பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, August 15, 2020

இஸ்லாத்தை அறிந்து - 61

*☪️☪️மீள்☪️ பதிவுவ☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 61  👈👈👈* 


 *📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚* 


 *36. ☪️☪️☪️உமரும்☪️ அவரது🧕🧕🧕 சகோதரியும் 🧕ஹதீஸ்📚📚📚* 


 *37.🏭🏭🏭 பைத்துல் மஃமூர்🕋🕋🕋 கஅபாவிற்கு 🕋🕋நேராக 🏭🏭🏭உள்ளதா📚 ஹதீஸ்📚📚📚* 


 *38.☪️☪️☪️ நபி(ஸல்) முதலாவதாக🕋🕋🕋 படைக்கப்பட்டவரா❓📚 ஹதீஸ்📚📚📚* 



 *39. 🌐🌐🌐வருடா🌐 வருடம் 🕋🕋ஜகாத்தா❓📚ஹதீஸ்📚📚📚* 


 *40. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எனது🙋‍♂️ தோழர்கள் ☪️☪️விண் ☪️☪️மீன்களைப்🕋🕋 போன்றவர்கள்📚📚 ஹதீஸ்📚📚📚* 



*36.உமரும் அவரது சகோதரியும் ஹதீஸ்* 


 *✍️✍️✍️ஹள்ரத் உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தைத் தழுவிய நிகழ்ச்சியில் அன்னாரின் சகோதரி, நீ அசுத்தமானவர், சுத்தமானவர் தான் இதனைத் தொட வேண்டும்; குளித்து சுத்தமாகி வந்த பின் குர்ஆனின் பிரதியைத் தொடு என்று கூறியதும் இக்கருத்தை வலியுறுத்துகின்றது.✍️✍️✍️* 


 *(மனாருல் ஹுதா)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உமர் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்னால் அவர்களின் சகோதரி அவர்களை நோக்கி, “நீங்கள் அசுத்தமாக இருக்கின்றீர்கள். தூய்மையானவர்களைத் தவிர இதை எவரும் தொடக் கூடாது” என்று கூறினார்கள் என்ற செய்தி முஸ்னத் பஸ்ஸார் என்ற நூலில்279வது ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இமாம் ஹாகிம் அவர்களின் தொகுப்பிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *✍️✍️✍️இதன் அறிவிப்பாளர் வரிசையில் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ஹுனைனி என்பாரும்,உசாமா பின் ஸைத் என்பாரும் இடம் பெற்றுள்ளனர். இவர்கள் இருவரும் பலவீனமானவர்களாவர்.✍️✍️✍️* 


 *37.பைத்துல் மஃமூர் கஅபாவிற்கு நேராக உள்ளதா ஹதீஸ்* 


 *🕋🕋🕋நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “அல்பைத்துல் மஃமூர்” வானத்தில் உள்ளது. அதற்கு “அஸ்ஸுராஹ்” என்று கூறப்படும். அது பைதுல் ஹராம் என்ற கஅபா பள்ளியைப் போன்றதாகும். அதற்கு நேராக (வானத்தில்) உள்ளது. அது விழுந்தால் கஅபாவின் மீதுதான் விழும்.🕋🕋🕋* 


 *நூல் : முஃஜமுல் கபீர்  லித்தப்ரானீ, பாகம் : 11 பக்கம் : 417)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மேற்கண்ட செய்தியில் “பைத்துல் மஃமூர்” என்ற பள்ளிவாசல் கஅபாவிற்கு நேராக மேல் வானத்தில் இருப்பதாகவும், எந்த அளவிற்கென்றால் அது விழுந்தால் கூட கஅபாவின் மீதுதான் விழும் அந்த அளவிற்கு நேராக உள்ளது என்று வந்துள்ளது🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 


 *✍️✍️✍️ஆனால் மேற்கண்ட செய்தி பலவீனமான செய்தியாகும்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️தப்ரானியில் இடம் பெறும் அறிவிப்பில் “இப்னு ஜுரைஜ்” என்பார் இடம் பெறுகிறார். இவர் “முதல்லிஸ்” (அறிவிப்பாளர்களை இருட்டடிப்பு செய்பவர்) ஆவார். இவர் தன்னுடைய ஆசிரியரிடமிருந்து நேரடியாகச் செவியேற்றதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அவருடைய அறிவிப்பை ஏற்றுக் கொள்ள முடியும். ஆனால் எந்த நூலிலும் இவர் நேடியாகச் செவியேற்றதற்குரிய வார்த்தைகளைக் கூறி அறிவிக்கவில்லை. மேலும் இப்னு ஜுரைஜ் என்பாரிடமிருந்து அறிவிக்கும் மாணவர்களும் பலவீனமானவர்களாகவே உள்ளனர்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *38. நபி(ஸல்) முதலாவதாக படைக்கப்பட்டவரா❓ ஹதீஸ்* 


 *🌐முதலாவதாக படைக்கப்பட்டவரா❓🌐* 

 *✍️✍️✍️ஆதம் (அலை) அவர்கள் களி மண்ணிற்கும், தண்ணீருக்கும் மத்தியில் இருக்கும் போதேநான் நபியாக இருந்தேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக பரவலாக ஒரு செய்திமக்களிடத்தில் உள்ளது. இவ்வாறு இவர்கள் குறிப்பிடும் எச்செய்தியும் நம்பத் தகுந்ததல்லஎன்று இமாம் ஸர்கஸீ, முல்லா அலீ காரி போன்றோர் கூறியுள்ளார்கள்✍️✍️✍️.* 


 *🕋🕋🕋“அல்லாஹ் தன்னுடைய ஒளியிலிருந்து ஒரு கற்றையைப் பிடித்து, நீ முஹம்மதாக ஆகிவிடு என்று கூறினான்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு செய்தியும், “ஜாபிரே!ஆரம்பமாக அல்லாஹ் படைத்தது உன்னுடைய நபியின் ஒளி தான்” என்று நபி (ஸல்)அவர்கள் கூறியதாக ஒரு செய்தியும் சொல்லப்படுகின்றது. ஆனால் இதற்கும் எந்தஆதாரமும் இல்லை🕋🕋🕋.* 


 *✍️✍️✍️நான் ஆதம், தண்ணீர், களிமண் இல்லாமல் இருந்த போதே நபியாக இருந்தேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தியை சுயூத்தி இமாம் அவர்கள் தன்னுடைய தைலுல் அஹாதீஸில்மவ்லூஆ என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *✍️✍️✍️இதுவும் நபி (ஸல்) அவர்கள் கூறாத அவர்களின் பெயரால் இட்டுக் கட்டப்பட்டசெய்தியாகும். இதைப் பற்றி அறிஞர் இப்னு தைமிய்யா அவர்கள் பின்வருமாறுகூறுகிறார்கள். இது அறிவின் அடிப்படையிலும் ஆதாரங்களின் அடிப்படையிலும்சரியில்லாததாகும். இதனுடைய பொருளும் அடிப்படையற்றதாகும். இந்த வழிகேடர்கள்நபி (ஸல்) அவர்கள் எல்லாம் படைக்கப்படுவதற்கு முன்பாகவே உருவாகியிருந்தார்கள்என புனைந்து கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாக நபி (ஸல்) அர்ஷைச் சுற்றிலும்ஒளியாக இருந்தார்கள். மேலும், “ஜிப்ரீலே! நான் தான் அந்த ஒளி!” என நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள் என்பது போன்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைக்காட்டுகின்றனர். மேலும் இந்த வழிகேடர்கள் ஜிப்ரீல் குர்ஆனைக் கொண்டு வரும்முன்பே நபி (ஸல்) அதனை மனனம் செய்திருந்தார்கள் எனவும் வாதிக்கின்றனர்✍️✍️✍️.* 


 *(நூல்: ஸில்ஸிலதுல் அஹாதீசுல் லயீஃபா, பாகம் 1, பக்கம் 474)* 


 *39. வருடா வருடம் ஜகாத்தா❓ஹதீஸ்* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உனக்கு இரு நூறு திர்ஹங்கள் இருந்து, அதற்கு ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால், அதில் ஐந்து திர்ஹங்கள் (ஸகாத் கடமையாகும்). இருபது தீனார் ஆகும் வரை (தங்கத்தில் ஸகாத்) கடமையில்லை. இருபது தீனார் இருந்து, அதில் ஒரு வருடம் நிறைவடைந்து விட்டால், அரை தீனார் (ஸகாத்) ஆகும். இந்தக் கணக்கின் அடிப்படையில் இதற்கு அதிகமானவைகளுக்குக் கணக்கிட வேண்டும்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *அறிவிப்பவர்: அலீ (ரழி) நூல் திர்மிதி 1342* 


 *✍️✍️✍️இந்த ஹதீஸில் இடம் பெறும் அறிவிப்பாளரான ஆஸிம் பின் லமுரா என்பவர் பலவீனமானவராவார்.‘இவர் மனனத் தன்மையில் மிகவும் மோசமானவராவார். தெளிவாகத் தவறு செய்யக் கூடியவர். அலீ அவர்களின் சொந்தக் கூற்றில் அதிகமானவற்றை நபியவர்கள் கூறியதாக அறிவிப்பவராவார் (இவர் அறிவித்திருப்பது அலீயின் சொந்தக் கூற்றுதான் என்பது) அறியப்படும் போது, விடப்படுவதற்கு தகுதியானவராவார்’ என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவரைப் பற்றிக் குறை கூறியுள்ளார்கள். ‘இவருடைய அறிவிப்பை வலுவூட்டக் கூடிய வகையில் உறுதியானவர்கள் எவரும் அறிவிக்காத, தவறான செய்திகளை அலீ அவர்களிடமிருந்து இவர் தனித்து அறிவிக்கிறார். குழப்பங்களே இவரிடமிருந்துதான்’ என இமாம் இப்னு அதீ அவர்களும் இவரைக் குறை கூறியுள்ளார்✍️✍️✍️.* 

 *நூற்கள்: அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன், பாகம் 2, பக்கம் 69 அல் மஜ்ரூஹீன் பாகம் 2, பக்கம் 125.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எனவே ஆஸிம் பின் லமுரா அறிவிக்கக் கூடிய அனைத்து அறிவிப்புகளும் பலவீனம் என்பதில் எந்தச் சந்தேகமுமில்லை🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 


 *40. எனது தோழர்கள் விண் மீன்களைப் போன்றவர்கள் ஹதீஸ்* 


صحابي كالنجوم فبأيهم إقتديتم إهتديتم

 *✍️✍️அஸ்ஹாபீ கன்னுஜ‚மி பிஅய்யிஹிம் இக்ததைத்தும் இஹ்ததைத்தும்✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பொருள் : என் தோழர்கள் விண் மீன்களைப் போன்றவர்கள் அவர்களில் எவரை நீங்கள் பின்பற்றினாலும் நீங்கள் நேர்வழி அடைவீர்கள்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 


 *✍️✍️✍️இப்படி ஒரு ஹதீஸை பல மவ்லவிகள் கூறுவதை நாம் அடிக்கடி கேள்விப்பட்டிருக்கிறோம். இந்த ஹதீஸ் ஒரு சில நூல்களில் இடம் பெற்றிருந்தாலும் இதன் அறிவிப்பாளர் வரிசையில் கோளாறு உள்ளன. இந்த ஹதீஸ் உணர்த்துகின்ற கருத்தும் குர்ஆன் ஹதீஸ் போதனைக்களுக்கு முரண்படுகின்றது. முதலில் இதன் அறிவிப்பாளர் வரிசையில் உள்ள குறைபாடுகளைப் பார்ப்போம்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த ஹதீஸை இமாம் இப்னு ஹஸ்மு ரஹ் அவர்கள் தமது அல்இஹ்காம் என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். இதைப் பதிவு செய்த அதே இமாம் அவர்கள் இந்த ஹதீஸைப் பற்றி இது ஏற்கத் தகாத ஹதீஸாகும் என்று குறிப்பிடுகிறார்கள்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 


وأما الرواية: أصحابي كالنجوم فرواية ساقطة، وهذا حديث حدثنيه أبو العباس أحمد بن عمر بن أنس العذري قال: أنا أبو ذر عبد بن أحمد بن محمد الهروي الانصاري قال: أنا علي بن عمر بن أحمد الدارقطني، ثنا القاضي أحمد كامل بن كامل خلف، ثنا عبد الله بن روح، ثنا سلام بن سليمان، ثنا الحارث بن غصين، عن الاعمش، عن أبي سفيان، عن جابر قال: قال رسول الله (ص): أصحابي كالنجوم بأيهم اقتديتم اهتديتم.

قال أبو محمد: أبو سفيان ضعيف، والحارث بن غصين هذا هو أبو وهب الثقفي، وسلام بن سليمان يروي الاحاديث الموضوعة، وهذا منها بلا شك، فهذا رواية ساقطة من طريق ضعيف إسنادها.

الأحكام لابن حزم *[6 /810]* 


 *✍️✍️✍️இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராகிய அபூ சுஃப்யான் என்பார் பலவீனமானவர். ஸலாம் இப்னு ஸுலைம் என்பவர் நிறைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவிப்பவராவார். இந்த ஹதீஸும் அத்தகைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களில் ஒன்றாகும் என்று இமாம் இப்னு ஹஸ்மு அவர்களே குறிப்பிடுகிறார்கள்.✍️✍️✍️* 


 *(அல்இஹ்காம் பாகம் 6, பக்கம்:28)* 


 *41. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆபூபக்ரை🕋 முந்த☪️ முயன்ற🙋‍♂️🙋‍♂️ உமர் 📚ஹதீஸ்📚📚📚* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 62* 


 *🌹🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment