பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, August 14, 2019

ஹஜ் உம்ரா - 16

*🍇🍇🍇மீள் பதிவு🍇🍇🍇*

*🌐🌐🌐ஹஜ் உம்ரா சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*


*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👈👈👈*

*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*

*👉👉👉தொடர் பாகம் 16👈👈👈*

     *👉தலைப்பு👇*

*👹👹👹பலவீனர்களுக்கு உதவியாக நாம் கல் எறியலாமா❓👹👹👹*

*✍✍✍நமக்கு கல் எறிந்த பிறகு, நோயாளி மற்றும் பலவீனர்களுக்கு உதவி செய்ய அவர்களுக்கு பதிலாக நாம் கல் எறியலாமா❓*
*உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்!✍✍✍*

*அல்குர்ஆன் 64:16*

📕📕📕முடிந்தவரை அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு தாங்களே கல்லெறிய முயற்சிக்க வேண்டும். அவ்வாறு முடியாதவர்கள் பிறரிடம் பொறுப்புச் சாட்டலாம். ஆனால் இவ்வாறு பிறருக்காக எறிபவர்கள் முதலில் தமக்காக எறிந்து கொள்ள வேண்டும். அதற்குப் பிறகு தான் மற்றவர்களுக்காகக் கல்லெறிய வேண்டும்.📕📕📕

*🌐🌐🌐அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் பரிகார நோன்பு நோற்கலாமா❓🌎🌎🌎*

*✍✍✍குர்பானி கொடுக்க இயலாதவர்கள் அங்கு இருக்கும்போது நோற்க வேண்டிய அந்த மூன்று நோன்புகளை அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களில்  நோற்கலாம் என்று கூறுகிறீர்கள். பொதுவாகவே அந்த மூன்று நாட்களும் நோன்பு நோற்க தடை செய்யப்பட்ட நாட்கள் அல்லவா❓ ஹாஜிகளுக்கு மட்டும் அந்த நாட்களில் நோன்பு நோற்க சலுகை உள்ளதா❓ அல்லது அய்யாமுத் தஷ்ரீக் முடிந்த பிறகு நோன்பு நோற்றுவிட்டு தவாஃபுல் விதா செய்யவேண்டுமா❓*
*ஆயிஷா (ரலி), இப்னு உமர்(ரலி) ஆகியோர் கூறியதாவது:*
*குர்பானிப் பிராணி கிடைக்காதவர் தவிர மற்றவர்கள் தஷ்ரீக்குடைய நாட்களில் நோன்பு நோற்க அனுமதிக்கப்படவில்லை* !✍✍✍

*நூல்: புகாரி 1998*

📘📘📘மேற்கண்ட ஹதீஸ் குர்பானிப் பிராணி கிடைக்காதவர் அய்யாமுத் தஷ்ரீக் நாட்களில் நோன்பு நோற்பதற்கு அனுமதியளிக்கின்றது.📘📘📘

*🌐🌐10ம் நாள் அஸருக்குள் தாவாஃபுல் இஃபாளா செய்யத் தவறியவர்கள் இரவில் செய்யலாமா❓🌎🌎*

*✍✍✍தவாஃபுல் இஃபாளாவை 10வது நாளின் அஸர் நேரம் முடிவதற்குள் செய்யத் தவறியவர்கள் இரவில் செய்யலாமா❓ அப்படி அஸர் முடிய முன் ‘தவாஃபுல் இஃபாளா’வை தவறவிட்டவர்கள், அதற்கு முன்பே இஹ்ராம் ஆடையைக் களைந்திருப் பார்களேயானால், மீண்டும் இஹ்ராம் ஆடை அணிந்து, நிய்யத் செய்து, மறுநாள் வந்துதான் தவாஃபுல் இஃபாளா செய்ய வேண்டுமா❓*  *பத்தாம் நாள் சூரியன் மறைவதற்கு முன்னால் தவாப் செய்து விட்டால் சட்டை பேண்ட் போன்ற தையல் ஆடை அணிந்து தவாப் செய்யும் சலுகை கிடைக்கும். நறுமணமும் பூசிக் கொள்ளலாம். தவாபுக்கு முன் சூரியன் மறைந்து விட்டால் அந்தச் சலுகை போய் விடும்.*
*“நீங்கள் ஜம்ரதுல் அகபாவில் கல்லெறிந்து விட்டால் பெண்களைத் தவிர மற்ற அனைத்தும் உங்களுக்கு ஹலாலாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்✍✍✍.*

*(நூல்: அபூதாவூத் 1708)*

📙📙📙பத்தாம் நாளன்று கல்லெறிதல், குர்பானி கொடுத்தல் ஆகிய வணக்கங்களைச் செய்யும் போதே அன்றைய தினம் சூரியன் மறைவதற்குள் தவாஃப் செய்ய முடியுமா? முடியாதா? என்ற முடிவுக்கு வந்து விடலாம்.
10ஆம் நாள் சூரியன் மறைவதற்குள் தவாஃபுல் இஃபாளா செய்ய முடியும் என்றால் நறுமணம் பூசுதல், தையல் ஆடை அணிதல் போன்ற சலுகைகளுடன் தவாஃபை முடித்து மொத்தமாக இஹ்ராமுடைய கட்டுப்பாடுகளை விட்டு விடுதலையாகிவிடலாம்📙📙📙.

*✍✍✍சூரியன் மறைவதற்குள் தவாஃப் செய்ய முடியாதென்றால் இஹ்ராம் உடையைக் களையாமல் அப்படியே இருந்து, சூரியன் மறைந்த பிறகு தவாஃப் செய்து விட்டு, ஒரேயடியாக எல்லா கட்டுப்பாடுகளை விட்டும் விடுதலையாகி விடலாம்.*
*இதுபோன்ற சூழலில் முதல் விடுதலையின் பயனை இழக்க நேரிடும். அதாவது உடலுறவைத் தவிர உள்ள நறுமணம் பூசுதல், தையல் ஆடை அணிதல் போன்ற சலுகைகளை இழக்க நேரிடும். தவாஃபுல் இஃபாளாவை முடித்து விட்டால் முழு விடுதலையை அனுபவித்துக் கொள்ளலாம்.*
*பத்தாம் நாள் சூரியன் மறைவதற்குள் தவாஃபுல் இஃபாளாவை செய்யத் தவறியவர்கள் மீண்டும் இஹ்ராம் ஆடை அணிந்து கொள்ள வேண்டும். அன்றைய இரவு அல்லது மறுநாள் வரை தவாஃபுல் இஃபாளா செய்யலாம். ஆனால் தவாஃபுல் இஃபாளாவை முடிக்கின்ற வரை இஹ்ராமின் கட்டுப்பாடுகளிலிருந்து விடுதலையாக முடியாது✍✍✍* .

*🧕🧕🧕மாதவிடாய் பெண்கள் 🕋🕋🕋தவாஃப், ஸயீ எப்போது செய்வது❓🧕🧕🧕*

📗📗📗அன்றைய தினம் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தவாஃபுல் இஃபாளாவையும், ஸயீயையும் எப்போது செய்வது❓ தூய்மையாவதற்கு ஒரு வாரம் ஆகிவிட்டால் ஹஜ்ஜுடைய நாட்கள் முடிந்துவிடும் நிலையில் எப்படி அவற்றை நிறைவேற்றுவது❓
இத்தகைய பெண்களுக்கு இரண்டு விதமான நெருக்கடிகள் ஏற்படலாம்.📗📗📗

*👉👉👉1. தூய்மையாவதற்கு முன்னால் பயணம் புறப்பட நேரிடலாம்👈👈👈.*

*👉👉👉2. தூய்மையாவதற்குரிய காலம் ஹஜ்ஜின் 11, 12, 13 நாட்களையும் தாண்டிச் செல்லலாம்.👈👈👈*

*✍✍✍தவாஃபுல் இஃபாளா என்பது ஹஜ்ஜின் தவாஃபாகும். இதைச் செய்யாவிட்டால் ஹஜ் நிறைவேறாது. இதைக் கீழ்க்காணும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.*
*ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:*
*நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்தோம். துல்ஹஜ் பத்தாம் நாள் நாங்கள் தவாஃபுஸ் ஸியாரத் செய்தபோது ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா (ரலி) அவர்களிடம் தாம்பத்திய உறவு கொள்ள நாடினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அவருக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே! என்றேன். அதற்கவர்கள், “அவர் (நமது பயணத்தைத்) தடுத்துவிட்டாரா?” எனக் கேட்டார்கள். உடனே தோழர்கள், “அவர் துல்ஹஜ் பத்தாம் நாளே தவாஃபுஸ் ஸியாரத் செய்துவிட்டார்!’ என்றதும் “அப்படியாயின் புறப்படுங்கள்” என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்✍✍✍* .

*நூல்: புகாரி 1733*

📒📒📒மாதவிலக்கு ஏற்பட்டவர் தூய்மையாகி, தவாஃபுல் இஃபாளா செய்வதற்குள் பயணத் தேதி முடிந்து விடுவது போன்ற நெருக்கடியான கட்டத்தில் இரத்தம் உறிஞ்சுகின்ற இறுக்கமான ஆடை (நாப்கின்) அணிந்து கொண்டு தவாஃபுல் இஃபாளாவை நிறைவேற்றலாம். இவ்வாறு அறிஞர் இப்னு தைமிய்யா அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.
அடுத்ததாக, பயணத் தேதி மீதமிருந்தாலும் துப்புரவாகும் நாள் ஹஜ்ஜுடைய நாட்களான 13ஆம் நாளையும் தாண்டிச் செல்கின்ற நெருக்கடி ஏற்படலாம்.📒📒📒

*✍✍✍உங்களால் இயன்ற வரை அல்லாஹ்வை அஞ்சுங்கள்! செவிமடுங்கள்! கட்டுப்படுங்கள்!✍✍✍*

*அல்குர்ஆன் 64:16*

📓📓📓இந்த வசனத்தின் அடிப்படையில், ஹஜ்ஜுடைய நாட்களைத் தாண்டி விட்டாலும் அதை நிர்ப்பந்தம் என எடுத்துக் கொண்டு, துப்புரவான பின் தவாஃபுல் இஃபாளாவை நிறைவேற்றியாக வேண்டும்.📓📓📓

*🌐🌐🌐10ம் நாள் லுஹரை எங்கு தொழுவது❓ கஸ்ராகவா❓🌎🌎🌎*

*✍✍✍பத்தாம் நாளின் ளுஹர் தொழுகையை மக்காவில் தொழுவதுடன் மினாவிலும் வந்து 2வது முறை தொழ வேண்டுமா❓ இரண்டு முறையும் 4 ரக்அத்கள் முழுமையாக தொழ வேண்டுமா❓ அன்றைய தொழுகைகளில் எல்லா வக்துகளையும் கஸ்ரு இல்லாமல் முழுமையாகத் தான் தொழவேண்டும்❓*
*பத்தாம் நாள் அன்று மினாவில் “ஜம்ரதுல் அகபா’வில் கல்லெறிந்து விட்டு குர்பானியும் கொடுத்து, தலையை மழித்த பின் மக்காவுக்குப் புறப்பட்டு மீண்டும் தவாஃப் அல் இஃபாளா எனும் தவாஃப் செய்ய வேண்டும்✍✍✍.*

📔📔📔இது “தவாஃப் ஸியாரா’ எனவும் கூறப்படுகிறது. இந்தத் தவாஃபைச் செய்து விட்டு மீண்டும் மினாவுக்குத் திரும்ப வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று “தவாஃப் அல் இஃபாளா’ செய்து விட்டு, திரும்பி வந்து மினாவில் லுஹர் தொழுதார்கள்📔📔📔.

*அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)*

*நூல்: முஸ்லிம் 2307*

*✍✍✍நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அறுக்குமிடம் சென்று அறுத்துவிட்டு, வாகனத்தில் ஏறி தவாஃபுல் இஃபாளா செய்துவிட்டு மக்காவில் லுஹர் தொழுதார்கள்.✍✍✍*

*அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)*

*நூல்: முஸ்லிம் 2137*

📚📚📚நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பத்தாம் நாள் அன்று மினாவில் லுஹர் தொழுததாகவும், மக்காவில் லுஹர் தொழுததாகவும் இரண்டு அறிவிப்புகள் உள்ளன. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு தடவை தான் ஹஜ் செய்துள்ளதால் வெவ்வேறு ஆண்டுகளில் நடந்ததாகக் கருத முடியாது.
தவாஃபுல் இஃபாளாவை முடிக்கும் போது மக்காவிலேயே லுஹர் நேரம் வந்து விட்டதால் அங்கே லுஹர் தொழுது விட்டு மினாவுக்கு வந்து மீண்டும் ஒரு முறை மக்களுக்கு இமாமாக லுஹர் தொழுகை நடத்தியிருக்கக் கூடும் என்று நவவி அவர்கள் கூறுகிறார்கள்.📚📚📚

*✍✍✍இந்த அடிப்படையில் நபி (ஸல்) அவர்கள் இமாமாக இருந்ததால் இரண்டு முறை தொழுதுள்ளார்கள். நாம் மக்காவில் தொழுவதே போதுமானதாகும். பயணத்தின் போது பொதுவான கஸ்ருத் தொழுகையின் சட்ட அடிப்படையில் லுஹரை இரண்டு ரக்அத்தாக சுருக்கித் தொழ வேண்டும்✍✍✍* .

*🏵🏵🏵3 நாட்களுக்கும், ஒரே நாளில் கற்களை பொறுக்கிக் கொள்ளலாமா❓🏵🏵🏵*

⛱⛱⛱11, 12, 13 ஆகிய நாட்களில் எறியவேண்டிய கற்களை எப்போது, எங்கு பொறுக்க வேண்டும்❓ 3 நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக ஒரே நாளில் பொறுக்கி வைத்துக் கொள்ளலாமா❓
*பதில்*
மூன்று நாட்களுக்கும் சேர்த்து மொத்தமாக மினாவில் பொறுக்கிக் கொள்ளலாம்.⛱⛱⛱

*🌐🌐🌐எதற்கு வலது பக்கமாக துஆ செய்ய வேண்டும்❓ நமக்கா❓🌎🌎🌎*

*✍✍✍முதல் ஜம்ராவில் கல் எறிந்த பிறகு வலது பக்கமாக நகர்ந்து நின்றும், இரண்டாவது ஜம்ராவில் கல் எறிந்த பிறகு இடது பக்கமாக நகர்ந்து நின்றும் கிப்லாவை நோக்கி துஆ செய்யவேண்டுமா❓ இதில் வலது பக்கம், இடது பக்கம் என்பது ஜம்ராவுக்கு வலது / இடது பக்கம் என்று குறிக்குமா❓ அங்குள்ள மஸ்ஜிதுல் ஹீஃபாவுக்கு வலது / இடது பக்கம் என்று குறிக்குமா❓*
*கல்லெறிபவரின் வலது பக்கம், இடது பக்கத்தையே குறிக்கும்.*
*இப்னு உமர் (ரலி) அவர்கள் முதல் ஜம்ராவில் ஏழுகற்களை எறிவார்கள். ஒவ்வொன்றையும் எறிந்ததும் தக்பீர் கூறுவார்கள். பிறகு சமதளமான தரைப் பகுதிக்கு வந்து கிப்லாவை முன்னோக்கி நிற்பார்கள். தம் கைகளை உயர்த்தி, நீண்ட நேரம் நின்று துஆ செய்வார்கள். பின்பு, இரண்டாவது ஜம்ராவில் கல்லெறிவார்கள். பிறகு இடது பக்கமாக நகர்ந்து, சமதளமான இடத்திற்குப் போய், கிப்லாவை முன்னோக்கி, நீண்ட நேரம் நின்று, கைகளை உயர்த்தி பிரார்த்திப்பார்கள். பின்பு பத்னுல் வாதி என்னுமிடத்திலிருந்து கடைசி ஜம்ராவில் கல்லெறிவார்கள்; அங்கு நிற்கமாட்டார்கள். பிறகு திரும்பி வந்து, “இவ்வாறுதான் நபி(ஸல்) அவர்கள் செய்ய நான் பார்த்திருக்கிறேன்!” எனக் கூறுவார்கள்.✍✍✍*

*நூல்: புகாரி 1751, 1753*

*🌐🌐🌐3வது ஜம்ராவில் தள்ளி நின்று 🤲🤲🤲துஆ செய்யவேண்டுமா❓🌎🌎🌎*

🌈🌈🌈3வது ஜம்ராவில் கல்லெறிந்த பின், அந்த இடத்தில் நிற்காமல் சற்று தள்ளி நின்று 🤲துஆ செய்யவேண்டுமா❓
*பதில்*
புகாரி 1751, 1753 ஆகிய ஹதீஸ்களின்படி முதல் இரண்டு ஜம்ராக்களில் துஆச் செய்வது நபிவழியாகும். மூன்றாவது, கடைசி ஜம்ராவில் துஆச் செய்வது இல்லை🌈🌈🌈.

*👹👹👹கல்லெறியும் நாட்களில் வேறு📚📚📚 அமல்கள் செய்யலாமா❓🌎🌎🌎*

*✍✍✍கல் எறிவது அல்லாமல் இந்த நாட்களில் வேறு அமல்கள் எதுவுமுள்ளதா? நாம் விரும்பி செய்யக்கூடிய உபரியான அமல்கள் மட்டும்தானா❓ வாய்ப்பு கிடைத்தால் தவாஃப் செய்ய மக்காவுக்கு வரலாமா❓* *அதிகமதிகம் தவாஃப் செய்து கொள்ளலாம். தொழுகை, திக்ர் என விரும்பிய அமல்களைச் செய்து கொள்ளலாம்.*
*“அப்து முனாஃபின் சந்ததிகளே! இந்த ஆலயத்தில் இரவு பகல் எந்நேரமும் தவாஃப் செய்பவரையும், தொழுபவரையும் ரநீங்கள் தடுக்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.✍✍✍*

*(நூல்கள்: திர்மிதீ 795, அபூதாவூத் 1618, நஸயீ 2875)*

*🕋🕋🕋கல் எறிந்த பிறகு, அவசியம் எனில் வேறு இடங்களுக்கு செல்லலாமா❓🕋🕋🕋*

🏵🏵🏵கல் எறிந்த பிறகு வேறு இடங்களுக்கு செல்லத் தக்க காரணம் இல்லாமல், சொந்தத் தேவைகளுக்காக மக்காவிலுள்ள ரூமுக்கோ, ஹோட்டலுக்கோ பகலில் செல்ல அனுமதி உண்டா❓ கல்லெறிந்து முடியும்வரை முழு நாட்களும் மினாவில்தான் தங்கி இருக்கவேண்டுமா❓
இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:
அப்பாஸ் பின் அப்தில் முத்தலிப் (ரலி) அவர்கள், (ஹாஜிகளுக்குத்) தண்ணீர் விநியோகிப்பதற்காக மினாவுடைய இரவுகளில் மக்காவில் தங்கிக்கொள்ள நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்.🏵🏵🏵

*நூல்: புகாரி 1634*

*👆👆👆இந்த ஹதீஸ் அடிப்படையில் தக்க காரணம் உள்ளவர்கள் தவிர மற்றவர்கள் மினாவில் தான் தங்க வேண்டும்👈👈👈* .

*🕋🕋🕋🕋2 நாட்கள் எறிய வேண்டிய கற்களை, ஒரே நாளில் எறியலாமா❓ எப்படி❓🕋🕋🕋*

*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம்  16*

No comments:

Post a Comment