பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, August 26, 2019

இஸ்லாத்தை அறிந்து -7

*🍅🍅🍅மீள் பதிவ🍅🍅🍅*

*🌹🌹

*🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋*
                                                                        

*🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*


*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👈👈👈*

*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*

*👉👉👉தொடர்  பாகம் 8 👈👈👈*

     *👉தலைப்பு👇*

*👹👹👹விரட்டி வரும் மரணமும்👹👹👹 விரண்டோடும்👨‍👨‍👦👨‍👨‍👦👨‍👨‍👦 மனிதனும்…👨‍👨‍👦👨‍👨‍👦👨‍👨‍👦*

*👉👉👉விரட்டி வரும் மரணமும் விரண்டோடும் மனிதனும்…👇👇👇👇*

*✍✍✍இன்றைய சமூகம் விசித்திரமாகவும்,  வித்தியாசமாகவும் பயணிக்கிறது. நம் அனைவரைவரின் கவனத்துக்கு வந்துள்ளது. சுவர்க்கத்தின் பக்கம் விரைவாக செல்வார்கள் என்ற நிலை மாறி நவீன உலகின் ஆசைகளுக்கு கட்டுபட்டவர்களாக மாற்றம் அடைந்து வாழ்கிறார்கள்.✍✍✍*

📕📕📕இந்த வாழ்க்கை அவர்களை எந்த இடத்துக்கு கொண்டு செல்லும் என்பதை அறிந்து கொண்டு தான் செய்கிறார்களா? அல்லது அறியாமல் தான் செய்கிறார்களா? என்பதை நம்மால் சிந்திக்க முடியாத ஒன்றாகவே  இருக்கிறது.📕📕📕

*✍✍✍வாழ்வில் உண்மையான (நிஜமான) வாழ்வு எது என்பதை மறந்தும் (காணல் நீரான) பொய்யான இந்த உலக வாழ்வை தங்கள் நிரந்தர வாழ்க்கை இடமாக நினைத்து வாழ்கிறார்கள்.✍✍✍*

*👨‍👨‍👦👨‍👨‍👦👨‍👨‍👦மனிதனை படைத்த நோக்கம்👨‍👨‍👦👨‍👨‍👦👨‍👨‍👦*

*👉👉👉அல்லாஹ் கூறுகிறான்.👇👇👇*

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْاِنْسَ اِلَّا لِيَعْبُدُوْنِ‏

📘📘📘இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை.📘📘📘

*(அல்குர்ஆன் : 51:56)*

*✍✍✍மனிதனை அல்லாஹ் படைத்த நோக்கத்தை தனக்கு கட்டுப்பட்டு தன்னுடைய வணக்கங்களை நிறைவேற்றுவதற்காகவே படைக்கப்பட்டுள்ளான். இந்த நிலையை நினைவில் வைத்துக்கொண்டு தான் மனிதனுடைய அனைத்து வார்த்தை பிரயோகங்களும், செயல் ரீதியான வெளிப்பாடுகளும், அல்லது வேறு வழிமுறைகளாயினும் எந்த முறையானாலும் அது அல்லாஹ்வின் கட்டளைக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும் என்பதில் அல்லாஹ் அதிக விதிகளை அமைத்துள்ளான்✍✍✍* .

📙📙📙ஒரு அடியான் தனது இறைவனை நம்புவதாகவோ அல்லது நம்பிக்கை கொண்டுள்ளதாகவோ சொன்னால் அது நிஜமான நம்பிக்கையாக மாட்டாது. அது ஏற்றுக் கொள்ளப்படவும்  மாட்டாது. ஒரு அடியான் தன்னுடைய இறைவன் மீது  நம்பிக்கை வைத்துள்ளான் என்பதற்கு அவனது வாழ்க்கை எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும்.📙📙📙

*✍✍வார்த்தையிலோ அல்லது வெளிப்படையாகவோ இருப்பதால் அல்லாஹ் ஒரு போதும் நன்மைகள் தருவதும் இல்லை தறப்போவதும் இல்லை.✍✍✍*

*🏌🏌🏌மனிதன் தம்மைத் தாமே ஏமாற்றிக் கொள்கின்றான்🏌🏌🏌*

*👉👉👉அல்லாஹ் கூறுகிறான்👇👇👇*

وَمِنَ النَّاسِ مَنْ يَّقُوْلُ اٰمَنَّا بِاللّٰهِ وَبِالْيَوْمِ الْاٰخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِيْنَ‌ۘ‏

📗📗📗“அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பினோம்’ எனக் கூறுவோரும் மனிதர்களில் உள்ளனர். (ஆனால்) அவர்கள் நம்புவோர் அல்லர்.📗📗📗

*(திருக்குர்ஆன் 2:8)*

*👉👉👉மேலும் கூறுகிறான்👇👇👇* .

يُخٰدِعُوْنَ اللّٰهَ وَالَّذِيْنَ اٰمَنُوْا ‌ وَمَا يَخْدَعُوْنَ اِلَّاۤ اَنْفُسَهُمْ وَمَا يَشْعُرُوْنَ‏

*✍✍✍அல்லாஹ்வையும், நம்பிக்கை கொண்டோரையும் அவர்கள் ஏமாற்ற நினைக்கின்றனர். (உண்மையில்) தம்மைத் தாமே அவர்கள் ஏமாற்றிக் கொள்கின்றனர். அவர்கள் உணர்வதில்லை.✍✍✍*

*(திருக்குர்ஆன் 2:9)*

📒📒📒இந்த இரண்டு திருமறை வசனமும் மனிதனுடைய வெளிப்புற மற்றும் பாவனைகளை வைத்து அல்லாஹ் நன்மையோ அல்லது தீமையோ வழங்குவதில்லை என்பதையும் அவர்கள் அப்படி செயல்படும் போது தான் அல்லாஹ்வையும் அவனை நம்பிய முஃமின்களையும் ஏமாற்ற வேண்டும் என்பதற்காக வேண்டியே அவன் செயல் அமையும். அப்போது அவர் வேறு யாரையும் ஏமாற்ற வில்லை. அவருடைய பார்வையில்  அல்லாஹ்வும் மக்களும் ஏமாறுவதைப் போல விளங்கிகொண்டு அவர் தன்னைத் தானே ஏமாற்றிக் கொண்டிருக்கும் நிலையை அறியாதவராகவே தன் நிலையை அமைக்கிறார் என்பதை அல்லாஹ் மிக தெளிவாக எடுத்துக் காட்டுகிறான்.📒📒📒

*✍✍✍இப்படி எடுத்துக் காட்டிய எத்தனையோ சான்றுகள் எதுவும் நமக்குபடிப்பினைகளை பெற்றுத் தரவில்லை காரணம் நாம் உண்மையான நம்பிக்கையுடையராக இல்லை. நாம் எப்போதும் போல வணக்க வழிபாடுகள் விடயங்களில் அக்கறை  அற்றவர்களாக நடந்து கொள்ளும் ஒவ்வொரு நொடியும் நம்மை  ஒரு விடயம் மிக வேகமாக பின்தொடர்ந்து  கொண்டே இருக்கிறது. அது தான் மரணம்✍✍✍* .

📓📓📓இந்த மரணம் யாரையும் பாரபட்சம் இன்றி குறித்த நேரத்தில் நம்மை கடக்கும் போது தான் நமது அனைத்து வீணான நேரங்களையும் ,காலங்களையும் நமது  நினைவுக்கு  கொண்டு  வரும்.📓📓📓

*👹👹👹மரணம் யாரையும் விட்டு வைக்காது👹👹👹*

*👉👉👉அல்லாஹ் கூறுகிறான்👇👇👇*

قُلْ اِنَّ الْمَوْتَ الَّذِىْ تَفِرُّوْنَ مِنْهُ فَاِنَّهٗ مُلٰقِيْكُمْ‌ ثُمَّ تُرَدُّوْنَ اِلٰى عٰلِمِ الْغَيْبِ وَالشَّهَادَةِ فَيُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُوْنَ‏

*8 ✍✍✍“நீங்கள்  எதை விட்டும் வெருண்டு ஓடுகிறீர்களோ அந்த மரணம் உங்களைச் சந்திக்கவுள்ளது. பின்னர் மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவனிடம் கொண்டு செல்லப்படுவீர்கள். நீங்கள் செய்து கொண்டிருந்ததை அவன் உங்களுக்கு அறிவிப்பான்” என்று கூறுவீராக!✍✍✍*

*(திருக்குர்ஆன் 62:8)*

📔📔📔மனிதனை படைத்த ரப்புக்கு கட்டுபட வேண்டும் என்பதே அடிப்படைக் கட்டலையாக பிறப்பிக்கப்பட்டுள்ளது. இப்படி கட்டளையிடப்பட்ட பின்பு மனிதன்  வழி மாறி தடம் புரண்டு விடக்கூடாது என்பதற்காக காலத்துக்கு காலம் அல்லாஹ் நபிமார்களை  அனுப்பி மனிதர்களை நேர்வழியின் பக்கம் அழைப்பு விடுத்துள்ளான். இந்த அழைப்புகள் எல்லாம் நன்றாக சிந்தனை செய்யும் மனிதனுக்காகத் தான் விடுத்துள்ளான்.📔📔📔

*👹👹சோதனையாக்கப்பட்ட 🌎🌎உலக வாழ்கை👹👹*

*✍✍✍மனிதன் அதிக விடயங்களை உலகில் பெற்றுக்கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டவனாகவே படைக்கப்பட்டுள்ளான். அதற்காக மனிதனுக்கு அவனது விருப்பு வெறுப்பு பேன்றவற்றின் அடிப்படையில் நல்லவனாகவும்  தீயவனாகவும் மாற்றம் அடையும் போது அல்லாஹ்வின் தூதர் காட்டிய விழுமியங்களின் அடிப்படையில் வாழப்பலகிக் கொள்ள வேண்டும் என்ற கட்டலையையும் இட்டுள்ளான். இந்த உலகம் மனிதனுக்கு நிரந்தர வாழ்விடம் இல்லை என்றும் இந்த உலகம் மனிதனின் பார்வைக்கு மிகவும் விருப்பமானதாகவும், ஆசைகளை தூண்டக்கூடியதாகவுமே வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.✍✍✍*

*👉👉👉அல்லாஹ் கூறுகிறான்👇👇👇.*

اِنَّا جَعَلْنَا مَا عَلَى الْاَرْضِ زِيْنَةً لَّهَا لِنَبْلُوَهُمْ اَ يُّهُمْ اَحْسَنُ عَمَلًا‏

📚📚📚அவர்களில் அழகிய செயலுடையவர் யார் என்பதைச் சோதிப்பதற்காகப் பூமியில் உள்ளதை அதற்கு (பூமிக்கு) அலங்காரமாக நாம் ஆக்கினோம்.📚📚📚

*(திருக்குர்ஆன் 18:7)*

*👉👉👉மேலும் கூறுகிறான்👇👇👇*

تَعْدُ عَيْنٰكَ عَنْهُمْ‌  تُرِيْدُ زِيْنَةَ الْحَيٰوةِ الدُّنْيَا‌  وَ لَا تُطِعْ مَنْ اَغْفَلْنَا قَلْبَهٗ عَنْ ذِكْرِنَا وَاتَّبَعَ هَوٰٮهُ وَكَانَ اَمْرُهٗ فُرُطًا‏

*✍✍✍இவ்வுலக வாழ்க்கையின் கவர்ச்சியை நாடி அவர்களை விட்டும் உமது கண்களைத் திருப்பி விடாதீர்! நம்மை நினைப்பதை விட்டும் எவனது சிந்தனையை நாம் மறக்கடிக்கச் செய்து விட்டோமோ, அவனுக்குக் கட்டுப்படாதீர்! அவன் தனது மனோ இச்சையைப் பின்பற்றுகிறான். அவனது காரியம் வரம்பு மீறுவதாக உள்ளது.✍✍✍*

*(திருக்குர்ஆன் 18:28)*

⛱⛱⛱இந்த உலக வாழ்கை மனிதனுக்கு அலங்கரிப்பாகவும், கவர்ச்சிகரமாகவும் தான் படைக்கப்பட்டுள்ளது. அதே போல மனிதனும் அதிக பேராசை கொள்ளக் கூடிய அளவில் தான் படைக்கப்பட்டும் உள்ளான். எப்படி நாம் உலகிற்கு கொண்டு வரப்பட்டோம் என்பதை சிந்தனை செய்து பார்த்தால் அறிந்து கொள்ள ஏதுவாக அமையும்.⛱⛱⛱

*🌐🌐🌐மனிதனும் மரணமும்🌎🌎🌎*

*✍✍✍பொதுவாக மனிதன் தவறான வழிகளை தேர்வு செய்பவன் என்றும் அப்படி தேர்வு செய்து அவ்வப்போது அதில் பயணிப்பதற்கு தொடங்கும் போது அல்லாஹ்வின் நற்செய்தி சொல்லுபவர்களை அல்லாஹ் காலத்துக்கு காலம் அனுப்பியும் உள்ளான்.இப்படி நேர்வழியின் பக்கம் அழைக்கப்பட்ட மனிதன் சில சந்தர்ப்பங்களில் தன்னை அறிந்தோ அறியாமலோ தவறுகளை செய்பவனாக இருக்கிறான்.ஸஹாபிகள் இஸ்லாத்திற்கு வர முன் செய்த தவறுகளை இஸ்லாம் மார்க்கம் சீர் செய்தது.  ஆனால் இன்று இஸ்லாமிய ஆணுக்கும் பெண்ணுக்கும் பிள்ளைகளாக பிறந்துள்ளோம். என்பதற்காகவும் எமது பெயர் முஸ்லிம் என்று பெருமைத்தனத்துடன் நடக்கிறோம்✍✍✍.*

*👉👉👉அல்லாஹ் கூறுகிறான்👇👇👇*

وَهُوَ الْقَاهِرُ فَوْقَ عِبَادِهٖ‌ وَيُرْسِلُ عَلَيْكُمْ حَفَظَة حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَكُمُ الْمَوْتُ تَوَفَّتْهُ رُسُلُـنَا وَهُمْ لَا يُفَرِّطُوْنَ‏

🌈🌈🌈அவனே தனது அடியார்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன். உங்களுக்குப் பாதுகாவலர்களை அவன் அனுப்புகிறான். எனவே உங்களில் ஒருவருக்கு மரணம் ஏற்படும் போது நமது தூதர்கள் அவரைக் கைப்பற்றுகிறார்கள்.அவர்கள் (அப்பணியில்) குறை வைக்க மாட்டார்கள்.🌈🌈🌈

*(திருக்குர்ஆன் 6:61)*

*✍✍✍தன்னை படைத்தவன் என்றோ ஒரு நாள் திடீர் என அழைக்கும் போது தான் அவன் கண்விளிப்பான். அப்போது அல்லாஹ்விடம் இறைவா எனக்கு கொஞ்ச நேரம் அவகாசம் தா நான் நல்லமல்கள் செய்து அதனூடாக நல்லவனாக எனது உயிர் பிரிய வேண்டும் என ஆசைப்பட்டு கெஞ்சிக் கதருவான்.அவனவனது நேரம் முடிந்து விட்டால் அல்லாஹ் அவர்களை பிற்படுத்தவோ அல்லது முற்படுத்தவோ மாட்டான்.✍✍✍*

*👉👉👉அல்லாஹ் கூறுகிறான்👇👇👇*

وَاَنْفِقُوْا مِنْ مَّا رَزَقْنٰكُمْ مِّنْ قَبْلِ اَنْ يَّاْتِىَ اَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُوْلَ رَبِّ لَوْلَاۤ اَخَّرْتَنِىْۤ اِلٰٓى اَجَلٍ قَرِيْبٍۙ فَاَصَّدَّقَ وَاَكُنْ مِّنَ الصّٰلِحِيْنَ‏

🕋🕋🕋உங்களுக்கு மரணம் வருவதற்கு முன் நாம் உங்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! “இறைவா! குறைந்த காலம் வரை எனக்கு நீ அவகாசம் அளித்திருக்கக் கூடாதா? தர்மம் செய்து நல்லவனாக ஆகியிருப்பேனே” என்று அப்போது (மனிதன்) கூறுவான்.🕋🕋🕋

*(திருக்குர்ஆன் 63:10)*

*👉👉👉அல்லாஹ் கூறுகிறான்👇👇👇*

وَلَنْ يُّؤَخِّرَ اللّٰهُ نَفْسًا اِذَا جَآءَ اَجَلُهَا‌ وَاللّٰهُ خَبِيْرٌ بِمَا تَعْمَلُوْنَ‏

*✍✍✍11. எந்த உயிருக்கும் அதற்குரிய தவணை வந்து விட்டால் அல்லாஹ் அவகாசம் அளிக்க மாட்டான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.✍✍✍*

*(திருக்குர்ஆன் 63:11)*

🏵🏵🏵இந்த மரணம் எப்போது வரும் என்பது மனிதன் ஒருபோதும்  அறியமாட்டான். அது மனிதனுக்கு அறிவித்தும் கொடுக்கப்படவும் மாட்டாது. என்பதை அல்லாஹ் மிகத் தெளிவாக சொல்லிக் காட்டுகிறான். நாம் மரணிக்கக் கூடியவர்கள் என்ற எண்ணத்தோடு நமது  அடுத்த  கட்ட  நகர்வுகளை எடுத்து  நடப்போமாக  இருந்தால் தான்  பாவங்கள்  கலந்திடாத அமல்களை நமக்காக நல்ல முறையில் சேகரித்துக் கொள்ளும் ஒரு  சந்தர்ப்பமாகவும்  அமையும்.🏵🏵🏵

*👉👉👉அல்லாஹ் கூறுகிறான்👇👇👇*

وَاعْبُدْ رَبَّكَ حَتّٰى يَاْتِيَكَ الْيَـقِيْنُ‏

*✍✍உறுதியானது (மரணம்) வரும் வரை உமது இறைவனை வணங்குவீராக!✍✍*

*(திருக்குர்ஆன் 15:99)*

حَتّٰٓى اِذَا جَآءَ اَحَدَهُمُ الْمَوْتُ قَالَ رَبِّ ارْجِعُوْنِۙ‏

📕📕📕அவர்களில் ஒருவனுக்கு மரணம் வரும்போது, அவன்: “என் இறைவனே! என்னை (உலகுக்குத்) திருப்பி அனுப்புவாயாக!” என்று கூறுவான்.📕📕📕

*(அல்குர்ஆன் : 23:99)*

*✍✍✍இந்த வசனங்கள் மனிதனை சற்று மிரண்டு போகும் அளவுக்கு இருந்தாலும் குறுகிய நேர இறையச்சம் அடைந்தவனாகவும் அதி கூடிய நேரம் அல்லாஹ்வுக்கும் மார்க்கத்துக்கும் முரணாகவும் வாழ ஆரம்பிக்கிறான்.✍✍✍*

📘📘📘மனிதனுக்கு வழங்கப்பட்டுள்ள வளங்கள் உள்ளம், கண், காது, கால், கை, செவிப்புலன், நுகர்வுத் தன்மை ,பாதுகாப்புத் திறன் போன்று மனித உடம்பின் அனைத்து பாகங்களையும் அடுக்கிக் கொண்டே போகலாம். மனித உடம்பிலே இத்தனை சான்றுகளும் உள்ளது என்றால் நம்மை சுற்றி எத்தனை சான்றுகளை வைத்திருப்பான்.  நாம் இஸ்லாத்தை மறக்கும் ஒவ்வொரு முறையும் அவனுக்கான ஒரு இடத்தை நோக்கி நகர்வதை விளங்க மறுக்கிறான்📘📘📘.

وَنُقَلِّبُ اَفْـــِٕدَتَهُمْ وَاَبْصَارَهُمْ كَمَا لَمْ يُؤْمِنُوْا بِهٖۤ اَوَّلَ مَرَّةٍ وَّنَذَرُهُمْ فِىْ طُغْيَانِهِمْ يَعْمَهُوْنَ‏

*✍✍✍மேலும், நாம் அவர்களுடைய உள்ளங்களையும் அவர்களுடைய பார்வைகளையும் திருப்பிவிடுவோம் – அவர்கள் முதலில் இதை நம்பாமல் இருந்தது போலவே  இன்னும்  அவர்கள் தங்களுடைய வழி கேட்டிலேயே தட்டழிந்து திரியுமாறு அவர்களை நாம் விட்டுவிடுவோம்.✍✍✍*

*(அல்குர்ஆன் : 6:110)*

*🌐🌐🌐இஸ்லாமிய மார்க்கம் மனிதனுக்கு நல்ல                                                                                                                    வழி முறைகளையே அதிகமாக காட்டித்தந்துள்ளது.🌎🌎🌎*

📙📙📙இன்றைய நவீன உலகில் எமது இஸ்லாமிய உம்மத்தை பார்க்கும் போது நபிகளாரின் கூற்றுகளையும் வணக்க வழிபாடுகள் விடயங்களையும் செயல் படுத்த கடமைப் பட்டவர்கள் எல்லாம் இன்று அதே நபியால் தடுக்கப்பட்ட முன்னறிவிப்பு செய்யப்பட்ட பாவமான காரியங்களிலே  அதிகமான முஸ்லிம் சமூகம் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்.இதற்கான காரணம் அவர்களை அறியாமலே இருக்கிறது.அல்லாஹ் திருக்குரானில் கூறும் போது.📙📙📙

كَمَثَلِ الشَّيْطٰنِ اِذْ قَالَ لِلْاِنْسَانِ اكْفُرْ‌ فَلَمَّا كَفَرَ قَالَ اِنِّىْ بَرِىْٓءٌ مِّنْكَ اِنِّىْۤ اَخَافُ اللّٰهَ رَبَّ الْعٰلَمِيْنَ‏

*✍✍✍16. “(ஏகஇறைவனை) மறுத்து விடு” என்று மனிதனிடம் கூறி, அவன் மறுத்த பின் “நான் உன்னை விட்டு விலகியவன். அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுகிறேன்” எனக் கூறிய ஷைத்தானைப் போன்றவர்கள்.✍✍✍*

*(திருக்குர்ஆன் 59:16)*

📗📗📗ஒவ்வொரு மனிதனும் எந்த வழிமுறையில் தவறான மற்றும் பாவமான அருவருக்கத்தக்க காரியங்களில் ஈடுபடுவான் என்பதை நம்முடன் வாழும் ஷைத்தான் நம்மை விட நன்கு அறிந்து வைத்திருக்கிறான். அதன் விளைவைப் பற்றி  அல்லாஹ் நமக்கு  எச்சரிக்கை  செய்து  உள்ளான்📗📗📗.

*✍✍✍மனிதன் பாவமான செயல்களில் ஈடுபாடு இல்லாவிடின் ஷைத்தான் அவனை எப்படியாவது பாவத்தின் பக்கம் கொண்டு செல்ல வேண்டும் என சந்தர்ப்பத்தை எதிர்பார்த்த வண்ணம் காத்திருப்பான். அந்த காத்திருப்பு சந்தர்ப்பம் சரியாக அமைந்து விட்டால் அவன் தனது ஆட்டத்தை காட்டி விடுவான். அப்போது மனிதன் அந்த பாவத்தில் மாட்டிக் கொள்வான். இப்போது நம்மை பாவமான காரியங்களில் ஈடுபட செய்த ஷைத்தான் நம்மைப் பார்த்து சொல்வானாம்  மனிதா!  நீ செய்த இந்த பாவத்திற்கும்  (ஷைத்தானாகிய) எனக்கும் எந்த ஒரு சம்மந்தமும் கிடையாது. நான் உன்னை விட்டு நிரபராதியாகிறேன் அகிலத்தாரில் இரட்சகனை நான் அஞ்சுகிறேன் என்று கூறுவான்.✍✍✍*

📒📒📒இந்த செயல்களைத் தான் அண்ணல் நபி (ஸல்) அவர்கள் கூறும் போது நமக்கு அருமையான ஒரு பிராத்தனையை (துஆ)   கற்றுத்தந்துள்ளார்கள்.📒📒📒

اللَّهُمَّ إِنِّيْ أَعُوْذُ بِكَ مِنْ زَوَالِ نِعْمَتِكَ وَتَحَوَّلَ عَافِيَتِكَ وَفُجَاءَةُ نِعْمَتِكَ وَجَمِيْعِ سَخْطِكِ

*✍✍✍இறைவா! உன் அருட்கொடைகள் (முற்றாக) நீங்குவதிலிருந்தும், நீ வழங்கிய ஆரோக்கியம், செல்வம் போன்ற நன்மைகள் நோய், வறுமை போன்ற தீங்குகளாக மாறி விடுவதிலிருந்தும், உனது தண்டனை திடீரென வருவதிலிருந்தும், உனது கோபத்திற்கு உள்ளாக்கும் அனைத்து அம்சங்களிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன். என்பது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பிரார்த்தனைகளில் ஒன்றாக இருந்தது*
*என  அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.✍✍✍*

*ஸஹீஹ் முஸ்லிம் :- 5289*

📓📓📓இந்த அளவுக்கு இஸ்லாமிய மார்க்கம் மனிதனுக்கு நல்ல வழி முறைகளையே அதிகமாக காட்டித்தந்துள்ளது. இந்த நல்ல காரியங்கள் மற்றும் நல்ல பழக்க வழக்கங்கள் மூலம் நாம் சுவனத்தை அடைவதற்குறிய சந்தர்ப்பமாக மாற்றிக் கொள்ள வேண்டும். நம் அனைவருக்கும் அல்லாஹ் கடுமையான தண்டனையிலிருந்து பாதுகாப்பு வழங்குவானாக.📓📓📓

*👂👂👂செவிகளை பேணுவோம்.!👂👂👂*

*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம் 9*

No comments:

Post a Comment