பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, August 15, 2020

இஸ்லாத்தை அறிந்து - 64

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 64 👈👈👈* 


 *📚📚📚தலைப்பு 5. பலகீனமான ஹதீஸ்கள் தெரிந்தவரை தொடர் கள் 📚📚📚* 


 *51. 🟣🟣🟣(ISIS)⚫⚫ கருப்புக்கொடி🟢🟢 வந்தால்🔵🔵 சேர்த்து 🔴🔴கொள்📚📚 ஹதீஸ்📚📚📚* 


 *52. 🕋🕋🕋இந்தியாவிற்கு☪️ எதிராக 🌐முஸ்லிம்கள்🛑 போர்🔵 புரிவார்களா❓📚 ஹதீஸ்📚📚📚* 


 *53. ☪️☪️☪️தொழுகையை🕋 விட்டால் 🟢ஒளி🟣, பார்க்கத் 🟡வலிமை🟠 நீக்கப்படும்📚 ஹதீஸ்📚📚📚* 


 *54.🌐🌐🌐 வெளியூரில்🛑 மரணிப்பது ⚫சிறப்பா❓📚 ஹதீஸ்📚📚📚* 


 *55. 🕋🕋🕋இறைவனுக்கு🕋 மிகவும்☪️ வெறுப்பானது⚫ விவாகரத்து📚 ஹதீஸ்📚📚📚* 


*🔵51. (ISIS) கருப்புக்கொடி வந்தால் சேர்த்து கொள் ஹதீஸ்🔵* 


 *✍️✍️✍️தற்போது ஐஎஸ்ஐஎஸ் போராட்டக்காரர்கள் ஈராக்கில் பல பகுதிகளைக் கைப்பற்றியுள்ளனர். இவர்கள் தங்களுடைய அமைப்பின் அடையாளமாக கருப்புக் கொடியைப் பயன்படுத்துகின்றனர்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பிற்காலத்தில் கருப்புக் கொடி ஏந்திய ஒரு கூட்டம் வரும். அந்தக் கூட்டத்தின் தலைவர் நேர்மையான சிறந்த தலைவராக இருப்பார். அவருக்கு அனைவரும் கட்டுப்பட வேண்டும் என்ற கருத்தில் சில ஹதீஸ்கள் உள்ளன. ஐஎஸ்ஐஎஸ் கூட்டத்தை ஆதரிக்கும் சிலர் இது போன்ற ஹதீஸ்கள் இவர்கள் குறித்து முன்னறிவிப்புச் செய்வதாக கூறுகின்றனர்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *✍️✍️✍️எனவே கருப்புக் கொடி ஏந்திய கூட்டம் தொடர்பாக வரும் அனைத்து ஹதீஸ்களின் உண்மை நிலையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இது தொடர்பாக பல அறிவிப்புக்கள் வந்தாலும் அனைத்து செய்திகளும் பலவீனமாகவே உள்ளன. இந்தக் கருத்தில் ஒரு ஹதீஸ் கூட ஆதாரப்பூர்வமானதாக இல்லை.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *ஹதீஸ் 1* 

 *21353* حَدَّثَنَا وَكِيعٌ عَنْ شَرِيكٍ عَنْ عَلِيِّ بْنِ زَيْدٍ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَأَيْتُمْ الرَّايَاتِ السُّودَ قَدْ جَاءَتْ مِنْ خُرَاسَانَ فَأْتُوهَا فَإِنَّ فِيهَا خَلِيفَةَ اللَّهِ الْمَهْدِيَّ رواه أحمد

 *✍️✍️✍️அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் குராசானிலிருந்து கருப்புக் கொடிகள் வருவதைக் கண்டால் அங்கு செல்லுங்கள். ஏனென்றால் அங்குதான் நேர்வழி காட்டப்பட்ட அல்லாஹ்வின் பிரதிநிதி உள்ளார்.✍️✍️✍️* 

 *அறிவிப்பவர் : ஸவ்பான் (ரலி)* 

 *நூல் : அஹ்மது (21353)* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த அறிவிப்பில் மூன்று பலவீனங்கள் உள்ளன. ஷரீக் மற்றும் அலீ பின் ஸைத் ஆகிய இருவரும் பலவீனமானவர்கள். இவ்வாறு பல அறிஞர்கள் கூறியுள்ளனர்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *✍️✍️✍️ஷரீக் பின் அப்தில்லாஹ் நல்லவர் என்றாலும் மோசமான நினைவாற்றலின் காரணத்தால் பலவீனமானவர் என்று இப்னு ஹஜர் அவர்களும், தஹபீ அவர்களும் கூறியுள்ளனர். யஃகூப் பின் ஷைபா, அபூ சுர்ஆ, நஸாயீ, ஹாகிம், தாரகுத்னீ மற்றும் பலர் குறை கூறியுள்ளனர்✍️✍️✍️.* 

 *நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 4 பக்கம் 336)* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அலீ பின் ஸைத் பின் ஜத்ஆன் என்பவரும் பலவீனமானவர் ஆவார். இப்னு ஹஜர், தஹபீ, தாரகுத்னீ, அஹ்மது பின் ஹன்பள், முஹம்மது பின் சஅத், யஹ்யா பின் மயீன், அபூசுர்ஆ, அபூஹாதிம், நஸாயீ, இப்னு குஸைமா, ஹாகிம், இப்னு ஹிப்பான் மற்றும் பலர் இவர் மோசமான நினைவாற்றல் உள்ளவர் என்றும் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 7 பக்கம் 324)* 

 *✍️✍️✍️மேலும் சவ்பான் (ரலி) அவர்களிடமிருந்து இதை அறிவிக்கும் அபூ கிலாபாக என்பவர் சவ்பான் (ரலி) அவர்களிடம் நேரடியாக எதையும் செவியுறவில்லை என அறிஞர் இஜ்லீ கூறியுள்ளார்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மேலும் இவர் தத்லீஸ் என்ற இருட்டடிப்பு வேலையைச் செய்யக்கூடியவர். இவரைப் போன்றவர்கள் நான் நேரடியாகக் கேட்டேன். எனக்கு அறிவித்தார் என்பது போன்ற வாசகங்களைக் கூறினால்தான் இவருடைய அறிவிப்புகள் ஏற்கப்படும். ஆனால் இவர் தான் நேரடியாக கேட்டதாகக் கூறவில்லை. இதன் காரணத்தாலும் இது பலவீனமான செய்தியாக உள்ளது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *4074* حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ يَحْيَى وَأَحْمَدُ بْنُ يُوسُفَ قَالَا حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ خَالِدٍ الْحَذَّاءِ عَنْ أَبِي قِلَابَةَ عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ عَنْ ثَوْبَانَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقْتَتِلُ عِنْدَ كَنْزِكُمْ ثَلَاثَةٌ كُلُّهُمْ ابْنُ خَلِيفَةٍ ثُمَّ لَا يَصِيرُ إِلَى وَاحِدٍ مِنْهُمْ ثُمَّ تَطْلُعُ الرَّايَاتُ السُّودُ مِنْ قِبَلِ الْمَشْرِقِ فَيَقْتُلُونَكُمْ قَتْلًا لَمْ يُقْتَلْهُ قَوْمٌ ثُمَّ ذَكَرَ شَيْئًا لَا أَحْفَظُهُ فَقَالَ فَإِذَا رَأَيْتُمُوهُ فَبَايِعُوهُ وَلَوْ حَبْوًا عَلَى الثَّلْجِ فَإِنَّهُ خَلِيفَةُ اللَّهِ الْمَهْدِيُّ رواه إبن ماجه

 *✍️✍️✍️அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கிழக்கிலிருந்து கருப்புக்கொடிகள் தோன்றும். வேறு எந்தக் கூட்டமும் உங்களிடம் சண்டையிடாத அளவுக்கு அவர்கள் உங்களிடம் சண்டையிடுவார்கள். அவர்களை நீங்கள் கண்டால் பனிக்கட்டியில் தவழ்ந்து சென்றாவது அக்கூட்டத்தின் தலைவரிடம் உடன்படிக்கை செய்யுங்கள். ஏனென்றால் அவர் தான் நேர்வழி காட்டப்பட்ட அல்லாஹ்வின் பிரதிநிதியாவார்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தியில் இடம்பெறும் அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பகமானவர்கள் என்றாலும் அபூ கிலாபா என்ற அறிவிப்பாளர் தத்லீஸ் என்ற இருட்டடிப்பு வேலையைச் செய்யக்கூடியவர். இவர் இந்தச் செய்தியை அபூ அஸ்மா என்பவரிடமிருந்து அறிவிக்கின்றார். இவரிடம் தான் நேரடியாகக் கேட்டதை அபூகிலாபா தெளிவுபடுத்தவில்லை. எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *ஹதீஸ் 2* 

 *2195* حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا رِشْدِينُ بْنُ سَعْدٍ عَنْ يُونُسَ عَنْ ابْنِ شِهَابٍ الزُّهْرِيِّ عَنْ قَبِيصَةَ بْنِ ذُؤَيْبٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَخْرُجُ مِنْ خُرَاسَانَ رَايَاتٌ سُودٌ لَا يَرُدُّهَا شَيْءٌ حَتَّى تُنْصَبَ بِإِيلِيَاءَ هَذَا حَدِيثٌ غَرِيبٌ رواه الترمذي

 *✍️✍️✍️அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : குராசானிலிருந்து கருப்புக்கொடிகள் வரும். அதை யாராலும் தடுக்க முடியாது. இறுதியில் அவை ஈலியாவில் (பைத்துல் முகத்தஸ்) நிறுவப்படும்.✍️✍️✍️* 

 *அறிவிப்பாளர் : அபூஹுரைரா (ரலி)* 

 *நூல் : திர்மிதீ (2195)* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தியில் ரிஷ்தீன் பின் சஅத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர். அஹ்மது பின் ஹம்பள், யஹ்யா பின் மயீன், அபூ சுர்ஆ, அபூஹாதிம், நஸாயீ, தாரகுத்னீ, அபூதாவுத் மற்றும் பலர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் மோசமான நினைவாற்றல் உள்ளவர் என தஹபீ கூறியுள்ளார். எனவே இதுவும் பலவீனமான செய்தியாகும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 3 பக்கம் 278)* 

 *ஹதீஸ் 3* 

 *4072* حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ هِشَامٍ حَدَّثَنَا عَلِيُّ بْنُ صَالِحٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي زِيَادٍ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ بَيْنَمَا نَحْنُ عِنْدَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَقْبَلَ فِتْيَةٌ مِنْ بَنِي هَاشِمٍ فَلَمَّا رَآهُمْ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اغْرَوْرَقَتْ عَيْنَاهُ وَتَغَيَّرَ لَوْنُهُ قَالَ فَقُلْتُ مَا نَزَالُ نَرَى فِي وَجْهِكَ شَيْئًا نَكْرَهُهُ فَقَالَ إِنَّا أَهْلُ بَيْتٍ اخْتَارَ اللَّهُ لَنَا الْآخِرَةَ عَلَى الدُّنْيَا وَإِنَّ أَهْلَ بَيْتِي سَيَلْقَوْنَ بَعْدِي بَلَاءً وَتَشْرِيدًا وَتَطْرِيدًا حَتَّى يَأْتِيَ قَوْمٌ مِنْ قِبَلِ الْمَشْرِقِ مَعَهُمْ رَايَاتٌ سُودٌ فَيَسْأَلُونَ الْخَيْرَ فَلَا يُعْطَوْنَهُ فَيُقَاتِلُونَ فَيُنْصَرُونَ فَيُعْطَوْنَ مَا سَأَلُوا فَلَا يَقْبَلُونَهُ حَتَّى يَدْفَعُوهَا إِلَى رَجُلٍ مِنْ أَهْلِ بَيْتِي فَيَمْلَؤُهَا قِسْطًا كَمَا مَلَئُوهَا جَوْرًا فَمَنْ أَدْرَكَ ذَلِكَ مِنْكُمْ فَلْيَأْتِهِمْ وَلَوْ حَبْوًا عَلَى الثَّلْجِ رواه إبن ماجه

 *✍️✍️✍️அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கிழக்கிலிருந்து ஒரு கூட்டம் புறப்படும். அவர்களுடன் கருப்புக்கொடிகள் இருக்கும். அவர்கள் நல்லதை வேண்டுவார்கள். அது அவர்களுக்கு வழங்கப்படாது. எனவே அவர்கள் சண்டையிடுவார்கள். உதவி செய்யப்படுவார்கள். இதன் பின் அவர்கள் கேட்டது அவர்களுக்கு வழங்கப்படும். ஆனால் அவர்கள் அதை ஏற்றுக்ப்கொள்ளாமல் ஆட்சிப் பொறுப்பை எனது குடும்பத்தைச் சார்ந்த ஒரு மனிதரிடம் ஒப்படைப்பார்கள். அவர்கள் அதில் அநீதியை நிரப்பியதைப் போன்று இவர் அதனை நீதத்தால் நிரப்புவார். உங்களில் யார் அந்நேரத்தை அடைகின்றாரோ அவர் அவர்களிடம் பனிக்கட்டியின் மீது தவழ்ந்தாவது செல்லட்டும்✍️✍️✍️.* 

 *அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) நூல் : இப்னு மாஜா (4072)* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தியில் யசீத் பின் அபீ சியாத் என்பவர் இடம்பெற்றுள்ளார். அஹ்மது பின் ஹன்பள், யஹ்யா பின் மயீன், அபூசுர்ஆ, அபூஹாதிம், ஹாகிம், நஸாயீ, தாரகுத்னீ மற்றும் பலர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் மோசமான நினைவாற்றல் உள்ளவர் என தஹபீ கூறியுள்ளார்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️இத்துடன் இவர் ஷியாக்களுக்கு மிகப் பெரிய தலைவராக இருந்துள்ளார். மேற்கண்ட ஹதீஸ் ஷியாக்களின் கொள்கைக்கு ஆதரவாக இருப்பதால் இது போன்ற ஹதீஸை ஷியாக்களில் யார் அறிவித்தாலும் ஏற்க முடியாது. இந்த அடிப்படையிலும் இந்த ஹதீஸ் பலவீனமாக உள்ளது.✍️✍️✍️* 

 *நூல் தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 11 பக்கம் 330)* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதே செய்தி சற்று அறிவிப்பாளர் தொடர் மாற்றத்துடன் ஹாகிமில் பின்வருமாறு பதிவாகியுள்ளது.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *ஹதீஸ் 4* 

المستدرك على الصحيحين للحاكم – كتاب الفتن والملاحم أخبرني أبو بكر بن دارم الحافظ ، بالكوفة ، ثنا محمد بن عثمان بن سعيد القرشي ، ثنا يزيد بن محمد الثقفي ، ثنا حنان بن سدير ، عن عمرو بن قيس الملائي ، عن الحكم ، عن إبراهيم ، عن علقمة بن قيس ، وعبيدة السلماني ، عن عبد الله بن مسعود رضي الله عنه ، قال : أتينا رسول الله صلى الله عليه وسلم فخرج إلينا مستبشرا يعرف السرور في وجهه ، فما سألناه عن شيء إلا أخبرنا به ، ولا سكتنا إلا ابتدأنا ، حتى مرت فتية من بني هاشم فيهم الحسن والحسين ، فلما رآهم التزمهم وانهملت عيناه ، فقلنا : يا رسول الله ما نزال نرى في وجهك شيئا نكرهه ، فقال : ” إنا أهل بيت اختار الله لنا الآخرة على الدنيا ، وإنه سيلقى أهل بيتي من بعدي تطريدا وتشريدا في البلاد ، حتى ترتفع رايات سود من المشرق ، فيسألون الحق فلا يعطونه ، ثم يسألونه فلا يعطونه ، ثم يسألونه فلا يعطونه ، فيقاتلون فينصرون ، فمن أدركه منكم أو من أعقابكم فليأت إمام أهل بيتي ولو حبوا على الثلج ، فإنها رايات هدى يدفعونها إلى رجل من أهل بيتي يواطئ اسمه اسمي ، واسم أبيه اسم أبي ، فيملك الأرض فيملأها قسطا وعدلا كما ملئت جورا وظلما ” *

 *✍️✍️✍️இந்த அறிவிப்பில் ஹன்னான் பின் சுதைர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் ஷியாக்களின் தலைவர் என தாரகுத்னீ கூறியுள்ளார். இவர் அறிவித்துள்ள இந்த ஹதீஸ் இட்டுக்கட்டப்பட்டது என தஹபீ அவர்களும் இப்னு ஜவ்ஸீ அவர்களும் கூறியுள்ளனர்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதற்கு முன்பு நாம் சுட்டிக்காட்டிய யசீத் பின் அபீ சியாதின் அறிவிப்பை சற்று மாற்றி புதிய அறிவிப்பாளர் தொடரை இவராக உருவாக்கி இட்டுக்கட்டியுள்ளார்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️எனவே கருப்புக்கொடி ஏந்தி ஒரு கூட்டம் வரும் என்று சிறப்பித்து வரும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாக உள்ளது. கருப்புக்கொடியுடன் வருபவர்களை மார்க்க அடிப்படையில் ஆதரிக்க வேண்டும் என்று கூறக்கூடாது.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️யாராக இருந்தாலும் அவர்களின் கொள்கை கோட்பாடு செயல்பாடுகள் ஆகியவற்றைக் கவனித்தே அவர்கள் நல்லவர்களா? தீயவர்களா? என்பதை குர்ஆன் ஹதீஸ்களை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்க வேண்டும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *🟣52. இந்தியாவிற்கு எதிராக முஸ்லிம்கள் போர் புரிவார்களா❓ ஹதீஸ்🟣* 


 *✍️✍️✍️பிற்காலத்தில் முஸ்லிம்கள் இந்திய நாட்டிற்கு எதிராகப் போர் செய்வார்கள் என்றும் அந்தப் போரில் கொல்லப்பட்டால் ஷஹீதுடைய அந்தஸ்து கிடைக்கும் என்றும் இதனைச் சிறப்பித்து ஒரு சில ஹதீஸ்கள் ஹதீஸ் நூற்களில் இடம்பெற்றுள்ளன✍️✍️✍️* .

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த ஹதீஸ்கள் அனைத்தும் ஆதாரப்பூர்வமானவையா? என்று நாம் ஆய்வு செய்தபோது இவை அனைத்தும் பலவீனமாக இருக்கின்றன என்ற உண்மையை அறிந்துகொள்ள முடிகின்றது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *✍️✍️✍️இந்த ஹதீஸ்களில் ஹிந்த் என்ற அரபுச் சொல் கூறப்பட்டுள்ளது. தற்காலத்தில் இது இந்தியாவைக் குறிக்கவே பயன்படுத்தப்படுகின்றது.✍️✍️✍️* 

 *🛑முதல் அறிவிப்பு🛑* 

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ بْنِ حَكِيمٍ قَالَ حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ قَالَ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَمْرٍو عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ عَنْ سَيَّارٍ ح قَالَ وَأَنْبَأَنَا هُشَيْمٌ عَنْ سَيَّارٍ عَنْ جَبْرِ بْنِ عَبِيدَةَ وَقَالَ عُبَيْدُ اللَّهِ عَنْ جُبَيْرٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ وَعَدَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَزْوَةَ الْهِنْدِ فَإِنْ أَدْرَكْتُهَا أُنْفِقْ فِيهَا نَفْسِي وَمَالِي فَإِنْ أُقْتَلْ كُنْتُ مِنْ أَفْضَلِ الشُّهَدَاءِ وَإِنْ أَرْجِعْ فَأَنَا أَبُو هُرَيْرَةَ الْمُحَرَّرُ رواه النسائي

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ஹிந்து போர் குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு அறிவித்தார்கள். அதை நான் அடைந்தால் அதற்காக நான் எனது உயிரையும் பொருளையும் செலவு செய்வேன். ஏனென்றால் (அதில்) நான் கொல்லப்பட்டால் சிறந்த உயிர்தியாகியாக ஆகிவிடுவேன். (கொல்லப்படாமல்) திரும்பினால் நான் (நரகத்திலிருந்து) விடுதலையான அபூஹுஷரா ஆவேன்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *நூல் : நஸாயீ (3122)* 

 *✍️✍️✍️இந்தச் செய்தியில் ஜப்ர் பின் அபீதா என்ற நபர் இடம்பெற்றுள்ளார். இவரை நம்பகமானவர் என்று எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இமாம் தஹபீ அவர்கள் இவர் யார் என்ற விபரம் இல்லை எனக் கூறியுள்ளார்கள்.✍️✍️✍️* 

 *தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 2 பக்கம் 59)* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எனவே இவருடைய நம்பகத்தன்மை நிரூபணமாகாத காரணத்தால் இவர் பலவீனமானவர் ஆவார்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *🛑இரண்டாவது அறிவிப்பு🛑* 

 *8467* حَدَّثَنَا يَحْيَى بْنُ إِسْحَاقَ حَدَّثَنَا الْبَرَاءُ عَنِ الْحَسَنِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ حَدَّثَنِي خَلِيلِي الصَّادِقُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ يَكُونُ فِي هَذِهِ الْأُمَّةِ بَعْثٌ إِلَى السِّنْدِ وَالْهِنْدِ فَإِنْ أَنَا أَدْرَكْتُهُ فَاسْتُشْهِدْتُ فَذَلِكَ وَإِنْ أَنَا فَذَكَرَ كَلِمَةً رَجَعْتُ وَأَنَا أَبُو هُرَيْرَةَ الْمُحَرَّرُ قَدْ أَعْتَقَنِي مِنْ النَّارِ رواه أحمد

 *✍️✍️✍️அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : இந்தச் சமுதாயத்தில் ஒரு படை சன்த் மற்று ஹிந்தை நோக்கிப் புறப்படும் என என் உற்ற நண்பரும் உண்மையாளருமான அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். எனவே நான் அந்த நேரத்தை அடைந்து ஷஹீதாகிவிட்டால் அது உயிர் தியாகமாகும். நான் திரும்பிவிட்டால் நான் விடுதலை செய்யப்பட்ட அபூஹுரைரா ஆவேன். அப்போர் என்னை நரகத்திலிருந்து விடுதலை செய்துவிடும்✍️✍️✍️.* 

 *நூல் : அஹ்மது (8467)* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்தச் செய்தியில் பராஉ பின் அப்தில்லாஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரை அறிஞர்கள் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். யஹ்யா பின் மயீன் அஹ்மது பின் ஹம்பள் நஸாயீ இப்னு அதீ இப்னு ஹிப்பான் மற்றும் பலர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 1 பக்கம் 427)* 

 *✍️✍️✍️எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இது தொடர்பான அறிவிப்புகள் அனைத்தும் பலவீனமாக இருப்பதால் இதை நபி (ஸல்) அவர்களின் முன்னறிவிப்பாக ஏற்க முடியாது. தற்போது இந்தியாவில் மார்க்கத்தை கடைபிடிப்பதற்கும் அதை பிரச்சாரம் செய்வதற்கும் முஸ்லிம்களுக்கு உரிமை வழங்கப்பட்டுள்ளது. மேலும் பல உரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *✍️✍️✍️எனவே இந்த நல்ல நிலையை சீர்குலைக்கும் வகையில் ஜிஹாத் என்ற பெயரில் அரசாங்கத்திற்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்கி நம் தலையில் நாமே மண்ணை வாறிப் போட்டுக் கொள்ளக்கூடாது. சில பகுதிகளில் சிறு பாதிப்புகள் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டால் அதை சட்ட அடிப்படையில் எதிர்கொண்டு நீதியைப் பெற முயற்சிக்க வேண்டும்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️முஸ்லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்று மக்களிடம் பரப்பப்பட்ட கருத்தை நம்முடைய சிறந்த நடவடிக்கைகளால் மாற்ற முயற்சி செய்ய வேண்டும்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *53. தொழுகையை விட்டால் ஒளி, பார்க்கத் வலிமை நீக்கப்படும் ஹதீஸ்* 


 *✍️✍️✍️எவர் பஜ்ர் தொழுகையை விட்டு விடுவாரோ அவருடைய முகத்தில் ஒளி நீக்கப்பட்டுவிடும். எவர் லுஹர் தொழுகையை விட்டுவிடுவாரோ அவருடைய உணவில் பரக்கத் நீக்கப்பட்டுவிடும்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️எவர் அஸர் தொழுகையை விட்டுவிடுவாரோ அவருடை உடம்பில் வலிமை நீக்கப்பட்டுவிடும்.* 
 *எவர் மக்ரிப் தொழுகையை விட்டுவிடுவாரோ அவருடைய பிள்ளைகளிடமிருந்து எவ்வித பலனையும் பெறமாட்டார்.* 
 *எவர் இஷாத் தொழுகையை விட்டுவிடுவாரோ அவருடைய தூக்கத்திலிருந்து நிம்மதி நீக்கப்பட்டுவிடும்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

من ترك صلاة الصبح فليس في وجهه نور ومن ترك صلاة الظهر فليس في رزقه بركة ومن ترك صلاة فليس في جسمه قوة ومن ترك صلاة المغرب فليس في أولاده ثمره ومن ترك صلاة العشاء فليس في نومه راحة

 *✍️✍️✍️என்று சில அரபி நூல்களில் இடம்பெற்றுள்ளது. ஆனால் நபிகளார் கூறினார்கள் என்பதற்கு அறிவிப்பாளர் வரிசையுடன் எந்த நூலிலும் இடம்பெறவில்லை.✍️✍️✍️* 


 *54. வெளியூரில் மரணிப்பது சிறப்பா❓ ஹதீஸ்* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மதினாவில் மரணித்த ஒருவருக்குத் தொழ வைத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ”இவர் பிறந்த ஊர் அல்லாத அந்நிய ஊரில் மரணித்திருக்கக் கூடாதா! என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எதனால்? என்று பொதுமக்களில் ஒருவர் கேட்டார். அதற்கவர்கள், அன்னிய ஊரில் மரணித்தவருக்கு அவர் பிறந்த ஊரிலிருந்து அவர் கடந்த சென்ற தூரம் வரை அளக்கப்பட்டு -அந்தளவு இடம்- அவருக்கு சொர்க்கத்தில் வழங்கப்படுகிறது” என்று கூறினார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் (ரலி)* 

 *நூற்கள் : அஹ்மத் 6369, நஸாயீ, இப்னுமாஜா* 

 
 *✍️✍️✍️இது ஆதாரப்பூர்வமான ஹதீஸ் அல்ல. மேற்கண்ட ஹதீஸில் மூன்றாவது அறிவிப்பாளராக ஹுயை பின் அப்துல்லாஹ் என்பவர் இடம்பெற்றுள்ளார்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த ஹுயை பின் அப்துல்லாஹ் என்பார் நம்பகமானவர் அல்ல. இவரைப் பற்றி தஹ்தீபுத் தஹ்தீப் நூலில் உள்ள விமர்சனத்தைக் கீழே தருகிறோம்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 

 *✍️✍️இவரைப் பற்றி அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் இவரது ஹதீஸ்கள் நிராகரிக்கப்பட வேண்டியவை எனக் கூறுகிறார்கள்✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️இவர் விஷயத்தில் விமர்சனம் உள்ளது என்று புகாரி கூறுகிறார்கள்.🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️இவர் பலமான அறிவிப்பாளர் அல்லர் என்று நஸாயீ அவர்கள் கூறுகிறார்கள்✍️✍️.* 

 *தஹ்தீபுத் தஹ்தீப்* 


 *55. 🟢இறைவனுக்கு மிகவும் வெறுப்பானது விவாகரத்து ஹதீஸ்🟢* 


 *1863* حَدَّثَنَا كَثِيرُ بْنُ عُبَيْدٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خَالِدٍ عَنْ مُعَرِّفِ بْنِ وَاصِلٍ عَنْ مُحَارِبِ بْنِ دِثَارٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبْغَضُ الـحَلَالِ إِلَى اللَّهِ تَعَالَى الطَّلَاقُ رواه ابوداود

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அனுமதிக்கப்பட்டவைகளில் அல்லாஹ்வுக்கு மிகவும் வெறுப்பானது விவாகரத்தாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : அபூதாவூத் (1863)* 

 *✍️✍️✍️இதே செய்தி இப்னுமாஜா (2008), பைஹகீ (14671), ஹாகிம் (2794), முஸன்னப் இப்னு அபீஷைபா (19194), முஸ்னத் அப்தல்லாஹ் பின் உமர் (14) ஆகிய நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இந்த செய்தியை அறிவிக்கும் மூன்றாவது அறிவிப்பாளர் முஅர்ரிஃப் பின் வாஸில் என்பவராவார். இவரிடமிருந்து நான்கு அறிவிப்பாளர் இந்த செய்தியை அறிவித்துள்ளனர்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️முஹம்மத் பின் காலித், அஹ்மத் பின் யூனுஸ், வகீஃ பின் அல்ஜர்ராஹ், யஹ்யா பின் புகைர் ஆகிய நான்கு அறிவிப்பளர்களும் முஅர்ரிஃப் பின் வாஸில் என்பவரிடமிருந்து அறிவித்துள்ளனர்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இதில் முஹம்மத் பின் காலித் என்பவர் மட்டும்தான் நபி (ஸல்), இப்னு உமர் (ரலி), முஹாரிப் பின் திஸார், முஅர்ரிஃப் பின் வாஸில் என்ற வரிசையில் கூறியுள்ளார். ஆனால் மற்ற மூன்று நபர்கள் நபி (ஸல்), முஹாரிப் பின் திஸார், முஅர்ரிஃப் பின் வாஸில் என்ற வரிசையில் கூறியுள்ளார்கள். அதாவது நபித்தோழர் இப்னு உமர் (ரலி) அவர்கள் இல்லாமல் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக (முர்ஸலாக) அறிவித்துள்ளார்கள். இதன் அறிவிப்பாளர் வரிசை அனைத்தையும் இமாம் பைஹகீ அவர்கள் தமது ஸுனனுல் குப்ரா என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *✍️✍️✍️ஆனால் இந்த செய்தியில் நபித்தோழர் விடுபட்டுள்ளதால் இதை ஆதாரமாகக் கொள்ள முடியாது.✍️✍️✍️* 


 *56. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️பொறாமை☪️ நன்மையைத் 🛑தின்று 🟣(அழித்து)🔴 விடும்📚 ஹதீஸ்📚📚📚* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 65* 


 *🌹🌹🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment