மத்ஹபுகளில் காணப்படும் ஆபாசத்தைப் போதிக்கும் சட்டங்கள் சிலவற்றைப் தெளிவு படுத்தவுள்ளோம். ஒருவன் இப்படியெல்லாம் சிந்திப்பானா? என்று எண்ணுமளவிற்கு மத்ஹபு நூலாசிரியர்கள் கற்பனை செய்துள்ளார்கள். வக்கிர புத்தி கொண்டவர்களை விடவும் இந்த மத்ஹபு நூலாசிரியர்கள் மிக மோசமாக கற்பனை செய்துள் ளார்கள் என்பதை நாம் அவர்களது நூற்களிருந்தே மேற்கோள்காட்டுவதிலிருந்தே நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
இஸ்லாம் அறிவுப்பூர்வமான மார்க்கம் என்பதை முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஏற்றிருக்கின்றோம்.
இத்தகைய இஸ்லாமிய மார்க்கத்தை இழிவுபடுத்தும் அடிப்படையில் பின்வரும் மத்ஹபுச் சட்டம் அமையப் பெற்றிருப்பதைப் பாருங்கள்.
MATHHAB-1 : ஒரு நாய் அல்லது பன்றி மனித இனத்தைச் சார்ந்த பெண் மீது பாய்ந்து உடலுறவு கொண்டு அவள் ஒரு மனிதக் குழந்தையைப் பெற்று விட்டால் அந்தக் குழந்தை அசுத்தம்தான். இவ்வாறு அசுத்தமாக இருப்பதுடனே தொழுகை மற்றும் இதர கடமைகள் அவன் மீது கடமையாக்கப்பட்டுவிட்டன. அக்குழந் தையை (தொடக்கூடாது இருப்பினும்) தொடுவது நிர்ப்பந்தமாக இருப்பதால் மன்னிப்பு உண்டு. அவன் மேல் ஈரம் இல்லாவிட்டால் பள்ளிக்கு வருவது கூடும். (நூல் பத்ஹுல் முயீன் ஷரஹுகுர்ரதுல் ஐன் பாகம்-1 பக்கம்-34)
எவ்வளவு மடமைத்தனமான விடயத்தைப் போதிக்கிறது இந்த ஷாபி மத்ஹபு நூல் பார்த்தீர்களா? இப்படி யாராவது சிந்திப் பார்களா? நாய் பன்றி ஒரு பெண்ணிடம் உடலுறவு கொண்டு மனிதக் குழந்தை பிறந்தால் என்ற நிபந்தனையுடன் ஆபாசம் ஆரம்பமாகிறது. அப்படியென்றால் நாய் பன்றி ஒரு பெண்ணிடம் உடலுறவு கொண்டால் நாயும் பன்றியும்தான் பெண்ணின் வயிற்றில் வளரும் என்று இந்நூலாசிரியர் சொல்ல வருகின்றாரா?
அதனால்தான் மனிதக் குழந்தை பிறந்தால் என்ற நிபந்தனை போட்டார் போலும். இஸ்லாத்திற்கு வெளியே இருப்பவர்கள் இதை அறிந்தால் இஸ்லாத்தைப் பற்றி எப்படி கணிப்பிட்டுக் கொள்வார்கள். மேலும் அக்குழந்தை அசுத்தம் என்று கூறி விட்டு தொழலாம் என்று கூறுவது எவ்வளவு மடமைத்தனம். சிந்தியுங்கள் இச்சட்டம் எவ்வளவு பைத்தியகாரத்தன மாகவும் ஆபாசமாகவும் உள்ளது என்பது விளங்கும். கிறுக்குத் தனமானதும் முட்டாள் தனமானதுமான மற்றுமொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.
MATHHAB_2
உண்ணத்தக்க பிராணி இரண்டும் உடலுறவு கொண்டு மனித வடிவில் குழந்தை பெற்றால் அவன் தூய்மையான வனாவான். அவனை உண்ணலாம். இவன் குர்ஆனை மனனம் செய்து கதீபாக பணிபுரியலாம். நமக்கு ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையை இவன் நடத்தலாம். தொழுகை முடிந்த பிறகு அவனையே குர்பானியும் கொடுக்கலாம். (நூல்: இஆனதுத் தாலிபீன் பாகம்-1 பக்கம்-113)
ஆடும் ஆடும் சேர்ந்தால் ஆடுதானே பிறக்கும் மனிதன் பிறப்பானா? பிறக்கக் கூடும் என மத்ஹபு கூறுகிறது. ஒரு ஆடு மாட்டுடனோ அல்லது மாடு ஆட்டுடனோ சேர்ந்தால் மனித வடிவில் குழந்தை பிறக்கலாம் என மத்ஹப் கூறுகிறது. இது நடைமுறைச்சாத்தியமா? அறிவியல் இதை நம்புமா? இஸ்லாம் இப்படிப்பட்ட உளறலை கூறியிருக்குமா? அறிவுடையோர் இதை ஒப்புக் கொள்வார்களா? சிந்தியுங்கள். மிருகமும் பெண்ணும் சேர்ந்த பின் பிறக்கும் குழந்தை அசுத்தமாம் மிருகமும் மிருகமும் சேர்ந்த பின் பிறக்கும் குழந்தை சுத்தமாம் வித்தியாசம் ஏதேனும் தெரிகிறதா? அறிவுள்ளவன் எவனாக இருந்தாலும் இச்சட்டத்தைப் பார்த்தால் கொதித்தெழவே செய்வான்.மனிதப் பண்புகளை வேரோடு தகர்த்தெறியும் இச்சட்டத்தை ஏற்க எந்த மனிதனாவது முன்வருவானா? மத்ஹப் வாதிகளே சிந்தியுங்கள்!
இச்சட்டத்தை நீங்கள் ஏற்பீர்களா? இனியும் இந்த மத்ஹபு தேவைதானா?
மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள். Mathhab_3ஆணுறுப்பு என்ற வார்த்தை தன்னுடைய ஆணுறுப்பையும் குறிக்கும். எனவே ஒருவன் தன்னுடைய ஆணுறுப்பைத் தனது பின் துவாரத்தில் விட்டான் என்றால் அதற்காக அவனுக்குத் தண்டனை கொடுக்கப்படும். (நூல்: இஆனதுத் தாலிபீன் பாகம்-4 பக்கம்-162)
எப்படி சிந்தித்துள்ளார்கள் இந்த மத்ஹபு வாதிகள் பார்த்தீர்களா? மிருகஜாதிக்கு மட்டுமே தோன்றக்கூடிய கற்பனைகளை மார்க்க சட்டங்கள் என்ற பேரில் இவர்கள் எழுதி வைத்துள்ளனர். குர்ஆன் ஹதீஸில் இதற்கு ஆதாரம் உள்ளதா? என்று கூட கேட்க முடியாத அளவுக்கு நா கூசுகின்ற அருவருக்கத் தக்க ஆபாசங்களை உள்ளடக்கியுள்ள இந்த மத்ஹபு நூற்களை என்ன செய்வது?
மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.
மார்க்கக் கடமைகள் விதியாக்கப்பட்ட வயதினன் தனது ஆணுறுப்பை ஒரு சிறுமியின் பெண்ணுறுப்பில் நுழைத்து விடுகிறான். அந்தச் சிறுமி ஒருநாள் குழந்தையாக இருப்பினும் அவ்வாறு நுழைந்ததற்காக அவனுக்கு (விபச்சாரத்திற்கான) தண்டனை வழங்கப்படும். அதுபோல் ஒரு பெண் தனது பெண்ணுறுப்பில் ஒரு சிறுவனுடைய ஆணுறுப்பை நுழைத்து விடுகிறாள். அந்த சிறுவன் ஒருநாள் வயதுப் பையனாக இருப்பினும் அவ்வாறு அவள் நுழைத்ததற்காக அவளுக்கு விபச்சாரத்திற்கான தண்டனை வழங்கப்படும். (நூல் இஆனதுத் தாலிபீன் பாகம்-4 பக்கம்-162) இச்சட்டங்களை எழுதுவதற்குக்கூட கை கூசுகிறது என்ன செய்வது மத்ஹபுகளுக்கு வக்காளத்து வாங்குபவர்களுக்கு மத்ஹபுகளிலுள்ள அபத்தங்களை எடுத்துக் கூறியாவது அதிலிருந்து அவர்களை விடுபட வைப்பது எமது கடமை என்பதால் இவைகளைக் கூறுகின்றோம். மேற்கூறப்பட்ட ஆபாசச் சட்டங்கள் அனைத்தும் எமது நாட்டிலுள்ள அறபு மத்ரஸாக்களில் போதிக்கப்படும் ஷாபி மத்ஹபு நூற்களில் காணப்படுபவைகளாகும்.
இதைவிட மோசமாகவும் கேவலமாகவும் நாங்களும் சளைத்தவர்களல்ல என்ற அடிப்படையில் ஹனபி மத்ஹபுக்காரர்கள் சிந்தித்திருப்பதை நாம் இப்போது சொல்லும் தகவலை வைத்து நீங்கள் புரிந்து கொள்லாம்.
ஒருவன் தனது ஆணுறுப்பை ஒரு மிருகத்திடம் அல்லது இறந்துவிட்ட பெண்ணிடம் இந்திரியம் வெளிப்படாதவாறு செலுத்தினால் அல்லது மிருகத்தின் (பெண்) உறுப்பைத் தொட்டால் அல்லது தன்னுடைய ஆணுறுப்பின் துவாரத்தில் தண்ணீரை அல்லது எண்ணையை சொட்டவிட்டு அது உள்ளே இருக்கும் மூத்திரப் பையை அடைந்தாலும் சரி நமது மத்ஹபின் படி (நோன்பு முறியாது) (நூல்: அத்துர்ருல் முக்தார் பாகம்-2 பக்கம்-439)
எப்படி கற்பனை பார்த்தீர்களா? இப்படியெல்லாம் ஒருவன் கற்பனை செய்வானா? எவ்வளவு ஆபாசமாக இம்மத்ஹபுச் சட்டம் உள்ளது. சிந்தியுங்கள் இனியும் மத்ஹபுப் பிடிவாதம் தேவைதானா?
மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் ஹனபி மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.
mathhab_4 தேர்ந்தெடுக்கப்பட்ட சொல்லின் பிரகாரம் பார்த்தால் ஆசை ஏற்படாத சிறுமியிடம் அல்லது இறந்துவிட்ட பெண்ணிடம் அல்லது ஒரு மிருகத்திடம் உடலுறவு கொள்வதால் வுழு நீங்க மாட்டாது. ஆண் குறியை மாத்திரம் கழுவி விட வேண்டும். (நூல்: அத்துர்ருல் முக்தார்: பாகம்-1இ பக்கம்-179)
இவ்வளவு ஆபாசமாகக் கூட கற்பனை செய்ய முடியுமா? மத்ஹப்வாதிகள் கறபனை செய்தது போன்று கற்பனை செய்யலாம் என்று வைத்துக் கொள்வோம். இந்தச் சட்டங்களுக்கு ஆதாரமாக அமைந்த அல்குர்ஆன் வசனங்கள் யாவை? அல்லது ஹதீஸ்கள் யாவை? அடுத்து இவர்கள் கூறும் மேற்கூறப்பட்ட சட்டத்திற்கு ஒத்த மற்றொரு சட்டத்தைப் பாருங்கள்.
பார்த்தால் ஆசை ஏற்படாத சிறுமியிடம் உடலுறவு கொள்வதால் குளிப்பு கடமையாகாது. வுழுவும் நீங்காது. இதைச் செய்தால் குளிப்பு கடமையில்லை என்று கூறும் போது இது செய்யத்தக்க காரியம் என்ற கருத்து மறைந்துள்ளது. இப்படி நடக்கக் கூடியவர்கள் இருக்கிறார்கள் என்றே வைத்துக் கொண்டாலும் இதனால் குளிப்பு கடமையில்லை என்று எப்படிக் கூற முடியும்? அதற்கான ஆதாரம் என்ன?
மற்றொரு ஆபாசத்தை கற்பனை செய்யும் ஹனபி மத்ஹபுச் சட்டத்தைப் பாருங்கள்.
mathhab_5 ஒருவர் தனது மறைவுறுப்பில் துணியைச் சுற்றிக் கொண்டு உடலுறவில் ஈடுபடுகிறார். அப்போது உடலுறவின் இன்பத்தை அவர் அடைந்தால் குளிப்புக் கமையாகும். இல்லையெனில் குளிப்புக் கடமை இல்லை.
உறுப்பிலே துணியைச் சுற்றிக் கொண்டு உடலுறவில் ஈடுபடும் சாத்தியம் உண்டா? சாத்தியம் என்று வைத்துக் கொண்டாலும் உடலுறவு இன்பத்தை அடைந்தால் மட்டும் குளிப்புக் கடமை என்று கூறுவது சரியா? இந்த ஹதீஸை வாசித்துப் பாருங்கள் பதில் கிடைக்கும்.
‘ஒருவர் தம் மனைவியின் (இருகை இருகால் ஆகிய) நான்கு அங்கங்களுக்கிடையில் வீற்றிருந்து உள்ளீடு செய்துவிட்டாரானால் அவர் மீது குளியல் கடமையாகி விடுகிறது. (விந்து வெளியாகாவிட்டாலும் சரியே!) என்று அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.’ (அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி) நூல்: ஸஹீஹுல் புஹாரி-291)
இதே ஹதீஸ் இன்னும் சில அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது. ஹதீஸ் தெளிவாக குளிப்பு கடமை என்று கூறியிருக்க மத்ஹப் கூறும் கற்பனைச் சட்டம் கூடாது என்கிறது எதை நாம் பின்பற்ற வேண்டும். தீய சிந்தனை கொண்டவர்களையும் வக்கிர எண்ணம் கொண்டவர்களையும் உருவாக்கிவிட முனையும் வகையில் ஆபாசத்தைத்தான் மதஹபுகள் போதிக்கின்றன என்பதை இனியாவது இந்த மத்ஹபு வாதிகள் சிந்தித்து மத்ஹபுகளை உதறித் தள்ளி விட்டு குர்ஆன்இ ஹதீஸின் பக்கம் வருவார்களா?
No comments:
Post a Comment