பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, July 1, 2010

ஏன் இட ஒதுக்கீடு அவசியம்?

ஏன் இட ஒதுக்கீடு அவசியம்?

மகத்தான நீதியாளனாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகின்றான்:


மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலிருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்துக் கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும் கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் அதிகம் (இறைவனை) அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர்.அல்லாஹ் அறிந்தவன். நன்கறிபவன். (அல்குர்ஆன் 49:13)



பாரத நாடு! பழம் பெரும் நாடு! வேற்றமையில் ஓற்றுமை! உணர்வால் ஒன்றுபட்டவர்கள்! காஷ்மீரில் இருந்து கன்னியாகுமரி வரை பாரத அன்னையின் மடியில் தவழும் குழந்தைகள் நாங்கள்! ஆக்ரோஷ தேசபக்தி! ஆவேச வசனங்கள்! தேசியத்தையும் ஒற்றுமையையும் வலியுறுத்தி தெருவெங்கும் வாசகங்கள்! அரசு வண்டிகளில் சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் போதிக்கும் வசனங்கள்!எல்லாமிருந்தும் என்ன பயன்!முஸ்லிம்;சமுதாயத்தை மட்டும் குற்ற உணர்வோடு தனிமைப்படுத்திப் பார்க்கும் போக்கு குறையவில்லை.

இதனால் மேற்சொன்ன தேசபக்தி வாசகங்கள் தொலைநோக்குப் பார்வை கொண்ட சூழ்ச்சியின் வெளிப்பாடோ என்று எண்ணத் தோன்றுகிறது. எல்லாத் தரப்பினருக்கும் இடஒதுக்கீட்டை அள்ளிக் கொடுக்க அரசியல் சாசனம் அறிவுத்துகிறது. வருகின்ற ஆட்சியாளர்களுக்கோ முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டும் கிள்ளிக் கொடுக்கக்கூட மனம் வருவதில்லை. எங்கே நாம் உணர்வால் ஒன்றுபட்டவர்கள்!?

மத்திய மாநில அரசுகள் கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு 10 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும் என்று ரங்கநாத்மிஸ்ரா கமிஷன் மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. 2007 மே மாதம் தரப்பட்ட இந்த அறிக்கையை 2ஆண்டுகள் வரை கிடப்பிலேயே போட்ட மத்திய அரசு பின்பு பலவித நெருக்கடிகளை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.12.2009 அன்று மக்களவையில் தாக்கல் செய்தது.


முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு தர வேண்டும் என்ற எண்ணம் மத்திய அரசக்கு இருந்திருந்தால் பாராளுமன்றத்தில் அறிக்கையை வைத்ததோடு நடவடிக்கை குறிப்பையும் (Action Taken Report – ATR) சேர்த்தே வைத்திருக்கும். இப்படி வைக்காமல் இருந்ததின் மூலம் காங்கிரஸ் அரசு முஸ்லிம்களுக்கு வஞ்சகம் செய்தது.

மத்திய அரசின் கல்வி, வேலைவாய்ப்பில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 சதவீதமும், தாழ்த்தப்பட்டோருக்கு 15 சதவீதமும் பழங்குடியினருக்கு 7.5சதவீதமும் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.மொத்தத்தில் இது 49.5 சதவீதமாகும். இடஒதுக்கீட் டின் அளவு 50 சதவீதத்தை தாண்டக்கூடாது என்று உச்சநீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. அப்படிப் பார்த்தால் மீதமுள்ள 0.5சதவீத இடஒதுக்கீட்டைத்தான் முஸ்லிம்களுக்கு தரமுடியும். 10 சதவீத இடஒதுக்கீடு தருவதற்கு சாத்தியமில்லை.

எனவே, முஸ்லிம்கள் இதை உணர்ந்து ரங்கநாத்மிஸ்ரா பரிந்துரையை அமுல்படுத்துமாறு கேட்கக்கூடாது என்று சிலர் பேசி வருகிறார்கள். இந்த வாதத்தை வைப்பவர்கள் முஸ்லிம்களின் இடஒதுக்கீடு உரிமையை எதிர்ப்பவர்கள் என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்தியாவில் 50 கோடி பிற்படுத்தப்பட்ட மக்கள் உள்ளனர். இவர்களில் பாதிப்பேர் முஸ்லிம்கள். இப்படிப் பிற்படுத்தப்பட் டோரில் பாதியாக உள்ள முஸ்லிம்களுக்கு, பிற்படுத்தப்பட்டோரு க்கான 27 சதவீதத்திலிருந்து 10 சதவீதத்தை தனியாகப் பிரித்து முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு கொடுக்கலாம். மீதமுள்ள 17 சதவீத இட ஒதுக்கீட்டை இந்து பிற்படுத்தப்பட் டோருக்கு கொடுக்கலாம்.

இந்து தலித்துகளும், இந்து பிற்படுத்தப்பட்டோரும் மக்கள் தொகையில் சமமாகவே உள்ளனர். இந்து தலித்துகளுக்கு ஏற்கனவே 15 சதவீத இடஒதுக்கீடு இருந்து வருகிறது. அது போல் இந்து பிற்படுத்தப்பட்டோருக்கு 17 சதவீத இடஒதுக்கீடு வழங்கினால் அது சமூகநீதிக்கு உட்பட்டதாகவே இருக்கும்.



இந்து பிற்படுத்தப்பட்டோரும், முஸ்லிம் பிற்படுத்தப்பட்டோரும் சேர்த்துத் தான் 27 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்த 27 சதவீத இடஒதுக்கீட்டில் இந்து பிற்படுத்தப்பட்டவர்கள் முழுக்க முழுக்க பயன் பெறுகிறார்களே தவிர முஸ்லிம் பிற்படுத்தப்பட்டவர்கள் பயன் பெறவில்லை.

அப்படிச் சொல்வதை விட முஸ்லிம் பிற்படுத்தப்பட்டவர்களுக்கு உரிய இடங்களை இந்து பிற்படுத்தப்பட்டவர்கள் சேர்த்து அனுபவிக்கிறார்கள் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.

இவ்வாறு ஒருவருக்கு உரிய உரிமையை மற்றொருவர் பறித்துக் கொள்வது ஜளநாயகத்தில் நடக்கக் கூடாது.அதனால் பிற்படுத் தப்பட்டோருக்கான 27 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து தனியாக 10 சதவீதத்தை பிரித்து முஸ்லிம்களுக்கு கொடுத்து இந்தத் தவறைச் சரி செய்ய வேண்டும். இதைச் செய்வதற்கு அரசியல் கட்சிகளுக்கு மனமில்லையென்றால் இரண்டாவது வழியும் இருக்கிறது.அதுதான் அரசியல் சட்டத் திருத்தம்.

தாழ்த்தப்பட்டவர்கள், மழைவாழ்மக்கள், ஆங்கிலோ இந்தியர்கள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்காக அரசியல் சாசனம் பலமுறை திருத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட பிரிவினருக்கு பத்து ஆண்டுகளுக்குமேல் இடஒதுக்கீடு தரக் கூடாதென முன்னர் வரையறுக்கப்பட்டிருக்கிறது,

ஆனால் 1960 ஆம் ஆண்டு இந்திய அரசியல் சாசனத்தை 8வது முறையாக திருத்தி, இந்த இடஒதுக்கீடு மேலும் 10 ஆண்டுகளுக்கு கொடுக்க வழிவகைச் செய்யப்பட்டது. பின்னர் 1969ஆம் ஆண்டு 23வது முறையாக அரசியல் சாசனத்தை திருத்தி மேலும் பத்தாண்டுகளுக்கு இடஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டது.

பின்னர் 1980 ஆம் ஆண்டு 45வது முறையாக அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் இந்த இடஒதுக்கீடு மேலும் பத்தாண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. 1984 ஆம் ஆண்டு அரசியல் சாசனத்தின் 330, 332 ஆகிய பிரிவுகளை 51வது திருத்தத்தின் மூலம் திருத்தி மேகாலயா, அருணாச்சலப் பிரதேசம், மிசோரம் ஆகிய மாநிலங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் இடஒதுக்கீடு கிடைக்க வழிவகை செய்யப்பட்டது.

பின்னர் 1987 ஆம் ஆண்டு 57வது திருத்தம் செய்து நாகலாந்து, மேகாலயா, மிசோரம், அருணாச்சலபிரதேசம் ஆகிய மாநிலங்களில் வாழும் பழங்குடியினருக்கு மக்களவையில் இடஒதுக்கீடு தரப்பட்டது. 1990ஆம் ஆண்டு 62வது அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மற்றும் ஆங்கிலோ இந்தியர்களுக்கு மேலும் பத்தாண்டுகளுக்கு இடஒதுக்கீடு நீட்டிக்கப்பட்டது.


1992ஆம் ஆண்டு 72வது அரசியல் சாசன திருத்தத்தின் மூலம் பஞ்சாயத்து தேர்தலில் பழங்குடியின மற்றும் பெண்களுக்கு தனித் தொகுதிகள் ஒதுக்க வழிவகை செய்யப்பட்டது. 1994ஆம் ஆண்டு 76வது அரசியல் அமைப்பு சட்டத் திருத்தத்தின் மூலம் பிற்படுத்தப்பட்டோர், மலைசாதியினருக்கு கல்வி வேலை வாய்ப்பில் இடஒதுக்கீடு வழங்க வகை செய்யப்பட்டது.

பின்னர் 1995ஆம் ஆண்டு 77வது அரசியல் சாசன திருத்தம் செய்து தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கு பதவி உயர்வில் முன்னுரிமை வழங்க வழிவகை செய்யப்பட்டது. 1999 ஆம் ஆண்டு அட்டவணை வகுப்பினர் மற்றும் ஆங்கிலோ இந்தியன் நியமனம் ஆகியவை 2010ஆம் ஆண்டுவரை நீட்டிக்க 79வது அரசியல் சாசன திருத்தம் செய்யப்பட்டது.

எஸ்.சி, எஸ்.டி வகுப்பினருக்கு மருத்துவம், பொறியியல் போன்ற படிப்புகளுக்கு அடிப்படை மதிப்பெண்ககளில் மாற்றம் கொண்டுவர 2000ஆம் ஆண்டு 82வது அரசியல் சாசன திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

பஞ்சாயத்து ராஜ் முறைப்படி அருணாச்சலப் பிரதேசத்தில் இடஒதுக்கீடு செய்ய 2000ஆம் ஆண்டு 83வது அரசியல் சாசன திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. உயர்கல்வியில் எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு இட ஒதுக்கீடு வழங்க 2006ஆம் ஆண்டு 93வது அரசியல் சாசன திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.

இப்படி தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், ஆங்கிலோ இந்தியன், பிற்படுத்தப்பட்டோர் ஆகியோரின் நலனுக்காக 13 முறை அரசியல் சாசனத்தை திருத்தி இருக்கிறபோது 25 கோடி முஸ்லிம்களின் நலனுக்காக ஒரு முறை அரசியல் சாசனத்தை திருத்தினால் என்ன? அந்த வகையில் அரசியல் சாசனத்தை திருத்தி மத்திய, மாநில அரசின் கல்வி, வேலை வாய்ப்பு, அரசியல் அதிகாரம் போன்றவற்றில் முஸ்லிம்களுக்கு அரசியல் கட்சிகள் இடஒதுக்கீடு கொடுக்க வேண்டும்.


அப்படி கொடுக்குமாறு கட்சிகளை வலியுறுத்தித் தான் இன்ஷாஅல்லாஹ் வரும் ஜூலை 4ஆம் தேதியன்று சென்னைத் தீவுத்திடலில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வரலாறு காணாத மாபெரும் (ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் உரிமை) மாநாட்டை நடத்தத் தீர்மானித்துள்ளது.

தமிழகத்தில் பற்ற வைக்கப்படும் இந்த இட ஒதுக்கீடு தீ இந்தியா முழுவதும் பரவுவது நிச்சயம் இன்ஷாஅல்லாஹ்!

அடிமை இந்தியாவிலாவது முஸ்லிம்களுக்கென்று ஓரளவேனும் அரசியல் அதிகாரத்தில் கண்ணியம் இருந்ததைப் பார்க்க முடிகிறது.சுதந்திர இந்தியாவிலோ திட்டமிட்டு வஞ்சிக்கப்பட்டிருப்பதைக் காண முடிகிறது.அரசியல் அதிகாரத்தின் உயர் மட்டங்களிலும், பதவிகளிலும் முஸ்லிம்களுக்கென்று ஏதேனும் அந்தஸ்து வழங்கப்பட்டிருக்கிறதா? ரப்பர் ஸ்டாம்பாக இருக்கும் அந்தஸ்தில் உள்ள ஜனாதிபதி போன்ற பதவிகளைத் தவிர அரசோச்சும் செல்வாக்கில் உள்ள பிரதமர்,முதல்வர், தலைமைத் தேர்தல் ஆணையர், சட்டசபை, மக்களவை சபாநாயகர் போன்ற பதவிகளில் நாடு சுதந்திரமடைந்ததிலிருந்து எத்தனை முஸ்லிம்கள் இருந்துள்ளனர்?! உங்கள் பார்வைக்கு கீழே ஒரு பட்டியலைத் தருகிறோம்.


பிரதமர்கள்
இந்தியாவின் பிரதமர்களாக

ஜவஹர்லால் நேரு(1947-1964)

குல்ஜாரிலால் நந்தா(1964 மே-ஜுன் தற்காலிகம்)

லால் பகதூர் சாஸ்திரி(1964-1966)

குல்ஜாரிலால் நந்தா(1966 ஜனவரி 11-24 தற்காலிகம்)

இந்திராகாந்தி(1966-1977)

மொரார்ஜி தேசாய்(1977-1979)

கரண்சிங்(1979-1980)

இந்திரா காந்தி (1980-1984)

ராஜீவ் காந்தி (1984-1989)

வி.பி.சிங்(1989-1990)

சந்திரசேகர்(1990-1991)

வி.பி.நரசிம்மராவ்(1991-1996)

வாஜ்பேய்(16-5-1996 to 28-05-1996)

தேவகௌடா(01-6-96 to 20-4-97)

வாஜ்பேய்(1999-2004)

மன்மோகன்சிங் (2004முதல்இன்று வரை) இருந்துள்ளனர்.

சுதந்திரம் பெற்று 64 ஆண்டுகள் ஆன பிறகும் இந்த நாட்டில் 5ல் ஒரு பங்காக உள்ள முஸ்லிம்களில் ஒருவர் கூட பிரதமராக ஆக முடியவில்லை.அப்படிச் சொல்வதை விட பிரதமர் பதவிக்கான போட்டியில் கூட இல்லை என்பது எவ்வளவு வருத்தமான செய்தி.

இந்தியாவின் பிரதமர்களாக காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்தான் நீண்ட காலமாக இருந்துள்ளனர்.இவர்கள் இந்த பதவிக்கு வருவதற்கு முஸ்லிம்களின் ஓட்டு தான் பெரும் காரணமாக இருந்துள்ளது.இப்படி முஸ்லிம்களின் ஓட்டுகளைப் பெற்று,பதவிகளை பிடித்த காங்கிரஸ் பிரதமர் பதவிக்கு முஸ்லிம் வராமல் பார்த்துக் கொண்டது ஒடுக்கு முறை இல்லையா?


தலைமை தேர்தல் ஆணையர்கள்
இந்தியாவின் தலைமை தேர்தல் ஆணையர்களாக

சுகுமார் சென்(1950-1958)

கே.வி.கே.சுந்தரம்(1958-1967)

எஸ்.பி.சென்வர்மா(1967-1972)

நாகேந்திர சிங்(1972-1973)

டி.ஸ்வாமிநாதன்(1973-1977)

எஸ்.எஸ்.ஷக்தர்(1977-1982)

ஆர்.கே.திரிவேதி(1982-1985)

பெரிசாஸ்திரி(1985-1990)

வி.எஸ்.ரமாதேவி(1990 நவம்பர் 26 முதல் டிசம்பர் 11 வரை),

டி.என்.சேஷன்(1990-1996)

எம்.எஸ்.கில்(1996-2001),

ஜே.எம்.லாப்டோ(2001 to 2004)

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி(2004-2005 பி.பி.தாண்டன் (2005-2006), என்.கோபாலசாமி(2006-2009)

நவீன் சாவ்லா(2009 முதல் இன்று வரை)


இந்தியா சுதந்திரம் பெற்றது முதல் மொத்தம் பதினைந்து தலைமைத் தேர்தல் ஆணையர்கள்இருந்துள்ளனர்.இவர்களில் ஒருவர் கூட முஸ்லிம் கிடையாது.

இந்தியாவின் தலைமைத் தேர்தல் ஆணையர்களாக இருக்கும் தகுதி முஸ்லிம்களுக்கு இல்லையா? அல்லது தகுதி இருந்தும் ஒடுக்கப்பட்டார்களா?!


தமிழக முதல்வர்கள்
தமிழகத்தின் முதலமைச்சராக தெலுங்கு சமூகத்தைச் சேர்ந்த



ராமசாமி ரெட்டியார்(1947-1949)

இராஜபாளையத்தைச் சேர்ந்த பி.எஸ்.குமாரசாமி ராஜா (1949-1952)

பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்த ராஜாஜி (1952-1954)

நாடார் சமூகத்தைச் சேர்ந்த காமராஜர்(1954முதல் 1963வரை3முறை)

உயர் சாதியைச் சேர்ந்த பக்தவச்சலம் (1963-1967)

முதலியார் சமூகத்தைச் சேர்ந்த அண்ணாத்துரை (1967-1969)

ஆகியோரும் இசை வேளாளர் சமூகத்தைச் சேர்ந்த கருணாநிதி 5 முறையும்

கேரள மாநிலத்தைச் சேர்ந்த எம்.ஜி.ஆர்.(1977 முதல் 1987 வரை 3 முறையும்)

அவரது மனைவி ஜானகி ஒரு முறையும் (1988 ஜனவரி 7 முதல் 30 வரை)

பார்ப்பன இனத்தைச் சேர்ந்த ஜெயலலிதா 3 முறையும் இருந்துள்ளனர்.

முஸ்லிம் சமூகத்தை விட குறைந்த எண்ணிக்கையில் உள்ள சமுதாயத்தைச் சேர்ந்த இவர்கள் தமிழகத்தின் முதல்வர்களாக ஆகியுள்ள போது முஸ்லிம்களால் முதல்வராக மட்டுமல்ல...முக்கிய பதவிகளைக் கூடத் தக்க வைக்க முடியவில்லை,காரணம் என்ன? முஸ்லிம்கள் ஒடுக்கப்பட்டது எப்படி?


தமிழக சபாநாயகர்கள்

தமிழக சட்டப்ரேவை சபாநாயகர்களாக சிவசண்முகப்பள்ளை(1946-1955), என்.கோபாலமேனன்(1955-56)

யு.கிருஷ்ணராவ்(1957-1961)

எஸ்.செல்லப்பாண்டி(1962-67)

சி.பா.ஆதித்தனார்(1967-1968)

புலவர் கே.கோவிந்தன்(1969-71)

கே.ஏ.மதியழகன்(1971-1972)

கே.கோவிந்தன்(1973-1977)

முனுஆதி(1977-1980)

கே.ராஜாராம்(1980-1985)

பி.எச்.பாண்டியன்(1985-1989)

தமிழ்க்குடிமகன் (1989-1991)

சேடப்பட்டி முத்தையா(1991-1996)

பி.டி.ஆர்.பழனிவேல்ராஜன்(1996-2002)

கே.காளிமுத்து(2001-06)

ஆர்.ஆவுடையப்பன் (19.05.2006 முதல் இன்று வரை)


தமிழக சட்டசபையின் சபாநாயகர்களாக இவ்வளவு பேர் இருந்திருக்க ஒரு முஸ்லிமுக்கு கூட வாய்ப்பே கிடைக்கவில்லை.

'அரபிக்கு அரபி அல்லாதவனை விட எந்த சிறப்பும் கிடையாது. வெள்ளையனுக்கு கருப்பனை விட எந்த சிறப்பும் கிடையாது இறையச்சத்தை தவிர' என்று நபி (ஸல்) கூறினார்கள். (திர்மிதி 3270)

அரசாங்கத்தின் செவிட்டு சிந்தனைகளை சிதறடிக்க!

அழகிய தீர்வு சமுதாயத்திற்கு உருவாகிட!

இடஒதுக்கீட்டு சங்கநாதத்தை தீவுத் திடலில் முழங்கிட!

இஸ்லாமிய சமுதாயமே இன்னும் 03 நாட்களே...

தயாராகி விட்டீர்களா...!?

ஜுலை 4 மாநாட்டிற்கு...


நோட்டீஸ் அன்பளிப்பு:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் துபை மண்டலம்

TNTJ –DUBAI & Al WASL HOSPITAL

இணைந்து நடத்தும் மாபெரும் இரத்ததான முகாம்

இன்ஷா அல்லாஹ்

நாள் : 02.07.2010 (வெள்ளிக் கிழமை)

நேரம் : சரியாக காலை 8.00 மணிக்கு

இடம் : AL WASL HOSPITAL

No comments:

Post a Comment