*🍅🍅🍅மீள் பதிவ🍅🍅🍅*
*🌹🌹🌹🌹*
*🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋*
*🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*
*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👈👈👈*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*
*👉👉👉தொடர் பாகம் 7 👈👈👈*
*👉தலைப்பு👇*
*👹👹👹நரகத்தில் பயங்கர தண்டனைகள்…!👹👹👹*
*👉👉👉நரகத்தில் பயங்கர தண்டனைகள்…!👇👇👇👇👇*
*✍✍✍அல்லாஹ் மனிதனைப் படைத்தான். மனிதனுக்கான நேரிய பாதையையும், வழிகாட்டி இருக்கிறான். யார்? அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு, இவ்வுலகில் வாழ்வாரோ, அவர் மறுமையில் சொர்க்கம் செல்வார். எனவும் அதற்கு மாற்றமாக வாழ்பவர் நரகம் புகுவார். எனவும் இஸ்லாம் நமக்கு சொல்கிறது. சுவர்க்கம் என்பது முழுக்க முழுக்க இன்பமிக்க ஒரு இடம். ஆனால் நரகம் என்பது முழுக்க முழுக்க தண்டனைக்குரிய ஒரு இடம். அங்கே கொடுக்கப்படும் தண்டனைகள் எல்லாம் நினைத்துக்கூட பார்க்க முடியாத அளவுக்கு இருக்கும். அந்த தண்டனைகளில் சிலவற்றை பாப்போம் …✍✍✍*
*👹👹விலங்கிடப்படுதல்👹👹*
إِذِ الْأَغْلَالُ فِي أَعْنَاقِهِمْ وَالسَّلَاسِلُ يُسْحَبُونَ. فِي الْحَمِيمِ ثُمَّ فِي النَّارِ يُسْجَرُونَ
📕📕📕அப்போது அவர்களின் கழுத்துக்களில் விலங்குகளும், சங்கிலிகளும் இருக்கும். அவர்கள் கொதிக்கும் நீரில் வீசப்படுவார்கள். பின்னர் நெருப்பில் எரிக்கப்படுவார்கள்.📕📕📕
*(திருக்குர்ஆன் 40:71,72)*
*🔥🔥🔥நெருப்பால் ஆன ஆடை🔥🔥🔥*
هَٰذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ ۖ فَالَّذِينَ كَفَرُوا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِنْ نَارٍ يُصَبُّ مِنْ فَوْقِ رُءُوسِهِمُ الْحَمِيمُ
يُصْهَرُ بِهِ مَا فِي بُطُونِهِمْ وَالْجُلُودُ
*✍✍✍(ஏக இறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலைகள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.✍✍✍*
*(திருக்குர்ஆன் 22:19,20)*
*🔥🔥🔥கொதி நீர் தலையில் ஊற்றப்படுதல்🔥🔥🔥*
خُذُوهُ فَاعْتِلُوهُ إِلَىٰ سَوَاءِ الْجَحِيمِ . ثُمَّ صُبُّوا فَوْقَ رَأْسِهِ مِنْ عَذَابِ الْحَمِيمِ
‘📘📘📘அவனைப் பிடியுங்கள்! அவனை நரகத்தின் மையத்திற்கு கொண்டு வாருங்கள்!’ பின்னர் அவன் தலை மீது வதைக்கும் கொதி நீரை ஊற்றுங்கள்!(என வானவர்களிடம் கூறப்படும்.)📘📘📘
*(திருக்குர்ஆன் 44:47,48)*
هَٰذَانِ خَصْمَانِ اخْتَصَمُوا فِي رَبِّهِمْ ۖ فَالَّذِينَ كَفَرُوا قُطِّعَتْ لَهُمْ ثِيَابٌ مِنْ نَارٍ يُصَبُّ مِنْ فَوْقِ رُءُوسِهِمُ الْحَمِيمُ
يُصْهَرُ بِهِ مَا فِي بُطُونِهِمْ وَالْجُلُودُ
*✍✍✍(ஏக இறைவனை) மறுத்தோருக்காக நெருப்பால் ஆன ஆடை தயாரிக்கப்பட்டுள்ளது. அவர்களின் தலை கள் மீது கொதிக்கும் நீர் ஊற்றப்படும். அதைக் கொண்டு அவர்களின் வயிறுகளில் உள்ளவைகளும், தோல்களும் உருக்கப்படும்.✍✍✍*
*(திருக்குர்ஆன் 22:19,20)*
*🔥🔥🔥வெப்பம்🔥🔥🔥*
فِي سَمُومٍ وَحَمِيمٍ وَظِلٍّ مِنْ يَحْمُومٍ لَا بَارِدٍ وَلَا كَرِيمٍ
📙📙📙அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள். அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை.📙📙📙
*(திருக்குர்ஆன் 56:42-44)*
فَرِحَ الْمُخَلَّفُونَ بِمَقْعَدِهِمْ خِلَافَ رَسُولِ اللَّهِ وَكَرِهُوا أَنْ يُجَاهِدُوا بِأَمْوَالِهِمْ وَأَنْفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ وَقَالُوا لَا تَنْفِرُوا فِي الْحَرِّ ۗ قُلْ نَارُ جَهَنَّمَ أَشَدُّ حَرًّا ۚ لَوْ كَانُوا يَفْقَهُونَ
*✍✍✍அல்லாஹ்வின் தூதர் (தபூக் போருக்குச்) சென்ற பிறகு, போருக்குச் செல்லாது தம் இருப்பிடத்தில் தங்கி விட்டோர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவதை அவர்கள் வெறுக்கின்றனர். ‘கோடையில் புறப்படாதீர்கள்!’ எனவும் அவர்கள் கூறுகின்றனர். நரகத்தின் நெருப்பு இதை விட வெப்பமானது’ என்று கூறுவீராக! இதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டாமா❓✍✍✍*
*(திருக்குர்ஆன் 9:81)*
لَا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا إِلَّا حَمِيمًا وَغَسَّاقًا
📗📗📗அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள். கொதி நீரையும், சீழையும் தவிர.📗📗📗
*(திருக்குர்ஆன் 78:24,25)*
*🌐🌐குளிர்ச்சி கிடையாது🌎🌎*
إِنَّ جَهَنَّمَ كَانَتْ مِرْصَادًا لِلطَّاغِينَ مَآبًا لَابِثِينَ فِيهَا أَحْقَابًا٤ لَا يَذُوقُونَ فِيهَا بَرْدًا وَلَا شَرَابًا
*✍✍✍வரம்பு மீறியோரின் தங்குமிடமாக நரகம் காத்துக் கொண்டிருக்கிறது. அதில் யுகம் யுகமாகத் தங்குவார்கள். அங்கே குளிர்ச்சியையும், (குளிர்) பானத்தையும் சுவைக்க மாட்டார்கள்.✍✍✍*
*(திருக்குர்ஆன் 78:21-24)*
*🔥🔥🔥சூடு போடப்படும்🔥🔥🔥*
يَوْمَ يُحْمَىٰ عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَىٰ بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ ۖ هَٰذَا مَا كَنَزْتُمْ لِأَنْفُسِكُمْ فَذُوقُوا مَا كُنْتُمْ تَكْنِزُونَ
📒📒📒அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். ‘இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!’ (என்று கூறப்படும்)📒📒📒
*(திருக்குர்ஆன் 9:35)*
*❤❤❤உள்ளத்தை தாக்கும்🔥🔥🔥 நெருப்பு🔥🔥🔥*
وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ نَارُ اللَّهِ الْمُوقَدَةُ الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ إِنَّهَا عَلَيْهِمْ مُؤْصَدَةٌ فِي عَمَدٍ مُمَدَّدَةٍ
*✍✍✍ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.✍✍✍*
*(திருக்குர்ஆன் 104:5-9)*
*🏓🏓🏓புரட்டிப் போடப்படுவார்கள்🏓🏓🏓*
يَوْمَ تُقَلَّبُ وُجُوهُهُمْ فِي النَّارِ يَقُولُونَ يَا لَيْتَنَا أَطَعْنَا اللَّهَ وَأَطَعْنَا الرَّسُولَا
📓📓📓அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் ‘நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப் பட்டிருக்கக் கூடாதா?’ எனக் கூறுவார்கள்.📓📓📓
*(திருக்குர்ஆன் 33:66)*
*👹மேலும் 👹கீழும்🔥 வேதனை🔥*
يَوْمَ يَغْشَاهُمُ الْعَذَابُ مِنْ فَوْقِهِمْ وَمِنْ تَحْتِ أَرْجُلِهِمْ وَيَقُولُ ذُوقُوا مَا كُنْتُمْ تَعْمَلُونَ
*✍✍✍அவர்களின் மேற்புறத்திலிருந்தும், கால்களுக்குக் கீழே இருந்தும் அவர்களை வேதனை மூடிக் கொள்ளும் நாளில் ‘நீங்கள் செய்து கொண்டிருந்ததைச் சுவையுங்கள்!’ என்று (இறைவன்) கூறுவான்.✍✍✍*
*(திருக்குர்ஆன் 29:55)*
*🔥🔥🔥கருகும் தோல்கள்🔥🔥🔥*
إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ ۗ إِنَّ اللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا
📔📔📔நமது வசனங்களை மறுப்போரை நரகில் நுழையச் செய்வோம். அவர்களின் தோல்கள் கருகும் போதெல்லாம் அவர்கள் வேதனையை உணர்வதற்காக வேறுதோல்களை அவர்களுக்கு மாற்றுவோம். அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கிறான்📔📔📔.
*(திருக்குர்ஆன் 4:56)*
تَلْفَحُ وُجُوهَهُمُ النَّارُ وَهُمْ فِيهَا كَالِحُونَ
*✍✍அவர்களது முகங்களை நெருப்பு பொசுக்கும். அதில் அவர்கள் விகாரமாக இருப்பார்கள்.✍✍*
*(திருக்குர்ஆன் 23:104)*
*🏓🏓சம்மட்டி அடி🏓🏓*
وَلَهُمْ مَقَامِعُ مِنْ حَدِيدٍ
📚📚அவர்களுக்காக இரும்புச் சம்மட்டிகளும் உள்ளன.📚📚
*(திருக்குர்ஆன்: 22:21)*
*🌐🌐🌐கூச்சலும் அலறலும்🌎🌎🌎*
فَأَمَّا الَّذِينَ شَقُوا فَفِي النَّارِ لَهُمْ فِيهَا زَفِيرٌ وَشَهِيقٌ
*✍✍கெட்டவர்கள் நரகில் இருப்பார்கள். அங்கே அவர்களுக்குக் கழுதையின் கத்தலும், அலறலும் இருக்கும்.✍✍*
*(திருக்குர்ஆன் 11:106)*
*🔥🔥வேதனை குறையாது🔥🔥*
لَا يُفَتَّرُ عَنْهُمْ وَهُمْ فِيهِ مُبْلِسُونَ
⛱⛱⛱அவர்களை விட்டும் (தண்டணை) குறைக்கப்படாது. அதில் அவர்கள் நம்பிக்கையிழந்திருப்பார்கள்⛱⛱⛱.
*(திருக்குர்ஆன் 43:75)*
*🏵🏵குறைந்த பட்ச தண்டணை🏵🏵*
*✍✍✍“ஒருவருக்கு நெருப்பாலான இரு காலணிகள் அணிவிக்கப்பட்டு, அந்தக் காலணிகளின் வெப்பத்தால் அவரது மூளை (தகித்துக்) கொதிக்கும். அவர்தாம் நரகவாசிகளிலேயே மிகவும் குறைவான வேதனை அனுபவிப்பவராவார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍✍✍*
*அறிவிப்பாளர் : அபூஸயீத் அல்-குத்ரீ (ரலி)*
*நூல் : முஸ்லிம் 311*
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
🌈🌈🌈“எங்கள் இறைவா! இவ்வுலகிலும் எங்களுக்கு நன்மையை வழங்குவாயாக! மறுமையிலும் நன்மையை (வழங்குவாயாக!) நரக வேதனையிலிருந்து எங்களைக் காப்பாயாக!”🌈🌈🌈
*(திருக்குர்ஆன் 2:201)*
*✍✍✍எனவே மேற்கண்ட துஆவை நாம் அல்லாஹ்விடத்தில் அதிகமாக கேட்க வேண்டும். அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம் அனைவரையும் நரகத்தின் தண்டனையிலிருந்து காப்பாற்றி சொர்க்கம் வழங்க வேண்டும். அப்படிப்பட்ட சொர்கத்திற்குரிய நன்மக்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள் புரிவானாக.!✍✍✍*
*👹👹👹விரட்டி வரும் மரணமும்👹👹👹 விரண்டோடும்👨👨👦👨👨👦👨👨👦 மனிதனும்…👨👨👦👨👨👦👨👨👦*
*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம் 8*
No comments:
Post a Comment