பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, July 10, 2010

சொர்க்கத்தை கடமையாக்கும் செயல்கள்

சொர்க்கத்தை கடமையாக்கும் செயல்கள்

இஸ்லாத்தின் முக்கியமான அடிப்படை, மறுமை வாழ்க்கையை நம்புவதாகும். மேலும் அந்த வாழ்க்கையில் சொர்க்கம் என்ற பூஞ்சோலையில் தங்கள் வாழ்க்கையை அமைத்து, நரகம் என்ற கொடுமையான வாழ்க்கையி­ருந்து தவிர்ப்பதற்கான நடவடிக்கைகளை இவ்வுலகத்தில் மேற்கொள்வதாகும்.மறுமையில் சொர்க்கத்தில் கிடைக்கும் மாபெரும் பாக்கியத்திற்கு நிகராக இவ்வுலகத்தில் எந்தப் பாக்கியமும் கிடையாது. அங்கு ஓர் அடி இடம்  கிடைத்தால் கூட இவ்வுலகத்தின் அனைத்து இன்பத்தை விடவும் மிகப் பெரியதாக இருக்கும்.

சொர்க்கத்தின் இன்பத்தை விளக்கும் போது நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்: ''சொர்க்கத்தில் ஒரு சாட்டை வைக்கும் அளவு இடம் (கிடைப்பது) உலகத்தையும் அதி­ருப்பவற்றையும் விடச் சிறந்ததாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி­)  நூல்கள்: புகாரீ (3250), திர்மிதீ (1572), இப்னுமாஜா (4321), அஹ்மத் (21732)
 
''உங்களில் ஒருவருக்குச் சொர்க்கத்தில் ஒரு வில் அளவுக்கு  அல்லது ஒரு பாதம் அளவுக்கு கிடைக்கும் இடம் இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வத்தையும் விடச் சிறந்ததாகும். சொர்க்கத்து மங்கையரில் ஒருவர் பூமியில் தோன்றினால் வானத்துக்கும் பூமிக்கும்  இடையே உள்ள பகுதிகள் எல்லாம் ஒளிரும். மேலும் அப்பகுதியில் அனைத்திலும் நறுமணம் கமழும். அந்த மங்கையின் தலையில் போடும் துண்டு (மட்டுமே) இந்த உலகத்தையும் அதிலுள்ள செல்வங்களையும் விட மேலானதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அனஸ் (ர­லி)  நூல்: புகாரீ (6568)

ஒரு வில்­லின் அளவு, அல்லது பாதத்தின் அளவு, அல்லது ஒரு சாட்டையின் அளவு ஒருவனுக்கு சொர்க்கத்தில் இடம் இடைப்பதே இவ்வுலகம், இவ்வுலகத்தில் உள்ள அனைத்தையும் விடச் சிறந்தது என்றால் இந்தச் சொர்க்கத்தைப் பெற நாம் எவ்வளவு முயற்சிகளை எடுக்க வேண்டும்?

வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என்றால் நாம் எவ்வளவு தூரம் இருந்தாலும் அங்கு சென்று வியாபாரம் செய்கிறோம். கடல் கடந்து பொருளாதாரத்தை ஈட்டச் செல்கிறோம். இதற்கே இவ்வளவு முயற்சி செய்தால் சொர்க்கத்திற்கு எவ்வளவு முயற்சிகளை நாம் செய்ய வேண்டும்.

இதனால் தான் அல்லாஹ் பின்வருமாறு கூறுகிறான்:
உங்கள் இறைவனிடமிருந்து கிடைக்கும் மன்னிப்பிற்கும், வானங்கள் மற்றும் பூமியின் பரப்பளவு கொண்ட சொர்க்கத்திற்கும் விரையுங்கள்! (இறைவனை) அஞ்சுவோருக்காக அது தயாரிக்கப் பட்டுள்ளது. (அல்குர்ஆன் 3:133)

எண்ணிலடங்காத இன்பங்களைக் கொண்ட சொர்க்கத்தை அடைய எளிய பல வழிகளை நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். அவற்றை நாம் காண்போம்.

பொதுமக்களின் நன்மதிப்பு

ஒரு முறை மக்கள் ஒரு ஜனாஸாவைக் கடந்த சென்ற போது இறந்தவரின் நற்பண்புகளைப் பற்றிப் புகழ்ந்து பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் ''உறுதியாகி விட்டது'' என்றார்கள்.

மற்றொரு முறை வேறொரு (ஜனாஸாவைக்) கடந்து சென்ற போது மக்கள் அதன் தீய பண்புகளைப் பற்றி  இகழ்ந்து பேசலாயினர். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் ''உறுதியாகி விட்டது'' எனக் கூறினார்கள்

உமர் (ர­லி), ''எது உறுதியாகி விட்டது?'' எனக் கேட்டதும் நபி (ஸல்) அவர்கள், ''இவர் விஷயத்தில் நல்லதைக் கூறிப் புகழ்ந்தீர்கள்; எனவே அவருக்குச் சொர்க்கம் உறுதியாகி விட்டது. இவர் விஷயத்தில் தீயதைக் கூறினீர்கள்; எனவே இவருக்கு நரகம் உறுதியாகி விட்டது. ஆகவே நீங்களே பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகளாவீர்கள்'' எனக் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அனஸ் (ர­லி)  நூல்: புகாரீ (1278)
 
இவ்வுலகில் வாழும் போது மக்களின் நன்மதிப்பைப் பெறும் வண்ணம் தங்கள் செயல்பாடுகளை அமைத்துக் கொள்ள வேண்டும். ''ஆகா! வந்து விட்டானே! இவனால் என்ன பிரச்சனை வரப் போகிறதோ? யாரிடம் சண்டைக்குப் போகப் போகிறானோ? எந்தக் குடும்பத்தைப் பிரிக்கப் போகிறானோ?'' என்பது போன்று பேசும் வண்ணம் நம் நடத்தையை அமைத்துக் கொள்ளக் கூடாது. நற்காரியங்களில் ஈடுபடுவராக அடுத்தவருக்கு உதவுபவராக, நல்ல ஆலோசனைகள் கூறுபவராக இருக்க வேண்டும்.

மக்களிடம் எதிர்ப்பைப் பெற்றவர், மக்களுக்குத் தொந்தரவு தந்தவர், துன்பங்களை கொடுத்தவர் மறுமையில் இவர் கொடுத்த துன்பங்களே இவருக்கு எதிராக வந்து இவரின் அனைத்து நன்மைகளையும் விழுங்கி விடும்.

''முஃப்­ஸ் (திவாலகிப் போனவன்) என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். ''எவனிடம் வெள்ளிக்காசுகளோ, பொருளோ இல்லையோ அவனே!'' என்று நபித் தோழர்கள் கூறினர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், ''என்னுடைய சமூகத்தில் முஃப்­ஸ் என்பவன் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகிய கடமைகளை நிறைவேற்றியவனாக (நன்மை புரிந்தவனாக) வருவான். அப்போது ஒருவன், 'இவன் என்னை இவ்வாறு திட்டினான்; என்னைப் பற்றி  இவ்வாறு அவதூறு கூறினான்; (என்) இந்தச் செல்வத்தை (அநியாயமாக) சாப்பிட்டான்; இந்த இரத்தத்தை (அநியாயமாக) ஓட்டினான் (கொலை செய்தான்); இவ்வாறு அடித்தான்' என்று குற்றம் சுமத்துவான். ஒவ்வொன்றுக்கும் அவனுடைய நன்மைகளி­ருந்து எடுத்து அதற்குரிய அளவு (குற்றம் சுமத்தியவனுக்கு)  வழங்கப்படும். அவன் மீதுள்ள பாவத்திற்குரிய பரிகாரம் முடிவதற்கு முன்னர் நன்மைகள் முடிந்து விட்டால் குற்றம் சுமத்தியவனின் பாவங்கள் அவர்களிடமிருந்து நீக்கப்பட்டு அவனிடம் அவை கொடுக்கப்படும். பின்னர் அவன் நரகத்தில் வீசப் படுவான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்­லிம் 4678)

ஏகத்துவக் கொள்கையைக் கூறும் போதும், சீர்திருத்தக் கருத்தைக் கூறும் போதும் மக்களிடம் எதிர்ப்பு வரும். இந்த எதிர்ப்பும் மக்கள் நம்மை ஏசுவதும் மறுமை நாளில் நமக்கு எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.

ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் முதன் முத­ல் ஏகத்துவக் கொள்கையை எடுத்துரைத்த போது கடுமையாக விமர்சிக்கப் பட்டார்கள்; மக்களால் தூற்றப் பட்டார்கள்.

இவ்வாறு மக்கள் தூற்றியதால் நபி (ஸல்) அவர்கள் கெட்டவர்கள் என்ற பொருள் அல்ல! காரணம் அவர்கள் கூறியவை நற்கருத்துக்கள். எனவே நல்ல கருத்துக்களைக் கூறுவதால் மக்களிடம் எதிர்ப்பு வந்தால் மேற்கூறிய ஹதீஸின் கருத்து அவர்களுக்குப் பொருந்தாது என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

உண்ண உணவு வழங்குதல்
 
நாற்பது நற்காரியங்கள் உண்டு. அவற்றில் ஒன்றை, அதன் நன்மையை நாடியும், அதற்கென வாக்களிக்கப் பட்டுள்ள (சொர்க்கத்)தை உண்மை என நம்பியும் ஒருவர் கடைப்பிடித்து நடப்பாராயின், அதன் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்தியே தீருவான். அவற்றில் மிக உயர்ந்தது பெட்டை வெள்ளாட்டைப் பாலுக்காக இரவல் தருவதாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ர­லி)  நூல்கள்: புகாரீ (2631)  அபூதாவூத் (1433), அஹ்மத் (6200)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், ''இஸ்லாத்தில் சிறந்த காரியம் எது?'' எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாவதற்கும் ஸலாம் கூறுவதுமாகும்.  அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர்(ர­லி)  நூல்கள்: புகாரீ (12), முஸ்­லிம் (63)

மனிதன் வாழ்வதற்கு மிகவும் அவசியமான ஒன்று உணவு ஆகும். இது கிடைக்காத எத்தனை மக்கள் இவ்வுலகில் வாழ்ந்து வருகிறார்கள். இவர்களுக்கு உண்ணுவதற்கு சரியான ஏற்பாட்டைச் செய்து தருபவர் சொர்க்கத்திற்கு உரிய இடத்தை முன்பதிவு செய்தவராவார்.

நற்காரியங்கள் ஏராளம் இருந்தாலும் நபி (ஸல்) அவர்கள் சிறந்த நற்காரியமாக பால் தரும் ஆட்டை இரவலாகக் கொடுத்து உணவின் தேவையை நிறைவு செய்வதால் சொர்க்கத்திற்குச் செல்லும் வழியை தேர்வு செய்து கொள்கிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

எனவே சொர்க்கத்திற்குரியவராக நாம் ஆவதற்கு, பசித்தவருக்கு உணவு வழங்கும் வழிவகைகளை ஏற்பாடு செய்ய வேண்டும். அல்லது அதற்குத் தூண்டுபவர்களாக நாம் இருக்க வேண்டும். இந்த நற்காரியத்தைச் செய்யாததால் நரகத்திற்குரியவனாக ஆனான் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்! பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்! பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கி­யால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்.) அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவுமில்லை. (அல்குர்ஆன் 69:30-34)
 

No comments:

Post a Comment