பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Tuesday, August 6, 2019

குலக்கல் சீட்டு ஏலச்சீட்டு ஹராமா ?

*🏓🏓மீள் பதிவு🏓🏓*

*🌐🌐🌐 குலக்கல் சீட்டு  ஏலச்சீட்டு ஹராமா ?ஓர் இஸ்லாமிய பார்வை🌐🌐🌐*

*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📗📗📕📕📘📘 ஆதாரப்பூர்வமான ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல்🌎🌎🌎*

*🏓🏓🏓இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும்🏓🏓🏓*

*🕋குலக்கல் சீட்டு ஏலச்சீட்டு நடத்துவது அதில் பணம் போட்டு உறுபினராக  சேருவது ஹராமா ❓ 🕋*

📙📙📙குலக்கல் சீட்டு, ஏலச் சீட்டு என இருவிதமான சீட்டு முறைகள் நடையில் உள்ளன. இவற்றில் குலுக்கல் சீட்டுக்கு மார்க்கத்தில் தடையில்லை!📙📙📙

*✍✍✍ஏலச் சீட்டு முழுக்க வட்டியை அடிப்படையாகக் கொண்டது. முஸ்லிம்கள் இதிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும். ஏலச் சீட்டுக் குறித்து வேறோர் இழையில் முன்னர் சுருக்கமாக விளக்கியுள்ளோம். மீண்டும் இங்கு பதிவுசெய்கிறோம்.✍✍✍*

*1. குலுக்கல் சீட்டு & கூட்டு*

*2. ஏலம் சீட்டு & கூட்டு*

📗📗📗இவை இரண்டல்லாது வேறு முறை ஏதாவது உள்ளதா ?, தெரிந்தவர்கள் அல்லது நடத்துபவர்கள் விளக்கவும். ஏலம் கூட்டில் வட்டி கலப்பதாக தெரிகிறது விளக்கவும்.📗📗📗

*✍✍பணம் சேமிப்பு, அவசர தேவைக்காக ஆரம்பிக்கபட்ட இது வட்டியில் போய் முடிவதாக தெரிகிறது, இதை பற்றி அரிந்தவர்கள் தெரிவிக்கமாறு கேட்டுக்கொள்கிறேன். வஸ்ஸலாம்✍✍.*

📘📘📘குலுக்கல் முறையில் எதையும் தேர்வு செய்வதை இஸ்லாம் தடை விதிக்கவில்லை. நபி ஈஸா (அலை) அவர்களின் தாயார் மர்யம் (அலை) குழந்தையாக இருந்தபோது அவரை யார் பொறுப்பில் வளர்ப்பது என்பதில் ஒருவருக்கொருவர் என் பொறுப்பில் நான் வளர்ப்பேன் என்று போட்டியும், சர்ச்சையும் ஏற்பட்டது. அப்போது அவரவர் எழுதுகோல்களை ஓடும் நதியில் போட்டு, யாருடைய எழுதுகோல் தண்ணீரில் அடித்துச் செல்லவில்லையோ அவரே குழந்தை மர்யமை வளர்க்கும் பொறுப்பை ஏற்பது எனத் தீர்மானமாயிற்று. அதன்படி ஸகரிய்ய (அலை) அவர்களின் எழுதுகோல் தண்ணீரில் அடித்துச் செல்லாமல் இருக்க, குழந்தை மர்யமை வளர்க்கும் பொறுப்பு ஸகரிய்யா (அலை) அவர்களுக்கு கிடைத்தது. (விளக்கவுரை தபரீ)📘📘📘

*✍(நபியே!) இவை(யெல்லாம்) மறைவானவற்றில் நின்றுமுள்ள விஷயங்களாகும். இவற்றை நாம் உமக்கு வஹீ மூலம் அறிவிக்கின்றோம் மேலும், மர்யம் யார் பொறுப்பில் இருக்க வேண்டுமென்பதைப் பற்றி (குறி பார்த்தறிய) தங்கள் எழுது கோல்களை அவர்கள் எறிந்த போது நீர் அவர்களுடன் இருக்கவில்லை. (இதைப்பற்றி) அவர்கள் விவாதித்த போதும் நீர் அவர்களுடன் இருக்கவில்லை.✍*

*(அல் குர்ஆன் 3:44)*

📕📕📕அக்காலத் திருவுளச் சீட்டு முறையில் இவ்வாறு இருந்துள்ளது. என்பதை திருமறை அறிவிக்கின்றது. நபி (ஸல்) அவர்களும் குலுக்கல் முறையில் தேர்வு செய்வதை வழிகாட்டியுள்ளார்கள்.📕📕📕

"✍✍✍ *பாங்கு சொல்வதற்குரிய நன்மையையும் முதல் வரிசையில் நின்று (தொழுவதற்குரிய) நன்மையையும் மக்கள் அறிவார்களானால் அதற்காக அவர்கள் போட்டி போட்டுக் கொண்டு வருவர். யாருக்கு அந்த இடம் கொடுப்பது என்பதில் சீட்டுக் குலுக்கியெடுக்கப்படும் நிலையேற்பட்டாலும் அதற்கும் தயாராகி விடுவர். தொழுகையை ஆரம்ப நேரத்தில் நிறைவேற்றுவதிலுள்ள நன்மையை அறிவார்களானால் அதற்காக விரைந்து செல்வார்கள். ஸுபுஹ் தொழுகையிலும் இஷா (அதமா)த் தொழுகையிலும் உள்ள நன்மையை அறிவார்களானால் தவழ்ந்தாவது (ஜமாஅத்) தொழுகைக்கு வந்து சேர்ந்து விடுவார்கள்.✍✍✍"*

*அறிவிப்பவர் அபூ ஹுரைரா(ரலி) (நூல் - புகாரி 615)*

📚📚📚(மதீனாவுக்கு வந்த) முஹாஜிர்களில் யார் யாருடைய வீட்டில் தங்குவது என்பதையறிய சீட்டுக் குலுக்கிப் போட்டுக் கொண்டிருந்தபோது உஸ்மான் இப்னு மழ்வூன்(ரலி) எங்கள் வீட்டில் தங்குவது என முடிவானது. அதன்படி அவரை எங்கள் வீட்டில் தங்க வைத்தோம்... அறிவிப்பவர் நபி(ஸல்) அவர்களிடம் பைஅத் செய்திருந்த அன்சாரிப் பெண்மணியான உம்முல் அலா(ரலி)📚📚📚

*(நூல் புகாரி 1243)*

*✍✍இறைத்தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவருடைய (பெயருள்ள) சீட்டு வருகிறதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள்✍✍* .

*அறிவிப்பவர் ஆயிஷா (ரலி) (நூல் - புகாரி 2661)*

🏓🏓🏓அல்லாஹ்வின் சட்டங்களில் விட்டுக்கொடுப்பவரும், அதை மீறுபவருக்கும் உதாரணம் ஒரு கூட்டத்தாரின் நிலையாகும். அவர்கள் ஒரு கப்பலில் இடம் பிடிப்பதற்காக சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அவர்களில் சிலருக்குக் கப்பலின் கீழ்த் தளத்திலும் சிலருக்குக் கப்பலின் மேல் தளத்திலும் இடம் கிடைத்தது...🏓🏓🏓

*அறிவிப்பவர் நுஃமான் இப்னு பஷீர்(ரலி) (நூல் - புகாரி 2686)*

*🌐ஏலச் சீட்டு🌎*

📕📕ஏலக் கூட்டு, அல்லது ஏலச் சீட்டு இந்த முறையில் பணம் அவசியமுள்ளவர் மொத்தத் தொகையில் தள்ளுபடியாக ஒரு தொகையை ஏலம் கேட்பார் அவர் கேட்கும் தொகையைவிட கூடுதலாக எவரும் கேட்கவில்லை எனில் ஒன்று, இரண்டு, மூன்றுதரம் என ஏலம் முடிந்து, இறுதியில் கேட்டவருக்கு அவர் தள்ளுபடியாகக் கேட்ட தொகையைக் கழித்துக்கொண்டு மீதித் தொகையைக் கொடுக்கின்றனர்.📕📕

*✍✍தள்ளுபடி செய்த தொகையை ஏலச் சீட்டில் உறுப்பினராக உள்ள ஒவ்வொருவருக்கும் பங்கீட்டுக் கொடுக்கப்படும். எவ்வித உழைப்பும், ஊதியமும் இன்றி மேலதிகமாக வரும் ஏலச் சீட்டின் இந்தக் கழிவுத்தொகை காசுக்குக் காசை விற்கும் தெளிவான வட்டி. எனவே வட்டி எனத் தெரியாமல், வட்டியை அடிப்பைடயாகக் கொண்ட ஏலச் சீட்டு முறையை முஸ்லிம்கள் புறக்கணித்து விலகிக்கொள்ள வேண்டும்.✍✍*

*⏳⏳1. வட்டி என்றால்*
*என்ன?:❓⏳⏳

📘📘 அசலுக்கு அதிகமாக வாங்கும் தொகையே வட்டி எனப்படும். இதை கீழ்காணும் குர்ஆன் வசனம் விளக்குகிறது.
'...ஆயினும் நீங்கள் (வட்டி வாங்கியதைப் பற்றி) மனம் திருந்தி மீண்டு விட்டால், உங்கள் பொருளின் அசல் தொகை உங்களுக்கு உண்டு...'📘📘

*(அல்குர்ஆன் 2:279)*

*✍✍2. இரட்டித்து அதிகரிப்பது வட்டியின் குணம். இதை அல்லாஹ் தனது திருமறையில் சொல்கிறான்.✍✍*

*📗📗3* . 'ஈமான் கொண்டோரே! இரட்டித்துக் கொண்டே அதிகரித்த நிலையில் வட்டி (வாங்கித்) தின்னாதீர்கள்...📗📗

' *(அல்குர்ஆன் 3:130)*

*✍✍4. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு: வட்டியும் வியாபாரமும் வேறு வேறு என்பதை திருக்குர்ஆன் ஆணித்தரமாக கூறுகிறது.✍✍*

*📙📙5.* 'வட்டியை உண்போர் (மறுமை நாளில்) ஷைத்தான் தீண்டியவனைப் போல் பைத்தியமாகவே எழுவார்கள். 'வியாபாரம் வட்டியைப் போன்றதே' என்று அவர்கள் கூறியதே காரணம்...' 📙📙

*(அல்குர்ஆன் 2:275)*

*✍6. வட்டிக்கும் வியாபாரத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் உள்ளன.✍*

*📚7* . வியாபாரத்தில் பொருள்கள் கைமாறும் அதற்குரிய விலையும் கைமாறும். ஆனால் வட்டியில் பொருள்கள் கைமாறாது.📚

*✍8. வியாபாரத்தில் பொருளும் விலையும் கைமாறியவுடன் அப்போதே அது முடிவுக்கு வந்து விடும். ஆனால் வட்டியில் குறிப்பிட்ட தவணைக்கு பிறகே முடிவுக்கு வரும்.✍*

*📕9.* வியாபாரத்தில் பொருளுக்குரிய விலை கைமாறும், கூறுதல் தொகை கொடுக்கப்பட மாட்டாது. ஆனால் வட்டியில் அசலை விட கூடுதல் தொகை கொடுக்கப்படும்.📕

*✍வட்டி வாங்கியோருக்கு தண்டனை: 1. நிரந்தர நரகம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இன்றிரவு (கனவில்) இரண்டு மனிதர்களைக் கண்டேன். அவர்கள் என்னிடம் வந்து தூய்மையான ஒரு நிலப்பகுதிக்கு என்னை அழைத்துச் சென்றனர். நாங்கள் நடந்து வந்தபோது இரத்த ஆறு ஒன்றை அடைந்தோம். ஆற்றில் ஒருவர் நின்றுகொண்டிருந்தார். ஆற்றின் நடுவில் மற்றொருவர் தமக்கு முன்னே கற்களை வைத்துக்கொண்டு நின்றுகொண்டிருந்தார். ஆற்றில் உள்ளவர் வெளியேற முனையும்பொது அவர் வாயில் (ஆற்றின் நடுவில்) நின்றுகொண்டிருந்தவர் கல்லை எறிந்து அவர் முன்பு நின்ற இடத்திலேயே அவரைக் கொண்டுபோய் நிறுத்தினார். அவர் வெளியேற வரும்போதெல்லாம் இவர் அவரது வாயில் கல்லை எறிய, அதனால் அவர் முன்பிருந்த இடத்திற்கே திரும்பிச் சென்று கொண்டிருந்தார். 'அவர் யார்,' என்று (என்னை அழைத்துச் சென்றவர்களிடம்) நான் கேட்டேன், அதற்கவர்கள் 'ஆற்றில் நீர் பார்த்தவர் வட்டி உண்பவராவார்.' எனக் கூறினார்கள்.✍*

*இதை சமுரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 2085)*

📘. நபி (ஸல்) அவர்களின் சாபம். 'மேலும், வட்டி (வாங்கி) உண்பவனையும் வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்' 📘

*(நூல்: புகாரி 5962)*

அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்

*ஜஸாகல்லாஹ் ஹைரன்*

No comments:

Post a Comment