பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, July 11, 2010

இமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாமா?

இமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாமா?



ஜும்மா உரை கேட்டுக் கொண்டிருக்கும் போது ஒருவர் நமக்கு ஸலாம் கூறினால் நாம் அதற்கு பதில் கூறலாமா?

ஆர்.என்

பதில் :

883حَدَّثَنَا آدَمُ قَالَ حَدَّثَنَا ابْنُ أَبِي ذِئْبٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ قَالَ أَخْبَرَنِي أَبِي عَنْ ابْنِ وَدِيعَةَ عَنْ سَلْمَانَ الْفَارِسِيِّ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَغْتَسِلُ رَجُلٌ يَوْمَ الْجُمُعَةِ وَيَتَطَهَّرُ مَا اسْتَطَاعَ مِنْ طُهْرٍ وَيَدَّهِنُ مِنْ دُهْنِهِ أَوْ يَمَسُّ مِنْ طِيبِ بَيْتِهِ ثُمَّ يَخْرُجُ فَلَا يُفَرِّقُ بَيْنَ اثْنَيْنِ ثُمَّ يُصَلِّي مَا كُتِبَ لَهُ ثُمَّ يُنْصِتُ إِذَا تَكَلَّمَ الْإِمَامُ إِلَّا غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ الْأُخْرَى رواه البخاري

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஜுமுஆ நாளில் ஒருவர் குளித்து, தம்மால் இயன்ற தூய்மைகள் மேற்கொண்டு. தம்மிடமுள்ள எண்ணெயைத் தேய்த்துக் கொள்கிறார். அல்லது தம் வீட்டிலுள்ள நறுமணத்தைத் தடவிக் கொள்கிறார். பிறகு புறப்பட்டு (அமர்ந்திருக்கும்) இருவரைப் பிரிக்காமல் (பள்ளிக்கு) வந்து தமக்கு விதியாக்கப்பட்டுள்ளதைத் தொழுகிறார். பிறகு இமாம் உரையாற்றத் தொடங்கியதும் அமைதியாக அதைச் செவியேற்கிறார். எனில் அவருக்கு அந்த ஜுமுஆவுக்கும் அடுத்த ஜுமுஆவுக்கும் இடையிலேற்படும் பாவங்கள் மன்னிக்கப்பட்டே தீருகின்றன.

இதை சல்மான் அல்ஃபார்சீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்

நூல் : புகாரி (883)

934حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ عُقَيْلٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي سَعِيدُ بْنُ الْمُسَيَّبِ أَنَّ أَبَا هُرَيْرَةَ أَخْبَرَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِذَا قُلْتَ لِصَاحِبِكَ يَوْمَ الْجُمُعَةِ أَنْصِتْ وَالْإِمَامُ يَخْطُبُ فَقَدْ لَغَوْتَ رواه البخاري

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

ஜுமுஆ நாüல் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும் போது உன் அருகிலிலிருப்பவரிடம் நீ "மௌனமாக இரு!' என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி (934)

1419و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَوَضَّأَ فَأَحْسَنَ الْوُضُوءَ ثُمَّ أَتَى الْجُمُعَةَ فَاسْتَمَعَ وَأَنْصَتَ غُفِرَ لَهُ مَا بَيْنَهُ وَبَيْنَ الْجُمُعَةِ وَزِيَادَةُ ثَلَاثَةِ أَيَّامٍ وَمَنْ مَسَّ الْحَصَى فَقَدْ لَغَا رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

(வெள்ளிக்கிழமை) யார் அங்கத் தூய்மை (உளூ) செய்து, அதை செம்மையாகவும் செய்து ஜுமுஆவுக்கு வந்து (இமாமின் உரையை) செவிதாழ்த்தி மௌனமாகக் கேட்கிறாரோ அவருக்கு அந்த ஜுமுஆவிலிருந்து அடுத்த ஜுமுஆ வரைக்கும் மேற்கொண்டு மூன்று நாட்களுக்கும் ஏற்படுகின்ற (சிறு) பாவங்கள் (யாவும்) மன்னிக்கப்படுகின்றன. யார் (இமாம் உரை நிகழ்த்தும் போது தரையில் கிடக்கும்) சிறு கற்களைத் தொட்டு (விளையாடி)க் கொண்டிருக்கிறாரோ அவர் வீணான செயலில் ஈடுபட்டு விட்டார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

முஸ்லிம் (1557)

மேற்கண்ட செய்திகள் இமாம் உரையாற்றும் போது மௌனமாக இருப்பது அவசியம் என்ற கருத்தைக் கூறுகின்றன. இந்த ஹதீஸ்களைக் கவனித்தால் இமாம் உரையாற்றுகையில் வேறு எந்த விஷயத்திலும் கவனம் செலுத்தக் கூடாது என்றும் எதையும் பேசக் கூடாது என்றும் தெரிகின்றது.

எனவே சில அறிஞர்கள் இமாம் உரையாற்றும் போது ஒருவர் நமக்கு சலாம் கூறினால் அந்த சலாத்திற்கு பதிலுறைக்கக் கூடாது என்றும் தும்மினால் அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்லக் கூடாது என்றும் அப்படி ஒருவர் சொன்னால் அவருக்கு யர்ஹமுகல்லாஹ் என சொல்லக் கூடாது என்றும் கூறுகின்றனர்.

இதற்கு மாற்றமாக இவற்றைக் கூறலாம் என்ற கருத்துடைய அறிஞர்களும் இருக்கின்றனர்.

1448و حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ أَنَّهُ قَالَ جَاءَ سُلَيْكٌ الْغَطَفَانِيُّ يَوْمَ الْجُمُعَةِ وَرَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَاعِدٌ عَلَى الْمِنْبَرِ فَقَعَدَ سُلَيْكٌ قَبْلَ أَنْ يُصَلِّيَ فَقَالَ لَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَكَعْتَ رَكْعَتَيْنِ قَالَ لَا قَالَ قُمْ فَارْكَعْهُمَا رواه مسلم

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

நபி (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை சொற்பொழிவு மேடை (மிம்பர்) மீது (நின்று) உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஒரு மனிதர் வந்(து தொழாமல் அமர்ந்)தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதரிடம் "இரண்டு ரக்அத்கள் தொழுது விட்டீரா?'' என்று கேட்டார்கள். அவர் "இல்லை' என்றார். "அவ்வாறாயின் தொழுவீராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முஸ்லிம் (1586)

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளிக்கிழமை உரையாற்றிக் கொண்டிருக்கையில் சுலைக் அல்ஃகதஃபானீ (ரலி) அவர்கள் வந்து (தொழாமல்) அமர்ந்தார். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "சுலைக்! எழும்! சுருக்கமாக இரண்டு ரக்அத்கள் தொழும்'' என்றார்கள். பிறகு "உங்களில் ஒருவர் வெள்ளிக்கிழமை அன்று இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது (பள்ளிவாசலுக்கு) வந்தால், அவர் இரண்டு ரக்அத்கள் சுருக்கமாகத் தொழுது கொள்ளட்டும்!'' என்று கூறினார்கள்.

முஸ்லிம் (1589)

இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது நாம் வந்தால் முதலில் இரண்டு ரக்அத்கள் தொழ வேண்டும் என்று நபியவர்கள் உத்தரவிடுகிறார்கள். இவ்வாறு நாம் தொழும் போது இமாம் தொடர்ந்து உரையாற்றிக் கொண்டிருப்பார். இமாமுடைய உரையை நாம் கேட்க முடியாத நிலையும் குர்ஆன் வசனங்களையும் தக்பீர்களையும் ஓதும் நிலையும் இப்போது ஏற்படும். இந்நிலையில் அமைதியை நாம் கடைப்பிடிக்க முடியாது.

ஆனால் நபியவர்கள் இதை ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ளாமல் இவ்வாறு செய்வதை அனுமதிக்கின்றார்கள். அமைதியாக இருக்க வேண்டும் என்ற பொதுவான உத்தரவிலிருந்து இது விதிவிலக்கு என்று சிலர் கூறுகின்றனர்.

இது விதிவிலக்கு என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இமாம் உரையாற்றிக் கொண்டிருக்கும் போது ஒருவர் வந்தால் அவர் இரண்டு ரக்அத் தொழாமல் இருந்தால் தொழுது விட்டு அமர வேண்டும். அப்போது இமாமின் உரையைக் கேடக முடியாத் நிலை ஏற்படுவது பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் இதை ஆதாரமாகக் கொண்டு இது போல் எல்லா வணக்கங்களையும் செய்யலாம். இமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாம்; குர் ஆன் ஓதலாம் எம்றெல்லாம் கூற கூடாது. விதி விலக்கு என்பது குறிப்பாகச் சொல்லப்பட வேண்டும். ஒரு விதி விலக்கில் இருந்து இன்னொன்றுக்கு விதி விலக்கை விரிவு படுத்தக் கூடாது.

இமாம் உரை நிகழ்த்தும் போது ஸலாம் கூறலாம் எனக் கூறுவோர் மற்றொரு ஆதாரத்தையும் காட்டுகிறார்கள்.

3582حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ عَبْدِ الْعَزِيزِ عَنْ أَنَسٍ وَعَنْ يُونُسَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ أَصَابَ أَهْلَ الْمَدِينَةِ قَحْطٌ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَيْنَا هُوَ يَخْطُبُ يَوْمَ جُمُعَةٍ إِذْ قَامَ رَجُلٌ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَلَكَتْ الْكُرَاعُ هَلَكَتْ الشَّاءُ فَادْعُ اللَّهَ يَسْقِينَا فَمَدَّ يَدَيْهِ وَدَعَا قَالَ أَنَسٌ وَإِنَّ السَّمَاءَ لَمِثْلُ الزُّجَاجَةِ فَهَاجَتْ رِيحٌ أَنْشَأَتْ سَحَابًا ثُمَّ اجْتَمَعَ ثُمَّ أَرْسَلَتْ السَّمَاءُ عَزَالِيَهَا فَخَرَجْنَا نَخُوضُ الْمَاءَ حَتَّى أَتَيْنَا مَنَازِلَنَا فَلَمْ نَزَلْ نُمْطَرُ إِلَى الْجُمُعَةِ الْأُخْرَى فَقَامَ إِلَيْهِ ذَلِكَ الرَّجُلُ أَوْ غَيْرُهُ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ تَهَدَّمَتْ الْبُيُوتُ فَادْعُ اللَّهَ يَحْبِسْهُ فَتَبَسَّمَ ثُمَّ قَالَ حَوَالَيْنَا وَلَا عَلَيْنَا فَنَظَرْتُ إِلَى السَّحَابِ تَصَدَّعَ حَوْلَ الْمَدِينَةِ كَأَنَّهُ إِكْلِيلٌ رواه البخاري

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் மதீனாவாசிகளைப் பஞ்சம் பீடித்தது. (அந்தக் கால கட்டத்தில்) நபி (ஸல்) அவர்கள் ஒரு ஜும்ஆ நாளில் உரை நிகழ்த்திக் கொண்டிருந்தபோது ஒரு (நாட்டுப் புற) மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் அழிந்து விட்டன; ஆடுகளும் அழிந்து விட்டன. ஆகவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; அவன் மழை பொழியச் செய்வான்'' என்று கேட்டார். உடனே, நபி (ஸல்) அவர்கள், தமது கையை உயர்த்திப் பிரார்த்தனை செய்தார்கள். அப்போது, வானம் (மேகங்கள் இல்லாமல்) கண்ணாடியைப் போன்றிருந்தது. (நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தித்தவுடன்) காற்று ஒன்று வேகமாக வீசி மேகக் கூட்டத்தைத் தோற்றுவித்தது. பிறகு, அந்த மேகக் கூட்டம் ஒன்று திரண்டது. பிறகு, வானம் மழையைப் பொழிந்தது. நாங்கள் தண்ணீரில் மூழ்கியபடி (பள்ளி வாசலிலிருந்து) வெüயே வந்து எங்கள் இல்லங்களை அடைந்தோம். அடுத்த ஜும்ஆ (நாள்) வரை எங்களுக்கு மழை பொழிந்து கொண்டேயிருந்தது. ஆகவே, (மழை பெய்விக்கும்படி இறைவனிடம் பிரார்த்திக்கச் சொன்ன) அந்த மனிதர்.... அல்லது வேறொரு மனிதர்.... நபி (ஸல்) அவர்கள் முன் எழுந்து நின்று, "அல்லாஹ்வின் தூதரே! (அடை மழையின் காரணத்தால்) வீடுகள் இடிந்து விட்டன. ஆகவே, அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்; அவன் மழையை நிறுத்தி விடுவான்'' என்று சொன்னார். அதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், புன்னகை புரிந்து, "(இறைவா!) எங்களைச் சுற்றிலும் (எங்களுக்கு நன்மை ஏற்படும் விதத்தில்) மழையைப் பொழி! எங்கள் மீது (எங்களுக்குக் கேடு நேரும் விதத்தில்) மழை பொழியச் செய்யாதே!'' என்று பிரார்த்தித்தார்கள். நான் மேகத்தை நோக்கினேன். அது பிளவு பட்டு மதீனாவைச் சுற்றிலும் ஒரு மாலை போல் வளையமிட்டிருந்தது.

புகாரி (3582)

நபி (ஸல்) அவர்கள் உரையாற்றிக் கொண்டிருக்கையில் ஒரு மனிதர் எழுந்து மழைக்காக பிரார்த்தனை செய்யுமாறும் மழை அதிகம் பொழிந்த போது அதை நிறுத்து பிரார்த்தனை செய்யுமாறும் வேண்டியுள்ளார். தான் உரையாற்றிக் கொண்டிருக்கையில் இடையில் எழுந்து இவ்வாறு பேசியதை நபி (ஸல்) அவர்கள் கண்டிக்கவில்லை. ஆமோதிக்கிரார்கள்.

எனவே ஸலாம் கூறுவது போன்ற காரியங்களை இது போல் செய்யலாம் என்பது இவர்களின் வாதம்.

இந்த செய்தி மக்கள் உரைநிகழ்த்திக்கொண்டிருக்கின்ற இமாமோடு பேசிக்கொண்டதற்குத் தான் ஆதாரமே தவிர மக்கள் ஒருவரோடொருவர் பேசிக்கொண்டதற்கு இதை ஆதாரமாக கூற முடியாது.

நபிகள் நாயகம் ஸல் அல்லாஹ்வின் தூதர் என்ற முறையில் அவர்களின் பிரார்த்தனை முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது. எனவே அந்த நபித்தோழர் மழைக்காக துஆ செய்யச் சொன்னார். மற்ற இமாம்கள் நபிகள் நாயகத்தைப் போன்றவர்கள் அல்ல. மழை வேண்டும் மனிதர் அந்த இமாமை விடச் சிறந்தவராக இருக்கலாம். எனவே இது போன்ற கோரிக்கைகளுக்காகக் கூட இமாமிடம் நாம் பேச முடியாது.

எனவே இதை ஆதாரமாகக் கொண்டு ஸலாம் கூறுவதோ குர்ஆன் ஓதுவதோ கூடாது. இமாம் உரை நிகழ்த்தி முடிக்கும் வரை எந்தப் பேச்சும் பேசக் கூடாது என்பதே சரியானதாகும்.

ஜுமுஆ நாüல் இமாம் சொற்பொழிவு நிகழ்த்தும்போது உன் அருகிலிலிருப்பவரிடம் நீ "மௌனமாக இரு!' என்று கூறினாலும் நீ வீணான காரியத்தில் ஈடுபட்டுவிட்டாய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

நாம் கேட்பதற்காகத் தான் இமாம் உரையாற்றிக்கொண்டிருக்கின்றார். எனவே அவருடைய உரையை கேட்பதில் தான் நமது கவனம் செல்ல வேண்டும். இந்த இடத்தில் பிறரை சீர்திருத்தும் செயலில் நாம் ஈடுபடக்கூடாது. பிறர் பேசும் போது நாம் பேசாதே என்று கூறினால் நாமும் பேசி விடுகின்றோம். எனவே இதை நபியவர்கள் தடை செய்கிறார்கள்.

27.06.2010. 20:40

---www.onlinepj.com

----Ayyampet ALEEM
(http://aleemislam.blogspot.com/)

No comments:

Post a Comment