என்று கூறினால் "தலை' என்ற வார்த்தை தலை என்ற நேரடி அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்கிறோம்.* ஆனால் தலைக்கனம் பிடித்தவன் என்று கூறும் போது *கர்வம் என்ற அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்கிறோம்.*
*🏮🍂பயன்படுத்தப்படும் இடத்தையும், அதனுடன் இணைத்துக் கூறப்படும் சொற்களையும் கவனத்தில் கொண்டு அதற்கேற்றவாறு பொருள் கொள்வது தான் சரியான முறையாகும்.*
*🏮🍂இறைவனின் உறுப்பு பற்றிக் கூறப்படும் வசனங்களிலும் இது போன்ற நிலை உள்ளது.* சில இடங்கள் இறைவனின் உறுப்பைக் கூறும் வகையிலும் சில இடங்கள் *வேறு கருத்தைக் கூறும் வகையிலும் அமைந்துள்ளன.*
*🏮🍂இந்த நுணுக்கமான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாதது தான் இதில் ஏற்பட்ட குழப்பங்களுக்குக் காரணம்.*
*🏮🍂இறைவனுக்கு உருவம் உண்டு என்ற கொள்கையில் உறுதியாக உள்ள நல்லறிஞர்கள் கொள்கையில் தெளிவாக இருந்தாலும் அதை நிறுவுவதில் தோல்வி அடைந்துள்ளனர்.* இவர்கள், இறைவனுக்கு உருவம் உண்டு என்று வாதிடும் போது *இறைவனின் உருவம் பற்றிப் பேசும் வசனங்களை மட்டும் ஆதாரமாகக் காட்டாமல் வேறு கருத்தைக் கூறும் வசனங்களையும் ஆதாரமாகக் காட்டியுள்ளனர்.*
*🏮🍂பொருத்தமில்லாமல் நம்மவர்கள் எடுத்துக் காட்டும் ஆதாரங்களில் எதிர்க் கேள்வி கேட்டு இறைவனுக்கு உருவம் உண்டு என்ற தவறான கொள்கை உடையவர்கள் தங்கள் நிலையை நியாயப்படுத்திக் கொள்கின்றனர்.*
_*وَلِلَّهِ الْمَشْرِقُ وَالْمَغْرِبُ ۚ فَأَيْنَمَا تُوَلُّوا فَثَمَّ وَجْهُ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ وَاسِعٌ عَلِيمٌ*_
_*🍃கிழக்கும், மேற்கும் அல்லாஹ்வுக்கே. நீங்கள் எங்கே திரும்பினாலும் அங்கே அல்லாஹ்வின் முகம் உள்ளது. அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.*_
*📖 அல்குர்ஆன் 2:115 📖*
*🏮🍂இந்த வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் எங்கே திரும்பினாலும் அல்லாஹ்வின் முகம் உண்டு என்ற சொற்றொடருக்கு நேரடிப் பொருள் கொண்டால் அல்லாஹ் பல திசையில் இருக்கிறான் என்ற கருத்து வந்து விடும்.* அவன் அர்ஷில் இருக்கிறான் என்ற கருத்துக்கு எதிராகவும் *அத்வைதத்தை நிலை நாட்டும் வகையிலும் அமைந்து விடும்.*
_*وَلَا تَدْعُ مَعَ اللَّهِ إِلَٰهًا آخَرَ ۘ لَا إِلَٰهَ إِلَّا هُوَ ۚ كُلُّ شَيْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَهُ ۚ لَهُ الْحُكْمُ وَإِلَيْهِ تُرْجَعُونَ*_
_*🍃அல்லாஹ்வுடன் வேறு கடவுளை நீர் பிரார்த்திக்காதீர்! அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவனது முகத்தைத் தவிர ஒவ்வொரு பொருளும் அழியக் கூடியது. அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!*_
*📖 அல்குர்ஆன் 28:88 📖*
_*இதில் உள்ள அனைவரும் அழிபவர்கள். மகத்துவமும், கண்ணியமும் மிக்க உமது இறைவனின் முகமே மிஞ்சும்*_
*📖அல்குர்ஆன் 55:26, 27📖*
*🏮🍂இந்த வசனங்களை எடுத்துக் கொள்ளுங்கள்! உம் இறைவனின் முகம் மட்டுமே மிஞ்சும் என்ற சொற்றொடருக்கு இறைவனின் பண்பு மட்டும் மிஞ்சும் என்று கருத்து கொள்ள முடியாது.* இறைவனின் முகம் மட்டும் மிஞ்சும் என்று பொருள் கொண்டு, *அந்த முகம் என்பது இந்த இடத்தில் முழு உருவத்தையும் குறிக்கும் என்று புரிந்து கொள்கிறோம்.*
*🏮🍂சென்னை விவாதத்தில் கூட, இறைவனின் உறுப்புகளைப் பற்றிப் பேசும் எல்லா வசனங்களுக்கும் நேரடிப் பொருள் கொடுத்துத் தான் நாமும் வாதிடுவோம் என்று எதிர்பார்த்து,* அப்படி வாதிட்டால் எளிதில் முறியடித்து விடலாம் என்று தப்புக் கணக்கு போட்டு ஜமாலி விவாதிக்க வந்தார். ஆனால் *சமாளிக்க முடியாத ஆதாரங்களை மட்டுமே எடுத்துக் காட்டுவது என்று நாம் தெளிவாக இருந்ததால் அவரால் தனது தீய கொள்கயைத் தூக்கி நிறுத்த முடியவில்லை.*
*🏮🍂இறைவனின் முகம் தொடர்பாகத் திருக்குர்ஆன் வசனங்களில் கூறப்பட்டுள்ள ஆதாரங்களைப் பார்த்தோம். நாளை முதல் ஹதீஸ்களில் வரும் ஆதாரங்களைப் பார்ப்போம்.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment