*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️*
*🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕*
*🌹🌹*
*❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤*
*🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋*
*🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*
*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*
*👉👉👉 தொடர் பாகம் 73 👈👈👈*
*📚📚📚தலைப்பு 6 மாற்றப்பட்ட சட்டங்கள்📚📚📚*
*1. ☪️☪️☪️உரை☪️ துவங்கும் 📚முன்☪️ கூற 📚வேண்டியவை.☪️☪️☪️*
*2. 🦎🦎🦎பல்லியைச் சாப்பிடலாமா❓🦎🦎🦎*
*☪️1. உரை துவங்கும் முன் கூற வேண்டியவை.☪️*
*📚📚📚உரையை துவங்குவதற்கு முன் நபி (ஸல்) அவர்கள் கூறியவைகள்.📚📚📚*
إن الحمد لله نحمده ونستعينه ونستغفره، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمداً عبده ورسوله.
*✍️✍️✍️இன்னல்ஹம்(d)தலில்லாஹி நஹ்ம(d)துஹு வநஸ்தஈநுஹு வநஸ்(th)தஃபிருஹ், வநவூ(d)து பில்லாஹி மின் ஷுரூரி அன்ஃபுஸினா வ மின் ஸய்யிஆத்தி அஃமாலினா, மய்யஹ்(d)திஹில்லாஹு ஃபலா மு(dh)ழிள்ளலாஹ், வமய் யு(dh)ழ்லில் ஃபலா ஹாதியலாஹ், வ அஷ்ஹ(d)து அல்லா இலாஹா இல்லல்லாஹு வஹ்(d)தஹு லா ஷரீ(k)கலஹு வ அஷ்ஹ(d)து அன்ன முஹம்ம(d)தன் அ(b)ப்(d)துஹு வரசூலுஹு✍️✍️✍️.*
*🙋♂️🙋♂️🙋♂️(♻️பொருள்♻️: நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! அவனையே நாம் புகழ்கிறோம்; அவனிடமே நாம் உதவி தேடுகிறோம். நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும், நம்முடைய செயல்களின் தீமைகளை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறோம். யாருக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவானோ, அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. யாரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுவானோ, அவரை நேர்வழியில் செலுத்துபவர் யாரும் இல்லை. இன்னும், நான் சாட்சி சொல்கிறேன்: “அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் யாரும் இல்லை. அவன் தனித்தவன்; அவனுக்குக் கூட்டாளி யாரும் இல்லை.’ மேலும், நான் சாட்சி சொல்கிறேன்: “நிச்சயமாக முஹம்மது, அவனுடைய அடியாரும் அவனுடைய தூதரும் ஆவார்.’)🙋♀️🙋♀️🙋♀️*
*அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்கள்: முஸ்னத் அஹ்மத் 3275, ஸஹீஹ் முஸ்லிம் 1576, சுனன் இப்னுமாஜா 1892*
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
*✍️✍️✍️யா அய்யுஹல்ல(d)தீன ஆமனூ இத்த(q)குல்லாஹ ஹ(q)க்க(th)து(q)காத்திஹி வலா (th)தமூ(th)துன்ன இல்லா வஅன்(th)தும் முஸ்லிமூன்✍️✍️✍️.*
*🙋♂️🙋♂️🙋♂️நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!🙋♀️🙋♀️🙋♀️*
*(சூரா ஆலு* *இம்ரான்:102* )
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا سورة النساء
*✍️✍️✍️யா அய்யுஹன்னாஸ், இத்த(q)கூ ர(b)ப்ப(k)குமுல்ல(d)தீ(kh)ஹல(q)க(k)கும் மின் நஃப்ஸிவ் வாஹி(d)தா, வ(kh)ஹல(q)க மின்ஹா ச(z)வ்ஜஹா, வ பஸ்ஸ மின்ஹுமா ரிஜாலன் கசீரவ் வ நிஸாஅ, வத்த(q)குல்லாஹல்ல(d)தீ(th)தஸாஅலூன (b)பிஹி வல்அர்ஹாம், இன்னல்லாஹ கான அலைக்கும் ர(q)கீ(b)பா.✍️✍️✍️*
*(சூரா அந்நிஸா : 01)*
*🙋♂️🙋♂️🙋♂️மனிதர்களே! உங்களை ஒரே ஒருவரிலிருந்து படைத்த உங்கள் இறைவனை அஞ்சுங்கள்! அவரிலிருந்து அவரது துணையைப் படைத்தான். அவ்விருவரிலிருந்து ஏராளமான ஆண்களையும், பெண்களையும் பல்கிப் பெருகச் செய்தான். எவனை முன்னிறுத்தி ஒருவரிடம் மற்றவர்கள் கோரிக்கை வைப்பீர்களோ அந்த அல்லாஹ்வை அஞ்சுங்கள்! உறவினர்கள் விஷயத்திலும் (அஞ்சுங்கள்!) அல்லாஹ் உங்களைக் கண்காணிப்பவனாக இருக்கிறான்.🙋♀️🙋♀️🙋♀️*
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا (70) يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
*✍️✍️✍️யா அய்யுஹல்ல(d)தீன ஆமனூ, இத்த(q)குல்லாஹ், வ(q)கூலூ (q)கவ்லன் ஸ(d)தீ(d)தா, யுஸ்லிஹ்ல(k)கும் அஃமால(k)கும் வ யஃக்ஃபிர்ல(k)கும்(d)துநூப(k)கும், வமை யு(th)த்இல்லாஹ வரசூலஹு, ஃப(q)கத் ஃபா(z)ஸ ஃபவ்(z)சன் அழீமா.✍️✍️✍️*
*(சூரா அல்அஹ்ஸாப்:70,71.)*
*🕋🕋🕋திருக்குர்ஆன் 33:70. நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! நேர்மையான சொல்லையே கூறுங்கள்! அவன் உங்களுக்காக உங்கள் செயல்களைச் சீராக்குவான். உங்களுக்காக உங்களின் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.🕋🕋🕋*
إِنَّ أَصْدَقَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ، وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ، وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ
*✍️✍️✍️ஃபஇன்ன அஸ்(d)த(q)கல் ஹ(d)தீஸி கி(th)தா(b)புல்லாஹ், வ அஹ்ஸனல் ஹ(d)த்யி ஹ(d)த்யு முஹம்ம(d)தின்)ஸல்லல்லாஹு அலைஹி வ ஸல்லம்(, வஷர்ருல் உமூரி முஹ்(d)தசாத்துஹா, வ குல்லு முஹ்(d)தச(th)திம் பி(d)த்ஆ, வ குல்லு பி(d)த்அத்தின் ழளாலா, வ குல்லு ழளாலத்தின் ஃபின் நார்.✍️✍️✍️*
*☪️☪️☪️நபி நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவை ஆகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்☪️☪️☪️.*
*அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி) நூல்: நஸயீ ; 1560*
*🦎2. பல்லியைச் சாப்பிடலாமா❓🦎*
*🕋🕋🕋நபி (ஸல்) அவர்கள் பல்லியைக் கொல்லும்படி உத்தரவிட்டார்கள். அதற்கு “தீங்கிழைக்கக்கூடிய பிராணி’ (ஃபுவைசிக்) எனப் பெயரிட்டார்கள்🕋🕋🕋*
*அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) நூல் ; முஸ்லிம் (4507)*
*✍️✍️✍️மனிதர்களுக்கு கேடு விளைவிப்பதால் பல்லியைக் கொல்வதற்கு மார்க்கம் அதிகம் ஆர்வமூட்டுகிறது.*
*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பல்லியை முதலாவது அடியிலேயே கொன்றவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படுகின்றன. இரண்டாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான நன்மையும், மூன்றாவது அடியில் கொன்றவருக்கு அதைவிடக் குறைவான நன்மையும் எழுதப்படும்✍️✍️✍️.*
*அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (4510)*
*🙋♂️🙋♂️🙋♂️பல்லியை கோரைப் பல் இல்லாத காரணத்தினால் உண்ணலாம் என எவ்வாறு வாதிட முடியாதோ அது போன்று எலியையும் வாதிட முடியாது.🙋♀️🙋♀️🙋♀️*
*🦎🦎🦎குறுக்கு விசாரணையும் விளக்கமும்🦎🦎🦎*
*☪️☪️☪️நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் ; தூங்கும் போது விளக்குகளை அணைத்து விடுங்கள். ஏனெனில், தீங்கிழைக்கக் கூடிய(எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும்.☪️☪️☪️*
*அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : புகாரி (3316)*
*🙋♂️🙋♂️🙋♂️மேற்கண்ட செய்தியில் ” தீங்கிழைக்கக் கூடிய(எலியான)து (விளக்கின்) திரியை (வாயால் கவ்வி) இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்து விடக் கூடும்.” என்று நபி (ஸல்) கூறியதாக வந்துள்ளது.இதன் அடிப்படையில் எலியினால் ஏற்படும் தீங்கு என்பது தீவிபத்து மட்டும்தான். அதைத்தான் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். எலிகறியை உண்பதினால் தீங்கு ஏற்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. என எலி கறி சாப்பிடலாம் என சிலர் வாதம் வைக்கின்றனர்.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️ஆனால் இந்த வாதம் மிகவும் பிழையானதாகும். ஏனெனில் எலியினால் ஏற்படும் பல கேடுகளில் ஒன்றைத்தான் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்களே தவிர தீவிபத்து ஏற்படுத்துவது மட்டும்தான் எலியினால் ஏற்படும் கேடு என்று கூறவில்லை.”தீயவர்கள் கொலை செய்வார்கள்” என்றால் தீயவர்களின் பல பண்புகளில் கொலை செய்வதும் ஒன்று என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். தீயவர்கள் கொலையை தவிர வேறு எந்த பாவத்தையும் செய்யவேமாட்டார்கள் என்ற கருத்தை இந்த வாசகம் தராது. அப்படி யாரும் புரிந்து கொள்ளவும் மாட்டார்கள்.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️அது போன்றுதான் ”தீங்கிழைக்கக் கூடியது திரியை இழுத்துச் சென்று வீட்டிலிருப்பவர்களை எரித்துவிடும்” என்றால் கேடுவிளைவிக்கும் எலி இந்தக் கேட்டை செய்து விடும் என்றுதான் புரிந்து கொள்ள இயலுமே தவிர இதைத் தவிர வேறு எந்த கேட்டையும் விளைவிக்காது என்று புரிந்து கொள்ள முடியாது.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️அதுமட்டுமல்ல தீவிபத்து ஏற்படுவது மட்டும்தான் எலியினால் ஏற்படும் கேடு என்றால் எதற்காக புனித எல்லைக்குள்ளும், புனித எல்லைக்கு வெளியில் அதைக் கொல்லுமாறு நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட வேண்டும். தீவிபத்து ஏற்படுவதற்கு வாய்ப்புள்ள இடங்களில் மட்டும் கொல்லுங்கள் என்று உத்தரவிட்டிருக்கிலாமே. அனைத்து இடங்களிலும் எலியைக் கொல்லச் சொல்வதிலிருந்தே அதனால் பலவிதமான கேடுகள் ஏற்படும் என்பதை நாம் உணர்ந்து கொள்ள இயலும்.🙋♀️🙋♀️🙋♀️*
*🐀🐀🐀எலி விளை நிலங்களில் பயிர்களின் விளைச்சலை நாசமாக்கிவிடுகிறது. உணவு தானியங்களை தின்று தீர்த்துவிடுகிறது. அது போன்று எலியினால் பல்வேறு நோய் கிருமிகள் பரவி மனிதர்களுக்கு பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. இது போன்ற ஏரளாமான கேடுகள் மனிதர்களுக்கு ஏற்படத்தான் செய்கிறது. எனவே தீ விபத்தை தவிர வேறு எந்தக் கேடுகளும் எலிகளால் ஏற்படாது என்பது அறிவுக்குப் பொருந்தாத வாதமாகும். எலியினால் தீ விபத்து ஏற்படும் என்ற காரணத்தினால்தான் அதற்கு ”தீங்கிழைக்கக் கூடியது” என பெயர் சூட்டப்பட்டதாக பின்வரும் செய்தியில் இடம் பெற்றுள்ளது.🐀🐀🐀*
*✍️✍️✍️யஸீத் இப்னு அபீ நுஐம் அவர்கள் அபூ ஸயீத் (ரலி) அவர்களிடம் ”எதற்காக எலிக்கு ஃபுவைசிகா (தீங்கிழைக்கக்கூடியது) என்று பெயர்வைக்கப்பட்டது? அவர்கள் அபூ ஸயீத் (ரலி) கூறினார்கள். ஒரு நாள் இரவு நபி (ஸல்) அவர்கள் விழித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை வீட்டோடு எரிப்பதற்காக விளக்கின் திரியை இழுத்துச் சென்றது. நபி (ஸல்) அவர்கள் அதன் பக்கம் எழுந்து சென்று அதைக் கொன்றார்கள். இஹ்ராம் அணிந்தவர் அணியாதவர் அனைவரும் அதைக் கொல்வதற்கு அனுமதியளித்தார்கள்✍️✍️✍️.*
*நூல் : ஷரஹ் மஆனில் ஆஸார் (பாகம் 2 பக்கம் 166)*
*🕋🕋🕋நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எலி திரியை இழுத்துச் சென்று வீட்டை எரிக்க முனைந்ததால் அதைக் கொல்ல உத்தரவிட்டார்கள் என்பதுதான் அபூ ஸயீத் (ரலி) அவர்களிடம் கேட்கப்பட்ட கேள்விக்கு நபி காலத்தில் நடந்ததாக அவர்கள் கூறும் செய்தியில் உள்ள கருத்தாகும். இதற்காகத்தான் அதற்கு ஃபுவைசிக்கா எனப் பெயரிடப்பட்டது என்பது இதிலிருந்து அபூ ஸயீத் (ரலி) அவர்கள் சுயமாக விளங்கிக் கூறியதாகும் . ஏனெனில் எலியினால் தீவிபத்து ஏற்படுத்தவதினால்தான் அதற்கு நபி (ஸல்) அவர்கள் தீங்கிழைக்கக்கூடியது எனப் பெயரிட்டதாக அபூ ஸயீத் (ரலி) குறிப்பிடவில்லை🕋🕋🕋.*
*🙋♂️🙋♂️🙋♂️மேலும் இந்தச் செய்தி அறிவிப்பாளர் ரீதியாக பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் “யஸீத் இப்னு அபீ ஸியாத் ” என்பார் இடம் பெற்றுள்ளார். இவரை அஹ்மத் பின் ஹன்பல், அலீ இப்னுல் மதீனி, இஜ்லி உட்பட அதிகமானோர் பலவீனமானவர் என விமர்சித்துள்ளனர். எனவே இதனை ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள இயலாத.🙋♀️🙋♀️🙋♀️*
*🐀”பிஸ்க்” என்பதினால் எலி ஹராம் ஆகுமா❓🐀*
*🐀🐀🐀எலியை உண்பது ஹராம் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் சிலர் குர்ஆனில் தடைசெய்யப்பட்ட உணவுகள் “ஃபிஸ்க்” என்று கூறப்பட்டுள்ளது. அதிலிருந்து தோன்றிய “ஃபவாஸிக்“ என்ற வார்த்தையினால் எலி, காகம், பருந்து, பாம்பு, தேள், வெறிநாய் ஆகியவை கூறப்பட்டுள்ளது. இதனால்தான் ஹதீஸில் கூறப்பட்டவை ஹராமாகிறது என்று சிலர் வாதம் வைக்கின்றனர். “ஃபிஸ்க்“ என்று வரும் குர்ஆன் வசனங்களைக் காண்போம்.🐀🐀🐀*
*✍️✍️✍️தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்டவை உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன. கழுத்து நெரிக்கப்பட்டவை, அடிபட்டவை, (மேட்டிலிருந்து) உருண்டு விழுந்தவை, (தமக்கிடையே) மோதிக்கொண்டவை, வனவிலங்குகள் சாப்பிட்ட பிராணிகள் ஆகியவற்றில் (உயிர் இருந்து) நீங்கள் முறையாக அறுத்தவை தவிர (மற்றவை தடைசெய்யப்பட்டுள்ளன.) பலி பீடங்களில் அறுக்கப்பட்டவையும், அம்புகள் மூலம் குறி கேட்பதும் (உங்களுக்குத் தடை செய்யப்பட்டுள்ளன.) இவை குற்றமாகும்.✍️✍️✍️*
*(அல்குர்ஆன் 5 : 3)*
*🕋🕋அல்லாஹ்வின் பெயர் கூறப்படாததை உண்ணாதீர்கள்! அது குற்றமாகும்🕋🕋.*
*(அல்குர்ஆன் 6 : 121)*
*🙋♂️🙋♂️🙋♂️“தாமாகச் செத்தது, ஓட்டப்பட்ட இரத்தம், அசுத்தமாகிய பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக சப்தமிடப்பட்ட பாவமான(உண)வை தவிர வேறு எதுவும் மனிதர் உண்பதற்குத் தடை செய்யப்பட்டதாக எனக்கு அறிவிக்கப்பட்ட செய்தியில் நான் காணவில்லை” என்று கூறுவீராக! யாரேனும் வரம்பு மீறாமலும், வலியச் செல்லாமலும் நிர்பந்திக்கப்பட்டால் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.🙋♀️🙋♀️🙋♀️*
*(அல்குர்ஆன் 6 : 145)*
*✍️✍️✍️மேற்கண்ட வசனங்களில் அல்லாஹ் தடை செய்தவற்றை உண்பது பாவம் என்று கூறப்பட்டுள்ளது. பாவம் என்பதற்கு “ஃபிஸ்க்” என்ற வார்த்தை வந்துள்ளது. “ஃபிஸ்க்“ என்றால் “இறைக்கட்டளையை மீறுதல், இறைவனுக்கு மாறு செய்தல்“ என்ற பொருளில் இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ளது. இறைவன் தடை செய்தவற்றை உண்பதினால் மனிதன் இறைவனுக்கு மாறு செய்கின்ற பாவத்தைப் பற்றி குர்ஆன் வசனங்கள் பேசுகிறது.✍️✍️✍️*
*☪️☪️☪️அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுக்கப்பட்ட ஆட்டை உண்பதினால் உடலுக்கு எந்த கேடும் ஏற்படப்போவதில்லை. ஆனால் 6 : 121 வது வசனத்தில் அல்லாஹ் அதனை உண்பது “பிஸ்க்” என்கிறான். அல்லாஹ்வின் பெயர் கூறாமல் அறுப்பது பாவம் என்பதினால்தான் அல்லாஹ் அதை உண்பதை “ஃபிஸ்க்“ என்று கூறுகிறான். இதிலிருந்தே குர்ஆன் வசனங்கள் “பிஸ்க்” என்று கூறுவது இறைக்கட்ளையை மீறுவதைத்தான் என்பது தெளிவாகிறது.☪️☪️☪️*
*🙋♂️🙋♂️🙋♂️எலி, காகம்,பாம்பு, தேள், வெறிநாய், பருந்து ஆகியவை மனிதனுக்கு தீங்கு செய்பவை என்பது பற்றி ஹதீஸ் பேசுகிறது. வசனங்களில் கூறப்பட்டிருப்பது போன்று “எலியை உண்பது ஃபிஸ்க் (பாவம்)“ என்று ஹதீஸ்களில் கூறப்பட்டிருந்தால் இவர்கள் ஃபிஸ்க் என்ற வார்த்தையின் மூலம் எலியை உண்பது ஹராம் என்று கூறுவது பொருத்தமான வாதமாகும்.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️ஆனால் எலியானது “பாஸிக்“ (தீங்கு தரக்கூடியது) என்ற பொருளில்தான் ஹதீஸ்களில் வந்துள்ளது. இவ்வாறு இருக்கையில் குர்ஆனில் “பிஸ்க்“ என்று வந்துள்ளது. எலி “ஃபாஸிக்“ என்று கூறப்பட்டுள்ளது. எனவே எலி ஹராம் என்று கூறுவது பொருந்தா விளக்கம் ஆகும். ஹராமாக்கப்பட்டவைகள் என்ற பட்டியலில்தான் குர்ஆனில் கூறப்பட்டவைகளும், இந்த ஹதீஸில் கூறப்பட்டவைகளும் ஒன்று சேர்கிறதே தவிர “ஃபிஸ்க்” என்ற வார்த்தையின் அடிப்படையில் அவை ஒன்று சேரவில்லை✍️✍️✍️.*
*🧕🧕🧕அன்னை ஆயிஷா (ரலி) எப்படி முடிவு செய்தார்❓🧕🧕🧕*
سنن البيهقي الكبرى *(9/ 317)*
*19153* – وأخبرنا أبو عبد الله الحافظ أنبا عبد الله بن جعفر بن درستويه الفارسي ثنا يعقوب بن سفيان الفارسي ثنا إسماعيل بن أبي أويس حدثني أبي عن يحيى بن سعيد عن عمرة بنت عبد الرحمن وعن هشام بن عروة عن عروة عن عائشة رضي الله عنها أنها قالت : إني لأعجب ممن يأكل الغراب وقد أذن رسول الله صلى الله عليه و سلم في قتله للمحرم وسماه فاسقا والله ما هو من الطيبات
*🧕🧕🧕அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : காகத்தை உண்பவர்களை (எண்ணி) நான் ஆச்சரியப்படுகிறேன். நபி (ஸல்) அவர்கள் இஹ்ராமில் உள்ளவருக்கு அதைக் கொல்லுமாறு உத்தரவிட்டுள்ளார்கள். அதற்கு “ஃபாஸிக்“ தீங்கிழைக்கக்கூடியது என்று பெயரிட்டார்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அது ”தூய்மையானவைகளில்” உள்ளது அல்ல.🧕🧕🧕*
*அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : பைஹகி 19153*
*🙋♂️🙋♂️🙋♂️இதன் அறிவிப்பாளர் தொடரில் ”அப்துல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் இப்னு உவைஸ்“ என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். யஹ்யா இப்னு முயீன், அம்ருப்னு அலீ, அலி இப்னுல் மதீனி, நஸாயீ, அபூ சுர்ஆ, அபூ ஹாதிம் போன்ற பல அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று குறிப்பிட்டு்ளளனர். (தஹ்தீபுல் கமால்)🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️ஒரு வாதத்திற்கு இதை ஸஹீஹ் என்று வைத்துக் கொண்டாலும் “ஃபிஸ்க்” என்ற வார்த்தையை வைத்து அன்னை ஆயிஸா (ரலி) தீர்மானித்ததாக இச்செய்தியில் வரவில்லை. அல்லாஹ்வும் அவனது தூதரும் ஒரு உயிரினத்தை கேடுதரக் கூடியது என்று குறிப்பிட்டால் அவற்றை உண்பது ஹராம் ஆகும். இதன் அடிப்படையில்தான் “ஃபாஸிக்“ என்ற வார்த்தையை வைத்து “தூய்மையற்றவை“ என்பதை முடிவு செய்து அதன் அடிப்படையில்தான் உண்ணக்கூடாது என அன்னை ஆயிஷா (ரலி) தீர்மானித்துள்ளார்கள். இது தொடர்பாக நாம் முன்னரே விளக்கியுள்ளோம்.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️அது போன்று இப்னு உமர் (ரலி) அவர்களும் இதே போன்று கூறியதாக இப்னு மாஜாவில் இடம் பெற்றுள்ளது.🙋♀️🙋♀️*
سنن ابن ماجة ـ محقق ومشكول *(4/ 394)*
*3248* - حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الأَزْهَرِ النَّيْسَابُورِيُّ ، حَدَّثَنَا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ ، حَدَّثَنَا شَرِيكٌ ، عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ ، عَنْ أَبِيهِ ، عَنِ ابْنِ عُمَرَ ، قَالَ : مَنْ يَأْكُلُ الْغُرَابَ ؟ وَقَدْ سَمَّاهُ رَسُولُ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ : فَاسِقًا ، وَاللَّهِ مَا هُوَ مِنَ الطَّيِّبَاتِ.
*✍️✍️✍️இதன் அறிவிப்பாளர் தொடரில் “ஷரீக்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார். இவரை ஏராளமான அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.✍️✍️✍️*
سنن ابن ماجة ـ محقق ومشكول *(4/ 394)*
*3249* - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ ، حَدَّثَنَا الأَنْصَارِيُّ ، حَدَّثَنَا الْمَسْعُودِيُّ ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ الْقَاسِمِ بْنِ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ ، عَنْ أَبِيهِ ، عَنْ عَائِشَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ قَالَ : الْحَيَّةُ فَاسِقَةٌ ، وَالْعَقْرَبُ فَاسِقَةٌ ، وَالْفَأْرَةُ فَاسِقَةٌ ، وَالْغُرَابُ فَاسِقٌ. فَقِيلَ لِلْقَاسِمِ : أَيُؤْكَلُ الْغُرَابُ قَالَ : مَنْ يَأْكُلُهُ ؟ بَعْدَ قَوْلِ رَسُولِ اللهِ صَلَّى الله عَليْهِ وسَلَّمَ فَاسِقًا.
