*🍇🍇🍇மீள் பதிவு🍇🍇🍇*
*🌐🌐🌐ஹஜ் உம்ரா சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*
*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👈👈👈*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*
*👉👉👉தொடர் பாகம் 11👈👈👈*
*👉தலைப்பு👇*
*🕋🕋🕋ருக்னுல் யமானியை தொட்டு முத்தமிட வேண்டுமா❓🕋🕋🕋*
“ *✍✍✍ருக்னுல் யமானியை முத்தமிடக்கூடாது; கையால் தொட மட்டுமே செய்ய வேண்டும்’ என்பது சரியா❓ “ருக்னுல் யமானி என்ற மூலையையும் தொட்டு முத்தமிட வேண்டும் என்பது சரியா❓*
*நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், நான்கு மூலைகளில் “யமானி’ எனப்படும் இரண்டு மூலைகளைத் தவிர மற்ற இரண்டு மூலைகளைத் தொட்டு நான் பார்த்ததில்லை.✍✍✍*
*அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)*
*நூல்: புகாரி 166, 1609*
📕📕📕இந்த ஹதீஸில் முத்தமிட்டதாகக் கூறப்படவில்லை. தொடுவது மட்டும் தான் கூறப்படுகின்றது.
ருக்னுல் யமானியை முத்தமிட்டதாக நாம் தேடிய வரையில் எந்த ஹதீசும் இல்லை. ருக்னுல் யமானியை கையால் தொடுவது தான் நபிவழியாகும்.📕📕📕
*🕋🕋🕋ருக்னுல் யமானிக்கு வரும்போது அதைக் கையால் தொட முடியவில்லை என்றால் சைகை செய்து கொள்ளலாமா❓🕋🕋🕋*
*✍✍✍ருக்னுல் யமானிக்கு வரும்போது அதைக் கையால் தொட முடியவில்லை என்றால் சைகை செய்து கொள்ளலாமா❓ பதில் ருக்னுல் யமானியை கையால் தொடுவது நபிவழியாகும். சைகை செய்வது தொடர்பாக ஹதீஸ்களில் காண முடியவில்லை.✍✍✍*
*🕋🕋🕋ஸயீக்கு முன்னர் மீண்டும் ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிடுதல்..❓🕋🕋🕋*
📘📘📘தவாஃபுக்கு பிறகு மகாமு இப்ராஹீமில் தொழுதுவிட்டு, ஸயீ செய்வதற்கு முன்னர் மீண்டும் வந்து ஹஜ்ருல் அஸ்வதை தொட்டு முத்தமிடச் செல்லும் போது அதைத் தொட இயலாவிட்டால், அப்போதும் சைகை செய்து கொள்ளலாமா❓
*பதில்*
அந்த சமயத்தில் சைகை செய்வது பற்றி ஹதீஸில் கூறப்படவில்லை.📘📘📘
*🕋🕋🕋தவாஃபுக்கு பிறகு மகாமு இப்ராஹீமில் தொழுதுவிட்டு 🤲🤲🤲துஆ செய்வது சுன்னத்தா❓🕋🕋🕋*
*✍✍✍தவாஃபுக்கு பிறகு “மகாமு இப்ராஹீமி’ல் தொழுதுவிட்டு துஆ செய்வது சுன்னத்தா❓ அல்லது துஆ செய்யாமல் நேரடியாக ஸயீ செய்ய செல்ல வேண்டுமா❓ “மகாமு இப்ராஹீமி’ல் எப்போது தொழுதாலும் துஆ செய்யவேண்டுமா❓*
*மகாமு இப்ராஹீமில் நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்ததாக ஹதீஸ் எதுவும் காணப்படவில்லை. முஸ்லிம் (2137) அறிவிப்பவின்படி, அங்கு தொழுதுவிட்டு ஜம்ஜம் நீரைப் பருகுதல், தலைக்கு ஊற்றுதல், ஹஜ்ருல் அஸ்வதை முத்தமிடுதல் தவிர்த்து வேறெதுவும் வரவில்லை. எனவே இவற்றை முடித்துவிட்டு ஸஃபா மர்வாவில் ஸயீ செய்யச் செல்ல வேண்டும்.✍✍✍*
*🕋🕋🕋ஜம்ஜம் நீரை அருந்தி, தலையிலும் ஊற்றிக் கொள்வது சுன்னத்தா❓🕋🕋🕋*
📙📙📙மகாமு இப்ராஹீமில் 2 ரக்அத் தொழுகைக்கு பிறகு ஜம்ஜம் நீரை அருந்தி, தலையிலும் ஊற்றிக் கொள்வது சுன்னத்தா❓ பெண்கள் தலை முக்காட்டுக்கு மேல் சிறிது ஊற்றிக் கொள்ளலாமா❓
நேரடியாகவோ, அல்லது முக்காடு வழியாகவோ தலையில் ஊற்றிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் ஜம்ஜம் நீரை நோக்கிச் சென்று அதைப் பருகினார்கள். அதைத் தமது தலையிலும் ஊற்றிக் கொண்டார்கள்.📙📙📙
*(நூல்: அஹ்மத் 14707)*
*🕋🕋ஜம்ஜம் நீர் அருந்தும் போது துஆ செய்வது சுன்னத்தா❓🕋🕋*
*✍✍✍ஜம்ஜம் நீர் அருந்தும் முன்போ அல்லது அருந்தி முடித்த பிறகோ துஆ செய்வது சுன்னத்தா❓ பிரத்யேக துஆ எதுவும் உள்ளதா❓*
*பதில்*
*இதற்கென எந்த பிரத்யேக துஆவும் இல்லை. மேலும் அந்த சமயத்தில் துஆச் செய்ததாகவும் நபிவழியில் ஆதாரம் இல்லை.✍✍✍*
*🌐🌐அப்தஉ பிமா பதஅல்லாஹு பிஹி…🌎🌎*
📗📗📗ஸஃபா, மர்வாவில் ஸயீ ஆரம்பிக்கும்போது, *“இன்னஸ் ஸஃபா வல்மர்வத்த மின் ஷஆரில்லாஹ்”* என்ற வசனத்தை ஓதிய பிறகு, “அல்லாஹ் முதலில் ஸஃபாவைச் சொல்லியிருப்பதால் ஸஃபாவைக் கொண்டு துவங்குகின்றேன்” என்று கூறுவதன் அரபி வாசகத்தைத் தரவும்.
பதில்
*அப்தஉ பிமா பதஅல்லாஹு பிஹி📗📗📗*
*🌎🌎🌎ஸஃபா மர்வாவில் கேட் போடப்பட்டுள்ளதே!🌎🌎🌎*
*✍✍✍ஸஃபா மர்வா மீது தற்போது ஏறமுடியாத வண்ணம் கேட் போட்டுள்ளதாகச் சொல்கிறார்கள். அப்படியானால் அதன் அடிவாரத்திலேயே நின்று (சுன்னத்தாக சொல்லப்பட்டவற்றை) கிப்லாவை முன்னோக்கி ஓதிக் கொள்ளலாமா❓ 3 முறை ஓதும்போது அவற்றுக்கிடையே நாம் கேட்கும் விருப்ப துஆவை எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் நீட்டித்து கேட்கலாமா❓*
*பதில்*
*ஸஃபா மர்வாவின் அடிவாரத்திலேயே நின்று ஓதிக் கொள்ளலாம். எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் விருப்ப துஆ கேட்கலாம்.✍✍✍*
*🕋🕋🕋ஸஃபா மர்வாவுக்கிடையில் எப்படி ஓட வேண்டும்❓🕋🕋🕋*
📒📒📒ஸஃபா மர்வாவுக்கிடையில் உள்ள முதல் பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்திலிருந்து மறு பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடம் வரை ஆண்கள் மட்டும் சிறிது வேகமாக ஓடும்போது தோள்களை லேசாக குலுக்கவேண்டும் என்பது சரியா❓ சரியென்றால் எவ்வாறு குலுக்கவேண்டும்❓
*பதில்*
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மர்வாவில் இறங்கி, பள்ளத்தாக்கின் நடுப் பகுதியில் கால் பதித்தபோது, அங்கிருந்து (தோள்களைக் குலுக்கியபடி) ஓடலானார்கள். பள்ளத்தாக்கின் நடுப் பகுதியைத் தாண்டியதும் (சாதாரணமாக) நடக்கலானார்கள். ஸஃபாவில் செய்ததைப் போன்றே மர்வாவிலும் செய்தார்கள். *(நூல்: முஸ்லிம் 2137)*
தோள்களைக் குலுக்க வேண்டும் என்றால் சற்று விரைந்து நடக்க வேண்டும் என்பது தான் அதன் பொருள். மற்றபடி பெண்களுக்கென்று இதில் தனிச் சட்டம் இல்லை📒📒📒.
*🌐🌐🌐பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்தில் ஓத வேண்டிய துஆ என்ன🌐🌐🌐*
*✍✍✍பச்சை விளக்கு பொருத்தப்பட்ட இடத்தில் ஆண்களும், பெண்களும் ‘ரப்பிக்ஃபிர் வர்ஹம், வதாவஜு அம்மா தஃலமு, இன்னக அன்தல் அஅஜ்ஜுல் அக்ரம்’ என்ற துஆ ஓதவேண்டும் என்பது ஆதாரமானதா❓*
*பதில்*
*இல்லை✍✍✍* .
*🌎🌎🌎உபரி தவாஃபை போன்று உபரி சயீ மட்டும் செய்ய ஆதாரம் உள்ளதா🌎🌎🌎*
📓📓📓உம்ரா மற்றும், ஹஜ் ஆகிய வணக்கங்களில் சயீவும் ஒன்று. எனினும், நாம் பார்த்த வரை, உபரியாக சயீ மட்டும் செய்ய எந்த ஆதாரமும் ஹதீஸ்களில் இல்லை.📓📓📓
*🕋🕋🕋சயீ செய்யும்போது என்ன ஓதுவது❓🕋🕋🕋*
*✍✍✍சயீ செய்யும்போது ஸஃபா, மர்வாவில் ஓதும் திக்ரு, துஆக்கள் அல்லாமல் நடந்துக் கொண்டிருக்கும்போதே ஓதுவதற்கென பிரத்யேகமாக எதுவுமுள்ளதா❓*
*பதில்*
*நபி (ஸல்) அவர்கள் ஸயீயின் போது எந்த திக்ரையும் கற்றுத் தரவில்லை. நபிவழி என்றில்லாமல் சாதாரணமாக ஏதேனும் திக்ருகளை ஓதிக் கொண்டு சென்றால் தவறில்லை.✍✍✍*
*🌐🌐🌐முடியைக் குறைப்பதா❓ மழிப்பதா❓🌐🌐🌐*
*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம் 12*
No comments:
Post a Comment