*💓💓மீள் பதிவு 💓 💓*
*🌐கருஞ்சீரகம் பற்றி ஒரு பார்வை 🌐*
*🏓🏓மருத்துவ குணம் கொண்ட கருஞ்சீரகம்🏓🏓*
*🌐கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் மருந்தா ❓❓❓🌎*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*
*🌐🌐🌐கருஞ்சீரகம் பற்றிய ஹதீஸ் நபிகளார் பெயரில் புனையப்பட்ட பொய்🌎🌎🌎*
*👉 👉 👉 அல்குர்ஆனும் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இருந்து உங்கள் பார்வைக்கு👇👇👇👇👇👇👇*
*✍✍✍ஒரு ஹதீஸ் பொய் என்று நிரூபணமாகப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் சில காரணங்கள் கருஞ்சீரகம் குறித்த ஹதீஸிலும் காணப்படுகின்றன. எனவே இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தி தான் என்பதை நம்மால் உறுதியாகச் சொல்ல முடியும்.✍✍✍*
*👉 👉 👉 முதலில் கருஞ்சீரகம் குறித்த ஹதீஸில் காணப்படும் வாசகங்களைப் பார்ப்போம்.👇👇👇*
.'' عن أَبَي هُرَيْرَةَ رضي الله عنه أَنَّهُ سَمِعَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " فِي الْحَبَّةِ السَّوْدَاءِ شِفَاءٌ مِنْ كُلِّ دَاءٍ إِلَّا السَّامَ
📕📕📕இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டதாக அபூ ஹுரைரா (ரளி) அவர்கள் அறிவித்துள்ளர்கள் : "கருஞ்சீரகத்தில் மரணத்தைத் தவிர எல்லா நோய்களுக்கும் நிவாரணம் இருக்கிறது" 📕📕📕
*.(நூல் : புஹாரி 5684)*
*✍✍✍இந்த ஹதீஸின் முதற் பகுதியில், ' في الحبة السوداء شفاء ' என்ற வாசகம் உள்ளது. இதன் பொருள் 'கருஞ்சீரகத்தில் நோய் நிவாரணம் இருக்கிறது' என்பதாகும். நபிகள் நாயகம் வாழ்ந்த காலத்திலேயே கருஞ்சீரகம் நிரூபிக்கப்பட்ட ஒரு நோய் நிவாரணியாக இருந்துள்ளது என்பதை இந்த வாசகம் உறுதிப்படுத்துகின்றது. எனவே, இந்தச் செய்தியின் முதற் பகுதியில் யாருக்கும் சர்ச்சை எழ வாய்ப்பில்லை. ஹதீஸின் இப்பகுதியை நாமும் மறுக்கவில்லை. எமது ஜமாஅத்தின் நிலைப்பாடும் அதுவே.✍✍✍*
📘📘📘நபிகளாரின் போதனைகள் உலக மக்கள் யாவரையும் கட்டுப்படுத்தும் என்றாலும் நபிகளார் நேரடியாக நபித்தோழர்களிடமே இறைச்செய்திகளை எடுத்துக் கூறியுள்ளதால் அவற்றை நடைமுறைப்படுத்த வேண்டியவர்களில் முதலிடத்தில் இருப்பவர்கள் நபித்தோழர்களே. நபித்தோழர்களுக்கு எது நடைமுறைப்படுத்த சாத்தியமோ அதைத் தான் நபியவர்களும் போதித்திருப்பார்கள். நபித்தோழர்களுக்கே சாத்தியமில்லாத ஒன்றை நபியவர்கள் போதித்திருப்பார்களேயானால் இஸ்லாம் அன்றைக்கே பொய்ப்பிக்கப்பட்டிருக்கும். இந்த அடிப்படையில் கருஞ்சீரக மருத்துவமானது நபித்தோழர்களுக்கு நடைமுறைப்படுத்த சாத்தியப்பட்டதால் ஹதீஸின் முதற்பகுதியை நபிகளார் கூறியிருப்பதற்கு வாய்ப்புள்ளது📘📘📘.
*✍✍✍எனவே, நாம் இதிலிருந்து தெளிவாக ஒன்றைப் புரிந்து கொள்ள வேண்டும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது சமுதாயத்தினருக்கு நடைமுறைப்படுத்தச் சாத்தியப்படும் என்ற அர்த்தத்தில் ஒரு போதனையைச் செய்தால் உலகமக்களில் யாருக்கு அது சாத்தியப்படாவிட்டாலும் கண்டிப்பாக, உறுதியாக, திட்டவட்டமாக அது நபித்தோழர்களுக்கு சாத்தியப்பட்டதாகவே இருக்கும். நபித்தோழர்களுக்கே சாத்தியப்படாத ஒன்றை நபியவர்கள் போதித்தார்கள் என்று எவர் கூறினாலும் அவர் பச்சைப் பொய்யைப் புளுகும் பொய்யர் என்பதில் சந்தேகமில்லை. இங்கு கருஞ்சீரகம் பற்றிய ஹதீஸின் இறுதிப்பகுதியும் இதே நிலையில் காணப்படுவதால் அதன் இறுதிப் பகுதியானது இடைச்செருகல் செய்யப்பட்ட பொய் என்று திட்டவட்டமாக அறிவிக்கிறோம்.✍✍✍*
*🌐🌐கருஞ்சீரக ஹதீஸின் கடைசிப்பகுதி சொல்வது என்ன❓🌎🌎*
📙📙📙இந்த ஹதீஸின் இறுதியில், *'من كل داء إلا السام'* என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இதன் பொருள் 'மரணத்தைத் தவிர எல்லா நோய்களுக்கும் (மருந்தாகும்)' என்பதாகும். நபித்தோழர்கள் வாழ்ந்த காலத்தில் உருவாகியிருந்த எல்லா நோய்களுக்கும் *கருஞ்சீரகத்தினால் மருத்துவம் செய்யும் முறைகளை நபித்தோழர்களில் யாராவது அறிந்திருந்தார்களா என்பதே எமது அடிப்படையான கேள்வி.* ஆயிரக்கணக்கான நபித்தோழர்கள் வேண்டாம்; ஒரேயொரு நபித்தோழராவது தனக்கு சுகம் கிடைத்தாலும் சரி; கிடைக்காவிட்டாலும் சரி; மரணத்தைத் தவிர உள்ள அத்தனை நோய்களுக்கும் கருஞ்சீரகத்தைக் கொண்டு மருத்துவம் செய்தார் என்று *ஒரேயொரு ஆதாரமாவது இருந்தால் காட்டுங்கள்* என்று கேட்கிறோம். ஆதாரத்தைக் கேட்குமாறு அல்லாஹ்வே சொல்கிறான்.📙📙📙
(111 : قُلْ هَاتُوا بُرْهَانَكُمْ إِنْ كُنْتُمْ صَادِقِينَ (البقرة - நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்களுடைய ஆதாரத்தைக் கொண்டு வாருங்கள். *(அல்குர்ஆன் 2:111)*
*✍✍✍கருஞ்சீரகத்தைக் கொண்டு மருத்துவம் செய்யும்போது சுகம் கிடைக்கலாம்; அல்லது கிடைக்காமல் போகலாம். அது அல்லாஹ்வின் நாட்டம் என்பதால் அது பிரச்சினையில்லை. ஆனால் நபிகளார் கூறியிருந்தால் ஒரேயொரு நபித்தோழராவது மரணத்தைத் தவிர அனைத்து நோய்களுக்கும் கருஞ்சீரகத்தைக் கொண்டு எப்படி மருத்துவம் செய்ய வேண்டும் என்பதைக் கண்டிப்பாகத் தெரிந்திருப்பார். தெரிந்திருந்தார் என்பதற்கான ஆதாரத்தைக் கொண்டு வர முடியாததால் இது பொய்யான செய்தி தான் என்பது தெள்ளத் தெளிவாக விளங்குகின்றது.✍✍✍*
*🌎நபிகளார் தான் செய்யாததைப் பிறருக்குப் போதிப்பார்களா❓🌎*
📗📗📗அடுத்தாக, இவை எல்லாவற்றையும் விட இன்னொரு மிக முக்கிமான அடிப்படையும் உள்ளது. அதாவது நபியவர்கள் ஒரு விஷயத்தை மக்களுக்குப் போதித்தார்கள் என்றால் அதில் எல்லோரையும் விட மிக உறுதியான நம்பிக்கை உடையவர்களாக நபியவர்களே இருப்பார்கள். தான் செய்யாததைப் பிறருக்கு ஏவக் கூடாது என்று தான் குர்ஆனும் கூறுகிறது.
(يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا لِمَ تَقُولُونَ مَا لَا تَفْعَلُونَ كَبُرَ مَقْتًا عِنْدَ اللَّهِ أَنْ تَقُولُوا مَا لَا تَفْعَلُونَ (الصف : 3,2 - நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் மிகக் கோபத்துக்குரியது📗📗📗.
*(அல்குர்ஆன்: 61: 1,2)*
*✍✍✍இதற்கான உதாரணமாக, நபிகளாரின் காலத்தில் ஏற்பட்ட உயிர்க் கொல்லி நோயான கொலரா (Cholera) என்ற நோயைக் குறிப்பிடலாம். 'அந்த நோய் ஏற்பட்ட ஊருக்கு யாரும் போகவும் வேண்டாம்; அந்த நோயுள்ள ஊரிலிருந்து யாரும் வெளியேறவும் வேண்டாம்' என்று நபிகளார் கட்டளையிடும் அளவுக்கு கொடிய நோயாக அது இருந்துள்ளது. இப்போது கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் மருந்து என்றால் எந்த மருந்தாலும் சுகப்படுத்த முடியாத நோய்களுக்கும் அது மருந்தாகும் என்றே அர்த்தம். அப்படியானால் ஏன் கருஞ்சீரகத்தால் கொலரா (Cholera) வுக்கு மருத்துவம் செய்யப்படவில்லை? கைவசம் மருந்தை வைத்துக் கொண்டே நபி (ஸல்) அவர்கள் அதைப் பயன்படுத்தும்படி கட்டளையிடாமல் தாம் சொன்னதற்கு தாமே மாறு செய்தார்கள் என்றால் அது வேண்டுமென்றே அழிவை தேடிக்கொள்ளும் காரியம் அல்லவா❓✍✍✍*
📔📔📔இங்கே இரண்டு அடிப்படை விஷயங்களுடன் இந்த ஹதீஸ் மோதுவதைக் காணலாம். அதாவது, கருஞ்சீரகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்தைக் கண்டுபிடிக்காமலேயே அதில் மருந்திருப்பதாகப் பிறருக்கு நபிகளார் போதித்தார்கள் என்றால், நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் செய்யாததை ஏன் சொல்கிறீர்கள்? நீங்கள் செய்யாததைச் சொல்வது அல்லாஹ்விடம் மிகக் கோபத்துக்குரியது. *(அல்குர்ஆன் 61:1,2)* என்ற வசனத்துக்கு இந்தச் செய்தி முரண்படுகிறது.
மேலும்,
(وَلَا تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ (الإسراء: 36 - உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! *(அல்குர்ஆன்: 17:36)* என்ற வசனத்துக்கும் முரண்படுகிறது.📔📔📔
*✍✍✍அப்படியில்லாமல், மருந்தைத் தெரிந்திருந்தார்கள். ஆனாலும் அதைப் பயன்படுத்த வேண்டிய மிக மிகக் கட்டாயத் தேவையின் போதும் அதைப்* *பயன்படுத்தாமல் விட்டுவிட்டார்கள் என்று ஒருவர் கூறினாலும் அப்போதும்,*
*(وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ (البقرة : 195 - உங்கள் கைகளால் அழிவைத் தேடிக் கொள்ளாதீர்கள் (அல்குர்ஆன்: 2:195) என்ற வசனத்துடன் முரண்படுகிறத**
*அதே போல், நபித்தோழர்கள் நோயினால் மிகவும் அவதிப்பட்டு, மரணிக்கின்ற நிலையை அடைந்தும் கூட அவர்களுக்கு கருஞ்சீரகத்தால் மருத்துவம் செய்யும் படி நபிகளார் வலியுறுத்தாமல், அதைக் கண்டும், காணாமல் இருந்தார்கள் என்றாகி விடுகின்றது. இது நபிகளாரின் இரக்கக் குணத்திற்கு மாற்றமாக உள்ளது.* *(128 : لَقَدْ جَاءَكُمْ رَسُولٌ مِنْ أَنْفُسِكُمْ عَزِيزٌ عَلَيْهِ مَا عَنِتُّمْ حَرِيصٌ عَلَيْكُمْ بِالْمُؤْمِنِينَ رَءُوفٌ رَحِيمٌ (التوبة - உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார்* . *நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்.* *(அல்குர்ஆன்: 9:28) என்ற வசனத்துக்கும் இந்தச் செய்தி முரண்படுகிறது.✍✍✍*
📓📓📓எனவே, கருஞ்சீரகத்தால் நபிகளாருக்கு மருத்துவம் செய்யத் தெரிந்திருந்தது என்று எடுத்துக் கொண்டாலும், மருத்துவம் செய்யத் தெரியாது என்று எடுத்துக் கொண்டாலும் இரண்டு விதங்களிலும் பல்வேறு குர்ஆன் வசனங்களுக்கு முரண்படுவதால் இந்த ஹதீஸின் இறுதிப் பகுதி பொய்யானது தான் என்பதில் சந்தேகமே இல்லை📓📓📓.
*🌐அல்லாஹ்வின் மீது அண்ணலாரின் அதீத நம்பிக்கை:🌎*
*✍✍✍ஒரு பொருளில் நோய் நிவாரணம் இருப்பதாக அல்லாஹ்வின் தூதர் அவர்கள் அறிந்தால், அதில் நம்மையெல்லாம் விட மிக உறுதியாக நம்பிக்கை கொள்வார்கள் என்பதற்கு பின்வரும் ஹதீஸ் ஆதாரமாக உள்ளது.*
**عَنْ أَبِى سَعِيدٍ رضي الله عنه أَنَّ رَجُلاً أَتَى النَّبِىَّ صلى الله عليه وسلم فَقَالَ: "أَخِى يَشْتَكِى بَطْنَهُ" . "فَقَالَ: "إسْقِهِ عَسَلاً " ثُمَّ أَتَى الثَّانِيَةَ فَقَالَ: " إسْقِهِ عَسَلاً " ثُمَّ أَتَاهُ الثالثة فَقَالَ: "إسْقِهِ عَسَلاً " ثم أتاه فَقَال: قد فَعَلْتُ . فَقَالَ: "صَدَقَ اللَّهُ ، وَكَذَبَ بَطْنُ أَخِيكَ ، إسْقِهِ عَسَلاً ". فَسَقَاهُ فَبَرَأَ.*
*அபூ ஸஈத் அல்குத்ரி (ரளி) அவர்கள் அறிவித்துள்ளார்கள்: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "எனது சகோதரர் வயிற்று வலியால் சிரமப்படுகின்றார்" என்று முறையிட்டதும், "அவருக்கு தேனைப் புகட்டுவீராக!" என்று நபியவர்கள் கூறினார்கள்.* *இரண்டாம் தடவையும் அவர் வந்து முறையிட மீண்டும் தேனைப் புகட்டுமாறு கூறினார்கள். மூன்றாம் தடவையும் அவர் வந்து முறையிட மீண்டும் தேனைப் புகட்டுமாறு கூறினார்கள். பிறகு (நான்காம் முறை) அவர் வந்து, "நான் செய்து பார்த்து விட்டேன்* *(ஆனால் குணமாகவில்லை)" என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உண்மை தான் சொல்கிறான். உனது சகோதரனின் வயிறு தான் பொய் சொல்கிறது, தேனைப் புகட்டுவீராக!" என்று கூறினார்கள். எனவே அவர் தேனைப் புகட்டியதும் சுகமடைந்தார்.✍✍✍*
*(நூல்: புஹாரி 5684)*
📒📒📒நபியவர்களின் இந்த உறுதித் தன்மைக்கு இறைவனின் வார்த்தைகள் மீது அவர்கள் வைத்திருந்த அளவு கடந்த நம்பிக்கையே காரணமாகும். இதோ திருமறை கூறுகின்றது:
ثُمَّ كُلِي مِن كُلِّ الثَّمَرَاتِ فَاسْلُكِي سُبُلَ رَبِّكِ ذُلُلًا ۚ يَخْرُجُ مِن بُطُونِهَا شَرَابٌ مُّخْتَلِفٌ أَلْوَانُهُ فِيهِ شِفَاءٌ لِّلنَّاسِ ۗ إِنَّ فِي ذَٰلِكَ لَآيَةً لِّقَوْمٍ يَتَفَكَّرُون
"மலைகளிலும், மரங்களிலும், மனிதர்கள் கட்டுபவற்றிலும் கூடுகளை நீ அமைத்துக் கொள்! பின்னர் ஒவ்வொரு கனிகளிலிருந்தும் சாப்பிடு! உனது இறைவனின் பாதைகளில் எளிதாகச் செல்!'' என்று உமது இறைவன் தேனீக்களுக்கு அறிவித்தான். அதன் வயிறுகளிலிருந்து மாறுபட்ட நிறங்களையுடைய பானம் வெளிப்படுகிறது. அதில் மனிதர்களுக்கு நோய் நிவாரணம் உள்ளது.📒📒📒
*(அல்குர்ஆன்: 16:69)*
*✍✍✍இவ்வசனத்திற்கு ஏற்ப திருக்குர்ஆனுக்கு ஒரு போதும் முரண்படாத நபியவர்கள் சிகிச்சை விடயத்திலும் அல்லாஹ் சொன்னது உண்மையாகவே இருக்கும் என்பதை நடைமுறையில் விளக்குகிறார்கள்✍✍✍* .
*🌐கருஞ்சீரக ஹதீஸை முன்னறிவிப்பாக சித்தரிக்கும் அறிவாளிகள்(❓ )🌎*
📚📚📚கருஞ்சீரகம் எல்லா நோய்களுக்கும் மருந்து என்றால் *நபிகளாரின் காலத்தில் இருந்த எல்லா நோய்களுக்கும் ஏன் மருந்தாக இருக்கவில்லை* என்று நாம் கேட்டால் 'பிற்காலத்தில் தான் அதை வைத்து மருந்து கண்டுபிடிக்கப்படும்' என்று குர்ஆன் மறுப்பாளர்கள் பதில் சொல்கின்றனர். முதலில் கருஞ்சீரகம் பற்றிய செய்தியில் என்ன வாசகம் இருக்கிறது என்பதே தெரியாதவர்களாகத் தான் இவர்கள் இருக்கின்றனர். *அந்தச் செய்தியில், 'பிற்காலத்தில் கண்டுபிடிக்கப்படும்'* என்று எந்த வாசகமும் இடம் பெறவில்லை. அப்படி இடம் பெற்றால் தான் அது ஒரு முன்னறிவிப்பு என்று எடுத்துக் கொள்ளப்படும். அடுத்து, எவையெல்லாம் நம்பிக்கை சார்ந்தனவாக இருக்கின்றனவோ அவை மட்டும் தாம் முன்னறிவிப்புகளாகும். உதாணமாக, மறுமையின் அடையாளங்களான *ஈஸா நபி, தஜ்ஜால், யஃஜூஜ் மஃஜூஜ் கூட்டத்தினர்* ஆகியோரது வருகை, செருப்பு வார் பேசுவது போன்றவற்றைக் குறிப்பிடலாம். இவற்றைப் பொருத்தவரையில் நபித்தோழர்கள் தாம் இவற்றைக் காண வேண்டும் என்று எந்த அவசியமும் கிடையாது. மறுமை நாள் நெருங்கும் போதுள்ள மக்கள் கண்டாலே போதுமானது. *முன்னறிவிப்பு நிறைவேறி விடும்.* ஆனால் செயல் சார்ந்த கட்டளைகளைப் பொருத்தவரை அவற்றை யாருடைய முன்னிலையில் கூறப்படுகின்றதோ அந்த நபித்தோழர்களால் நடைமுறைப் படுத்தத் தகுந்ததாக அது இருக்க வேண்டும். *கருஞ்சீரகம் பற்றிய செய்தி என்ன கூறுகிறது❓* அதில் மருந்து இருப்பதாக கூறுகிறது. மருந்து என்பது வெறுமனே நம்பி ஈமான் கொள்வதற்கா❓ அல்லது பயன் படுத்தி நிவாரணம் பெறுவதற்க❓📚📚📚
*✍✍✍நீங்கள் ஒரு மருத்துவரிடம் செல்கிறீர்கள். அவர், "உங்கள் நோய்க்கு இதை மருந்தாகப் பயன்படுத்துங்கள்" என்று கூறி மருந்தைத் தரவேண்டும். அது தான் முறை. அதை விட்டுவிட்டு அவர் உங்களிடம் ஒரு பொருளைக் கொடுத்து, "இனிமேல் தான் இதை வைத்து உங்கள் நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க வேண்டும். இந்த நம்பிக்கையோடு காத்திருங்கள்" என்று சொன்னால் அது எப்படி கேலிக்கூத்தான வைத்திய முறையோ அதே போல் தான் கருஞ்சீரகத்தை வைத்து இனிமேல் தான் மருந்து கண்டுபிடிக்கப்படும் என்று சொல்வதும். மருந்தை இனிமேல் தான் கண்டுபிடிக்க வேண்டுமென்றால் அதற்குப் பெயர் வைத்தியமாக இருக்குமா❓✍✍✍*
*🌐🌐பிற்காலத்தில் தோன்றவிருக்கும் புதிய நோய்களுக்குத் தான் நிவாரணமா❓🌎🌎*
🌈🌈🌈கருஞ்சீரகத்தைக் கொண்டு எல்லா நோய்களுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றால் அது பிற்காலத்தில் புதிது புதிதாகத் தோன்றவிருக்கும் நோய்களைத் தான் குறிக்கும் என்று யாராவது வாதிட்டால் அது முன் சொன்னதை விடக் கோமாளிக் கூத்தாகவே இருக்கிறது. அதாவது புதிது புதிதாக நோய்கள் பல தோன்றி இதுவரை எந்த மருந்துகளுமே அதற்கு இல்லாத நிலையில் பல்லாயிரக் கணக்கானோர் நாளுக்கு நாள் மரணத்தைத் தழுவிக் கொண்டே தான் இருக்கிறார்கள். இவர்களுக்கெல்லாம் ஏன் கருஞ்சீரகம் இதுவரை மருந்தாக பயன்பட்டதில்லை? கேட்டால், 'இனிமேல் தான் மருந்து கண்டுபிடிக்கப்படும் என்று நம்பவேண்டும்' என்று வாதம் வேறு. இப்படி இன்றைக்கு வாதிப்பவர்களின் பரம்பரையினர் கூட இதே நம்பிக்கையோடு குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு மரணத்தைச் சந்திக்கப் போவது உறுதி. இறுதியில் இவர்கள் யாவரும் போலி நம்பிக்கையோடு காலம் கழித்தது தான் மிச்சமே தவிர எல்லா நோய்களுக்கும் மருந்து கண்டுபிடிக்கப்படப் போவதில்லை.🌈🌈🌈
*✍✍✍இதை நாம் வேண்டுமென்று மனமுரண்டாகச் சொல்லாமல் காரண காரியத்துடன் தான் சொல்கிறோம். எல்லா நோய்களுக்கும் மருந்தாக அமைந்து இந்தச் செய்தியின் உண்மைத் தன்மை நிரூபணமாகும் என்றிருந்தால் முதன்முதலில் நபித்தோழர்களின் காலத்தில் தான் நிரூபணமாகியிருக்க வேண்டும். ஆனால் அன்றைக்கே இது பொய்யாகி விட்டது. இதனால் தான் நாம் இந்த ஹதீஸ் பொய்யானது; நபிகளார் பெயரில் புனையப்பட்டது என்கிறோம்.✍✍✍*
*🌐நோய் நிவாரணம் தருவது அல்லாஹ்வின் நாட்டமே🌎*
⛱⛱⛱"அல்லாஹ் நாடினால் தான் கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் மருந்தாகும்" என்பது சிலரின் வாதம். அப்படியானால் எல்லா நோய்களுக்கும் அது மருந்தாகுமாறு இதுவரை ஏன் அல்லாஹ் நாடவில்லை என்பதைச் சிந்திக்கக்க மறுப்பது ஏன்? ஒரு வாதத்துக்கு இது உண்மையான செய்தியாக இருந்தால் இதைக் கூறிய நபியவர்களுக்கோ, அதைக் கேட்டு அறிவித்த ஸஹாபாக்களுக்கோ அல்லாஹ் நாடாமல் விட்டது ஏன் என்றும் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர். அல்லாஹ்வின் மீது தான் நம்பிக்கை வைக்கப்பட வேண்டும். அதே நேரம் பிழையான அடிப்படையில் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பதும் கூடாது. தலை வலிக்கு ஒரு பிடி மண்ணைத் தின்று விட்டு அல்லாஹ் நாடினால் சுகம் கிடைக்கும் என்று எவனாது நம்பினால் அது எப்படி கிறுக்குத் தனமான நம்பிக்கையோ அதே போல் தான் எல்லா நோய்க்கும் கருஞ்சீரகம் மருந்தாக இல்லை என்று தெரிந்து கொண்டே அல்லாஹ் நாடினால் அது எல்லா நோய்க்கும் மருந்து என்று நம்புவதும். இங்கே அல்லாஹ் நாடினால் தான் நிவாரணம் கிடைக்கும் என்பதில் யாருக்கும் பிரச்சினையே இல்லை. மாறாக கருஞ்சீரகம் எல்லா நோய்க்கும் மருந்தா இல்லையா என்பதில் தான் பிரச்சினையே. இதைப் புரிந்து கொண்டால் மேற்படி கேள்வியைக் கேட்க மாட்டார்கள்.⛱⛱⛱
*🌐ஆராய்ச்சி முற்றுப் பெறாமலேயே இதை மறுக்கிறோமா❓🌎*
*✍✍✍சிலரின் வாதம் என்னவென்றால் இன்னும் கருஞ்சீரகம் பற்றிய ஆராய்ச்சிகள் அதிகரிக்கும் போது எதிர்காலத்தில் அதைக் கொண்டு மருந்துகள் கண்டுபிடிக்கப்படலாம் என்பதாகும். எல்லா நோய்க்கும் மருந்து என்பது நபிகளாரின் காலத்திலும் நிரூபணமாகவில்லை; அதற்கடுத்த எந்த நூற்றாண்டிலும் நிரூபணமாகவில்லை; இதுவரையிலும் நிரூபணமாகவே இல்லை என்று தெளிவாகத் தெரியும் போது இதில் எதற்கு இந்த வீணான வரட்டு நம்பிக்கை என்று நாம் கேட்கிறோம். ஆய்வு முற்றுப் பெறுவது என்றால் மறுமை நாள் வரைக்கும் நோய்கள் புதிது புதிதாக வந்து கொண்டே தான் இருக்கும். நாம் அறியாத நோய்களெல்லாம் இப்போது வந்துள்ளதைப் பார்க்கிறோம். அவை எல்லாவற்றுக்கும் கருஞ்சீரகம் இன்றுவரை மருந்தாக இல்லை என்பதிலிருந்தே இது நபிகளார் பெயரில் புனையப்பட்ட பொய்யான ஹதீஸ் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி அறியலாம்.✍✍✍*
*🌐🌐மறுமை நாள்வரை கருஞ்சீரகம் மருந்தாக ஆக முடியாத நோய்கள்🌎🌎*
🕋🕋🕋“எல்லா நோய்களுக்கும்” என்பதற்கு என்ன பொருள் என்றே தெரியாமல் சிலர் இருக்கிறார்கள். நோய்களில் பல விதங்கள் உண்டு. அவற்றில் சில நோய்கள் தலைவலி, காய்ச்சல் போன்று உடல் நிலையில் தோன்றும் சில மாற்றங்களாகும். இப்படியான நோய்களை மருந்துகளால் மட்டுமே சுகமாக்கி விடலாம். இன்னும் சில நோய்களால் உறுப்புகளே முற்றாக அழிந்து போகும் நிலையும் ஏற்படும். எந்த மருந்துகளாலும் அந்த உறுப்புகளை மீண்டும் முளைக்கச் செய்ய முடியாது. பிளாஸ்டிக்கில் அல்லது ரப்பரில் தான் தயாரித்து வைக்க வேண்டும். நாம் இங்கே அங்கங்கள் இழப்பு என்று கூறுவது விபத்துக்களையல்ல என்பதைப் புரிந்துக் கொள்ள வேண்டும். விபத்துக்களை நோய் என்று நாம் கூற மாட்டோம். நாம் கூறும் நோய்களுக்கு உதாரணமாக பற்களில் அரிப்பு ஏற்பட்டு,ஓட்டைகள் உண்டாகி முற்றாக பற்கள் விழுவதை எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறு பற்கள் விழுந்தவர்களுக்கு சிகிச்சை என்னவென்றால் செயற்கையான பற்களைப் பொருத்துவது தானே தவிர புதிய பற்களை முளைக்கச் செய்ய முடியாது. கருஞ்சீரகத்தில் எல்லா நோய்களுக்கும் மருந்து உண்டு என்றால் கருஞ்சீரகத்தால் பற்களைப் புதிதாக முளைக்கச் செய்ய முடியுமா? பற்கள் விழுந்தால் விழுந்தது தான். பிறகு முளைக்காது. அல்லது பல்லைப் போன்று கருஞ்சீரகத்தில் செய்து வைக்க முடியுமா? முடியவே முடியாது.🕋🕋🕋
*✍✍✍அதே போல் ஒருவருக்கு சர்க்கரை நோய் காரணமாக இரு கால்களும் அழுகி விட்டன என்று வைத்துக் கொள்வோம். இப்போது இவருக்கு சிகிச்சை அளித்து முழுமையாக நடக்க வைக்க வேண்டுமானால் கால்களைப் போன்று பிளாஸ்டிக்கில் செய்து வைத்துத் தான் நடக்க வைக்க முடியும்.* *இவருக்குச் கருஞ்சீரகத்தால் புதிய கால்களை உருவாக்க முடியுமா❓ அல்லது கால்கள் போன்று கருஞ்சீரகத்தில் செய்து வைக்கத் தான் முடியுமா❓ இவருக்கான கருஞ்சீரக நிவாரணம் என்ன❓ மறுமை நாள் வரை* *இப்படிப்பட்டவர்களுக்கு கருஞ்சீரகமானது இழந்த உறுப்புக்களை மீட்டித் தராது என்பது உறுதியாகத் தெரிகிறது. பிறகு எப்படி எல்லா நோய்களுக்கும் நிவாரணம் என்று நம்புவது❓ இந்தப்* *பொய்யான செய்தியை நம்புவது கண்களைத் திறந்துக் கொண்டே குழியில் விழுவதற்குச் சமம். இன்னும் நோய்கள் என்பதற்குள் மனதில் உருவாகும் மனநோய்களும் அடங்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.✍✍✍*
*🌐🌐🌐முதுமையைத் தடுக்கும் நிவாரணம் கருஞ்சீரகத்தில் இருக்கின்றதா❓🌎🌎*
📕📕📕இவ்வாறு நாம் கேட்டால் முதுமை என்பது நோயா என்று நீங்கள் கேட்பீர்கள். அதற்கு நமது பதில் என்னவென்றால் கருஞ்சீரகம் பற்றிய ஹதீஸில் நோயைப் பற்றி மட்டும் சொல்லப்படவில்லையே? மரணத்தைப் பற்றியும் தானே சொல்லப்பட்டுள்ளது❓ அப்படியானால் மரணம் என்ன நோயா என்ற கேள்விக்கு பதில் சொல்ல வேண்டும். நோய்களில் இதற்கு மட்டுமே விதிவிலக்கு என்று இங்கே மரணம் தான் கூறப்படுகிறது. மரணம் நோயாக இல்லாதிருந்தும் அது இங்கே குறிப்பிடப்படும் போது ஏன் முதுமையை நாம் கேட்கக் கூடாது என்பதில் உள்ள நியாயத்தை உணர வேண்டும். ஆகவே கருஞ்சீரகம் முதுமையையும் தடுத்து நிறுத்தும் நிவாரணமா என்பதே நம் கேள்வியாகும்.📕📕📕
*🏓🏓🏓எமது நிலைப்பாடு🏓🏓🏓*
*✍✍✍இறுதியாக, கருஞ்சீரகம் பற்றிய ஹதீஸின் முதற்பகுதியை நாம் மறுக்கவே இல்லை என்பதை மீண்டும் தெரிவித்துக் கொள்கிறோம். காரணம் அதில் மருந்துண்டு என்று தான் வருகிறது. கருஞ்சீரகம் மருந்தே இல்லை என்று நாங்கள் ஒரு போதும் சொன்னதில்லை. மாறாக மரணத்தைத் தவிர எல்லா நோய்களுக்கும் மருந்துண்டு என்று அந்த ஹதீஸின் இறுதியில் வரக்கூடிய வாசகம் மட்டுமே வேண்டுமென்றோ, தவறுதலாகவோ நபிகளார் பெயரில் பொய்யாகப் புனையப்பட்ட இடைச் செருகல் என்று ஆதாரங்களுடன் நிரூபித்துள்ளோம்✍✍✍*
அல்லாஹுவே மிகவும் அறிந்தவன்
*ஜஸாகல்லாஹ் ஹைரன்*
No comments:
Post a Comment