*🙋♂️🙋♂️🙋♂️காசிம் இப்னு முஹம்மது இப்னு அபீ பக்ர் எ்னபாரிடம் ”காகத்தை சாப்பிடலாமா?” எனக் கேட்க்கப்பட்ட போது “நபியவர்கள் “ஃபாஸிக்“ என்று கூறிய பிறகு அதை யார் சாப்பிடுவார்?“ என்று கூறியதாக இப்னு மாஜாவில் இடம் பெறும் அறிவிப்பும் பலவீனமானதாகும்.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️இந்த அறிவிப்பில் “மஸ்வூதி“ என்பார் மூளை குழம்பியவர் ஆவார். இவரிடம் இருந்து அறிவிக்கும் “முஹம்மத் இப்னு அப்துல்லாஹ் இப்னு முஸன்னா அல்அன்சாரி“ என்பார் “மஸ்வூதி“ என்பாரிடமிருந்து அவர் மூளை குழம்புவதற்கு முன்னால் கேட்டாரா? பின்பு கேட்டாரா? என்பதை முடிவு செய்வதற்கான ஆதாரங்கள் நமக்கு கிடைக்கவில்லை.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️காசிம் என்பாரின் சொந்தக் கருத்தாக வரும் சில அறிவிப்புகள் சரியாக உள்ளது என்று வைத்துக் கொண்டாலும் அவர் “ஃபிஸ்க்“ என்ற வார்த்தையை வைத்து ஆய்வு செய்ததாக குறிப்பிடவில்லை. “ஃபாஸிக்“ என்ற வார்த்தையை வைத்து முடிவு செய்ததாகத்தான் குறிப்பிட்டுள்ளார்.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️இஹ்ராம் அணிந்தவர் கொல்லலாம் என்பதில் பெறப்படும் விளக்கம்✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️இஹ்ராம் அணிந்த ஒருவர் தரையில் உணவிற்காக வேட்டையாடுவது ஹராம் ஆகும்.🙋♀️🙋♀️🙋♀️*
*✍️✍️✍️நம்பிக்கை கொண்டோரே! இஹ்ராமுடன் இருக்கும்போது வேட்டைப் பிராணிகளைக் கொல்லாதீர்கள்!✍️✍️✍️*
*(அல்குர்ஆன் 5 : 95)*
*🙋♂️🙋♂️🙋♂️இஹ்ராமுடன் இருக்கும்போது நீங்கள் தரையில் வேட்டையாடுதல் தடுக்கப்பட்டுள்ளது.🙋♀️🙋♀️🙋♀️*
*(அல்குர்ஆன் 5 : 96)*
*✍️✍️✍️மேற்கண்ட வசனங்களில் உண்பதற்கு தகுதியான பிராணிகளைத்தான் வேட்டைப் பிராணிகள் என்று கூறப்பட்டுள்ளது. இஹ்ராமுடன் உள்ளவர்கள் உணவுக்காக வேட்டைப் பிராணிகளைக் கொல்வதும், தரையில் வேட்டையாடுவதும் தடை செய்யப்பட்டுள்ளது என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். ஆனால் மேற்கண்ட ஹதீஸில் இஹ்ராம் அணிந்த நிலையில் உள்ளவர் ஹதீஸ்களில் குறிப்பிடப்படும் உயிரினங்களைக் கொல்லலாம் என அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எலி, தேள், பருந்து, காகம், பாம்பு ஆகியவை உண்பதற்கு அனுமதிக்கப்பட்ட உயிரினங்களாக இருந்தால் நபியவர்கள் அவற்றைக் கொல்வதற்கு அனுமதி வழங்கியிருப்பார்களா? இதிலிருந்தும் எலி என்பது உண்பதற்கு அனுமதிக்கப்பட்டதல்ல என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️நீங்கள் நிர்பந்திக்கப்படும் போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான். அதிகமானோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழிகெடுக்கின்றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன்.🙋♀️🙋♀️🙋♀️*
*(அல்குர்ஆன்: (6 : 119)*
*3. 🌐நின்று🟢 கொண்டு🟣 தண்ணீர்🔵 அருந்தலாமா❓🔴*
*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 74*
*🌹🌹🌹*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
No comments:
Post a Comment