*🍇🍇🍇மீள் பதிவு🍇🍇🍇*
*🌐🌐🌐ஹஜ் உம்ரா சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*
*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👈👈👈*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*
*👉👉👉தொடர் பாகம் 10 👈👈👈*
*👉தலைப்பு👇*
*🕋🕋🕋ஹரம் ஷரீஃபில் தொழுவதற்கு 1 லட்சம் நன்மைகள் என்பது ஒவ்வொரு 2 ரக்அத்திற்குமா❓🕋🕋🕋*
*✍✍✍ஹரம் ஷரீஃபில் தொழுவதற்கு 1 லட்சம் நன்மைகள் என்பது ஒவ்வொரு 2 ரக்அத்திற்குமா❓*
*மஸ்ஜிதுல் ஹரமைத் தவிர ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட என்னுடைய இந்தப் பள்ளியில் தொழுவது ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும் என்று அல்லாஹ்வின் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍✍✍*
*அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),*
*நூல்: புகாரி 1190*
📕📕📕ஏனைய பள்ளிகளில் தொழுவதை விட மஸ்ஜிதுல் ஹரமில் தொழுவது ஒரு லட்சம் தொழுகைகளை விடச் சிறந்தது என்ற நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📕📕📕
*அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),*
*நூல்: முஸ்னத் அஹ்மத் 14167*
*✍✍✍அஹ்மதில் இடம் பெறும் இந்த ஹதீஸ் புகாரியிலும் இதர நூற்களிலும் இடம்பெறும் ஹதீசுக்கு விளக்கமாக அமைந்துள்ளது. இந்த ஹதீஸ்களில் தொழுகை என்று தான் இருக்கின்றது. ஒரு லட்சம் நன்மை என்று இல்லை.*
*மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு ரக்அத் தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு லட்சம் ரக்அத் தொழும் நன்மையைப் பெற்றுத் தருகின்றது. அங்கு இரண்டு ரக்அத் தொழுவது மற்ற பள்ளிகளில் இரண்டு லட்சம் ரக்அத் தொழுவதற்குச் சமமாகும்.✍✍✍*
*🌐🌐3 நேரங்களில் தொழக்கூடாது என்ற தடை 🕋ஹரம் ஷரீஃபிற்குமா❓🌎🌎*
📘📘📘தொழுவதற்கு தடை செய்யப்பட்ட 3 நேரங்களில் தொழக்கூடாது என்ற தடை ஹரம் ஷரீஃபில் தொழுவதற்கு இல்லை என்பது சரியா❓ மஸ்ஜிதுந் நபவியில் தொழுவதற்கும் அந்த விதிவிலக்கு உண்டா❓
அப்து மனாஃபின் சந்ததியினரே! இந்த ஆலயத்தில் தவாஃப் செய்யும் எவரையும் தடுக்காதீர்கள். இரவு பகல் எந்த நேரமும் தொழக் கூடிய எவரையும் தடுக்காதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📘📘📘
*அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)*
*நூற்கள்: திர்மிதி 795, அபூதாவூத் 1618, நஸயீ 2875*
*👆👆👆தொழுவதற்குத் தடை செய்யப்பட்ட நேரங்களிலிருந்து* *மஸ்ஜிதுல் ஹராமுக்கு மட்டும் இந்த ஹதீஸ் விதிவிலக்கு* *அளிக்கின்றது. அங்கு எந்த நேரத்திலும் தொழுவதற்கு* *அனுமதியுள்ளது. இந்த விதிவிலக்கு* *மஸ்ஜிதுந்நபவீக்குப் பொருந்தாது👈👈👈*
*🏓🏓🏓ஹோட்டல் 🕋🕋மக்கா எல்லைக்குள் இருந்தால் எங்கு குளிப்பது❓🏓🏓🏓*
*✍✍✍மக்காவில் நுழைவதற்கு முன்பு குளிப்பது சுன்னத் எனும்போது, நம்முடைய ஹோட்டல் மக்கா எல்லைக்குள் இருந்தால், ஹோட்டலில் குளித்துவிட்டு ஹரமுக்கு வரலாமா❓ மக்காவுக்கு வெளியில் குளித்துவிட்டு வருவது மட்டும்தான் சுன்னத்தா❓*
*இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹரம் – புனித எல்லையை நெருங்கிவிட்டால் தல்பியாவை நிறுத்திவிடுவார்கள். பிறகு தூத்துவா எனுமிடத்தில் தங்கி சுப்ஹுத் தொழுதுவிட்டு குளிப்பார்கள். “நபி(ஸல்) அவர்கள் இவ்வாறே செய்தார்கள்’ என்றும் கூறுவார்கள்.✍✍✍*
*அறிவிப்பவர்: நாஃபிஉ,*
*நூல்: புகாரி 1573*
*👆👆👆இந்த ஹதீஸ், மக்காவிற்குள் நுழைவதற்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் குளிப்பார்கள் என்று தெரிவிக்கின்றது. மக்கா எல்லைக்குள் தான் தங்குமிடம் அமைகின்றது என்றால் வந்த பின் குளித்துக் கொள்ளலாம்.👈👈👈*
*🕋🕋🕋தவாஃபுக்கு உளூ அவசியமா❓🕋🕋🕋*
📙📙📙தவாஃபுக்கு உளூ அவசியமா❓
ஹஜ்ஜிலும், உம்ராவிலும் கஅபாவை தவாஃப் செய்யும் போது உளூச் செய்ய வேண்டுமா? என்பதில் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடுகள் உள்ளன.
ஷாஃபி, மாலிக் ஆகிய இமாம்கள் தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று கூறுகின்றனர். உளூவில்லாமல் தவாஃப் செய்தால் அது செல்லாது என்று இவர்கள் கூறுகின்றனர். அஹ்மத் பின் ஹம்பல் அவர்கள் மாறுபட்ட இரு கருத்துக்களையும் கூறியதாக இரண்டு அறிவிப்புகள் உள்ளன. தவாஃப் செய்யும் போது உளூ அவசியம் இல்லை என்று அபூஹனீஃபா இமாம் கூறுகின்றார்கள்.
கஃபாவை தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டதாக ஒரு ஹதீசும் இல்லை. தவாஃப் செய்வதற்கு உளூ அவசியம் என்று இருந்தால் அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெளிவாகக் கட்டளையிட்டிருப்பார்கள். எனவே தவாஃபுக்கு உளூ கட்டாயம் இல்லை என்பதே சரியான கருத்தாகும்.
“முன்னோர்களான நல்லறிஞர்களில் மிக அதிகமானோரின் கருத்து இது தான். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் சேர்ந்து ஏராளமான நபித்தோழர்கள் ஹஜ்ஜும், உம்ராவும் செய்துள்ளனர். அப்படியிருந்தும் ஒரே ஒரு தோழருக்குக் கூட உளூச் செய்து விட்டு தவாஃப் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடவில்லை. இது அவசியமாக இருந்திருந்தால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டாயமாக விளக்கியிருப்பார்கள்” என்று இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.
தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் வாதங்கள் பலவீனமானவையாக அமைந்துள்ளன.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்து விட்டு தவாஃப் செய்தார்கள்.📙📙📙
*(புகாரி 1615, 1642)*
*✍✍✍இதைத் தமது கருத்தை நிலைநாட்டும் ஆதாரமாக எடுத்து வைக்கிறனர். இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்றாலும் இதிலிருந்து எடுத்து வைக்கும் வாதம் பலவீனமானதாக உள்ளது.*
*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தைச் செய்தால் அந்தக் காரியம் கட்டாயக் கடமை என்ற பொருளைத் தராது. அவர்களின் காரியங்களில் கடமையானவைகளும் உள்ளன. விரும்பத்தக்கவைகளும் உள்ளன. அனுமதிக்கப்பட்டவைகளும் உள்ளன.*
*நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு ஒருவர் ஸலாம் கூறிய போது அவருக்குப் பதில் சொல்லாமல் தயம்மும் செய்த பின்னர் தான் பதில் ஸலாம் கூறியுள்ளார்கள்.✍✍✍*
*(புகாரி 337)*
📗📗📗இதை ஆதாரமாக வைத்து ஸலாமுக்குப் பதில் கூற உளூ அவசியம் என்று முடிவு செய்ய முடியாது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த காரியங்களில் எவை குறித்து வலியுறுத்தி கட்டளை பிறப்பித்துள்ளார்களோ அவை மட்டும் தான் கட்டாயமானவையாகும்.
அவர்கள் கட்டளை பிறப்பிக்காமல் வணக்க வழிபாடுகள் தொடர்பான ஒன்றைச் செய்தால் அவை விரும்பத்தக்கவை என்று தான் கருத வேண்டும். எனவே இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற முடிவுக்கு வர முடியாது.
ஆயிஷா (ரலி) அவர்கள் ஹஜ்ஜுக்குச் சென்ற போது அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டு விட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் “நீ தூய்மையாகும் வரை கஃபாவில் தவாஃப் செய்வதைத் தவிர ஹாஜிகள் செய்யும் அனைத்துக் காரியங்களையும் செய்” என்று கூறினார்கள்.📗📗📗
*இது புகாரியில் 305, 1650 ஆகிய எண்களைக் கொண்ட ஹதீஸாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.*
*✍✍✍தவாஃபுக்கு உளூ அவசியம் என்ற கருத்துடையவர்கள் இதையும் தமது கருத்துக்குரிய ஆதாரமாக எடுத்துக் காட்டுகின்றனர்.*
*இந்த ஹதீஸிலும் இவர்களின் வாதத்தை நிரூபிக்கும் கருத்து இல்லை.*
*மாதவிடாய் நின்று தூய்மையாகும் வரை தவாஃப் செய்யக் கூடாது என்பது தான் இதிலிருந்து பெறப்படும் கருத்தாகும். உளூவுக்கும், இதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.*
*மாதவிடாய் நேரத்தில் தொழக் கூடாது என்பதைப் போல் தவாஃபும் செய்யக் கூடாது என்பது மட்டும் தான் இதிலிருந்து விளங்குகிறதே தவிர மாதவிடாய் அல்லாத போது பெண்கள் உளூச் செய்யாமல் தவாஃப் செய்யக் கூடாது என்ற கருத்தை இந்த ஹதீஸிலிருந்து பெற முடியாது.*
*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உளூச் செய்து விட்டு தவாஃப் செய்ததால் அது விரும்பத்தக்கது என்று கூற முடியும்.*
*ஆயினும் தவாஃபுக்குப் பின் இரண்டு ரக்அத்துகள் தொழ வேண்டும் என்பதால் தவாஃபுக்கு முன்பே உளூச் செய்து கொள்வது நமது சிரமத்தைக் குறைக்கும். மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சுன்னத்தைப் பேணிக் கொண்ட நன்மையும் கிடைக்கும்.✍✍✍*
*🌐🌐பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று கூறி🕋🕋🕋 தவாஃபை ஆரம்பிக்க வேண்டுமா❓🌎🌎*
📒📒📒தவாஃபை ஆரம்பிக்கும்போது ‘பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்’ என்று கூறி சுற்றை ஆரம்பிக்க வேண்டும் என்பது சரியா❓
பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர் என்று இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாகத் தான் பைஹகீ எனும் நூலில் காணப்படுகின்றது. எனவே இது நபி வழியல்ல. தவாஃபின் போது ஹஜ்ருல் அஸ்வதுக்கு அருகில் வருகின்ற ஒவ்வொரு தடவையும் அதை நோக்கி சைகை செய்து தக்பீரும் சொல்வது தான் நபிவழியாகும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு “அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறினார்கள்.📒📒📒
*நூல்: புகாரி 1613*
*🌐🌐(ரமல்) 3 சுற்றுக்களில் வேகமாக சுற்றி 🕋🕋தவாஃப் செய்வது 🧕🧕பெண்களுக்குமா❓🌎🌎*
*✍✍✍தவாஃபுல் குதூமில் சற்று வேகமாக சுற்றவேண்டிய முதல் 3 சுற்றுக்களிலும் ‘ரமல்’ என்று சொல்லப்படும் புஜத்தை குலுக்கவேண்டும் என்று சொல்வது சரியா❓ 3 சுற்றுக்களில் வேகமாக சுற்றி தவாஃப் செய்வது பெண்களுக்குமா❓*
*பதில்*
*இது ஆண்கள், பெண்கள் அனைவருக்கும்* *பொதுவான சட்டம் தான். பெண்களுக்கு இதில் விதிவிலக்கு இந்திருக்குமானால் அதை அல்லாஹ்வும்* *அவனது தூதரும் விளக்கியிருப்பார்கள்.✍✍✍*
*🌐🌐உபரி 🕋🕋தவாஃபின் போது, வலது புஜம் தெரியுமாறு இஹ்ராம் ஆடை அணிய வேண்டுமா❓🌎🌎*
📓📓📓உபரியான தவாஃப்கள் செய்யும் போது ஆண்கள் வலது புஜம் தெரியுமாறு இஹ்ராமின் மேலாடையை அணிந்து கொள்ள வேண்டுமா❓
நபி (ஸல்) அவர்கள் வலது தோள் புஜம் தெரியுமாறு இடது தோள் மீது போர்வையைப் போட்டுக் கொண்டு தவாஃப் செய்தார்கள்.📓📓📓
*அறிவிப்பவர்: யஃலா பின் உமைய்யா*
*நூல்: திர்மிதி 787, அபூதாவூத் 1607*
*✍✍✍இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் வலது புஜம் தெரியுமாறு ஆடையணிந்தது தவாஃபுல் குதூமில் மட்டும் தான். காரணம், ஜம்ரத்துல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலால் ஆகிவிடுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.✍✍✍*
*(அபூதாவூத் 1708)*
*👉👉👉ஒவ்வொருவரும் தையல் ஆடைகளை அணிந்து கொள்ளலாம் என்றாகி விடுகின்றது. தவாஃபுல் விதாவிலும் இதுபோன்றே ஆடை அணிவதால், வலது புஜம் திறந்து இடது புஜத்தை மூடுவது தவாஃபுல் குதூமில் மட்டும் தான் என்பதைத் தெளிவாக விளங்கலாம். மற்ற உபரியான தவாஃபுகளில் இந்த முறை இருப்பதாக எந்த அறிவிப்பும் வரவில்லை👈👈👈*
*🕋🕋🕋தவாஃப், ஸயீ பாதியில் நிறுத்தி தொடரலாமா❓🕋🕋🕋*
📔📔📔தவாஃபின்போது உளூ அவசியமில்லை என்றாலும் அது சுன்னத் என்ற அடிப்படையில் உளூ செய்கிறோம். தவாஃபை முடிப்பதற்குள் உளூ முறிந்து அந்த சுன்னத்தைத் தொடர விரும்பினாலோ, அவசரமான இயற்கைத் தேவைகளினால் பாதியில் சென்றுவிட்டாலோ, ஒரே நேரத்தில் 7 சுற்றுக்களையும் சுற்ற இயலாமல் போனாலோ இடையில் களைப்பாறிவிட்டு பிறகு மீதி சுற்றுகளை அந்த பாதியிலிருந்தே தொடரலாமா❓ அதுபோல் ஸயீயிலும் பாதியில் நிறுத்தி தொடரலாமா❓
எவரையும் அவரது சக்திக்குட்பட்டே தவிர அல்லாஹ் சிரமப்படுத்த மாட்டான்.📔📔📔
*அல்குர்ஆன் 2:286*
*✍✍👆இந்த வசனத்தின் அடிப்படையில் எவரையும் சக்திக்கு மீறி அல்லாஹ் சிரமப்படுத்துவதில்லை. இயற்கைத் தேவை அல்லது இயலாமை போன்ற காரணங்களால் தவாஃபை இடையில் முறித்து விட்டால், விடுபட்ட சுற்றிலிருந்து மீண்டும் தொடங்கிக் கொள்ளலாம்.*
*உபரியான தவாஃப் என்றால் சுற்றுக்களைத் தொடராமல் விட்டாலும் அதனால் பாதிப்பு இல்லை. ஆனால் உம்ரா, ஹஜ் ஆகியவற்றின் தவாஃபுகளைத் தொடராமல் விட்டால் அது முழுமையடையாது. எனவே விட்ட இடத்திலிருந்து மீண்டும் சுற்றுக்களைத் தொடர்ந்து முழுமைப்படுத்த வேண்டும். ஸயீயிலும் இவ்வாறு தான். தவாஃப், ஸஃயீ – க்கு உளு கட்டாயம் இல்லை.✍✍✍*
. *🕋🕋🕋ஹஜ்ருல் அஸ்வதை நோக்கி தக்பீருக்குப் பின் துஆ உண்டா❓🕋🕋🕋*
📚📚📚ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிட முடியாதபட்சத்தில், அதை நோக்கி கையை நீட்டி ‘அல்லாஹு அக்பர்’ என சொல்லும்போது சைகைக்காக நீட்டிய கையை முத்தமிட்டுக் கொள்ளலாமா❓ ஹஜ்ருல் அஸ்வதை நோக்கி கையை நீட்டி தக்பீர் சொல்லிய பிறகு ‘அல்லாஹும்ம ஈமானம் பிக, வ தஸ்தீகம் பிகிதாபிக….’ என்பதுபோல் ஆரம்பிக்கும் துஆக்களுக்கு ஆதாரம் உள்ளதா❓
இப்னு உமர் (ரலி) அவர்கள், “நான், நபி (ஸல்) அவர்கள் அதைக் கையால் தொட்டு முத்தமிடுவதையும் வாயால் முத்தமிடுவதையும் கண்டேன்!” எனக் கூறினார்கள்.📚📚📚
*நூல்: புகாரி 1611*
*✍✍✍இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:*
*நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள்; ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் சைகை செய்தார்கள்✍✍✍* .
*நூல்: புகாரி 1612, 1613, 5293*
⛱⛱⛱ஹஜ் அஸ்வதை கைகளால் தொட்டு, அந்தக் கையை முத்தமிடுவது, வாயால் முத்தமிடுவது போன்றவை தான் ஹதீஸ்களில் இடம்பெறுகின்றது. இதற்கு இயலாவிட்டால் அதை நோக்கி சைகை செய்வதற்கு ஆதாரம் உள்ளது.⛱⛱⛱
🌈🌈🌈சைகை செய்த கையை முத்தமிட்டதாக ஹதீஸ்களில் எந்த ஆதாரமும் இல்லை.🌈🌈🌈
🕋🕋🕋ஹஜ்ருல் அஸ்வதைத் தொட்டு முத்தமிடுவதற்காகவோ, அல்லது சைகை செய்வதற்காகவோ பிரத்தியேகமான பிரார்த்தனை எதுவும் ஹதீஸ்களில் இல்லை.🕋🕋🕋
*🕋🕋ஹஜ்ருல் அஸ்வத் முத்தமிடும் போது தக்பீர் கூற வேண்டுமா❓🕋🕋*
*✍✍நேரடியாக முத்தமிட வாய்ப்பு கிடைத்தால் அப்போதும் தக்பீர் சொல்லித் தான் முத்தமிடவேண்டுமா❓ சைகை செய்வதற்கு மட்டும்தான் தக்பீரா❓ இடது அல்லது வலது எந்த கையால் வேண்டுமானாலும் சைகை செய்துக் கொள்ளலாமா❓*
*இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:*
*நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மீதமர்ந்து கஅபாவை தவாஃப் செய்தார்கள். ஹஜருல் அஸ்வதின் பக்கம் வரும்போதெல்லாம் தம்மிடம் இருந்த ஏதோ ஒரு பொருளைக் கொண்டு ஹஜருல் அஸ்வதை நோக்கிச் சைகை செய்துவிட்டு “அல்லாஹு அக்பர்’ (அல்லாஹ் மிகப்பெரியவன்) என்று கூறினார்கள்.✍✍✍*
*நூல்: புகாரி 1613*
📕📕📕ஹஜ்ருல் அஸ்வதுக்கு வரும் போதெல்லாம் தக்பீர் சொல்ல வேண்டும். நேரடியாக முத்தமிட வாய்ப்புக் கிடைத்தாலும் ஹஜ்ருல் அஸ்வதுக்கு நேராக வரும் போது தக்பீர் சொல்வது நபிவழியாகும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நபி (ஸல்) அவர்கள் (அங்க) சுத்தம் செய்யும்போதும், தலைவாரும்போதும், செருப்பணியும்போதும் தம்மால் இயன்ற தமது காரியங்கள் அனைத்திலும் வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக்கூடியவர்களாக இருந்தார்கள்📕📕📕.
*நூல்: புகாரி 426*
*👉👉👉நபி (ஸல்) அவர்கள் அனைத்து நல்ல காரியங்களையும் வலது கையால் செய்வதையே விரும்புவார்கள். எனவே வலது கையைக் கொண்டு சைகை செய்வதே சிறந்ததாகும்.👈👈👈*
*🕋🕋🕋ருக்னுல் யமானியை தொட்டு முத்தமிட வேண்டுமா❓🕋🕋🕋*
*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 11*
No comments:
Post a Comment