பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, August 16, 2020

சட்டம் அறிவோம் - 3

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

            *🪀 கேள்வி - பதில் 🪀*

     *🥀தினமும் ஒரு மார்க்கச்🥀*
                                   ⤵️
               *🥀சட்டம் அறிவோம்🥀*

                                *[ 03 ]*

                     *👇 கேள்வி 👇*

*☄️காலையிலும், மாலையிலும் நபியவர்கள் மீது பத்து முறை ஸலவாத் ஓதினால் ஷபாஅத் கிடைக்கும் என்று பயான் ஒன்றில் ஒருவர் சொன்னார். இது சரியான ஹதீஸா❓*

🍝🍝🍝    *👇பதில்👇* 🍝🍝🍝

*🏮🍂காலையிலும், மாலையிலும் நபியவர்கள் மீது ஸலவாத்துச் சொன்னால் நபியவர்களின் பரிந்துரை கிடைக்கும் என்ற கருத்தில் எந்தச் செய்தியும் இல்லை.*

_ஒவ்வொரு பாங்கிற்குப் பிறகும் நபியவர்களின் மீது ஸலவாத்துச் சொல்ல வேண்டும். இதற்குப் பிறகு நபியவர்கள் கற்றுக் கொடுத்த பிரார்த்தனையைச் செய்ய வேண்டும். இவ்வாறு செய்தால் நபியவர்களின் பரிந்துரை கிடைக்கும் என்று பின்வரும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ் தெரிவிக்கின்றது._

577حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ حَيْوَةَ وَسَعِيدِ بْنِ أَبِي أَيُّوبَ وَغَيْرِهِمَا عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ *عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا سَمِعْتُمْ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَيَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَيَّ صَلَاةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِي الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِي الْجَنَّةِ لَا تَنْبَغِي إِلَّا لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِي الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ* رواه مسلم

_நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :_

_*🍃தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது ஸலவாத் சொல்லுங்கள். ஏனெனில், என் மீது யார் ஒருமுறை ஸலவாத் சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள் புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் வஸீலாவைக் கேளுங்கள். வஸீலா என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத் தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ்விடம்) கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.*_

*🎙️அறிவிப்பவர் :
           *அப்துல்லாஹ் பின்*
                  *அம்ர் பின்*
                         *அல்ஆஸ் (ரலி)*
 
         *📚 நூல் : முஸ்லிம் 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                          *✍🏼...தொடரும்*


🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment