பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, August 27, 2019

கமிஷன் கலாச்சாரம்👹👹👹*

*❤❤மீள் பதிவு❤❤*

*👹👹👹பெருகி வரும் கமிஷன் கலாச்சாரம்👹👹👹*

*👉👉👉இது ஒரு நீண்ட கட்டுரை👇👇👇*

*📚📚📚சங்கை மிக்க அல்குர்ஆன் ஆதாரத்துடன்📚📚📚*

*✍✍✍நாகரிக உலகில் முதலாளித்துவம்* *அறிமுகப்படுத்திய 'கமிஷன் கலாச்சாரம்' இன்று மதம்,இனம்* , *நாடு ஆகியவற்றை கடந்து எல்லா மக்களையும்*
*ஆட்டிப் படைத்து வருகிறது.✍✍✍*

📕📕📕குறிப்பிட்ட வேலையில் அல்லது பொருளில் சதவீத அடிப்படையில்  பணத்தைகமிஷனாக பெறுவதே 'கமிஷன் கலாச்சாரம்' ஆகும்.
வாங்கும் பொருட்களில் கமிஷன்
முன்பெல்லாம் வீடுகளில் தச்சு வேலைகள் நடக்கும் சமயத்தில், அவ்வேலையில்ஈடுபவர்கள் குறிப்பிட்ட கடையில் நம்மை பொருள் வாங்குமாறு பரிந்துரைந்து விட்டு,நாம் வாங்கிய பிறகு அந்த கடையில் சென்று கமிஷன் வாங்கும் 'பண்டைய கமிஷன்பழக்கம்' இன்று எல்லா பொருட்களிலும் வந்து விட்டது.📕📕📕

*✍✍✍வீட்டு கட்டுமானப் பொருட்கள் முதல் எலக்ட்ரிகல்*  *எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வரைஇன்று கமிஷன்* *தலைவிரித்தாடுகிறது. எதை வாங்குவதற்கும் யாருடைய* *உதவியையும் நாட முடிவதில்லை. சின்ன உதவிக்கும் கமிஷன்* *தந்து விடவேண்டும் என்ற நிலைமையே பரவலாக* *காணப்படுகின்றது.✍✍✍*

📘📘📘மனிதநேயம் செத்து விட்டதோ என்னவோ❓
இதனால் பாதிக்கப்படுவது நுகர்வோர்களாகிய சாதாரண மக்கள் தான்.
கமிஷன் தொகை வழங்குவதில் வியாபாரிகளிடம் போட்டி ஏற்பட்டு ஏறும் பொழுதும்,கூடுதலாக கமிஷன் தரும் கடையை நோக்கி நுகர்வோர் நகர்த்தப்படும் பொழுதும்தேவையற்ற விலையேற்றமும், தரமற்ற பொருட்களை கட்டாயமாக வாங்கும் நிலையும்பொதுமக்களுக்கு ஏற்படுகிறது.📘📘📘

*✍✍✍வேலைக்காரன் ஒருவன் அவன் வேலை செய்யும்* *வீட்டுக்காரருக்கு தெரியாமலே அவர்வாங்கும் பொருட்களில் கமிஷன்* *பெறுகிறான். நிச்சயமாக இது பொதுமக்களை* *ஏமாற்றி சம்பாதிக்கும் மோசடியாகும்✍✍✍*

.  يَعِدُهُمْ وَيُمَنِّيهِمْ ۖ وَمَا يَعِدُهُمُ الشَّيْطَانُ إِلَّا غُرُورًا
.

📙📙📙ஷைத்தான் அவர்களுக்கு வாக்களிக்கிறான்; அவர்களுக்கு வீணான எண்ணங்களையும் உண்டாக்குகிறான்; மேலும் அந்த ஷைத்தான் ஏமாற்றுவதைத்தவிரவேறு(எதனையும்)அவர்களுக்கு வாக்களிக்கவில்லை.📙📙📙

*திருகுர்ஆன் 4:120*

*✍✍✍பணிகளில், வேலைவாய்ப்புகளில் கமிஷன் குறிப்பிட்ட பெரிய கம்பெனி தனக்கு* *வேலையாட்கள் தேவைப்படும்* *பொழுதுஏஜென்ட்கள் மூலம் ஆட்களை தேடும் போது  ஏஜென்ட்கள் மூலம்* *கிடைக்கும்ஊழியர்களின் சம்பளத்தை* *நேரடியாக அவர்களிடம் வழங்காமல் அந்த* *கம்பெனிகள்ஏஜென்ட்களிடம் தருவதும்,* *அல்லது ஊழியர்களின் மாதச் சம்பளத்தில் குறிப்பிட்ட* *ஒருதொகையை ஏஜென்ட்களுக்கு வழங்குவதும்* *தற்காலத்தில் சில இடங்களில் நடந்துவருகிறது.* *நிச்சயமாக இது வட்டியை விட மிக மோசமான பாவமாகும்.✍✍✍*

📗📗📗குறிப்பிட்ட தொகையை தந்துவிட்டு எந்த உழைப்பும் இன்றி மாதம் - மாதம் ஒருகுறிப்பிட்ட ஒரு தொகையை வட்டியாக பெறுவதே தடுக்கப்பட்டிருக்கும் பொழுதுநிச்சயமாக இது ஹலாலாக எவ்வாறு ஆகும்❓📗📗📗

*✍✍✍அடுத்தவனின் சம்பாதித்தியத்தை அவனுக்கே தெரியாமல் உண்டு வாழும்* *இவ்வாழ்க்கைவட்டியை விட மிக மோசமானதே..*
*புரோக்கர் கமிஷன் ரியல் எஸ்டேட்' என்ற* *நாகரிக வாசகத்தில்  சொல்லப்படும் இந்த* *புரோக்கர் தொழில்இன்று சமுதாயத்தில்* *விரைவாக செல்வந்தராகும் தொழிலாக பார்க்கப்படுகின்றது.✍✍✍*

📒📒📒பண்டைய காலங்களில் மனித நேயமாக செய்யப்பட்டு வந்த உதவிகளுக்கு தான்இப்போது 'புரோக்கர்' என்ற பெயரில் கமிஷன் பெறப்படுகின்றது.📒📒📒

*✍✍✍வட்டிக்கு கூட முதலீடு இருக்கும் நிலையில்,* *உலகில் முதலீடு ஏதும் இல்லாத ஒரேதொழில் இந்த* *புரோக்கர் தொழில் தான். வாயில் இருந்து வெளிவரும்* *வார்த்தைகளைத்தவிர வேறு எதுவும் இதில் முதலீடாக இல்லை.✍✍✍*

📓📓📓முன்பெல்லாம் சாதாரணமானவர்களால் செய்யப்பட்டு வந்த இத்தொழில் இன்றுகட்சிக்காரர்களாலும், அமைப்பினர்களாலும் செய்யப்படும் 'மாபியா' தொழிலாகமாறியிருக்கிறது.📓📓📓

*✍✍✍இத்தனை பேர் இந்த வீடு அல்லது நில விற்பனையில் பங்கு கொண்டுள்ளோம்* *என்று'மிரட்டி பணம் வாங்கும்' அவலங்களும் ஆங்காங்கே* *நடக்கின்றன*✍✍✍ .

📔📔📔இதில் வேதனைக்குரிய விஷயம் தற்காலத்தில் பள்ளிவாசல் நிர்வாகிகள், சில இடங்களில்இமாம்கள், மோதினார்கள் கூட இதில் ஈடுபட்டு வருகிறார்கள்.
வீடு, நிலங்களில் கடுமையான விலையேற்றம் ஏற்பட்டதற்கு இந்த புரோக்கர்களும்,இவர்கள் உருவாக்கும் போலி டிமான்டுகளும் தான் காரணம்.📔📔📔

*🏓🏓🏓பஞ்சாயத்து கமிஷன்🏓🏓🏓*

*✍✍✍முற்கால இஸ்லாமியர்களிடம்* *காணப்படாத கமிஷன் தான் 'பஞ்சாயத்து*
*கமிஷன்' ஆகும் கணவன்  மனைவி* *அல்லது இரு தரப்பினர் மத்தியில் சுணக்கம்* *ஏற்பட்டால்இருவருக்குமிடையே* *பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்றும், நல்லவர்கள்* *இதில்ஈடுபட வேண்டும் என்றும் திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.*
*கணவன் –மனைவி பிரச்சினையில்* *சமசரசம் செய்து வைத்தல்✍✍✍;*

وَإِنِ امْرَأَةٌ خَافَتْ مِن بَعْلِهَا نُشُوزًا أَوْ إِعْرَاضًا فَلَا جُنَاحَ عَلَيْهِمَا أَن يُصْلِحَا بَيْنَهُمَا صُلْحًا ۚ وَالصُّلْحُ خَيْرٌ ۗ وَأُحْضِرَتِ الْأَنفُسُ الشُّحَّ ۚ وَإِن تُحْسِنُوا وَتَتَّقُوا فَإِنَّ اللَّهَ كَانَ بِمَا تَعْمَلُونَ خَبِيرًا

⛱⛱⛱ஒரு பெண் தன் கணவன் தன்னை வெறுத்து விடுவான் என்றோ அல்லது புறக்கணித்து விடுவான் என்றோ பயந்தால், அவர்கள் இருவரும் தங்களுக்குள் (சமாதானமான) ஒரு முடிவைச் செய்து கொண்டால் அவ்விருவர் மீது குற்றமில்லை; அத்தகைய சமாதானமே மேலானது; இன்னும், ஆன்மாக்கள் கருமித்தனத்திற்கு உட்பட்டவையாகின்றன. அவ்வாறு உட்படாமல்) ஒருவருக்கொருவர் உபகாரம் செய்து, (அல்லாஹ்வுக்குப்) பயந்து நடப்பீர்களானால் நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றையெல்லாம் நன்கு அறிந்தவனாக இருக்கின்றான். ⛱⛱⛱

*திருகுர்ஆன் 4:128.*

وَإِنْ خِفْتُمْ شِقَاقَ بَيْنِهِمَا فَابْعَثُوا حَكَمًا مِّنْ أَهْلِهِ وَحَكَمًا مِّنْ أَهْلِهَا إِن يُرِيدَا إِصْلَاحًا يُوَفِّقِ اللَّهُ بَيْنَهُمَا ۗ إِنَّ اللَّهَ كَانَ عَلِيمًا خَبِيرًا

*✍✍✍(கணவன்-மனைவி ஆகிய)* *அவ்விருவரிடையே (பிணக்குண்டாகி) பிரிவினை* *ஏற்பட்டுவிடும் என்று நீங்கள் அஞ்சினால் கணவனின்* *உறவினர்களிலிருந்து ஒருவரையும்* *மனைவியின் உறவினர்களிலிருந்து ஒருவரையும்* *மத்தியஸ்தர்களாக ஏற்படுத்துங்கள்;* *அவ்விருவரும் சமாதானத்தை* *விரும்பினால், அல்லாஹ்* *அவ்விருவரிடையே ஒற்றுமை ஏற்படும் படி செய்துவிடுவான் -* *நிச்சயமாக அல்லாஹ் நன்கு அறிபவனாகவும், நன்குணர்கிறவனாகவும் இருக்கின்றான்.✍✍✍*

*திருகுர்ஆன் 4:35.*

*👨‍👨‍👦👨‍👨‍👦👨‍👨‍👦இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட தகராறில் சமரசத்தில் ஈடுபடுதல்👨‍👨‍👦👨‍👨‍👦👨‍👨‍👦*

وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا ۖ فَإِن بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَىٰ فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّىٰ تَفِيءَ إِلَىٰ أَمْرِ اللَّهِ ۚ فَإِن فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا ۖ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ

.🌈🌈🌈 முஃமின்களில் இருசாரார் தங்களுக்குள் சண்டை செய்து கொண்டால், அவ்விருசாராருக்கிடையில் சமாதானம் உண்டாக்குங்கள். பின்னர் அவர்களில் ஒரு சாரார் மற்றவர் மீது அக்கிரமம் செய்தால், அக்கிரமம் செய்வோர் அல்லாஹ்வுடைய கட்டளையின் பால் திரும்பும் வரையில், (அவர்களுடன்) போர் செய்யுங்கள்; அவ்வாறு, அவர்கள் (அல்லாஹ்வின் பால்) திரும்பி விட்டால் நியாயமாக அவ்விரு சாராரிடையே சமாதானம் உண்டாக்குங்கள். (இதில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீதியாளர்களை நேசிக்கிறான். 🌈🌈🌈

*திருகுர்ஆன் 49:9*

*🌎🌎பொதுவான பிரச்சினைகளில் சமரசம் செய்தல்🌎🌎*

إِنَّمَا الْمُؤْمِنُونَ إِخْوَةٌ فَأَصْلِحُوا بَيْنَ أَخَوَيْكُمْ ۚ وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

*✍✍✍நிச்சயமாக முஃமின்கள் (யாவரும்)* *சகோதரர்களே; ஆகவே, உங்கள் இரு* *சகோதரர்களுக்கிடையில் நீங்கள் சமாதானம் உண்டாக்குங்கள்;* *இன்னும் உங்கள் மீது கிருபை செய்யப்படும் பொருட்டு, நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுங்கள்.✍✍✍*

*திருகுர்ஆன் 49:10.*

🕋🕋🕋காசுக்காக நடந்திடும் கட்டப் பஞ்சாயத்து
சமரசம் செய்து வைக்கும் நோக்கில் பஞ்சாயத்தில் ஈடுபடுபவர்கள் காசு வாங்கக்கூடாது.ஏனெனில், அதை தொழிலாக கொள்ள ஆரம்பித்தால் ஒரு பக்கச் சாய்வும், ஒரு தலைபட்சஅநியாயம் நடக்கவும் அது காரணமாகும்.🕋🕋🕋

*👹👹ஆபத்தான ஷிர்க்👹👹*

*✍✍✍பணம் கிடைக்கிறது என்பதற்காக பொய், ஏமாற்று, புரட்டு,* *மோசடி , பித்தலாட்டம் எனஎல்லாவற்றுக்கும் இறைவனை அஞ்சாமல் மனிதன் துணிகிறான் என்றால்* *இவன்பணத்தின் மீதான பயபக்தியினால் அதை மனதளவில்* *இறைவனாக ஏற்று விட்டான்என்பதே பொருளாகும்.✍✍✍*

📚📚📚நிச்சயமாக இவன் அல்லாஹ்வின் அடிமையாக இருக்கவில்லை. மாறாக தன்னைபணத்தின் அடிமையாக ஆக்கியவன். இவனைத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள் கூறினார்கள்.📚📚📚

*✍✍✍பள்ளிவாசல்களில், மதரஸாக்களில், தர்மப் பணத்தில் இயங்கும் அமைப்புகள்* *மற்றும்அறக்கட்டளைகளில் ஊழல் நடப்பதும் அவற்றில் கமிஷன்கள்* *தலைவிரித்தாடுவதும்பணத்தை இறைவனாக தேர்ந்தெடுத்ததின் விளைவாகும்✍✍✍.*

🏵🏵🏵தற்காலத்தில் முழுவீச்சில் ஒழிக்கப்பட வேண்டிய ஷிர்க் பணத்தை இறைவனுக்கு நிகராகஅல்லது இறைவனை விட மேலாக கருதும் ஷிர்க் தான்.🏵🏵🏵

*✍✍✍ஆனால் ஆபத்தான இந்த ஷிர்க்கை யாரும் கண்டு கொள்வதும் இல்லை.* *சிந்திப்பதும்இல்லை. இதைப் பற்றி பேசுவோர் மிகக் குறைவு தான்✍✍✍.*

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

*ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment