பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, July 10, 2010

வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்

வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கைதான்

நபி (ஸல்) அவர்கள் (அகழ் போரின் போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கி புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தார்கள்.
அந்தப் பணியை அவர்களுக்காகச் செய்திட அவர்களிடம் அடிமை (ஊழியர்)கள் இல்லை.
அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்ட போது நபி (ஸல்) அவர்கள், ''இறைவா! (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான். ஆகவே அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி!'' என்று (பாடிய வண்ணம்) கூறினார்கள். இதைக் கேட்ட நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பதிலளித்த வண்ணம், ''நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்' என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி தந்துள்ளோம்'' என்று (பாடியவண்ணம்)  கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ர­லி) நூல்கள்: புகாரீ 2834, முஸ்­லிம் 3693
 
ஹிஜ்ரி நான்காம் ஆண்டு, அல்லது ஐந்தாம் ஆண்டு நடந்த யுத்தம் தான் அகழ் போர். இதற்கு அஹ்ஸாப் போர் என்றும் குறிப்பிடுவர். மக்காவில் இருந்த குறைஷிகள், கத்ஃபான் கூட்டத்தினர், யூதர்கள் மற்றும் இவர்களைச் சார்ந்த பலர், மதீனா மீது போர் தொடுக்கத் திட்டமிட்டி ருந்தனர். இந்நேரத்தில் ஸல்மான் பாரிஸி (ரலி­) அவர்கள் தங்கள் நாட்டில் எதிரிகள் இவ்வாறு தாக்கும் போது நாங்கள் ஊரைச் சுற்றி அகழ் தோண்டுவோம் என்று கூறியதை கருத்தில் கொண்டு நபி (ஸல்) அவர் களும் அதைப் போன்றே மதீனாவை சுற்றி அகழ் தோண்டினார்கள்.

இந்த குழி தோண்டும் காலம் மிகுந்த குளிர் காலம். மேலும் நபித் தோழர்களுக்கு சரியான உணவும் கிடைக்கவில்லை. வேலை செய்ய கூ­யாட்களும் இல்லாமல், நபி (ஸல்) அவர்கள் உட்பட அனைவரும் அகழ் தோண்டும் வேலையில் ஈடுபட்டார்கள். அப்போது நபித்தோழர்கள் பட்ட கஷ்டத்தைப் பார்த்த நபிகளாரால் பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. கடுமையான கஷ்டம்.

ஒருவர் இவ்வளவு கஷ்டத்திலும் வேலை செய்கிறார் என்றால், அவர் மறுமை வாழ்க்கையை முழுமையாக ஏற்றுக் கொண்டு அந்த வாழ்க்கை தான் முக்கியம் என்பதைச் சரியாகப் புரிந்துள்ளார் என்பதால் தான். இதைக் கவனித்த நபி (ஸல்) அவர்கள், ''இறைவா! (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான்'' என்று கூறி விட்டு, இந்த வாழ்க்கையை தேர்வு செய்து அதில் உறுதியாக இருந்த நபித்தோழர்களுக்காக இவ்வாறு பிராத்தித்தார்கள்.

நபித்தோழர்களின் கஷ்டத்தைப் பார்த்துக் கவலையடைந்த நபிகளாரைப் பார்த்த நபித்தோழர்கள், நாங்கள் மிகமிக உறுதியாக இருக்கிறோம் என்பதைக் கவிதை வரிகளில் தெளிவு படுத்தினார்கள். ''நாங்கள் வாழும் காலமெல்லாம் இஸ்லாத்திலேயே இருந்துகொண்டிருப்போம் என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி தந்துள்ளோம்'' என்று நபிகளாரிடம் கூறினார்கள். புகாரியின் (4100) ஆவது அறிவிப்பில் ''நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்' என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி தந்துள்ளோம்'' என்று நபித்தோழர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

எத்தனை சோதனைகள் வந்தாலும், சிரமங்கள் வந்தாலும் அதற்காக ஏற்ற கொள்கையை விட்டு விட்டுப் போக மாட்டோம். நாங்கள் இறக்கும் வரை இஸ்லாத்திலேயே இருந்து மடிவோம் என்று சோதனையான கட்டத்தில் கூறியது, இஸ்லாத்தை ஏற்ற ஒவ்வொருவருக்கும் படிப்பினையாகும். ''எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறி, பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி ''அஞ்சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்!'' எனக் கூறுவார்கள். இவ்வுலக வாழ்க்கை யிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் உங்களுக்கு உண்டு என்றும் கூறுவர். (அல்குர்ஆன் 41:30,31)
 
''
எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' எனக் கூறி பின்னர் உறுதியாகவும் நின்றோருக்கு எந்த அச்சமும் இல்லை; அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அவர்களே சொர்க்கவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். (இது) அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குக்  கூலி (அல்குர்ஆன் 46:13,14) 
 
மக்காவி­ருந்து நாடு துறந்து சென்ற முஹாஜிர்களும், மதீனாவை பூர்வீகமாகக் கொண்ட அன்சாரிகளும் அகழ்போரில் இந்த வசனங்களுக்குச் செயல் வடிவம் கொடுத்துள்ளார்கள். நபி (ஸல்) அவர்களும் இவ்வாறே இருக்க வேண்டும் என்றும் அறிவுரை கூறியுள்ளார்கள்.

''
இஸ்லாம் தொடர்பாக ஒரு (கருத்தாழம் மிகுந்த) சொல்லைக் கூறுங்கள்! அது தொடர்பாக வேறு எவரிடமும் நான் கேட்க வேண்டியதிருக்கக் கூடாது (அதாவது அந்தச் சொல் அனைத்தையும் பொதிந்த வார்த்தையாக இருக்க வேண்டும்)'' என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ''அல்லாஹ்வை நான் நம்பிக்கை கொண்டேன் என்று சொல்! பின்னர் அதில் உறுதியாக இரு!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.  அறிவிப்பவர்: சுஃப்யான் பின் அப்துல்லாஹ் (ர­லி) நூல்: முஸ்­லிம் (63)
 
இஸ்லாத்தை ஏற்றவர்களுக்கு இறைவன் புறத்தி­ருந்து பலவிதமான சோதனைகள் வரும். அப்போது அதில் பொறுமையாக இருந்து, கொண்ட கொள்கையில் உறுதியாக இருக்க வேண்டும். சோதனைகள் வந்து கொண்டே இருக்கிறதே! என்று நம்பிக்கை இழந்து இஸ்லாத்தை விட்டு விலகி விட்டால் நஷ்டம் நமக்கே!

எனவே இஸ்லாத்தில் இருக்கும் போது, நபிகளார் கூறியது போல் ''குஃப்ருக்குச் செல்வதை நெருப்பில் விழுவதைப் போல் வெறுக்க வேண்டும்'' (பார்க்க புகாரீ16)
 
குஃப்ரையும் இணை வைத்தலையும் வெறுத்து ஓரிறைக் கொள்கையை உயிர் நாடியாகப் பேணி காக்க வேண்டும்.
 
 

No comments:

Post a Comment