*☪️☪️மீள்☪️ பதிவுவ☪️☪️*
*🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕*
*🌹🌹🌹*
*❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤*
*🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋*
*🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*
*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*
*👉👉👉 தொடர் பாகம் 58 👈👈👈*
*📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚*
*21.☪️☪️ முஹம்மது☪️☪️ என்று 🕋பெயர்🕋 வையுங்கள்📚📚 ஹதீஸ்📚📚*
*22. 🔥🔥நெருப்பால்🦀🦑🦎🦂 பூச்சிகளை🦀🦑🦎🦂 கொல்லக்கூடாதா🔥🔥🔥 ஹதீஸ்📚📚📚*
*23. ♨️♨️♨️ஆவி♨️♨️♨️ அடங்கும் 🔥வரை🔥 மூடி 🧶வை🧶 ஹதீஸ்📚📚📚*
*24. ☪️☪️☪️ரமளானில்☪️☪️☪️ எழுபது 🕋மடங்கு🕋 கூலியா❓📚📚 ஹதீஸ்📚📚📚*
*25.🕋🕋🕋 அபூபக்கர் 🕋தர்மம் -🧶 ஈமான் -☪️ குகை -📚 ஹதீஸ்📚📚📚*
*21. 🔵முஹம்மது என்று பெயர் வைய்யுங்கள் ஹதீஸ்🔵*
*☪️சுவனத்தில் நுழைந்து கொள்☪️*
*✍️✍️✍️மறுமை நாளில் இறைவன் மனிதப் படைப்பைப் பார்த்து நபி (ஸல்) அவர்களின் பெயரானமுஹம்மத் என்ற பெயரை யார் வைத்திருக்கிறார்களோ அவர்களெல்லாம் சுவனத்தில்நுழைந்து கொள்ளுங்கள் என்று கூறுவார்கள்.✍️✍️✍️*
*(ஹதீஸே குத்ஸி)*
*🙋♂️🙋♂️🙋♂️மேலும் யாருடைய வீட்டில் முஹம்மத் என்ற பெயர் இருக்கின்றதோ அந்த வீட்டில்வறுமை உண்டாகாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்* .
*அல்லாஹ்வின் முன்னிலையில் இரண்டு அடியார்கள் நிறுத்தப்படுவார்கள்.இவ்விருவரையும் நோக்கி சுவனத்திற்குச் செல்லுங்கள் என்று அவன் சொல்வான். “எங்கள் இறைவா! நாங்கள் சுவனத்தில் நுழைவதற்கு என்ன தகுதி இருக்கின்றது?சுவனத்தை எங்களுக்குக் கூலியாக நீ அளிப்பதற்கு நாங்கள் எந்த ஒரு அமலையும்செய்யவில்லையே!” என்று கேட்பார்கள். “என்னுடைய இவ்விரு அடியார்களையும்(சுவனத்தில்) நுழையுங்கள். அஹ்மது, முஹம்மது பெயரைக் கொண்டவர்கள் நரகத்தில்நுழையலாகாது என்று எனக்கு நானே சத்தியம் செய்து கொண்டேன்” என்று அல்லாஹ்சொல்கின்றான்.🙋♂️🙋♂️🙋♂️*
*✍️✍️✍️இப்படி ஒரு பொய்யான செய்தி, ஹதீஸ் குத்ஸீ என்ற பெயரில் நூற்களிலும் ஆலிம்களின்நாவுகளிலும் நடமாடிக் கொண்டிருக்கின்றது.* *இமாம் சுயூத்தி, தமது நூலான அல்லஆலீ மஸ்னுஅத் ஃபில் அஹாதீஸில் மவ்லூஆத்(புனையப்பட்ட பொன்மணிகளில் இணைக்கப்பட்ட போலி முத்துக்கள்) என்ற நூலில்பதிவு செய்து இந்தச் செய்தியை இனம் காட்டுகின்றார்.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️இதில் உள்ள அபாயமும் ஆபத்தும் இதை அறிவிக்கின்ற இப்னு புகைர் என்பவரின்ஆசிரியரிடத்தில் அடங்கியிருக்கின்றது. அவர் பெயர் அஹ்மத் பின் அப்துல்லாஹ் தர்ராஃ.இவர் ஒரு பொய்யர். இதில் இடம் பெற்றுள்ள மற்றொரு அறிவிப்பாளர் ஸதகா பின்மூஸா என்பவர் நம்பத்தகுந்தவர் அல்லர்; செய்திகளில் புரட்டு செய்பவர் என்று தஹபீஅவர்கள் குறிப்பிட்டதாக இமாம் சுயூத்தி குறிப்பிடுகின்றார்கள்.* *முஹம்மது என்று பெயர் வைப்பதைச் சிறப்பித்து நபி (ஸல்) அவர்கள் சொன்னதாகவருகின்ற ஹதீஸ்கள் எதுவுமே உருப்படியானதல்ல. அவற்றில் எதுவும் சரியான ஹதீஸ்அல்ல என்ற கருத்தில் அபூஹாத்தம் அர்ராஸி, இப்னுல் ஜவ்ஸி, இப்னுல் கய்யூம் ஆகியஅறிஞர்கள் குறிப்பிடுகின்றார்கள்🙋♂️🙋♂️🙋♂️*
*22. 🔥நெருப்பால் பூச்சிகளை கொல்லக்கூடாதா ஹதீஸ்🔥*
*✍️✍️✍️நாங்கள் நபிகள் நாயகம் ஸல் அவர்களுடன் ஒரு பயணத்தில்* *இருந்தோம். அவர்கள் ஒரு தேவைக்காக வெளியே சென்றார்கள். அப்போது நாங்கள் சிறு குருவியையும் அதன் இரு குஞ்சுகளையும்* *கண்டோம். நாங்கள் இரு குஞ்சுகளையும் எடுத்துக் கொண்டோம். தாய்ப் பறவை* *சிறகடித்துக் கொண்டு வந்தது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வந்து விட்டனர். இந்தத் தாய்ப் பறவையைப் பதறச் செய்தவர் யார்* *என்று கேட்டு விட்டு அதன் குஞ்சுகளை அதனிடம் விட்டு விடுங்கள் எனக் கூறினார்கள். மேலும்* *ஒரு எறும்புப் புற்றை நாங்கள் எரித்திருப்பதையும் அவர்கள் கண்டனர். யார் இதை எரித்தவர் என்று கேட்ட போது* *நாங்கள் தான் என்று கூறினோம். நெருப்பின் சொந்தக்காரன்* *(அல்லாஹ்) தவிர வேறு யாரும் நெருப்பின் மூலம் தண்டிக்கக் கூடாது எனக் கூறினார்கள்.✍️✍️✍️*
*அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி) நூல் : அபூதாவூத்*
*🙋♂️🙋♂️🙋♂️இது பலவீனமான ஹதீஸாகும்.*
*இப்னு மஸ்வூத் அவர்களிடமிருந்து அவரது மகன் அப்துர் ரஹ்மான் என்பார் அறிவிக்கிறார். இப்னு மஸ்வூத் (ரலி) மரணிக்கும் போது இவரின் வயது ஆறாகும். எனவே இவர் தனது தந்தையிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை.*
*எனினும், நெருப்பால் தண்டனை கூடாது என்ற கட்டளை இருப்பது உண்மை தான். இது மனிதர்களுக்கு மரண தண்டனை வழங்க நேர்ந்தால் அவர்களை நெருப்பில் எரித்து கொல்லக் கூடாது என்பது தான் பொருள். மனிதர் அல்லாத உயிரனத்தை எரிக்கக் கூடாது என்பது பொருள் அல்ல.*
*அல்லாஹ் தண்டிப்பது போல் தண்டிக்க வேண்டாம் என்ற சொல்லே இதைத் தெளிவு படுத்துகிறது. அல்லாஹ் மறுமையில் நெருப்பால் தண்டனை அளிப்பது மனிதர்கள், ஜின்கள், ஷைத்தான்களுக்கு மட்டுமே. கொசுக்களுக்கோ இன்ன பிற ஜீவன்களுக்கோ அல்லாஹ் தண்டனை அளிப்பதில்லை.🙋♂️🙋♂️🙋♂️*
*✍️மேலும் பின்வரும் ஹதீஸில் இருந்தும் இதை அறியலாம்✍️.*
حدثنا يحيى بن بكير حدثنا الليث عن يونس عن ابن شهاب عن سعيد بن المسيب وأبي سلمة أن أبا هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول قرصت نملة نبيا من الأنبياء فأمر بقرية النمل فأحرقت فأوحى الله إليه أن قرصتك نملة أحرقت أمة من الأمم تسبح
*🕋🕋🕋அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாவது: இறைத் தூதர்களில் ஒருவரை எறும்பு ஒன்று கடித்து விட்டது. உடனே, அந்த எறும்புப் புற்றையே எரித்து விடும்படி அவர் கட்டளையிட்டார். அவ்வாறே அது எரிக்கப்பட்டு விட்டது. (இதைக் கண்ட) அல்லாஹ், ஓர் எறும்பு உங்களைக் கடித்து விட்ட காரணத்தால் அல்லாஹ்வின் தூய்மையை எடுத்துரைத்துக் கொண்டிருந்த சமுதாயங்களில் ஒன்றையே நீங்கள் எரித்து விட்டீர்களே என்று (அவரைக் கண்டிக்கும் விதத்தில்) அவருக்கு அறிவித்தான். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.🕋🕋🕋*
*புஹாரி 3019 இது சரியான ஹதீஸ்.*
*23. ♨️ஆவி அடங்கும் வரை மூடி வை ஹதீஸ்♨️*
*✍️✍️✍️அஸ்மா (ரலி) அவர்களிடம் உணவு கொண்டு வரப்பட்டால் அதன் ஆவி அடங்கும் வரை மூடி வைக்குமாறு உத்தரவிடுவார்கள். மேலும் அவர்கள் இவ்வாறு உண்ணுவது அதிக பரகத்தைப் பெற்றுத் தரும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன் என்று கூறினார்கள்✍️✍️✍️.*
*அறிவிப்பவர் : உர்வா*
*நூல் : தாரமீ (1958)*
*🙋♂️🙋♂️🙋♂️இந்த அறிவிப்பில் குர்ரத் பின் அப்துர்ரஹ்மான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் மயீன், அபூ சுர்ஆ, நஸாயீ, அபூஹாதிம் ஆகியோர் கூறியுள்ளனர்.*
*இதே செய்தி அஹ்மதில் பின்வருமாறு பதிவாகியுள்ளது.🙋♂️🙋♂️🙋♂️*
*25720* حَدَّثَنَا حَسَنٌ قَالَ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ قَالَ حَدَّثَنَا عُقَيْلُ بْنُ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا كَانَتْ إِذَا ثَرَدَتْ غَطَّتْهُ شَيْئًا حَتَّى يَذْهَبَ فَوْرُهُ ثُمَّ تَقُولُ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّهُ أَعْظَمُ لِلْبَرَكَةِ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ عَنْ عُقَيْلٍ و حَدَّثَنَا عَتَّابٌ قَالَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ قَالَ أَنْبَأَنَا ابْنُ لَهِيعَةَ قَالَ حَدَّثَنِي عُقَيْلُ بْنُ خَالِدٍ عَنِ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ أَنَّهَا كَانَتْ إِذَا ثَرَدَتْ غَطَّتْهُ فَذَكَرَ مِثْلَهُ رواه أحمد
*✍️✍️✍️இந்த அறிவிப்பில் இப்னு லஹீஆ என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர். இவர் பலவீனமானவர் என்று இமாம் நஸாயீ, இமாம் யஹ்யா பின் மயீன், அபூஹாதிம், யஹ்யா பின் சயீத், அப்துர் ரஹ்மான் பின் மஹ்தீ, இமாம் இப்னு ஹஜர், இமாம் ஹைஸமீ ஆகியோர் கூறியுள்ளனர்.✍️✍️✍️*
*24.☪️ ரமலானில் எழுபது மடங்கு கூலியா? ஹதீஸ்☪️*
*🙋♂️🙋♂️🙋♂️கீழ்காணும் ஹதீஸ்கள் அனைத்தும் இட்டுக்கட்டப்பட்டவை. பொய்யானவை.பலவீனமானவை.*
*ரமளானில் எழுபது மடங்கு கூலியா?*
*நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தின் இறுதியில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அதில்) மனிதர்களே! உங்களுக்கு மகத்துவம் மிக்க, அருள் நிறைந்த மாதம் வழங்கப்பட்டுள்ளது. அந்த மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு இருக்கிறது. அந்த மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் கடமையாக்கியிருக்கின்றான். இரவில் தொழுவதை உபரியான வணக்கமாக ஆக்கியுள்ளான். நன்மையான காரியம் ஏதாவது ஒன்றைச் செய்தால் அவன் அதுவல்லாத ஒரு கடமையான செயலைச் செய்வதன் போன்றாவான். அம்மாதத்தில் ஒரு கடமையான செயலைச் செய்தால் அதுவல்லாத எழுபது கடமையான செயலைச் செய்தவன் போன்றாவான். இது பொறுமைக்குரிய மாதமாகும். பொறுமையின் கூலி சொர்க்கமாகும். மேலும் (இது) பெருந்தன்மையுடன் நடக்கும் மாதமாகும். முஃமின்களின் செல்வங்கள் அதிகரிக்கப்படும் மாதமாகும். யார் அம்மாதத்தில் ஒரு நோன்பாளிக்கு நோன்புதிறக்க செய்வாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும். நரகத்திலிருந்து பாதுகாப்பாக அமையும். மேலும் (நோன்பு நோற்றவரின்) கூலிபோன்று இவருக்கும் வழங்கப்படும். அவரின் கூலியிலிருந்து எதுவும் குறைக்கப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே! எங்களின் அனைவரும் நோன்பாளியை நோன்பு துறக்கச் செய்யும் அளவு (வசதி படைத்தவர்கள்) இல்லையே! என்று கூறினோம். அப்போது யார் தண்ணீர் கலந்த பாலை அல்லது பேரீச்சம் பழத்தை அல்லது தண்ணீரை கொடுத்தாலும் இந்த நன்மையை அல்லாஹ் வழங்குவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🙋♂️🙋♂️🙋♂️*
*✍️✍️✍️யார் நோன்பாளிக்கு வயிறு நிரம்ப (உணவு வழங்கி) நோன்பு துறக்கச் செய்கிறாரோ அவருக்கு என்னுடைய ஹவ்லுல் (கவ்ஸரில்) சொர்க்கம் செல்லும் வரைக்கும் அல்லாஹ் நீர் புகட்டுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*
*இந்த மாதத்தின் முதல் பகுதி அருளுக்குரியதாகும். நடுப்பகுதி மன்னிப்புக்குரியதாகும். இறுதிப்பகுதி நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடுவதாகும். யார் அந்த மாதத்தில் அடிமையிடம் மென்மையாக நடந்து கொள்கிறாரோ அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னிக்கின்றான். மேலும் நரகத்திலிருந்து அவரை விடுதலை செய்கிறான்.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️நீங்கள் நான்கு விசயங்களை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். அதில் இரண்டு விஷயங்கள் உங்களை இறைவனை திருப்திக் கொள்ள செய்வதாகும். இரண்டு விஷயங்கள் உங்களுக்கு அவசியமானதாகும்.*
*உங்கள் இறைவனை திருப்திக் கொள்ள செய்யும் இரண்டு விஷயங்கள் : 1. வணங்குவதற்கு தகுதியானவான் அல்லாஹ் ஒருவனே என்று உறுதிகூறுவதாகும். 2. அவனிடம் பாவமன்னிப்பு கோருவதாகும்🙋♂️🙋♂️🙋♂️.*
*✍️✍️✍️உங்களுக்கு அவசியமான இரண்டு விஷயங்கள் : 1. அவனிடம் சொர்க்கத்தை கேட்பதாகும். 2. நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍️✍️✍️*
*அறிவிப்பவர் : ஸல்மான் பாரிஸி (ரலி),*
*நூல் : ஷுஅபுல் ஈமான்- பைஹகீ, பாகம் : 5, பக்கம் :223*
*✍️✍️✍️இதே செய்தி ஸஹீஹ் இப்னு ஹுஸைமா பாகம் :3, பக்கம் :191, பைஹகீ அவர்களில் பலாயிலுல் அல்அவ்காத், பாகம் :1, பக்கம் : 147 ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.*
*அனைத்து நூல்களிலும் அலீ பின் ஜைத் பின் ஜுத்ஆன் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்✍️✍️✍️.*
*25. 🟣ஆபுபக்கர் தர்மம் - ஈமான் - குகை - ஹதீஸ்🟣*
*🙋♂️🙋♂️🙋♂️அபூபக்கர் தர்மம்*
*உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தர்மம் செய்யுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அந்நேரத்தில் என்னிடத்தில் இதற்குத் தோதுவாக செல்வம் இருந்தது. ஒரு நாளும் அபூபக்ரை (நன்மையில்) நான் முந்தியதில்லை. எனவே நான் இன்று அபூபக்ரை (தர்மம் செய்வதில்) முந்தி விடுவேன் என்று (மனதில்) கூறிக் கொண்டேன். எனது செல்வத்தில் பாதியை (நபி (ஸல்) அவர்களிடத்தில்) நான் கொண்டு வந்தேன். உமது குடும்பத்தாருக்காக நீங்கள் என்ன வைத்து விட்டு வந்தீர்கள்? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நான் இது போன்று (பாதியை வைத்துவிட்டு வந்துள்ளேன்) என்று கூறினேன். அபூபக்ர் தம்னிடம் உள்ள அனைத்தையும் கொண்டு வந்தார். நபி (ஸல்) அவர்கள் அபூபக்ரே உமது குடும்பத்தாருக்காக நீங்கள் என்ன வைத்துவிட்டு வந்தீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள் நான் அவர்களுக்காக அல்லாஹ்வையும் அவனது தூதரையும் வைத்துவிட்டு வந்தேன் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக ஒரு போதும் அபூபக்ரை எந்த (நன்மையான) விஷயத்திலும் என்னால் முந்தவே முடியாது என்று நான் கூறிக் கொண்டேன்.🙋♂️🙋♂️🙋♂️*
*நூல் : திர்மிதி (3608)*
*✍️✍️✍️இந்த செய்தியில் ஹிஷாம் பின் சஃத் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று யஹ்யா பின் முயீன் அபூஹாதம் மற்றும் நஸயீ ஆகிய இமாம்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள். இதே செய்தி முஸ்னத் பஸ்ஸாரில் இஸ்ஹாக் பின் முஹம்மத் என்பவரின் வழியாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவரும் பலவீனமானவர் என்று இமாம் தாரகுத்னீ மற்றும் இமாம் நஸயீ ஆகியோர் கூறியுள்ளார்கள்.✍️✍️✍️*
*🟢அபூபக்கர் ஈமான்🟢*
*🙋♂️🙋♂️🙋♂️இந்தச் சமுதாய மக்களின் ஈமானுடன் அபூபக்ரின் ஈமான் (தராசில்) வைக்கப்பட்டால் அபூபக்ரின் ஈமானே மிகைத்து நிற்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக சிலர் கூறிக் கொண்டிருக்கிறார்கள். இந்தச் செய்தியை ரவ்வாத் பின் ஜர்ராஹ் என்பவர் அறிவிக்கிறார். இவர் மூளை குழம்பியவர் என்று இமாம் புகாரி அபூஹாதம் மற்றும் நஸயீ ஆகியோர் கூறியுள்ளனர். இவர் விடப்பட வேண்டியவர் என்று இமாம் தாரக்குத்னீ கூறியுள்ளார். எனவே இச்செய்தி பலவீனமானது.🙋♂️🙋♂️🙋♂️*
*⚫குகை⚫*
*✍️✍️✍️நபி (ஸல்) அவர்களுடன் அபூபக்ர் (ர) அவர்கள் ஸவ்ர் குகைக்குள் நுழைந்தார்கள். அபூபக்ர் (ர) அவர்கள் குகைக்குள் இருந்த எல்லா ஓட்டைகளையும் அடைத்துவிட்டு மீதமிருந்த ஒரு ஓட்டையை தம் காலால் அடைத்துக் கொண்டார்கள். அப்போது ஒரு பாம்பு அவர்களைக் கொட்டியது. தம் மடியில் உறங்கிக் கொண்டிருந்த நபி (ஸல்) அவர்களை எழுப்ப மனமில்லாமல் அபூபக்ர் (ர) அவர்கள் வேதனையைத் தாங்கிக் கொண்டார்கள். பின்பு நபி (ஸல்) அவர்கள் தம் எச்சிலை பாம்பு கடித்த இடத்தில் தடவி விஷத்தை எடுத்தார்கள் என்று ஒரு சம்பவம் கூறப்படுகிறது. இந்நிகழ்விற்குரிய எந்த அறிவிப்பாளர் தொடரையும் நாம் காணவில்லை. இச்செய்தியில் தவறுகள் இருப்பதாக இமாம் இப்னு கஸீர் அவர்கள் தனது பிதாயதுன் நிஹாயா எனும் வரலாற்று நூல் கூறியுள்ளார். எனவே இது சரியான தகவல் அல்ல. இருவரும் குகைக்குள் நுழைந்த பிறகு குகைக்கு வெளியே சிலந்தி ஒன்று வலை பின்னியதால் குகைக்குள் நபி (ஸல்) அவர்கள் சென்றிருக்க முடியாது என்று கருதி எதிரிகள் குகைக்குள் நுழையாமல் சென்று விட்டார்கள் என்ற தகவலும் பரவலாக மக்களுக்கு மத்தியில் பேசப்படுகிறது.✍️✍️✍️*
*🙋♂️🙋♂️🙋♂️இச்செய்தி முஸ்னத் அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் உஸ்மான் பின் ஸஃபர் என்பவர் இடம்பெறுகிறார். இவர் யார் என்று அறியப்படவில்லை என இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கூறியுள்ளார்கள். எனவே இதுவும் பலவீனமான செய்தியாகும்🙋♂️🙋♂️🙋♂️.*
*26. 🌐ஒரு 🌐ஆண்டு🌐 நிறைவடைந்தால்☪️ தான்☪️ ஜகாத்🕋 கடமை 📚ஹதீஸ்📚📚📚*
*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 59*
*🌹🌹🌹*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
No comments:
Post a Comment