பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, July 11, 2010

அக்டோபஸ் உண்ணலாமா?

அக்டோபஸ் உண்ணலாமா?


அக்டோபஸ் - கடல் வாழ் உயிரினம் முஸ்லிம்களுக்கு ஹராமா?





பதில் :

أُحِلَّ لَكُمْ صَيْدُ الْبَحْرِ وَطَعَامُهُ مَتَاعًا لَكُمْ وَلِلسَّيَّارَةِ وَحُرِّمَ عَلَيْكُمْ صَيْدُ الْبَرِّ مَا دُمْتُمْ حُرُمًا وَاتَّقُوا اللَّهَ الَّذِي إِلَيْهِ تُحْشَرُونَ(96)5

உங்களுக்கும், ஏனைய பயணிகளுக்கும் பயன்படும் பொருட்டு கடலில் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது.

அல்குர்ஆன் (5 : 96)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கடல் நீர் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கவர்கள் "கடல் நீர் தூய்மை செய்யத்தக்கதாகும். அதில் உள்ளவை செத்தாலும் ஹலாலாக (உண்ண அனுமதிக்கப்பட்டதாக) ஆகும்'' என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)

நூல்கள்: அஹமது 6935

பொதுவாக கடலில் உணவாக கிடைக்கும் அனைத்தும் நமக்கு அனுமதி தான் என்று மேற்கண்ட வசனமும், நபிமொழியும் கூறுகிறது. எனவே அக்டோபஸ் உட்பட கடல்வாழ் உயிரினம் எதுவானாலும் அதை உண்ணலாம். ஆனால் அது உடலுக்கு உகந்த உணவா? என்பதை கவனித்து உண்ண வேண்டும். ஏனென்றால் நமக்கு கேடுதருகின்ற பொருட்களை தவிர்க்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகின்றது.

وَأَنفِقُوا فِي سَبِيلِ اللَّهِ وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ وَأَحْسِنُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُحْسِنِينَ(195)2

அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.

அல்குர்ஆன் (2 : 195)

ஆனால் அக்டோபஸ் என்பது கடல் வாழ் உயிரினம் என்பதால் நம் உடலுக்குக் கேடு விளைவிக்காத பட்சத்தில் தாராளமாக உண்ணலாம்

31.03.2010. 21:40

Source: http://www.onlinepj.com/

Abdul Aleem
Ayyampet
http://aleemislam.blogspot.com/

No comments:

Post a Comment