பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, August 9, 2020

இஸ்லாத்தை அறிந்து - 60

*☪️☪️மீள்☪️ பதிவுவ☪️☪️* 

 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 

 *🌹🌹🌹🌹* 

 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 

 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*

 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*

 *👉👉👉  தொடர்  பாகம் 60  👈👈👈* 

 *📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚* 

 *31. 🧶முதல்🧶 அத்தஹயாத்தில்🕋 ஸலவாத்து ☪️கூடாதா❓📚 ஹதீஸ்📚* 

 *32. ☪️☪️☪️கொடுத்த🛑 வாக்கிற்காக 🟡மூன்று🟢 நாட்கள்🔵 நின்ற 🟣நபி📚 ஹதீஸ்📚📚📚* 

 *33. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️முஸாபஹா🙋‍♂️ பற்றிய🛑 பலவீனமான📚 ஹதீஸ்கள்📚📚 அனைத்தும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *34. 🧶🧶முடியையும்🧶 நகரத்தையும்🌰 புதைக்க☪️ வேண்டுமா 📚ஹதீஸ்📚📚* 

 *35. ☪️☪️☪️பாவங்களால்🧶🧶🧶 ஹஜ்ருல் 🕋அஸ்வத்⚫ கருத்து ⚫விட்டது⚫  ஹதீஸ்📚📚📚* 

*31. 🕋முதல் அத்தஹயாத்தில் ஸலவாத்து கூடாதா❓ஹதீஸ்🕋* 

 *✍️✍️✍️நபி (ஸல்) அவர்கள் (தொழும்போது) முதலிரண்டு ரக்அத்களின் முடிவி)ல் சூடான கல்மீது அமர்ந்திருப்பதைப் போன்று (சிறிது நேரமே அத்தஹிய்யாத்தில்) அமர்ந்திருப்பார்கள்.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி),* 

 *நூல் :திர்மிதீ (334)* 

 *334* حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ هُوَ الطَّيَالِسِيُّ حَدَّثَنَا شُعْبَةُ أَخْبَرَنَا سَعْدُ بْنُ إِبْرَاهِيمَ قَال سَمِعْتُ أَبَا عُبَيْدَةَ بْنَ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ يُحَدِّثُ عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ كَأَنَّهُ عَلَى الرَّضْفِ قَالَ شُعْبَةُ ثُمَّ حَرَّكَ سَعْدٌ شَفَتَيْهِ بِشَيْءٍ فَأَقُولُ حَتَّى يَقُومَ فَيَقُولُ حَتَّى يَقُومَ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ إِلَّا أَنَّ أَبَا عُبَيْدَةَ لَمْ يَسْمَعْ مِنْ أَبِيهِ وَالْعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ يَخْتَارُونَ أَنْ لَا يُطِيلَ الرَّجُلُ الْقُعُودَ فِي الرَّكْعَتَيْنِ الْأُولَيَيْنِ وَلَا يَزِيدَ عَلَى التَّشَهُّدِ شَيْئًا وَقَالُوا إِنْ زَادَ عَلَى التَّشَهُّدِ فَعَلَيْهِ سَجْدَتَا السَّهْوِ هَكَذَا رُوِيَ عَنْ الشَّعْبِيِّ وَغَيْرِهِ رواه الترمذي

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதே செய்தி நஸாயீ (1163), அபூதாவூத் (844),அஹ்மத் (3474,3700,3867,3940,4157,4158,) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.* 
 *இந்தச் செய்தி செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தி என்பதை இந்தச் செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்கள் கூறியுள்ளார்கள்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *32. 🌐கொடுத்த வாக்கிற்காக மூன்று நாட்கள் நின்ற நபி ஹதீஸ்🌐* 

 *4344* حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى بْنِ فَارِسٍ النَّيْسَابُورِيُّ حَدَّثَنَا مُحَمَّدُ ابْنُ سِنَانٍ حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ طَهْمَانَ عَنْ بُدَيْلٍ عَنْ عَبْدِ الْكَرِيمِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي الْحَمْسَاءِ قَالَ بَايَعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِبَيْعٍ قَبْلَ أَنْ يُبْعَثَ وَبَقِيَتْ لَهُ بَقِيَّةٌ فَوَعَدْتُهُ أَنْ آتِيَهُ بِهَا فِي مَكَانِهِ فَنَسِيتُ ثُمَّ ذَكَرْتُ بَعْدَ ثَلَاثٍ فَجِئْتُ فَإِذَا هُوَ فِي مَكَانِهِ فَقَالَ يَا فَتًى لَقَدْ شَقَقْتَ عَلَيَّ أَنَا هَاهُنَا مُنْذُ ثَلَاثٍ أَنْتَظِرُكَ قَالَ أَبُو دَاوُد قَالَ مُحَمَّدُ بْنُ يَحْيَى هَذَا عِنْدَنَا عَبْدُ الْكَرِيمِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ قَالَ أَبُو دَاوُد هَكَذَا بَلَغَنِي عَنْ عَلِىِّ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ أَبُو دَاوُد بَلَغَنِي أَنَّ بِشْرَ بْنَ السَّرِيِّ رَوَاهُ عَنْ عَبْدِ الْكَرِيمِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ رواه ابوداود

 *✍️✍️✍️நான் நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு முன்பு ஒரு பொருளை வாங்கினேன். அவர்களுக்கு மீதம் தரவேண்டியிருந்தது. எனவே நான், இந்த இடத்தில் இருங்கள் (மீதப் பணத்தைக் கொண்டு) வருகிறேன் என்று வாக்குறுதி வழங்கினேன். (ஆனால்) அதை மறந்துவிட்டேன். மூன்று நாட்களுக்குப் பின்னர் எனக்கு நினைவு வந்தது. அங்கே சென்ற போது அதே இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அப்போது, இளைஞனே எனக்கு கஷ்டத்தைத் தந்துவிட்டாயே? நான் மூன்று நாட்களே இதே இடத்தில் உன்னை எதிர்பார்த்து காத்திருந்தேன் என்று நபிகளார் கூறினார்கள்✍️✍️✍️* .

 *அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ ஹம்சா (ரலி),* 

 *நூல் : அபூதாவூத் (4344)* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதே செய்தி பைஹகீயிலும் (பாகம் :10. பக்கம் :334) இடம்பெற்றுள்ளது.* 
 *இந்தச் செய்தியில் நான்காவது அறிவிப்பாளராக அப்துல் கரீம் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர். இவரின் நம்பகத்தன்மை பற்றி குறிப்புகள் கிடையாது🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

تقريب التهذيب ( *2* / *361( 4152* عبد الكريم ابن عبدالله ابن شقيق العقيلي البصري مجهول من السادسة د

 *🙋‍♂️🙋‍♂️அப்துல் கரீம் பின் அப்துல்லாஹ் பின் ஷகீக் என்பவர் யாரென அறியப்படாதவர்🙋‍♂️🙋‍♂️.* 

 *நூல் : தக்ரீபுத் தஹ்தீப், பாகம் : 2, பக்கம் : 361)* 

 *✍️✍️✍️மேலும் இதன் கருத்தும் ஏற்றுக் கொள்ளும் வகையில் இல்லை. ஒருவர் நில்லுங்கள் வருகிறேன் என்று கூறினால் ஒரு மணி நேரம் அல்லது இரண்டு மணி நேரம் நிற்கலாம். மூன்று நாட்கள் நின்றால் நம்முடைய எத்தனையோ வேலைகள் பாதிக்கப்படும். மேலும் மூன்று நாட்கள் உணவுக்கு என்ன செய்வது? எங்கு உறங்குவது? போன்ற கேள்விகள் இந்த செய்தி பலவீனமானதே என்பதை தெளிவுபடுத்துகிறது.✍️✍️✍️* 

 *33. முஸாபஹா பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும்* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️முஸ்லிம்கள் சந்திக்கும்போது கைகொடுத்தால் பாவம் மன்னிக்கப்படுகின்றது என்ற கருத்தில் பல அறிவிப்புக்கள் வந்தாலும் அவை அனைத்தும் பலவீனமாக இருக்கின்றது.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 
 *பலவீனமான செய்தி 1* 

 *2652* حَدَّثَنَا سُوَيْدٌ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ الرَّجُلُ مِنَّا يَلْقَى أَخَاهُ أَوْ صَدِيقَهُ أَيَنْحَنِي لَهُ قَالَ لَا قَالَ أَفَيَلْتَزِمُهُ وَيُقَبِّلُهُ قَالَ لَا قَالَ أَفَيَأْخُذُ بِيَدِهِ وَيُصَافِحُهُ قَالَ نَعَمْ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ رواه الترمذي

 *✍️✍️✍️அனஸ் பின் மாலிக் (ரலி) அறிவிக்கிறார்கள் :  ஒருவர் அல்லாஹ்வின் தூதரே எங்களில் ஒரு மனிதர் தன் சகோதரனை அல்லது தன் நண்பனைச் சந்திக்கும்போது அவருக்காக (தலை) குனியலாமா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவரைக் கட்டியணைத்து முத்தம் தரலாமா? என்று அவர்கள் கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் கூடாது என்றார்கள். அவருடையை கையைப் பிடித்து முஸாஃபஹா செய்யலாமா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள் ஆம் (செய்யலாம்) என்றார்கள்✍️✍️✍️* .

 *நூல் : திர்மிதீ (2652)* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஹன்ளலா பின் உபைதில்லாஹ் என்பவர் அறிவிக்கின்றார். இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் குறைகூறியுள்ளனர்.* 
 *இவர் குழப்பம் உள்ளவர் என்று யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். புகாரி, அஹ்மது பின் ஹம்பள், அபூ ஹாதிம், யஹ்யா பின் அல்கத்தான், இப்னு ஹிப்பான் ஆகியோர் இவரின் நினைவாற்றல் சரியில்லாத காரணத்தால் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். எனவே இந்தச் செய்தி பலவீனமானதாகும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

 *தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 3 பக்கம் 62)* 

 
 *பலவீனமான செய்தி 2* 

 *11998* حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ حَدَّثَنَا مَيْمُونٌ الْمَرَائِيُّ حَدَّثَنَا مَيْمُونُ بْنُ سِيَاهٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ مُسْلِمَيْنِ الْتَقَيَا فَأَخَذَ أَحَدُهُمَا بِيَدِ صَاحِبِهِ إِلَّا كَانَ حَقًّا عَلَى اللَّهِ أَنْ يَحْضُرَ دُعَاءَهُمَا وَلَا يُفَرِّقَ بَيْنَ أَيْدِيهِمَا حَتَّى يَغْفِرَ لَهُمَا رواه أحمد

 *✍️✍️✍️அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :  இரு முஸ்லிம்கள் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தனது தோழரின் கையைப் பிடிப்பாரானால் அவ்விருவரின் பிரார்த்தனையைக் கவனிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாகி விடுகின்றது. அவ்விருவருக்கும் பாவமன்னிப்பு வழங்கப்படாமல் அவர்களின் கரங்கள் பிரிவதில்லை.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர் : அனஸ் (ரலி)* 

 *நூல் : அஹ்மது (11998)* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து மைமூன் பின் சியாஹ் என்பவர் அறிவிக்கின்றார். இவரை சில அறிஞர்கள் நம்பகமானவர் என்றும் சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்* .
 *ஒரு பேச்சுக்கு இவர் நம்பகமானவர் என்று முடிவு செய்தாலும் இவரிடமிருந்து அறிவிக்கும் மைமூன் என்பவர் யார் என்பதில் குழப்பம் உள்ளது. இவர் மைமூன் பின் மூசா என்று அறிவிப்பாளர் முஹம்மது பின் பக்ர் கூறுகிறார். இதற்கு மாற்றமாக இவர் மைமூன் பின் அஜ்லான் என்று அறிவிப்பாளர் யூசப் பின் யஃகூப் கூறுகிறார்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

مسند أبي يعلى ـ محقق – ( *7* / *165* (

 *4139* – حدثنا إبراهيم بن محمد بن عرعرة حدثنا يوسف بن يعقوب السدوسي حدثنا ميمون بن عجلان عن ميمون نبن سياه عن أنس بن مالك : عن النبي صلى الله عليه و سلم قال : ما من مسلمين التقيا فأخذ احدهما بيد صاحبه إلا كان حقا على الله أن يجيب دعاءهما و لا يرد أيديهما حتى يغفر لهما

 *✍️✍️✍️மைமூன் பின் மூசா நம்பகமானவர். ஆனால் மைமூன் பின் அஜ்லான் என்பவரை நம்பகமானவர் என்று ஏற்கத்தக்க எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை.* 
 *எனவே இந்தச் செய்தியை நம்பகமானவர் அறிவித்தாரா? அல்லது நம்பகத்தன்மை அறியப்படாத மைமூன் பின் அஜ்லான் அறிவித்தாரா? என்பதில் குழப்பம் நிலவுவதால் இதை ஆதாரமாக ஏற்க முடியாது. இதுவும் பலவீனமான செய்தியாகும்.✍️✍️✍️* 

 
 *பலவீனமான செய்தி 3* 

 *3706* حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ أَبِي يَحْيَى الطَّوِيلِ رَجُلٌ مِنْ أَهْلُ الْكُوفَةِ عَنْ زَيْدٍ الْعَمِّيِّ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيَ الرَّجُلَ فَكَلَّمَهُ لَمْ يَصْرِفْ وَجْهَهُ عَنْهُ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْصَرِفُ وَإِذَا صَافَحَهُ لَمْ يَنْزِعْ يَدَهُ مِنْ يَدِهِ حَتَّى يَكُونَ هُوَ الَّذِي يَنْزِعُهَا وَلَمْ يُرَ مُتَقَدِّمًا بِرُكْبَتَيْهِ جَلِيسًا لَهُ قَطُّ رواه إبن ماجه

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நபி (ஸல்) அவர்களிடம் ஒருவர் சந்தித்து பேசினால் அந்த நபர் திரும்பாதவரை நபி (ஸல்) அவர்கள் தன் முகத்தைத் திருப்ப மாட்டார்கள். அவர்களிடம் கைகொடுத்தால் அந்த நபர் அவராகக் கையை விடும் வரை நபி (ஸல்) அவர்கள் தன் கையை எடுக்க மாட்டார்கள். அவர்களுக்கு முன்னால் முட்டுக்காலை மடக்கி அமர்பவர் யாரையும் பார்க்கவே முடியாது🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* .

 *நூல் : இப்னு மாஜா (3706)* 

 *✍️✍️இந்தச் செய்தியை அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து ஸைத் பின் ஹவாரீ அல்அம்மீ என்பவர் அறிவிக்கின்றார்✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இவரைப் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், அபூசுர்ஆ, நஸாயீ, அலீ பின் மதீனீ ,இஜ்லீ, அலீ இப்னு அதீ, இப்னு ஹிப்பான் மற்றும் பலர் கூறியுள்ளனர்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *✍️✍️✍️மேலும் இந்த ஸைத் என்பாரிடமிருந்து இந்தச் செய்தியை அபூ யஹ்யா என்பவர் அறிவிக்கின்றார். இவரும் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், இப்னு ஹஜர் ஆகியோர் கூறியுள்ளனர். எனவே இந்தச் செய்தியும் பலவீனமானதாகும்.✍️✍️✍️* 

 *பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களின் வழியாக வரும் அறிவிப்புகள்* 

 *பலவீனமான செய்தி 4* 

 *2651* حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ عَنْ الْأَجْلَحِ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيَتَصَافَحَانِ إِلَّا غُفِرَ لَهُمَا قَبْلَ أَنْ يَفْتَرِقَا قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ حَدِيثِ أَبِي إِسْحَقَ عَنْ الْبَرَاءِ وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ الْبَرَاءِ مِنْ غَيْرِ وَجْهٍ وَالْأَجْلَحُ هُوَ ابْنُ عَبْدِ اللَّهِ بْنِ حُجَيَّةَ بْنِ عَدِيٍّ الْكِنْدِيُّ الترمذي

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :  இரு முஸ்லிம்கள் சந்திந்து கைகொடுத்துக் கொண்டால் அவ்விருவரும் பிரிவதற்கு முன்பாக அவ்விருவரின் பாவங்களும் மன்னிக்கப்படாமல் இருப்பதில்லை.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)* 

 *நூல் : திர்மிதீ (2651)* 

 *✍️✍️✍️இந்தச் செய்தியில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்றாலும் இந்தச் செய்தியை பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக் தத்லீஸ் என்ற அறிவிப்பாளரை விட்டு அறிவிக்கும் வேலையைச் செய்யக்கூடியவர்.* 
 *இவர் பல நபித்தோழர்களைப் பார்க்காமலும், சந்திக்காமலும் உள்ள நிலையில் இடையில் உள்ள அறிவிப்பாளர்களைக் கூறாமல் அவர்களிடமிருந்து நேரடியாகக் கேட்டது போன்ற தோரணையில் அறிவிப்பார். இவரைப் போன்றவர்கள் நான் நேரடியாகக் கேட்டேன் என்று கூறினாலே இவரின் அறிவிப்புக்கள் ஏற்கப்படும்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆனால் இவர் இந்தச் செய்தியில் தான் நேரடியாகக் கேட்டதைத் தெளிவுபடுத்தும் எந்த வாசகத்தையும் எந்த இடத்திலும் கூறவில்லை. இதன் காரணமாக இவருடைய இந்த அறிவிப்பு பலவீனமானதாகும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

 *தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 8 பக்கம் 65)* 

 *பலவீனமான செய்தி 5* 

 *17854* حَدَّثَنَا حَسَنُ بْنُ مُوسَى حَدَّثَنَا زُهَيْرٌ حَدَّثَنَا أَبُو بَلْجٍ يَحْيَى بْنُ أَبِي سُلَيْمٍ قَالَ حَدَّثَنَا أَبُو الْحَكَمِ عَلِيٌّ الْبَصْرِيُّ عَن أَبِي بَحْرٍ عَن الْبَرَاءِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَيُّمَا مُسْلِمَيْنِ الْتَقَيَا فَأَخَذَ أَحَدُهُمَا بِيَدِ صَاحِبِهِ ثُمَّ حَمِدَ اللَّهَ تَفَرَّقَا لَيْسَ بَيْنَهُمَا خَطِيئَةٌ رواه أحمد

 *✍️✍️✍️அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :  முஸ்லிம்களில் இருவர் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தன் தோழரின் கையை பிடித்து அல்லாஹ்வை புகழ்வாரானால் அவ்விருவரும் தங்களிடத்தில் பாவம் இல்லாத நிலையிலேயே பிரிவார்கள்.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)* 

 *நூல் : அஹ்மது (17854)* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தியை பராஉ (ரலி) அவர்களிடமிருந்து அபூ பஹ்ர் என்பவர் அறிவிக்கின்றார். இவர் யார்? இவருடைய நம்பகத்தன்மை எத்தகையது? ஆகிய விபரங்கள் எதையும் இவரைப் பற்றி எந்த அறிஞரும் கூறவில்லை. இதன் காரணத்தால் இது பலவீனமான செய்தியாகும்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

 *பலவீனமான செய்தி 6* 

 *4535* حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ أَخْبَرَنَا هُشَيْمٌ عَنْ أَبِي بَلْجٍ عَنْ زَيْدٍ أَبِي الْحَكَمِ الْعَنَزِيِّ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ فَتَصَافَحَا وَحَمِدَا اللَّهَ عَزَّ وَجَلَّ وَاسْتَغْفَرَاهُ غُفِرَ لَهُمَا رواه أبو داود

 *✍️✍️✍️அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :  இரண்டு முஸ்லிம்கள் சந்திக்கும் போது கைகொடுத்து அவ்விருவரும் மாண்பும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்வை போற்றி பாவமன்னிப்புத் தேடினால் அவ்விருவரின் பாவங்களும் மன்னிக்கப்படுகின்றது✍️✍️✍️.* 

 *அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி)* 

 *நூல் : அபூதாவுத் (4535)* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தியை பராஉ (ரலி) அவர்களிடமிருந்து ஸைத் பின் அபீ ஷஃஸா என்பவர் அறிவிக்கிறார். இவர் நம்பகமானவர் என்று ஏற்கத்தகுந்த எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. எனவே இது பலவீனமான செய்தியாகும்.✍️✍️✍️* 

 *பலவீனமான செய்தி 7* 

 *17814* حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ أَخْبَرَنَا مَالِكٌ عَنْ أَبِي دَاوُدَ قَالَ لَقِيتُ الْبَرَاءَ بْنَ عَازِبٍ فَسَلَّمَ عَلَيَّ وَأَخَذَ بِيَدِي وَضَحِكَ فِي وَجْهِي قَالَ تَدْرِي لِمَ فَعَلْتُ هَذَا بِكَ قَالَ قُلْتُ لَا أَدْرِي وَلَكِنْ لَا أَرَاكَ فَعَلْتَهُ إِلَّا لِخَيْرٍ قَالَ إِنَّهُ لَقِيَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَفَعَلَ بِي مِثْلَ الَّذِي فَعَلْتُ بِكَ فَسَأَلَنِي فَقُلْتُ مِثْلَ الَّذِي قُلْتَ لِي فَقَالَ مَا مِنْ مُسْلِمَيْنِ يَلْتَقِيَانِ فَيُسَلِّمُ أَحَدُهُمَا عَلَى صَاحِبِهِ وَيَأْخُذُ بِيَدِهِ لَا يَأْخُذُهُ إِلَّا لِلَّهِ عَزَّ وَجَلَّ لَا يَتَفَرَّقَانِ حَتَّى يُغْفَرَ لَهُمَا رواه أحمد

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நுபைஃ பின் ஹாரிஸ் கூறுகிறார் : நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்கள் எனக்கு சலாம் சொல்லி எனது கையைப் பிடித்து என் முகத்தைப் பார்த்து சிரித்தார்கள். உங்களிடத்தில் நான் ஏன் இவ்வாறு செய்தேன் என்று உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். நான் எனக்குத் தெரியாது. என்றாலும் நீங்கள் ஒரு நன்மைக்காகவே இதை செய்திருப்பீர்கள் என நான் கருதுகிறேன் என்று சொன்னேன். அப்போது அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் :* 
 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தபோது நான் உன்னிடத்தில் நடந்துகொண்டவாறு அவர்கள் என்னிடத்தில் நடந்துகொண்டார்கள். மேலும் (இது பற்றி நான் ஏன் இவ்வாறு செய்தேன் தெரியுமா?) என்று கேட்டார்கள். நான் நீங்கள் என்னிடத்தில் கூறியவாறே அவர்களிடம் கூறினேன். அப்போது அவர்கள் இரண்டு முஸ்லிம்கள் சந்திக்கும் போது அவர்களில் ஒருவர் தனது தோழருக்கு சலாம் கூறி அவருடைய கையைப் பிடித்தால் அல்லாஹ்விற்காகவே இவ்வாறு செய்தால் அவ்விருரின் பாவங்களுக்கும் மன்னிக்கப்படாமல் அவ்விருவரும் பிரிந்து செல்வதில்லை என்று கூறினார்கள்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *நூல் : அஹ்மது (17814)* 

 *✍️✍️✍️இந்தச் சம்பவத்தை அறிவிக்கும் நுஃபைஉ பின் ஹாரிஸ் என்ற அபூதாவுத் என்பவர் மிகவும் பலவீனமானவர் ஆவார். இவரை பொய்யர் என்று யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். அம்ர் பின் அலீ, அபூ சுர்ஆ, அபூஹாதிம், புகாரி, திர்மிதீ, நஸாயீ, இப்னு ஹிப்பான், ஹாகிம், தாரமீ, இப்னு ஹஜர், தஹபீ ஆகிய அறிஞர்களும் கூறியுள்ளனர்✍️✍️✍️.* 

 *நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 10 பக்கம் 471)* 

 *பலவீனமான செய்தி 8* 

عمل اليوم والليلة  ( *193* ) أَخْبَرَنَا إِبْرَاهِيمُ بْنُ مُحَمَّدِ بْنِ الضَّحَّاكِ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَنْجِرَ، ثنا عَمْرُو بْنُ عَاصِمٍ الْقَيْسِيُّ، ثنا عَمْرُو بْنُ حَمْزَةَ، ثنا الْمُنْذِرُ بْنُ ثَعْلَبَةَ، عَنْ يَزِيدِ بْنِ عَبْدِ اللَّهِ بِنِ الشِّخِّيرِ، عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: لَقِيتُ رَسُولَ اللَّهِ ஃ فَصَافَحْتُهُ، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا مِنْ أَخْلاقِ الْعَجَمِ، أَوْ هَذَا يُكْرَهُ. فَقَالَ: “ إِنَّ الْمُسْلِمِينَ إِذَا الْتَقَيَا فَتَصَافَحَا وَتَكَاشَرَا بِوُدٍّ وَنَصِيحَةٍ، تَنَاثَرَتْ خَطَايَاهُمَا بَيْنَهُمَا “

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்து கைகொடுத்தேன். அப்போது நான் அல்லாஹ்வின் தூதரே இது அரேபியர் அல்லாத அந்நியர்களின் வழக்கமா? இது வெறுக்கத்தகுந்த செயலா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் இரண்டு முஸ்லிம்கள் சந்தித்து கைகொடுத்து அன்பையும் நல்லுபதேசத்தையும் பறிமாறிக் கொண்டால் அவ்விருவரின் பாவங்களும் நீங்கிவிடுகின்றது எனக் கூறினார்கள்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

 *நூல் : அமலுல் யவ்மி வல்லைலா (193)* 

 *✍️✍️✍️இப்னு சன்னீ அவர்களின் நூலான அமலுல் யவ்மி வல்லைலா என்ற நூலில் இந்தச் செய்தி பதிவாகியுள்ளது.* 
 *இந்தச் செய்தியில் அம்ர் பின் ஹம்சா என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ கூறியுள்ளார். இவர் நம்பகமானவரா? பலவீனமானவரா? என்பது தெரியவில்லை என முஹம்மது பின் இஸ்ஹாக் கூறியுள்ளார். இவ்வாறே இப்னு ஹஜர் அவர்களும் கூறியுள்ளார்கள்.* 
 *இந்த அறிவிப்பாளர் நம்பகமானவர் என்று உறுதி செய்யப்படாத காரணத்தால் இதுவும் பலவீனமான செய்தியாகும்.* 
 *அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பு✍️✍️✍️* 

 
 *பலவீனமான செய்தி 9* 

 *5838* حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْحَارِثِ الْحَارِثِيُّ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ الْبَيْلَمَانِيُّ عَنْ أَبِيهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا لَقِيتَ الْحَاجَّ فَسَلِّمْ عَلَيْهِ وَصَافِحْهُ وَمُرْهُ أَنْ يَسْتَغْفِرَ لَكَ قَبْلَ أَنْ يَدْخُلَ بَيْتَهُ فَإِنَّهُ مَغْفُورٌ لَهُ رواه أحمد

 *🕋🕋🕋அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீ ஹஜ் செய்தவரைச் சந்தித்தால் அவருக்கு சலாம் சொல்லி அவரிடம் கை கொடு. அவர் தன் வீட்டுக்குள் நுழைவதற்கு முன்பாக உனக்காக பாவமன்னிப்புத் தேடுமாறு அவரிடம் கூறு. ஏனென்றால் அவர் பாவம் மன்னிக்கப்பட்டவர் ஆவார்.🕋🕋🕋* 

 *அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)* 

 *நூல் : அஹ்மது (5838)* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தியில் முஹம்மது பின் ஹாரிஸ் முஹம்மது பின் அப்திர் ரஹ்மான், அப்துர் ரஹ்மான் பின் அபீ ஸைத் ஆகிய மூவர் இடம்பெற்றுள்ளனர். இவர்கள் மூவரும் பலவீனமானவர் என்று அறிஞர்கள் கூறியுள்ளனர்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 6 பக்கம் 150)* 

 *✍️எனவே இந்தச் செய்தி கடும் பலவீனம் உள்ள செய்தியாகும்.✍️*  

 *தொடர்பு முறிந்த செய்தி 10* 

 *1413* و حَدَّثَنِي عَنْ مَالِك عَنْ عَطَاءِ بْنِ أَبِي مُسْلِمٍ عَبْدِ اللَّهِ الْخُرَاسَانِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَصَافَحُوا يَذْهَبْ الْغِلُّ وَتَهَادَوْا تَحَابُّوا وَتَذْهَبْ الشَّحْنَاءُ رواه مالك

 *🕋🕋🕋அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் ஒருவர் மற்றவருக்கு கைகொடுங்கள். குரோதம் நீங்கிவிடும்.🕋🕋🕋* 

 *நூல் : முவத்தா (1413)* 

 *✍️✍️✍️இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அதாஉ பின் அபீ முஸ்லிம் என்பவர் அறிவிக்கின்றார். இவர் நபித்தோழர் அல்ல. எனவே இவருக்கும் நபி (ஸல்) அவர்களுக்கும் இடையில் பலர் விடுபட்டுள்ளார்கள். விடுபட்ட நபர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள்? என்ற விபரம் தெரியாத காரணத்தால் இது பலவீனமான செய்தியாகும்✍️✍️✍️.* 

 *🕋அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பு🕋* 

 *பலவீனமான செய்தி 11* 

 *2654* حَدَّثَنَا أَحْمَدُ بْنُ عَبْدَةَ الضَّبِّيُّ حَدَّثَنَا يَحْيَى بْنُ سُلَيْمٍ الطَّائِفِيُّ عَنْ سُفْيَانَ عَنْ مَنْصُورٍ عَنْ خَيْثَمَةَ عَنْ رَجُلٍ عَنْ ابْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مِنْ تَمَامِ التَّحِيَّةِ الْأَخْذُ بِالْيَدِ رواه الترمذي

 *🕋🕋நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கை பிடிப்பதின் மூலமே வாழ்த்துச் சொல்வது பரிபூரணமாகின்றது🕋🕋.* 

 *அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)* 

 *நூல் : திர்மிதீ (2654)* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தியை இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து ஒருமனிதர் அறிவிப்பதாக இந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. அந்த மனிதர் யார்? அவர் எப்படிப்பட்டவர்? என்ற விபரம் எதுவும் இல்லை. எனவே இது பலவீனமான செய்தியாகும்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *அபூதர் (ரலி) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பு* 

 *பலவீனமான செய்தி 12* 

 *4538* حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ أَخْبَرَنَا أَبُو الْحُسَيْنِ يَعْنِي خَالِدَ بْنَ ذَكْوَانَ عَنْ أَيُّوبَ بْنِ بُشَيْرِ بْنِ كَعْبٍ الْعَدَوِيِّ عَنْ رَجُلٍ مِنْ عَنَزَةَ أَنَّهُ قَالَ لِأَبِي ذَرٍّ حَيْثُ سُيِّرَ مِنْ الشَّامِ إِنِّي أُرِيدُ أَنْ أَسْأَلَكَ عَنْ حَدِيثٍ مِنْ حَدِيثِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذًا أُخْبِرُكَ بِهِ إِلَّا أَنْ يَكُونَ سِرًّا قُلْتُ إِنَّهُ لَيْسَ بِسِرٍّ هَلْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَافِحُكُمْ إِذَا لَقِيتُمُوهُ قَالَ مَا لَقِيتُهُ قَطُّ إِلَّا صَافَحَنِي وَبَعَثَ إِلَيَّ ذَاتَ يَوْمٍ وَلَمْ أَكُنْ فِي أَهْلِي فَلَمَّا جِئْتُ أُخْبِرْتُ أَنَّهُ أَرْسَلَ لِي فَأَتَيْتُهُ وَهُوَ عَلَى سَرِيرِهِ فَالْتَزَمَنِي فَكَانَتْ تِلْكَ أَجْوَدَ وَأَجْوَدَ رواه أبو داود

 *✍️✍️✍️அனஸா குலத்தைச் சார்ந்த ஒருவர் கூறுகிறார் : நான் அபூதர் (ரலி) அவர்களிடம் நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்திக்கும் போது அவர்கள் உங்களிடம் கைகொடுப்பார்களா? என்று கேட்டேன். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள் நான் நபி (ஸல்) அவர்களை சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் என்னிடம் கைகொடுக்காமல் இருந்ததில்லை என்று கூறினார்கள்.✍️✍️✍️* 

 *நூல் : அபூதாவுத் (4538)* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தியை அனஸா குலத்தைச் சார்ந்த ஒருவர் அறிவிக்கின்றார். அவர் யார்? எப்படிப்பட்டவர்? என்ற விபரம் இல்லாத காரணத்தால் இது பலவீனமான செய்தியாகும். இத்துடன் இந்த அறிவிப்பில் அய்யூப் பின் புஷைர் என்பாரும் இடம்பெற்றுள்ளார். இவரைப் பற்றிய தகவலும் கிடைக்கவில்லை.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *அபூ உமாமா (ரலி) அவர்கள் வழியாக வரும் அறிவிப்பு* 

 *பலவீனமான செய்தி 13* 

 *21207* حَدَّثَنَا خَلَفُ بْنُ الْوَلِيدِ حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ وَعَلِيُّ بْنُ إِسْحَاقَ أَخْبَرَنَا ابْنُ الْمُبَارَكِ عَنْ يَحْيَى بْنِ أَيُّوبَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ زَحْرٍ عَنْ عَلِيِّ بْنِ يَزِيدَ عَنِ الْقَاسِمِ عَنْ أَبِي أُمَامَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مِنْ تَمَامِ عِيَادَةِ الْمَرِيضِ أَنْ يَضَعَ أَحَدُكُمْ يَدَهُ عَلَى جَبْهَتِهِ أَوْ يَدِهِ فَيَسْأَلُهُ كَيْفَ هُوَ وَتَمَامُ تَحِيَّاتِكُمْ بَيْنَكُمْ الْمُصَافَحَةُ رواه أحمد

 *🕋🕋🕋நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் தன் கையை நோயாளியின் நெற்றியின் மீது அல்லது அவருடைய கையின் மீது வைத்து எப்படி இருக்கின்றீர் என்று கேட்பதே நோயாளியை பூரிபூரணமாக நலம் விசாரிக்கும் முறையாகும். உங்களுக்கிடையே கைகொடுப்பது பரிபூணரமாக வாழ்த்துச் சொல்லும் முறையாகும்.🕋🕋🕋* 

 *அறிவிப்பவர் : அபூஉமாமா (ரலி) நூல் : அஹ்மது (21207)* 

 *✍️✍️✍️இந்தச் செய்தியில் அலீ பின் யஸீத் என்வர் இடம்பெற்றுள்ளார். இவரை பலர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். திர்மிதீ அவர்கள் இதைப் பதிவு செய்துவிட்டு இது வலுவான அறிவிப்பாளர் தொடர் இல்லை என்றும் இதில் இடம்பெறும் அலீ பின் யஸீத் பலவீனமானவர் என்றும் குறிப்பிட்டுள்ளார்கள்✍️✍️✍️.*                 

 *(திர்மிதீ 2655)* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இமாம் அஹ்மது பின் ஹம்பள், யஹ்யா பின் மயீன், அபூ சுர்ஆ, அபூஹாதிம், புகாரி, திர்மிதீ, நஸாயீ, ஹாகிம், தாரகுத்னீ மற்றும் பலர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *நூல் : தஹ்தீபுத் தஹ்தீப்* 

 *(பாகம் 7 : பக்கம் : 397)* 

 *✍️✍️✍️எனவே இதுவும் பலவீனமான செய்தியாகும்.* 
 *முஸ்லிம்கள் சந்திக்கும்போது கைகொடுத்தால் பாவம் மன்னிக்கப்படுகின்றது என்ற கருத்தில் பல அறிவிப்புக்கள் வந்தாலும் அவை அனைத்தும் பலவீனமாக இருக்கின்றது✍️✍️✍️* 

 *34.முடியையும் நகரத்தையும் புதைக்க வேண்டுமா ஹதீஸ்* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️முடி, நகம் இவற்றை புதைக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.* 
 *அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ரலி), நூல்கள் : தப்ரானீ-கபீர், பாகம் : 15, பக்கம் : 408,ஷுஅபுன் ஈமான்-பைஹகீ, பாகம் : 8, பக்கம் : 44, முஸன்னஃப் அபீ ஷைபா, பாகம் : 8, பக்கம் : 47, லுஃபாவுல் உகைலீ, பாகம் : 4, பக்கம் : 332, அல்காமில்-இப்னு அதீ, பாகம் : 4, பக்கம் :201🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* .

 *✍️✍️✍️இந்நூல்களில் லுஃபாவுல் உகைலீ, அல்காமில் ஆகிய நூல்களில் இடம்பெற்றிரும் செய்தியில் அப்துல்லாஹ் பின் அப்துல் அஸீஸ் பின் அபீ ரவ்வாத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார். அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் என்பவர் பொய்யான செய்திகளை அறிவிப்பவர் என்ற இப்னுல் ஜனீத் கூறுகிறார். (ஆதாரம் : தன்ஸீஹு ஷரீஅத்துல் மர்ஃபூஆ, பாகம் : 1, பக்கம் : 73)✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அப்துல்லாஹ் பின் அப்துல் அஜீஸ் பின் அபீ ரவ்வாத் உடைய ஹதீஸ்களை நான் உற்று நோக்கினேன். இவருடைய செய்திகளில் மறுக்கப்பட வேண்டிய செய்திகளைக் கண்டேன். எனவே இவருடைய செய்திகளை நான் எழுதிக் கொள்வதில்லை. இவர் என்னிடத்தில் உண் மையாளர் இல்லை என்று அபூஹாத்திம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (ஆதாரம் : அல்ஜர்ஹு வத்தஃதீல், பாகம் : 5, பக்கம் : 104)🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *35. பாவங்களால் ஹஜ்ருல் அஸ்வத் கருத்து விட்டது  ஹதீஸ்* 

 *✍️✍️✍️ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலி ருந்து இறங்கியது. (அப்போது) அது பாலைவிட வெண்மையானதாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருமையாக்கிவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

 *அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-லி ), நூல் : திர்மிதீ (803)* 

 *✍️✍️✍️இதே கருத்து அஹ்மதிலும் இடம்பெற்றுள்ளது. (ஹதீஸ் எண் : 3356,3659) இடம் பெற்றுள்ளது.* 
 *இச்செய்தியில் அதா பின் அஸ்ஸாயிப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் கடைசி காலத்தில் மூளைகுழம்பியவர். இவர் மூளைகுழம்பிய பின்னர் அவரிடம் கேட்டவர்களில் ஒருவர் ஜரீர் ஆவார். (பத்ஹுல் பாரீ) இந்தச் செய்தியில் அதா பின்ள அஸ்ஸாயிப் என்பவரிடம் ஜரீரே கேட்டுள்ளதால் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.✍️✍️✍️✍️* 

 *36. ☪️☪️☪️உமரும்☪️ அவரது🧕🧕🧕 சகோதரியும் 🧕ஹதீஸ்📚📚📚* 

 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 61* 

 *🌹🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment