பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, August 10, 2019

ஸஹீஹான ஹதீஸ்களின்

*🌹மீள் பதிவு🌹*

*🏓🏓🏓👉👉👉ஸஹீஹான ஹதீஸ்களின் தொகுப்பு 👈👈👈🏓🏓🏓*

*🌹🌹🌹நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பொன் மொழிகளிலிருந்தும் உங்கள் பார்வைக்கு🌹🌹🌹*👇👇👇👇👇

*1017* حَدَّثَنَا هَارُونُ بْنُ مَعْرُوفٍ حَدَّثَنَا ابْنُ وَهْبٍ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ أَنَّ أَبَا عُشَّانَةَ الْمَعَافِرِيَّ _*حَدَّثَهُ عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يَعْجَبُ رَبُّكُمْ مِنْ رَاعِي غَنَمٍ فِي رَأْسِ شَظِيَّةٍ بِجَبَلٍ يُؤَذِّنُ بِالصَّلَاةِ وَيُصَلِّي فَيَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ انْظُرُوا إِلَى عَبْدِي هَذَا يُؤَذِّنُ وَيُقِيمُ الصَّلَاةَ يَخَافُ مِنِّي قَدْ غَفَرْتُ لِعَبْدِي وَأَدْخَلْتُهُ الْجَنَّةَ رواه أبو داود*_

*_👆👆👆அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :👇👇👇_*

_*✍(மக்களே) மலைப் பாறைகளின் உச்சியில் தொழுகை அழைப்பு (பாங்கு) சொல்லி தொழும் ஆட்டு இடையன் ஒருவனைப் பார்த்து உங்கள் இரட்சகன் மகிழ்ச்சியடைகின்றான். ”பாருங்கள் என் அடியானை! பாங்கும், இகாமத்தும் கூறித் தொழுகின்றான். (காரணம்) என்னை அவன் அஞ்சுகிறான். (ஆகவே) என் அடியானை நான் மன்னித்து விட்டேன் என்று மாண்பும் வல்லமையும் மிக்க அந்த இறைவன் கூறுகின்றான்.*_

*🎙👆அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி)👈*

*📚நூல் : அபூதாவூத் 1017📚*

       _*قَالَ سَمِعْتُ أُمَّ حَبِيبَةَ تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- يَقُولُ*_

 _*مَنْ صَلَّى اثْنَتَىْ عَشْرَةَ رَكْعَةً فِى يَوْمٍ وَلَيْلَةٍ بُنِىَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِى الْجَنَّةِ*_

 _*✍யார் இரவிலும், பகலிலும் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவருக்காக சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படுகின்றது என நபி (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.*_✍

*🎙அறி : உம்மு ஹபீபா (ரலி),👈*

*📚 நூல் : முஸ்லிம் 📚*

*1801* - أَخْبَرَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ ، قَالَ : أَنْبَأَنَا أَبُو الأَسْوَدِ ، قَالَ : حَدَّثَنِي بَكْرُ بْنُ مُضَرَ ، عَنْ ابْنِ عَجْلاَنَ ، عَنْ أَبِي إِسْحَاقَ الْهَمْدَانِيِّ ، عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ ، عَنْ عَنْبَسَةَ بْنِ أَبِي سُفْيَانَ ، _*عَنْ أُمِّ حَبِيبَةَ ، أَنَّ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم قَالَ*_

_*اثْنَتَا عَشْرَةَ رَكْعَةً مَنْ صَلاَّهُنَّ بَنَى اللَّهُ لَهُ بَيْتًا فِي الْجَنَّةِ ، أَرْبَعَ رَكَعَاتٍ قَبْلَ الظُّهْرِ وَرَكْعَتَيْنِ بَعْدَ الظُّهْرِ ، وَرَكْعَتَيْنِ قَبْلَ الْعَصْرِ ، وَرَكْعَتَيْنِ بَعْدَ الْمَغْرِبِ ، وَرَكْعَتَيْنِ قَبْلَ صَلاَةِ الصُّبْحِ*_

_*✍லுஹருக்கு முன் நான்கு ரக்அத்துக்கள், லுஹருக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், மக்ரிபுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், இஷாவுக்குப் பின் இரண்டு ரக்அத்துக்கள், பஜ்ருக்கு முன் இரண்டு ரக்அத்துக்கள் ஆகிய சுன்னத்தான பன்னிரண்டு ரக்அத்துகளை யார் தொழுகின்றார்களோ அவருக்காக சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍*_

*🎙அறி : ஆயிஷா (ரலி) ,👈*

*📚நூல் : திர்மிதீ, நஸயீ, இப்னுமாஜா📚*

عَنْ عَائِشَةَ عَنِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ

 رَكْعَتَا الْفَجْرِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا فِيهَا

✍பஜ்ருடைய இரண்டு ரக்அத்துகள் இந்த உலகம் இன்னும் அதில் உள்ளவை அனைத்தை விடவும் மிகச் சிறந்தவையாகும் என்று *நபி (ஸல்)* அவர்கள் கூறினார்கள்.

*👆👆👆அறி : ஆயிஷா (ரலி),*
*நூல் : முஸ்லிம்👈👈*

*592* - ﺣﺪﺛﻨﺎ ﻣﻮﺳﻰ ﺑﻦ ﺇﺳﻤﺎﻋﻴﻞ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻮاﺣﺪ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ اﻟﺸﻴﺒﺎﻧﻲ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ اﻷﺳﻮﺩ، ﻋﻦ ﺃﺑﻴﻪ، ﻋﻦ ﻋﺎﺋﺸﺔ، ﻗﺎﻟﺖ: " _*ﺭﻛﻌﺘﺎﻥ ﻟﻢ ﻳﻜﻦ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻳﺪﻋﻬﻤﺎ ﺳﺮا ﻭﻻ ﻋﻼﻧﻴﺔ: ﺭﻛﻌﺘﺎﻥ ﻗﺒﻞ ﺻﻼﺓ اﻟﺼﺒﺢ، ﻭﺭﻛﻌﺘﺎﻥ ﺑﻌﺪ اﻟﻌﺼﺮ "*_

*_👆👆ஆயிஷா(ரலி) அறிவித்தார்.👇👇👇_*

_*🍃✍இரண்டு தொழுகைகளை இரகசியமாகவோ பகிரங்கமாகவோ நபி(ஸல்) அவர்கள்விட்டதேயில்லை. அவை ஸுப்ஹுத் தொழுகைக்கு முன் இரண்டு ரக்அத்கள், அஸர் தொழுகைக்குப் பின் இரண்டு ரக்அத்கள்.✍*_

*📚 நூல் : புகாரி : 592 📚*

                 

*259* - ﺣﺪﺛﻨﺎ ﻋﻤﺮ ﺑﻦ ﺣﻔﺺ ﺑﻦ ﻏﻴﺎﺙ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺃﺑﻲ، ﺣﺪﺛﻨﺎ اﻷﻋﻤﺶ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﻲ ﺳﺎﻟﻢ، ﻋﻦ ﻛﺮﻳﺐ، ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ، *ﻗﺎﻝ: ﺣﺪﺛﺘﻨﺎ ﻣﻴﻤﻮﻧﺔ ﻗﺎﻟﺖ: «ﺻﺒﺒﺖ ﻟﻠﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻏﺴﻼ، ﻓﺄﻓﺮﻍ ﺑﻴﻤﻴﻨﻪ ﻋﻠﻰ ﻳﺴﺎﺭﻩ ﻓﻐﺴﻠﻬﻤﺎ، ﺛﻢ ﻏﺴﻞ ﻓﺮﺟﻪ، ﺛﻢ ﻗﺎﻝ ﺑﻴﺪﻩ اﻷﺭﺽ ﻓﻤﺴﺤﻬﺎ ﺑﺎﻟﺘﺮاﺏ، ﺛﻢ ﻏﺴﻠﻬﺎ، ﺛﻢ ﺗﻤﻀﻤﺾ ﻭاﺳﺘﻨﺸﻖ، ﺛﻢ ﻏﺴﻞ ﻭﺟﻬﻪ، ﻭﺃﻓﺎﺽ ﻋﻠﻰ ﺭﺃﺳﻪ، ﺛﻢ ﺗﻨﺤﻰ، ﻓﻐﺴﻞ ﻗﺪﻣﻴﻪ، ﺛﻢ ﺃﺗﻲ ﺑﻤﻨﺪﻳﻞ ﻓﻠﻢ ﻳﻨﻔﺾ ﺑﻬﺎ»*

*🍃✍நான் நபி (ஸல்) அவர்கள் குளிப்பதற்குத் தண்ணீர் ஊற்றினேன்.*
*☄ அவர்கள் தமது வலக் கரத்தால் நீர் அள்ளி இடக்கையின் மீது ஊற்றி இருகைகளையும் கழுவினார்கள்;*✍

*☄ பிறகு தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள்.✍*

*☄ பிறகு தமது கையைப் பூமியில் மண் கொண்டு தேய்த்து பிறகு அதை (நீரால்) கழுவினார்கள்✍.*

*☄ பிறகு வாய் கொப்பளித்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி(ச் சிந்தி)னார்கள். பிறகு தம் முகத்தைக் கழுவி, தலையில் தண்ணீர் ஊற்றினார்கள்.*✍

*☄ பிறகு சற்று நகர்ந்து தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள். பிறகு (துடைத்துக்கொள்ள) துண்டு கொடுக்கப் பட்டது. ஆனால் அதன் மூலம் அவர்கள் துடைத்துக்கொள்ளவில்லை.✍*

*🎙👆👆அறிவிப்பவர் : மைமூனா (ரலி)👈👈*

*📕நூல் : புகாரி (259)📕*

*260* - ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ اﻟﺰﺑﻴﺮ اﻟﺤﻤﻴﺪﻱ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ ﺳﻔﻴﺎﻥ، ﻗﺎﻝ: ﺣﺪﺛﻨﺎ اﻷﻋﻤﺶ، ﻋﻦ ﺳﺎﻟﻢ ﺑﻦ ﺃﺑﻲ اﻟﺠﻌﺪ، ﻋﻦ ﻛﺮﻳﺐ، *ﻋﻦ اﺑﻦ ﻋﺒﺎﺱ، ﻋﻦ ﻣﻴﻤﻮﻧﺔ «ﺃﻥ اﻟﻨﺒﻲ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ اﻏﺘﺴﻞ ﻣﻦ اﻟﺠﻨﺎﺑﺔ، ﻓﻐﺴﻞ ﻓﺮﺟﻪ ﺑﻴﺪﻩ، ﺛﻢ ﺩﻟﻚ ﺑﻬﺎ اﻟﺤﺎﺋﻂ، ﺛﻢ ﻏﺴﻠﻬﺎ، ﺛﻢ ﺗﻮﺿﺄ ﻭﺿﻮءﻩ ﻟﻠﺼﻼﺓ ﻓﻠﻤﺎ ﻓﺮﻍ ﻣﻦ ﻏﺴﻠﻪ ﻏﺴﻞ ﺭﺟﻠﻴﻪ»*

*🍃✍நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக (கடமையானக் குளியலைக்) குளிக்கும்போது (முதலில்) தமது மர்மஸ்தலத்தை கையினால் கழுவினார்கள். பிறகு கையைத் தேய்த்து கழுவினார்கள். பிறகு தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்தார்கள். குளித்து முடித்து (இறுதியில்) தம்மிரு கால்களையும் கழுவினார்கள்.✍*

*🎙👆👆அறிவிப்பவர் : மைமூனா (ரலி)👈👈*

*📕நூல் : புகாரி (260)📕*

_*🍃✍நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.✍*_

*🎙👆👆அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)👈👈*

*📚 நூல்: முஸ்லிம் 1216 📚*

_*🍃✍இரவின் கடைசியின் மூன்றிலொரு பகுதி நேரமான போது 11 ரக்அத்கள் தொழுதார்கள்✍.*_

*🎙👆👆அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)👈👈*

*📚 நூல்: புகாரீ 7452 📚*

_*🍃✍நபி (ஸல்) அவர்கள் ஒரு நாள் இரவின் கடைசி நேரத்தில் எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)✍*_

*🎙👆👆அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)👈👈*

*📚 நூல்: முஸ்லிம் 376 📚*

_*🍃✍நபி (ஸல்) அவர்கள் பாதி இரவான போது எழுந்து தொழுதார்கள். (ஹதீஸின் கருத்து)✍*_

*🎙👆👆அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)👈👈*

*📚 நூல்: புகாரீ 183 📚*

_*🍃✍நபி (ஸல்) அவர்கள் இரவின் அனைத்து நேரத்திலும் வித்ர் தொழுதுள்ளார்கள். அவர்களின் வித்ர் (சில நேரங்களில்) ஸஹர் வரை நீடித்துள்ளது✍.*

*🎙👆👆அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)👈👈*

*📚 நூல்: புகாரீ 996 📚*

_*🍃✍நபித்தோழர் ஒருவர் கூறுகிறார் : (ஒரு நாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அஸர் தொழவைத்தார்கள். (தொழுகை முடிந்த) உடன் ஒருவர் எழுந்து தொழ ஆரம்பித்தார். இதைக் கண்ட உமர் (ரலி) அவர்கள் அவரிடம் (சென்று) அமர்வீராக. வேதக்காரர்கள் தங்களுடைய தொழுகைகளுக்கு இடையே பிரிவின்றி அவற்றை (சோந்தாற்போல்) நிறைவேற்றியதால் தான் அழிந்து போனார்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமர் பின் கத்தாப் சரியாகச் சொன்னார் என்று கூறினார்கள்.✍*_

*📚நூல் : அஹ்மது 22041📚*

*🍃✍அல்லாஹும்ம பாஇத் பைனீ🍃*

_*ﺃﻗﻮﻝ: اﻟﻠﻬﻢ ﺑﺎﻋﺪ ﺑﻴﻨﻲ ﻭﺑﻴﻦ ﺧﻄﺎﻳﺎﻱ، ﻛﻤﺎ ﺑﺎﻋﺪﺕ ﺑﻴﻦ اﻟﻤﺸﺮﻕ ﻭاﻟﻤﻐﺮﺏ، اﻟﻠﻬﻢ ﻧﻘﻨﻲ ﻣﻦ اﻟﺨﻄﺎﻳﺎ ﻛﻤﺎ ﻳﻨﻘﻰ اﻟﺜﻮﺏ اﻷﺑﻴﺾ ﻣﻦ اﻟﺪﻧﺲ، اﻟﻠﻬﻢ اﻏﺴﻞ ﺧﻄﺎﻳﺎﻱ ﺑﺎﻟﻤﺎء ﻭاﻟﺜﻠﺞ ﻭاﻟﺒﺮﺩ "*_

_*🍃✍அல்லாஹும்ம பாஇத் பைனீ வபைன கத்தாயாய கமா பாஅத்த பைனல் மஷ்ரிக்கி வல் மஃக்ரிப், அல்லாஹும்ம நக்கினீ மினல் கத்தாயா கமா யுனக்கஸ் ஸவ்புல் அப்யளு மினத் தனஸ், அல்லாஹும்ம ஹ்ஸில் கத்தாயாய பில் மாஇ வஸ்ஸல்ஜி வல்பர்த்✍*_

*🎙👆👆அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)👈👈*

*📚நூல்: புகாரி (744)📚*

_*🍃✍(பொருள்: இறைவா! கிழக்குக்கும் மேற்குக்குமிடையே நீ ஏற்படுத்திய தூரத்தைப் போன்று, எனக்கும் என் தவறுகளுக்குமிடையே நீ தூரத்தை ஏற்படுத்துவாயாக! இறைவா! வெண்மையான ஆடை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தப்படுவது போன்று என் தவறுகளை விட்டும் என்னைத் தூய்மைப்படுத்துவாயாக! தண்ணீராலும் பனிக்கட்டியாலும் ஆலங்கட்டியாலும் என் தவறுகளைக் கழுவுவாயாக!)✍*_

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

          *🍃வஜ்ஜஹ்து🍃*

_*🍃"✍வஜ்ஜஹ்து வஜ்ஹிய லில்லதீ ஃபதரஸ் ஸமாவாத்தி வல்அர்ள ஹனீஃபன். வ மா அன மினல் முஷ்ரிகீன். இன்ன ஸலாத்தீ வ நுசுகீ வ மஹ்யாய வ மமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லா ஷரீக்க லஹு வ பிதாலிக உமிர்த்து. வ அன மினல் முஸ்லிமீன். அல்லாஹும்ம அன்த்தல் மலிக்கு. லா இலாஹ இல்லா அன்த்த. அன்த்த ரப்பீ வ அன அப்துக்க. ழலம்த்து நஃப்சீ. வஅதரஃப்த்து பி தன்பீ. ஃபஃக்ஃபிர்லீ துனூபீ ஜமீஆ. இன்னஹு லா யஃக்ஃபிருத் துனூப இல்லா அன்த்த. வஹ்தினீ லி அஹ்சனில் அக்லாக்கி, லா யஹ்தீ லி அஹ்சனிஹா இல்லா அன்த்த. வஸ்ரிஃப் அன்னீ சய்யிஅஹா, லா யஸ்ரிஃபு அன்னீ சய்யிஅஹா இல்லா அன்த்த. லப்பைக்க வ சஅதைக்க. வல்கைரு குல்லுஹு ஃபீ யதைக்க. வஷ்ஷர்ரு லைஸ இலைக்க. அன பிக்க, வ இலைக்க. தபாரக்த்த வ தஆலைத்த. அஸ்தஃக்ஃபிருக்க வ அதூபு இலைக்க''✍*_

*🎙👆👆அறிவிப்பவர்: அலீ பின் அபீதாலிப் (ரலி)👈👈*

*📚நூல்: முஸ்லிம் ( 1419)📚*

_*🍃✍பொருள்: நான் வானங்களையும் பூமியையும் முன்மாதிரியின்றிப் படைத்தவன் பக்கம் நேராக என் முகத்தைத் திருப்பிக் கொண்டேன். நான் இணைவைப்போரில் ஒருவனாக இருக்க மாட்டேன். என் தொழுகையும் என் தியாகமும் என் வாழ்வும் என் மரணமும் அனைத்துலகின் அதிபதியான அல்லாஹ்வுக்கே உரியன. அவனுக்கு இணையே இல்லை. இவ்வாறே எனக்குக் கட்டளையிடப்பட்டுள்ளது. நான் கட்டுப்பட்டு நடப்பவர் (முஸ்லிம்)களில் ஒருவன் ஆவேன். இறைவா! நீயே அரசன். உன்னைத் தவிர வேறு இறைவன் இல்லை. நீயே என் இறைவன். நான் உன் அடிமை. எனக்கு நானே அநீதி இழைத்துக் கொண்டேன். நான் என் பாவங்களை (மறைக்காமல்) ஒப்புக் கொள்கிறேன். எனவே, என் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பாயாக! பாவங்களை மன்னிப்பவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர். நற்குணங்களுக்கு எனக்கு வழிகாட்டுவாயாக. நற்குணங்களுக்கு வழிகாட்டுபவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர். துர்குணங்களை என்னிலிருந்து அகற்றுவாயாக! துர்குணங்களை அகற்றுபவர் உன்னைத் தவிர வேறெவரும் இலர். இதோ வந்தேன். கட்டளையிடு (காத்திருக்கிறேன்). நன்மைகள் அனைத்தும் உன் கரங்களிலேயே உள்ளன. தீமைகள் உன்னைச் சார்ந்தவை அல்ல. உன்னால் தான் நான் (நல்வாழ்வு கண்டேன்). உன்னிடமே நான் (திரும்பிவரப்போகிறேன்). நீ சுபிட்சமிக்கவன். உன்னதமானவன். நான் உன்னிடமே பாவமன்னிப்புக் கோருகிறேன்; பாவங்களிலிருந்து மீண்டு உன்னிடம் திரும்புகிறேன்.✍*_

                  

_*'✍என் மீது இட்டுக்கட்டிச் சொல்லாதீர்கள். ஏனெனில், என் மீது எவன் இட்டுக்கட்டிச் சொல்வானோ அவன் நரகத்தில் நுழைவான்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:*✍_

*🎙👆👆அலீ(ரலி) அறிவித்தார்👈👈.*

*📚 ஸஹீஹ் புகாரி 106 📚*

        *👉👉👉604. இப்னு உமர்(ரலி) அறிவித்தார்👇👇👇* .

*✍முஸ்லிம்கள் (மக்காவிலிருந்து) மதீனாவிற்கு வந்தபோது தொழுகைக்கு அழைப்புக் கொடுக்கப்படுவதில்லை. அவர்க ஒன்று கூடி நேரத்தை முடிவு செய்து கொள்வார்கள். ஒரு நாள் இது பற்றி எல்லோரும் கலந்தாலோசித்தனர். அப்போது சிலர், கிறித்தவர்களைப் போன்று மணி அடியுங்கள் என்றனர். வேறு சிலர் யூதர்கள் வைத்திருக்கிற கொம்பைப் போன்று நாமும் கொம்பூதலாமே என்றனர். அப்போது உமர்(ரலி) 'தொழுகைக்காக அழைக்கிற ஒருவரை ஏற்படுத்தக் கூடாதா?' என்றனர். உடனே பிலால்(ரலி) அவர்களிடம் 'பிலாலே! எழுந்து தொழுகைக்காக அழையும்' என்று நபி(ஸல்) கூறினார்கள்.✍*

*👆👆ஸஹீஹ் புகாரி அத்தியாயம் : 10. பாங்கு👈👈👈*

*👉👉👉நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*👇👇👇

*✍ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக்குரிய ஓரு வார்த்தையை சர்வ சாதாரணமாகப் பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்துகளை உயர்த்தி விடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அவர் நரகத்தில் போய் விழுகிறார்.✍*

*👆👆👆புகாரி 6478👈👈👈*

*👉👉👉நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 👇👇👇:*

*✍உங்களில் ஒருவர் தமக்கு விரும்புவதையே “தம் சகோதரருக்கும்” அல்லது தம் அண்டை வீட்டாருக்கும் விரும்பாதவரை அவர் (முழுமையான) இறைநம்பிக்கையாளர் ஆகமாட்டார்.✍*

*👆👆ஸஹீஹ் முஸ்லிம் 71👈👈👈*

*👉👉👉அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது 👇👇👇👇👇:*

*✍அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பெரிய தந்தை (அபூதாலிப்) உடைய மரண தருவாயில் "லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள்; இதை வைத்து உங்களுக்காக நான் மறுமைநாளில் (அல்லாஹ்விடம்) சாட்சியம் கூறுவேன்" என்று கூறினார்கள். ஆனால் அவர், (ஏகத்துவ உறுதிமொழி கூற) மறுத்து விட்டார். இஸ்லாத்தை ஏற்காமலே மரணித்து விட்டார. அப்போது அல்லாஹ், "(நபியே!) நீங்கள் விரும்பியவரை(யெல்லாம்) நேர்வழியில் செலுத்திவிட முடியாது" எனும் (28:56ஆவது) வசனத்தை அருளினான்✍.*

*👆👆👆ஸஹீஹ் முஸ்லிம் 41👈👈👈*

*👉👉👉நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*👇👇👇

*✍(கூட்டுத் தொழுகையில்) முன் வரிசையில் இருக்கும் நன்மையை நீங்கள் அறிவீர்களாயின் அல்லது மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்து கொள்ள போட்டியேற்பட்டு) சீட்டுக் குலுக்கிப்போடும் நிலையேற்படும்.*✍

*👆👆ஸஹீஹ் முஸ்லிம் 748👈👈*

*👉👉👉இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*👇👇👇

*'✍நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை எவரும் (தமக்கு) சிரமமானதாக ஆக்கினால், அவரை அது மிகைத்துவிடும். எனவே, நடுநிலைமையையே மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள்; நற்செய்தியையே சொல்லுங்கள்; காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள்✍'*

*👆👆👆ஸஹீஹ் புகாரி 39👈👈👈*

*👉👉👉ஆயிஷா(ரலி) கூறினார்கள் 👇👇👇:*

*✍நபி (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன்பு) என் மீது சாய்ந்தபடி, 'இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக. எனக்குக் கருணை புரிவாயாக. மிக்க மேலான தோழர்களுடன் (சொர்க்கத்தில்) என்னைச் சேர்த்தருள்வாயாக' என்று பிரார்த்திப்பதை செவியுற்றேன்✍.*

*👆👆👆ஸஹீஹ் புகாரி 5674👈👈👈*

*👉👉👉அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :👇👇👇*

*✍உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான்.✍*

*👆👆ஸஹீஹ் முஸ்லிம் 5719👈👈👈*

*👉👉👉அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது :👇👇👇*

*✍நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் இரு மனிதர்கள் தும்மினர். அப்போது அவர்களில் ஒருவருக்கு நபி (ஸல்) அவர்கள் "யர்ஹமுக்கல்லாஹ்"  (அல்லாஹ் உமக்குக் கருணை புரிவானாக) என்று மறுமொழி கூறினார்கள். மற்றொருவருக்கு மறுமொழி கூறவில்லை. மறுமொழி கூறப்படாதவர், இன்ன மனிதர் தும்மியபோது தாங்கள் அவருக்கு மறுமொழி கூறினீர்கள். நான் தும்மியபோது தாங்கள் எனக்கு மறுமொழி கூறவில்லையே? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவர் (தும்மியவுடன் "அல்ஹம்து லில்லாஹ்" என்று) இறைவனைப் புகழ்ந்தார். நீர் இறைவனைப் புகழவில்லை (எனவே தான், அவருக்கு மறுமொழி கூறினேன். உமக்கு மறுமொழி கூறவில்லை) என்று பதிலளித்தார்கள்.✍*

*👆👆👆ஸஹீஹ் முஸ்லிம் 5715👈👈👈*

*👉👉 *👉அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது* 👇👇👇

*✍அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "எல்லாக் குழந்தைகளும் இயற்கையி(ன் மார்க்கத்தி)ல் தான் பிறக்கின்றன. அவர்களின் பெற்றோர்கள் தான் அவர்களை யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ, இணை வைப்பாளர்களாகவோ ஆக்கி விடுகின்றனர்"  என்று சொன்னார்கள். அப்போது ஒரு மனிதர், "அல்லாஹ்வின் தூதரே! அதற்கு முன்னர் (அறியாப் பருவத்திலேயே) இறந்துவிட்டால், அதன் நிலை (என்ன என்பது) பற்றி என்ன சொல்கிறீர்கள்?" என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் (உயிருடன் வாழ்ந்தால்) எவ்வாறு செயல்பட்டிருப்பார்கள் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான்" என்று சொன்னார்கள்.✍*

*👆👆👆ஸஹீஹ் முஸ்லிம் 5167👈👈👈*

*👉👉👉அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*👇👇👇

*✍கல்வி அகற்றப்படுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது (அதிகமாக) அருந்தப் படுவதும் விபசாரம் பகிரங்கமாக நடைபெறுவதும் (யுக)முடிவு நாளின் அடையாளங்களில் உள்ளவையாகும்✍.*

*👆👆ஸஹீஹ் முஸ்லிம் 5716*👈👈👈

*👉👉👉அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*

*நீங்கள் பிரார்த்தித்தால், "இறைவா! நீ நினைத்தால் எனக்கு மன்னிப்பு வழங்குவாயாக!" என்று கேட்க வேண்டாம். மாறாக, (இறைவனிடம்) எதைக் கேட்டாலும் வலியுறுத்திக் கேளுங்கள். பெரிதாக ஆசைப்படுங்கள். ஏனெனில், அவன் கொடுக்கின்ற எதுவும் அவனுக்குப் பெரிதன்று.*

*ஸஹீஹ் முஸ்லிம் 5201*

*இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*

*எவன் மக்களின் பணத்தை (அல்லது பொருட்களைத்) திருப்பிச் செலுத்தும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அவன் சார்பாக அல்லாஹ்வே அதனைத் திருப்பிச் செலுத்துவான். எவன் திருப்பிச் செலுத்தும் எண்ணமின்றி அதை (ஏமாற்றி) அழித்து விடும் எண்ணத்துடன் கடன் வாங்குகிறானோ அல்லாஹ்வும் அவனை அழித்து விடுவான்.*

*ஸஹீஹ் புகாரி 2387*

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*

*கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (நீங்கள் வாழ பிறர் வீழ வேண்டுமெனப்) போட்டியிட்டுக் கொள்ளாதீர்கள். அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள்.*

*ஸஹீஹ் முஸ்லிம் 5009*

*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*

*சூரியன் உதிக்கும் நாட்களில் வெள்ளிக் கிழமையே மிகவும் சிறந்த நாளாகும். அன்று தான் ஆதம் (அலை) அவர்கள் படைக்கப்பட்டார்கள்; அன்று தான் சொர்க்கத்திற்குள் அனுப்பப் பட்டார்கள்; அன்று தான் அங்கிருந்து வெளியேற்றப்பட்டார்கள். அன்று தான் யுக முடிவு நிகழும்.*

*ஸஹீஹ் முஸ்லிம் 1548*

*அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது :*

*நபி (ஸல்) அவர்கள் விதியின் கேடு, அழிவில் வீழ்வது, எதிரிகள் (கைகொட்டிச்) சிரிக்கும் நிலைக்கு ஆளாவது, தாங்க முடியாத சோதனை ஆகியவற்றிலிருந்து (இறைவனிடம்) பாதுகாப்புத் தேடி வந்தார்கள்.*

*ஸஹீஹ் முஸ்லிம் 5246*

*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*

*யாரேனும் (பயணத்தில்) ஓரிடத்தில் இறங்கித் தங்கிவிட்டுப் பின்னர் "அஊது பி கலிமாத்தில் லாஹித் தாம்மாத்தி மின் ஷர்ரி மா கலக்" என்று கூறிப் பிரார்த்தித்தால், அந்த இடத்திலிருந்து அவர் புறப்பட்டுச் செல்லும் வரை எதுவும் அவருக்குத் தீங்கிழைக்காது.*

*(பொருள்: அல்லாஹ்வின் முழுமையான சொற்களின் மூலம் அவனுடைய படைப்பினங்களின் தீங்கிலிருந்து நான் பாதுகாப்புக் கோருகிறேன்.)*

*ஸஹீஹ் முஸ்லிம் 5247*

*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*

*எனது நிலையும் உங்களின் நிலையும் ஒரு மனிதரின் நிலையை ஒத்திருக்கிறது. அவர் தீ மூட்டினார். அதில் வெட்டுக் கிளிகளும் விட்டில் பூச்சிகளும் விழலாயின. அவர் அதி(ல் விழுவதி)லிருந்து அவற்றைத் தடுத்துக் கொண்டிருந்தார். (இவ்வாறு தான்) நரக நெருப்பி(ல் விழுவதி)லிருந்து (உங்களைத் தடுக்க) உங்கள் இடுப்புகளை நான் பிடித்துக் கொண்டிருக்கிறேன். ஆனால், என்னையும் மீறி எனது கையிலிருந்து நீங்கள் நழுவிக்(கொண்டு நெருப்பை நோக்கி ஓடிக்) கொண்டிருக்கிறீர்கள்.*

*ஸஹீஹ் முஸ்லிம் 4591*

*ஆயிஷா(ரலி) அறிவித்தார் :*

*நபி(ஸல்) அவர்கள் செருப்பணியும் போதும், தலை வாரும் போதும், உளூச் செய்யும் போதும், இன்னும் எல்லா விஷயங்களிலும் இயன்றளவு வலப் பக்கத்தைக் கொண்டு ஆரம்பிப்பதை விரும்பக் கூடியவர்களாக இருந்தனர்.*

*ஸஹீஹ் புகாரி 426*

*இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*

*ஒருவர் எந்த இடத்தில் தொழுதாரோ அந்த இடத்திலேயே அமர்ந்திருக்கும் வரை அவருக்காக வானவர்கள் பிரார்த்தனை செய்கிறார்கள். ஆனால் உளூ முறிந்து விடாமலிருக்க வேண்டும். 'இறைவா! இவரை மன்னித்து விடு! இறைவா! இவருக்கு அருள் புரி!' என்று கூறுகிறார்கள்✍.*

*👆👆👆ஸஹீஹ் புகாரி 445👈👈👈*

*👉👉இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள் :👇👇👇*

*✍ஜனாஸாவைக் கண்டால் எழுந்து நில்லுங்கள் 0ந்ழ பின் தொடர்ந்து செல்பவர் (அது பூமியில்) வைக்கப்படும் வரை உட்கார வேண்டாம்.*✍

*👆👆ஸஹீஹ் புகாரி 1309*👈👈

*👉👉👉அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*👇👇👇

*✍தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதை, அல்லது வாழ்நாள் நீட்டிக்கப்படுவதை விரும்புகின்றவர் தமது உறவைப் பேணி வாழட்டும்.*✍

*👆👆ஸஹீஹ் முஸ்லிம் 4998👈👈👈*

*👉👉👉உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது 👇👇👇:*

*✍நபி (ஸல்) அவர்களுக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்பெறும் போது, அவர்களுக்கு மிகுந்த சிரமம் ஏற்படும்; அவர்களது முகம் சாம்பல் நிறத்திற்கு மாறிவிடும்.*✍

*👆👆👆ஸஹீஹ் முஸ்லிம் 4660👈👈👈*

*👉👉👉உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது :👇👇👇*

*✍நபி (ஸல்) அவர்கள் தமக்கு வேத அறிவிப்பு (வஹீ) அருளப்பெறும் போது, தமது தலையைத் தாழ்த்திக் கொள்வார்கள். நபித் தோழர்களும் தம் தலையைத் தாழ்த்திக் கொள்வார்கள். அந்நிலை விலக்கப்பட்டதும் தமது தலையை உயர்த்துவார்கள்✍.*

*👆👆👆ஸஹீஹ் முஸ்லிம் 4661👈👈👈👈*

*👉👉👉அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது 👇👇👇👇:*

*✍அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஏதேனும் ஒன்றை வெறுத்தால், அந்த வெறுப்பை அவர்களது முகத்திலிருந்தே நாங்கள் அறிந்து விடுவோம்.*✍

*👆👆👆ஸஹீஹ் முஸ்லிம் 4639👈👈👈*

*👉👉👉அபூ மூஸா(ரலி) அறிவித்தார் 👇👇👇:*

*'✍ஒரு கட்டிடித்தின் ஒரு பகுதி இன்னொரு பகுதியை எப்படி வலுப்படுத்திக் கொண்டிருக்கிறதோ அது போன்றே ஒரு இறை நம்பிக்கையாளர் இன்னொரு இறை நம்பிக்கையாளர் விஷயத்தில் நடக்க வேண்டும்' என்று நபி (ஸல்) கூறிவிட்டுத் தம் விரல்களைக் கோர்த்துக் காட்டினார்கள்.✍*

*👆👆ஸஹீஹ் புகாரி 481👈👈*

*👉👉👉நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :*👇👇👇

*✍யார் அல்லாஹ்வைச் சந்திக்க விரும்புகிறாரோ அவரைச் சந்திக்க அல்லாஹ்வும் விரும்புகிறான். யார் அல்லாஹ்வைச் சந்திப்பதை வெறுக்கிறாரோ அவரைச் சந்திப்பதை அல்லாஹ்வும் வெறுக்கிறான்.✍*

*👆👆👆ஸஹீஹ் முஸ்லிம் 5207👈👈👈*

*இன்ஷா அல்லாஹ் தொடரும்*

*ஜஸாகல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment