பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, October 31, 2019

தம்பதியரின் கடமைகள்

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

       *🔥 இஸ்லாமிய 🔥*
                          ⤵
                *🔥 ஒழுங்குகள் 🔥*

          *✍🏻....


*☄ திருமணத்தின்*
                 *ஒழுங்குகள் [ 17 ] ☄*

*☄தம்பதியரின்*
                   *கடமைகள் { 02 }*

_*🍃பெண்களை நல்ல முறையில் நடத்துங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளவர்கள். அதைத் தவிர அவர்களிடம் உங்களுக்கு வேறு எந்த உரிமையும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
            *அம்ரு பின்*
                  *அஹ்வஸ் (ரலி),*

*📚 நூல்: திர்மிதீ 1083 📚*

_*🍃ஒரு பெண், கணவனது திருப்தியைப் பெற்ற நிலையில் மரணித்து விட்டால் அவள் சொர்க்கத்தில் நுழைவாள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙 அறிவிப்பவர்:*
               *உம்மு ஸலமா (ரலி)*

  *📚. நூல்: திர்மிதீ 1081 📚*

_*🍃ஒரு முறை நான், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம், எங்களின் மனைவிமார்களுக்கு நான் செய்ய வேண்டிய கடமைகள் யாவை❓ எனக் கேட்டேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்)*_

_*☄ அவர்கள் நீ எதை உண்கிறாயோ, அதையே அவளுக்கும் உண்ணக் கொடுப்பாயாக!*_

_*☄ நீ எதை அணிகிறாயோ அது போன்றதையோ அவளுக்கும் அணிவிக்கக் கொடுப்பாயாக!*_

_*☄ மேலும், அவளின் முகத்தில் அடிக்காதே! அவளை இழிவுபடுத்தாதே!*_

_*☄ வீட்டிலில்லாமல் வெளியிடங்களில் வைத்து அவளைக் கண்டிக்காதே! என்று கூறினார்கள்.*_

*🎙 அறிவிப்பவர்:*
             *முஆவியா பின்*
                        *ஹைதா (ரலி),*

*📚 நூல்: அபூதாவூத் 1830 📚*

 🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
                            ⤵⤵⤵
                          *✍🏼..

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

இஸ்லாத்தை அறிந்து - 54

*🍓🍓🍓மீள் பதிவு🍓🍓🍓* 


 *🌹🌹🌹🌹* 


 *🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉தொடர்  பாகம் 54 👈👈👈* 


     *👉தலைப்பு👇*



*🔴🕋🔵மரணத்தைத் தழுவிய மாமன்னர் சுலைமான்🌐🕋⚫* 



 *👉👉👉மரணத்தைத் தழுவிய மாமன்னர் சுலைமான்👈👈👈* 


 *✍✍✍உலகத்தில் அனுப்பப்பட்ட அல்லாஹ்வின் தூதர்களில் ஆட்சி அதிகாரத்தைப் பெற்ற தூதர்கள் தாவூத் (அலை) அவர்களும், அவரது மகன் சுலைமான் (அலை) அவர்களும் ஆவர். அவ்விரு தூதர்களுக்கும் அளித்த அருட்கொடைகளைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.* 
 *தாவூதுக்கும், ஸுலைமானுக்கும் கல்வியை அளித்தோம். ‘நம்பிக்கை கொண்ட தனது ஏராளமான அடியார்களை விட எங்களைச் சிறப்பித்த அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்’ என்று அவ்விருவரும் கூறினர்✍✍✍* 
.

 *அல்குர்ஆன் 27:15* 


📕📕📕பறவைகளின் மொழி அறிந்தவர் தாவூதுக்கு ஸுலைமான் வாரிசானார். ‘மக்களே! பறவையின் மொழி எங்களுக்குக் கற்றுத் தரப்பட்டுள்ளது. அனைத்துப் பொருட்களும் எங்களுக்குத் தரப்பட்டுள்ளது. இதுவே தெளிவான அருட் கொடையாகும்’ என்று அவர் கூறினார்.📕📕📕


 *அல்குர்ஆன் 27:16* 


 *✍✍✍பறவைகளை அவர் ஆய்வு செய்தார். ஹுத்ஹுத்’ பறவையை நான் காணவில்லையே! அது ஓடி ஒளிந்து விட்டதா? என்றார்.* 
‘ *அதைக் கடுமையான முறையில் தண்டிப்பேன் அல்லது அதை அறுத்து விடுவேன். அல்லது அது என்னிடம் தெளிவான சான்றைக் கொண்டு வர வேண்டும்’ (என்றும் கூறினார்).* 
 *(அப்பறவை) சிறிது நேரமே தாமதித்தது. ‘உமக்குத் தெரியாத ஒன்றைத் தெரிந்து, ஸபா எனும் ஊரிலிருந்து உறுதியான ஒரு செய்தியை உம்மிடம் கொண்டு வந்துள்ளேன்’ என்று கூறியது.* 
 *‘நான் ஒரு பெண்ணைக் கண்டேன். அவள் அவர்களை ஆட்சி செய்கிறாள். அவளுக்கு ஒவ்வொரு பொருளும் கொடுக்கப்பட்டுள்ளது. அவளுக்கு மகத்தான சிம்மாசனமும் உள்ளது’✍✍✍* 


 *அல்குர்ஆன் 27:20-23* 


 *👺👺👺ஜின்களின் அரசர்👺👺👺* 


📘📘📘ஜின்கள், மனிதர்கள், பறவைகள் ஆகியவற்றின் படைகள் ஸுலைமானுக்காகத் திரட்டப்பட்டு, அவர்கள் அணி வகுக்கப்பட்டனர்.📘📘📘


 *அல்குர்ஆன் 27:17* 


 *👺👺ஜின்களின் பணிகள்👺👺* 


 *✍✍✍தனது இறைவனின் விருப்பப்படி அவரிடம் பணியாற்றும் ஜின்களும் இருந்தனர். அவர்களில் நமது கட்டளையை யாரேனும் புறக்கணித்தால் நரகின் வேதனையை அவருக்குச் சுவைக்கச் செய்வோம்.* 
 *அவர் விரும்பிய மாளிகைகளையும், சிற்பங்களையும், தடாகங்களைப் போன்ற கொப்பரைகளையும், நகர்த்த முடியாத பாத்திரங்களையும், அவருக்காக அவை செய்தன. ‘தாவூதின் குடும்பத்தாரே! நன்றியுடன் செயல்படுங்கள்! எனது அடியார்களில் நன்றியுடையோர் குறைவாகவே உள்ளனர்’ (என்று கூறினோம்.)✍✍✍* 


 *அல்குர்ஆன் 34:12, 13* 


 *🔥🔥காற்று ராஜா🔥🔥* 


📙📙📙ஸுலைமானுக்குக் காற்றை வசப்படுத்தினோம். அதன் புறப்பாடு ஒரு மாதமாகும். அதன் திரும்புதல் ஒரு மாதமாகும்.📙📙📙


 *அல்குர்ஆன் 34:12* 


 *✍✍✍வேகமாக வீசும் காற்றை ஸுலைமானுக்கு வசப்படுத்திக் கொடுத்தோம். அது நாம் பாக்கியம் செய்த பூமிக்கு அவரது கட்டளைப்படி சென்றது. நாம் ஒவ்வொரு பொருளையும் அறிவோராக இருக்கிறோம்.✍✍✍* 


 *அல்குர்ஆன் 21:81* 


📗📗📗அவருக்குக் காற்றை வசப்படுத்திக் கொடுத்தோம். அவரது கட்டளைப் படி அவர் நினைத்தவாறு பணிந்து அது சென்றது.📗📗📗


 *அல்குர்ஆன் 38:36* 


 *🌐🌐எறும்புகளின் பேச்சையும் அறிபவர்🌎🌎* 


 *✍✍✍அவர்கள் எறும்புப் புற்றின் அருகே வந்த போது ‘எறும்புகளே! உங்கள் குடியிருப்புகளுக்குள் நுழையுங்கள்! ஸுலைமானும், அவரது படையினரும் அறியாத நிலையில் உங்களை மிதித்து விடக் கூடாது’ என்று ஓர் எறும்பு கூறியது. அதன் கூற்றினால் (ஸுலைமான்) புன்னகை சிந்தி சிரித்தார்✍✍✍.*


 *அல்குர்ஆன் 27:18, 19* 


 *🔴⚫செம்பு ஊற்று🔵⚫* 


 *📒📒📒அவருக்காக செம்பு ஊற்றை ஓடச் செய்தோம்.📒📒📒* 


 *அல்குர்ஆன் 34:12* 


 *✍✍✍இம்மாபெரிய அதிகாரத்தையும் ஆட்சியையும், இறைத் தூதையும் ஒருசேர இணையப் பெற்ற ஒரு பாக்கியமிக்க, பாராண்ட மன்னர் சுலைமான், நான் கடவுள்’ என்று ஒருபோதும் வாதித்ததில்லை. இதோ அவர் எறும்புகளின் பேச்சை ரசித்தவாறு பணிந்து, கனிந்து உதிர்த்த பிரார்த்தனையைப் பாருங்கள்.* 
‘ *என் இறைவா! என் மீதும், எனது பெற்றோர் மீதும் நீ செய்த அருட்கொடைக்கு நான் நன்றி செலுத்தவும், நீ திருப்தியடையும் நல்லறத்தைச் செய்யவும் எனக்கு உதவுவாயாக! உனது அருளால் உனது நல்லடியார்களில் என்னையும் சேர்ப்பாயாக!’ என்றார்.✍✍✍* 


 *அல்குர்ஆன் 27:19* 


 *🌐🌐🌐இம்மாமன்னரையும் மரணம் தழுவிக் கொண்டது🌎🌎🌎.* 


📓📓📓அவருக்கு நாம் மரணத்தை ஏற்படுத்திய போது பூமியில் ஊர்ந்து செல்லும் உயிரினம் (கரையான்) தான் அவரது மரணத்தைக் காட்டிக் கொடுத்தது. அது அவரது கைத்தடியைச் சாப்பிட்டது. அவர் கீழே விழுந்ததும் ‘நமக்கு மறைவானவை தெரிந்திருந்தால் இழிவு தரும் இத்துன்பத்தில் இருந்திருக்க மாட்டோமே’ என்பதை ஜின்கள் விளங்கிக் கொண்டன.📓📓📓


 *அல்குர்ஆன் 34:14* 


 *✍✍✍இது ஒரு நல்லடியாரின் வாழ்க்கை! ஒரு நபியின் வாழ்க்கை! நல்ல முன்மாதிரியை, நல்ல எடுத்துக்காட்டைக் கொண்டது.* 
 *இப்போது ஒரு தீய அடியானைப் பற்றி இங்கு பார்ப்போம். ஆணவ அரசனான அவன் தான் ஃபிர்அவ்ன்! அவனும் தன்னைக் கடவுள் என்று வாதிட்டான்.* 
 *(மக்களைத்) திரட்டி, பிரகடனம் செய்தான். நானே உங்களின் மிகப் பெரிய இறைவன் என்றான். அவனை இம்மையிலும், மறுமையிலும் வேதனை மூலம் அல்லாஹ் பிடித்தான்.✍✍✍* 


 *அல்குர்ஆன் 79:23-25* 


📔📔📔அவனை அல்லாஹ் கடலில் மூழ்கடித்து அவனது உடலைப் பாதுகாத்து வைத்துள்ளான். தன்னைக் கடவுள் என்று சொன்னவனின் கதியைப் பாருங்கள் என்று கூறி அதைப் பாடமாக்கி வைத்துள்ளான்.📔📔📔


 *✍✍✍உனக்குப் பின் வருவோருக்கு நீ சான்றாக இருப்பதற்காக உன் உடலை இன்று பாதுகாப்போம் (என்று கூறினோம்.) மனிதர்களில் அதிகமானோர் நமது சான்றுகளை அலட்சியம் செய்வோராகவே உள்ளனர்.✍✍✍* 


 *அல்குர்ஆன் 10:90, 91* 


⛱⛱⛱போலிக் கடவுளின் உடல் இங்கே! உயிர் எங்கே? அவனது உயிர் என்னிடம் தான் உள்ளது என்று உண்மையான கடவுள் உலகுக்கு உணர்த்திக் கொண்டிருக்கின்றான்.⛱⛱⛱


 *✍✍✍ஃபிர்அவ்னாவது ஓர் ஆட்சியாளன். ஆனால் சாய்பாபாவோ சாதாரண குடிமகன் தான். இவர் தன்னைக் கடவுள் என்று கூறியது வெட்கக் கேடு! இவரையும் கடவுளாக பக்தர்கள் நம்புவது ஒரு கேலிக் கூத்து!✍✍✍* 


 *🕋🕋🕋நல்ல வார்த்தையும் 👺👺👺தீய வார்த்தையும்🕋🕋🕋* 


*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம் 55*



மவ்லிது ஓதினால் நபியின் ஷஃபாஅத் கிடைக்குமா?*

⭕ *மவ்லிது ஓதினால் நபியின் ஷஃபாஅத் கிடைக்குமா?*

மவ்லிது ஒரு வணக்கம்! அதை ஓதினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் ரஎனும் பரிந்துரை கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மார்க்கத்தை அறியாத மக்கள் மவ்லிது ஓதுகின்றனர்.

*மவ்லிது என்பது ஓர் இபாதத் கிடையாது. பித்அத் ஆகும்.*

பாடல்களைப் பாடி வழிபடுதல்
பாடல்களைப் பாடி அதன் மூலம் கடவுளை எழுப்பி வழிபடுவதென்பது இந்து மத நம்பிக்கையாகும். அதுபோல் கிறித்தவர்களும் பாட்டுப் பாடி கடவுளை வழிபடுவர். பாட்டுப் பாடி வழிபடல், வணங்குதல் என்பது இஸ்லாத்தில் இல்லை. 

ஆனால் இந்த மவ்லிதுவாதிகளோ மவ்லிது என்ற பெயரில் புதுப்புது மெட்டுக்களில் பாட்டுப் பாடி அதை வணக்கம் என்று நினைக்கின்றனர். இதன் மூலம் பிறமதக் கலாச்சாரத்தைப் பின்பற்றியவர்களாகி விடுகின்றனர்.

யார் பிற சமுதாயத்திற்கு ஒப்பாகி விடுகின்றாரோ அவர் அவர்களைச் சார்ந்தவரே என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: அபூதாவூத்

மவ்லிது ஓதுவதன் மூலம் பிற மதத்தினருக்கு ஒப்பாகி விடுகின்றனர். மேலும் இஸ்லாத்தில் ஒரு புது வணக்கத்தைப் புகுத்தியவர்களாக, அதாவது பித்அத்தைச் செய்தவர்களாக ஆகின்றனர்.

பித்அத்தும் பறிக்கப்படும் ஷஃபாஅத்தும் மவ்லிது ஓதினால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் எனும் பரிந்துரை கிடைக்கும் என்று மக்கள் பெருமளவில் நம்புகின்றார்கள். அவர்கள் இந்த நம்பிக்கையைப் புரிந்து கொண்டு மவ்லவிமார்களும் மவ்லிது ஓதினால் மறுமையில் ஷஃபாஅத் கிடைக்கும் என்ற மாயையைத் தோற்றுவிக்கின்றார்கள்.

ஆனால் உண்மையில் மறுமையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் கிடைக்காது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குப் பின் மார்க்கத்தில் பித்அத்துகளைப் புகுத்தி, மாற்றங்களைச் செய்தவர்களுக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சாபம் தான் கிடைக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களின் அடக்கத்தலத்திற்கு வந்து, "இறை நம்பிக்கை கொண்ட கூட்டத்தின் இல்லத்தாரே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும். அல்லாஹ் நாடினால் நாங்களும் உங்களுடன் வந்து சேர்ந்து விடுவோம் (என்று கூறி) நிச்சயமாக நான் நம்முடைய சகோதரர்களை உலகிலேயே கண்டு கொள்ள விரும்புகிறேன்'' என்று சொன்னார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்கள் சகோதரர்கள் கிடையாதா'' என்று நபித் தோழர்கள் கேட்டனர். "இன்னும் (உலகில்) உருவாகவில்லையே அவர்கள் தான் நம்முடைய சகோதரர்கள் என்கிறேன்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பதில் கூறினார்கள்.
 
உங்களுடைய சமுதாயத்தில் இன்னும் உருவாகாதவர்களை (மறுமையில்) நீங்கள் எப்படித் தெரிந்து கொள்வீர்கள் என்று நபித்தோழர்கள் வினவினார்கள். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "கன்னங்கருத்த குதிரைகளுக்கிடையில் முகத்திலும், கால்களிலும் வெள்ளை நிறத்தைக் கொண்ட குதிரை ஒருவருக்கு இருந்தால் அவர் அக்குதிரையைத் தெரிந்து கொள்ள மாட்டாரா?'' என்று திருப்பிக் கேட்டார்கள்.

நபித்தோழர்கள், "ஆம்! கண்டு கொள்வார்'' என்று பதில் கூறினார்கள். நிச்சயமாக அந்தச் சகோதரர்கள் உளூவின் காரணமாக முகம் மற்றும் கைகளில் வெண்சுடர் வீச வருவர். (இதன் மூலம் அவர்களை நான் தெரிந்து கொள்வேன்) நான் உங்களுக்கு முன்னதாக நீர் தடாகத்திற்கு வந்து விடுவேன். அறிந்து கொள்ளுங்கள். வழி தடுமாறி வந்த ஒட்டகம் விரட்டப்படுவது போன்று, என்னுடைய தடாகத்தை விட்டும் மக்கள் விரட்டப்படுவர். வாருங்கள் என்று அவர்களை நான் கூப்பிடுவேன். அப்போது, "இவர்கள் உங்களுக்குப் பின்னால் மார்க்கத்தை மாற்றி விட்டார்கள்'' என்று என்னிடம் தெரிவிக்கப்படும். தொலையட்டும்! தொலையட்டும்! என்று நான் கூறி விடுவேன் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
நூல் : முஸ்லிம்

மார்க்கத்தில் மவ்லிது போன்ற புதுமையைப் புகுத்தியவர்கள் வழிதடுமாறி வந்த ஒட்டகங்கள் போல் தடாகத்திலிருந்து துரத்தியடிக்கப் படுகின்றார்கள். இப்படி துரத்தியடிக்கப் படுபவர்களுக்கு எப்படி ஷஃபாஅத் கிடைக்கும்? லஃனத் – சாபம் தான் கிடைக்கும். அதைத் தான் மேற்கண்ட ஹதீஸ் தெரிவிக்கின்றது.

செய்திகளில் சிறந் அல்லாஹ்வின் வேதமாகும். வழிகளில் சிறந்தது முஹம்மதுடைய வழியாகும். (மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்பட்டவை தான் காரியங்களில் மிகவும் கெட்டவையாகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)
நூல் : முஸ்லிம்

நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னால் உருவாக்கப்பட்ட காரியங்கள் தான் மிகக் கெட்ட காரியங்களாகும். இந்தக் காரியங்கள் அனைத்துமே வழிகேடுகள். அவை நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் என்பதை மேற்கண்ட ஹதீஸ் தெரிவிக்கின்றது.

மவ்லிது ஓதுவது நன்மையைப் பெற்றுத் தராது என்பது ஒருபுறமிருக்க நரகத்தில் கொண்டு போய்ச் சேர்க்கும் மிகப் பெரும் பாவமாகவும் அமைந்துள்ளது.

அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்! அவனை மட்டுமே அழைத்துப் பிரார்த்திக்க வேண்டும் என்ற ஏகத்துவக் கொள்கையை அடிப்படையாகக் கொண்டே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்பட்டார்கள். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையே கடவுளாகச் சித்தரித்து இயற்றப்பட்ட கவிதைகள் இந்த மவ்லிதுகளில் இடம் பெற்றுள்ளன.

எப்படி ஏகத்துவத்தை நிலைநாட்டுவதற்காக அனுப்பப்பட்ட ஈஸா (அலை) அவர்கள் கடவுளாக ஆக்கப்பட்டார்களோ, அவர்கள் கொண்டு வந்த மார்க்கத்தை விட்டு எவ்வாறு அம்மக்கள் வெளியேறினார்களோ அதுபோல் மவ்லிது பக்தர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் புகழ்கின்றோம் என்ற பெயரில் மவ்லிதுகள் மூலம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களையும் கடவுளாக ஆக்கி இஸ்லாத்தை விட்டே வெளியேறி விட்டார்கள். அதாவது மதம் மாறி விட்டார்கள்.

ஈஸா (அலை) அவர்கள் தனது பாதையை விட்டும் மாறிச் சென்ற தனது சமுதாயத்திற்கு எதிராக சாட்சி சொல்வது போல் இத்தகையவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் சாட்சியமளிக்கின்றார்கள். இதன் மூலம் இடது பக்கம் இழுத்துச் செல்லப்பட்டு நரகத்தில் தள்ளப்படுவார்கள். இதையே பின்வரும் ஹதீஸ் காட்டுகின்றது.
நீங்கள் (மறுமை நாளில்) செருப்பு அணியாதவர்களாகவும், நிர்வாணமானவர்களாவும், கத்னா செய்யப்படாதவர்களாகவும் எழுப்பப்படுவீர்கள். என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டுப் பிறகு, "முதல் படைப்பை நாம் துவக்கியது போல் அதை மீண்டும் நிறுவுவோம். இது நமது வாக்குறுதி. நாம் (எதையும்) செய்வோராவோம்'' என்ற (21:104) இறைவசனத்தை ஓதினார்கள்.

மறுமை நாளில் முதன்முதலில் ஆடை அணிவிக்கப்படுபவர்கள் இப்ராஹீம் (அலை) ஆவார்கள். என் தோழர்களில் சிலர் இடப்பக்கம் (நரகத்தை நோக்கி) கொண்டு செல்லப்படுவார்கள். நான், "இவர்கள் என் தோழர்கள், இவர்கள் என் தோழர்கள்'' என்று கூறுவேன். அப்போது, "நீங்கள் இவர்களைப் பிரிந்ததிலிருந்து இவர்கள் தங்கள் மார்க்கத்தை விட்டு விலகி, தாம் வந்த சுவடுகளின் வழியே திரும்பிச் சென்று கொண்டிருந்தார்கள்'' என்று கூறுவார்கள். அப்போது நல்லடியார் (ஈஸா நபியவர்கள்) கூறியதைப் போல், "நான் அவர்களுடன் இருக்கும் போது அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன். என்னை நீ கைப்பற்றியதும் நீயே அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தாய். நீ அனைத்துப் பொருட்களையும் கண்காணிப்பவன். அவர்களை நீ தண்டித்தால் அவர்கள் உனது அடியார்களே. அவர்களை நீ மன்னித்தால் நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' எனும் (5:117, 118) இறைவசனத்தைக் கூறுவேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி 3349

எனவே இந்த மவ்லிது என்ற பித்அத் மூலம் ஷஃபாஅத்தை இழந்து சாபத்தை அடைவதுடன் நிரந்தர நரகத்திற்குரியவர்களான இடது பக்கவாசிகளுடன் சேர்க்கப்படும் பரிதாப நிலை ஏற்படுகின்றது. எனவே அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டித் தந்த வழியில் மட்டும் வணங்கி அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக!

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
_என்றும் இறைப்பணியில்..._
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
www.onlinetntj.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Wednesday, October 30, 2019

பெண்களுக்கான - 10

*🌹🌹🌹மீள் பதிவு🌹🌹🌹* 

*🧕🧕🧕பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள் பெண்களுக்கு மட்டுமே 🧕🧕🧕*


     *இறுதி பாகம் 10* 


 *👉👉👉இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👈👈👈* 

 *📚📚📚அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்ஆதாரங்களுடன்  ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇👇👇*

 *பெண்கள் தனியாக பயணம் செய்யலாமா?* 

ஒரு நாளைக் கடந்துவிடாத தூரத்திற்குள் தனியாக பெண்கள் பயணம் செய்வதற்கு அனுமதியுள்ளது. ஆனால் தான் செல்ல விரும்பு இடத்திற்குச் சென்று வந்தால் ஒரு நாளோ அதற்கு அதிகமான நாட்களோ ஆகுமென்றால் தனியாக பயணம் செய்வது கூடாது. இதுபோன்ற நேரங்களில் திருமணம் முடிக்கத்தடுக்கப்பட்ட நெருங்கிய உறவினர்களுடன் சேர்ந்துத் தான் பயணம் செய்ய வேண்டும். 

    அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எந்தப் பெண்ணும் ஒரு பகல் ஓர் இரவு தொலைவுடைய பயணத்தை (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய ஆண் உறவினர் உடன் இல்லாமல் (தனியாகப்) பயணம்மேற்கொள்ள வேண்டாம்.

 *அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி)* 
 *நூல் : புகாரி (1088)* 

நபி (ஸல்) அவர்கüடம் ஒரு மனிதர் வந்து,  "அல்லாஹ்வின்  தூதரே! நான் இன்ன புனிதப் போரில் கலந்து கொள்வதாக (ராணுவ வீரர்கள் பட்டிய-ல்)  எனது பெயர் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால்,என் மனைவி ஹஜ் செய்ய
விருக்கிறாள்''’என்று கூறினார்.  நபி (ஸல்) அவர்கள், "நீ  திரும்பிச்  சென்று உன்  மனைவியுடன் ஹஜ் செய்'' என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)* 
 *நூல் : புகாரி (3061)* 

தனக்கும் தன் உடைமைக்கும் பாதுகாப்பற்ற சூழ்நிலை நிலவும் போது எந்த ஒரு பெண்ணும் மஹ்ரமானவர்களின் துணை இல்லாமல் பயணம் போகக் கூடாது. இதை மேலுள்ள ஹதீஸிலிருந்து புரிந்துகொள்ளலாம்.  ஆனால் தனியாக பயணித்தால் எந்த பாதிப்பும் பெண்ணிற்கு ஏற்படாது என்று கருதும் அளவிற்கு அச்சமற்ற நிலைஅவர்கள்  இருந்தால் அப்போது ஒரு பெண் தனியாக பயணிப்பதில் தவறில்லை. இதை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக்கொள்ளலாம்.
 
நான் நபி (ஸல்) அவர்கüடம் இருந்த போது ஒரு மனிதர் அவர்கüடம் வந்து (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்கüடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே, நபி (ஸல்) அவர்கள், "அதீயே! நீ "ஹீரா'வைப் பார்த்ததுண்டா?'' என்று கேட்டார்கள். "நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது'' என்று  பதிலüத்தேன். அவர்கள், "நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காக (வலம் வருவதற்காக)ப் பயணித்து ஹீராவி-ருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்'' என்று சொன்னார்கள்.

 *அறிவிப்பவர் : அதீ பின் ஹாதம் (ரலி)* 
 *நூல் : புகாரி (3595)* 

    யாருடைய துணையும் இல்லாமல் தன்னந்தனியாக வந்து கஃபதுல்லாஹ்வை தவாஃப் செய்வாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக தபகாத்து இப்னு சஃத் என்ற நூலில் 285 வது எண்ணில் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

    நபி (ஸல்) அவர்கள் தவறான உதாரணங்களை கூறமாட்டார்கள். பாதுகாப்புள்ள நிலையிலும் பெண் தனியாக பயணம் செய்வது கூடாதென்றால் தன்னந்தனியாக பயணம் செய்யும் பெண்னை உதாரணமாகக் காட்டி சிலாஹித்துக் கூறியிருக்கமாட்டார்கள். 
எனவே பாதுகாப்புள்ள நிலையில் மஹ்ரமான துணை இல்லாமலேயே பயணம் செய்யலாம் என்று மேலுள்ள ஹதீஸிலிருந்து விளங்குகிறது. பெண்கள் கூட்டத்துடன் சேர்ந்து ஹஜ் செய்யும் போது பாதுகாப்பு கிடைக்கும் என்று உறுதி இருந்தால் அவர்களுடன் சேர்ந்து பயணம் செய்யலாம். 

 *பெண்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கலாமா?* 

இஃதிகாஃப் என்பதற்கு தங்குதல் என்பது பொருள்.  இறையில்லத்தில் இறைவனை வணங்குவதற்காக மாத்திரம் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படுகிறது.  இவ்வணக்கத்தை செய்பவர்கள் அவசியமானத் தேவைகளுக்குத் தவிர மற்ற விஷயங்களுக்கு பள்ளியை விட்டும் வெளியே செல்வதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

இஃதிகாஃப் இருக்கக்கூடியவர் நோயாளியை நலம் விசாரிப்பதற்கு (வெளியில்) செல்லாமல் இருப்பதும் ஜனாஸாவில் கலந்துகொள்ளாமல் இருப்பதும் பெண்னை தொடமல் இருப்பதும் அவளை கட்டியணைக்காமல் இருப்பதும் மிக அவசியமானவைகளுக்குத் தவிர மற்ற தேவைகளுக்கு வெளியில் செல்லாமல் இருப்பதும் நபிவழியாகும்.

 நோன்புடனேத் தவிர (தனியாக) இஃதிகாஃப் கிடையாது. மக்கள் ஒன்றுசேருகின்ற பள்ளியிலேத் தவிர (வேறு இடத்தில்) இஃதிகாஃப் கிடையாது. 

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : அபூதாவுத் (2115)* 

இஃதிகாஃப் இருப்பதற்கு நபி (ஸல்) அவர்களிடம் பெண்கள் அனுமதி கேட்ட போது நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள். எனவே பெண்கள் இஃதிகாஃப் இருக்கலாம். 
நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு ரமளானிலும் இஃதிகாஃப் இருப்பார்கள். சுப்ஹுத் தொழுததும் இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்றுவிடுவார்கள்.

 அவர்களிடம் இஃதிகாஃப் இருப்பதற்கு நான் அனுமதி கேட்டேன். எனக்கு அவர்கள் அனுமதி அளித்தார்கள்.

 அங்கே நான் ஒரு கூடாரத்தை அமைத்துக் கொண்டேன். இதைக் கேள்விப்பட்ட ஹஃப்ஸா (ரலிலி) ஒரு கூடாரத்தை அமைத்தார். இதனைக் 
கேள்விப்பட்ட ஸைனப் (ரலிலி) மற்றொரு கூடாரத்தை அமைத்துக்கொண்டார். நபி (ஸல்) அவர்கள் காலை தொழுகையை முடித்துவிட்டுத் திரும்பியபோது நான்கு கூடாரங்களைக் கண்டு, "இவை என்ன?'' என்று கேட்டார்கள்.

 அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "இவ்வாறு செய்வதற்கு நற்செயல்புரியும் எண்ணம்தான் இவர்களைத் தூண்டியதா? இவர்கள் நன்மையைத்தான் நாடுகிறார்களா? இவற்றை நான் காண முடியாதவாறு அகற்றுங்கள்!'' என்று சொன்னவுடன் அவை அகற்றப்பட்டன. நபி (ஸல்) அவர்கள் (அந்த வருடம்) ரமளானில் இஃதிகாஃப் இருக்காமல் ஷவ்வால் மாதத்தின் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருந்தார்கள்.

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : புகாரி (2041)* 

பள்ளியில் நெருக்கடிந்த ஏற்படும் அளவில் அதிகமான கூடாரங்களை அமைத்துக்கொண்டதைத் தான் நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள். 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அன்னாரின் துணைவியரில் ஒருவர் இஃதிகாஃப் இருந்தார். அப்போது அவர் குசும்பப்பூவின் நீரின் நிறத்தில் உதிரப்போக்கைக் காண்பவராக இருந்தார். அவர் தொழும்போது அவருக்குக் கீழே கையலம்பும் பாத்திரம் இருக்கும்.

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : புகாரி (310)* 

அன்னிய ஆணுடன் எந்த ஒரு பெண்ணும் தனியாக இருக்கக்கூடாது என்பதால் இதைத் தவிர்க்க இஃதிகாஃப் இருக்கும் பெண்ணுக்குத் துணையாக இன்னொரு பெண்ணோ அல்லது மஹ்ரமான ஆணோ இஃதிகாஃப் இருப்பது நல்லது.

 *பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்லலாமா?* 

மரண பயத்தையும் மறுமை சிந்தனைûயும் வரவழைத்துக் கொள்வதற்காக பெண்கள் மண்ணறைகளுக்குச் செல்வதற்கு அனுமதியுள்ளது. மண்ணறைகளுக்குச் செல்பவர்கள் ஓத வேண்டிய பிரார்த்தனையை நபி (ஸல்) அவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்குக் கற்றுக்கொடுத்தார்கள். 

நான் "அல்லாஹ்வின் தூதரே! அ(டக்கத் தலங்களில் இருப்ப)வர்களுக்காக நான் என்ன சொல்ல வேண்டும்?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "  *"அஸ்ஸலாமு அலா அஹ்லிலித் தியாரி மினல் முஃமினீன வல் முஸ்லிலிமீன். வ யர்ஹமுல்லாஹுல் முஸ்தக்திமீன மின்னா வல் முஸ்தஃகிரீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் ல லாஹிகூன்* '' என்று சொல்'' என்றார்கள்.
(பொருள்: அடக்கத் தலங்களில் உள்ள இறைநம்பிக்கையாளர்களுக்கும் முஸ்லிலிம்களுக்கும் சாந்தி பொழியட்டும்! நம்மில் முந்திச் சென்றுவிட்டவர்களுக்கும் பிந்தி வருபவர்களுக்கும் அல்லாஹ் கருணை புரிவானாக! நாம் அல்லாஹ் நாடினால் உங்களுக்குப் பின்னால் வந்து சேரக்கூடியவர்களாக உள்ளோம்.)

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : முஸ்லிம் (1774)* 

அடக்கத் தலங்களைச் சந்தியுங்கள். ஏனெனில், அவை மரணத்தை நினைவூட்டும்!' என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர் : அபூஹ‚ரைரா (ரலி) நூல் : முஸ்லிம் (1777)* 

அடக்கத்தலங்களை சந்திப்பதை விட்டும் உங்களை நான் தடுத்திருந்தேன். முஹம்மதுவிற்கு அவரின் தாயாருடைய அடக்கத்தலத்தை சந்திப்பதற்கு அனுமதி தரப்பட்டுவிட்டது. எனவே நீங்கள் மண்ணறைகளை சந்தியுங்கள். அவை உங்களுக்கு மறுமையை நினைவூட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

 *அறிவிப்பவர் : புரைதா (ரலி)* 
 *நூல் : திர்மிதி (974)* 

மண்ணறைகளை ஜியாரத் செய்கிறோம் என்று கூறிக்கொண்டு சில பெண்கள் தர்ஹாக்களுக்குச் செல்கிறார்கள். தர்ஹாக்களில் இணைவைப்பு அறங்கேற்றப்படுவதாலும் மார்க்கம் தடை செய்த ஏராளமான அம்சங்கள் அங்கு நடைபெறுவதாலும் அங்கு ஆண்களாக இருந்தாலும் பெண்களாக இருந்தாலும் செல்வது கூடாது. பொது மையவாடிகளுக்குச் செல்லலாம். 

 *கோ எஜ‚கேஷன் கூடுமோ?* 

    கல்லூரிகளில் ஆண்களும் பெண்களும் சேர்ந்து ஒரே வகுப்பறையில் பயிலும் கல்வி முறைக்கு கோ எஜ‚கேஷன் என்று சொல்லப்படுகிறது. ஆணும் பெண்ணும் கல்வியை வளர்த்துக்கொள்வதற்கு இஸ்லாத்தில் பரிபூரண சுதந்திரம் உண்டு. ஆனால் கல்வி என்றப் பெயரில் ஒழுக்கங்கெட்டு நடப்பதைத் தான் இஸ்லாம் தடுக்கிறது. 

    *கோ எஜ‚கேஷன்* நடைமுறையில் உள்ள கல்லூரிகளில் ஆண்களும் பெண்களும் ஒருவரையொருவர் சந்தித்துக்கொள்வதும் கேளி கிண்டல் செய்வதும் காதலிப்பதும் வாடிக்கையாகி வருகிறது. இது ஒரு குற்றமாகக் கருதப்படுவது கிடையாது. இப்படிப்பட்ட இடங்களுக்கு நமது பெண்களை அனுப்பினால் அவர்களும் தவறான வழிக்கு சென்றுவிடுவார்களோ என்ற அச்சம் ஏற்படுகிறது. 

    நபி (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களும் பெண்களும் சபைகளில் கலந்துகொண்டிருக்கிறார்கள். ஆண்களின் பார்வை பெண்களின் மீது படாதவாறு ஆண்கள் முன்னாலும் பெண்கள் பின்னாலும் அமர்வார்கள். சபை களையும் போது பெண்கள் முதலில் களைந்து செல்வார்கள். பெண்கள் சென்றதற்குப் பிறகு ஆண்கள் செல்வார்கள். இப்படியொரு அருமையான வழிமுறையை நபி (ஸல்) அவர்கள் கடைபிடித்துள்ளார்கள். 
         
    இந்த வழிமுறையையும் இஸ்லாம் சொல்லும் ஒழுங்கு முறைகளையும் கல்லூரிகளில் கடைபிடித்தால் அங்கு சென்று தாரளமாக கற்கலாம். ஆனால் அப்படியொரு கல்லூரி கிடைக்காத பட்சத்தில் அல்லாஹ்விற்கு பயந்து இஸ்லாமிய ஒழுங்கு முறைகளை முழுமையாக கடைபிடித்து கல்லூரிக்குச் செல்வது தவறில்லை. 

    பெண்களுக்கென்று தனியாக கல்லூரிகள் இருந்தால் அங்கு சென்று படிப்பது சிறந்தது.  

 *பெண்கள் வேலைக்குச் செல்லலாமா?* 

பெண்கள் வேலைக்காக வெளியே செல்லும் போது அன்னிய ஆண்களுடன் தனித்திருக்க வேண்டிய நிலையும் அவர்களுடன் பழக வேண்டிய நிலையும் ஏற்படுகிறது. இதை இஸ்லாம் தடுத்திருக்கிறது. 
ஆண்களால் பெண்கள் அதிகமாக ஏமாற்றப்பட்டு வருகிறார்கள் என்பதை கண்கூடாக பார்க்கிறோம்.
யாருடைய உதவியும் இல்லாமல் தனியாக ஒரிடத்திற்குச் செல்லும்போது அவளது கற்புக்கு பாதுகாப்பற்றுப் போய்விடுகிறது. இதையெல்லாம் கவனித்தில் வைத்துப் பார்க்கும் போது வெளியிடங்களுக்கு வேலைக்குச் செல்லாமல் இருப்பதே சிறந்தது என்று தெரிகிறது. 

    தான் வேலைக்குச் செல்லக்கூடிய இடம் மார்க்கத்தின் வரம்புகளை மீறுவதற்கான சூழ்நிலைகள் அற்ற இடமாகவும் தன் கற்புக்கு பாதுகாப்பான இடமாகவும் இருந்தால் மேலும் அவ்வாறு வேலைக்குச் செல்வது மிக அவசியமானதாகவும் இருந்தால் வேலைக்குச் செல்வதில் தவறில்லை. 
    
பெண்கள் வெளியில் செல்லாமல் வீடுகளிலே இருந்து வேலை செய்து சம்பாரிப்பதில் தவறில்லை. இது தான் அவர்களுக்கு சிறந்ததாகவும் உள்ளது. 
    மேலதிகமான விபரங்களை அறிய பெண்கள் வெளியில் செல்லலாமா என்ற தலைப்பின் கீழ் சொல்லப்பட்ட செய்திகளை படித்துத் தெரிந்து கொள்க. 

 *பெண்கள் வேலைக்கு செல்லாமா❓கூடுதல் விளக்கம்* 

சிலரை விட மற்றும் சிலரை அல்லாஹ் மேன்மைப்படுத்தியுள்ளதில் பேராசை கொள்ளாதீர்கள்! ஆண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. பெண்களுக்கு அவர்கள் பாடுபட்டதில் பங்குண்டு. அல்லாஹ்விடம் அவனது அருளை வேண்டுங்கள்! அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவனாக இருக்கிறான்      

        *(அல்குர்-ஆன் 4:32)* 

 மேற்கண்ட வசனத்தில் பெண்கள் சம்பாதித்ததில் அவர்களுக்கு பங்கு உண்டு என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து பெண்கள் சம்பாதிக்கலாம் என்ற அனுமதி நேரடியாக வழங்கப்படுகின்றது.
            பெண்கள் வேலை செய்து சம்பாதிப்பதை மார்க்கம் தடைசெய்யவில்லை. நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் விவசாயப் பணியை செய்திருக்கிறார்கள். அதை நபி(ஸல்) அவர்களும் அங்கீகரித்துள்ளார்கள். இதை பின்வரும் ஹதீஸ்களில் அறியலாம்.

 *2727* و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ حَاتِمِ بْنِ مَيْمُونٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ ابْنِ جُرَيْجٍ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ ح و حَدَّثَنِي هَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ وَاللَّفْظُ لَهُ حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مُحَمَّدٍ قَالَ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ أَنَّهُ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ طُلِّقَتْ خَالَتِي فَأَرَادَتْ أَنْ تَجُدَّ نَخْلَهَا فَزَجَرَهَا رَجُلٌ أَنْ تَخْرُجَ فَأَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ بَلَى فَجُدِّي نَخْلَكِ فَإِنَّكِ عَسَى أَنْ تَصَدَّقِي أَوْ تَفْعَلِي مَعْرُوفًا رواه مسلم

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் ("இத்தா'வில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், "ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள் ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்'' என்றார்கள்.

 *முஸ்லிம் (2972)* 

 *938* حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ قَالَ حَدَّثَنَا أَبُو غَسَّانَ قَالَ حَدَّثَنِي أَبُو حَازِمٍ عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ كَانَتْ فِينَا امْرَأَةٌ تَجْعَلُ عَلَى أَرْبِعَاءَ فِي مَزْرَعَةٍ لَهَا سِلْقًا فَكَانَتْ إِذَا كَانَ يَوْمُ جُمُعَةٍ تَنْزِعُ أُصُولَ السِّلْقِ فَتَجْعَلُهُ فِي قِدْرٍ ثُمَّ تَجْعَلُ عَلَيْهِ قَبْضَةً مِنْ شَعِيرٍ تَطْحَنُهَا فَتَكُونُ أُصُولُ السِّلْقِ عَرْقَهُ وَكُنَّا نَنْصَرِفُ مِنْ صَلَاةِ الْجُمُعَةِ فَنُسَلِّمُ عَلَيْهَا فَتُقَرِّبُ ذَلِكَ الطَّعَامَ إِلَيْنَا فَنَلْعَقُهُ وَكُنَّا نَتَمَنَّى يَوْمَ الْجُمُعَةِ لِطَعَامِهَا ذَلِكَ رواه البخاري

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறினார்கள் :
(மதீனாவில்) எங்களிடையே (வயது முதிர்ந்த) பெண்மணி ஒருவர் இருந்தார். அவர் தமது தோட்டத்தின் வாயக்கால் வரப்பில் தண்டுக் கீரைச் செடியை பயிர் செய்வார். வெள்ளிக்கிழமை வந்துவிட்டால் அவர் அந்தக் கீரையின் தண்டுகளைப் பிடுங்கி வந்து ஒரு பாத்திரத்தில் போடுவார். அதில் ஒரு கையளவு வாற்கோதுமையை போட்டுக் கடைவார். அந்தக் கீரைத் தண்டுதான் (எங்கள்) உணவில் மாமிசம் போன்று அமையும். நாங்கள் ஜுமுஆத்தொழுகை தொழுதுவிட்டுத் திரும்பி வந்து அவருக்கு சலாம் சொல்வோம் அந்த உணவை அவர் எங்களுக்குப் பரிமாறுவார். அதை நாங்கள் ருசித்துச் சாப்பிடுவோம். அவருடைய அந்த உணவுக்காக நாங்கள் வெள்ளிக்கிழமையை (அது எப்போது வருமென) எதிர்பார்த்துக்கொண்டிருப்போம்.

 *புகாரி (938)* 

எனவே உங்களுடைய தாய்,  வீட்டில் மிளகாய் விற்று உங்களை படிக்க வைத்தது தவறல்ல.
                           பெண்கள் வேலைக்குச் செல்வது மார்க்கத்தில் ஹராம் என்று நாம் கூறவில்லை.

 தற்காலத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வது அவ்வளவு சிறந்ததல்ல என்றே கூறுகிறோம். ஏனென்றால் தற்காலத்தில் பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏராளமான மார்க்க நெறிமுறைகளை மீறக்கூடிய நிலை ஏற்படுகிறது.  இஸ்லாமிய நெறிமுறைகளை பேணி பெண்கள் தற்காலத்தில் வேலைக்கு செல்வதென்பது கடினமான விஷயமாக உள்ளது.

குடும்பத்துக்காக பொருளீட்டும் பொறுப்பு ஆண்கள் மீது சுமத்தப்பட்டிருக்கின்றது. குடும்பத்தை கவனிக்கும் பொறுப்பு பெண்கள் மீது சுமத்தப்பட்டுள்ளது.

الرِّجَالُ قَوَّامُونَ عَلَى النِّسَاءِ بِمَا فَضَّلَ اللَّهُ بَعْضَهُمْ عَلَى بَعْضٍ وَبِمَا أَنفَقُوا مِنْ أَمْوَالِهِمْ (34)4

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.

 *அல்குர்ஆன் (4 : 34)* 

 *2554* حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي نَافِعٌ عَنْ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّكُمْ رَاعٍ فَمَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ فَالْأَمِيرُ الَّذِي عَلَى النَّاسِ رَاعٍ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ وَالرَّجُلُ رَاعٍ عَلَى أَهْلِ بَيْتِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُمْ وَالْمَرْأَةُ رَاعِيَةٌ عَلَى بَيْتِ بَعْلِهَا وَوَلَدِهِ وَهِيَ مَسْئُولَةٌ عَنْهُمْ وَالْعَبْدُ رَاعٍ عَلَى مَالِ سَيِّدِهِ وَهُوَ مَسْئُولٌ عَنْهُ أَلَا فَكُلُّكُمْ رَاعٍ وَكُلُّكُمْ مَسْئُولٌ عَنْ رَعِيَّتِهِ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக்குட்பட்டவை பற்றி நீங்கள் விசாரிக்கப் படுவீர்கள். மக்கள் மீது ஆட்சி புரியும் தலைவர் அவர்களுக்குப் பொறுப்பாளியாவார். அவர்களை (ஆட்சி புரிந்த விதம்) குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண், தன் வீட்டாருக்குப் பொறுப்பாளியாவான். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவன் விசாரிக்கப்படுவான். 

 பெண், தன் கணவனின் வீட்டிற்கும் அவனது குழந்தைக்கும் பொறுப்பாளியாவாள். அவர்களை (பராமரித்த விதம்) குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். அடிமை, தன் எஜமானின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அதை (பாதுகாத்த விதம்) குறித்து விசாரிக்கப்படுவான். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளிகளே. உங்கள் பொறுப்புக் குட்பட்டவை குறித்து நீங்கள் விசாரிக்கப்படுவீர்கள்.

 *புகாரி (2554)* 

பெண் தன் கணவனையும் கணவனின் வீட்டையும் குழந்தைகளையும் பராமரிக்க வேண்டும். இது பெண்ணுடைய பொறுப்பாகும். இன்றைக்கு வேலைக்குச் செல்லும் பெண்களில் பலர் தங்கள் மீது சுமத்தப்பட்டுள்ள இந்தப் பொறுப்புகளை முறையாக நிறைவேற்றுவதில்லை.
ஆண்கள் மீது சுமத்தப்பட்ட பொருளீட்டும் பொறுப்பை இவர்கள் தங்கள் கையில் எடுத்ததன் விளைவு தாங்கள் ஆற்ற வேண்டிய பொறுப்புகளை இவர்களால் நிறைவேற்ற முடியாமல் போனது. *மேலும் வேலைக்குச் செல்லும் இடத்தில் அந்நிய ஆண்களுடன் தனித்திருத்தல் அந்நிய ஆண்களுடன் குலைந்து பேசுதல் ஹிஜாபைப் பேணாமல் இருத்தல் மஹ்ரமானவரின் துணையின்றி தூரமான இடத்திற்கு பயணம் மேற்கொள்ளுதல் போன்ற ஒழுக்கக் கேடுகளும் ஏற்படுகின்றன* . மார்க்கக் கடமைகளை மீறுவதற்கு ஒரு செயல் காரணமாக இருந்தால் அந்த செயலும் மார்க்கத்தில் தடைசெய்யப்பட்டதாகும்.
எனவே பெண்கள் வேலைக்குச் சென்றால் மார்க்க நெறிமுறைகள் மீறப்படுமேயானால் அப்போது அவர்கள் வேலைக்குச் செல்வது கூடாது. மார்க்க ஒழுங்கு முறைகளுக்கு உட்பட்டு தனது பொறுப்புகளுக்கு பங்கம் ஏற்படாத வகையில் வேலை செய்தால் அது மார்க்கத்தில் தவறல்ல. 

உங்களுடைய வருங்கால மனைவியால் மார்க்க சட்டதிட்டங்களுக்கு உட்பட்ட பணிபுரிய முடியுமா? என்பதை நீங்கள் யோசித்து முடிவு செய்துகொள்ள வேண்டும்.
வேலைக்கு செல்லும் பெண்கள் வேலை செய்யும் இடங்களில் உள்ள சக ஆண்களால் என்ன என்ன இன்னல்களுக்கு ஆளாகின்றார்கள் என்பது தான் உண்மை 

 *ஒப்பாரி வைக்கக்கூடாது* 

துக்கம் மேலிடும் போது சப்தமிட்டு ஒப்பாரி வைப்பதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். ஒப்பாரி வைக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் உறுதிமொழி வாங்கினார்கள். 

 *அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி)* 
 *நூல் : புகாரி (1306)* 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் மக்களிடத்தில் இரண்டு (கெட்ட பண்புகள்) உள்ளது. அவர்களிடத்தில் உள்ள அந்த இரண்டும் இறைநிராகரிப்பாகும். (ஒன்று) வம்சாவழியில் குறையை ஏற்படுத்துவதாகும். (மற்றொன்று) இறந்தவருக்காக ஒப்பாரி வைப்பதாகும். 

 *அறிவிப்பவர் ; அபூஹ‚ரைரா (ரலி)* 
 *நூல் : முஸ்லிம் (100)* 

(துன்பத்தில்) கன்னங்களில் அறைந்துகொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக்கொள்பவனும் அறியாமைக்கால (மாச்சரியங்களுக்கு) அழைப்பு விடுப்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன்.

 *அறிவிப்பவர் : அப்துல்லாஹ் (ரலி)* 
 *நூல் : புகாரி (1294)* 

ஆனால் ஒப்பாரி வைக்காமல் கவலைப்பட்டாலோ சப்தமிடாமல் கண்ணீர் வடித்தாலோ குற்றமில்லை. 
சஅத் பின் உபாதா (ரலிலி) நோயுற்றபோது நபி (ஸல்) அவர்கள், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலிலி), சஅத் பின் அபீவக்காஸ் (ரலிலி), அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலிலி) ஆகியோரோடு நோய் விசாரிக்கச் சென்றார்கள். வீட்டில் நுழைந்தபோது (சஅத் பின் உபாதாவின்) குடும்பத்தினர் அவரைச் சூழ்ந்திருப்பதைக் கண்டதும், " என்ன? இறந்துவிட்டாரா?'' எனக் கேட்டார்கள். "இல்லை, அல்லாஹ்வின் தூதரே!'' என்றனர்.  நபி (ஸல்) அவர்கள் அழலானார்கள். அவர்களின் அழுகையைக் கண்ட மக்களும் அழத்தொடங்கினர்.  பின் நபி (ஸல்) அவர்கள், "(மக்களே!) நீங்கள் (செவி சாய்த்துக்) கேட்க மாட்டீர்களா? நிச்சயமாகக் கண்கள் அழுவதாலும் உள்ளம் கவலை கொள்வதாலும் அல்லாஹ் தண்டிப்பதில்ôலை- பின்பு, தம் நாவின் பால் சைகை செய்து- எனினும் இதன் காரணமாகத்தான் தண்டனையோ அருளோ வழங்குகிறான்.  
    உமர் (ரலிலி) அவர்கள்  ஒப்பாரி வைப்பவர்களைக் கண்டால் கம்பினால் அடிப்பார்கள்; கல்லெறிவார்கன்.  இன்னும் மண்வாரி வீசவும் செய்வார்கள்.

 *அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)* 
 *நூல் : புகாரி (1304)* 

    *கணவன் இறந்தால் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கமாக இருக்கலாம்.*

 மற்றவர்கள் யார் இறந்தாலும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் அனுஷ்டிக்கக்கூடாது. மூன்று நாட்கள் கழிந்து விட்டால் சகஜ நிலைக்குத் திரும்பிவிட வேண்டும். 
நான், தமது சகோதரரை இழந்திருந்த ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலிலி) அவர்களிடம் சென்றேன். அவர் நறுமணம் பூசிக்கொண்டு, “"இது எனக்குத் தேவையில்லைதான்;  ஆயினும் "அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பக்கூடிய பெண் தனது கணவனைத் தவிர வேறு யாருடைய *இறப்பிற்கும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாது;*  தனது கணவன் இறந்துவிட்டால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் துக்கம் கடைப்பிடிக்க வேண்டும்' என நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது  நின்றவாறு கூற நான் கேட்டிருக்கிறேன்''  என்றார்.

    *அறிவிப்பவர் : ஸைனப் பின்த் அபீ ஸலமா (ரலி)* 
 *நூல் : புகாரி (1282)* 

 *பெண்கள் பிராணிகளை அறுக்கலாமா?* 

பெண்கள் அறுப்பதற்கு எவ்வித தடையும் ஹதீஸ்களில் இல்லை. மேலும் நபி(ஸல்) அவர்கள், ஒரு பெண் அறுத்ததை அங்கீகரித்துள்ளார்கள்.
ஒரு பெண்மணி (கூர்மையான) கல்லால் ஆட்டை அறுத்து விட்டார். இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது அதை சாப்பிடும்படி கட்டளையிட்டார்கள்.

 *அறிவிப்பவர் : கஅபு இப்னு மாலிக்(ரலி),* 
 *நூல் : புகாரி(5504)* 

 *இறுதியாக*

பெண்களுக்கு மாத்திரம் பிரத்யேகமான பல சட்டங்களை அறிந்துகொண்டோம். தொழும் முறை உளூ செய்யும் முறை தயம்மம் இன்னும் பல விஷயங்களில் ஆண்களுக்கு சொல்லப்பட்ட அனைத்து சட்டங்களும் பெண்களுக்கு பொருந்தும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் பெண்களும் ஆண்களைப் போன்றவர்கள் தான் என்று கூறியுள்ளார்கள்.
 பெண்கள் ஆண்களைப் போன்றவர்களாவார்கள். 

 *அறிவிப்பவர் : உம்மு சுலைம் (ரலி)* 
 *நூல் : அஹ்மத் (25869)* 

இவற்றைத் தெரிந்துகொள்ள நபிவழியில் தொழுகைச் சட்டங்கள் என்ற புத்தகத்தை வாங்கிப் படித்துக்கொள்ளுங்கள்.
 
  *முற்றும்* 

அல்லாஹ் மிக அறிந்தவன்.

 *ஜஸாகல்லாஹ் ஹைரன்*

இஸ்லாத்தை அறிந்து - 53

*🍓🍓🍓மீள் பதிவு🍓🍓🍓* 🌹* 


 *🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉தொடர்  பாகம் 53 👈👈👈* 


     *👉தலைப்பு👇*



*👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👧நல்லவர்கள் கஷ்டப்படுவதும்👺👺👺 தீயவர்கள் சுகமாக வாழ்வதும்👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👧* 



 *✍✍✍நல்லவர்கள் கஷ்டப்படுவதும் தீயவர்கள் சுகமாக வாழ்வதும்* 
 *உள்ளதைக் கொண்டு போதுமாக்க வேண்டும் . உள்ளதைக் கொண்டு போதுமாக்க வேண்டும் என்று சொன்னால் இந்த உலகத்திலேயே நாம் பார்க்கலாம் நல்லவர்கள் எல்லாம் கஷ்டப்படுவார்கள். தீயவர்கள் எல்லாம் நல்ல நிலையில் இருக்கக்கூடிய ஒரு நிலையைப் பார்க்கிறோம்.✍✍✍* 

📕📕📕நேர்மையாக, சரியான அடிப்பயில் இருக்கக் கூடியவன் ஏழ்மையில் வாடுவான். லஞ்சம் வாங்கி மோசடி செய்து ஹராமான அடிப்படையில் வியாபாரம் செய்பவன் செல்வச் செழிப்பில் இருப்பதைப் பார்க்கிறோம். பெரும்பாலும் இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள். நேர்மையாக நடப்பவர்களும் செல்வந்தர்களாக இருக்கிறார்கள். ஆனால் குறைவாக இருக்கிறார்கள். இப்படிப்பட்ட நிலையில் இது எப்படி நியாயம் என்ற ஒரு கேள்வி நமக்குள் எழுவதைப் பார்க்கிறோம். இதற்கு இஸ்லாம் பலவிதமான பதிலைத் தருகிறது.📕📕📕


 *✍✍✍இந்த உலகத்தில் எப்படிப்பட்ட கோடீஸ்வரனாக இருந்தாலும் அவருக்கு 100 சதவீதம் நிறையிருக்கிறது என்று சொல்ல முடியாது. அவருக்குச் செல்வம் வேண்டுமானால் நிறையாக இருக்கலாம். மற்ற குறை இல்லை என்று சொல்ல முடியாது. உதாரணத்திற்கு, கோடீஸ்வரனாக இருப்பான் ஆனால் கிட்னி ஃபெய்லியர் என்று கூறி விடுவார்கள். தனது சிறுநீரைக் கூட வெளியேற்ற முடியாமல் இருப்பார்✍✍✍.* 


📘📘📘இப்படி அல்லாஹ் குறை நிறையை இந்த உலகில் சரி சமமாகத் தான் போட்டிருக்கிறான். நாம் என்ன நினைக்கிறோம் என்றால் பணம் மட்டும் தான் செல்வம் என்று நினைக்கிறோம். ஆனால் பணம் இருந்து நோய் இருப்பவனை விட பணம் இல்லாமல் நோயின்றி இருப்பவன் சிறந்தவன் என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். அல்லாஹ் மனிதனை குறை நிறையுடன் தான் படைத்திருக்கிறான். இப்படி ஒருவன் நினைப்பானேயானால் அவன் கவலைப்படமாட்டான். இக்கரைக்கு அக்கரை பச்சை என்று சொல்வார்களே!📘📘📘


 *✍✍✍அது போல அனைத்தும் சமமாகத் தான் இருக்கும். உதாரணத்திற்கு, பெரிய பணக்காரராக இருப்பார். ஆனால் சுகர் என்று சொல்லி விடுவார்கள். இனிப்பு உண்ணக் கூடாது என்று கூறியிருப்பார்கள். அதேபோல சில நோய்களுக்கு மாமிசம் தின்னக் கூடாது என்று சொல்லி இருப்பார்கள். ஆனால் அவனுடைய வீட்டில் வேலை செய்யக் கூடியவன் வாய் ருசியாக சாப்பிடுவான். அவனைப் பார்த்து இவன் ஏங்குவான். அவன் செல்வம் வைத்திருந்தாலும் அவனால் விரும்பியதை உண்ண முடியாமல் அல்லாஹ் குறையைக் கொடுத்திருப்பதைப் பார்க்கிறோம்.✍✍✍* 


📙📙📙இந்த ஏற்றத் தாழ்வுகளை வைத்துக் கொண்டு அல்லாஹ்வை குறை சொல்லக் கூடிய அறிவிலிகளைப் பார்க்கிறோம். ஆனால் இப்படி ஏற்றத்தாழ்வு இருந்தால் தான் நல்லது. அப்போது தான் மனிதன் அல்லாஹ்விற்குப் பணிந்து நடப்பான். 100 சதவீதம் நிறையைக் கொடுத்தால் மனிதன் அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடக்க மாட்டான். பின்னர் துஆ என்ற ஒன்று அவசியமாகாது. குறைகள் இருந்தால் தான் மனிதன் தனது தேவையை அல்லாஹ்விடம் கேட்பான். அப்போது தான் அவன் இறையச்சத்துடன் நடப்பான்.📙📙📙


 *✍✍✍இந்த ஏற்றத் தாழ்வைக் காட்டி இறை மறுப்புக் கொள்கையான நாத்திகத்தைப் பேசுகிறர்கள். உண்மையிலேயே இப்படிப் பட்ட ஏற்றத்தாழ்வை அல்லாஹ் இந்த உலகத்தில் ஆக்கியதன் மூலம் தான் அல்லாஹ் தான் ஹகீம் (ஞானமுள்ளவன்) என்பதை நிரூபிக்கின்றான். உதாரணத்திற்கு, அனைவருக்குமே கண் பார்வை நன்றாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். எவனாவது கண்ணைப் பற்றிச் சிந்திப்பானா? என்று பார்த்தால் சிந்திக்க மாட்டான். அதைப் பற்றியான அறிவு வளர்ந்திருக்காது. அதை வைத்துப் பிழைப்பு நடத்தக் கூடியவர்களின் நிலை என்னவாகும்❓✍✍✍* 


📗📗📗அவன் பாதிக்கப்படுவான். அதேபோல யாரும் நொண்டியாக இல்லாமல் நன்றாக நடக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எவனும் காலைப் பற்றி சிந்தித்திருக்க மாட்டான். அப்படி கால் நொண்டியாக இருப்பதால் தான் அதைப் பற்றி, எலும்பை எப்படிச் சேர்ப்பது❓ என்று கண்டுபிடிக்கிறான். அதன் மூலம் ஒரு கூட்டம் பிழைப்பு நடத்துகிறது.📗📗📗


 *✍✍✍உதாரணத்திற்கு எடுத்துக் கொள்வோம். அல்லாஹ் அனைவருக்கும் ஒரு கோடி ரூபாய் தந்து விட்டான் என்று வைத்துக் கொள்வோம். நிலைமை என்னவாகும்? இந்த உலகம் ஒரு வாரம் கூட இயங்காது அழிந்து விடும். எவனும் வேலைக்குப் போகமாட்டான்.✍✍✍* 


📒📒📒இப்போதே அரசின் இலவசத் திட்டங்களால் வேலைக்குச் செல்பவர்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாகச் செய்திகள் கூறுகின்றன. எல்லோரிடமும் காசு இருந்தால் யார் வேலை செய்வார்கள்❓📒📒📒


 *✍✍✍இதை வைத்து அல்லாஹ்வை குறை கூறப் பயன்படுத்துகிறார்கள். ஆனால் இதன் மூலமாகத் தான் அல்லாஹ், ஞானமிக்கவன் எனபதை நிரூபிக்கிறான். எனவே இப்படி இருந்தால் தான் ஒருவர் மற்றவரைச் சார்ந்து இருப்பார். உதாரணத்திற்கு வியாபாரியைச் சார்ந்து மக்கள் மக்களை சார்ந்து வியாபாரிகள். நோயாளியைச் சார்ந்து மருத்துவர் மருத்துவரைச் சார்ந்து நோயாளி. இப்படித் தான் உலகம் இயங்க முடியும் அதே போல் நாம் அனைவரும் செல்வத்தை மட்டும் பாக்கியம் என்று எண்ணுகிறோம். அது மட்டும் பாக்கியமில்லை. நம் உடலில் உள்ள அனைத்து உறுப்புக்களும் சீராக இயங்குவதே ஒரு பெரிய பாக்கியமாகும்✍✍✍.* 


📓📓📓அல்லாஹ்வே இதைக் கூறிக் காட்டுகிறான்: மனிதனை அவனது இறைவன் மரியாதையுடன் வாழச் செய்து இன்பத்தை யும் வழங்கி சோதிக்கும் போது ‘என் இறைவன் என்னைக் கண்ணியமாக நடத்தினான்’ என்று கூறுகிறான். அவனது செல்வத்தை அளவுடன் வழங்கி சோதிக்கும் போது ‘என் இறைவன் என்னை அவமானப்படுத்தி விட்டான்’ எனக் கூறுகிறான்.📓📓📓


 *அல்குர்ஆன் 89:15, 16* 


 *✍✍✍இதை இன்றைக்கு மனிதன் நிதர்சனமாகக் கூறுவதைப் பார்க்கிறோம். அதேபோல் இன்றைக்கு நேர்மையாக நடப்பவர்களைப் பார்த்து பிழைக்கத் தெரியாதவன் எனறெல்லாம் கூறி கேலி செய்வதைப் பார்கிறோம். ஆனால் அந்த மறுமையில் நாம் அவர்களைக் கேலி செய்யலாம். அது தான் நிலையான இன்பம் என்பதைப் புரிந்து கொண்டால் நாம் கவலைப்பட மாட்டோம். செல்வத்தின் மீதுள்ள பேராசை நம்மை விட்டு அகன்றுவிடும். மற்றவர்களைப் பார்த்து பொறாமைப்பட மாட்டோம்✍✍✍* 
.

📔📔📔என்ன தான் கூறினாலும் பணக்காரர்கள் சொகுசாகத் தான் இருக்கிறார்கள். கார், பங்களா என்று இன்பத்தை அனுபவிக்கிறார்கள். மினரல் தண்ணீரைக் குடிக்கிறார்கள். அந்த மாதிரியான இன்பத்தை நாம் அனுபவிக்கவில்லை என்பது ஒரு குறையாகத் தான் இருக்கும். என்ன தான் நோய் நொடி இல்லாமல் இருந்தாலும் இப்படிப்பட்ட ஒரு எண்ணம் ஏழையாக வாழக்கூடிய அனைவருக்கும் வரும். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:📔📔📔


 *✍✍✍அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யாருக்கு அல்லாஹ் நன்மையை நாடுகின்றானோ அவரை சோதனைக்கு உள்ளாக்குகின்றான்✍✍✍* .

 *அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர)* 

 *நூல்: புகாரி 5645*


 ⛱⛱⛱இப்படிப்பட்ட ஒரு எண்ணம் யாருக்காவது வந்தால் அவன் செல்வம் அதிகமாக இல்லை என்று கவலைப்படமாட்டான்.⛱⛱⛱


 *✍✍✍இந்த உலகத்தில் நாம் அனுபவிக்கும் அனைத்து துன்பங்கள், வேதனை அனைத்திற்கும் அல்லாஹ் சொர்க்கத்தைப் பகரமாகத் தருகின்றான் என்ற நம்பிக்கை நமக்கு வர வேண்டும். அதே போல் நாம் செய்த அமல்கள் குறைவாக இருந்தால் அதைச் சரி செய்வதற்கு அல்லாஹ் துன்பங்களைத் தருகிறான். இதற்கு நபி (ஸல்) அவர்கள் ஒரு செய்தியைக் கூறுகிறார்கள்: நீங்கள் அனுபவிக்கும் வருத்தம், துன்பம், வேதனை அனைத்திற்கும் அல்லாஹ் சொர்க்கத்தைப் பகரமாக்குகிறான் என்று கூறினார்கள்✍✍✍.* 


🌈🌈🌈நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்மைத் தைக்கும் முள் உள்பட அவருக்கு நேரிடும் துன்பம், நோய், துக்கம், கவலை, தொல்லை, மனவேதனை ஆகிய எதுவாயினும் அதற்கு பதிலாக அவருடைய பாவங்கருந்து சிலவற்றை அல்லாஹ் மன்னிக்காமல் இருப்பதில்லை.🌈🌈🌈

 *அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர)* 

 *நூல்: புகாரி 5642* 


 *✍✍✍அல்லாஹ் மறுமையிலே கொடுக்கவிருக்கும் தண்டனையை நாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது இதுவெல்லாம் ஒரு செல்லமாகத் தட்டுவதைப் போன்று தான் என்பதை நாம் முதலில் விளங்கிக் கொள்ள வேண்டும்.✍✍✍* 


📚📚📚அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள் என்னிடம், ‘சொர்க்கவாசியான ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?’ என்று கேட்டார்கள். நான், ‘ஆம் (காட்டுங்கள்)’ என்று சொன்னேன். அவர்கள், இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தாம் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்கடம் வந்து, ‘நான் வப்பு நோயால் (அடிக்கடிப்) பாதிக்கப்படுகிறேன். அப்போது என் (உடலிருந்து ஆடை விலகி) உடல் திறந்து கொள்கின்றது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்றார். நபி (ஸல்) அவர்கள்,📚📚📚


 *✍✍✍‘நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்கு சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமக்கும்படி அல்லாஹ்விடம் நான் பிரார்த்திக்கிறேன்’ என்று சொன்னார்கள். இந்தப் பெண்மணி, ‘நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆனால், (வப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்து கொள்கிறது. அப்படித் திறந்து கொள்ளாமல் இருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்’ என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்.✍✍✍* 


 *நூல்: புகாரி 5652* 


🔴🔵⚫அப்படியானால் நமக்கு இந்த உலகத்தில் ஏற்படும் கஷ்டம், சோதனையைப் பொறுத்துக் கொண்டால் அதற்கு அல்லாஹ் கூலியை வழங்குவான் எனற நம்பிக்கையை நாம் நமது உள்ளத்தில் ஏற்றுக் கொள்ள வேண்டும். இதற்குச் சான்றாக நபி (ஸல்) அவர்கள் மற்றொரு விஷயத்தைக் கூறுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: நான் என் அடியானை, அவனது பிரியத்திற்குரிய இரு பொருட்களை(ப் பறித்து)க்கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன்.⚫🔵🔴


 *அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ர)* 

 *நூல்: புகாரி 5653* 


 *✍✍✍இந்த உலகத்தில் அல்லாஹ் தந்த செல்வங்களை நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்குக் கண் மிகவும் அவசியமாகும். கண் என்பது 50 சதவீதம் அருட்கொடையை வழங்கியுள்ளது. உதாரணத்திற்கு நாம் இந்த கண்ணிருப்பதால் தான் அதிகம் பணம் செலவு செய்கிறோம். நாம் அழகான ஆடை வாங்குகிறோம். அழகான வீட்டை வாங்குகிறோம். எல்லாப் பொருளையும் அழகானதென்று தேர்ந்தெடுத்து வாங்குவதற்குக் காரணம் இந்தக் கண். எனவே இந்த ஒரு மிகப்பெரிய பாக்கியத்தை அல்லாஹ்விற்காக நாம் இழப்பதின் காரணத்தினால் அல்லாஹ் நமக்கு சொர்க்கத்தைத் தருகிறேன் என்று கூறுகிறான். அதற்காக நாம் புலம்பக்கூடாது*✍✍✍ 
.

🔰🔰🔰அல்லாஹ்வைத் திட்டவும் கூடாது. நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நமக்குச் சுவனம் கிடைக்கும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இறை நம்பிக்கையாளரின் நிலையைக் கண்டு நான் வியப்படைகிறேன். அவரது (வாழ்வின்) அனைத்து அம்சங்களும் (அவருக்கு) நன்மையாகவே அமையும். இறை நம்பிக்கையாளருக்கு அல்லாமல் வேறெவருக்கும் இ(ந்தப் பாக்கியமான)து கிட்டுவதில்லை. அவருக்கு ஏதேனும் மகிழ்ச்சி ஏற்பட்டால், அவர் நன்றி செலுத்துகிறார். அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்கு ஏதேனும் துயரம் நேர்ந்தால், அவர் பொறுமை காக்கிறார். அதுவும் அவருக்கு நன்மையாக அமைந்துவிடுகிறது.🔰🔰🔰


 *அறிவிப்பவர்: ஸுஹைப் (ரலி) நூல்: முஸ்லிம் 5726* 


 *👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👧நல்லவர்கள்👺👺👺 நோயால் அவதியுறுவது ஏன்❓👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👧* 


 *✍✍✍ஒரு தாய்க்கு தன் மக்களிடத்தில் இருக்கும் கருணையைக் காட்டிலும் பல மடங்கு கருணையுள்ள இறைவன் மனிதர்களுக்கு நோயை வழங்குவது ஏன்? அதிலும், தீயவர்கள் பலர் நல்ல உடல் ஆரோக்கியத்துடன் வாழும் போது நல்லவர்கள் பலர் நோயால் அவதியுறு வதுடன் அதற்கு மருத்துவம் செய்யவும் உரிய வசதியின்றி வாடுவது ஏன்? என்று எனது நண்பர் ஒருவர் கேட்கிறார்.✍✍✍* 


📕📕📕 மனிதர்களுக்கு நோய் ஏற்படுவது ஒரு பாதகமான அம்சம் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் மனித வாழ்க்கையில் பாதகமான அம்சங்கள் பல உள்ளன.📕📕📕


 *✍✍✍வறுமை, அழகின்மை, உடல் வலுவின்மை, குழந்தைப் பேறு இன்மை, வலிமையானவர்களின் அடக்குமுறைகளுக்கு ஆளாகுதல், தீர்க்க முடியாத கடன், பொருத்தமில்லாத வாழ்க்கைத் துணை, தறுதலைப் பிள்ளைகள், நெருக்கமானவர்களின் மரணம், உடல் ஊனம், நினைவாற்றல் குறைவு, சிந்தனைத் திறன் குறைவு, இப்படி ஆயிரமாயிரம் பாதகங்கள் உள்ளன✍✍✍.* 


📘📘📘நீங்கள் நோயை மட்டும் பாதகமாகக் கருதுகிறீர்கள்! மேலே சுட்டிக்காட்டியது போன்ற ஏதேனும் பாதகமான அம்சங்கள் சிலவற்றைப் பெற்றே மனிதர்கள் வாழ்ந்து வருகின்றனர். எந்தப் பாதகமும் இல்லாத ஒருவரும் உலகில் கிடையாது.📘📘📘


 *✍✍✍நமக்கு இறைவன் வறுமை மற்றும் நோயைக் கொடுத்திருக்கலாம். ஆனால் செல்வமும், ஆரோக்கியமும் உள்ளவருக்கு வேறு ஏதேனும் குறைகள் இருக்கும்.* 
 *அவருக்கு பொருத்தமில்லாத மனைவியையோ, மக்களையோ இறைவன் கொடுத்திருப்பான். அல்லது வேறு ஏதேனும் குறைகளைக் கொடுத்திருப்பான்✍✍✍.* 


📙📙📙நீங்கள் நோயை நினைத்துக் கவலைப்படுவது போலவே அவர் குடும்பத்தை நினைத்துக் கவலைப்படுவார். மனதை உலுக்குகிற அழுத்தம் இல்லாததால் நீங்கள் படுத்தவுடன் தூங்கி விடுவீர்கள். நீங்கள் யாரைப் பார்த்து பொறாமைப் படுகிறீர்களோ அவரால் பஞ்சு மெத்தையிலும் தூங்க முடியாது📙📙📙
.

 *✍✍✍இந்த உலகம் சீராக இயங்க வேண்டுமானால் குறைகளையும், நிறைகளையும் பலருக்கும் பகிர்ந்து அளிக்க வேண்டும்* .
 *எல்லோருக்கும் ஆயிரம் ஏக்கர் நிலம் இருந்தால் யாரும் வேலைக்குப் போக மாட்டோம். நமது நிலத்தை நாமே உழுது பயிரிட சக்தி பெறவும் மாட்டோம். அனைவரும் சோத்துக்கு இல்லாமல் செத்து விடுவோம்✍✍✍.* 


📗📗📗எல்லோரிடமும் கோடி ரூபாய் இருந்தால் என்னவாகும் என்று கற்பனை செய்து பாருங்கள்! அனைவரும் அழிவது தான் நடக்கும்.
இதனால் தான் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான குறையையும், நிறையையும் வழங்கி இறைவன் கருணை புரிந்துள்ளான்.📗📗📗


 *✍✍✍நோயாளியைக் கொண்டு மருத்துவரின் வாழ்க்கை ஓடுகிறது. மருத்துவரின் மூலம் வியாபாரியின் வாழ்க்கை ஓடுகிறது. வியாபாரியின் மூலம் விவசாயி, மற்றும் தயாரிப்பாளர்களின் வாழ்க்கை ஓடுகிறது. இத்தகைய சங்கிலித் தொடர் மூலம் உலகம் இயங்குவதற்காகத் தான் இறைவன் இவ்வாறு செய்துள்ளான்✍✍✍.* 


📒📒📒எத்தனையோ செல்வந்தர்கள் தினம் இரண்டு இட்லி தான் சாப்பிட வேண்டும்; மாமிசம், எண்ணெய் தொடக்கூடாது என்று மருத்துவர்களால் எச்சரிக்கை செய்யப்படுகின்றனர். கோடி கோடியாக இருந்தும் வாய்க்கு ருசியாகச் சாப்பிட முடிவதில்லை.📒📒📒


 *✍✍✍கிடைக்கிற அனைத்தையும் சாப்பிடக்கூடிய நிலையில் உள்ள ஏழை, இந்த வகையில் அவனை விடச் சிறந்தவன் இல்லையா❓* 
 *இது போல் வறுமையும், நோயும் உள்ளவர்கள் தங்களிடம் உள்ள நிறைகளை எண்ணிப் பார்த்தால் நிச்சயமாக நோயற்றவர்களுக்குக் கிடைக்காத ஏதோ ஒரு வசதி, வாய்ப்பு, பாக்கியம் தங்களுக்குக் கிடைத்திருப்பதை உணருவார்கள். அப்போது இறைவன் எத்தகைய கருணைக் கடல் என்பதை சந்தேகமற அறிவார்கள்✍✍✍.* 


 *🔴🕋🔵மரணத்தைத் தழுவிய மாமன்னர் சுலைமான்🌐🕋⚫* 


*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம் 54*

தம்பதியரின் *கடமைகள்

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

       *🔥 இஸ்லாமிய 🔥*
                          ⤵
                *🔥 ஒழுங்குகள் 🔥*

          *✍🏻...


*☄ திருமணத்தின்*
                 *ஒழுங்குகள் [ 16 ] ☄*

*☄தம்பதியரின்*
                   *கடமைகள் { 01 }*

حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ، وَمُوسَى بْنُ حِزَامٍ، قَالاَ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ عَلِيٍّ، عَنْ زَائِدَةَ، عَنْ مَيْسَرَةَ الأَشْجَعِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، *عَنْ أَبِي هُرَيْرَةَ ـ رضى الله عنه ـ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏‏ اسْتَوْصُوا بِالنِّسَاءِ، فَإِنَّ الْمَرْأَةَ خُلِقَتْ مِنْ ضِلَعٍ، وَإِنَّ أَعْوَجَ شَىْءٍ فِي الضِّلَعِ أَعْلاَهُ، فَإِنْ ذَهَبْتَ تُقِيمُهُ كَسَرْتَهُ، وَإِنْ تَرَكْتَهُ لَمْ يَزَلْ أَعْوَجَ، فَاسْتَوْصُوا بِالنِّسَاءِ ‏"*

_*🍃பெண்கள் வளைந்த எலும்பு போன்றவர்கள். அதனை நிமிர்த்த முயன்றால் அதனை உடைத்து விடுவாய். அந்த வளைவு இருக்கும் நிலையிலேயே அவளை விட்டு விட்டால் அவளிடம் இன்பம் பெறுவாய் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
               *அபூஹுரைரா (ரலி)*

*📚நூல்: புகாரி 3331, 5184, 5186*

وَحَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ مُوسَى الرَّازِيُّ، حَدَّثَنَا عِيسَى، - يَعْنِي ابْنَ يُونُسَ - حَدَّثَنَا عَبْدُ الْحَمِيدِ بْنُ جَعْفَرٍ، عَنْ عِمْرَانَ بْنِ أَبِي أَنَسٍ، عَنْ عُمَرَ بْنِ الْحَكَمِ، *عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله عليه وسلم ‏‏ لاَ يَفْرَكْ مُؤْمِنٌ مُؤْمِنَةً إِنْ كَرِهَ مِنْهَا خُلُقًا رَضِيَ مِنْهَا آخَرَ ‏"‏ ‏.‏ أَوْ قَالَ ‏"‏ غَيْرَهُ ‏"‏ ‏.‏"*

_*🍃இறை நம்பிக்கையுள்ள ஒரு ஆண் இறை நம்பிக்கையுள்ள தன் மனைவியை வெறுத்து விட வேண்டாம். அவளது ஒரு குணத்தை அவன் வெறுத்தால் அவன் விரும்பக் கூடிய வேறொரு குணத்தை அவளிடம் அவன் காணலாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙 அறிவிப்பவர்:*
                *அபூஹுரைரா (ரலி).*

*📚 நூல்கள்: முஸ்லிம் 2672📚*

1195 – حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ الْعَلاَءِ حَدَّثَنَا عَبْدَةُ بْنُ سُلَيْمَانَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو حَدَّثَنَا أَبُو سَلَمَةَ *عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- « أَكْمَلُ الْمُؤْمِنِينَ إِيمَانًا أَحْسَنُهُمْ خُلُقًا وَخِيَارُكُمْ خِيَارُكُمْ لِنِسَائِهِمْ خُلُقًا »*

_*🍃நல்ல குணம் கொண்டவர்களே இறை நம்பிக்கையில் முழுமை பெற்றவர்களாவர். உங்களில் சிறந்தவர்கள் தங்கள் மனைவியரிடம் நல்லபடி நடந்து கொள்பவர்களே என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙 அறிவிப்பவர்:*
                *அபூஹுரைரா (ரலி)*

*📚 நூல்கள்: அஹ்மத் 7095,*
                              *திர்மிதீ 1082*

_*🍃பெண்களை நல்ல முறையில் நடத்துங்கள். அவர்கள் உங்களிடம் அடைக்கலமாக உள்ளவர்கள். அதைத் தவிர அவர்களிடம் உங்களுக்கு வேறு எந்த உரிமையும் இல்லை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
            *அம்ரு பின்*
                   *அஹ்வஸ் (ரலி)*, 

*📚 நூல்: திர்மிதீ 1083 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
                            ⤵⤵⤵
                          *✍🏼..

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

மவ்லூது குறித்த மடமைகளுக்கு, ஏகத்துவத்தின் பதிலடி!*

*மவ்லூது குறித்த மடமைகளுக்கு, ஏகத்துவத்தின் பதிலடி!*

1980 களுக்கு முன்னால் தமிழ்பேசும் முஸ்லிம்களின் அறியாமையை பயன்படுத்தி மவ்லிது எனும் இணைவைப்பு பாடலை பாடி பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தது ஒரு கூட்டம்.

அப்போது சுடர் விட்ட ஏகத்துவ தொடர் பிரச்சாரத்தின் விளைவால் இந்த பித்தலாட்டங்கள் வெளிச்சத்திற்கு கொண்டுவரப்பட்டது.

*மவ்லிது என்பது அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதரும் காட்டித்தந்த வணக்கம் அல்ல.*

அது இஸ்லாத்தை அழித்தொழிக்கும் இணைவைப்பு பாடல் என்பதை மக்கள் அறிந்துக் கொண்டனர். அதிலிருந்து விலகத் தொடங்கினர்

*மவ்லிது வியாபாரம் சரிந்தது*

தற்போது, விழிப்புடன் இருக்கும் மக்களிடத்தில் மவ்லிதின் மகத்துவத்தை(?) கொண்டு சேர்க்க பல முயற்சிகளை கையாண்டு வருகின்றனர்.

அதில், ஒன்று ஸஹாபாக்களின் பெயராலும், முந்தைய அறிஞர்களின் பெயராலும் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை மக்களிடத்தில் உண்மை போல் கொண்டு செல்கின்றனர்.

நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை ஒதுவதற்காக யார் ஒரு திர்ஹத்தை செலவிடுகிறாரோ அவர் சுவனத்தில் எனது தோழராக இருப்பார் என்று அபூபக்ர்(ரலி) அவர்கள் கூறினார்கள்.

யார் நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை கண்ணியப்படுத்துகிறாரோ அவரே இஸ்லாத்தை உயிர்ப்பித்தவர் ஆவார் என்று உமர்(ரலி) கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை ஒதுவதற்காக யார் ஒரு திர்ஹத்தை செலவிடுகிறாரோ அவர் பத்ரு மற்றும் ஹுனைன் யுத்தங்களில் கலந்துக் கொண்டவர் போலாவார் என உஸ்மான்(ரலி) கூறினார்கள்.

நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை கன்னியப்படுத்தியவரும், அது ஒதப்படுவதற்கு காரணமாக திகழ்ந்தவரும் ஈமானுடனே மரணிப்பார். மேலும் விசாரணை எதுவுமின்றி சுவனத்தில் நுழைவார் என்று அலீ(ரலி) அவர்கள் கூறினார்கள்.

இவ்வாறு நான்கு கலீஃபாக்கள் மவ்லிதை பற்றி கூறிவிட்டார்கள் என்று தற்போது மவ்லிதை தூக்கி பிடிப்பவர்கள் பரப்பிவருகின்றனர்.

இந்த செய்திகளின் தரத்தைப் பற்றி பார்ப்பதற்கு முன்னால், இமாம் கதீப் மற்றும் கஸ்ஸாலி காலத்தில் எழுதப்பட்டது என்று சொல்லப்படும் மவ்லிது எவ்வாறு ஸஹாபாக்கள் காலத்திற்கு சென்றது என்று கேட்க விரும்புகிறோம்.

மேலும், சுவனத்திற்கு நற்சான்று வழங்க நபித்தோழர்களுக்கு அதிகாரம் இருக்கிறதா?

அது அல்லாஹ்விற்கு மட்டும் இருக்ககூடிய அதிகாரம். அதில் ஸஹாபாக்களை கூட்டாக்குகின்றனர்.

ஒரு இணைவைப்பை நியாயப்படுத்த இன்னொரு இணைவைப்பை அறிமுகப்படுத்துகின்றனர்.

மேலும், இந்த செய்திகளை உண்மையில் ஸஹாபாக்கள்தான் கூறினார்களா என்று பார்த்தால் அதுவும் இல்லை.

இப்னு ஹஜர் அல்ஹைதமீ (இவர் இப்னு ஹஜர் அஸ்கலானீ இல்லை) என்பவர் தனது அந்நிஃமத்துல் குப்ரா எனும் புத்தகத்தில் (பக்கம் 6 ல்) இந்த செய்திகளை கொண்டு வந்துள்ளார்.

இவர் ஹிஜ்ரி 909 ல் பிறந்து 974 ல் மரணித்தவர். எல்லா அனாச்சாரங்களையும் நியாயப்படுத்தி பரேலவிச கொள்கைக்கு வழிகாட்டியாக திகழ்ந்தவர் இவரே.

பிற்காலத்தில் வாழ்ந்த் ஒருவர் முற்காலத்தில் வாழ்ந்தவர்களின் செய்தியை கொண்டு வருகிறார் எனில் அது எந்த மூல நூலிலிருந்து எடுக்கப்பட்டது என்று தெளிவுப்படுத்த வேண்டும். அல்லது அதற்கான அறிவிப்பாளர் தொடரை கொண்டு வர வேண்டும்.

அவ்வாறு எதுவும் செய்யாமல் வெறுமனே இந்த செய்திகளை மாத்திரம் கொண்டு வந்துள்ளார்.

இந்த நூல் அல்லாத வேறு எந்த மூல ஹதீஸ் நூல்களிலும் இந்த செய்தி இடம்பெறவில்லை.

ஸஹாபாக்கள் காலத்திற்கு பல நூறாண்டிற்கு பிறகு வந்தவருககு எப்படி இந்த செய்தி கிடைத்தது என்று எந்த சான்றும் இல்லை.

இவ்வாறு அறிவிப்பாளர் தொடரும், ஆதாரமும் இல்லாத முழுக்க முழுக்க புனையப்பட்ட இட்டுக்கட்டப்பட்ட செய்திகளாகவே இவை உள்ளது.

ஸஹாபாக்களை நஜாத்காரர்கள் அவமதிக்கிறார்கள். நாங்கள்தான் அவர்களை பெரிதும் மதிக்கின்றோம் என்று மவ்லிது ஆதரவாளர்கள் சொல்லிக்கொண்டு ஸஹாபாக்கள் மீது இட்டுக்கட்டப்பட்ட செய்தியை பிரச்சாரம் செய்து தங்களின் மதிப்பை(?) வெளிப்படுத்துகின்றனர்.

இமாம்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை பாருங்கள்.

உஹது மலை அளவுக்கு தங்கம் என்னிடம் இருந்தால் அதை நபி(ஸல்) அவர்களின் மவ்லிதை ஒதுவதற்காக செலவிட ஆசைபடுகிறேன் என்று ஹஸன் அல்பஸரீ அவர்கள் கூறினார்கள்.

யார் மவ்லிது ஓதி, அதை மகத்துவப்படுத்தவதற்காக உணவை தயார்செய்து, தன் சகாக்களை ஒன்றினைத்து, விளக்கேற்றி, புத்தாடை அணிகிறாரோ அவரை அல்லாஹ் மறுமை நாளில் முதல் பிரிவினரான நபிமார்களுடன் சேர்ப்பான். மேலும் உயர் பதவிகளிலும் அவர் இருப்பார் என்று மஃரூஃப் அல்கர்கீ அவர்கள் கூறினார்கள்.

யார் நபியவர்களின் மவ்லிதை ஓதுவதற்காக தன் சகாக்களை ஒன்றினைத்து, உணவை தயாரித்து, தனிமையில் நற்காரியம் புரிகின்றாரோ அவரை அல்லாஹ் மறுமைநாளில் உண்மையாளர்கள், உயிர்தியாகிகள், நல்லோர் ஆகியோருடன் எழுப்புவான். அவர் இன்பமயமான சுவனத்தில் இருப்பார் என்று இமாம் ஷாஃபீ கூறினார்கள்.

ஒருவர் மவ்லிது ஓதுவதற்காக ஒரு இடத்தை தேர்வு செய்கிறார் எனில் அவர் சுவனத்தின் தோட்டத்தின் தேர்வு செய்தவராவார். ஏனெனில், அவர் நபி மீதுள்ள பிரியத்தினாலே அந்த இடத்தை தேர்வு செய்தார் என்று ஸிர்ரியுஸ் ஸிக்த்தி என்பவர் கூறினார்.

மவ்லிது ஓதப்படும் இடத்தினை வானவர்கள் சூழ்ந்து கொள்கின்றனர். அவ்விடத்தில் உள்ளவர்கள் மீது ஸலாவாத் கூறுகின்றனர். அல்லாஹ் தனது திருப்பொருத்தம் மற்றும் அருளைக் கொண்டு அவ்விடத்தை சூழ்ந்துகொள்கின்றான். மேலும், எந்த முஸ்லிமின் இல்லத்தில் மௌலிது ஓதப்படுகிறதோ அந்த இல்லத்தை தீயால் எரிதல் மற்றும் அனைத்து வகை சோதனைகள் கஷ்டங்களை விட்டும் அல்லாஹ் பாதுகாக்கிறான். அவ்வீட்டில் உள்ளவர்கள் மரணமடைந்தால் கூட அவர்களின் கப்ரு விசாரணை லேசாக்கப்படும் என்று இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தீ கூறினார்.

ஒருவர் உணவு பதார்த்தங்களை வைத்து மவ்லிது ஒதுகிறார் எனில் அந்த உணவிலும் அனைத்து பொருளிலும் பரக்கத் ஏற்படும். அதை யார் உண்ணுகிறாரோ அவருக்கு அல்லாஹ் மன்னப்பு வழங்குகிறான். தண்ணீர் வைத்து மவ்லிது ஒதப்பட்டு யார் அந்த தண்ணீரை பருகிறாரோ அவரின் உள்ளத்தில் ஆயிரம் வகையான ஒளியும் அருளும் நுழைகிறது. மேலும் ஆயிரம் வகையான நோய் அவரைவிட்டு வெளியேறுகிறது. தங்கம் அல்லது வெள்ளியினாலான நாணயத்தின் மீது மவ்லிது ஒதி அந்நாணயத்தை மற்ற நாணங்களுடன் கலந்து வைத்தால் நபியினுடைய பரக்கத் அதில் இறங்குகிறது. வறுமை அவரை அணுகாது என்று இமாம் ஃபக்ருத்தீன் ராஸீ கூறினார்.

இவையும் அந்த அந்நிஃமத்துல் குப்ரா எனும் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் செய்திகளாகும்.

நபி மீது இட்டுகட்டி நபித்தோழர்கள் மீது இட்டுக்கட்டியவர்கள் சாதாரண அறிஞர்கள் மீது இட்டுக்கட்ட தயங்குவார்களா என்ன?

இவை அனைத்தும் அவர்களின் மீது இட்டுக்கட்டப்பட்ட பெரும் பொய்களாகவே உள்ளது.

ஏனெனில், இந்த செய்திகளை தனது புத்தகத்தில் கொண்டு வந்திருக்கும் இமாம் இப்னு ஹஜர் ஹைதமீ அவர்கள் மிகவும் பிற்காலத்தில் வாழ்ந்தவர்.

ஆனால் இவர் குறிப்பிட்டிருக்கும் இமாம்களில் நான்கு பேர் இவரை விட பல நூற்றாண்டுகள் முந்தி வாழ்ந்துள்ளனர்.

1. இமாம் ஹஸன் அல்பஸரீ ஹிஜ்ரி 110 ல் மரணித்தார்.

2. இமாம் மஃரூஃப் அல்கர்கீ ஹிஜ்ரி 200 ல் மரணித்தார்.

3. இமாம் ஷாஃபீ ஹிஜ்ரி 204 ல் மரணித்தார்.

4. இமாம் ஸிர்ரியுஸ் ஸிக்த்தீ ஹிஜ்ரி 251 ல் மரணித்தார்.

5. இமாம் ஃபக்ருத்தீன் ராஸீ ஹிஜ்ரி 606 ல் மரணித்தார்

6. இமாம் ஜலாலுத்தீன் சுயூத்தீ ஹிஜ்ரி 911 ல் மரணித்தார்

இவர் குறிப்பிட்ட அனைத்து இமாம்களுமே இவரை விட பல ஆண்டுகள் முந்தியவர்கள்.

இமாம் சுயூத்தீயினுடைய மரணம் இவருடைய வாழ்வுக்கு ஓரளவு நெருக்கமாக இருப்பது போன்று தெரிந்தாலும் இவர் இரண்டு வயதாக இருக்கும்போதே அவர் மரணித்துவிட்டார்.

இவர் அவர் சொன்ன கருத்தை குழந்தை பருவத்திலேயே கேட்டு புத்தகத்தில் பதிவு செய்துக்கொண்டார்(!) என்று சொன்னாலும் சொல்வார்கள் இந்த மவ்லிது பக்தர்கள்!

நாம் ஏற்கனவே கேட்டது போல் இவரை விட பல்லாண்டுகள் முந்தி வாழ்ந்த இமாம்களின் கருத்தை இவர் எங்கிருந்து பெற்றார்?

அதற்கான சான்று என்ன?

இவர்களில் பெரும்பான்மையானவர்கள் பல நூல்கள் எழுதியுள்ளார்கள். அத்தகைய எந்த புத்தகத்திலும் அவர்கள் இந்த கருத்தினை பதிவுசெய்யவில்லையே!

அவர்கள் பதிவு செய்யாத கருத்து பல நூற்றாண்டுகள் கழித்து இவருக்கு எங்கிருந்து கிடைத்தது?

இப்படி எந்த குறிப்பும் இல்லாமல் இந்த செய்திகள் புனையப்பட்ட ஜோடிக்கப்பட்ட செய்திகளாகவே உள்ளது.

ஒரு கருத்தை பிந்திவந்தவர்கள் சொன்னால் மக்கள் ஏற்றுக் கொள்ள மறுப்பார்கள். எனவே, மக்கள் பெரிதும் நேசிக்கும் ஸஹாபாக்களின் பெயராலும், மக்களுக்கு மத்தியில் அதிகம் பிரபல்யமாக இருக்கும் இமாம்களின் பெயராலும் சொன்னால் ஓரளவு மக்கள் கேட்பார்கள் என்பதற்காகவே இந்த செய்திகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த செய்திகளின் தரம் என்னவென்று தெரிந்தும் மக்களை மடையர்களாக்கும் நோக்கில் சுன்னத் ஜமாஅத் என்ற பெயரால் இயங்குபவர்கள் பரப்பி வருகின்றனர்.

ஆதாரமற்ற தங்களின் கருத்தை மக்களுக்கு மத்தியில் திணிக்க வேண்டும் என்பதற்காக ஸஹாபாக்கள் மீதும், இமாம்களின் மீதும், ஏன் நபியின் மீதும் கூட இட்டுக்கட்ட இவர்கள் தயங்க மாட்டார்கள் என்பதற்கும் இட்டுகட்டபட்ட செய்திகளை பரப்பி அவர்களை அவமதிக்கவும் தயங்க மாட்டார்கள் என்பதற்குமான பல சான்றுகளில் இதுவும் ஒரு சான்றாகும்.

"என்மீது யார் பொய்சொல்வாரோ அவர் நரகத்தில் தமது இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்'' என நபி (ஸல்) அவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பவர் ஜூபைர் ரலி
நூல் : புகாரி 107

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
நான் கூறாத ஒன்றை நான் கூறியதாக 
யார் கூறுவாரோ அவர் நரகத்தில் தன் இருப்பிடத்தை அமைத்துக்கொள்ளட்டும்.
இதை சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல் : புகாரி 109

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம்

▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
_என்றும் இறைப்பணியில்..._
*தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்*
www.onlinetntj.com
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬

Tuesday, October 29, 2019

திருமணத்திil தவிர்க்கப்பட வேண்டியவை

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

       *🔥 இஸ்லாமிய 🔥*
                          ⤵
                *🔥 ஒழுங்குகள் 🔥*

          *✍🏻....


*☄ திருமணத்தின்*
                 *ஒழுங்குகள் [ 15 ] ☄*

*☄தவிர்க்கப்பட வேண்டியவை*

*🏮🍂திருமணத்தின் போது பல்வேறு சடங்குகள் முஸ்லிம் சமுதாயத்தில் பரவலாகக் காணப்படுகின்றன. இஸ்லாத்திற்கும் அந்த சடங்குகளுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை. எனவே அது போன்ற சடங்குகளைத் தவிர்க்க வேண்டும்.*

*☄தாலி கட்டுதல் – கருகமணி கட்டுதல்*

*☄ஆரத்தி எடுத்தல்*

*☄குலவையிடுதல்*

*☄திருமணம் முடிந்ததும் மாப்பிள்ளையைக் கட்டியணைத்து வாழ்த்துதல்*

*☄ஆண்களும் பெண்களுமாக மணமக்களைக் கேலி செய்தல்*

*☄வாழை மரம் நடுதல்*

*☄மாப்பிள்ளை ஊர்வலம் ஆடல், பாடல், கச்சேரிகள் நடத்துதல்*

*☄பெண் வீட்டாரிடம் திருமணத்திற்குப் பின் பல சந்தர்ப்பங்களில் சீர் வரிசை என்ற பெயரில் கேட்டு வாங்குவது.*

*☄முதல் குழந்தைக்கு நகை செய்து போடுமாறு பெண் வீட்டாரைக் கட்டாயப்படுத்துதல்.*

*☄தலைப்பிரசவச் செலவை பெண் வீட்டார் தலையில் சுமத்துவது. பல்வேறு காரணங்களை காட்டி பல்வேறு சந்தர்ப்பங்களில் பெண் வீட்டாரிடம் விருந்துகளைக் கேட்பது.*

*🏮🍂பிற மதத்தவர்களிடமிருந்து காப்பியடிக்கப்பட்ட இந்தக் கொடுமைகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும்.*

حدثنا عثمان بن أبي شيبة حدثنا أبو النضر حدثنا عبد الرحمن بن ثابت حدثنا حسان بن عطية عن أبي منيب الجرشي *عن ابن عمر قال قال رسول الله صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم*

_*🍃யார் பிற சமயக் கலாச்சாரத்தை பின்பற்றி நடக்கின்றாரோ அவரும் அவர்களைச் சேர்ந்தவர் என்பது நபிமொழி.*_

*📚 நூல்: அபூதாவூத் 3512 📚*
 
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

     *☄அன்பளிப்பு மொய்☄*

*🏮🍂திருமணத்தின் போதும், மற்ற சமயங்களிலும் உற்றாரிடமிருந்தும், நண்பர்களிடமிருந்தும் அன்பளிப்புப் பெறுவது இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்டதாகும்.*

_*🍃ஒருவருக்கு அவரது சகோதரர்களிடமிருந்து நல்ல பொருள் ஏதேனும் அவர் கேட்காமலும், எதிர்பார்க்காமலும் கிடைக்குமேயானால் அதை மறுக்காமல் ஏற்றுக் கொள்ளவும். ஏனெனில் அது அல்லாஹ் அவருக்கு வழங்கிய பாக்கியமாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
            *காலித் பின் அதீ (ரலி)*

*📚நூல்: புகாரி 1380, 6630📚*

*🏮🍂அன்பளிப்புகளை மறுக்கலாகாது என்பதை இந்த ஹதீஸ் கூறுகிறது. மொய் என்றும் ஸலாமீ என்றும் கூறப்படும் போலித்தன மான அன்பளிப்புகள் கண்டிப்பாகத் தவிர்க்கப்பட வேண்டும். ஒரு பொருளைக் கொடுத்து விட்டு தங்களுக்கு அது திரும்பக் கிடைக்கும் என்ற எண்ணத்திலேயே மொய் என்பது அமைந்துள்ளது.*

_கொடுத்து விட்டு திரும்பிப் பெற எண்ணும் போது அது அன்பளிப்பாகாது._

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكُ بْنُ أَنَسٍ، عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ، عَنْ أَبِيهِ، *قَالَ: سَمِعْتُ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: حَمَلْتُ عَلَى فَرَسٍ فِي سَبِيلِ اللَّهِ، فَأَضَاعَهُ الَّذِي كَانَ عِنْدَهُ، فَأَرَدْتُ أَنْ أَشْتَرِيَهُ وَظَنَنْتُ أَنَّهُ يَبِيعُهُ بِرُخْصٍ، فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لاَ تَشْتَرِي، وَلاَ تَعُدْ فِي صَدَقَتِكَ، وَإِنْ أَعْطَاكَهُ بِدِرْهَمٍ، فَإِنَّ العَائِدَ فِي صَدَقَتهِ كَالعَائِدِ فِي قَيْئِهِ»*

_*🍃அன்பளிப்புச் செய்து விட்டு அதைத் திரும்ப எதிர்பார்ப்பவன் வாந்தி எடுத்துவிட்டு அதையே திரும்ப சாப்பிடுபவனைப் போன்றவன் என்பது நபிமொழி.*_

*🎙அறிவிப்பவர்:*
            *இப்னு அப்பாஸ் (ரலி)*

*📚நூல்: புகாரி 1490, 2589, 2621, 2623, 3003, 6975📚*

*🏮🍂இந்த வெறுக்கத் தக்க போலி அன்பளிப்புகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        
                            ⤵⤵⤵
                          *✍🏼...

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

பெண்களுக்கான - 9

*🌹🌹🌹மீள் பதிவு🌹🌹🌹* 

*🧕🧕🧕பெண்களுக்கான நபிவழிச் சட்டங்கள் பெண்களுக்கு மட்டுமே 🧕🧕🧕*


            *பாகம் 9* 


 *👉👉👉இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்👈👈👈* 

 *📚📚📚அல்குர்ஆன் மற்றும் ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇👇👇*

 *இத்தா*

சில முஸ்லிம்கள் கணவன் இறந்துவிடும் போது மனைவியாக இருந்தவளை இத்தா என்ற பெயரில் நான்கு மாதம் பத்து நாட்கள் இருட்டறையில் அடைத்து கொடுமைப்படுத்துகின்றனர். மேலும் வெள்ளைநிற ஆடையை அணிவிக்கின்றனர்.

 நற்காரியங்களில் அவர்கள் வருவது அபசகுணம் என்று கூறி ஒதுக்கி வைக்கின்றனர். இது குற்றமாகும். இத்தா பற்றிய சரியான விளக்கம் இல்லாததே இதற்குக் காரணம். எனவே அது பற்றிய விபரங்களை காண்போம். 

 *கணவனை இழந்த பெண்களும்,*

 கணவனால் விவாகரத்து செய்யப்பட்ட பெண்களும் குறிப்பிட்ட காலம் வரை மறுமணம் செய்வதைத் தள்ளிப் போட வேண்டும். மேலும் திருமண ஆசையைத் தூண்டக்கூடிய அலங்காரங்களை செய்யக்கூடாது. இந்த கால கட்டமே இத்தா எனப்படும். 

கணவனை இழந்த பெண் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் கழிப்பதற்குள் மறுமணம் செய்யக் கூடாது. விவாகரத்து செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாத விடாய் காலம் முழுமை அடைவதற்குள் மறுமணம் செய்யக் கூடாது. கணவனை இழந்த பெண்கள் கர்ப்பமாக இருந்தால் பிரசவிக்கும் வரையிலும், அவர்கள் மறுமணம் செய்யக்கூடாது. 
உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு மரணித்தால் நான்கு மாதங்களும் பத்து நாட்களும் (மறுமணம் செய்யாமல்) அப்பெண்கள் காத்திருக்க வேண்டும். அந்தக் காலக்கெடுவை நிறைவு செய்து விட்டால் அவர்கள் தம் விஷயமாக நல்ல முறையில் முடிவு செய்வதில் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை. அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிந்தவன்.

 *அல்குர்ஆன் (2 : 234)* 

விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்க் காலம் (மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும். அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்பி இருந்தால் தமது கருவறைகளில் அல்லாஹ் படைத்திருப்பதை மறைப்பதற்கு அவர்களுக்கு அனுமதி இல்லை.

 *அல்குர்ஆன் (2 : 228)* 

கர்ப்பிணிகளின் காலக் கெடு 
அவர்கள் பிரசவிப்பதாகும்.

 *அல்குர்ஆன் (65 : 4)* 

கணவனை இழந்த பெண்கள் நான்கு மாதம் பத்து நாட்கள் மறுமணம் செய்யாமல் காத்திருக்க வேண்டும் என்று *2:234* வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

 அந்தக் காலக்கெடுவிலிலி-ருந்து கர்ப்பினிப் பெண்கள் விதிவிலக்குப் பெறுகிறார்கள் என்பதை மேலுள்ள வசனத்திலிலி-ருந்து அறியலாம்.

கணவன் மரணிக்கும் போது மனைவி நிறைமாத கர்ப்பினியாக இருந்து, கணவன் இறந்த அன்றே பிரசவித்து விட்டால் அவளுக்கு இத்தா ஏதும் . கணவன் மரணிக்கும் போது முதல் மாதக் கருவை மனைவி சுமந்திருந்தால் அவள் பிரசவிக்கும் வரை மறுமணம் செய்யக் கூடாது. இதற்கு எட்டு அல்லது ஒன்பது மாதங்கள் ஆகலாம்.
இத்தாவின் போது 
அலங்கரித்தல் கூடாது
இத்தா இருக்கும் பெண்கள் நறுமணம் பூசுதல் கண்களுக்கு சுர்மா இடுதல் கலர் ஆடைகளை அணியுதல் மருதாணி பூசுதல் போன்ற அலங்காரங்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும். தலைக்கு எண்ணெய் தேய்த்து உடலையும் கூந்தலையும் தூய்மையாக வைத்துக்கொள்வதில் தவறில்லை. கூடுதலான அலங்காரங்களையும் ஒப்பனைப் பொருட்களையும் அதாவது மேக்கப் காலைபொருட்களை தவிர்த்துக்கொள்ள வேண்டும்.  

இறந்து விட்டவர்களுக்காக மூன்று நாட்களுக்கு மேல் (அலங்காரம், நறுமணம் உள்ளிட்டவற்றைக் கைவிட்டு) துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென நாங்கள் (நபியவர்களால்) தடைவிதிக்கப்பட்டோம். ஆனால் (கணவருக்காக அவர் இறந்தபின் அவருடைய) மனைவி நான்கு மாதம் பத்து நாட்கள் (துக்கம் கடைபிடிப்பதைத்) தவிர! (அதாவது இந்த நாட்கüல்) நாங்கள் (கண்ணில்) அஞ்சனம் தீட்டவோ, நறுமணம் பூசவோ சாயமிட்ட ஆடைகளை அணிவதோ கூடாது.

 ஆனால் நெய்வதற்கு முன் நூ-ல் சாயமிடப்பட்ட  (அஸ்ப் எனும்) ஆடையைத் தவிர! (அதை அணிந்துகொள்ளலாம்.)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : கணவனை இழந்தப் பெண் குங்குமப்பூச் சாயம் பூசப்பட்ட ஆடை மற்றும் சிவப்பு நிற ஆடையை அணியக்கூடாது. இன்னும் அவள் மருதாணி பூசக்கூடாது. அஞ்சனம் ( சுர்மா) இடுவதும் கூடாது. 

 *அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி)* 
 *நூல் : நஸயீ (3479)* 

 *இத்தாவின் போது வெளியில் செல்லலாமா?* 

இத்தா இருக்கும் பெண்கள் வெளியில் செல்லக்கூடாது என்று பலர் நினைக்கிறார்கள். இக்காலக்கட்டத்தில் அவர்களை இருட்டறையில் அடைத்துக் கொடுமைப் படுத்துகிறார்கள்.

 இஸ்லாம் இவ்வாறு செய்ய வேண்டும் என்று கூறவில்லை. மற்றப் பெண்களைப் போல் இத்தாவில் இருக்கும் பெண்கள் தாராளமாக வெளியில் சென்று தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளலாம். ஆனால் வீணாக ஊர் சுத்துவது கூடாது. 
என் தாயின் சகோதரி மணவிலக்குச் செய்யப்பட்டார். அவர் ("இத்தா'வில் இருந்தபோது) தமது பேரீச்ச மரத்தின் கனிகளைப் பறிக்க விரும்பினார். (இத்தருணத்தில்) நீ வெளியே செல்லக் கூடாதென அவரை ஒருவர் கண்டித்தார். ஆகவே, என் தாயின் சகோதரி, நபி (ஸல்) அவர்களிடம் வந்(து, அது குறித்துத் தெரிவித்)தபோது நபி (ஸல்) அவர்கள், "ஆம்; நீ (சென்று) உமது போரீச்ச மரத்தின் கனிகளைப் பறித்துக்கொள். ஏனெனில், (அதில் கிடைக்கும் வருமானத்தில்) நீ தர்மம் செய்யக் கூடும்; அல்லது ஏதேனும் நல்லறம் புரியக் கூடும்'' என்றார்கள்.

 *அறிவிப்பவர் : ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)* 
 *நூல் : முஸ்லிம் (2972* )

 *ஜீவனாம்சம்* 

விவாகரத்துக்குப் பின் மவைவிக்கு மாதந்தோறும் ஜீவனாம்சம் கொடுப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை.

 பெண்களுக்கு அநீதி இழைப்பதற்காக அல்ல. மாறாக அவர்களுக்கு நன்மை செய்யவும், இதைவிடச் சிறந்த ஏற்பாட்டைச் செய்யவுமே இதை நிராகரிக்கின்றது.

பெண்களுக்கு இரண்டு வகையான பாதுகாப்பை இஸ்லாம் ஏற்படுத்துகின்றது. ஒன்று திருமணத்தின் போது கணிசமான தொகையை மஹராகப் பெற்று அவள் தனது பொறுப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்

இரண்டாவதாக விவாகரத்துச் செய்தவுடன் கணவனின் பொருளாதார வசதியைக் கவனித்து ஒரு பெருந்தொகையை, சொத்தை ஜமாஅத்தினர், அல்லது இஸ்லாமிய அரசு அவளுக்குப் பெற்றுத் தர வேண்டும்.

 *திருக்குர்ஆன் 2:241*

 வசனம் இதைத் தான் கூறுகிறது. 
விவாக ரத்துச் செய்யப்பட்ட பெண்களுக்கு நல்ல முறையில் வசதிகள் அளிக்கப்பட வேண்டும். (இறைவனை) அஞ்சுவோருக்கு இது கடமை.

 *அல்குர்ஆன் (2 : 241)* 

இவ்வசனத்தின் ஒவ்வொரு சொல்லும் ஆழமாகக் கவனத்தில் கொள்ளப்பட வேண்டிததாகும்.
ஆயினும் முஸ்-லிம்களில் பலர் இத்தா காலத்துக்கு, அதாவது, மூன்று மாத காலத்துக்கு அவளுக்கு ஜீவனாம்சம் வழங்குவதையே *2:241* வசனம் குறிக்கிறது என்று நினைக்கின்றனர்.

இதை " *இத்தா* காலத்தில்' என்று எளிதாகச் சொல்-லியிருக்கலாம். இறைவன் அவ்வாறு கூறாமல் "அழகிய முறையில்' "நியாயமான முறையில்' என்று கூறுகிறான்.
ஒரு பெண்ணுடன் வாழ்ந்து
அவர்களைத் தீண்டாத நிலையிலோ, அவர்களுக்கென மஹர் தொகையை முடிவு செய்யாத நிலையிலோ விவாக ரத்துச் செய்வது உங்களுக்குக் குற்றமில்லை. வசதி உள்ளவர் அவருக்குத் தக்கவாறும் ஏழை தமக்குத் தக்கவாறும் சிறந்த முறையில் அவர்களுக்கு வசதிகள் அளியுங்கள்! இது நன்மை செய்வோர் மீது கடமை.

 *அல்குர்ஆன் (2 : 236)* 

விவாகரத்துச் செய்பவன் வசதியுள்ளவன் என்றால் அவனது வசதிக்கேற்ப கோடிகளைப் பெற்றுத் தரும் பொறுப்பு ஜமாஅத்துகளுக்கு உண்டு. சில ஆயிரங்கள் தான் அவனால் கொடுக்க இயலும் என்றால் அதைப் பெற்றுத் தர வேண்டும். இறைவனை அஞ்சுவோருக்கு இது கட்டாயக் கடமையாகும்.
விவாகரத்துக்குப் பின் பெண் வீட்டாரிடமிருந்து கணவன் வீட்டார் வாங்கிய வரதட்சணையை மட்டும் தான் ஜமாஅத்தினர் பெற்றுத் தருகிறார்கள். அது உண்மையில் அவளுக்குச் சேர வேண்டியது.

 விவாகரத்துக்காக எதையும் வாங்கிக் கொடுப்பதில்லை.
 *திருக்குர்ஆன் 65:6* வசனத்தில் கர்ப்பிணிகளாக இருந்தால் பிரசவிக்கும் வரை செலவு செய்யுமாறு கூறப்பட்டுள்ளது. இதனால் இத்தா காலம் வரை தான் ஏதும் கொடுக்க வேண்டும் என்று நினைக்கக் கூடாது. 

அவனது கருவை அவள் சுமந்திருப்பதால் அதற்காக மேலதிகமாக அவன் செய்ய வேண்டிய செலவைத் தான் அவ்வசனம் கூறுகிறது. அதைக் காரணம் காட்டி இவ்வசனத்தில்

 *(திருக்குர்ஆன் 2:241)* 

கூறப்படும் கட்டளையைப் புறக்கணிக்க முடியாது. 
குழந்தை யாருடைய பொறுப்பில் வளரும்?
கணவன் மனைவிக்கிடையே விவாகரத்து ஏற்பட்டு பிரிந்து விட்டால் அவர்களுக்குப் பிறந்த குழந்தைகள் யாருடைய பொறுப்பில் இருக்க வேண்டும் என்பதற்கு இஸ்லாம் இரண்டு விதமான நிலைகளைக் கூறுகிறது.

 *1. குழந்தை பாலருந்தும் பருவத்தில் இருந்தால்*

 தாய்தான் அக்குழந்தைக்கு மிகவும் உரிமை படைத்தவளாவாள். ஏனெனில் குழந்தைக்கு தாய்ப்பால் மிகவும் அவசியமான ஒன்றாகும். மேலும் பாலருந்தும் பருவத்தில் தாயினுடைய கவனிப்பில் இருப்பதுதான் குழந்தையினுடைய உடல் நலத்திற்கு மிகவும் பாதுகாப்பானதாகும். *இதனை பின்வரும் ஹதீஸிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.* 
ஒரு பெண்மணி '' அல்லாஹ்வின் தூதரே என்னுடைய இந்த மகனுக்கு என்னுடைய வயிறுதான் (உணவுப்) பாத்திரமாகும். என்னுடைய மார்பகங்கள்தான் அவனுக்கு  குடிபானமாகும். என்னுடைய மடிதான் அவனுக்கு தங்குமிடமாகும். இவனுடைய தந்தை என்னை விவாகரத்து செய்து விட்டு என்னிடமிருந்து இவனை பிரித்துக் கொண்டு செல்ல நாடுகிறார்.'' என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கூறினார். நபியவர்கள் '' நீ (மறு) திருமணம் செய்யாமலிருக்கும் வரை நீதான் (குழந்தையாகிய) அவனுக்கு மிகவும் உரிமைபடைத்தவள்'' என்று கூறினார்கள்.

 *அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அமர் (ரலி)* 
 *நூல் : ஹாகிம் பாகம் : 2 பக்கம் 225* 

 *2* *. குழந்தை பாலருந்தும் பருவத்தைக் கடந்து விட்டால்* 

குழந்தைக்கு, தாயிடம் இருக்க வேண்டுமா? அல்லது தந்தையிடம் இருக்க வேண்டுமா? என்று தீர்மானிக்கின்ற விருப்பத்தை இஸ்லாம் வழங்குகிறது. இதனை பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.
ராபிஃவு பின் ஸினான் (ரலி) அவர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். அவருடைய மனைவி இஸ்லாத்தை தழுவ மறுத்தாள். (அவர்களுக்கு) பால்குடி மறந்த அல்லது அதற்கு ஒத்த நிலையில் (ஒரு பெண் குழந்தை ) இருந்தது. அப்பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து ''என்னுடைய மகள்'' என்றாள் . ராபிஃவு (ரலி) அவர்கள் ''என்னுடைய மகள்'' என்றார். நபி(ஸல்) அவரை ''ஒரு மூலையில் உட்காருமாறு கூறினார்கள். அப்பெண்ணையும் ஒரு மூலையில் உட்காருமாறு கூறினார்கள். அக்குழந்தையை இருவருக்கும் மத்தியில் வைத்து பிறகு ''நீங்கள் இருவரும் அதை அழையுங்கள் என்று கூறினார்கள். அக்குழந்தை தாயின் பக்கம் சென்றது.  நபியவர்கள் அல்லாஹ்வே இக்குழந்தைக்கு நேர்வழிகாட்டு என்று கூறினார்கள். அக்குழந்தை தந்தையின் பக்கம் சென்றது. அவர் அக்குழந்தையை எடுத்துக் கொண்டார் 

 *அறிவிப்பவர் : ஜஃஃபர் பின் அப்தில்லாஹ் (ரஹ்)*  
 *நூல் : அபூதாவூத் (1916)* 

இந்த ஹதீஸிலிருந்து குழந்தை பால் குடிப்பருவத்தை கடந்து விட்டதென்றால் அதனுடைய விருப்பப்படி தாயையோ அல்லது தந்தையையோ தேர்ந்தெடுக்கும்படி செய்யவேண்டும் என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.
நபியவர்கள் ஒரு சிறுவனுக்கு தாய் மற்றும் தந்தை இருவருக்கு மத்தியில் (யாருடன் வசிக்க அவன் விரும்புகிறானோ அவரை) தேர்ந்தெடுக்கும் உரிமையளித்தார்கள்  

 *அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ரலி)* 
 *நூல் : திர்மிதி (1277)* 

இந்த ஹதீஸில் வந்துள்ள ''சிறுவன்'' என்ற வார்த்தைக்கு அரபி மூலத்தில் ''குலாம்'' என்ற சொல் வந்துள்ளது. இது குழந்தை பருவம் முதல், பருவ வயதை  அடைகின்ற வரை உள்ள நிலையில் உள்ளவர்களுக்கும் பயன்படுத்தப்படும் சொல்லாகும். இதிலிருந்து பால்குடிப் பருவம்ன கழிந்ததிலிருந்து பருவ வயதை அடையும் நிலையிலுள்ள குழந்தைகளின் விருப்பத்தைப் பொருத்தே அது தாயிடம் இருக்க வேண்டுமா? அல்லது தந்தையிடம் இருக்க வேண்டுமா? என்று முடிவு செய்யப்படும். குழந்தை யாரை விரும்புகிறதோ அவர்களிடம்தான் அது ஒப்படைக்கப்படும்.

ஆனால் மேற்கூறப்பட்ட இரண்டு நிலைகளும் விவாகரத்துச் செய்யபட்ட குழந்தையின் தாய் மறுமணம் செய்யாமலிருக்கும் வரைதான். அவள் மறுமணம் செய்து விட்டால் குழந்தைகளின் பொறுப்பு தந்தைக்கு வந்துவிடும். இதனை 
'' நீ (மறு) திருமணம் செய்யாமலிருக்கும் வரை நீதான் (குழந்தையாகிய) அவனுக்கு மிகவும் உரிமைபடைத்தவள்'' என்று நபியவர்கள் கூறியிருப்பதிலிருந்தே நாம் விளங்கிக் கொள்ளலாம். 
தாய் மறுமணம் முடித்துவிட்டால் குழந்தைகளின் பொறுப்பு தந்தையிடம் வந்துவிடுகிறது. என்றாலும் தாய்க்கும் அக்குழந்தைகளின் விஷயத்தில் உரிமையிருப்பதால் தாய் குழந்தைகளைச் சந்திக்கவிடாமல் தடுப்பதோ, தாயைப் பற்றி குழந்தைகளிடத்தில் வெறுப்பு உண்டாக்குவதோ கூடாது. தாய் தான் பெற்றெடுத்த குழந்தைகளைச் சந்திப்பதற்கு முழு உரிமையிருக்கிறது.
மேலும் குழந்ததைகள் தாயிடம் இருந்தாலும் தந்தையிடம் இருந்தாலும் அதற்குச் செலவு செய்கின்ற பொறுப்பு தந்தையைச் சார்ந்ததாகும். பின் வரும் திருமறை வசனத்திலிருந்த அதனை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாக ரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை. சக்திக்கு உட்பட்டே தவிர எவரும் சிரமம் தரப்பட மாட்டார். பெற்றவள் தனது பிள்ளையின் காரணமாகவோ, தந்தை தனது பிள்ளையின் காரணமாகவோ சிரமம் கொடுக்கப்பட மாட்டார்கள். (குழந்தையின் தந்தை இறந்து விட்டால்) அவரது வாரிசுக்கு இது போன்ற கடமை உண்டு.

 *அல் குர்ஆன் (2: 233)* 

 *பெண்களுக்கு சொத்துரிமை உண்டா?* 

இஸ்லாத்தில் பெண்களுக்கு சொத்துரிமை வழங்கப்பட்டிருக்கிறது. ஆணுக்கு இரண்டு பங்கும் பெண்ணிற்கு ஒரு பங்கும் சொல்லப்பட்டிருக்கிறது. பெண்களுக்கு சொத்தில் எதையும் கொடுக்காமல் ஆண்களே அனைத்தையும் எடுத்துக்கொண்டிருந்த காலக்கட்டத்தில் இப்படியொரு அற்புத சட்டத்தை குர்ஆன் வழக்கில் கொண்டுவந்தது. 
குறைவாக இருந்தாலும், அதிகமாக இருந்தாலும் பெற்றோரும், உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் ஆண்களுக்கும் பங்கு உண்டு. பெற்றோரும் உறவினர்களும் விட்டுச் சென்றவற்றில் பெண்களுக்கும் பங்கு உண்டு. இப்பங்கீடு கட்டாயக் கடமை.

 *அல்குர்ஆன் (4 : 7)* 

"இரண்டு பெண்களின் பாகம் போன்றது ஓர் ஆணுக்கு உண்டு'' என்று உங்கள் பிள்ளைகள் விஷயத்தில் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

 *அல்குர்ஆன் (4 : 11)* 

வாரிசுரிமைச் சட்டத்தில் ஆண்களுக்குக் கிடைப்பதில் பாதி, பெண்களுக்குக் கிடைக்கும் என்று திருக்குர்ஆன் கூறுவதைப் பலரும் தவறாக எண்ணுகின்றனர். தக்க காரணங்களுடன் தான் இஸ்லாம் பாரபட்சம் காட்டுகிறது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

1, இஸ்லாமிய சமூக, குடும்ப அமைப்பில் பெண்களை விட ஆண்கள் மீது தான் அதிகச் சுமை சுமத்தப்பட்டுள்ளது. மற்ற சமூகங்களிலும் கூட பெரும்பாலும் இதே நிலை தான்.

2, பெற்றோர்கள் தள்ளாத வயதில் ஆண் மக்களால் தான் பராமரிக்கப்படுகின்றனர். பெண்கள் தமது கணவனின் பெற்றோர்களைத் தான் பராமரிக்க முடியும். பெற்றோர் பொருள் திரட்ட முடியாத நிலையை அடையும் போது அவர்களைக் கவனிப்பதும் மகன்கள் தான். எனவே அவர்களுக்கு இரு மடங்கு அளிப்பது நியாயமே!

3, ஒரு பெண் தனது புகுந்த வீட்டில் வாழ முடியாத நிலை ஏற்பட்டால் தனது சகோதரனின் தயவில் வாழும் நிலை ஏற்படும். "எனக்குக் கிடைத்த அளவு சொத்து உனக்கும் தானே கிடைத்தது; எனவே உன்னை நான் ஏன் பராமரிக்க வேண்டும்'' என்று சகோதரன் நினைக்காமல் அன்புடன் அவளை அரவணைக்க இந்தப் பாரபட்சம் அவசியமாகிறது.

4, தந்தையின் சொத்துக்களைப் பெருக்குவதில் பெண்களை விட ஆண்களே பெரிதும் பங்காற்றி வருகின்றனர். தந்தை விட்டுச் சென்ற சொத்துக்களில் அவர் சம்பாதித்ததை விட அவரது மகன்களின் உழைப்பால் அதிகம் பெருகியிருக்கும். மகள் பெரும்பாலும் சொத்தை வளர்ப்பதில் பங்கெடுக்க மாட்டாள். இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

5, இவை தவிர பெண்களுக்காக தந்தை நகை மற்றும் ஆபரணங்களைச் செய்து போடுகிறார். இது அலங்காரப் பொருள் மட்டுமின்றி பெரிய சொத்தாகவும் உள்ளது. இது போன்ற பொருட்களை ஆண் மக்களுக்காக தந்தை வழங்குவதில்லை. இதுவும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

6, ஆண்களுக்கும், பெண்களுக்கும் சமமான சொத்துரிமை வழங்கினால், பெற்றோரை முதிய வயதில் நாம் மட்டும் ஏன் கவனிக்க வேண்டும் என்ற சிந்தனை ஆண் மக்களுக்குத் தோன்றும். புகுந்த வீட்டில் வாழும் பெண்களால் பெற்றோரைக் கவனிக்க முடியாமல் போகும். 
இதனால் முதியோர் இல்லம் தான் பெருகும். பெற்றோர் நாதியற்று விடப்படுவார்கள். இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டே இஸ்லாம் இதில் பாரபட்சம் காட்டியுள்ளது.

 *பெண்கள் கடைத்தெருக்களுக்குச் செல்லலாமா?* 

    எந்தத் தேவையும் இல்லாமல் பெண்கள் கடைத்தெருக்களில் சுற்றித்திரியக்கூடாது. 
உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.
 
 *அல்குர்ஆன் (33 : 33)* 

 அறியாமைக்காலத்தில் வெளியில் சுற்றித்திரிந்ததைப் போல் சுற்றித்திரியக்கூடாது என்று நான் உன்னிடத்தில் உறுதிப்பிரமாணம் வாங்கிக்கொள்கிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் உமைமா பின்த் ருகைகா (ரலி) அவர்களிடம் கூறினார்கள்.  

 *அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) நூல் : அஹ்மத் (6554)*
 
    பெண் மறைக்கப்பட வேண்டியவள். அவள் வெளியே சென்றால் (வழிகெடுப்பதற்காக) ஷைத்தான் அவளை நோக்கிவந்துவிடுகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

 *அறிவிப்பவர் : இப்னு மஸ்ஊத் (ரலி)* 
 *நூல் : திர்மிதி (1093)* 

மார்க்க விளக்கப் பொதுகூட்டங்கள் திருமணங்கள் உரிமையை மீட்டெடுப்பதற்கு உதவும் போராட்டங்கள் போன்ற நல்ல காரியங்களுக்காகவும் தேவையான விஷயங்களுக்காகவும் செல்வதில் தவறில்லை. அவ்வாறு செல்லும் போது பர்தாவை முழுமையாக கடைபிடித்துச் செல்ல வேண்டும். 

    நபி (ஸல்) அவர்களின் காலத்தில் பெண்கள் போர்க்களத்திற்கு வந்து காயம்பட்ட போர்வீரர்களுக்கு மருத்துவம் செய்யும் பணியை செய்திருக்கிறார்கள். பெருநாள் திடலுக்கு வந்து நன்மையான காரியத்தில் கலந்துகொண்டார்கள்.
(பெண்களாகிய) நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்கலில் காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்;

 நோயாüகளைக் கவனித்தோம். நான் நபி (ஸல்) அவர்கüடம் "எங்கüல் ஒரு. பெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்ல செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "(ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகüல் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்கüலும் இறைநம்பிக்கையாளர்கüன் பிரசாரங்கüலும் கலந்து கொள்ளட்டும்!'' என்று சொன்னார்கள். 

 *அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி)* 
 *நூல்: புகாரி (324)*  

பர்தா அணிவது சட்டமாக்கப்பட்ட பின்னால், தம் தேவைக்காக வேண்டி நபி (ஸல்) அவர்கüன் துணைவியாரானன சவ்தா பின்த் ஸம்ஆ (ர-) அவர்கள் வெüயே சென்றார்கள். அவர்கள், (உயரமான) கனத்த சரீரமுடைய பெண்மணியாக இருந்தார்கள். அவர்களை அறிந்தவர்களுக்கு அவர்கள் யார் என்று (அடையாளம்) தெரியாம-ருக்காது. அவர்களை அப்போது, உமர் பின் கத்தாப் (ர-) அவர்கள் பார்த்துவிட்டு "சவ்தாவே, அல்லாஹ்வின் மீதாணையாக, நீஙகள் யார் என்று எங்களுக்குத் தெரியாம-ல்லை. நீங்கள் (யார் என்று அடையாளம் தெரிகின்ற வகையில்) எப்படி வெüயே வந்திருக்கிறீர்கள் பாருங்கள்!'' என்று சொன்னார்கள். சவ்தா (ர-) அவர்கள் உடனே அங்கிருந்து திரும்பி விட்டார்கள். சவ்தா (ர-) அவர்கள் வீட்டினுள் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் என் தேவை ஒன்றிற்காக வெüயே சென்றேன். உமர் (ர-) அவர்கள் என்னிடம் இவ்வாறெல்லாம் சொன்னார்கள்'' என்று கூறினார்கள். 

அப்போது அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு "வஹீ' (வேதவெüப்பாடு) அறிவித்தான். பிறகு அந்நிலை அவர்களை விட்டு நீக்கப்பட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள் "நீங்கள் உங்கள் தேவைக்காக வெüயே செல்லலாம் என்று உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது'' என்று சொன்னார்கள்.

 *அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)* 
 *நூல் : புகாரி (4795)* 

 *பெண்கள் தனியாக பயணம் செய்யலாமா?*

 *இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 10*

இஸ்லாத்தை அறிந்து -52

*🍓🍓🍓மீள் பதிவு🍓🍓🍓* 


 *🌹🌹🌹🌹* 


 *🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉தொடர்  பாகம் 52 👈👈👈* 


     *👉தலைப்பு👇*



 *🔰⚫🔴சிறப்பிற்குரியோர் யார்….❓🔰🔵⚫* 



 *👉👉👉சிறப்பிற்குரியோர் யார்….❓👈👈👈* 


 *✍✍✍இந்த உலகத்திலே மனித சமுதாயம் படைக்கப்பட்ட உன்னதமான நோக்கத்தைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகின்றான்* .
 *‘ஜின்னையும் மனிதனையும் என்னை வணங்குவதற்க்காகவே தவிர (வேறு எதற்காகவும்) நான் படைக்கவில்லை’✍✍✍* 

 *(அல் குர்ஆன் 51:56)* 

📕📕📕மேற்க்கண்ட வசனம் இறைவனை மட்டும்தான் வணங்கவேண்டும் வணக்க வழிபாடுகள் அனைத்தையும் அவன் ஒருவனுக்கே உரித்தாக்கி ஒழுங்குற நிறைவேற்ற வேண்டும் என்று கூறுகிறது.
மற்றொரு வசனத்தில் இறைவன் குறிப்பிடுகின்றான்.
ஆதமுடைய மக்களை மேன்மை படுத்தியிருக்கிறோம்.📕📕📕

 *(அல்குர்ஆன் 17:70)* 

 *✍✍✍ஆதமுடைய சமுதாயத்தை மேன்மை படுத்தப்பட்ட சமுதாயம் எனவும் சிறப்பிற்குரிய சமுதாயம் எனவும் இறைவன் கூறுகின்றான்.* 
 *இவ்வாறு மேன்மை படுத்தப்பட்ட சமுதாயம் ஆறாவது அறிவான பகுத் தறிவு பெற்றிருக்கும் சமுதாயம் ஐந்தறிவு ஜீவராசிகளைப் போன்று தங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.✍✍✍* 

📘📘📘அவர்கள் செய்யும் செயல்களுக்கு சுயமாக விளக்கம் கொடுத்துக்கொண்டு தங்களை சமுதாயத்தில் சிறப்பிற்குரிய நபர் என்று சொல்லிக்கொண்டு இருப்பதை நாம் பார்க்கிறோம்.📘📘📘

 *✍✍✍உதாரணமாக உங்களது ஊரிலே ஒரு மனிதனிடத்தில் சிறப்பிற்குரிய நபர் யார் என்று நீங்கள் கேட்டால் சமுதாயத்தில் பெரிய செல்வந்தர்கள்இ பிரமுகர்கள் அல்லது விஞ்ஞானிகள் ஜமாஅத் தலைவர்கள் அரசியல் தலைவர்கள் என்று அவர் குறிப்பிட்டு சொல்லுவார். ஏனென்றால் அவர்களுடைய பதவிஇ அந்தஸ்த்து ஆட்சி அதிகாரம் படைபலம் அறிவுத்திறன் இவைகளை  வைத்துக்கொண்டு சிறப்பிற்குரிய நபர் என்று சொல்லுவார்கள்.✍✍✍* 

📙📙📙இன்னும் சிலர்கள் ஒருபடி மேலே சென்று அமெரிக்கா ஐரோப்பா போன்ற நாடுகளை சிறப்பிற்குரிய நாடுகள் என்று சொல்லுவார்கள்.📙📙📙

 *✍✍✍ஏனென்றால் இந்நாடுகளில் பொருளாதார வளங்கள் ஆயுதபலம் படை பலம் இன்னும் பல தலைமுறைக்கு உட்கார்ந்து சாப்பிடும் அளவுக்கு செல்வங்கள் இருப்பதினால் இவ்வாறு சொல்கிறார்கள். ஆனால் திருமறைக் குர்ஆன் இவ்வாறு சாதனை படைத்தவர்களையோ அல்லது கண்டுபிடிப்பவர்களையோ பெரிய தலைவர்களையோ கூறவில்லை. மாறாக திருமறைக் குர்ஆன் புதிய விதத்தில் அதை தெளிவுபடுத்துகிறது✍✍✍* .


📒📒📒உலக முஃமீன்கள் அனைவருக்கும் அழகிய முன்மாதிரியாக இரு பெண்களைப் குர்ஆன் பேசுகிறது.📒📒📒

 *✍✍✍பிர்அவ்னின் மனைவியை நம்பிக்கைக் கொண்டோருக்கு முன்னு தாரணமாக அல்லாஹ் கூறுகிறான்.✍✍✍* 


 *(அல் குர்ஆன் 66:11)* 


📗📗📗இம்ரானின் மகள் மர்யமையும்(இறைவன்) முன்னுதாரணமாக கூறுகிறான்.📗📗📗

 *(அல்குர்ஆன் 66:12)* 

 *✍✍✍நாம் ஆச்சர்யத்தோடு பார்ப்போம் இவர்கள் (இரண்டு பெண்கள்)அப்படி என்ன சாதனை செய்து விட்டார்கள்.* 
 *மல்லேஸ்வரி போன்று பளு தூக்கும் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவுக்கு வெள்ளிப்பதக்கம் வாங்கிக்குவித்தார்களா? என நாம் பலவித மாக நினைக்கலாம். ஆனால் இவர்கள் செய்த சாதனையை வரலாற்றின் மூலம் குர்ஆனில் இறைவன் குறிப்பிடுகிறான்.✍✍✍* 


 *🧕🧕🧕சாதனை படைத்த ஆசியா அம்மையார்🧕🧕🧕* 


📓📓📓நானே உங்களின் மிகப்பெரிய இறைவன்’ (அல்குர்ஆன்(திருகுர்ஆன் 79:24) என பிர்அவ்ன் கூறினான். அந்நேரத்தில் மூஸா நபி அவர்கள் அந்த சமுதாய மக்களிடத்தில் ஓரிறைக் கொள்கையை பிரகடனப்படுத்தினார்கள். ஏகத்துவப் பிராச்சாரத்தை ஆரம்பித்தார்கள்.📓📓📓

 *✍✍✍அப்போது பிர்அவ்னின் மனைவி ஆசியா அவர்கள் தன் கணவன் சூப்பர் பவரா? அல்லது மூஸா நபி கொண்டு வந்த கடவுள் (கொள்கை) சூப்பர் பவரா? என அந்தப் பெண்மணி இக்காலத்து பெண்களைப் போன்று அவசரப்படாமல் பயமில்லாமல் சிந்தித்து உறுதியாக செயல்பட்டார்கள். மூஸாவின் கொள்கைதான் உண்மையான கொள்கையென விளங்கி இஸ்லாத்தை (தவ்ஹீதை) ஏற்றுக் கொண் டார்கள். அந்த காலகட்டத்தில் பிர்அவ்ன் மூஸா நபியின் கொள்கையை ஏற்றுக் கொள்பவர்களை கடுமையாக எச்சரித்தான்.✍✍✍* 

📔📔📔‘நான் உங்களுக்கு அனுமதியளிப்பதற்கு முன் அவரை நம்பி விட்டீர்களா? அவரே உங்களுக்கு சூனியத்தை கற்றுத் தந்த உங்களது குருவாவார். உங்களை மாறு கால் மாறுகை வெட்டி உங்களை பேரீச்சை மரத்தின் அடிப்பாகத்தில் சிலுவையில் அறைவேன். நம்மில் கடுமையாக தண்டிப்பவரும் நிலையானவரும் யார் என்பதை (அப்போது) அறிந்துகொள்வீர்கள்’ என்று அவன் கூறினான்.📔📔📔

 *(அல்குர்ஆன் 20:71)* 

 *✍✍✍மூஸாவின் கடவுள் கொள்கையை யாராவது ஏற்றுக் கொண்டால் மக்களை கொலை செய்து விடுவேன் என எச்சரித்த இந்த தருணத்தில் அவனுடைய அறைகூவலுக்கு சிறிதும் இசைந்து கொடுக்காமல் உறுதியான மன தைரியத் துடன் மிகப்பெரிய செல்வந்தனான தன் கணவனாகிய பிர்அவ்னின் சொத்துகளுக்கும் ஆடம்பர வாழ்கைக்கும் அடிமையாகாமல் அதை அற்பமாக கருதி விட்டு இறைவனிடத்தில் ஆசியா அவர்கள் பிரார்த்தனை செய்தார்கள்✍✍✍* .

📚📚📚‘என் இறைவா! சொர்க்கத்தில் உன்னிடம் எனக்கு ஒரு வீட்டை எழுப்புவாயாக! பிர்அவ்னிடமிருந்தும் அவனது சித்திரவதையிருந்தும் என்னை காப்பாற்றுவாயாக!’ என்று பிர்அவ்னின் மனைவி கூறியதால் அவரை  நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் முன்னுதாரணமாக கூறுகிறான்.📚📚📚

 *(அல்குர்ஆன் 66:11)* 

 *✍✍✍இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட உயிரை துச்சமாக மதித்து தன் கணவனால் இன்னல்கள் ஏற்படும் என்று வெளிப்படையாக தெரிந்தும் உலக சுக போகங்களுக்கு அடிமையாகாமல் தவ்ஹிதை ஏற்றக் காரணத்தினால்தான் இறைவன் அனைத்து மக்களுக்கும் முன்மாதிரியாக இப்பெண்மணியை கூறுகிறான்.✍✍✍* 


 *🧕🧕🧕பொறுமையை காத்த மர்யம் (அலை)🧕🧕🧕* 


⛱⛱⛱இரண்டாவதாக சிறப்பிற்குரிய பெண்ணாக உலக மூஃமீன்களுக்கு அழகிய முன்மாதிரியாக ஈஸா நபியின் தாய் மர்யம்(அலை) அவர்களை பற்றி அல்லாஹ் தன் வேதத்தில் கூறுகிறான்.⛱⛱⛱

 *✍✍✍இம்ரானின் மகள் மர்யமையும் (இறைவன் முன்னுதாரணமாக கூறுகிறான்) அவர் தமது கற்பை காத்துக்கொண்டார். அவரிடம் நமது உயிரை ஊதினோம். அவர் தமது இறைவனின் வார்த்தைக ளையும் அவனது வேதங்களையும் உண்மைபடுத்தினார். அவர் கட் டுப்பட்டு நடப்பவராக இருந்தார்.✍✍✍* 

 *(அல்குர்ஆன் 62:12)* 

🌈🌈🌈பொதுவாக மனித இனம் உருவாக பெண்ணின் சினைமுட்டையும் ஆணின் உயிரணுவும் அவசியம். ஆனால் ஈஸா நபியவர்கள் ஆணின் உயிரணுவின்றி அல்லாஹ்வின் கட்டளையால் உருவானவர். இதனை உலக முஸ்லிம்கள் அனைவரும் நம்புகிறோம். ஆனால் இப்போது வாழும் இந்த சமுதாயத்தில் ஒரு ஆண் துணையின்றி ஒரு பெண் ஒரு குழந்தையை ஈன்றெடுத்தால் உலகம் அப்பெண்ணை தவறாகவும் மோசமான நடத்தை உடையவள் என்றும் சித்தரிப்பார்கள். இதே நிலைக்கு மர்யம்(அலை) அவர்களும் தள்ளப்பட்டார்கள். அவர்களுடைய சமுதாய மக்கள் மர்யம் (அலை) அவர்களை பார்த்து  உன் தாய் தந்தை நடத்தை கெட்டவர்களாக இல்லை என பேசினார்கள்.🌈🌈🌈

 *✍✍✍(பிள்ளை பெற்று) அப்பிள்ளையை தமது சமுதாயத்திடம் கொண்டு வந்தார். ‘மர்யமே! பயங்கரமான காரியத்தை செய்துவிட்டாயே?’ என்று அவர்கள் கேட்டனர்.✍✍✍* 

 *(அல்குர்ஆன் 19:27)* 

🔰🔰🔰‘ஹாரூனின் சகோதரியே உனது தந்தை கெட்டவராக இருந்த தில்லை. உனது தாயும் நடத்தைகெட்டவராக இருக்கவில்லை’ என்றனர்.🔰🔰🔰

 *(அல்குர்ஆன் 19:28)* 

 *✍✍✍அந்த நேரத்தில் மர்யம் (அலை) அவர்கள் நம் சமுதாயத்திலுள்ள குடும்ப பெண்களைப் போன்று கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ள வில்லை. உடல் முழுவதும் பெட்ரோலை ஊற்றி தீயில் கருகி சாக முயற்சிக்க வுமில்லை. மாறாக இறைவன் கொடுத்த இந்த குழந்தையை (ஈஸா(அலை)) பாதுகாத்தார்கள். இறைவனது வார்த்தைகளையும் அவனது வேதத்தையும் உண்மைப்படுத்தினார்கள்✍✍✍* .

🔴🔴🔴மேலும் பொறுமையை மேற்கொண்டார்கள். இறைவனுக்கு கட்டுப்பட்டு நடப்பவர்களாகவும் இருந்தார்கள். இந்த அழகிய செயலால் உலக முஃமின்கள் அனைவருக்கும் முன்மாதிரியாக இப்பெண்மணியை (மர்யம்(அலை)) அவர்களை அல்லாஹ் குர்ஆனில் சிலாகித்து சொல்கிறான்.🔴🔴🔴


 *🧕🧕🧕ஆயிஷா (ரலி) அவர்களின் சிறப்புகள்.🧕🧕🧕* 


 *✍✍✍1579. ”நான் உன்னைக் கனவில் இரண்டு முறை கண்டேன். உன்னைப் பட்டுத் (துணியின்) துண்டு ஒன்றில் (முக்காடிட்டபடி) கண்டேன். எவரோ, ‘இது உங்கள் மனைவி தான்; (முக்காட்டை) நீக்கிப்பாருங்கள்’ என்று கூற, (நானும் அவ்வாறே பார்த்தேன்.) அது நீயாகவே இருக்கக் கண்டேன். அப்போது நான், ‘இது (நீ எனக்கு மனைவியாவது) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (விதிக்கப்பட்டு) உள்ளதெனில் அதை அவன் நடத்தி வைப்பான்’ என்று சொல்லிக் கொண்டேன்” என்று நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்✍✍✍* .

 *புஹாரி : 3895 ஆயிஷா (ரலி).* 

🔵🔵🔵1580. என்னிடம் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் , ‘எப்போது நீ என்னைக் குறித்து திருப்தியுடன் இருக்கிறாய்; எப்போது நீ என் மீது கோபத்துடன் இருக்கிறாய் என்று (உன்னைப் பற்றி) நான் நன்றாக அறிந்து வைத்துள்ளேன்” என்று கூறினார்கள். அதற்கு நான், ‘எப்படி நீங்கள் அறிந்து கொள்வீர்கள்?’ என்று கேட்டேன். அதற்கவர்கள், ‘என்னைக் குறித்து நீ திருப்தியுடன் இருக்கும்போது (பேசினால்), ‘முஹம்மதுடைய அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்! என் மீது கோபமாய் இருந்தால், ‘இப்ராஹீம் (அலை) அவர்களின் அதிபதி மீது சத்தியமாக’ என்று கூறுவாய்” என்று கூறினார்கள். நான், ‘அல்லாஹ்வீன் மீதாணையாக! ஆம் (உண்மைதான்,) இறைத்தூதர் அவர்களே! நான் தங்களின் பெயரைத்தான் கோபித்துக் கொள்வேன். (தங்களின் மீதன்று)” என்று கூறினேன்.🔵🔵🔵

 *புஹாரி : 5228 ஆயிஷா (ரலி).* 


 *✍✍✍1581. நான் (சிறுமியாக இருந்தபோது) பொம்மைகள் வைத்து விளையாடுவேன். எனக்குச் சில தோழியர் இருந்தனர். அவர்கள் என்னுடன் விளையாடிக் கொண்டிருப்பார்கள். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்தால் அவர்களைக் கண்டதும் தோழியர் (பயந்து கொண்டு) திரைக்குள் ஒளிந்து கொள்வார்கள். அப்போது இறைத்தூதர் (ஸல்) அவர்கள் என் தோழியரை என்னிடம் அனுப்பி வைப்பார்கள். தோழிகள் என்னுடன் (சேர்ந்து) விளையாடுவார்கள்.✍✍✍* 

 *புஹாரி : 6130 ஆயிஷா (ரலி).* 

⚫⚫⚫1582. அல்லாஹ்வின் திருத்தூதர் (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்புகள் வழங்க மக்கள் நபிகளார் என்னிடம் தங்கும் நாள் எது என எதிர்பார்த்து வழங்கினர்.⚫⚫⚫

 *புஹாரி :2574 ஆயிஷா (ரலி).* 

 *✍✍✍1583. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, ‘நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்?’ என்று என்னுடைய (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். எனவே, அவர்களின் (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். எனவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும்வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ்சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் இடையே அவர்களின் தலையிருந்தபோது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக் கொண்டான்.✍✍✍* 

 *புஹாரி : 4450 ஆயிஷா (ரலி).* 

🏵🏵🏵1584. நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது, ‘(இறைவா!) உயர்ந்த தோழர்க(ளான இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாதிகள் மற்றும் நல்லடியார்க)ளுடன் (என்னைச் சேர்த்தருள்)”(திருகுர்ஆன்4:69) என்று சொல்லத் தொடங்கினார்கள்.🏵🏵🏵

 *புஹாரி : 4436 ஆயிஷா (ரலி).* 

 *✍✍✍1585. ”உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை” என்று நான் (நபி (ஸல்) அவர்களிடமிருந்தே) செவியுற்றிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின்போது அவர்களின் தொண்டை கட்ட (கம்மிய, கரகரப்பான குரலில்), ‘அல்லாஹ் அருள் புரிந்துள்ள இறைத்தூதர்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்கள் மற்றும் நல்லடியார்களுடன்” எனும் (திருக்குர்ஆன் 04:69) இறைவாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள். எனவே, ‘இவ்வுலகம் மறுமை ஆகிய இரண்டிலொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கு வழங்கப்பட்டது’ என்று நான் எண்ணிக்கொண்டேன்✍✍✍* .

 *புஹாரி : 4435 ஆயிஷா (ரலி).* 

📘📘📘1586. இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்தபோது, ‘சொர்க்கத்தில் தம் இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம்) உயிர் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்படாத வரையில்’ அல்லது ‘(உலக வாழ்வு, மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத்) தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாத வரையில்’ எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை” என்று சொல்லி வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களின் தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்டபோது அவர்கள் மூர்ச்சையடைந்து விட்டார்கள். மூர்ச்சை தெளிந்தபோது அவர்களின் பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது. பிறகு அவர்கள், ‘இறைவா (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)” என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான், ‘இனி (நபி (ஸல்) அவர்கள்) நம்முடன் இருக்க மாட்டார்கள்” என்று சொன்னேன். ஏனெனில், அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்தபோது சொன்ன (இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்) செய்தி இதுதான் என்று (அவர்களின் மரண வேளையான இப்போது) அறிந்து கொண்டேன்.📘📘📘

 *புஹாரி : 4437 ஆயிஷா (ரலி).* 

 *✍✍✍1587. நபி (ஸல்) அவர்கள் பயணம் மேற்கொள்ள விரும்பினால் தம் துணைவியரிடையே சீட்டுக் குலுக்குவார்கள். (யாருடைய பெயர் வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துச் செல்வார்கள்.) (ஒரு முறை) என்னுடைய பெயரும் ஹஃப்ஸாவின் பெயரும் (குலுக்கலில்) வந்தது. இரவு நேரப் பயணத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னுடன் பேசிக்கொண்டே வருவார்கள். (ஒரு நாள்) ஹஃப்ஸா (என்னிடம்), ‘இந்த இரவு நீங்கள் என்னுடைய ஒட்டகத்தில் பயணம் செய்து பாருங்கள்; நான் உங்களின் ஒட்டகத்தில் பயணம் செய்து பார்க்கிறேன்” என்று கூறினார்கள். நான், ‘சரி” என்று (சம்மதம்) கூறினேன். எனவே, (நாங்களிருவரும்) ஒருவர் மற்றவரின் ஒட்டகத்தில்) ஏறிப் பயணிக்கலானோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் (நான் முதலில் ஏறி வந்த) என்னுடைய ஒட்டகத்தை நோக்கி வந்தார்கள். (அதில் நானிருப்பதாக நினைத்தார்கள். ஆனால்,) அதில் ஹஃப்ஸா இருந்தார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் ‘சலாம்’ (முகமன்) கூறினார்கள். பிறகு பயணத்தைத் தொடர்ந்தார்கள். (பயணத்தினிடையே) அவர்கள் ஓர் இடத்தில் இறங்கினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களை(க் காணாததால் அவர்களை (நான் தேடினேன். அவர்கள் இறங்கிய அந்த நேரம் நான் என்னுடைய இரண்டு கால்களையும் ‘இத்கிர்’ புற்களுக்கிடையே (புகுத்தி) வைத்துக்கொண்டு, ‘இறைவா! ஒரு தேளையோ அல்லது பாம்பையோ என் மீது ஏவிவிடு! அது என்னைத் தீண்டட்டும்” என்று சொன்னேன். (இப்படி என்னை நானே கடிந்துகொள்ளத்தான் முடிந்ததே தவிர,) நபி (ஸல்) அவர்களை (ஹஃப்ஸாவுடன் தங்கியதற்காக) என்னால் ஒன்றும் சொல்ல முடியவில்லை.✍✍✍* 


 *புஹாரி : 5211 ஆயிஷா (ரலி).* 


📙📙📙1588. (உலகின் மற்ற) பெண்களைக் காட்டிலும் ஆயிஷாவுக்கு இருக்கும் சிறப்பு (மற்ற) உணவுகளைக் காட்டிலும் ‘ஸரீத்’ என்னும் உணவுக்கு இருக்கும் சிறப்பைப் போன்றதாகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📙📙📙

 *புஹாரி : 3770 அனஸ் இப்னு மாலிக் (ரலி).* 


 *✍✍✍1589. (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என்னிடம், ‘ஆயிஷாவே! இதோ ஜிப்ரீல் உன் மீது சலாமுரைக்கிறார்” என்று கூறினார்கள். நான், ‘வ அலைஹிஸ் ஸலாமு வ ரஹ்முத்துல்லாஹி வ பரக்காத்துஹு – அவரின் மீதும் (அல்லாஹ்வின்) சாந்தியும் அல்லாஹ்வின் கருணையும் அவனுடைய அருள் வளங்களும் பொழியட்டும். (இறைத்தூதர் அவர்களே!) நான் பார்க்க முடியாததையெல்லாம் நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று கூறினேன்✍✍✍* .

 *புஹாரி :3217 அபூ ஸலாமா (ரலி).* 


📗📗📗1590. (முற்காலத்தில்) பதினொன்று பெண்கள் (ஓரிடத்தில் கூடி) அமர்ந்து கொண்டு ஒவ்வொரு வரும் தத்தம் கணவர் குறித்த செய்திகளில் எதையும் மூடி மறைக்காமல் (உள்ளதை உள்ளபடி) எடுத்துரைப்பதென உறுதிமொழியும் தீர்மானமும் எடுத்துக் கொண்டனர். முதலாவது பெண் கூறினார்: என் கணவர், (உயரமான) மலைச் சிகரத்தில் வைக்கப்பட்டுள்ள மிகவும் இளைத்துப்போன ஒட்டகத்தின் இறைச்சிக்கு நிகரானவர். (இளைத்த ஒட்டகத்தின் இறைச்சியாயினும், அதை எடுக்க) மேலே செல்லலாம் என்றால் (அதை மலைப்பாதை) சுலபமானதாக இல்லை. (சிரமத்தைத் தாங்கி) மேலே ஏற (அது ஒன்றும்) கொழுத்த (ஒட்டகத்தின்) இறைச்சியுமில்லை. இரண்டாவது பெண் கூறினார்: நான் என் கணவர் பற்றிய செய்திகளை அம்பலப்படுத்தப் போவதில்லை. (அப்படி அம்பலப்படுத்த முயன்றாலும்) அவரைப் பற்றிய செய்திகளை ஒன்று கூட விடாமல் சொல்ல முடியுமா என்ற அச்சமும் எனக்கு உண்டு. அவ்வாறு கூறுவதானாலும் அவரின் வெளிப்படையான மற்றும் அந்தரங்கமான குற்றங் குறைகளைத் தான் கூறவேண்டியதிருக்கும். மூன்றாவது பெண் கூறினார்: என் கணவர் மிகவும் உயரமான மனிதர் அவரைப் பற்றி நான் (ஏதேனும்) பேசி (அது அவரின் காதுக்கு எட்டி)னால். நான் விவாகரத்துச் செய்யப்பட்டு விடுவேன்; (அதே நேரத்தில் அவரிடம் எதுவும் பேசாமல்) நான் மௌனமாயிருந்தால் அந்தரத்தில் விடப்படுவேன். (என்னுடன் நல்லபடி வாழவுமாட்டார்; என்னை விவாகரத்தும் செய்யமாட்டார்.) நான்காவது பெண் கூறினார். என் கணவர் (மக்கா உள்ளிட்ட) ‘திஹாமா’ பகுதியின் இரவு நேரத்தைப் போன்ற (இதமான)வர். (அவரிடம்) கடும் வெப்பமும் இல்லை. கடுங்குளிருமில்லை. (அவரைப் பற்றி எனக்கு) அச்சமும் இல்லை (என்னைப் பற்றி அவரும்) துச்சமாகக் கருதியதுமில்லை.📗📗📗

 *✍✍✍ஐந்தாவது பெண் கூறினார்: என் கணவர் (வீட்டுக்குள்) நுழையும்போது சிறுத்தை போல் நுழைவார். வெளியே போனால் சிங்கம் போலிருப்பார். (வீட்டினுள்) தாம் கண்டுபிடித்த (குறைபாடுகள் முதலிய)வை பற்றி எதுவும் கேட்கமாட்டார். ஆறாவது பெண் கூறினார்: என் கணவர் உண்டாலும் வாரி வழித்து உண்டு விடுகிறார். குடித்தாலும் மிச்சம் மீதி வைக்காமலும் குடித்துவிடுகிறார். படுத்தாலும் (விலகி) சுருண்டு போய்ப் படுத்துக்கொள்கிறார். என் சஞ்சலத்தை அறிய தம் கையைக் கூட அவர் (என் ஆடைக்குள்) நுழைப்பதில்லை✍✍✍.* 


📒📒📒ஏழாவது பெண் கூறினார்: என் கணவர் ‘விவரமில்லாதவர்’ அல்லது ‘ஆண்மையில்லாதவர்’, சற்றும் விவேகமில்லாதவர். எல்லா நோய்களும் (குறைகளும்) அவரிடம் உண்டு. (அவரிடம் பேசினால் என்னை ஏசுவார். கேலி செய்தால்) என் தலையைக் காயப்படுத்துவார். (கோபம் வந்துவிட்டால்) என் உடலைக் காயப்படுத்துவார். அல்லது இரண்டையும் செய்வார். எட்டாவது பெண் கூறினார்:என் கணவர் தொடுவதற்கு முயலைப் போன்ற (மிருதுவான மேனி உடைய)வர்; முகர்வதற்கு மரிக்கொழுந்து போல் மணக்கக் கூடியவர்.📒📒📒


 *✍✍✍ஒன்பதாவது பெண் கூறினார்: என் கணவர் (அவரை நாடி வருவோரைக் கவரும் வகையில்) உயரமான தூண்(கள் கொண்ட மாளிகை) உடையவர். நீண்ட வாளுறை கொண்ட (உயரமான)வர். (விருந்தினருக்குச் சமைத்துப் போட்டு வீட்டு முற்றத்தில்) சாம்பலை நிரைத்து வைத்திருப்பவர். (மக்கள் அவரைச் சந்திப்பதற்கு வசதியாக) சமுதாயக் கூடத்திற்கு அருகிலேயே வீட்டை அமைத்துக் கொண்டவர். பத்தாவது பெண் கூறினார்: என் கணவர் செல்வந்தர் எத்துணை பெரும் செவ்வந்தர் தெரியுமா? எல்லா செல்வந்தர்களையும் விட மேலான செல்வந்தர். அவரிடம் ஏராளமான ஒட்டகங்கள் உள்ளன. (அவற்றை அறுத்து விருந்தினருக்குப் பரிமாறுவதற்கு வசதியாகப்) பெரும்பாலும் அவை தொழுவங்களிலேயே (தயார் நிலையில்) இருக்கும். (விருந்தினர் வராத சில நாள்களில் மட்டும்) குறைவாகவே மேய்ச்சலுக்கு விடப்படும். (விருந்தினர் வருகையை முனனிட்டு மகிழ்ச்சியில் ஒலிக்கப்படும்) குழலோசையை அந்த ஒட்டகங்கள் கேட்டுவிட்டால் தாம் அழிந்தோம் என அவை உறுதிசெய்து கொள்ளும். பதினொன்றாவது பெண் கூறினார்: என் கணவர் (பெயர்) அபூ ஸர்உ. அபூ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? ஆபரணங்களை அவர் என் காதுகளில் ஊஞ்சலாடச் செய்திருக்கிறார். (ஆசையாசையாக உணவளித்து) என் கொடுங்கைகளை கொழுக்கச் செய்துள்ளார். அவர் என்னைப் பூரிப்படையச் செய்திருக்கிறார். என் மனம் நிறைந்திருக்கிறது. ஒரு மலைக் குகையில் (அல்லது) ‘ஞக்’ எனுமிடத்தில்) சிறிது ஆடுகளுடன் (திரிந்துகொண்டு) இருந்த குடும்பத்தில் என்னைக் கண்ட அவர், என்னை (மனைவியாக ஏற்று) குதிரைகளும் ஒட்டகங்களும் உள்ள, தானியக் களஞ்சியமும் கால்நடைச் செல்வங்களின் அரவமும் நிறைந்த (அவரின் பண்ணை) வீட்டில் என்னை வாழச் செய்தார். நான் அவரிடம் எதையும் பேசுவேன்; நான் அலட்சியப்படுத்தப் பட்டதில்லை. நான் தூங்கினாலும் (நிம்மதியாக) முற்பகல் வரைத் தூங்குகிறேன். (என் தூக்கத்தை யாரும் கலைப்பதில்லை.) நான் (உண்டாலும்) பருகினாலும் பெருமிதப்படும் அளவிற்கு (உண்ணுகிறேன்) பருகுகிறேன்.(என் கணவரின் தாயார்) உம்மு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரின் வீட்டுக்கு களஞ்சியம் (எப்போதும்) கனமாகவே இருக்கும் அவரின் வீடு விசாலமானதாகவே இருக்கும்.(என் கணவரின் புதல்வர்) இப்னு அபீ ஸர்உ எத்தகையவர் தெரியுமா? அவரின் படுக்கை, உருவப்பட்ட கோரை போன்று (அல்லது உறையிலிருந்து எடுக்கப்பட்ட வாளைப் போன்று (சிறியதாக) இருக்கும். (அந்த அளவிற்குக் கச்சிதமான உடலமைப்பு உள்ளவர்.) ஓர் ஆட்டுக் குட்டியின் ஒரு சப்பை(இறைச்சி) அவரின் பசியைத் தணித்து விடும். (அந்த அளவிற்குக் குறைவாக உண்ணுபவர்.)(என் கணவரின் புதல்வி) பின்த் அபீ ஸர்உ எத்தயைவர் தெரியுமா? தம் தாய் தந்தைக்கு அடங்கி நடப்பவர். (கட்டான உடல் கொண்ட) அவரின் ஆடை நிறைவானதாக இருக்கும். அண்டை வீட்டுக்காரி அவரைக் கண்டு பொறாமை கொள்வாள்.(என் கணவர்) அபூ ஸர்உ உடைய பணிப்பெண் எத்தகையவள் தெரியுமா? அவள் எங்கள் (இரகசிய) செய்திகளை அறவே வெளியிடுவதில்லை. வீட்டிலுள்ள உணவுப் பொருள்களைச் சேதப்படுத்துவதுமில்லை. வீட்டில் குப்பை கூளங்கள் சேர விடுவதுமில்லை. (அவ்வளவு நம்பிக்கையானவள்; பொறுப்புமிக்கவள்; தூய்மை விரும்பி.)✍✍✍* 


📓📓📓(ஒருநாள்) பால் பாத்திரங்களில் (மோர் கடைந்து) வெண்ணெய் எடுக்கப்படும் (வசந்த கால அதிகாலை) நேரம் (என் கணவர்) அபூ ஸர்உ வெளியே சென்றார். (வழியில்) ஒரு பெண்ணைச் சந்தித்தார். அவளுடன் சிறுத்தைகள் போன்ற அவளுடைய இரண்டு குழந்தைகள் இருந்தனர். அந்தக் குழந்தைகள் அவளுடைய இடைக்குக் கீழே இரண்டு மாதுளங்கனிகளை வைத்து விளையாடிக் கொண்டிருந்தனர். எனவே, (அவளுடைய கட்டழகில் மனதைப் பறி கொடுத்து) என்னை விவாக விலக்குக் செய்துவிட்டு, அவளை மணந்தார். அவருக்குப் பின் இன்னொரு நல்ல மனிதருக்கு நான் வாக்கப்பட்டேன். அவர் வேகமாகச் செல்லும் குதிரையில் ஏறி, (பஹ்ரைன் நாட்டிலுள்ள) ‘கத்’ எனும் இடத்தைச் சேர்ந்த ஈட்டி ஒன்றை எடுத்தார். மாலையில் வீடு திரும்பியபோது ஏராளமான கால்நடைகளை என்னிடம் கொண்டு வந்தார். மேலும், எனக்கு ஒவ்வொரு பொருட்களிலும் ஒரு ஜோடியை வழங்கி, ‘உம்மு ஸாஉவே! (நன்றாக) நீயும் சாப்பிடு! உன்(தாய்) வீட்டாருக்கும் சாப்பிடக் கொடு” என்றார்.(ஆனாலும்,) அவர் எனக்கு (அன்புடன்) வழங்கிய எல்லாப் பொருள்களையும் நான் ஒன்றாய்க் குவித்தாலும் (என் முதல் கணவரான) அபூ ஸர்உவின் சின்னஞ்சிறு பாத்திரத்தைக் கூட அவை நிரப்பமுடியாது (என்று கூறி முடித்தார்.) ஆயிஷா (ரலி) கூறினார்:📓📓📓

 *✍✍✍(என்னருமைக் கணவரான) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ‘(ஆயிஷாவே!) உம்மு ஸர்விற்கு அபூ ஸர்உ எப்படியோ அப்படியே உனக்கு நானும் (அன்பாளனாக) இருப்பேன்’ என்றார்கள்✍✍✍.* 


 *புஹாரி :5189 ஆயிஷா (ரலி).* 



 *🧕🧕🧕அன்னை பாத்திமா (ரலி) அவர்களின் சிறப்புகள்.🧕🧕🧕* 


📔📔📔1591. நாங்கள் ஹுசைன் இப்னு அலீ (ரலி) – அல்லாஹ் அவர்களின் மீது கருணை புரிவானாக! – கொல்லப்பட்ட கால கட்டத்தில் யஸீத் இப்னு முஆவியாவைச் சந்தித்துவிட்டு மதீனாவுக்கு வந்தபோது, என்னை மிஸ்வர் இப்னு மக்ரமா (ரலி) சந்தித்தார்கள். அப்போது அவர்கள், ‘என்னிடம் தங்களுக்குத் தேவை ஏதுமிருக்கிறதா? அதை நிறைவேற்றிட எனக்குக் கட்டளையிடுகிறீர்களா? (நான் நிறைவேற்றித் தரத் தயாராக இருக்கிறேன்)” என்று கேட்டார்கள். நான் அவர்களுக்கு ‘அப்படி எதுவுமில்லை” என்று பதிலளித்தேன். மிஸ்வர் (ரலி), ‘அல்லாஹ்வின் தூதருடைய வாளை எடுத்துக் கொடுக்கிறீர்களா? ஏனெனில், அந்த (பனூ உமய்யா) குலத்தினர் உங்களிடமிருந்து தம் அதிகாரத்தின் மூலமாக அதைப் பிடுங்கிக் கொள்வார்கள் என்று நான் அஞ்சுகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் அதை எனக்குக் கொடுத்தால் என் உயிர் போகும்வரை அது அவர்களிடம் சென்று சேராது” என்று கூறினார். (பிறகு பின் வரும் சம்பவத்தை விவரிக்கலானார்:) அலீ இப்னு அபீ தாலிப் (ரலி) ஃபாத்திமா (ரலி) (உயிரோடு தம் மணபந்தத்தில்) இருக்கும் போதே அபூ ஜஹ்லுடைய மகளை (மணந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். (அந்த நேரத்தில்) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அது குறித்து மக்களிடம் தம் இந்த மிம்பரில் (நின்றபடி) உரையாற்றியதை செவியுற்றேன். – அப்போது நான் பருவ வயதை அடைந்து விட்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், ‘ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். அவர் தன்னுடைய மார்க்க விவகாரத்தில் சோதனைக்குள்ளாக்கப்படுவார் என்று நான் அஞ்சுகிறேன்” என்று கூறிவிட்டு, பனூ அப்தி ஷம்ஸ் குலத்தைச் சேர்ந்த தம் மருமகனை – (அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை) – அவர் தம்மிடம் நல்ல மருமகனாக நடந்து கொண்டதைக் குறித்து (நினைவு கூர்ந்து) புகழ்ந்தார்கள். ‘அவர் என்னிடம் பேசியபோது உண்மையே சொன்னார். எனக்கு வாக்குறுதியளித்து அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார். மேலும், நான் அனுமதிக்கப்பட்ட ஒன்றைத் தடை செய்யக் கூடியவன் அல்லன்; தடை செய்யப்பட்ட ஒன்றை அனுமதிக்கப்பட்டதென்று அறிவிக்கவும் மாட்டேன். ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! இறைத்தூதர் (ஸல்) அவர்களின் மகளும் (அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் (ஒரே நபருடைய மணபந்தத்தில்) ஒன்று சேர முடியாது” என்று கூறினார்கள்.📔📔📔


 *புஹாரி :3110 அலி பின் ஹூஸைன் (ரலி).* 


📚📚📚1592. அலீ (ரலி) (ஃபாத்திமா இருக்கவே,) அபூ ஜஹ்லுடைய மகளை (இரண்டாம் தாரமாக மணம் புரிந்து கொள்ளப்) பெண் பேசினார்கள். அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) கேள்விப்பட்டார்கள். உடனே அவர்கள் (தம் தந்தையான) இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, ‘(தந்தையே!) உங்கள் சமுதாயம் உங்களுடைய மகள்களுக்காக (அவர்கள் மனத்துன்பத்திற்கு ஆளாக்கப்படும் போது) நீங்கள் கோபம் கொள்ளமாட்டீர்கள் என்று கருதுகிறது. (உங்கள் மருமகனும் என் கணவருமான) இந்த அலீ, அபூ ஜஹ்லுடைய மகளை மணக்கவிருக்கிறார்” என்று கூறினார்கள். உடனே, ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (உரையாற்ற) எழுந்தார்கள். அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, ‘நிற்க, அபுல் ஆஸ் இப்னு ரபீஉவை (என் மூத்த மகள் ஸைனபுக்கு) மணம் முடித்து வைத்தேன். அவர் என்னிடம் (தன் மனைவியைத் திருப்பி அனுப்பி விடுவதாக வாக்களித்துப்) பேசினார்; (பேசியபடி) வாய்மையுடன் நடந்து கொண்டார். ஃபாத்திமா என்னில் ஒரு பகுதியாவார். எவரும் அவருக்குத் துன்பம் தருவதை நான் வெறுக்கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதருடைய மகளும் அல்லாஹ்வின் பகைவனுடைய மகளும் ஒரே மனிதரிடம் ஒன்று சேர முடியாது. என்று கூறினார்கள். எனவே, அலீ (ரலி) (அபூ ஜஹ்லுடைய மகளைப்) பெண் பேசுவதை விட்டு விட்டார்கள்.📚📚📚


 *புஹாரி : 3729 அல் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி).* 


 *✍✍✍1593. நபி (ஸல்) அவர்களின் துணைவியர்களான எங்களில் ஒருவர் கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் (நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிக் கொண்டிருந்தபோது) அவர்கள் அருகில் இருந்துகொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா (ரலி) நடந்து வந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் நடை நபி (ஸல்) அவர்களின் நடைக்கு ஒத்ததாகவே இருந்தது. ஃபாத்திமாவைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள், ‘என் மகளே! வருக!” என்று வாழ்த்தி வரவேற்றார்கள். பிறகு அவரை தம் ‘வலப்பக்கத்தில்’ அல்லது ‘இடப் பக்கத்தில்’ அமர்த்திக்கொண்டு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார். அவரின் துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ, இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார். அப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்துகொண்டு ஃபாத்திமாவிடம், ‘எங்களை விட்டுவிட்டு உங்களிடம் மட்டும் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே!” என்று கூறிவிட்டு, இறைத்தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய அந்த இரகசியம் குறித்து ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா அவர்கள், ‘இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஃபாத்திமா அவர்களிடம் நான், ‘உங்களின் மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்துக் கேட்கிறேன். அந்த இரகசியம் என்ன என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்” என்றேன். ஃபாத்திமா, ‘சரி. இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்)” என்று கூறிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார். முதலாவது முறை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னபோது (பின் வருமாறு) சொன்னார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதிக்காட்டி நினைவூட்டுவார். ஆனால், அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கி விட்டதாகவே கருதுகிறேன். எனவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடி (இவ்வுலகைவிட்டு) சென்று விடுவேன். எனவேதான், உங்களுக்கு முன்னிலையில் அவ்வாறு அழுதேன். என்னுடைய பதற்றத்தைக் கண்டபோது நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, ‘ஃபாத்திமா! ‘இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு’ அல்லது ‘இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு’ தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?’ என்று இரகசியமாகக் கேட்டார்கள். (எனவே, நான் மகிழ்ந்து சிரித்தேன்)✍✍✍* 


 *🌐🌐🌎மனிதர்களில் ஏழ்மையானவர்தான் சிறப்பிற்குரியவர்🌎🌎🌐* 


⛱⛱⛱செல்வமும் செல்வாக்கும் பெற்ற’) ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அருகில் நடந்து சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம்மருகில் அமர்ந்திருந்த ஒருவரிடம் ‘இவரைப்பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். அதற்கு அவர் ‘மக்களில் இவர் ஒரு பிரமுகர் ஆவார். அல்லாஹ்வின் மீதாணையாக இவர் பெண் கேட்டால் இவருக்கு மண முடித்து வைக்கவும். இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படவும் தகுதியான மனிதர் ஆவார்’ என்று பதிலளித்தார்.⛱⛱⛱


 *✍✍✍அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் சற்று நேரம் அமைதியாக இருந்தார்கள். பின்பு மற்றொரு மனிதர் (அவ்வழியாகச்) சென்றார் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) (முதல் கேட்ட அதே நண்பரிடம்) ‘இவரைக் குறித்து நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?’ என்று கேட் டார்கள் அதற்கு அவர்* 
‘ *அல்லாஹ்வின் தூதரே! இவர் ஏழை முஸ்லிம்களில் ஒருவராவார் இவர் பெண் கேட்டால் மணமுடித்து வைக்கப்படாமலும் இவர் பரிந்து பேசினால் ஏற்றுக்கொள்ளப்படாமலும் இவர் பேசினால் செவியேற் கப்படாமலும் இருக்கத் தகுதியானவர்’ என்று பதிலளித்தார் அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ‘அவரைப்போன்ற செல்வந்தர்கள் இந்த பூமி நிரம்ப இருந்தாலும் அவர்கள் அனைவரையும் விட இந்த ஏழை மேலானவர்’ என்று கூறினார்கள்✍✍✍.* 


 *அறிவிப்பாளர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)இ* 

 *நூல் புகாரி (5091)* 


🌈🌈🌈நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள்: ‘நான் (மிஹ்ராஜ்) பயணத்தின் போது சொர்கத்தை எட்டிப் பார்த்தேன் அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப்பார்த்தேன் அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களையே கண்டேன்’🌈🌈🌈


 *அறிவிப்பாளர்: இம்ரான் இப்னு ஹுஸைன்(ரலி)இ* 

 *நூல்: புகாரி (6449*)


 *✍✍✍சிறப்பிற்குரிய நபர்களாக பெரிய செல்வந்தர்களையோ அல்லது சமுதாயத் தலைவர்களையோ கின்னஸ் சாதனை படைத்தவர்களையோ கண்டுபிடிப்பாளர்களையோ சொர்கத்தில் இருந்ததாக நபியவர்கள் கூறவில்லை மாறாக ஏழை யானவர்களையே நபியவர்கள் கூறியுள்ளார்கள்.✍✍✍* 


🔰🔰🔰நாமும் சிறப்பிற்குரிய மனிதனாக மாறவேண்டும் என்றால் திருமறைகுர் ஆன் சொல்கின்ற பாதையில் நம் வாழ்க்கை பயணத்தை தொடரவேண்டும்.🔰🔰🔰


 *✍✍✍அல்லாஹ் கூறுகின்றான்: ‘இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக்கொள்ளுங்கள் எதைவிட்டும் உங்களை தடுத்தாரோ அதை விட்டும் விலகிக் கொள்ளுங்கள்’.✍✍✍* 


 *(அல்குர்ஆன் 59:7)* 


🔴🔴🔴அல்லாஹ்வையும் இறுதி நாளையும் அவர்கள் நம்புகின்றனர் நன்மையை ஏவுகின்றனர் தீமையை தடுக்கின்றனர் நல்ல காரியங்களை நோக்கி விரைகின்றனர் அவர்களே நல்லோர்.🔴🔴🔴


 *(அல்குர்ஆன் 3:116)* 


 *✍✍✍நமக்கு முன்மாதிரியாக திருகுர்ஆன் நபிமொழிகளில் கூறப்பட்டுள்ள இறைவனை சரியாக புரிந்து நடந்த நல்லவர்களின் செயல்களை பின்பற்றி இம்மைஇ மறுமை நற்பயன்களை பெற அல்லாஹ் அருள்புரிவானாக!*✍✍✍ 


 *👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👧நல்லவர்கள் கஷ்டப்படுவதும்👺👺👺 தீயவர்கள் சுகமாக வாழ்வதும்👨‍👨‍👧👨‍👨‍👧👨‍👨‍👧* 


*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம் 53*