பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, July 10, 2010

பொறாமை என்ற போதை.

பொறாமை என்ற போதை. 
மனிதன் நாகரீக வளர்ச்சி அடைந்தாலும் அவன் படைக்கப்பட்ட காலத்தி­ருந்த தீய குணங்கள் இன்று வரை மாறாமல் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது .அதிலேயும் மிகுந்த நாசத்தை விளைவிக்கக் கூடிய ஒரு பண்பு தான் பொறாமை. இது தொன்றுதொட்டு நமது முன்னோர்களிடமிருந்து வந்து கொண்டிருக்கிறது. 

இதற்கு மதங்கள் மொழிகள் காலங்கள் வேறுபாடு கிடையாது. 

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களுக்கு முன் சென்று சமுதாயத்தவர்களுக்கு ஏற்பட்டுள்ள பொறாமை வெறுப்பு என்ற நோய் உங்களுக்கும் பரவியுள்ளது. வெறுப்பு என்பது மலித்துவிடக்கூடியது. நான் முடியை ம­ப்பதை சொல்லவில்லை மார்க்கத்தை ம­லித்து விடும். முஹம்மதின் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக! ஒருவரை ஒருவர் நேசம் கொள்கின்றவரை நீங்கள் நம்பிக்கையாளராகமாட்டீர்கள். எதை நீங்கள் செய்தால் ஒருவருக்கொருவர் நேசம் கொள்வீர்களோ அதை பற்றி உங்களுக்கு அறிவிக்கட்டுமா? உங்களுக்கிடையே ஸலாம் சொல்லுவதை பரப்புங்கள்!
அறிவிப்பவர் :அஸ்ஸ‚பைர் (ரலி­)
நூல் : அஹ்மது 1338

.இந்த பொறாமையையோடு வெறுப்பையும் சேர்த்து ஒரு நோயாகவும்  தலையில் உள்ள முடிகளை ம­க்கக்கூடியதை போன்று மார்க்கத்தை அழித்துவடக்கூடியதாக கூறுகிறார்கள்.பொறாமை மனதில் இருந்தால் வெறுப்பும் சேர்ந்து வந்துவிடும். இதனால் தான் நண்பர்கள் என்ற உறவு முறிகிறது. மக்களுக்கு நற்பணியாற்றிய இயக்கங்கள் காணமால் போகிறது. ஒரு நாட்டில் உள்ள இயற்கை வளத்தை பார்த்து பொறாமைப்பட்டு அந்நாட்டை அபகரிப்பதற்காக பக்கத்து நாடு போர் தொடுக்கிறது. கடந்த  காலங்களில் உலகை உலுக்கிய உலகப்போர்கள் இதனால் தான் ஏற்பட்டு பல்லாயிரக்கணக்கான மனித உயிர்கள் இறப்பதற்கு காரணமாக அமைந்தது.இந்த பொறாமை என்பது பிரிவினை வெறுப்பை மட்டும் ஏற்படுத்தாது. நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்று மார்க்கத்தை ம­க்கக்கூடிய கூர்மையான கத்தியைப்போன்று மனித உயிர்களையும் பலி ­கொண்டும் விடும்.

இந்த பொறாமையின் காரணமாகத்தான் மனித இனத்தின் ஆரம்ப காலகட்டத்தில் முதல் கொலையே நடந்தது.

இதை பற்றி அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:
(முஹம்மதே) ஆதமுடைய இரு மகன்களின் உண்மைச் செய்தியை அவர்களுக்கு ஓதிக்காண்பிப்பீராக! அவ்விருவரும் இறைவனுக்கு நேர்ச்சை செய்தனர். அவர்களில் ஒருவருடைய நேர்ச்சை மட்டும் ஏற்பட்டுக் கொள்ளப்பட்டது.இன்னொருவரின் நேர்ச்சை ஏற்கபடவில்லை.(ஏற்கப்படாதவர்) நான் உன்னை கொன்று விடுவேன்.என்று சொன்னார். (ஏற்றுக் கொள்ளபட்டவர்) அல்லாஹ்வை அஞ்சக்கூடியவர்களிடமிருந்து தான் நேர்ச்சையை அவன் ஏற்கிறான். நீ என்னை கொள்வதற்காக உன்கையை என்னிடத்தில் நீட்டினாலும் நான் உன்னை கொள்வதற்காக என் கையை உன்னிடத்தில் நீட்டமாட்டேன்.அகிலத்தாரின் இறைவனான அல்லாஹ்வை பயப்படுகிறேன்.என் பாவத்தையும் உன் பாவத்தையும் நீ சுமந்து நரகவாசியாகுவாய் என்று தான் நினைக்கிறேன்.அது தான் அநீதி இழைத்தோரின் கூ­. அவரது உள்ளம் அவனது சகோதரரை கொள்வதற்கு அவருக்கு அலங்கரித்துக் காட்டியது. அவர் அவரைக் கொன்று நஷ்டவாளியானார்.
(அல் குர்ஆன் 5:27முதல் 30வரை)

தன்னுடைய நேர்ச்சை ஏற்றுக் கொள்ளப்படதாதற்கு தன்னுடைய இறையச்சத்தில் ஏற்பட்ட குறைபாடு என்று புரிந்து கொள்ளாமல் தன் கூட பிறந்த சகோதரர் என்று பார்க்காமல்  அவனுக்கு மட்டும் ஏன் நேர்ச்சை அங்கீரிக்கப்பட்டது. என்ற பொறாமையால் அவரை கொலை செய்கிறார். இது மனித இனத்தில் நடந்த முதல் கொலை குற்றம். அன்று ஏற்பட்ட அந்த பொறாமை இன்றும் பல உயிர்கள் ப­போவதற்கு காரணமாக உள்ளது. அன்று ஏற்பட்ட இந்த கொடிய நம்மையும் தொற்றிக் கொண்டே வருகிறது.

அப்படியென்றால் அறவே பொறாமைபடக் கூடாதா ?

நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் சில விஷயங்களில் பொறாமை பட அனுமதியளித்துள்ளார்களே என்று நம் மனதிற்குள் கேள்வி எழலாம்.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இரண்டு விஷயங்களில் தவிர வேறெதிலும் பொறாமை கொள்வது அனுமதி இல்லை. மார்க்க ஞானத்தை ஒருவருக்கு அல்லாஹ் வழங்குகிறான். அதனடிப்படையில் இரவு பகலாக அவர் நடக்கிறார். அல்லாஹ் செல்வத்தை வழங்கிய ஒருவர் அதனை இரவு பகலாக( அல்லாஹ்வின் பாதையில்) செலவழிக்கிறார்.(இவர்களை பார்த்து பொறாமை கொள்ளலாம்)
அறிவிப்பவர்: இப்னு உமர்(ரலி­)
நூல்: புகாரி 5025

இதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பொறாமை கொள்வது அனுமதியைப் போன்று கூறியுள்ளார்கள். அது போல பொறாமையைக் குறிக்கின்ற ஹஸத் என்ற வார்த்தைக்கு மற்றவர்களுக்குள்ள சிறப்பை அவர்களிடமிருந்து நீக்குவதற்கு விரும்புவது என்று லி­ஸானுல் அரபு போன்ற ஆதாரப்பூர்வமான அகராதி நூற்களில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் நபியவர்கள் இந்த பொறாமையை கூறவில்லை. நன்மையான காரியங்களில் போட்டி போட்டு நாமும் அந்த நன்மையை செய்ய வேண்டும் என்பதை தான் கூறுகிறார்கள். இது இன்னொரு அறிவிப்பில் (புகாரி 5026) மார்க்க ஞானம்  செல்வம் வழங்கப்பட்டவர் செய்யும் நற்செயல்களை கேள்விபட்ட அவருடைய அண்டை வீட்டுக்காரர் இவரைப் போன்று நமக்கும் இருந்தால் நாம் இன்னென்ன நன்மைகள் எல்லாம் செய்திருக்கலாமே என்று நன்மையான காரியத்திற்கு ஆதங்கப்படக்கூடியவர். என்று  வருகிறது.

இதைத் தான் நபித்தோழர்களின் வாழ்க்கையில் பல சம்பவங்களில் தெரிந்து கொள்ளலாம்.

முஹாஜரின்களில் ஏழ்மையானவர்கள் நபி(ஸல்) அவர்களிடத்தில் வந்து (அல்லாஹ்வின் தூதரே!) செல்வந்தர்கள் சென்று விட்டார்கள் என்றார்கள் அதற்கு நபி(ஸல்) அவர்கள் என்ன விஷயம் என்று அவர்களிடத்தில் கேட்.டார்கள். அதற்கு அவர்கள் சொன்னார்கள் அவர்கள் தொழுவதைப் போன்று நோன்பு நோற்பதைப் போன்று நாங்ளும் தொழுகிறோம் நோன்பு வைக்கிறோம். ஆனால் அவர்கள் தர்மம் செய்கிறார்கள். அடிமையை விடுதலை செய்கிறார்கள் எங்களால் தர்மம் செய்யவோ அடிமையை விடுதலை செய்யவோ முடியவில்லை. அதற்கு நபி(ஸல்) அவர்கள் உங்களை (நன்மையால்) முந்தியவர்களை அடைவதற்கும் உங்களுக்குப் பின்னால் வருபவர்களை நீங்கள் முந்துவதற்கும் நீங்கள் செய்ததைப் போன்று அதனை செய்பவரைத் தவிர வேறு யாரும் உங்களை விட சிறந்தவராக இருக்கமாட்டாரே அந்த விஷயத்தை உங்களுக்கு சொல்லட்டுமா?அதற்கு அவர்கள் ஆம் சொல்லுங்கள்  அல்லாஹ்வின் தூதரே என்றார்கள்.ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் ஸ‚ப்ஹானல்லாஹ் 33 அல்ஹம்து ­ல்லாஹ் 33 அல்லாஹ் அக்பர் 33 தடவை சொல்லுங்கள் என்று சொன்னார்கள்
அறிவிப்பவர்: அபூ ஹ‚ரைரா(ர­லி)
நூல்: முஸ்லி­ம்.936

(மற்ற அறிவிப்புகளில் வெவ்வேறு எண்ணிக்கையுடைய செய்திகளும் ஆதரப்பூர்வமாக வருகிறது)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் நபித்தோழர்கள் பதவிக்கோ பொருளுக்கோ போட்டி போடவில்லை. நாம் ஏழ்மைநிலையில் இருப்பதனால் பொருளாதாரரீதியான நன்மைகளை செய்ய முடியவில்லையே ஆனால் பணக்காரர்கள் வணக்கவழிபாட்டிலும் பொருளாதாரத்திலும் சேர்த்து இரட்டிப்பு கூ­களை அடைகிறார்களே என்று அவர்கள் மீது பொறாமை கொள்ளாமல் கவலைப்பட்டு தானும் அந்த நன்மைகளை அடையவேண்டும் என்ற நோக்கில் கேட்கிறார்கள். இப்படி தான் அனைத்து நபித்தோழர்களின் வாழ்க்கையும் இருந்தது. இது போன்ற அவர்களின் வாழ்நாளில் ஏராளமான சம்பவங்களை காணலாம்.

இப்படியில்லமால் அல்லாஹ்வின் பாதையில் செயலாற்றுவதற்காக ஒன்று சேர்ந்திருக்கக்கூடிய நமது  ஜமாஅத்தில் ஒருவர் பொருளாதார உதவிகளை மற்றவர்களைவிடவும் அதிகமாக செய்வார்.ஒருவர் அறிவு சார்ந்த உதவிகளை செய்வார்.இன்னொருவர் உடல் உழைப்பை செய்வார். இதனால் மற்றவர்கள் பொறாமை கொண்டு இவருக்கு எப்படியாவது அவப்பெயரை ஏற்படுத்தி இவரை நீக்கி விட்டு நாம் அந்த இடத்தை நிரப்ப வேண்டும் என்று நினைக்கக்கூடாது.இது தான் ஷைத்தான் தூக்கியெறியப்பட்டதற்கான காரணம்.

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்
நான் உனக்கு கட்டளையிட்டிருக்க (ஆதமுக்கு) நீ பணியாமல் இருக்க உன்னை தடுத்தது எது?என்று (இறைவன்) கேட்டான். அதற்கவன் நான் அவரை விட சிறந்தவன் நீ என்னை நெருப்பால் படைத்தாய் அவரை களிமண்ணால் படைத்தாய் என்று சொன்னான்.
(அல் குர்ஆன் 7:12)

ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் பலவிதமான விஷயங்களை கற்றுக் கொடுத்ததை பார்த்து பொறாமை கொண்டு அல்லாஹ்வின் கட்டளைக்கு மாறுசெய்து அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளானான்.

இந்த இடத்தில் மார்க்கத்தை அறிந்தவர்கள் கற்பவர்கள் பிரச்சாரம் செய்பவர்கள் ஒரு அறிவுரையை பெற வேண்டும். நமக்கு மத்தியில் அல்லாஹ் அறிவில் ஏற்றதாழ்வுகளை கொடுத்திருக்கிறான். இதனால் மற்றவர்களை அல்லாஹ் வைத்திருக்கின்ற அந்தஸ்தை பார்த்து பொறாமை கொண்டு சொந்த விருப்பு வெறுப்புகளுக்காக இவர் சொல்­லியா? நாம் கேட்பது என்று எண்ணத்திற்கு வந்துவிடக்கூடாது. ஆனால் வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் மார்க்க அறிஞர்கள் என்று தங்களை சொல்­க் கொள்ளக் கூடியவர்கள் சிலருக்கு அல்லாஹ் வழங்கியுள்ள மார்க்க ஞானத்தால் பொறாமை கொண்டு அவர் சொன்ன சத்திய கருத்தையே ஏற்க மறுப்பதை காண்கிறோம். இந்த பொறாமை கடைசியில் நரகத்திற்கு கொண்டு சேர்க்கக்கூடிய பெருமையில் கொண்டு போய் விடுகின்றது.

நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எவனது உள்ளத்தில் அணுவளவு பெருமை உள்ளதோ அவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான். அப்போது ஒரு மனிதர் ஒருவரின் ஆடையும் காலணியும் அழகானதாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார். (இது பெருமையாகுமா?) என்று கேட்டார். அப்போது நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் அல்லாஹ் அழகானவன் அழகையே விரும்புகிறான். பெருமை என்பது சத்தியத்தை மறுப்பதும் மக்களை இழிவாக கருதுவதும் தான்
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி­)
நூல்: முஸ்­லிம்.131

எனவே பொறாமை வந்துவிட்டால் பெருமை வந்துவிடும். நான் சிறந்தவனாக இருக்கும் போது எனக்கு மேல் ஒருவன் வருவதா? என்ற பொறாமை ஷைத்தானை அவனை படைத்த அல்லாஹ்வின் முன்னிலையில் பெருமையாக பேசவைக்கிறது.

இவ்வாறு பல வகைகளிலும் அல்லாஹ் நம்மை விட உயர்ந்த நிலையில் வைத்திருப்பதை பார்த்து பொறாமைபடாமல் அவரைப் போன்று நம்மை அல்லாஹ் ஆக்குவேண்டும் என்று துஆ செய்யவேண்டும். இது தான் நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் காட்டித் தந்த முறையும் கூட...

நபி(ஸல்) அவர்களின் மீது ஸலவாத் சொல்வதை கற்றுத் தரும் போது..

இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தினரின் மீதும் அருள்புரிந்ததைப் போல முஹம்மத் (ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் அருள்புரிவாயாக! இப்றாஹீம் (அலை) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும் அபிருவித்தி செய்ததைப் போல முஹம்மத்(ஸல்) அவர்கள் மீதும் அவர்களது குடும்பத்தார் மீதும்  அபிருவித்தி செய்வாயாக!
அறிவிப்பவர்: இப்னு உஜ்ரா(ர­லி)
நூல்: புகாரி 6357

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு முன்னால் இப்றாஹீம்(அலை) அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிந்துவிட்டான். அவர்களுக்கு அருள்புரிந்ததைப் போன்று தமக்கும் அருள்புரியுமாறு நபி(ஸல்) அவர்கள் பிராத்திக்க சொல்கிறார்கள்.

அதிகபட்சம் 60 வருடங்கள் வாழங்கூடி உலகத்தில் அறிவு பொருளாதாரம் குறைந்திருந்தால் என்ன? இங்கே என்ன நடந்தாலும் மறு உலகத்தில் தான் நாம் நிலையாக இருக்கப்போகிறோம் என்று எண்ணிப் பார்க்க வேண்டும்.

இன்னும் அல்லாஹ் தான் விரும்பியவருக்கு அருட்கொடையை வழங்குவதாக கூறுகிறான்.அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்:

அது அல்லாஹ்வின் அருட்கொடை . அவன் நாடியவருக்கு அதனை வழங்குகிறான்
(அல் குர்ஆன் 5:54)

இந்த அருட்கொடை வழங்குதல் அல்லாஹ்வின் அதிகாரம். இதை பார்த்து பொறாமை கொண்டால் அல்லாஹ்வின் அதிகாரத்தில் தலையிடுவது போன்றுதாகிவிடும்

நபி(ஸல்) அவர்களுக்கே அல்லாஹ் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறான்.

அல்லாஹ்வின் அதிகாரத்தில் உமக்கு எந்த பங்கும் இல்லை.
(அல் குர்ஆன் 3:128)

இந்த பொறாமை நம் உள்ளத்தில் குடி கொள்ளாமல் இருப்பதற்கு அல்லாஹ் ஒரு பிராத்தனையை கற்றுத் தருகிறான்.

எங்கள் இறைவா எங்களையும் எங்களுக்கு முன்னால் நம்பிகொண்டவர்களையும் மன்னிப்பாயாக! எங்களுடைய உள்ளத்தில் நம்பிக்கை கொண்டோருக்கெதிராக பொறாமையை ஏற்படுத்திவிடாதே . நீயே மன்னிப்பவன் கருணையாளன்
(அல் குர்ஆன் 59:10)

இது நபித்தோழர்கள் செய்த பிராத்தனையாக குறிப்பிடுகிறான்.

அல்லாஹவின் அருட்கொடை வழங்கப்பட்டவர்கள் பொறாமைக்காரர்களின் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடும் படியும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

பொறாமைகாரன் பொறாமை கொள்ளும் போது ஏற்படும் தீங்கை விட்டும் பாதுகாவல் தேடுகிறேன்.
(அல் குர்ஆன் 113:5)

பொறாமைக்காரனின் தீங்கு என்றவுடன் ஒருவர் பொறாமைபட்டாலே நமக்கு கெடுதல் வந்துவிடாது. அவன் நம்மீது கொண்டுள்ள பொறாமையின் காரணமாக அவன் நமக்கு செய்யும் தீங்கைதான் குறிப்பிடுகிறான். அப்படியென்றால் நாம் நினைத்தாலே ஒரு காரியம் நடக்கும் என்றால் அல்லாஹ்வின் தன்மை நமக்கு இருக்கிறது என்று சொன்னதைப் போன்றதாகிவிடும்

அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்
உமது இறைவன் நினைத்ததை செய்பவன் (அல் குர்ஆன் 11:107)

நினைத்ததனைத்தும் நடக்கவென்றுமென்றால் அது அல்லாஹ்வால் மட்டுமே முடியும்.

இன்னும் அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

(முஹம்மதே!) சொல்வீராக உமது இறைவன் நாடியதை தவிர வேறொன்றும் எங்களுக்கு அணுகாது.
(அல் குர்ஆன் 9:51)

எனவே நன்மையும் தீமையும் அல்லாஹ்வின் புறத்தில் வருகிறது. என்று இருக்கும் போது யாரும் நினைத்தாலும் எந்த தீங்கும் நம்மையடையாது.  இத்தகைய பொறாமை எண்ணத்தை நம் உள்ளத்தில் அகற்றி ஈருலுகிலும் நன்மையடைவோமாக!                                  -- அர்ஷத் அலி M.I.Sc.

No comments:

Post a Comment