பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, August 5, 2019

ஹஜ் உம்ரா - 12

*🍇🍇🍇மீள் பதிவு🍇🍇🍇*

*🌐🌐🌐ஹஜ் உம்ரா சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*

*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு👈👈👈*

*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*

*👉👉👉தொடர் பாகம் 12👈👈👈*

     *👉தலைப்பு👇*

*🌐🌐🌐முடியைக் குறைப்பதா❓ மழிப்பதா❓🌐🌐🌐*

*✍✍✍உம்ராவை முடிக்கும்போது சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளவேண்டும் என்பதில் ஆண்களுக்கு தலையின் ஏதாவது ஒரு பக்கத்தில் மட்டும் சிறிது முடியைக் குறைத்துக் கொள்ளலாமா❓ தலை முழுதுமே ஏகத்துக்கும் சிறிது குறைக்கவேண்டுமா❓* *ஹஜ் அல்லாத காலங்களில் உம்ரா செய்பவர்களும், ஹஜ் காலத்தில் ஹஜ்ஜை மட்டும் நிறைவேற்றுபவர்களும் மழிப்பது தான் சிறந்தது.*
*இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:*
*நபி (ஸல்) அவர்கள் தமது ஹஜ்ஜின்போது தலையை மழித்தார்கள். அவர்கள், “இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” எனக் கூறியதும் தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்” என்றார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், “இறைவா! தலையை மழித்துக்கொள்பவர்களுக்கு நீ கருணை புரிவாயாக!” எனப் பிரார்த்தித்தார்கள். உடனே தோழர்கள் “அல்லாஹ்வின் தூதரே! முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும்….” என்றனர். நபி (ஸல்) அவர்கள் “முடியைக் குறைத்துக்கொள்பவர்களுக்கும் (கருணை புரிவாயாக!)” என்று கூறினார்கள்.✍✍✍*

*நூல்: புகாரி 1727*

📕📕📕தமத்துஃ, கிரான் முறையில் ஹஜ் செய்பவர்கள் முதலில் உம்ராவை நிறைவேற்ற வேண்டும். அப்போது அவர்கள் முடியைக் குறைப்பது சுன்னத்தாகும். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.
மக்கள் அனைவரும் ஹஜ்ஜுக்காகவே இஹ்ராம் கட்டியிருந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களை நோக்கி “நீங்கள் தவாஃபையும், ஸஃபா, மர்வாவிற்கு மத்தியில் ஓடுவதையும் நிறைவேற்றிவிட்டு, முடியைக் குறைத்து இஹ்ராமிலிருந்து விடுபட்டு (மக்காவில்) தங்கிக்கொள்ளுங்கள். பிறை எட்டு அன்று ஹஜ்ýக்காக இஹ்ராம் கட்டி, இதற்கு முன்னால் செய்ததை தமத்துஉ (உம்ரா) ஆக ஆக்கிக் கொள்ளுங்கள்” என்றார்கள்.📕📕📕

*(நூல்: புகாரி 1568)*

*✍✍✍இதன் பின்னர் ஹஜ்ஜை முடித்ததும் மேற்கண்ட 1727 ஹதீஸின் அடிப்படையில் முழுமையாக மழித்துக் கொள்ள வேண்டும்.*
*அல்லாஹ் தனது தூதருக்கு (அவர் கண்ட) கனவை உண்மையாக்கி விட்டான். (எனவே) அல்லாஹ் நாடினால் நீங்கள் பாதுகாப்பாகவும், உங்கள் தலைகளை மழித்தும், தலை முடியைக் குறைத்தும், அஞ்சாமலும் மஸ்ஜிதுல் ஹராமில் நுழைவீர்கள். நீங்கள் அறியாததை அவன் அறிவான். இது அல்லாத சமீபத்திய வெற்றியையும் அவன் ஏற்படுத்தி விட்டான்.✍✍✍*

*அல்குர்ஆன் 48:27*

📘📘📘முடியைக் குறைத்தல் என்று தான் திருக்குர்ஆன் வசனத்திலும், ஹதீஸிலும் சொல்லப்படுகின்றது. முடியைக் குறைத்தல் என்றால், ஆண்களைப் பொறுத்த வரை முடி வெட்டும் போது எப்படிக் குறைப்பார்களோ அதுபோன்று குறைத்துக் கொள்ளலாம்.
பெண்களுக்கு மழித்தல் கிடையாது; முடியைக் குறைத்தல் மட்டுமே உண்டு என்று நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுச் சொல்லியிருப்பதால் சிறிதளவு கத்தரித்துக் கொள்ளுதல் போதுமானது.
தலையை மழித்துக் கொள்வது பெண்களுக்குக் கிடையாது. (சிறிதளவு முடியைக்) குறைத்துக் கொள்வதே அவர்களுக்கு உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.📘📘📘

*நூல்: அபூதாவூத் 1694*

*🌐🌐முடியை உடனே குறைக்க வேண்டுமா❓🌐🌐*

*✍✍✍ஹரமுக்குள் கத்தரிக்கோல் போன்றவை அனுமதிக்கமாட்டார்கள் என்பதால் ரூமுக்கு வந்தவுடன் முடி குறைத்துக் கொள்ளலாமா❓ உடனே தான் குறைக்க வேண்டுமா❓*  *பதில்*
*உடனே குறைத்து விட்டால் இஹ்ராமை விட்டு வெளியே வந்து விடலாம். இல்லையேல் இஹ்ராமிலிருந்து வெளியேறத் தாமதமாகும்.✍✍✍*

*🧕🧕🧕பெண்கள் எவ்வளவு முடியை வெட்டுவது❓🧕🧕🧕*

📙📙📙பெண்கள் இஹ்ராமை களையும் முன், ஒரு விரல் நுனியளவு மட்டுமே முடியை வெட்ட வேண்டும் என்று அளவு சொல்கிறார்களே, இது சரியா❓
*பதில்*
குறைத்துக் கொள்ள வேண்டும் என்று மட்டுமே ஹதீஸில் வருகின்றதே தவிர எவ்வளவு குறைக்க வேண்டும் என்று வரவில்லை.📙📙📙

*🌎🌎இமாம் எப்போது குத்பா நிகழ்த்தவேண்டும்❓🌎🌎*

*✍✍✍பிறை 7ல் லுஹருக்குப் பின் இமாம் குத்பா நிகழ்த்தவேண்டுமா? ஏற்கனவே சென்று வந்தவர்களிடம் இதுபற்றி விசாரித்ததில் அங்கு அவ்வாறு நடத்தப்படுவதில்லை என்று சொல்கிறார்கள்.*
*பிறை 7ல் இமாம் உரை நிகழ்த்த வேண்டும் என்று இல்லை. பிறை 9ல் அரஃபாவில் இமாம் உரை நிகழ்த்த வேண்டும்.*
*சூரியன் உச்சி சாய்ந்ததும் “கஸ்வா’ எனும் தமது ஒட்டகத்தில் (சேணம் பூட்டுமாறு) உத்தரவிட்டார்கள். சேணம் பூட்டப்பெற்றதும் (“உரனா’) பள்ளத்தாக்கின் மத்திய பகுதிக்கு வந்து மக்களுக்கு உரை நிகழ்த்தினார்கள்.✍✍✍*

*(நூல்: முஸ்லிம் 2137)*

*🏓🏓🏓8க்கு பதிலாக, மினாவிற்கு 7ஆம் நாளே போகலாமா❓🏓🏓🏓*

📗📗📗எட்டாம் நாள் காலை ஃபஜ்ரு தொழுதுவிட்டு குளித்து இஹ்ராம் அணிந்துக் கொண்டு, லுஹரை மினாவில் தொழுவது போன்ற நேரத்தில் புறப்பட்டால் போதுமா❓ முற்கூட்டியே செல்லவேண்டுமா❓
இங்கு சில குழுவினர் 7ஆம் நாள் மாலை இஷாவுக்குப் பின்னர் எல்லோரையும் அழைத்துக் கொண்டு மினாவுக்குப் புறப்படுகிறார்கள். நபி (ஸல்) அவர்கள் 8ஆம் நாள் லுஹர், அஸர், மஃரிப், இஷா மற்றும் மறுநாள் ஃபஜ்ரு ஆகியவற்றை மினாவில் தொழுகிறார்கள். அப்படியானால் 8ஆம் நாளின் ஃபஜ்ரை மக்காவில்தானே தொழுதிருப்பார்கள்❓ நாம் அந்தக் குழுவினருடன் சேராமல் தனியாகச் செல்ல வாய்ப்பு இல்லாத பட்சத்தில், நாமும் 7ஆம் நாள் மாலை இஷாவுக்குப் பின் அவர்களோடு சேர்ந்து சென்றால் தவறாகுமா❓
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் ஏறிச் சென்று (மினாவில்) லுஹ்ர், அஸ்ர், மஃக்ரிப், இஷா, ஃபஜ்ர் ஆகிய (ஐவேளைத்) தொழுகைகளைத் தொழுதார்கள். ஃபஜ்ர் தொழுதுவிட்டுச் சூரியன் உதயமாகும் வரை சிறிது நேரம் அங்கேயே தங்கினார்கள்📗📗📗.

*(நூல்: முஸ்லிம் 2137)*

*👉👉👉நபி (ஸல்) அவர்களை இந்த விஷயத்தில் அப்படியே பின்பற்ற வேண்டும். லுஹரை மினாவில் தொழும் வகையில் புறப்பட வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்தால் முன் பின்னாகப் புறப்படுவது நிர்ப்பந்தம் என்ற அடிப்படையில் தவறில்லை.👈👈👈*

*🌐🌎இரவு மினாவில் திக்ரு போன்றவைகளில் ஈடுபடுவது சுன்னத்தா❓🌐🌎*

*✍✍✍அரஃபாவுக்கு முந்திய அன்று (8ஆம் நாள் முடிந்த) இரவு மினாவில் துஆ, திக்ரு போன்றவைகளில் ஈடுபடுவது சுன்னத்தா? தூங்கி விடுவது தான் சுன்னத்தா❓*
*பதில்*
*மினாவில் துஆ, திக்ரு போன்றவை செய்ததாக எந்த ஹதீசும் இல்லை. எனவே சுன்னத்தான திக்ரு, துஆ போன்றவை இல்லை.*
*எனினும், இந்த நேரத்தில் இன்ன திக்ரு ஓத வேண்டும் என்று நபியவர்கள் காட்டித்தந்த இடங்களைத் தவிர,  ”சுப்ஹானல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ்” போன்ற பொதுவான திக்ருகளை எந்த நேரத்திலும் சொல்லலாம். துஆவும் செய்யலாம். தடையில்லை✍✍✍.*

*🌐🌐🌐தக்பீர் எப்பது கூறுவது❓🌎🌎🌎*

📒📒📒மினாவிலிருந்து அரஃபாவுக்குச் செல்லும் வழியில் தல்பியா கூறிக்கொண்டும், தக்பீர் கூறிக் கொண்டும் செல்லலாம்❓ இதில் ‘தக்பீர்’ என்பது ‘அல்லாஹு அக்பர்’ என்பது மட்டுமா❓ மற்றவர்கள் சொல்வதுபோல் கூடுதல் சிறப்பு வார்த்தைகள் எதுவும் ஹதீஸ்களில் உள்ளதா❓முஹம்மத் பின் அபீபக்ர் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நாங்கள் மினாவிலிருந்து அரஃபா நோக்கிப் போய்க்கொண்டிருந்தபோது நான் அனஸ் (ரலி) அவர்கüடம் தல்பியாச் சொல்வது குறித்து, “நீங்கள் (மினாவிலிருந்து அரஃபா போகும்போது) நபி (ஸல்) அவர்களுடன் எவ்வாறு செயல்பட்டு வந்தீர்கள்?” என்று கேட்டேன். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள், “தல்பியாச் சொல்பவர் தல்பியாச் சொல்வார். அது (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை; தக்பீர் சொல்பவர் தக்பீர் சொல்வார். அதுவும் (நபியவர்களால்) ஆட்சேபிக்கப்படவில்லை” என்று பதிலüத்தார்கள்.📒📒📒

*நூல்: புகாரி 970*

*👉👉👉தக்பீர் என்றால் அல்லாஹு அக்பர் என்று கூறுவது தான்.👈👈👈*

*🏵🏵🏵அரஃபாவில் லுஹர் அஸரை, ஜம்வு தக்தீமாக்குவது சரியா❓🏵🏵🏵*

*✍✍✍அரஃபாவில் லுஹர், அஸ்ரை கஸ்ரு – ஜம்உ செய்யும்போது, அதை ஜம்உ தக்தீமாக (லுஹருடைய வக்திலேயே) தொழவேண்டும். இது சரிதானே❓*
*தொழுகை அறிவிப்பும் இகாமத்தும் சொல்லச் செய்து, லுஹ்ர் தொழுகை தொழுவித்தார்கள். பிறகு இகாமத் மட்டும் சொல்லச் செய்து, அஸ்ர் தொழுகையும் தொழுவித்தார்கள். அவ்விரண்டுக்குமிடையே (கூடுதலாக) வேறெதுவும் அவர்கள் தொழவில்லை.✍✍✍*

*(நூல்: முஸ்லிம் 2137)*

*👉👉👉ஜம்வு தக்தீமாக, லுஹர் நேரத்தில் லுஹரையும் அஸரையும் சேர்த்துத் தொழ வேண்டும் என்பது சரியானது தான்.👈👈👈*

*🕋🕋🕋தவாஃபின் போது தேவைப்பட்டால் பேசலாமா❓🕋🕋🕋*

📓📓📓தவாஃபின் போது தேவைப்பட்டால் பேசலாமா❓
அவசியம் என்றால் பேசலாம்
தவாஃப் என்பது தொழுகை போன்றதாக இருப்பதால் பேசுவதைத் தவிர்க்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் ஒருவரோடொருவர் பேசிக் கொள்வதால் தவாஃபுக்கு எந்த இடையூறும் ஏற்படாது.
ஒரு மனிதர் தனது கையை இன்னொருவருடன் கயிற்றால் பிணைத்துக் கொண்டு தவாஃப் செய்வதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டார்கள். உடனே அதைத் துண்டித்தார்கள். இவரது கையைப் பிடித்துக் கொண்டு செல்வீராக என்றும் கூறினார்கள்.📓📓📓

*புகாரி 1620, 6703*

*🌐🌐இயலாவிட்டால் வீல் சேரில் 🕋🕋 தவாஃப் செய்யலாமா❓🌎🌎*

*✍✍✍நடந்து தவாஃப் செய்ய இயலாவிட்டால், வீல் சேரில் தவாஃப் செய்யலாமா❓*
*செய்யலாம்.*
*பொதுவாக, பொருளாதாரம் மற்றும் உடல் சக்தியற்றவர்களுக்கு, ஹஜ் கட்டாயக் கடமையல்ல. எனினும் வயதானவர்கள் ஹஜ் செய்வது தடுக்கப்பட்டதும் அல்ல. மிகவும் நெரிசலான பகுதிகளில், அவர்களால் சமாளிக்க இயலாது, என்பதையும் கவனத்தில் கொள்ளவும்.* *ஹஜ்ஜுக்கு வந்த பிறகு, ஒருவருக்கு உடல் நிலை சரியில்லாமல்* *போனால், அவர் வீல் சேரில் தவாஃப் மற்றும் மற்ற கிரியைகளைச் செய்வது குற்றமாகாது.*
*நடந்து தவாஃப் செய்ய இயலாதவர்கள் வாகனத்தின் மீது* *அமர்ந்து தவாஃப் செய்யலாம். இவ்வாறு செய்பவர்கள் நடந்து தவாஃப்செய்பவர்களுக்குப் பின்னால் தான்* *தவாஃப் செய்ய வேண்டும்.*
*”நான் நோயுற்ற நிலையில் (மக்காவுக்கு) வந்தேன். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் இது பற்றிக் கூறினேன். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், ”மக்களுக்குப் பின்னால் வாகனத்திலிருந்தவாறே தவாஃப் செய்” என்று கூறினார்கள்.”✍✍✍*

*அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)*

*நூல்: புகாரி 464, 1619, 1633, 4853*

*🕋🕋🕋தவாஃபின் போது, 🧕🧕🧕அந்நிய ஆண்கள் மீது கை பட்டால் உளுச் செய்ய வேண்டுமா❓🕋🕋🕋*

*இன்ஷாஅல்லாஹ் தொடரும் பாகம் 12*

No comments:

Post a Comment