பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, August 8, 2019

ஹஜ் உம்ரா - 15

*🍇🍇🍇மீள் பதிவு🍇🍇🍇*

*🌐🌐🌐ஹஜ் உம்ரா சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*


*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👈👈👈*

*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*

*👉👉👉தொடர் பாகம் 15👈👈👈*

     *👉தலைப்பு👇*

*🕋🕋🕋தவாஃப், 🕋ஸஃயீ அல்லாத நேரங்களில் ஓதுவதற்கென🤲🤲🤲 துஆ எதுவுமுள்ளதா❓🕋🕋🕋*

*✍✍✍சயீ செய்யும்போது ஸஃபா, மர்வாவில் ஓதும் திக்ரு, துஆக்கள் அல்லாமல் நடந்துக் கொண்டிருக்கும்போதே ஓதுவதற்கென பிரத்யேகமாக எதுவுமுள்ளதா❓*
*பதில்*
*நபி (ஸல்) அவர்கள் ஸயீயின் போது எந்த திக்ரையும் கற்றுத் தரவில்லை. நபிவழி என்றில்லாமல் சாதாரணமாக ஏதேனும் திக்ருகளை ஓதிக் கொண்டு சென்றால் தவறில்லை.✍✍✍*

*🌐🌐🌐முடியைக் குறைப்பது என்றால், எல்லா பக்கத்திலுமா❓🌎🌎🌎*

📕📕📕உம்ராவை முடிக்கும்போது சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் ஆண்களுக்கு தலையின் ஏதாவது ஒரு பக்கத்தில் மட்டும் சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளலாமா❓ தலை முழுதுமே ஏகத்துக்கும் சிறிது குறைக்கவேண்டுமா❓
*தலை முழுவதும் சிறிதளவு*
ஹஜ் அல்லாத காலங்களில் உம்ரா செய்பவர்களும், ஹஜ் காலத்தில் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுபவர்களும் மழிப்பது தான் சிறந்தது.
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின்போது தலையை மழித்தார்கள். அவர்கள், “இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” எனக் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்” என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்….” என்றனர். நபி (ஸல்) அவர்கள் “முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!)” என்று கூறினார்கள்.📕📕📕

*நூல்: புகாரி 1727*

*✍✍✍தமத்துஃ, கிரான் முறையில் ஹஜ் செய்பவர்கள் முதலில் உம்ராவை நிறைவேற்ற வேண்டும். அப்போது அவர்கள் முடியைக் குறைப்பது சுன்னத்தாகும். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது* . *மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி “நீங்கள் தவாஃபையும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஓடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக்கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்ýக்காக இஹ்ராம் கட்டி, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்றார்கள்.✍✍✍*

*(நூல்: புகாரி 1568)*

📘📘📘இதன் பின்னர் ஹஜ்ஜை முடித்ததும் *மேற்கண்ட 1727 ஹதீஸின் அடிப்படையில்* முழுமையாக மழித்துக் கொள்ள வேண்டும்.
அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாமலும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான்.📘📘📘

*அல்குர்ஆன் 48:27*

*✍✍✍முடியைக் குறைத்தல் என்று தான் திருக்குர்ஆன் வசனத்திலும், ஹதீஸிலும் சொல்லப்படுகின்றது. முடியைக் குறைத்தல் என்றால், ஆண்களைப் பொறுத்த வரை முடி வெட்டும் போது எப்படிக் குறைப்பார்களோ அதுபோன்று குறைத்துக் கொள்ளலாம்.*
*பெண்களுக்கு மழித்தல் கிடையாது; முடியைக் குறைத்தல் மட்டுமே உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதால் சிறிதளவு கத்தரித்துக் கொள்ளுதல் போதுமானது.*
*தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு முடியைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்✍✍✍.*

*நூல்: அபூதாவூத் 1694*

*🏓🏓🏓ரூமுக்கு வந்தவுடன் முடி குறைத்துக் கொள்ளலாமா❓🏓🏓🏓*

📙📙📙ஹரமுக்குள் கத்தரிக்கோல் போன்றவை அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் ரூமுக்கு வந்தவுடன் முடி குறைத்துக் கொள்ளலாமா❓ உடனே தான் குறைக்க வேண்டுமா❓
*பதில்*
உடனே குறைத்து விட்டால் இஹ்ராமை விட்டு வெளியே வந்து விடலாம். இல்லையேல் இஹ்ராமிலிருந்து வெளியேறத் தாமதமாகும்.📙📙📙📙

*🕋🕋🕋ஜபலுர் ரஹ்மா மலையில்🧕🧕🧕 பெண்கள் ஏறக்கூடாதா❓🕋🕋🕋*

*✍✍✍அங்குள்ள ‘ஜபலுர் ரஹ்மா’ மலையில் ஏறுவது சுன்னத் அல்ல என்றாலும், பெண்கள் அதில் ஏறக்கூடாது என்று சொல்வது சரியா❓*
*பதில்*
*அதில் பெண்கள் மட்டுமல்ல. ஆண்களும் ஹஜ்ஜின் கிரியை என்றோ சுன்னத் என்றோ கருதி ஏறக் கூடாது. மற்ற இடங்களுக்கு செல்வது போன்று இங்கும் செல்லலாம்.✍✍✍*

*🕋🕋🕋அரஃபா, ஜபலுர் ரஹ்மாவில் என்ன செய்ய வேண்டும்❓🕋🕋🕋*

📗📗📗அரஃபாவில் போய் சேர்ந்தது முதலே துஆ செய்யலாமா❓ ‘ஜபலுர் ரஹ்மா’ மலையடிவாரத்திலோ, அரஃபாவில் மற்ற எங்குமோ துஆ  செய்யும்போது நின்றுக்கொண்டுதான் துஆ செய்ய வேண்டுமா❓ இயலாதவர்கள் உட்கார்ந்த நிலையிலும் செய்யலாமா❓ அங்கு எப்போது தல்பியா சொல்லவேண்டும்❓ துஆ செய்யாத இடைப்பட்ட நேரங்களில் சொல்லவேண்டுமா❓
அரபாவில் திக்ரு, துஆக்கள் என்ற எந்த வணக்கத்திலும் ஈடுபடலாம். நிற்க இயலாதவர்கள்  உட்கார்ந்தும் செய்து கொள்ளலாம். துஆ செய்யும் நேரங்களைத் தவிர்த்து மற்ற நேரங்களில் தல்பியா சொல்லிக் கொள்ளலாம். ஜபலுர்ரஹ்மத் என்று குறிப்பிட்டு வரும்போது அங்கு துஆவைத் தவிர வேறு எதுவும் செய்யக் கூடாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது ஒட்டகத்தில் ஏறி, அரஃபாவிற்கு வந்து, அங்கிருந்த (“ஜபலுர் ரஹ்மத்’ மலை அடிவாரத்தில்) பாறைகள்மீது தமது “கஸ்வா’ எனும் ஒட்டகத்தை நிறுத்தினார்கள். கால்நடையாக நடந்து வந்த மக்கள் திரளை தம் முன்னிறுத்தி, கிப்லாவை முன்னோக்கி, சூரியன் மறையத் தொடங்கும் வரை அப்படியே வாகனத்தில் அமர்ந்திருந்தார்கள்.📗📗📗

*(நூல்: முஸ்லிம் 2137)*

*✍✍✍நான் அரஃபாவில் நபி (ஸல்) அவர்களின் பின்னே (ஒட்டகத்தில்) அமர்ந்திருந்தேன். அவர்கள் தமது கைகளை உயர்த்தி பிரார்த்தனை செய்தார்கள். ஒட்டகம் அவர்களைக் குலுக்கியது. அதனால் அதன் கடிவாளம் கீழே விழுந்து விட்டது. ஒரு கையை உயர்த்திய நிலையிலேயே இன்னொரு கையால் அதை எடுத்தார்கள்.✍✍✍*

*(நூல்: நஸயீ 2961)*

*👆👆👆இந்த ஹதீஸின் அடிப்படையில் துஆவில் ஈடுபட வேண்டும். துஆவை நின்றும், உட்கார்ந்தும் செய்யலாம்.👈👈👈*

*🕋🕋🕋மினாவில் 8ஆம் எந்த சுன்னத் தொழுகையோ, நஃபிலோ, வித்ரோ கிடையாது என்பது சரிதானா❓🕋🕋🕋*

📒📒📒மினாவில் 8ஆம் நாளன்று எந்த சுன்னத் தொழுகையோ, நஃபிலோ, வித்ரோ கிடையாது என்பது சரிதானா❓
முஸ்தலிபாவில் படுத்து உறங்கிய பிறகு அன்றைய ஃபஜ்ருடைய முன் சுன்னத் தொழாமல் ஃபர்ளை மட்டும்தான் தொழ வேண்டுமா❓
நபி (ஸல்) அவர்கள் அங்கு கடமையான தொழுகைகளை மட்டுமே தொழுததாக ஹதீஸில் *(முஸ்லிம் 2137)* வருகின்றது. இந்த ஹதீஸின் அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழவில்லை, ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழவில்லை என்று வாதிடுகின்றனர். இது தவறான வாதமாகும்.📒📒📒

*✍✍✍“நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுதார்கள்’ என்று ஜாபிர் (ரலி) குறிப்பிட்டுச் சொல்லாததால் அன்று இரவு அவர்கள் வித்ரு தொழவில்லை என்றாகிவிடாது. மாறாக, நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுதது, ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழுதது அவர்களது பார்வையில் படாமல் கூட இருந்திருக்கலாம்.*
*நபி (ஸல்) அவர்கள் இரவு உணவு சாப்பிட்டார்கள், சிறுநீர் கழித்தார்கள் போன்ற பல விஷயங்களை அறிவிப்பாளர் சொல்லாமல் விட்டிருக்கலாம். அதனால் அவற்றை நபி (ஸல்) அவர்கள் செய்யவில்லை என்றாகி விடாது.✍✍✍*

📓📓📓“நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழவில்லை, ஃபஜ்ரின் முன் சுன்னத் தொழவில்லை’ என்று ஜாபிர் (ரலி) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருந்தால் கூட மினா, முஸ்தலிஃபாவில் இந்தத் தொழுகைகள் இல்லை என்று எடுத்துக் கொள்ளலாம். ஆனால் ஜாபிர் (ரலி) இவ்வாறு குறிப்பிட்டுக் கூறவில்லை. எனவே அந்தத் தொழுகைகளைப் பற்றி அவர் அறிவிக்கவில்லை என்றே எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரவில் உங்களுடைய தொழுகையின் கடைசியாக வித்ரை ஆக்கிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.📓📓📓

*அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)*

*நூல்: முஸ்லிம் 1245*

*✍✍✍நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு பொதுவாகக் கட்டளையிட்ட பின், அவர்கள் வித்ரு தொழுகையை விட்டதாகவோ அல்லது குறிப்பிட்ட வேளையில் தொழ வேண்டாம் என்று தடுத்ததாகவோ எந்த ஹதீசும் வராத வரை வித்ரு தொழ வேண்டும் என்பது தான் அடிப்படையாகும். மேலும் வித்ரு தொடர்பான ஹதீஸில் நபி (ஸல்) அவர்களின் உத்தரவும் இருப்பதால் மினாவில் நாம் வித்ரு தொழுவது தான் நபிவழி.*
*ஃபஜ்ருடைய முன்சுன்னத் தொழுகையை நபி (ஸல்) அவர்கள் வழமையாகக் கடைப்பிடித்துள்ளார்கள்* . *ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:*
*நபி (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (முன் சுன்னத்) இரண்டு ரக்அத் அளவிற்கு வேறு எந்த கூடுதல் தொழுகைக்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்ததில்லை.✍✍✍*

*நூல்: புகாரி 1169*

*👉👉👉வித்ருக்கு நாம் கூறிய வாதங்கள் அனைத்தும் இதற்கும் பொருந்தும் என்பதால் ஃபஜ்ருடைய முன் சுன்னத்தை முஸ்தலிஃபாவில் தொழுவது தான் நபிவழியாகும்👈👈👈* .

*🌐🌐🌐கற்களை எங்கு பொறுக்குவது❓🌐🌐🌐*

📚📚📚முஸ்தலிபாவில் தான் கல் பொறுக்கவேண்டும் என்பது சரியானதல்ல என்றாலும், வாய்ப்பு கிடைத்தால் அங்கேயே பொறுக்கி வைத்துக் கொள்வது தவறாகுமா❓ கற்களை நமக்காக நம்முடனிருக்கும் பிறர் பொறுக்கித் தரலாமா❓ அவரவர் தான் பொறுக்க வேண்டுமா❓
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஹஸ்ஸருக்கு வந்ததும், “ஜம்ராவில் எறிவதற்கு பொடிக் கற்களை எடுத்துக் கொள்ளுங்கள்” என்று கூறினார்கள். முஹஸ்ஸர் என்பது மினாவாகும்.📚📚📚

*(நூல்: முஸ்லிம் 2248)*

*👉👉👉இயன்றவர்கள் நபி (ஸல்) அவர்களின் இந்த வழிமுறையைப் பின்பற்றுவது தான் சரியாகும். இயலாதவர்களுக்கு கற்களைப் பொறுக்கிக் கொடுப்பது தவறல்ல.👈👈👈*

*🌎🌎மஷ்அருல்🕋🕋 ஹராம் திக்ரு எத்தனை தடவை❓🌎🌎*

*✍✍✍முஸ்தலிஃபாவில் ஃபஜ்ரைத் தொழுதுவிட்டு, ‘மஷ்அருல் ஹராம்’முக்கு வந்து கிப்லாவை நோக்கி துஆ செய்துவிட்டு (முஸ்லிமின் 2137 ஹதீஸ்படி) சொல்லவேண்டிய “அல்லாஹ் அக்பர், லா இலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீகலஹு” என்பதை ஒருமுறை சொன்னால் போதுமா❓*
*பதில்*
*எண்ணிக்கை எதுவும் ஹதீஸில் இடம்பெறவில்லை. எனவே, ஒரு முறை சொன்னால் பொதுமானது.✍✍✍*

*🌐🌐🌐சூரிய உதயத்திற்கு முன் கல்லெறியும் சலுகை🧕🧕🧕 பெண்களுக்கு மட்டுமா❓🌐🌐🌐*

⛱⛱⛱10ஆம் நாள் சூரிய உதயத்திற்கு முன் கல்லெறிந்துவிடக்கூடிய சலுகை பெண்களுக்கு மட்டும்தானா❓ வயோதிகர்கள் ஆண்களாக இருந்தால் இது பொருந்துமா❓ சூரிய உதயத்திற்கு முன் கல்லெறிந்துவிட அனுமதியளிக்கப் பட்டவர்கள் அன்றைய ஃபஜ்ரைத் தொழுவதற்காக மீண்டும் முஸ்தலிஃபாவில் தங்கிய இடத்திற்கே வந்துவிட வேண்டுமா❓ அல்லது கல் எறிந்த பக்கத்து இடங்களிலேயே தொழலாமா❓ பெண்களுக்கு துணையாக உடன் வந்த ஆண்கள் ஃபஜ்ரை எங்கு நிறைவேற்ற வேண்டும்❓🌈🌈🌈
*பதில்*
🌈🌈🌈சாலிம் பின் அப்தில்லாஹ் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் தமது குடும்பத்திலுள்ள பலவீனர்களை முன் கூட்டியே (ஃபஜ்ருக்கு முன்பே மினாவிற்கு) அனுப்பி விடுவார்கள். அதன்படி, அவர்கள் முஸ்தலிஃபாவில் “மஷ்அருல் ஹராம்’ எனுமிடத்தில் இரவில் தங்கியிருந்து, அங்கு தமக்குத் தெரிந்தவகையில் அல்லாஹ்வை நினைவு கூர்வார்கள். பிறகு, இமாம் முஸ்தலிஃபாவில் தங்கித் திரும்புவதற்கு முன்பே இவர்கள் (மினாவிற்குத்) திரும்பிவிடுவர். அவர்களில் சிலர் ஃபஜ்ர் தொழுகைக்காக முன்கூட்டியே மினாவிற்குச் சென்றுவிடுவர். இன்னும் சிலர் அதற்குப் பின் செல்வர். மினாவுக்குச் சென்றதும் “ஜம்ரா’வில் கல்லெறிவர். “(முதியோர், பெண்கள், நோயாளிகள் போன்ற) இத்தகைய (நலிந்த)வர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இவ்வாறு செய்ய) அனுமதியளித்துள்ளார்கள்” என்று அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.⛱⛱⛱

*நூல்: முஸ்லிம் 2281*

*✍✍✍அஸ்மா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் அடிமையான அப்துல்லாஹ் அவர்கள் கூறியதாவது:*
*அஸ்மா (ரலி) அவர்கள் முஸ்தலிஃபாவில் தங்க வேண்டிய இரவில் அங்கு தங்கினார்கள். பிறகு எழுந்து சிறிது நேரம் தொழுதுவிட்டு, “மகனே! சந்திரன் மறைந்துவிட்டதா?” எனக் கேட்டார்கள். நான் “ஆம்!” என்றதும் “புறப்படுங்கள்!” எனக் கூறினார்கள். நாங்கள் புறப்பட்டு வந்ததும் ஜம்ராவில் அவர்கள் கல்லெறிந்தார்கள். பிறகு அங்கிருந்து திரும்பி வந்து தமது கூடாரத்தில் சுப்ஹு தொழுதார்கள். அப்போது நான், “அம்மா நாம் விடியும் முன்பே வந்துவிட்டதாகத் தெரிகின்றதே!” என்றேன். அதற்கவர்கள், “மகனே! நபி (ஸல்) அவர்கள் பெண்களுக்கு இவ்வாறு வர அனுமதியளித்துள்ளார்கள்” என்றார்கள்.✍✍✍*

*நூல்: புகாரி 1679*

🏵🏵🏵இந்த ஹதீஸ்களில் சூரியன் உதிப்பதற்கு முன்பே கல்லெறியலாம் என்று கூறப்பட்டிருந்தாலும் சூரியன் உதயமான பிறகு கல்லெறிவதே சிறந்தது. ஏனெனில் பலவீனர்களை முற்கூட்டியே அனுப்பிய நபி (ஸல்) அவர்கள் சூரியன் உதிக்கும் முன்பு கல்லெறிய வேண்டாம் என்று கூறி அனுப்பியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தினரில் பலவீனர்களை முற்கூட்டியே அனுப்பி வைத்தார்கள். சூரியன் உதிக்கும் வரை நீங்கள் கல்லெறிய வேண்டாம் என்று கூறி அனுப்பினார்கள்.🏵🏵🏵

*அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)*

*நூல்: திர்மிதி 817*

*👉👉👉சிறந்தது👈👈👈*

*✍✍✍இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு, முற்கூட்டியே சென்றாலும் சூரியன் உதிக்கும் வரை பலவீனர்கள் காத்திருந்து தான் கல்லெறிய வேண்டும் என்று அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி கூறுகின்றார். எனவே பலவீனர்கள் இந்த ஹதீஸையும் கவனத்தில் கொண்டு செயல்படுவது தான் சிறந்ததாகும்.*
*இவ்வாறு முற்கூட்டியே செல்ல அனுமதிக்கப்பட்டவர்கள் மினாவில் ஃபஜ்ர் தொழுது கொள்ளலாம் என்பதை மேற்கண்ட இப்னு உமர் (ரலி) அவர்களின் ஹதீஸ் விளக்குகின்றது.✍✍✍*

*👹👹👹பலவீனர்களுக்கு உதவியாக நாம் கல் எறியலாமா❓👹👹👹*

*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம் 15*

No comments:

Post a Comment