பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, August 20, 2020

இஸ்லாத்தை அறிந்து - 71

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமியலாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 71 👈👈👈* 


 *📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚* 


 *92. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஆணும் பெண்ணும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️ பார்க்கவே 🌐கூடாது📚 ஹதீஸ்📚📚📚* 


 *93. 🕋🕋🕋கஃபாவின்🕋🕋 கீழ்🧶🧶 இரண்டு☪️☪️ கபருகள் ⚫⚫உள்ளதா 📚📚ஹதீஸ்📚📚📚* 


 *94. ☪️☪️☪️நபியின்🩸🩸 இரத்தத்தை🩸🩸 குடிப்பது🕋🕋 சிறப்பா❓📚📚 ஹதீஸ்📚📚📚* 


 *95. 🕋🕋🕋நபியவர்கள்☪️☪️ தனக்காக🧶🧶 அகீகா🌰🌰 கொடுத்தார்கள்📚📚 ஹதீஸ்📚📚📚* 


 *96. ☪️☪️☪️நபியவர்கள்🕋🕋 நோயுற்றது♻️♻️ சஃபர்☪️☪️ மாதத்தில்❓📚📚 ஹதீஸ்📚📚📚* 


 *🙋‍♂️🙋‍♀️92. ஆணும் பெண்ணும் பார்க்கவே கூடாது ஹதீஸ்🙋‍♀️🙋‍♂️* 


حلية الأولياء *430 – (2 / 41)* 

حَدَّثَنا إبراهيم بن أحمد بن أبي حصين حَدَّثَنا جدي أَبُو حَصِينٍ حَدَّثَنا يحيى الحماني حَدَّثَنا قيس عن عَبْد الله بن عُمَران عن علي ابن زيد عن سعيد بن المسيب عنعلي أنه قال لفاطمة ما خير للنساء قالت لا يرين الرجال ولا يرونهن فذكر ذلك للنبي صلى الله عليه وسلم فقال إنما فاطمة بضعة مني.

 *✍️✍️✍️அலி (ரலி) அவர்கள் பாத்திமா (ரலி) அவர்களிடம் பெண்ணுக்கு எது சிறந்தது? என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆண்களை அவர் பார்க்க மாட்டார், ஆண்களும் அவரை பாத்திருக்க மாட்டார்கள் என்றார்கள்.✍️✍️✍️* 

 *அறிவிப்பர் ஸயீத் பின் முஸய்யப்,* 

 *நூல் ஹில்யத்துல் அவ்லியா, பாகம் 2, பக்கம் 41)* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தியில் இடம்பெறும் அலீ பின் ஸைத் என்பவர் பலவீனமாவராவார்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *🕋🕋93. கஃபாவின் கீழ் இரண்டு கபருகள் உள்ளதா ஹதீஸ்🕋🕋* 

 *♻️செய்தி 1♻️* 

 *✍️✍️✍️கஃபாவின் கீழ் இரண்டு கப்ருகள் உள்ளன என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறியதாக ஒரு செய்தி பதிவாகியுள்ளது.✍️✍️✍️* 

 *☪️இப்னு அப்பாஸ் ரலி கூறியதாவது☪️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மஸ்ஜிதுல் ஹாரமில் இரண்டு கப்ருகள் உள்ளன. அவற்றைத் தவிர வேறு எதுவும் அங்கில்லை. அவை இஸ்மாயீல் (அலை) மற்றும் ஷூஐப் (அலை) அவர்களின் கப்ருகளாகும். இஸ்மாயீல் அலை அவர்களின் கப்ர் ஹிஜ்ர் பகுதியில் ருக்னுல் அஸ்வத் – ஹஜருல் அஸ்வதிற்கு – நேராக உள்ளது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அக்பாரு மக்கா, பாகம் 2,  பக்கம் 124* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இது நபிகள் நாயகம் கூறியதாக இல்லை. இப்னு அப்பாஸ் (ரலி) என்ற நபித்தோழரின் சொந்தக் கூற்றாகவே கூறப்பட்டுள்ளதால் இதை நாம் ஏற்க வேண்டியதில்லை. மேலும் இது முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️இதில் இடம்பெற்றுள்ள முஹம்மத் பின் ஸாயிப் அல்கல்பீ என்பவரை அறிஞர்கள் பலரும் பலவீனமானவர், பொய்யர், மூளை குழம்பியவர் என்று குறை கூறியுள்ளனர்.✍️✍️✍️* 

 *♻️செய்தி: 2♻️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அப்துல்லாஹ் பின் ளம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது. மகாமு இப்றாஹீமிலிருந்து ருக்னுல் யமானீ பகுதி வரையிலும் ஜம்ஜம் அமைந்த இடத்திலிருந்து ஹிஜ்ர் பகுதி வரையிலும் உள்ள இடைப்பட்ட இடத்தில் சுமார் 99 நபிமார்களின் கப்ருகள் உள்ளன. அவர்கள் ஹஜ் செய்ய வந்தார்கள். (பிறகு) அங்கேயே அடக்கம் செய்யப்பட்டார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *☪️மஸாயிலுல் இமாம் அஹ்மத்,☪️* 

 *பாகம் 1,  பக்கம் 408* 

 *✍️✍️✍️இந்தச் செய்தியை இமாம் அஹ்மத் அவர்களின் மகன் ஸாலிஹ் தனது மஸாயில் என்ற நூலில் கொண்டு வருகிறார்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தியும் நபிகள் நாயகம் கூறியதாகவோ, நபித்தோழர் கூறியதாகவோ இல்லை🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *✍️✍️✍️மாறாக அப்துல்லாஹ் பின் ளம்ரா என்ற தாபியி சொன்னதாகவே வருகிறது.✍️✍️✍️* 

 . *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதுவே இந்தச் செய்தியை நாம் ஆதாரமாக ஏற்க முடியாது என்பதற்கு போதுமான காரணமாகும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் யஹ்யா பின் சுலைம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது நினைவாற்றல் ரீதியாக பல அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்✍️✍️✍️.* 

 *♻️கருத்து சரியா❓♻️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அதுவும் 90 நபிமார்களும் ஒரே நாளில் ஹஜ் செய்ய வந்திருக்க மாட்டார்கள். ஒவ்வொரு கால கட்டத்தில் ஒருவர் வந்திருக்கலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️ஒவ்வொரு நபியும் மக்காவில் மரணித்த போதும் சொல்லி வைத்தது போல் தவாப் செய்வதைத் தடுக்கும் வகையில் அங்கே அடக்கம் செய்வார்களா❓✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதை பரேலவிகள் உண்மை என்று நம்பினால் நபிமார்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தை ஏறி மிதிக்கலாம்; அதற்கு எந்த மதிப்பும் கொடுக்கத் தேவை இல்லை என்று பத்வா கொடுக்க வேண்டும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️அல்லது தவாப் செய்யும் சுற்றுப் பாதையில் நபிமார்களின் கப்ருகள் உள்ளதால் இனிமேல் கஅபாவை தவாப் செய்யக் கூடாது என்று சொல்ல வேண்டும்✍️✍️✍️.* 

 *☪️☪️இரண்டில் எதைச் சொல்லப் போகிறார்கள்❓☪️☪️* 
 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நபிகள் நாயகம் மற்றும் நபித்தோழர்கள் கூட சம்பந்தப்படாத இந்தச் செய்தி இவர்களது கருத்திற்கு ஒரு போதும் ஆதாரமாகாது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️கஃபாவைச் சுற்றி கப்ருகள் உள்ளது தொடர்பாக நபிகள் நாயகம் கூறியதாக அல்குனா வல் அஸ்மா என்ற நூலில் பின்வருமாறு ஒரு செய்தி பதிவாகியுள்ளது.✍️✍️✍️* 

 *♻️செய்தி: 3♻️* 

 *🧕🧕ஆயிஷா (ரலி) அறிவிப்பதாவது🧕🧕* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இஸ்மாயீல் (அலை) அவர்களின் கப்ர் ஹிஜ்ர் பகுதியிலே உள்ளது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *அல்குனா வல்அஸ்மா* 

 *பாகம் 1, பக்கம் 239* 

 *✍️✍️✍️இதில் யஃகூப் பின் அதாஃ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர் ஆவார்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இவர் பலவீனமானவர் என்று இமாம் அபூசுர்ஆ மற்றும் இப்னு மயீன் ஆகியோர் விமர்சித்துள்ளனர்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️இமாம் அஹ்மத் இவரை மறுக்கப்பட வேண்டியவர் என்று குறை கூறியுள்ளார்.✍️✍️✍️* 

 *பார்க்க: அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 9, பக்கம் 211* 

 *♻️அறிவற்ற கப்ர் முட்டிகள்♻️* 

 *☪️☪️☪️இஸ்மாயீல் (அலை) உள்ளிட்ட எந்த நபியும் கஃபாவின் கீழ்ப் பகுதியிலோ அல்லது கஃபாவைச் சுற்றியோ அடக்கம் செய்யப்பட்டிருப்பதாக அல்லாஹ்வோ, அல்லாஹ்வின் தூதரோ எங்கும் சொல்லவில்லை☪️☪️☪️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மேலும் கஃபா என்பது இறைவனை வணங்குவதற்காகக் கட்டப்பட்ட முதல் ஆலயம் ஆகும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *🕋🕋🕋ஆதம் அலை அவர்கள் காலத்திலேயே இந்த கஃபா கட்டப்பட்டு விட்டது 🕋🕋🕋.* 

 *✍️✍️✍️எந்த நபிமார்கள் இங்கே அடக்கம் செய்யப்பட்டிருப்பதாகப் புழுகுகிறார்களோ அவர்களது பிறப்பு – இறப்பிற்கு முன்பாகவே கஃபா ஆலயம் கட்டப்பட்டு விட்டது. இறைவனால் அது சிறப்பிக்கப்பட்டும் விட்டது.✍️✍️✍️* 

 *🕋🕋🕋அத்தகைய கஃபா ஆலயத்தின் சிறப்பு எந்த தனி மனிதர்களைக் கொண்டும் அல்ல என்பதை விளங்கி கொள்ள வேண்டும். இவர்கள் கூறிய படி அங்கே சிலர் அடக்கம் செய்யப்பட்டிருந்தாலும் அதனால் கஃபா ஆலயத்திற்கு எந்தச் சிறப்பும் கிடையாது.🕋🕋🕋* 

 
 *☪️☪️மஸ்ஜிதுந் நபவீ வரலாறு அறியாத மடையர்கள்☪️☪️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️ஓரிடத்தில் பள்ளிவாசல் கட்டும் போது அங்கே சில மனிதர்கள் அடக்கம் செய்யப்பட்டிருந்தால் அவர்களது உடல்களை அப்புறப்படுத்தி வேறு இடத்தில் அடக்கம் செய்ய வேண்டும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️மனித உடல்களை அப்புறப்படுத்திய பிறகே அங்கே பள்ளிவாசல் எழுப்ப இயலும். இது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த வழிமுறையாகும்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மஸ்ஜிதுந் நபவீ இந்த அடிப்படையிலேயே கட்டப்பட்டுள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️நபி (ஸல்) அவர்கள் (நாடு துறந்து) மதீனாவுக்கு வந்தபோது பள்ளிவாசல் கட்டும்படி பணித் தார்கள். பனூ நஜ்ஜார் கூட்டத்தாரை (அழைத்து வரச் சொல்லி) ஆளனுப் பினார்கள். (அவர்கள் வந்தபோது), “பனூ நஜ்ஜார் கூட்டத்தாரே! உங்களின் இந்தத் தோட்டத்திற்கு என்னிடம் விலை கூறுங்கள்” என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், “இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கான விலையை நாங்கள் அல்லாஹ்விடமே கோருவோம்” என்று பதில் (கூறி, அந்தத் தோட்டத்தை) அளித்தனர்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️நான் உங்களிடம் கூறுபவை தாம் அ(ந்தத் தோட்டத்)தில் இருந்தன: அதில் இணை வைப்பாளர்களின் சமாதிகள் இருந்தன; அதில் இடிபாடுகள் இருந்தன; சிலபேரீச்ச மரங்களும் அதில் இருந்தன. ஆகவே நபி (ஸல்) அவர்கள் (பள்ளிவாசல் கட்டுவதற்காக அங்குள்ள) சமாதிகளைத் தோண்டி (அப்புறப்படுத்தி)டுமாறு உத்தரவிட அவ்வாறே அவை சமப்படுத்தப் பட்டன. பேரீச்சமரங்களை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவை வெட்டப்பட்டன. பள்ளிவாசலின் கிப்லாத் திசையில் பேரீச்ச மரங்களை வரிசையாக நட்டனர்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* .

 *அறிவிப்பவர்: அனஸ் (ரலி)* 

 *நூல்: புகாரி 428* 

 *✍️✍️✍️இந்த வரலாறு அறியாத மடையர்கள் தான் கஃபாவைச் சுற்றி நபிமார்கள் அடங்கி உள்ளதாக ஆதாரமற்றுப் பிதற்றுகிறார்கள்.✍️✍️✍️* 


 *🧶🧶94. நபியின் இரத்தத்தை குடிப்பது சிறப்பா❓ ஹதீஸ்🧶🧶* 


 *🕋🕋🕋நபி (ஸல்) அவர்கள் இரத்தம் குத்தி எடுத்துவிட்டு பிறகு என்னிடம் “இந்த இரத்தத்தைஎடுத்து பறவைகள் அல்லது மக்கள் மற்றும் கால்நடைகளின் (கண்ணில் படாதவாறு)புதைத்துவிடு” என்று கூறினார்கள். எனவே நான் தனியே சென்று அதைக் குடித்துவிட்டேன். பிறகு அவர்கள் என்னிடம் இதைப் பற்றிக் கேட்ட போது நான் அதைக்குடித்தேன் என்று நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேன். அவர்கள் சிரித்தார்கள்.🕋🕋🕋* 

 *அறிவிப்பவர்: சஃபீனா (ரலி),* 

 *நூல்: அஸ்ஸுனனுல் குப்ரா* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தியில் புரைஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் மிகவும் பலவீனமானவர்என்று இப்னு கஸீர் கூறியுள்ளார். இமாம் தாரகுத்னீயும் இப்னு ஹிப்பானும் இவரைப்பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* .

 *✍️✍️✍️மேலும் இந்த செய்தியில் உமர் பின் சஃபீனா என்பவரும் இடம்பெற்றுள்ளார். இவர் யார்என அறியப்படாதவர் என்று இமாம் தஹபீ கூறியுள்ளார்கள். இமாம் புகாரி அவர்கள்இவரை மஜ்ஹுல் – அறியப்படாதவர் என்று கூறியுள்ளார். எனவே இதையும்ஏற்றுக்கொள்ள முடியாது✍️✍️✍️.* 

 *☪️சஅத் பின் மாலிக் (ரலி) அவர்களின் அறிவிப்பு☪️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️உஹதுப் போரில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களுடைய முகத்தில்காயம் ஏற்பட்டபோது என் தந்தை மாலிக் பின் சினான் அவர்கள் அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்களின் இரத்தத்தை உறிஞ்சி விழுங்கினார்கள். “நீ இரத்தத்தைகுடிக்கின்றாயா?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், “ஆம். நான்அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இரத்தத்தைக் குடிக்கின்றேன்” எனக்கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னுடைய இரத்தம் அவருடையஇரத்தத்துடன் கலந்துவிட்டது. அவரை நரகம் தீண்டாது” என்று கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அறிவிப்பவர்: சஅத் பின் மாலிக் (ரலி),* 

 *நூல்: தப்ரானீ* 

 *✍️✍️✍️இந்தச் செய்தியில் ருபைஹ் பின் அப்திர் ரஹ்மான் இடம்பெற்றுள்ளார். இவருடையநம்பகத்தன்மை நிரூபிக்கப்படவில்லை. மேலும் இதில் இடம்பெற்றுள்ள இப்னுல் அஸ்கஃயாரென்ற விபரம் அறியப்படவில்லை✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மேலும் இதில் மூசா பின் யஃகூப் என்வர் இடம்பெற்றுள்ளார். இவர் மனன சக்திசரியில்லாதவர் என்று இமாம் இப்னு ஹஜரும், இவர் பலவீனமானவர் என்று இமாம் அலீபின் மதீனீயும், இவரிடத்தில் பலவீனம் உள்ளது என்று இமாம் தஹபீயும் கூறியுள்ளனர்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️மேலும் இதில் இடம்பெற்றுள்ள அப்பாஸ் பின் அபீ ஷம்லா என்பவரைப் பற்றி எந்தக்குறிப்பும் ஹதீஸ் நூற்களில் இல்லை. இவர் நம்பகமானவர் என்று எந்த அறிஞரும்நற்சான்று அளிக்கவில்லை. எனவே பலவீனமானவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தியைஏற்றுக்கொள்ள முடியாது.✍️✍️✍️* 


 *⚫⚫95. நபியவர்கள் தனக்காக அகீகா கொடுத்தார்கள் ஹதீஸ்⚫⚫* 


 *🕋🕋🕋நபியவர்கள் நபியாக அனுப்பப்பட்ட பிறகு தனக்காக அகீகா கொடுத்தார்கள்.🕋🕋🕋* 

 *அறிவிப்பவர் அனஸ் (ரலி)* 

 *நூற்கள் :* 

 *முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக் (பாகம் 4 பக்கம் 329)* 

 *அஸ்ஸூனனுல் குப்ரா (பாகம்9 பக்கம் 300)* 

 *முஸ்னதுல் பஸ்ஸார் (பாகம் 6 பக்கம் 193)* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மேற்கண்ட அனைத்து அறிவிப்புகளிலும் அப்துல்லாஹ் பின் முஹர்ரர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் மிகவும் பலவீனம் ஆனவர் ஆவார். இவர் அறிவிக்கும் செய்திகள் ஒரு போதும் ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ளத் தகுந்தவை இல்லை.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *☪️🕋96. நபியவர்கள் நோயுற்றது சஃபர் மாதத்தில்❓ ஹதீஸ்🕋☪️*  *☪️☪️☪️நபி (ஸல்) அவர்கள் சஃபர் மாதம் இருபதாம் நாள் திங்கள் கிழமை நோயுற்றார்கள்☪️☪️☪️.* 

 *அறிவிப்பவர் : சுலைமான் பின் தர்கான் அத்தைமீ,* 

 *நூல் : தலாயிந் நுபவா – பைஹகீ, பாகம் : 7, பக்கம் : 234* 

 *✍️✍️✍️இச்செய்தியை அறிவிக்கும் சுலைமான் பின் தர்கான் அத்தைமீ என்பவர் நபித்தோழர் அல்ல. நபிகளாருக்கு நடந்த நிகழ்வுகளை அவர்களைப் பார்த்த நபித்தோழர்கள் மட்டுமே அறிவிக்க முடியும். எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.✍️✍️✍️* 

الطبقات الكبرى كاملا *230 – (2 / 272(* 


 *2241* - أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ ، حَدَّثَنِي أَبُو مَعْشَرٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسٍ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَكَى يَوْمَ الأَرْبِعَاءِ لِإِحْدَى عَشْرَةَ لَيْلَةً بَقِيَتْ مِنْ صَفَرٍ سَنَةَ إِحْدَى عَشْرَةَ ، فَاشْتَكَى ثَلاَثَ عَشْرَةَ لَيْلَةً , وَتُوُفِّيَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الِاثْنَيْنِ لِلَيْلَتَيْنِ مَضَتَا مِنْ شَهْرِ رَبِيعٍ الأَوَّلِ سَنَةَ إِحْدَى عَشْرَةَ.


 *🕋🕋🕋நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பத்தாம் வருடம் சஃபர் மாதம் 11 ஆம் நாள் புதன் கிழமை நோயுற்றார்கள்🕋🕋🕋.* 

 *அறிவிப்பவர் : முஹம்மத் பின் கைஸ்,* 

 *நூல் : தபகாத்துல் குப்ரா, பாகம் : 2, பக்கம் : 272* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தியை அறிவிக்கும் முஹம்மத் பின் கைஸ் என்பவர் நபித்தோழர் அல்ல. எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தி என்பதில் ஐயமில்லை. மேலும் இரண்டாவது அறிவிப்பாளர் அபூமிஃஷர் என்பவர் பலவீனமானவராவார். இதைப் போன்று முஹம்மத் பின் உமர் என்ற அல்வாகிதி என்பவர் பொய் சொல்பவர் என்று கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டவர்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* .

 *✍️✍️✍️எனவே இந்தச் செய்தி மிகவும் பலவீனமானது. நபிகளார் இறுதிக்காலத்தில் கடுமையான நோயில் பாதிக்கப்பட்ட்டது உண்மை. ஆனால் அது சஃபர் மாதம் என்பதற்கும் புதன் கிழமை என்பதற்கும் ஆதாரம் இல்லை. மேலும் குறிப்பிட்ட நாளில் நோய்யுற்றதால் அந்த நாள் பீடை என்று சொல்வதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.✍️✍️✍️* 


 *97. ☪️☪️☪️ஷஃபான்☪️☪️ 15ல் 🔥🔥 நகரவாசிகள்🔥🔥 விடுதலையா❓📚📚 ஹதீஸ்📚📚📚* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 72* 


 *🌹🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment