பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, August 8, 2020

இஸ்லாத்தை அறிந்து - 59

*☪️☪️மீள்☪️ பதிவுவ☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 59  👈👈👈* 


 *📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚* 


 *26. 🌐ஒரு 🌐ஆண்டு🌐 நிறைவடைந்தால்☪️ தான்☪️ ஜகாத்🕋 கடமை 📚ஹதீஸ்📚📚📚* 


 *27. 🕋நபி 🕋முஆதிடம்☪️ இஜ்திஹாத்☪️ செய்ய🧶 சொன்னார்கள்❓📚 ஹதீஸ்📚* 


 *28. 🕋ஹஜ் 🕋பற்றிய 📚பலவீனமான📚 ஹதீஸ்கள்📚 அனைத்தும்☪️ ஹதீஸ்📚* 


 *29. ☪️நோன்பு☪️ பிடியுங்கள்☪️ ஆரோக்கியம்🕋 பெறுங்கள் 📚ஹதீஸ்📚* 

 *30. 🌐🌐ஜன்னத்துல்🌐 பகீஃயில் ☪️நபிகள்☪️ நாயகம் 📚ஹதீஸ்📚📚* 


 *26. ஒரு ஆண்டு நிறைவடைந்தால் தான் ஜகாத் கடமை ஹதீஸ்* 


 *✍️✍️✍️ஒரு ஆண்டு நிறைவடையும் வரை ஒருவனுக்கு ஒரு பொருள் கிடைத்தால் ஒரு ஆண்டு* *நிறைவடையும் வரை அதற்கு ஜகாத் இல்லை என்ற கருத்தில் அமைந்த* *ஹதீஸ்களையும் மாற்றுக் கருத்துடையோர் ஆதாரமாகக் காட்டி* *வந்தனர். இந்த ஹதீஸ்களில் எந்த ஒன்றும் சரியானதல்ல ஆண்டுக்கான* *ஜகாத்தை முன் கூட்டியே வாங்கிய ஹதீஸ் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் இரண்டு வருடங்களுக்கான ஜகாத்தை நபிகள் நாயகம் அவர்கள் முன் கூட்டியே* *வாங்கினார்கள் இந்தக் கருத்தில் உள்ள அறிவிப்புக்கள் ஒன்றுகூட சரியானவை அல்ல✍️✍️✍️*

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அனாதைகளின் சொத்து ”அனாதைகளின் சொத்து உங்களிடம் இருந்தால் வியாபாரத்தில் முதலீடு செய்யுங்கள்! இல்லாவிட்டால் ஜகாத் அதை விழுங்கி விடும்” என்ற கருத்தில் அமைந்த எந்த ஒரு ஹதீஸும் சரியானதல்ல🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *27. நபி முஆதிடம் இஜ்திஹாத் செய்ய சொன்னார்கள்❓ ஹதீஸ்* 


 *✍️✍️✍️நபி முஆதிடம் கூறியது நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி)யை யமனுக்கு அனுப்பும் போது, நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வுடைய வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று முஆத் (ரலி) பதிலளித்தார். அல்லாஹ்வுடைய வேதத்தில் இல்லையென்றால்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வுடைய தூதரின் சுன்னத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று முஆத் (ரலி) கூறினார். அல்லாஹ்வின் தூதருடைய சுன்னத்திலும் இல்லையென்றால்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, என்னுடைய சிந்தனையைக் கொண்டு இஜ்திஹாத் (ஆய்வு) செய்வேன் என்று முஆத் (ரலி) கூறினார். அல்லாஹ்வுடைய தூதருடைய தூதருக்கு அருள் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️முஆத் பின் ஜபல் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் திர்மதீ, அபூதாவூத், அஹ்மத், தாரமீ, பைஹகீ உள்ளிட்ட பல்வேறு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* .

 *✍️✍️✍️இந்த அனைத்து அறிவிப்புகளிலுமே ஹாரிஸ் இப்னு அம்ர் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று பல ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றார்கள். மேலும் இவர் யாரிடமிருந்து அறிவிக்கின்றாரோ அவரது பெயரைக் குறிப்பிடாமல் அறிவித்துள்ளார். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.✍️✍️✍️* 


 *28. ஹஜ் பற்றிய பலவீனமான ஹதீஸ்கள் அனைத்தும் ஹதீஸ்* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️கீழே உள்ள அனைத்து ஹதீஸ்களும் பலவீனமாவை.* 
 *நீ ஹாஜியை சந்தித்தால் அவருக்கு ஸலாம் சொல்லி, அவரிடம் முஸாபஹா செய். இன்னும் அவர் தனது வீட்டில் நுழைவதற்கு முன்னால் உனக்காக பாவமன்னிப்பு தேடுவதற்குக் கேட்டுக் கொள். (இவ்வாறு ஒருவர் செய்தால்) அவர் மன்னிக்கப்பட்டவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

 *அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: அஹ்மத் 5838* 


 *✍️✍️✍️இந்த ஹதீஸின் அடிப்படையில் தான் ஹஜ்ஜுக்குச் சென்றவர் தமது வீட்டுக்குள் செல்வதற்கு முன்னர் அவரிடம் முஸாபஹா செய்வதற்குக் கடும் போட்டி நிலவுகின்றது. ஆனால் இந்த ஹதீஸ் பலவீனமானதாகும். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் ஹாரிசுல் ஹாரிஸிய்யி என்பவர் பலவீனமானவராவார். இவர் எதற்கும் தகுதியற்றவர் என்று யஹ்யா பின் முயீன் கூறுகின்றார். இதன் மற்றொரு அறிவிப்பாளரான முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் பைளமானி என்பரும் பலவீனமானவராவார். இவர் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்று இமாம் புகாரி கூறுகின்றார். ஆகவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு செயல்பட முடியாது.✍️✍️✍️* 

 
 *813* – حدثنا يوسف بن عيسى حدثنا وكيع حدثنا إبراهيم بن يزيد عن محمد بن عباد بن جعفر عن ابن عمر قال : جاء رجل إلى النبي صلى الله عليه و سلم فقال يا رسول الله ! ما يوجب الحج ؟ قال الزاد والراحلة

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே ஹஜ்ஜைக் கடமையாக்குவது எது? என்று வினவினார். அதற்கு நபி ஸல் அவர்கள் கட்டுச்சாதமும் (உணவு) வாகனமும் ஆகும் என்று பதிலளித்தார்கள்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* .

 *அறிவிப்பவர் இப்னு உமர் ரலி* 

 *இந்தச் செய்தி திர்மிதி741, தாரகுத்னீ இப்னுமாஜா 2887 முஸன்னப் இப்னு அபீஷைபா 15946, பைஹகீ 8892 உள்ளிட்ட இன்னும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.* 


 *✍️✍️✍️எனினும் இது பலவீனமான செய்தியாகும். மேற்கண்ட ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்கள் அதன் கீழே இக்கருத்தைச் சுட்டிக்காட்டுகிறார்கள். இதில் இடம்பெறும் இப்றாஹீம் பின் யஸீத் என்பவரை அறிஞர்கள் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளனர்.✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எனவே உணவும் வாகனமும் ஹஜ்ஜைக் கடமையாக்கி விடும் என நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்தி எதுவுமில்லை🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 


 *⚫கருத்து சரியா❓⚫* 

 *✍️✍️✍️உணவும் வாகனமும் ஹஜ்ஜைக் கடமையாக்கி விடும் என்று நபிகள் நாயகம் கூறியதாக உள்ள செய்தி அறிவிப்பின் அடிப்படையில் பலவீனம் அடைவதைப் போன்று கருத்தை கவனிக்கும் போதும் அது தவறான செய்தி என்பது விளங்கி விடுகிறது✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஏனெனில் ஹஜ் யாருக்கு கடமை என்பதை குர்ஆன் விளக்கும் போது பின்வருமாறு கூறுகின்றது.* 
 *அதில் தெளிவான சான்றுகளும், மகாமே இப்ராஹீமும் உள்ளன. அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார். அந்த ஆலயத்தில் அல்லாஹ்வுக்காக ஹஜ் செய்வது, சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்குக் கடமை. யாரேனும் (ஏக இறைவனை) மறுத்தால் அல்லாஹ் அகிலத்தாரை விட்டும் தேவையற்றவன்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *(திருக்குர்ஆன் 3:97)* 

 *✍️✍️✍️சென்று வர சக்தி பெற்ற மனிதர்களுக்கு ஹஜ் கடமை எனும் இறைவார்த்தையிலிருந்து உணவும் வாகனமும் இருந்து விட்டால் மட்டும் ஹஜ் கடமை என்றாகி விடாது. மாறாக சென்று வர உடல் ஒத்துழைப்பதும் – ஆரோக்கியமாக இருப்பதும் அவசியம் என்பதை அறியலாம்.✍️✍️✍️* 

 
 *1793* – حدثنا أحمد بن صالح ثنا عبد الله بن وهب قال أخبرني حيوة أخبرني أبو عيسى الخراساني عن عبد الله بن القاسم عن سعيد بن المسيب أن رجلا من أصحاب النبي صلى الله عليه و سلم أتى عمر بن الخطاب رضي الله عنه فشهد عنده أنه سمع رسول الله صلى الله عليه و سلم فيمرضه الذي قبض فيه ينهى عن العمرة قبل الحج .

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நபித்தோழர்களில் ஒருவர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து ஹஜ்ஜூக்கு முன் உம்ரா செய்வதை நபிகள் நாயகம் தடுத்துள்ளார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த நோயின் போது இதை நான் நபி (ஸல்) அவர்களிடம் செவியுற்றேன் என்று கூறினார்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 


 *அறிவிப்பவர் : ஸயீத் பின் முஸய்யப் (ரஹ்)* 

 *இந்தச் செய்தி அபூதாவூத் 1528, பைஹகீ 8868 ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.* 


 *✍️✍️✍️இது முழுக்க பலவீனமான செய்தியாகும். ஏனெனில் இதன் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் பின் காசிம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது நம்பகத்தன்மை அறியப்படவில்லை. இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு யாரும் இவரை நம்பகமானவர் என்று சான்றளிக்கவில்லை. நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாதவர்களையும் நம்பகமானவர் என்று இப்னு ஹிப்பான் அவர்கள் சான்றளித்து விடுவதால் தனித்த நிலையில் இவரது சான்றிதழ் ஏற்கப்படாது என்பது ஹதீஸ் கலை அறிஞர்கள் அறிந்த விஷயமாகும்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️எனவே இதனடிப்படையில் இந்தச் செய்தி பலவீனமடைகிறது🙋‍♂️🙋‍♂️* .


 *⚫கருத்து சரியா❓⚫* 


 *✍️✍️✍️ஹஜ் செய்யாமல் உம்ரா செய்யக் கூடாது என்றால் மக்காவின் அருகே வசிக்கும் அதிகமானோர் தாங்கள் விரும்பிய நேரத்தில் உம்ரா செய்யும் வாய்ப்பைப் பெற்றிருந்தும் ஹஜ் செய்யவில்லை என்ற காரணத்தினால் உம்ரா செய்ய இயலாமல் போகும் நிலையை இந்த பலவீனமான ஹதீஸ் ஏற்படுத்தி விடுகிறது.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️மேலும் நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜூக்கு முன்பு உம்ரா செய்துள்ளார்கள் என்பதை ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் காண்கிறோம்🙋‍♂️🙋‍♂️* . 

 *புகாரி 4254, 1774* 

 *✍️✍️எனவே ஹஜ்ஜூக்கு முன்பு உம்ரா செய்தல் கூடாது என்பது தவறான செய்தியாகும் என்பது இதிலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஹஜ் செய்பவர் கண்டிப்பாக நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்தாக வேண்டும் என்ற நம்பிக்கை முஸ்லிம்களிடத்தில் பரவலாகக் காணப்படுகிறது.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *✍️✍️✍️ஹஜ் செய்பவர் நபியின் கப்ரை ஸியாரத் செய்யாவிடில் வெறுப்பிற்குரியவராக கருதப்படுவார் என்று சில ஹதீஸ்கள் உள்ளன.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️ஆனால் இந்தக் கருத்தில் அமைந்த செய்திகள் அனைத்தும் பலவீனமானதாகவே உள்ளன🙋‍♂️🙋‍♂️* .

المعجم الكبير للطبراني (9/ *396* ، بترقيم الشاملة آليا)

 *11313* – حَدَّثَنَا أَحْمَدُ بن الْقَاسِمِ بن مُسَاوِرٍ الْجَوْهَرِيُّ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بن عُمَرَ بن أَبَانَ، حَدَّثَنَا يُوسُفُ بن الْفَيْضِ، عَنِ الأَوْزَاعِيِّ، عَنْ عَطَاءٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:إِنَّ اللَّهَ تَعَالَى يُنْزِلُ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ عِشْرِينَ وَمِائَةَ رَحْمَةٍ يَنْزِلُ عَلَى هَذَا الْبَيْتِ سِتُّونَ لِلطَّائِفِينَ، وَأَرْبَعُونَ لِلْمُصَلِّينَ، وَعِشْرُونَ لِلنَّاظِرِينَ.

 *✍️✍️✍️அல்லாஹ் ஒவ்வொரு நாளும் கஃபாவில் 120 ரஹ்மத்களை – (அருள்களை) இறக்குகின்றான். அதில் அறுபது ரஹ்மத் தவாஃப் செய்பவர்களுக்கும், நாற்பது ரஹ்மத் தொழுபவர்களுக்கும் இருபது (கஃபாவை) பார்ப்போருக்கும் உரியதாகும் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்✍️✍️✍️.* 

 *அறிவிப்பவர் இப்னு அப்பாஸ் ரலி* 

 *இந்தச் செய்தி தப்ரானீ 11313 அக்பாரு உஸ்பஹான் 365, 1163 உள்ளிட்ட சில நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.* 


 *🙋‍♂️🙋‍♂️இதில் யூசுப் பின் ஃபைள் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பொய்யர் என்று சொல்லுமளவு கடும் விமர்சனத்திற்குரியவர் ஆவார்.🙋‍♂️🙋‍♂️* 


 *✍️✍️✍️அபூஹாதம் இவரைப் பலவீனமானவர், புறக்கணிக்கப்படுவதற்கு ஒப்பானவர் என்று விமர்சித்துள்ளார்.அல்ஜரஹ் வத்தஃதீல் 9 228. ஆகவே இது முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.✍️✍️✍️* 


 *29. நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியம் பெறுங்கள் ஹதீஸ்* 


 *☪️நோன்பு பிடியுங்கள், ஆரோக்கியம் பெறுங்கள்☪️:* 

-المعجم الأوسط – *(8 / 1)74* 

 *8312* – حدثنا موسى بن زكريا نا جعفر بن محمد بن فضيل الجزري نا محمد بن سليمان بن أبي داود نا زهير بن محمد عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه و سلم اغْزُوا تَغْنَمُوا، وَصُومُوا تَصِحُّوا، وَسَافِرُوا تَسْتَغْنُوا لم يرو هذا الحديث عن سهيل بهذا اللفظ إلا زهير بن محمد

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️போர் செய்யுங்கள் கனீமத் பொருட்களை பெற்றுக் கொள்ளுங்கள், நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியத்தை பெறுங்கள், பயணம் செய்யுங்கள் செல்வத்தை பெறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),* 

 *நூல் : தப்ரானீ – அல்அவ்ஸத்* 


 *✍️✍️இச்செய்தியில் இடம் பெறும் சுஹைர் பின் முஹம்மத் என்பவர் பலவீனமானவராவார்✍️✍️.* 

تهذيب التهذيب – ( *3 / 301)* 

قال البخاري ماروى عنه أهل الشام فانه مناكير وما روى عنه أهل البصرة فانه صحيح وقال الاثرم عن أحمد في رواية الشاميين عن زهير يروون عنه مناكير

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அவரிடமிருந்து சிரியாவைச் சார்ந்தவர்கள் அறிவிப்பவது மறுக்கப்பட வேண்டியவையாகும். அவரிடமிருந்து பஸராவைச் சார்ந்தவர்கள் அறிவிப்பது ஆதாரப்பூர்வமானதாகும் என்று புகாரி கூறுகிறார்கள். சுஹைர் இடமிருந்து சிரியாவைச் சார்ந்தவர்கள் அறிவிப்பதில் மறுக்கப்பட வேண்டியவைகள் உள்ளன என்று அஹ்மத் கூறியுள்ளார்கள்🙋‍♂️🙋‍♂️🙋‍♂️.* 

 *நூல் ; தஹ்தீபுத் தஹ்தீப* 


 *✍️✍️✍️சுஹைர் பின் முஹம்மத் என்பவரிடமிருந்து அறிவிப்பவர் முஹம்மத் பின் சுலைமான் பின் அபிதாவூத் ஆவார். இவர் ஹிரான் பகுதியைச் சார்ந்தவர். ஹிரான் என்பது சிரியாவை பகுதியைச் சார்ந்ததாகும்✍️✍️✍️* .

شرح العقيدة الطحاوية للحوالي – *(1 / 560)* 

كَانَ من أهل حران من بلاد الشام

 *🙋‍♂️🙋‍♂️ஹிரான் பகுதியுள்ளவர்கள் சிரியாவைச் சார்ந்தவர்கள்🙋‍♂️🙋‍♂️.* 

 *நூல் : ஷரஹுல் அகீதத்துத் தஹாவிய்யா* 


 *✍️✍️எனவே இந்தச் செய்தி சிரியா நாட்டவர் மூலம் அறிவிப்பதால் இது சரியான செய்தி அல்ல.✍️✍️* 


 *30. ஜன்னத்துல் பகீஃயில் நபிகள் நாயகம் ஹதீஸ்* 


 *🧕🧕🧕அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) 🧕🧕🧕அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நாள்இரவு இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்களை படுக்கையில்காணவில்லை. அவர்களைத் தேடி) வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் ஜன்னத்துல் பகீஃ அடக்கஸ்தலத்திலிருந்தார்கள். (என்னைக் கண்டவுடன்) சொன்னார்கள். (ஆயிஷாவே!) இறைவனும் இறைத்தூதரும் உனக்கு அநீதமிழைத்து விடுவார்கள் எனபயந்து போனாயா❓✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நான் கூறினேன் : (அவ்வாறெல்லாமில்லை) உங்கள் துணைவியர் ஒருவரிடம்வந்திருப்பீர்கள் என்று தான் கருதினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு‚அலைஹி வஸல்லம்) அவர்கள் மொழிந்தார்கள்: தின்னமாக இறைவன் ஷஃபான்மாதத்தின் 15 ம் இரவின் போது முதல்வானத்திற்கு இறங்கி வருகிறான். மேலும் கல்ப்கூட்டத்தாரின் ஆடுகளின் எண்ணிக்கையைவிட அதிக அளவில் அடியார்களைமன்னிக்கிறான்.🙋‍♂️🙋‍♂️🙋‍♂️* 

 *அறிவிப்பாளர் : ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா)* 

 *நூற்கள் : அஹ்மத் எண் : 26060, திர்மிதி எண் : 739, இப்னுமாஜா எண்: 1389 இப்னுஅபீஷய்பா எண் : 29858* 


 *✍️✍️✍️இவர்கள் எடுத்துரைத்த இந்த செய்தி இமாம் புகாரி அவர்களால் பலவீனமானது என்றுஆதாரத்துடன் இடித்துரைக்கப்பட்ட செய்தியாகும். புகாரி இமாமின் மாணவரான இமாம்திர்மிதீ அவர்கள் இந்த செய்தியைப் பற்றி புகாரி இமாமிடம் கேட்டபோது இதுஆதாரமற்றது என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள்✍️✍️✍️.* 


 *31. 🧶முதல்🧶 அத்தஹயாத்தில்🕋 ஸலவாத்து ☪️கூடாதா❓📚 ஹதீஸ்📚* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 60* 


 *🌹🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment