*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*🔥 ஆய்வுக் கட்டுரை { 02 } 🔥*
*🌺மவ்லிதும் - மீலாதும் 🌺*
*✍🏻.....தொடர் ➖0️⃣9️⃣*
*🏮🍂மவ்வலிதும், மீலாதும் என்ற தலைப்பில் மவ்லித் ஓதுவதற்கும், மீலாது விழாக் கொண்டாடுவதற்கும் மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது; அதற்கு நபிமொழிகளில் சான்றுகள் உள்ளன என்று சில ஆதாரங்களை வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற* ஊடகங்களில் சிலர் வெளியிட்டுள்ளனர்.
*🏮🍂இந்த ஆதாரங்கள் சரியானவையா❓ அவர்கள் கூறும் கருத்துக்குச் சான்றாக இருக்கிறதா❓ என்பதைப் பார்த்து வருகிறோம்.*
*🏮🍂இதுவரை இறைத்தூதர்களுக்கு மவ்லித் ஓதுவதற்கு ஆதாரம் என்று உளறியவர்கள், வலிமார்களுக்கு மவ்லித் ஓதுவதற்கும் ஆதாரம் உள்ளது என்று சில நபிமொழிகளை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.* இவர்கள் எடுத்து வைக்கும் நபிமொழிகள் இவர்களின் வாதங்களுக்கு ஆதாரமாக உள்ளதா என்பதைப் பாருங்கள்.
*🔥வலிமார்கள் மீது*
*மௌலித் ஓதுவதற்கு*
*ஆதாரம்❓*
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (7 / 25)
5147- حَدَّثَنَا مُسَدَّدٌ ، حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ ، حَدَّثَنَا خَالِدُ بْنُ ذَكْوَانَ *قَالَ : قَالَتِ الرُّبَيِّعُ بِنْتُ مُعَوِّذٍ ابْنِ عَفْرَاءَ جَاءَ النَّبِيُّ صلى الله عليه وسلم فَدَخَلَ حِينَ بُنِيَ عَلَيَّ فَجَلَسَ عَلَى فِرَاشِي كَمَجْلِسِكَ مِنِّي فَجَعَلَتْ جُوَيْرِيَاتٌ لَنَا يَضْرِبْنَ بِالدُّفِّ وَيَنْدُبْنَ مَنْ قُتِلَ مِنْ آبَائِي يَوْمَ بَدْرٍ إِذْ قَالَتْ إِحْدَاهُنَّ وَفِينَا نَبِيٌّ يَعْلَمُ مَا فِي غَدٍ فَقَالَ دَعِي هَذِهِ وَقُولِي بِالَّذِي كُنْتِ تَقُولِينَ.*
_*🍃எனக்குக் கல்யாணம் நடந்த நாள் (காலை) நபி (ஸல்) அவர்கள் (எங்கள் வீட்டுக்கு) வந்தார்கள். எனக்கருகில் நீங்கள் அமர்ந்திருப்பது போன்று நபி (ஸல்) அவர்கள் எனது விரிப்பின் மீது அமர்ந்தார்கள். (அங்கு) சில (முஸ்லிம்) சிறுமியர் (சலங்கையில்லா) கஞ்சிராக்களை அடித்துக் கொண்டு பத்ருப் போரில் கொல்லப்பட்ட எம் முன்னோரைப் புகழ்ந்து (இரங்கல்) பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒரு சிறுமி, ‘‘எங்களிடையே ஓர் இறைத்தூதர் இருக்கிறார். அவர் நாளை நடக்கவிருப்பதையும் அறிவார்’’ என்று கூறினாள். உடனே நபி (ஸல்) அவர்கள், ‘‘(இப்படிச் சொல்லாதே!) இதை விட்டுவிட்டு முன்பு நீ சொல்லிக் கொண்டிருந்ததை (வேண்டுமானால்) சொல்!’’ என்று கூறினார்கள்.*_
*🎙️அறிவிப்பவர்:*
*ருபய்யிவு பின்த்*
*முஅவ்வித்(ரலி)*
*📚நூல்கள்: புகாரி (5147),*
*திர்மிதீ (1010),*
*அபூதாவுத் (4276)📚*
*🏮🍂பத்ருப் போரில் கலந்து கொண்டு வீரதீர செயல்களைச் செய்த தம் முன்னோர்கனைப் பற்றி புகழ்ந்து பாடுவது வலிமார்கள் என்று இவர்களாகப் பட்டியல் போட்டு வைத்திருக்கும் நபர்களுக்கு மவ்லித் ஓதுவதற்கு எப்படி ஆதாரமாக அமையும்❓*
*🏮🍂வலிமார்கள் என்று இவர்கள் சொல்லும் நபர்கள் எந்தப் போர்க்களத்தில் இஸ்லாத்திற்காகப் போராடினார்கள்❓ இன்று வலிமார்களுக்கு மவ்லித் ஓதுபவர்கள் இந்த வலிமார்களின் வாரிசுகளா❓*
*🏮🍂எள்ளளவும் தொடர்பில்லாத ஒரு நபிமொழியை வலிமார்களுக்கு மவ்லித் ஓத ஆதாரமாகக் காட்டுபவர்களை என்னவென்று சொல்வது❓*
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (4 / 30)
2834- حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مُحَمَّدٍ ، حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو ، حَدَّثَنَا أَبُو إِسْحَاقَ *عَنْ حُمَيْدٍ قَالَ : سَمِعْتُ أَنَسًا ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، يَقُولُ خَرَجَ رَسُولُ اللهِ صلى الله عليه وسلم إِلَى الْخَنْدَقِ فَإِذَا الْمُهَاجِرُونَ وَالأَنْصَارُ يَحْفِرُونَ فِي غَدَاةٍ بَارِدَةٍ فَلَمْ يَكُنْ لَهُمْ عَبِيدٌ يَعْمَلُونَ ذَلِكَ لَهُمْ فَلَمَّا رَأَى مَا بِهِمْ مِنَ النَّصَبِ وَالْجُوعِ قَالَ اللَّهُمَّ إِنَّ الْعَيْشَ عَيْشُ الآخِرَهْ فَاغْفِرْ لِلأَنْصَارِ وَالْمُهَاجِرَهْ.*
*فَقَالُوا مُجِيبِينَ لَهُ نَحْنُ الَّذِينَ بَايَعُوا مُحَمَّدًا عَلَى الْجِهَادِ مَا بَقِينَا أَبَدًا*
_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின் போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக்காகச் செய்திட அவர்களிடம் அடிமை(ஊழியர்)கள் இல்லை.*_
_*அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்ட போது நபி (ஸல்) அவர்கள், ‘‘இறைவா! (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான். ஆகவே, அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி’’ என்று (பாடிய வண்ணம்) கூறினார்கள். இதைக் கேட்ட நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளித்த வண்ணம், ‘‘நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்’’ என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி தந்துள்ளோம் என்று (பாடிய படி) கூறினார்கள்.*_
*🎙️அறிவிப்பவர்:*
*அனஸ் (ரலி)*
*📚நூல்: புகாரி (2834)📚*
*🏮🍂அகழ் போரின் போது நபித்தோழர்கள் பட்ட கஷ்டத்தைக் கண்ட நபிகளார் கவிதை நடையில் அவர்களைப் புகழ்ந்தார்கள்.* இஸ்லாத்திற்காகவே இவ்வளவு கடும் குளிரிலும் பணி செய்கிறார்கள். *இவர்களை இந்தப் பணி செய்ய வைத்தது மறுமையின் வாழ்க்கையே என்று நபிகளாரின் கூற்று, ஊதுபத்தி, வாழைப்பழம் மற்றும் உணவுப் பண்டங்களை வைத்து வலிமார்களுக்கு மவ்லித் ஓதுவதற்கு ஆதாரமாக உள்ளதா❓* அல்லது மறுமை வாழ்க்கைக்காக எந்தத் தியாகத்தையும் செய்ய வேண்டும் என்ற படிப்பினையாக உள்ளதா?
صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري – (5 / 155)
4146- حَدَّثَنِي بِشْرُ بْنُ خَالِدٍ ، أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ ، عَنْ شُعْبَةَ ، عَنْ سُلَيْمَانَ ، عَنْ أَبِي الضُّحَى ، *عَنْ مَسْرُوقٍ قَالَ دَخَلْنَا عَلَى عَائِشَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهَا ، وَعِنْدَهَا حَسَّانُ بْنُ ثَابِتٍ يُنْشِدُهَا شِعْرًا يُشَبِّبُ بِأَبْيَاتٍ لَهُ وَقَالَ : حَصَانٌ رَزَانٌ مَا تُزَنُّ بِرِيبَةٍ .. وَتُصْبِحُ غَرْثَى مِنْ لُحُومِ الْغَوَافِلِ. فَقَالَتْ لَهُ عَائِشَةُ لَكِنَّكَ لَسْتَ كَذَلِكَ قَالَ مَسْرُوقٌ فَقُلْتُ لَهَا لِمَ تَأْذَنِينَ لَهُ أَنْ يَدْخُلَ عَلَيْكِ وَقَدْ قَالَ اللَّهُ تَعَالَى : {وَالَّذِي تَوَلَّى كِبْرَهُ مِنْهُمْ لَهُ عَذَابٌ عَظِيمٌ} فَقَالَتْ وَأَىُّ عَذَابٍ أَشَدُّ مِنَ الْعَمَى قَالَتْ لَهُ إِنَّهُ كَانَ يُنَافِحُ ، أَوْ يُهَاجِي ، عَنْ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم.*
_*🍃நாங்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களுக்கு அருகில் (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அமர்ந்து கவிபாடிக் கொண்டும் தம் பாடல்களால் (ஆயிஷாவை) பாராட்டிக் கொண்டுமிருந்தார்கள். (தமது பாடல்களில்) ஹஸ்ஸான், ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி, (அவர்கள்) கற்பொழுக்கம் மிக்கவர்கள்; கண்ணியம் நிறைந்தவர்கள்; எந்த சந்தேகத்தின் பேரிலும் குற்றம்சாட்டப்பட இயலாதவர்கள். (புறமும் அவதூறும் பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்து விடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்கள் என்று பாடினார்கள்.*_
*🎙️அறிவிப்பவர்:*
*மஸ்ரூக்*
*📚நூல்: புகாரி(4416)📚*
*🏮🍂இந்தச் செய்தியில் வலிமார்களுக்கு மவ்லித் ஓதலாம் என்று எங்குள்ளது❓ அப்பாவிப் பெண்கள் மீது அவதூறு சொன்னால் அவர்களை எச்சரிக்கும் வாசகம் தானே உள்ளது.* இதை வலிமார்களுக்கு மவ்லித் ஓதலாம் என்று யாராவது எடுத்துக் கொள்வார்களா? *இவர்கள் சொல்வது உண்மையாக இருந்தால் ஹஸ்ஸான் (ரலி) அவர்கள் படித்த இந்த கவிதைகளைத் தான் முஹைதீன் மவ்லித், சாகுல்ஹமீத் மவ்லித்களில் ஓதுகிறார்களா❓*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