பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, August 16, 2020

சட்டம் அறிவோம் -5

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

            *🪀 கேள்வி - பதில் 🪀*

     *🥀தினமும் ஒரு மார்க்கச்🥀*
                                  ⤵️
               *🥀சட்டம் அறிவோம்🥀*

                                *[ 05 ]*

                     *👇 கேள்வி 👇*

*☄️ஜும்ஆ நாளில்*
         *ஜும்ஆ அத்தியாயத்தை*
                 *ஓதினால் சிறப்பா❓*

🍝🍝🍝    *👇பதில்👇* 🍝🍝🍝

*🏮🍂வெள்ளிக்கிழமை ஜுமுஆ அத்தியாயத்தை ஓதினால் குறிப்பிட்ட நன்மையுண்டு என்று ஒரு செய்தி உள்ளது. ஆனால் அது இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும்.*

الكشف والبيان -

أخبرنا أبو عمرو الفراتي قال : أخبرنا موسى قال : أخبرنا مكي قال : حدّثنا سليمان قال : حدّثنا أبو معاذ عن أبي عصمة عن زيد العمي عن أبي نصرة *عن ابن عباس عن أُبي بن كعب عن النبي ( صلى الله عليه وسلم ) قال : ( من قرأ سورة الجمعة كتب له عشر حسنات بعدد من ذهب إلى الجمعة من مصر من أمصار المسلمين ومن لم يذهب)*

_*🍃யார் ஜுமுஆ அத்தியாயத்தை ஓதுவாரோ அவருக்கு ஒரு பட்டணத்திலிருந்து ஜுமுஆக்கு வருகை தந்தவர், மேலும் வராதவர் எண்ணிக்கையளவு பத்து மடங்கு நன்மைகள் அவருக்கு எழுதப்படும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙️அறிவிப்பவர் :*
             *இப்னு அப்பாஸ் (ரலி)*

*📚நூல் : அல்கஷ்பு*
                             *வல்பயான்📚*

_இச்செய்தியில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளரான_ *அபூ இஸ்மா என்ற நூஹ் பின் அபீ மர்யம் என்பவர் இட்டுக்கட்டிச் சொல்பவர்.* _குறிப்பாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக திருக்குர்ஆனின் சிறப்புகள் தொடர்பாக இட்டுக்கட்டிச் சொல்பவர் என்று கடுமையாக குற்றம் சுமத்தப்பட்டவர்._

ميزان الاعتدال في نقد الرجال - (7 / 56) وقال مسلم وغيره متروك الحديث وقال الحاكم وضع أبو عصمة حديث فضائل القرآن الطويل

_*அபூஇஸ்மா என்பவர் ஹதீஸ் துறையில் விடப்படவேண்டியவர் (பொய்யர்) என்று இமாம் முஸ்லிம் மற்றும் பலர் கூறியுள்ளார்கள். அபூஇஸ்மா என்பவர் திருக்குர்ஆன் சிறப்புகள் தொடர்பான செய்திகளை இட்டுக்கட்டுக் கட்டியவர் என்று இமாம் ஹாகிம் அவர்கள் கூறியுள்ளார்கள்.*_

*📚நூல் : மீஸானுல்*
                           *இஃதிதால்📚*

*🏮🍂தனியான சிறப்புகள் தொடர்பாக ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இல்லாவிட்டாலும் வெள்ளிக்கிழமை இந்த அத்தியாயத்தை நபிகளார் ஓதியுள்ளார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளன.*

) حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ ، حَدَّثَنَا سُلَيْمَانُ - وَهُوَ ابْنُ بِلَالٍ - عَنْ جَعْفَرٍ ، عَنْ أَبِيهِ ، *عَنِ ابْنِ أَبِي رَافِعٍ ، قَالَ : اسْتَخْلَفَ مَرْوَانُ أَبَا هُرَيْرَةَ عَلَى الْمَدِينَةِ، وَخَرَجَ إِلَى مَكَّةَ، فَصَلَّى لَنَا أَبُو هُرَيْرَةَ الْجُمُعَةَ، فَقَرَأَ بَعْدَ سُورَةِ الْجُمُعَةِ فِي الرَّكْعَةِ الْآخِرَةِ { إِذَا جَاءَكَ الْمُنَافِقُونَ }، قَالَ : فَأَدْرَكْتُ أَبَا هُرَيْرَةَ حِينَ انْصَرَفَ، فَقُلْتُ لَهُ : إِنَّكَ قَرَأْتَ بِسُورَتَيْنِ كَانَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ يَقْرَأُ بِهِمَا بِالْكُوفَةِ. فَقَالَ أَبُو هُرَيْرَةَ : إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْرَأُ بِهِمَا يَوْمَ الْجُمُعَةِ.*

_*🍃அபூஹுரைரா (ரலி) அவர்களை மதீனாவின் ஆளுநராக நியமித்துவிட்டு மர்வான் பின் ஹகம் மக்காவிற்குச் சென்றார். (இந்தக் காலகட்டத்தில்) அபூஹுரைரா (ரலி) அவர்கள் எங்களுக்கு_ _*ஜுமுஆத் தொழுகை நடத்தினார்கள். அதில் அல்ஜுமுஆ எனும் (62ஆவது) அத்தியாயத்தை (முதல் ரக்அத்தில்) ஓதினார்கள். பிறகு இரண்டாவது ரக்அத்தில் இதா ஜாஅக்கல் முனாஃபிக்கூன் (என்று தொடங்கும் 63ஆவது) அத்தியாயத்தை ஓதினார்கள்.*_ _தொழுகை முடிந்ததும் அபூ ஹுரைரா (ரலி) அவர்களைச் சந்தித்து, நீங்கள் இரண்டு அத்தியாயங்களை ஓதினீர்கள். இவ்விரு அத்தியாயங்களும் அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் கூஃபாவில் இருந்தபோது ஓதிவந்தவை என்றேன். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள்_ _*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஜுமுஆ நாளில் இவ்விரு அத்தியாயங்களையும் ஓத நான் கேட்டுள்ளேன் என்று விடையளித்தார்கள்.*_

         *📚நூல் : முஸ்லிம்📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment