பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, July 17, 2020

உத்தம நபியின் உண்மை வரலாறு

*உத்தம நபியின் உண்மை வரலாறு*

*01 உண்டு சுகிக்கவில்லை*

மனிதனின் முதல் தேவை உணவு தான். உணவு சுவைபட இருக்க வேண்டும் என்பதற்காகத் தான் மனிதன் கடுமையாக உழைக்கின்றான். அதிகம் சம்பாதிக்கிறான். பல முறைகேடுகளிலும் ஈடுபடுகிறான்.

மாமனிதர் நபி (ஸல்) அவர்கள் தன் வாழ்நாளில் இரு தலைமைப்பண்பை கொண்டு இருந்தனர்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஆட்சித் தலைவராகவும், ஆன்மீகத் தலைவராகவும் உயர்ந்து நின்ற காலத்தில் அவர்கள் எத்தகைய உணவை உட்கொண்டார்கள் என்பதை பார்த்தால் உன்னத நபியின் உண்மை வாழ்க்கை நமக்கு விளங்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) என்பவர் ஆன்மீக தலைவர் மற்றும் இந்தியா போன்ற பரப்பளவை கொண்ட நாட்டை ஆட்சி செய்த மாமன்னர் என்ற இரு தலைமை பொறுப்பை பெற்றிருந்தும் அவர்களின் உணவிற்கான நிலை இன்றைய பரம ஏழை என்று சொல்லக்கூடியவனுக்கும் கூட இருக்காது என்பது தான் நிதர்சனமான உண்மையாகும்.

இதோ சில வரலாற்று சான்றுகள்

* மூன்று மாதங்களுக்கு மேல் வீட்டில் அடுப்பு எரியாது. புகாரி 2567, 6459

* அப்படி இருந்தும் தோல் நீக்கப்படாத கோதுமை ரொட்டியைச் சாப்பிட்டார்.  (புகாரி 5413)

* தொடர்ந்து மூன்று நாட்கள் வயிறாற உண்ண முடியாது (புகாரி 5374, 5416, 6454)

* குழம்பு கூட இல்லாமல் வினிகரில் தொட்டு அதையும் ருசித்துச் சாப்பிடுதல். (முஸ்லிம் 3824)

* காய்ந்த ரொட்டியும், வினிகரும் கூட இல்லாமல் வெறும் பேரீச்சம்பழத்தை மட்டும் சாப்பிட்டுக் கொண்டு, பச்சைத் தண்ணீரை மட்டும் குடித்துக் கொண்டு பல மாதங்களை அவர்களால் கழிக்க முடிந்தது எப்படி? (புகாரி 2567, 6459)

* காய்ந்த ரொட்டியும் வினிகரும் கூட தினமும் சாப்பிட முடியாத வறுமை (புகாரி 5423)

* முதலாளியின் பசியைக் கண்டு அவரிடம் வேலை பார்ப்பவர் பரிதாபப்பட்டு தனது வீட்டிலிருந்து உணவு கொண்டு வந்து கொடுக்கும் நிலை. இந்த நிலை உலகில் எந்த மன்னரேனும், எந்த முதலாளியேனும் சந்தித்திருக்க முடியாது. (புகாரி 5385, 5421, 6457)

* காய்ந்த ரொட்டியையும், தொட்டுக் கொள்ள வாசனை ஏதும் இல்லாத உருக்கிய கொழுப்பையும் தமது வேலைக்காரர் வீட்டிலிருந்து வாங்கி பசியை நீக்கிய தலைவர். (புகாரி 5422)

* பசிக் களைப்பை அவர்களின் முகத்தில் கண்டு சாதாரணக் குடிமகன் ஒருவர் விருந்துக்கு அழைக்கும் அளவுக்கு நிலைமை (முஸ்லிம் 3799)

இந்தச் சான்றுகளை ஒரு முறைக்குப் பல முறை படித்துப் பாருங்கள்! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது பதவியைப் பயன்படுத்தி பொருள் திரட்டவில்லை; செல்வத்தைக் குவிக்கவில்லை என்பது விளங்கும்.

குறிப்பு :

ஏழ்மையிலேயே காலத்தைக் கழிக்கும் ஒருவர் மிகவும் எளிமையான உணவை உட்கொள்வதில் எந்த ஆச்சரியமும் இல்லை என்று நீங்கள் நினைக்கலாம்.

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் 25 வயது முதல் நாற்பது வயது வரை மிகப் பெரிய செல்வந்தராக இருந்தார்கள். காய்ந்து போன ரொட்டியைச் சாப்பிடும் நிலையில் அவர்கள் இருந்ததில்லை.

செல்வச் செழிப்பை ஏற்கனவே அனுபவித்து பழக்கப்படாத, வாய்ப்பும் வசதியும் கிடைக்கப் பெறாத ஒருவர் இத்தகைய உணவுப் பழக்கத்தைக் கடைப்பிடித்தால் நாம் ஆச்சரியப்பட முடியாது.

ஆனால், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலிமை மிக்க ஆட்சித் தலைவராக இருந்தார்கள். அந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி எல்லா வசதிகளையும் அனுபவிக்கும் வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. அவர்கள் அனுபவித்தால் யாரும் எதிர்க் கேள்வி கூட கேட்க மாட்டார்கள் என்ற நிலையும் இருந்தது. அவர்கள் உருவாக்கிய அரசாங்கக் கருவூலத்தில் ஒரு வேளை பணம் இருந்திருக்காது என்று யாரும் நினைத்து விட வேண்டாம்.

அவர்கள் உருவாக்கிய அரசாங்கம் தன்னிறைவு பெற்றிருந்தது போல் உலகில் இன்று வரை எந்த அரசாங்கமும் தன்னிறைவு பெற்றதில்லலை. (அதை தனி தலைப்பில் பார்க்கலாம்)

உத்தம நபியின் உண்மை வரலாறு தொடரும்

இப்படிக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
கள்ளக்குறிச்சி வடக்கு கிளை
கள்ளக்குறிச்சி மாவட்டம்

No comments:

Post a Comment