அன்பார்ந்த சகோதர சகோதரிகளே ஹஜ் பெருநாள் அன்று நாம் கடைப்பிடிக்க வேண்டியவை ஒழுங்குகள்..!
1.சூரியன் உதித்த பின்னர் தொழுகையை நிறைவேற்ற வேண்டும். அதிக கால தாமதம் செய்யக் கூடாது.
புகாரி:951
2.இரு பெருநாள் தொழுகையையும் திடலில்தான் தொழவேண்டும்.
புகாரி:956
3.அந்த நாளில் பரக்கத்தையும் புனிதத்தையும் எதிர்ப்பார்த்து இறைவனை பெருமை படுத்தும் விதமாக அல்லாஹு அக்பர் என்ற தக்பீரை அதிகமாக மனத்திற்குள் கூறவேண்டும்,பிரார்த்தனையை அதிகமாக செய்ய வேண்டும்.
புகாரி:971
4.பெண்களும் தொழும் திடலுக்கு கட்டாயம் வரவேண்டும். புகாரி:971
5.மாதவிடாய் பெண்களும் திடலுக்கு கட்டாயம் வரவேண்டும். தொழுகையில் பங்கேற்காமல் இறைவனின் பரக்கத்தை எதிர்பார்த்து தக்பீர் கூறுதல்,பிரார்த்தனை செய்தல் போன்ற மற்ற வணக்க வழிபாடுகளில் ஈடுபட வேண்டும்.
புகாரி:351,971
6.பெருநாளுக்கு செல்லும் போது ஒரு வழியிலும்
திரும்பும் போது மற்றொரு வழியிலும் செல்ல வேண்டும்.
புகாரி:986
7. தொழுகைக்கு பிறகு தான் சாப்பிட வேண்டும்.
இப்னுகுஸைமா :1426
8.இரு பெருநாள் தொழுகைகளுக்கு முன் பின் சுன்னத்துகள் கிடையாது.
புகாரி: 1431
9.இரு பெருநாள் தொழுகைக்கும் மற்றத் தொழுகைகளைப் போல் பாங்கும் இகாமத்தும் கிடையாது.
அபூதாவூத் :969
10.இரண்டு ரக்அத் தொழவேண்டும். முதல் ரக்அத்தில் ஏழு தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்தில் ஐந்து தக்பீர்களும் மொத்தம் 12 தக்பீர்கள் பெருநாள் தொழுகையில் சொல்ல வேண்டும்.
அஹ்மத் :6401
11.இரு பெருநாள் தொழுகையிலும் திடலில் தொழும்போது இமாமிற்கு முன்னால் எதையாவது தடுப்பாக வைத்துக் கொள்ளவேண்டும்.
புகாரி :973
12.வெள்ளிக்கிழமை ஜுமுஆவில் எப்படி இமாம் மிம்பரில் பயான் நிகழ்த்துவாரோ அதைப் போன்று இரு பெருநாள்களிலும் மிம்பரில் உரை நிகழ்த்த கூடாது. தரையில் நின்றுதான் சொற்பொழிவு நிகழ்த்த வேண்டும்.
புகாரி :956
13.அல்லாஹு அக்பர் என்று கூறுவதுதான் தக்பீர் ஆகும். பெருநாளைக்கு என நபி (ஸல்) அவர்கள் தனியான எந்த தக்பீரையும கற்றுத்தரவில்லை.
14.இறைவனை பெருமை படுத்தும் நாளில் வீணானதை புறக்கணிக்க வேண்டும்.
அல் குர்ஆன்:23:3
No comments:
Post a Comment