பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, August 11, 2020

சட்டம் அறிவோம் - 1

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

            *🪀 கேள்வி - பதில் 🪀*

     *🥀தினமும் ஒரு மார்க்கச்🥀*
                                 ⤵️
               *🥀சட்டம் அறிவோம்🥀*

                                *[ 01 ]*

                   *👇 கேள்வி 👇*

_*☄️தொழுகையில் பேசி விட்டால் என்ன செய்வது❓*_

_நான் அறையில் தனியாகத் தொழுது கொண்டிருக்கும் போது என் தாயார் என்னை அழைத்தார். நான் என்ன செய்வதென்று தெரியாமல் என்ன என்று கேட்டு விட்டேன். இதற்காக தொழுகை முடிந்தவுடன் ஸஜ்தா செய்து விட்டேன். இது சரியா❓ ஆதாரத்துடன் விளக்கவும்._

🍝🍝🍝    *👇பதில்👇* 🍝🍝🍝

*🏮🍂தொழுகையில் பேசுவதற்குத் தடை உள்ளது. எனினும் மறதியாகப் பேசி விட்டால் தொழுகை முறியும் என்றோ, ஸஜ்தா செய்ய வேண்டும் என்றோ கூறப்படவில்லை.*

حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ، مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ - وَتَقَارَبَا فِي لَفْظِ الْحَدِيثِ - قَالاَ حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ إِبْرَاهِيمَ، عَنْ حَجَّاجٍ الصَّوَّافِ، عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ هِلاَلِ بْنِ أَبِي مَيْمُونَةَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، *عَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِيِّ، قَالَ بَيْنَا أَنَا أُصَلِّي، مَعَ رَسُولِ اللَّهِ صلى الله عليه وسلم إِذْ عَطَسَ رَجُلٌ مِنَ الْقَوْمِ فَقُلْتُ يَرْحَمُكَ اللَّهُ ‏.‏ فَرَمَانِي الْقَوْمُ بِأَبْصَارِهِمْ فَقُلْتُ وَاثُكْلَ أُمِّيَاهْ مَا شَأْنُكُمْ تَنْظُرُونَ إِلَىَّ ‏.‏ فَجَعَلُوا يَضْرِبُونَ بِأَيْدِيهِمْ عَلَى أَفْخَاذِهِمْ فَلَمَّا رَأَيْتُهُمْ يُصَمِّتُونَنِي لَكِنِّي سَكَتُّ فَلَمَّا صَلَّى رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم فَبِأَبِي هُوَ وَأُمِّي مَا رَأَيْتُ مُعَلِّمًا قَبْلَهُ وَلاَ بَعْدَهُ أَحْسَنَ تَعْلِيمًا مِنْهُ فَوَاللَّهِ مَا كَهَرَنِي وَلاَ ضَرَبَنِي وَلاَ شَتَمَنِي قَالَ ‏‏ إِنَّ هَذِهِ الصَّلاَةَ لاَ يَصْلُحُ فِيهَا شَىْءٌ مِنْ كَلاَمِ النَّاسِ إِنَّمَا هُوَ التَّسْبِيحُ وَالتَّكْبِيرُ وَقِرَاءَةُ الْقُرْآنِ ‏"‏ ‏.‏*

_*🍃நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தேன். அப்போது மக்களில் ஒருவர் தும்மினார். உடனே நான், “யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரிவானாக)” என்று கூறினேன். உடனே மக்கள் என்னை வெறித்துப் பார்த்தனர். நான், “என்னை என் தாய் இழக்கட்டும். நீங்கள் ஏன் என்னை இவ்வாறு பார்க்கிறீர்கள்❓” என்று கேட்டேன். மக்கள் தங்கள் கைகளால் தொடைகள் மீது தட்டினர். என்னை அவர்கள் அமைதியாக இருக்கச் சொல்கிறார்கள் என்பதை நான் அறிந்து கொண்டு நான் அமைதியாகி விட்டேன்.*_

_*என் தாயும், தந்தையும் நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது முடித்ததும் (எனக்கு அறிவுரை) கூறினார்கள். அவர்களுக்கு முன்னரோ, பின்னரோ அவர்களை விட மிக அழகிய முறையில் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரை நான் கண்டதேயில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக அவர்கள் என்னைக் கண்டிக்கவுமில்லை. அடிக்கவுமில்லை. திட்டவுமில்லை. அவர்கள், “இந்தத் தொழுகையானது மக்களின் பேச்சுகளுக்கு உரிய நேரமன்று. தொழுகை என்பது இறைவனைத் துதிப்பதும், பெருமைப்படுத்துவதும், குர்ஆன் ஓதுவதுமாகும்” என்றோ அல்லது இதைப் போன்றோ சொன்னார்கள்.*_

*🎙️அறிவிப்பவர்:*
           *முஆவியா பின்*
                  *அல்ஹகம்*
                         *அஸ்ஸுலமீ (ரலி)*

    *📚 நூல்: முஸ்லிம் 836 📚*

*🏮🍂தொழுகையில் தெரியாமல் பேசிவிட்ட ஒரு நபித்தோழருக்கு நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிக்கின்றார்கள். ஆனால் ஸஜ்தா செய்யுமாறோ, திருப்பித் தொழுமாறோ கூறவில்லை. எனவே மறதியாகப் பேசியதற்குப் பரிகாரம் எதுவும் தேவையில்லை.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment