பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, August 15, 2019

ஹஜ் உம்ரா - 17

*🍇🍇🍇மீள் பதிவு🍇🍇🍇*

*🌐🌐🌐ஹஜ் உம்ரா சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*


*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👈👈👈*

*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*

*👉👉👉தொடர் இறுதி பாகம் 17👈👈👈*

     *👉தலைப்பு👇*

*🕋🕋🕋🕋2 நாட்கள் எறிய வேண்டிய கற்களை, ஒரே நாளில் எறியலாமா❓ எப்படி❓🕋🕋🕋*

*✍✍✍தக்க காரணம் உள்ளவர்கள் இரண்டு நாட்கள் எறியவேண்டிய கற்களை ஒரே நாளில் எறியலாம் என்றால், ஒவ்வொரு ஜம்ராவிலும் தலா 14 என தொடர்ந்து ஒரே நேரத்தில் எறிந்துவிடலாமா❓*
*மினாவில் தங்காமல் இருப்பதற்கும், 10ஆம் நாள் கல்லெறிவதற்கும், அதன் பிறகு இரண்டு நாட்களுக்குரிய கல்லெறிதலை ஒரே நாளில் சேர்த்து எறிவதற்கும் ஒட்டகம் மேய்ப்பவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்தார்கள்✍✍✍* .

*(நூல்: திர்மிதீ 878)*

*👆👆👆இதன் அடிப்படையில் இரண்டு நாட்களுக்கும் சேர்த்து 14 கற்கள் எறிந்து கொள்ளலாம்👈👈👈.*

*🌐🌐13வது நாளில் கல் எறியாமல் கிளம்ப விரும்பினால்❓🌎🌎*

📕📕📕12வது நாளில் சூரியன் மறையும் முன்பாக கல்லெறிந்துவிட்டவர்கள் 13வது நாளில் கல் எறியாமல் கிளம்ப விரும்பினால், அவர்கள் அந்த நாளில் புறப்படும் நேரம் சூரியன் மறையும் முன்பாக இருக்கவேண்டுமா❓ அல்லது கல்லெறிவது மட்டும் சூரியன் மறையும் முன்பாக இருந்தால் போதுமா❓
*பதில்*
12ஆம் நாள் சூரியன் மறைவதற்கு முன்னால் புறப்படுவதாக இருந்தால் மட்டுமே 13ஆம் நாள் கல் எறியத் தேவையில்லை.📕📕📕

*🏵🏵🏵தஹ்மீதும், ஸலவாத்தும் சொல்லிதான் 🤲🤲🤲துஆ செய்ய வேண்டுமா❓🏵🏵🏵*

*✍✍✍எந்த இடத்தில் துஆ செய்தாலும் தஹ்மீதும், ஸலவாத்தும் சொல்லிதான் துஆ செய்ய வேண்டுமா❓ நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜின் கிரியைகளின்போது கைகளை உயர்த்தி பிரார்த்தித்ததால் நாமும் கைகளை உயர்த்தி பிரார்த்திப்பது தான் சுன்னத் என்பது சரியா❓ அரபாவில் மட்டும் கைகளை உயர்த்திப் பிரார்த்தித்தால் போதுமா❓*
*தஹ்மீது, ஸலவாத் சொல்லித் தான் துஆ செய்ய வேண்டும் என்று ஹதீஸ் எதுவும் வரவில்லை.*
*பொதுவாக சாப்பிடும் போது, சாப்பிட்டு முடித்ததும், கழிவறை செல்லும் போது. படுக்கும் போது போன்ற அன்றாடப் பழக்கவழக்கங்களின் துஆக்களைத் தவிர இதர துஆக்களில் கையை உயர்த்துவது நபிவழியாகும். அரஃபா உள்ளிட்ட எந்த இடத்தில் பிரார்த்தனை செய்வதற்கும் இது பொருந்தும்.✍✍✍*

*🌐🌐இஸ்திஹாளா தொடர் உதிரப் போக்கு இருந்தால், தொழுகை, 🕋🕋🕋தவாஃப், ஸயீ செய்யலாமா❓🌎🌎*

📘📘📘தொடர் உதிரப்போக்கு போல் நாள் கணக்கின்றி தொடர்ந்து, அதே சமயம் அதிகமாகவும் இல்லாமல் மிகக் கொஞ்சமாக தொடர்ந்து மாதவிடாய் இருப்பதை இஸ்திஹாளா (தொடர் உதிரப் போக்கு) கணக்கில் எடுத்துக் கொண்டு தொழுகை, தவாஃப், ஸயீ போன்ற அமல்களை செய்யலாமா❓
*பதில்*
மூன்று அல்லது ஏழு என ஒரு பெண்ணுக்கு வழக்கமாக வரக்கூடிய நாட்களைத் தாண்டி அதிகமான நாட்கள் உதிரப் போக்கு ஏற்பட்டால் அது இஸ்திஹாளா தான். இரத்தம் அதிகமாகவோ குறைவாகவோ இருக்கலாம்.
*ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:*
ஃபாத்திமா பின்த் அபீஹுபைஷ் எனும் பெண்மணி நபி (ஸல்) அவர்கüடம் (வந்து), “நான் உயர் இரத்தப்போக்கு (இஸ்திஹாளா) உடையவளாக இருக்கின்றேன்; (தொடர்ந்து இரத்தப் போக்கு ஏற்படுவதால்) நான் சுத்தமாவதில்லை. எனவே நான் தொழுகையை விட்டுவிடலாமா?” என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “இல்லை. இது இரத்தக் குழா(யிலிருந்து வருவதே)யாகும். (மாதவிடாயன்று). ஆயினும் (மாதத்தில்) வழக்கமாக உனக்கு மாதவிடாய் ஏற்படும் நாட்கள் அளவிற்குத் தொழுகையை விட்டுவிடு! பிறகு குüத்துவிட்டு (ஒவ்வொரு தொழுகைக்கும் உளூ செய்து) தொழுதுகொள்!” என்றார்கள்📘📘📘.

*நூல்: புகாரி 325*

*🕋🕋தவாஃபுல் விதாவுக்குப் பிறகு 🕋🕋🕋மக்காவில் தங்கலாமா❓🕋🕋*

*✍✍✍தவாஃபுல் விதாவுக்குப் பிறகு மக்காவில் தங்கக்கூடாது என சொல்லப்படுவதால், அதற்கு பிறகு உபரியான உம்ராக்கள் செய்யவோ, மார்க்கம் சேராத சொந்த வேலைகளுக்கோ கூட தங்கக் கூடாதா❓ அப்படி மற்ற தேவைகளுக்காக தங்கவேண்டி இருந்தால் அதுவரை தவாஃபுல் விதாவை தள்ளிபோடலாமா❓ அதிகப்பட்சமாக எத்தனை நாள் வரை தள்ளிப் போடலாம்❓*
*(ஹஜ்ஜின் போது வியாபாரத்தின் மூலம்) உங்கள் இறைவனின் அருளைத் தேடுவது உங்களுக்குக் குற்றமில்லை. அரஃபாத் பெருவெளியிலிருந்து நீங்கள் திரும்பும் போது மஷ்அருல் ஹராமில் அல்லாஹ்வை நினையுங்கள்! அவன் உங்களுக்குக் காட்டித் தந்தவாறு அவனை நினையுங்கள்! இதற்கு முன் வழிதவறி இருந்தீர்கள்.✍✍✍*

*அல்குர்ஆன் 2:198*

📙📙📙ஹஜ்ஜுக்குச் சென்றவர்கள் வியாபாரத்தில் ஈடுபடுவது கூடத் தவறில்லை என்று அல்லாஹ் கூறுகின்றான். எனவே இதன்படி மார்க்க காரியங்களுக்காகவோ, சொந்தக் காரியங்களுக்காகவோ தவாஃபுல் விதாவைத் தள்ளிப் போட்டுக் கொள்ளலாம்.
ஹஜ்(ஜுக்குரிய காலம்) தெரிந்த மாதங்களாகும்.📙📙📙

*அல்குர்ஆன் 2:197*

*👆👆👆இந்த வசனத்தில் ஹஜ் வணக்கத்தைப் பற்றிக் குறிப்பிடும் போது குறிப்பிட்ட மாதங்கள் என்று அல்லாஹ் கூறுவதால், துல்ஹஜ் மாதம் முடிவதற்குள் தவாஃபுல் விதாவை நிறைவேற்றுவது சிறந்தது.👈👈👈*

*🌐🌐🌐நபியின் கப்ரு ஸியாரத்தின் போது என்ன ஓத வேண்டும்❓🌎🌎🌎*

*✍✍✍மஸ்ஜிதுந் நபவிக்குத் தொழும் நோக்கத்திற்காக சென்றால், அங்கே நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்ய வாய்ப்பு கிடைத்தால், அப்போது பொது மையவாடிகளில் ஓதும் பொதுவான துஆவினை ஓதினால் போதுமா❓*  *மஸ்ஜிதுந்நபவிக்கென்றோ, நபி (ஸல்) அவர்களின் கப்ருக்கென்றோ தனிப்பட்ட எந்த துஆவும் ஹதீஸ்களில் இல்லை.*
*“அஸ்ஸலாமு அலைக்கும் தார கவ்மின் முஃமினீன். வ இன்னா இன்ஷா அல்லாஹு பி(க்)கும் லாஹிகூன்’ (அடக்கத் தலங்களிலுள்ள இறைநம்பிக்கையாளர்களே! உங்கள்மீது இறைச்சாந்தி பொழியட்டும். இறைவன் நாடினால் நிச்சயமாக நாங்களும் உங்களை வந்து சேருபவர்கள்தாம்)✍✍✍*

*நூல்: முஸ்லிம் 367*

📗📗📗இதுபோன்ற பொதுவான துஆ ஓதிக் கொள்வது நபிவழியாகும்.
நபி (ஸல்) அவர்களின் கப்ரைச் சந்திக்கும் போது குறிப்பாக எதையும் சொல்ல வேண்டும் என்று ஹதீஸ்களில் வரவில்லை.
“மனாஸிக்குல் ஹஜ் வல் உம்ரா’ என்ற நூலில் ஸாலிஹ் அல் உஸைமீன் அவர்கள், “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந்நபிய்யு’ என்று தொழுகையில் வருகின்ற ஸலவாத்தைச் சொல்ல வேண்டும் என்று குறிப்பிடுகின்றார்கள். எனினும் இதற்கு ஹதீஸ் ஆதாரம் எதையும் காட்டவில்லை.📗📗📗

*✍✍✍இப்னு உமர் (ரலி) அவர்கள், “அஸ்ஸலாமு அலைக்க யா ரசூலல்லாஹ்! அஸ்ஸலாமு அலைக்க யா அபாபக்ர்! அஸ்ஸலாமு அலைக்க யா அபத்தீ (என்னுடைய தந்தையே!)’ என்று கூறுவார்கள்.*
*இந்த நடைமுறையை இதற்கு ஆதாரமாகக் காட்டுகிறார். நபித்தோழர்களின் கருத்து மார்க்கமாகாது என்ற அடிப்படையில் இதை நாம் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை✍✍✍.*

📒📒📒இப்னு தைமிய்யா இது தொடர்பாகக் குறிப்பிட்டுள்ள கீழ்க்கண்ட கருத்தையும் உஸைமீன் மேற்கோள் காட்டுகிறார்.
மஸ்ஜிதுந்நபவிக்கு வருகின்ற ஒவ்வொரு மனிதனும் நபி (ஸல்) அவர்களின் கப்ரை ஸியாரத் செய்வதை இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் வெறுத்திருக்கின்றார்கள். காரணம் முன்னோர்களான நபித்தோழர்கள் இதைச் செய்து கொண்டிருக்கவில்லை.📒📒📒

*✍✍✍மாறாக, அவர்கள் பள்ளிக்கு வந்து  தொழுவார்கள். அந்தத் தொழுகையில், “அஸ்ஸலாமு அலைக்க அய்யுஹந்நபிய்யு வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு’ (நபியே! உங்கள் மீது ஸலாமும் அல்லாஹ்வின் அருளும் அவனது பரக்கத்துகளும் உண்டாகட்டுமாக!) என்ற, நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் ஓதக் கற்றுத் தந்த ஸலவாத்தை ஓதுவார்கள். தொழுகை முடிந்து பள்ளியில் அமர்வார்கள் அல்லது வெளியே சென்று விடுவார்கள். இதற்குக் காரணம் நபி (ஸல்) அவர்கள் மீது தொழுகையில் ஸலவாத்தும், ஸலாமும் சொல்வது மிகச் சிறந்தது என்று அவர்கள் விளங்கி வைத்திருந்தது தான்.✍✍✍*

📓📓📓இவ்வாறு இப்னு தைமிய்யா கூறுவதாக ஸாலிஹ் அல் உஸைமீன் குறிப்பிடுகின்றார்.
எனவே இதைக் கவனத்தில் கொண்டு, நபி (ஸல்) அவர்களின் கப்ரைச் சந்திக்கும் போது பிரத்தியேக துஆ எதுவும் கூறாமல் பொது மையவாடிகளில் ஓதும் பிரார்த்தனையை மட்டுமே கூறவேண்டும்.📓📓📓

*🌐🌐🌐மஸ்ஜிதுந் நபவியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொழுவது சிறப்புக்குரியதா❓🌎🌎🌎*

*✍✍✍மஸ்ஜிதுந் நபவியில் ஒரு குறிப்பிட்ட இடத்தில் தொழுவது சிறப்புக்குரியது என்று சொல்கிறார்களே, அது எந்த இடம்❓*
இல்லை
*மஸ்ஜிதுல் ஹராமுக்கு அடுத்தபடியாக, மஸ்ஜிதுந்நபவியில் தொழுவது சிறப்புக்குரியதாகும்.*
*நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:*
*எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளைவிடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.✍✍✍*

*இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*

*நூல்: புகாரி 1190, அஹ்மத் 14167*

📔📔📔மஸ்ஜிதுந்நபவீக்குப் பயணம் மேற்கொள்வதும் இந்த அடிப்படையில் தான் அமைய வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசல், மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர மற்ற இடங்களுக்கு (நன்மையை நாடிப் புனிதப்) பயணம் மேற்கொள்ள வேண்டாம்” என்று கூறினார்கள்.📔📔📔

*அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)*

*நூல்: முஸ்லிம் 2383*

📚📚📚இவ்வாறு மஸ்ஜிதுந்நபவிக்குச் செல்பவர்கள் அங்கு எந்த இடத்திலும் தொழுது கொள்ளலாம்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இல்லத்திற்கும் எனது சொற்பொழிவு மேடைக்கும் இடைப்பட்ட பகுதி சொர்க்கப் பூங்காக்களில் ஒரு பூங்காவாகும். எனது சொற்பொழிவு மேடை, எனது ஹவ்ளுல் கவ்ஸர் தடாகத்தின் மீது அமைந்துள்ளது.📚📚📚

*இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.*

*நூல்: புகாரி 1195, 1196*

*✍✍✍இந்த இடத்திற்கு மேற்கண்ட சிறப்பை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருந்தாலும் ஆயிரம் மடங்கு சிறந்தது என்ற அந்தஸ்து மஸ்ஜிதுந்நபவீ முழுமைக்கும் உரியதாகும்.✍✍✍*

*🧕🧕🧕மாதவிலக்கை தள்ளிப் போடும்💊💊💊 மாத்திரை பயன்படுத்தலாமா❓🧕🧕🧕*

⛱⛱⛱ஹஜ், உம்ரா செய்யும் பெண்களுக்கு மாதவிலக்கு ஏற்பட்டு விட்டால் அவர்கள் தவாஃப், ஸயீ போன்ற வணக்கங்களைச் செய்வதற்குத் தாமதமாகின்றது. இதனால் அவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். எனவே இதைத் தவிர்ப்பதற்காக மாதவிலக்கைத் தள்ளிப் போடுகின்ற மாத்திரை, ஊசி போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாமா❓
*பதில்*
இவ்வாறு ஊசி, மாத்திரை எடுத்துக் கொள்ளலாம் என்று சவூதி ஆலிம்கள் மார்க்கத் தீர்ப்பு அளிக்கின்றனர். இது தவறாகும்.⛱⛱⛱
🌈🌈🌈இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். பாவம் செய்யும் நாட்டமில்லாமல், வறுமையின் காரணமாக நிர்பந்தத்துக்கு உள்ளானோரை அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.🌈🌈🌈

*அல்குர்ஆன் 5:3*

*✍✍✍இந்த வசனத்தில் மார்க்கம் முழுமைப்படுத்தப்பட்டு விட்டது என்று அல்லாஹ் சொல்கிறான். அதாவது ஹஜ்ஜின் போது பெண்களுக்கு ஏற்படுகின்ற இந்த மாதவிலக்குப் பிரச்சனைக்கும் உரிய தீர்வை மார்க்கம் தந்து விட்டது.*
*அல்லாஹ்வின் பாதையில் செலவிடுங்கள்! உங்கள் கைகளால் நாசத்தைத் தேடிக் கொள்ளாதீர்கள்! நன்மை செய்யுங்கள்! நன்மை செய்வோரை அல்லாஹ் விரும்புகிறான்.✍✍✍*

*அல்குர்ஆன் 2:195*

🏵🏵🏵நமக்கு நாமே நாசத்தைத் தேடிக் கொள்ளக் கூடாது, நாசத்தை விலை கொடுத்து வாங்கக் கூடாது என்று அல்லாஹ் கூறுகின்றான். மாதவிலக்கு என்பது இயற்கை! அதை மாற்றுவது உடலில் வேறுவிதமான நோயை தற்காலிகமாகவோ அல்லது நிரந்தரமாகவோ ஏற்படுத்திவிடும். அதனால் நமது உடலுக்கு நோயை விளைவிக்கின்ற இந்தக் காரியத்தைக் குர்ஆன் தடை செய்கின்றது. மாதவிலக்கு எனும் இயற்கை செயல்பாட்டை மாத்திரைகள் மூலம் மாற்றி உடலுக்குக் கேடு விளைவிப்பதால் இதைப் பயன்படுத்துவது மார்க்கத்தில் தடையாகும்🏵🏵🏵.

*🕋🕋🕋தவாஃபுல் குதூம்-க்கு முன்னால் 🧕🧕🧕மாதவிலக்கு ஏற்பட்டால், 🕋🕋🕋உம்ரா கூடுமா❓🕋🕋🕋*

*✍✍✍அரஃபா நாளில் தங்குவதற்கு முன்பு தான் அவர் மாதவிலக்கிலிருந்து தூய்மையடைகின்றார். இப்போது இவருக்கு ஹஜ் மட்டும் கிடைக்குமா❓ அல்லது ஹஜ்ஜும் உம்ராவும் சேர்த்துக் கிடைக்குமா❓*
*ஹஜ்ஜுக்காக அவர் இஹ்ராம் கட்டும் போது தனது ஹஜ்ஜை கிரான் ஆக ஆக்கிக் கொள்ள வேண்டும். தவாஃப், ஸஃபா மர்வாவில் ஸயீ செய்தல் தவிர உள்ள, ஹாஜிகள் செய்கின்ற மற்ற வணக்கங்களை அவர் செய்து கொள்ள வேண்டும். துப்புரவானதும் அவர் ஹஜ்ஜுக்குரிய தவாஃபும், ஸஃபா மர்வாவில் ஸயீயும் செய்து விட்டால் அவருக்கு ஹஜ்ஜும் உம்ராவும் கிடைத்து விடும்.✍✍✍*

📕📕📕உம்ராவுக்கான தவாஃப் இந்த கிரான் முறையில் கடமையாக ஆகாது. சுன்னத்தாக ஆகிவிடும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “விடைபெறும்’ ஹஜ் ஆண்டில் புறப்பட்டோம். (முதலில்) உம்ராச் செய்வதற்காக “இஹ்ராம்’ கட்டினோம். பிறகு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவரிடம் பலிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவுடன் ஹஜ்ஜுக்காகவும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். அவ்விரண்டையும் நிறைவேற்றிய பிறகே அவர் இஹ்ராமிலிருந்து விடுபடவேண்டும்” என்று சொன்னார்கள்📕📕📕.

*✍✍✍எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்) மக்காவிற்குச் சென்றேன். (மாதவிடாயின் காரணத்தால்) நான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவில்லை. ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (சயீ) ஓடவுமில்லை.*
*ஆகவே, இதைப் பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அப்போது அவர்கள், “உன் தலை (முடி)யை அவிழ்த்து வாரிக்கொள். ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்’ கட்டிக்கொள். உம்ராவை விட்டுவிடு” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் செய்தேன்✍✍✍.*

📘📘📘நாங்கள் ஹஜ்ஜை
நிறைவேற்றி முடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களுடன் (இஹ்ராம் கட்டுவதற்காக) “தன்ஈம்’ எனும் இடத்திற்கு அனுப்பினார்கள். (அங்கிருந்து புறப்பட்டு) நான் உம்ராச் செய்தேன். “இது உனது (விடுபட்ட) உம்ராவிற்குப் பதிலாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
உம்ராவிற்காக “இஹ்ராம்’ கட்டியவர்கள் இறையில்லத்தைச் சுற்றிவந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடவும் (சயீ) செய்தனர்; பிறகு இஹ்ராமிலிருந்து விடுபட்டனர். பின்னர் மினாவிலிருந்து திரும்பிய பின் மற்றொரு முறை ஹஜ்ஜுக்காகச் சுற்றி (தவாஃப்) வந்தனர். ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து (ஹஜ்ஜுல் கிரான்) செய்தவர்கள் ஒரேயொரு முறைதான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்தனர்.📘📘📘

*நூல்: முஸ்லிம் 2123*

*✍✍✍கிரான் முறையில் ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் ஒரே தவாஃப் போதுமானது என்று கூறப்படுவதால் உம்ராவுக்காக தனி தவாஃப் தேவையில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.✍✍✍*

*✈✈✈விமானம் தாமதமாகி,🕋🕋🕋 அரஃபாவிற்கு தான் வந்தேன். 🕋🕋ஹஜ்,🕋🕋 உம்ரா கூடுமா❓✈✈✈*

📙📙📙தமத்துஃ அடிப்படையில் இஹ்ராம் கட்டியவர் அரஃபா நாளில், அரஃபாவில் தங்குகின்ற நேரத்தில் தான் மக்காவிற்குள் வந்து சேர முடிந்தது. இப்போது இவருக்கு ஹஜ் மட்டும் தான் கிடைக்குமா? அல்லது ஹஜ்ஜும் உம்ராவும் சேர்த்துக் கிடைக்குமா? இனி, இவர் உம்ரா, அதற்குரிய தவாஃப், ஸஃபா மர்வாவில் ஸயீ போன்றவை செய்ய முடியாதே! இவர் என்ன செய்ய வேண்டும்❓
*பதில்*
தனது ஹஜ்ஜை கிரான் என்ற முறையில் ஆக்கிக் கொண்டு விட்டால் இவருக்கு இந்த நிலையில் ஹஜ், உம்ராவுக்கும் சேர்த்து ஒரே தவாஃப், ஸயீ செய்தால் போதுமானது. ஹஜ், உம்ரா இரண்டும் சேர்த்து இவருக்குக் கிடைத்து விடும்.📙📙📙

*✍✍✍ஹஜ்ஜுக்காக அவர் இஹ்ராம் கட்டும் போது தனது ஹஜ்ஜை கிரான் ஆக ஆக்கிக் கொள்ள வேண்டும். தவாஃப், ஸஃபா மர்வாவில் ஸயீ செய்தல் தவிர உள்ள, ஹாஜிகள் செய்கின்ற மற்ற வணக்கங்களை அவர் செய்து கொள்ள வேண்டும். துப்புரவானதும் அவர் ஹஜ்ஜுக்குரிய தவாஃபும், ஸஃபா மர்வாவில் ஸயீயும் செய்து விட்டால் அவருக்கு ஹஜ்ஜும் உம்ராவும் கிடைத்து விடும்.*
*உம்ராவுக்கான தவாஃப் இந்த கிரான் முறையில் கடமையாக ஆகாது. சுன்னத்தாக ஆகிவிடும்✍✍✍* .

📗📗📗ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிய தாவது:
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “விடைபெறும்’ ஹஜ் ஆண்டில் புறப்பட்டோம். (முதலில்) உம்ராச் செய்வதற்காக “இஹ்ராம்’ கட்டினோம். பிறகு அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள், “எவரிடம் பலிப் பிராணி உள்ளதோ அவர் உம்ராவுடன் ஹஜ்ஜுக்காகவும் இஹ்ராம் கட்டிக்கொள்ளட்டும். அவ்விரண்டையும் நிறைவேற்றிய பிறகே அவர் இஹ்ராமிலிருந்து விடுபடவேண்டும்” என்று சொன்னார்கள்.
எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்) மக்காவிற்குச் சென்றேன். (மாதவிடாயின் காரணத்தால்) நான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வரவில்லை. ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே (சயீ) ஓடவுமில்லை.📗📗📗

*✍✍✍ஆகவே, இதைப் பற்றி நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிட்டேன். அப்போது அவர்கள், “உன் தலை (முடி)யை அவிழ்த்து வாரிக்கொள். ஹஜ்ஜுக்காக “இஹ்ராம்’ கட்டிக்கொள். உம்ராவை விட்டுவிடு” என்று சொன்னார்கள். அவ்வாறே நான் செய்தேன்.*
*நாங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி முடித்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்களுடன் (இஹ்ராம் கட்டுவதற்காக) “தன்ஈம்’ எனும் இடத்திற்கு அனுப்பினார்கள். (அங்கிருந்து புறப்பட்டு) நான் உம்ராச் செய்தேன். “இது உனது (விடுபட்ட) உம்ராவிற்குப் பதிலாகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.✍✍✍*

📒📒📒உம்ராவிற்காக “இஹ்ராம்’ கட்டியவர்கள் இறையில்லத்தைச் சுற்றிவந்து, ஸஃபா மற்றும் மர்வாவுக்கிடையே ஓடவும் (சயீ) செய்தனர்; பிறகு இஹ்ராமிலிருந்து விடுபட்டனர். பின்னர் மினாவிலிருந்து திரும்பிய பின் மற்றொரு முறை ஹஜ்ஜுக்காகச் சுற்றி (தவாஃப்) வந்தனர். ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து (ஹஜ்ஜுல் கிரான்) செய்தவர்கள் ஒரேயொரு முறைதான் இறையில்லத்தைச் சுற்றி (தவாஃப்) வந்தனர்📒📒📒.

*நூல்: முஸ்லிம் 2123*

*✍✍✍கிரான் முறையில் ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் ஒரே தவாஃப் போதுமானது என்று கூறப்படுவதால் உம்ராவுக்காக தனி தவாஃப் தேவையில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.✍✍✍*

*🕋🕋🕋உம்ரா செய்யும் போது 🦌🦌🦌ஆடு, மாடு பலியிடுவதில்லையே! ஏன்❓🕋🕋🕋*

📓📓📓புகாரி 2734 ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் உம்ராô செய்யும் போது ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டதாக வருகின்றது. ஆனால் இப்போது யாரும் உம்ரா செய்யும் போது ஆடு, மாடு, ஒட்டகங்கள் அறுத்துப் பலியிடுவதில்லையே! ஏன்❓
*பதில்*
நபி (ஸல்) அவர்கள் முதன்முதலில் உம்ராவுக்கு வரும் போது பலிப்பிராணிகள் அழைத்து வந்தார்கள். அப்போது அவர்கள் தடுத்து நிறுத்தப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் மக்கா இணை வைப்பாளர்களுக்கும் இடையே உடன்படிக்கை கையெழுத்தானது. அது தான் ஹுதைபிய்யா உடன்படிக்கையாகும்.📓📓📓📓

*✍✍✍இதன்பிறகு, கொண்டு வந்த ஒட்டகங்களை அறுத்துப் பலியிட்டு, முடியை மழித்து விட்டுத் திரும்பி விட்டார்கள்.*
*அந்த உடன்படிக்கை விதியின்படி மறு ஆண்டு அவர்கள் உம்ராவை நிறைவேற்றினார்கள். அப்போது அவர்கள் எந்தப் பலிப்பிராணியையும் கொண்டு வரவில்லை. இந்த அடிப்படையில் உம்ராவின் போது குர்பானி கொடுத்ததற்கும், கொடுக்காததற்கும் நபி (ஸல்) அவர்களிடம் முன்மாதிரி இருக்கின்றது✍✍✍.*

📔📔📔இதன்படி இப்போதும் ஒருவர், உம்ராவின் போது பலிப்பிராணியை அறுக்கலாம். ஆனால் நபி (ஸல்) அவர்கள் கொண்டு வந்தது போன்று பலிப்பிராணியை உடன் அழைத்து வந்து குர்பானி கொடுக்கலாம். ஹஜ்ஜுக்குச் சென்று அங்கு போய் குர்பானி கொடுப்பது போன்று உம்ராவில் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.📔📔📔

*இன்ஷாஅல்லாஹ் இந்த தொடர் இத்துடன் முற்றும்*

அல்லாஹூவே மிகவும் அறிந்தவன்

*ஜஸாக்கல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment