பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, August 23, 2020

இஸ்லாத்தை அறிந்து - 72

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 72 👈👈👈* 


 *📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚* 


 *🕋🕋🕋பலகீனமான📚📚 ஹதீஸ்கள்📚📚 இறுதி ☪️பாகம்☪️☪️☪️* 


 *97. ☪️☪️☪️ஷஃபான்☪️☪️ 15ல் 🔥🔥 நகரவாசிகள்🔥🔥 விடுதலையா❓📚📚 ஹதீஸ்📚📚📚* 


 *98. ☪️☪️☪️ஸஜிதா🕋 வசனம்☪️ ஓதி☪️ சஜ்தா 🕋செய்யும்🕋 போது 🕋அல்லாஹு☪️ அக்பர்☪️ கூற🕋 வேண்டுமா❓📚📚 ஹதீஸ்📚📚📚*  *99. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பாதத்தை 🙋‍♀️🙋‍♀️மறைப்பது 📚📚ஹதீஸ்📚📚📚* 


 *100. 🕋🕋🕋குர்ஆனில்📚📚 15 📚📚 ஸஜ்தாக்கள்📚📚 ஹதீஸ்📚📚📚*  *101. ☪️☪️☪️தஸ்பீஹ் 📚📚📚ஹதீஸ்📚📚 பற்றி📚📚 ஹதீஸ்📚📚📚* 
*☪️97. ஷஃபான் 15ல்  நகரவாசிகள் விடுதலையா❓ ஹதீஸ்☪️* 


 *✍️✍️✍️ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் என்னிடம் வந்து தெரிவித்தார்கள். இந்த இரவு ஷஃபான் மாதத்தில் 15ம் நாள் இரவாகும். கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளிலுள்ள உரோமங்களின் எண்ணிக்கை அளவிற்கு நரகவாசிகளை அல்லாஹ் இந்த இரவில் விடுதலை வழங்குகிறான் என்று இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்கள் கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *நூல் : பைஹகீ இமாம் பைஹகீ அவர்களுக்குரிய ஷுஃபுல் ஈமான், ஹதீஸ் எண் : 3837* 


 *♻️நமது விளக்கம்♻️* 

 *✍️✍️✍️ஷஅபான் 15ம் நாள் அல்லாஹ் நரகவாசிகளை விடுதலை செய்கிறான் என்று அவர்கள் எடுத்துக்காட்டிய செய்தியின் அரபி மூலம் இதோ :✍️✍️✍️* 

 *3677* – أخبرنا أبو عبد الله الحافظ ، ومحمد بن موسى ، قالا : حدثنا أبو العباس محمد بن يعقوب ، حدثنا محمد بن عيسى بن حيان المدائني ، حدثنا سلام بن سليمان ، أخبرنا سلام الطويل ، عن وهيب المكي ، عن أبي رهم ، أن أبا سعيد الخدري … قَالَتْ عَائِشَةُ: دَخَلَ عَلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَ عَنْهُ ثَوْبَيْهِ ثُمَّ لَمْ يَسْتَتِمَّ أَنْ قَامَ فَلَبِسَهُمَا فَأَخَذَتْنِي غَيْرَةٌ شَدِيدَةٌ ظَنَنْتُ أَنَّهُ يَأْتِي بَعْضَ صُوَيْحِباتِي فَخَرَجْتُ أَتْبَعَهُ فَأَدْرَكْتُهُ بِالْبَقِيعِ بَقِيعِ الْغَرْقَدِ يَسْتَغْفِرُ لِلْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ وَالشُّهَدَاءِ، فَقُلْتُ: بِأَبِي وَأُمِّي أَنْتَ فِي حَاجَةِ رَبِّكَ، وَأَنَا فِي حَاجَةِ الدُّنْيَا فَانْصَرَفْتُ، فَدَخَلْتُ حُجْرَتِي وَلِي نَفَسٌ عَالٍ، وَلَحِقَنِي رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: ” مَا هَذَا النَّفَسُ يَا عَائِشَةُ ؟ “، فَقُلْتُ: بِأَبِي وَأُمِّي أَتَيْتَنِي فَوَضَعْتَ عَنْكَ ثَوْبَيْكَ ثُمَّ لَمْ تَسْتَتِمَّ أَنْ قُمْتَ فَلَبِسْتَهُمَا فَأَخَذَتْنِي غَيْرَةٌ شَدِيدَةٌ، ظَنَنْتُ أَنَّكَ تَأْتِي بَعْضَ صُوَيْحِباتِي حَتَّى رَأَيْتُكَ بِالْبَقِيعِ تَصْنَعُ مَا تَصْنَعُ، قَالَ: ” يَا عَائِشَةُ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللهُ عَلَيْكِ وَرَسُولُهُ، بَلْ أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ، فَقَالَ: هَذِهِ اللَّيْلَةُ لَيْلَةُ النِّصْفِ مِنْ شَعْبَانَ وَلِلَّهِ فِيهَا عُتَقَاءُ مِنَ النَّارِ بِعَدَدِ شُعُورِ غَنَمِ كَلْبٍ، لَا يَنْظُرُ اللهُ فِيهَا إِلَى مُشْرِكٍ، وَلَا إِلَى مُشَاحِنٍ ، وَلَا إِلَى قَاطِعِ رَحِمٍ، وَلَا إِلَى مُسْبِلٍ ، وَلَا إِلَى عَاقٍّ لِوَالِدَيْهِ، وَلَا إِلَى مُدْمِنِ خَمْرٍ “… هَذَا إِسْنَادٌ ضَعِيفٌ


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இமாம் பைஹகீ அவர்களின் ஷ‚அபுல் ஈமான் என்ற நூலி-ருந்து எடுத்துக்காட்டியவர்கள் அந்த செய்தியின் இறுதியில் இமாம் பைஹகீ அவர்களின் அந்த செய்தியின் தரத்தைப் பற்றி கூறியதை வசதியாக இருட்டடிப்பு செய்துவிட்டார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️அதன் இறுதியில் هَذَا إِسْنَادٌ ضَعِيفٌ இது பலவீனமான அறிவிப்பாளர் தொடர் கொண்டதாகும் என்று குறிப்பிட்டு இந்த செய்தி ஆதாரமற்றது என்பதை தெளிவுபடுத்திவிட்டார்கள்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த விஷயத்தை கூறினால் அவர்களின் ஆதாரத்தின் தகுதி மக்களுக்கு தெரிந்து விடும் என்பதால் அதை தெரிந்து கொண்டே மறைத்திருக்கிறார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* .


 *✍️✍️✍️இதன் அறிவிப்பாளர் வரிசையில் ”முஹம்மத் பின் ஈஸா பின் ஹய்யான்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவரை ஹதீஸ்கலை வல்லுநர்கள் மிகக் கடுமையாக குறைகூறியுள்ளனர்.✍️✍️✍️* 

 *171* – محمد بن عيسى بن حيان أبو عبد الله المدائني متروك الحديث (سؤالات الحاكم – *(ج 1 / ص 135)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இவர் ஹதீஸ்களில் கைவிடப்பட்டவராவார் என இமாம் ஹாகிம் குறைகூறியுள்ளார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *(நூல் : ஸ‚ஆலாத்துல் ஹாகிம் பாகம் : 1 பக்கம் : 135)* 

وسألته عن محمد بن عيسى بن حيان الرازي ، فقال : لا شيء . ( سؤالات السلمي للدارقطني – (ج / ص )


 *✍️✍️✍️இவர் எந்த ஒன்றுக்கும் தகுதியில்லாதவர் என இமாம் தாரகுத்னீ விமர்சித்துள்ளார்கள்.✍️✍️✍️* 

 *(நூல் : சுஆலாத்துஸ் சுலமீ)* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக ”ஸல்லாம் பின் சுலைமான்” என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவராவார்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *2704* - سلام بن سليمان بن سوار المدائني ابن أخي شبابة نزيل دمشق وقد ينسب إلى جده ضعيف من صغار التاسعة مات سنة عشر ومائتين أو بعدها ق – تقريب التهذيب : ابن حجر 1 / *261* 

 *✍️✍️✍️ஸல்லாம் பின் சுலைமான் என்பவர் பலவீனமானவராவார் என்று இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்கள்.✍️✍️✍️* 

 *நூல் : தக்ரீபுத் தஹ்தீப், பாகம் :1,பக்கம் : 261* 


 *🌐98. ஸஜிதா வசனம் ஓதி சஜ்தா செய்யும் போது அல்லாஹு அக்பர் கூற வேண்டுமா❓ஹதீஸ்🌐* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஸஜ்தா வசனம் ஓதி சஜ்தா செய்யும் போது, அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டுமா❓* 
 *குர்ஆன் வசனங்களை ஓதி ஸஜ்தா செய்யும் போது, அல்லாஹு அக்பர் என்று கூற வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அவை பலவீனமான ஹதீஸ்களாக உள்ளன🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🕋🕋🕋அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர். அவர்கள் ஸஜ்தா வசனத்தைக் கடக்கும் போது, தக்பீர் சொல்லி ஸஜ்தா செய்வார்கள். அவர்களுடன் நாங்களும் செய்வோம் என்று இப்னு உமர் (ரலி) அறிவித்ததாக நாஃபிஉ மூலம் அப்துல்லாஹ் பின் உமர் என்பார் அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் இடம் பெற்றுள்ளது. இந்த அப்துல்லாஹ் பின் உமர் என்பவரை பல அறிஞர்கள் குறை கூறியிருக்கின்றார்கள் என்று ஹாபிழ் முன்திரி குறிப்பிடுகின்றார்கள். அப்துல்லாஹ் பின் உமர் என்பவரை அலீ பின் முதைனீ அவர்களும் குறை கூறியுள்ளார்கள். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.🕋🕋🕋* 


 *✍️✍️✍️அப்துல்லாஹ் பின் உமர் என்பதற்குப் பதிலாக உபைதுல்லாஹ் பின் உமர் என்ற தொடருடன் இதே கருத்தைக் கொண்ட ஹதீஸ் ஹாகிமில் பதிவாகியுள்ளது. இவர் நம்பகமானவர், எனினும் இந்த ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் தக்பீர் சொன்னார்கள் என்ற வாசகம் இடம் பெறவில்லை. எனவே ஸஜ்தா வசனத்தை ஓதும் போது தக்பீர் சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எதுவும் இல்லை✍️✍️✍️.* 


 *🛑99. பாதத்தை மறைப்பது ஹதீஸ்🛑* 


 *♻️பாதத்தை மறைப்பது ♻️* 

 *🧕🧕🧕உம்மு ஸல்மா (ர­) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண் கீழங்கி இல்லாத போது நீளமான சட்டை யுடனும் ஒரு முக்காடு உடனும் தொழலாமா என்று கேட்டார் அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீளமான சட்டை (பென்னுடைய) பாதங்களை மறைக்ககூடிய அளவிற்கு இருந்தால் தொழுது கொள்ளலாம் என்று பதிள­தந்தார்கள். நூல்: அபூதாவூத் (ர­லி)🧕🧕🧕* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதில் அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் (தீனார்) என்பவர் இடப் பெருகிறார் இவர் பலவீமானவர் இவரை அறிஞர்களான இப்னு மயீன் அவர்கள் இவருடைய செய்தியில் பலவீனம் இருக்கிறது என்றும் அபூஹாதம் அவர்கள் இவர் பலவீனமானவர் இவருடைய செய்திகளை எழுதிக்கொள்ளலாம் ஆனால் ஆதாரத்திற்கு எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் இப்னு அதீ அவாகள் இவர் அறிவிக்கூடிய செய்திகளில் சிலது நிராகரிக்கப்பட வேண்டியது (பெரும்பாலும்) இவருடைய செய்தியை யாரும் வழிமொழிந்து அறிவிப்பதில்லை மொத்தத்தில் இவர் பலவீமானவர்களின் பட்டிய­ல் எழுதப்பட வேண்டியவர் என்றும் கூறுகின்றனர்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *நூல்: தஹ்தீபுல் கமால் (பாகம் 17 பக்கம் 208)* 


 *🟢100. குர்ஆனில் 15  ஸஜ்தாக்கள் ஹதீஸ்🟢* 


 *🕋ஸஜ்தா வசனம்🕋* 

 *☪️☪️☪️அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்ஆனில் 15 ஸஜ்தாக்களை என்னிடம் ஓதிக் காண்பித்தார்கள் என்றும், அவற்றில் (காஃப் அத்தியாயத்தி­ருந்து குர்ஆனின் கடைசி அத்தியாயம் வரையிலான) முஃபஸ்ஸலான அத்தியாயங்களில் இடம் பெறும் மூன்று ஸஜ்தாக்களும், சூரத்துல் ஹஜ்ஜில் இடம் பெறும் இரண்டு ஸஜ்தாக்களும் அடங்கும்” என்று அம்ர் பின் அல்ஆஸ் (ர­) அறிவிக்கும் செய்தி அபூதாவூதில் 1193வது ஹதீஸாகவும்☪️☪️☪️* 

 *✍️✍️✍️இந்த ஹதீஸின் அடிப்படையில் தான் மேற்கண்ட 15 இடங்களிலும் ஸஜ்தா செய்யப்படுகின்றது. ஆனால் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல! இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெறும் ஹாரிஸ் பின் ஸயீத் என்பார் யாரென அறியப்படாதவர் ஆவார். அதனால் குர்ஆனில் 15 ஸஜ்தா வசனங்கள் என்ற கருத்து ஆதாரமற்றதாக ஆகி விடுகின்றது. ”நான் நபி (ஸல்) அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன். ஆனால் முஃபஸ்ஸலான அத்தியாயங் களி­ருந்து எதுவும் அவற்றில் இடம் பெறவில்லை. அல்அஃராஃப், ரஃது, நஹ்ல், பனீ இஸ்ராயீல், மர்யம், ஹஜ், ஃபுர்கான், நம்ல், ஸஜ்தா, ஸாத், ஹாமீம் ஆகியவையே ஸஜ்தாவுக்குரிய அந்த அத்தியாயங்களாகும்” என்று அபூ தர்தா (ர­) அறிவிக்கும் ஹதீஸ் இப்னுமாஜாவில் 1046 வது ஹதீஸாக இடம் பெற்றுள்ளது.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த ஹதீஸின் அடிப்படையில் குர்ஆனில் 11 ஸஜ்தா வசனங்கள் என்று கூறுவோரும் உள்ளனர். ஆனால் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் மஹ்தீ பின் அப்துர்ரஹ்மான் பின் உபைதா பின் காதிர் என்பவர் யாரென அறியப்படாதவர். எனவே 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் ஆதாரமற்றதாகி விடுகின்றது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் 11 ஸஜ்தாக்கள் செய்திருக்கின்றேன்.* *நஜ்ம் அத்தியாயத்தில் இடம் பெற்றிருக்கும் அந்த ஸஜ்தாவும் அடங்கும்” என்று அபூதர்தா (ர­) அறிவிக்கும் இன்னோர் அறிவிப்பு திர்மிதியில் 519வது ஹதீஸாகவும் இப்னுமாஜாவின் 1045 வது ஹதீஸாகவும் பதிவு செய்யப்பட்டுள்து.* 
 *இவ்விரண்டிலும் உமர் திமிஷ்கி என்பவர் இடம் பெறுகின்றார். இவரும் யாரென அறியப்படாதவர்.* *எனவே இந்த ஹதீசும் 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தை வலுப்படுத்துவதாக அமையவில்லை✍️✍️✍️.* 


 *✍️✍️✍️”ஹஜ் அத்தியாயத்தில் இரண்டு ஸஜ்தாக்கள் உள்ளதால் அது சிறப்பிக்கப்பட்டுள்ளதா?” என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள், ”ஆம்! யார் அவ்விரு வசனங்களின் போதும் ஸஜ்தாச் செய்ய மாட்டாரோ அவர் அவ்விரு வசனங்களையும் ஓத வேண்டாம்” என்று கூறினார்கள்.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ர­) நூல்: திர்மிதீ 527* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே இதை வலுவற்றது என்று கூறுகின்றார்கள். மேலும் இந்த ஹதீஸின் தொடரில் இடம் பெற்றிருக்கும் அப்துல்லாஹ் பின் லஹீஆ பலவீனமானவர். இதில் இடம் பெறும் இன்னோர் அறிவிப்பாளரான மிஷ்ரஹ் பின் ஹாஆன் என்பவர் உக்பா பின் ஆமிர் (ர­) அவர்களிடமிருந்து முன்கரான செய்திகளை அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் கூறுகின்றார். எனவே இந்த ஹதீசும் பலவீனமானதாக உள்ளது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *✍️✍️✍️மொத்தத்தில் 15 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் 11 ஸஜ்தாக்கள் என்ற கருத்தும் ஆதாரமற்ற கருத்துக்களாகி விடுகின்றன.✍️✍️✍️* 

 *🟣101. தஸ்பீஹ் ஹதீஸ் பற்றி ஹதீஸ்🟣* 


 *📚தஸ்பீஹ் 📚ஹதீஸ்📚* 


” *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உங்கள் விரல்களால் (தஸ்பீஹ் செய்து) எண்ணுங்கள்! அந்த விரல்களும் (மறுமையில்) விசாரிக்கப்பட்டு அவைகள் பேச வைக்கப்படும்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 
.
 *அறிவிப்பவர்: யுஸைரா (ர­), நூல்கள்: அஹ்மத் 25841, திர்மிதீ 3507* 


 *✍️✍️✍️இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்கள் பற்றி சில அறிஞர்கள் குறை கூறியுள்ளனர். இரண்டாவது அறிவிப்பாளர் ஹுமைளா பின்த் யாஸிர் என்பவரும் மூன்றாவது அறிவிப்பாளர் ஹானீ பின் உஸ்மான் என்பவரும் யாரென அறியப்படாதவர்கள். இவ்விருவரையும் இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் நம்பகமானவர் என்று கூறவில்லை; இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென அறியப்படாதவரையும் நம்பகமானவர் பட்டிய­ல் இணைத்து விடுவார் என்பதால் அவரின் கூற்று மதிப்பற்றது என்று விமர்சனம் செய்யப்படுகிறது✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தி பலவீனமானதாக இருந்தாலும் நஸயீ என்ற நபிமொழித் தொகுப்பு நூ­ல் ஆதாரப்பூர்வமான செய்தி இடம் பெற்றுள்ளது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️எனினும், கீழ்காணும் ஹதீஸ் சரியானது. நபி (ஸல்) அவர்கள் தங்கள் கைகளால் தஹ்பீஹ் செய்ததை நான் பார்த்தேன்✍️✍️✍️.* 

 *அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ர­லி) நூல்: நஸயீ 1331* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தியின் மூன்றாவது அறிவிப்பாளர் அதா பின் யஸீத் என்பவர் மூளை குழம்பியவர் என்ற விமர்சனம், இந்த ஹதீஸில் எந்தப் பலவீனத்தையும் ஏற்படுத்தாது. ஏனெனில் அதா பின் யஸீத் என்பவரிடம் இந்தச் செய்தியில் செவியுற்ற ஹம்மாத் பின் ஸைத் என்பவர், இவர் மூளை குழப்பம் ஏற்படுவதற்கு முன்னர் கேட்டவர் என்று யஹ்யா பின் அல்கத்தான் அவர்கள் குறிப்பிடும் செய்தி ‘தஹ்தீபுத் தஹ்தீப்’ என்ற நூ­ல் பதிவு செய்யப்பட்டுள்ளது. எனவே இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானதாக அமைந்துள்ளதால் நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறைப்படி விரல்களால் தஹ்பீஹ் செய்வது நபிவழி தான். எனினும் முந்தைய ஹதீஸ் ளயீஃபானது✍️✍️✍️* 


 *📚📚📚தலைப்பு 6 மாற்றப்பட்ட சட்டங்கள்📚📚📚* 


 *1. ☪️☪️☪️உரை☪️ துவங்கும் 📚முன்☪️ கூற 📚வேண்டியவை.☪️☪️☪️* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 73* 


 *🌹🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment