பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, July 3, 2020

மரணச் செய்தி நம்மிடம் கூறப்பட்டால்


மரணச் செய்தி நம்மிடம் கூறப்பட்டால் *‘அவரை அல்லாஹ் மன்னிக்கட்டுமாக!’* என்று அவருக்காக  துஆச் செய்ய வேண்டும்.

அபீஸீனிய மன்னர் நஜ்ஜாஷி இறந்த செய்தியை நபிகள் நாயகம் அறிவித்த போது ‘*உங்கள் சகோதரருக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்’* என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1328

ஸைத் (ரலி), ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி), அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோரின் மரணச் செய்தியை மக்களுக்கு நபிகள் நாயகம் அறிவித்த போது *‘அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுங்கள்’* எனக் கூறியுள்ளனர்.

நூல்: *அஹ்மத் 21509*

*மறுமை நன்மையை எதிர்பார்த்து சகித்துக் கொள்வோம்...*

ஒருவர் மரணித்து விட்டால் மறுமையின் நன்மையைக் கவனத்தில் கொண்டு அதனைப் பொறுமையுடன் சகித்துக் கொண்டால் மறுமையில் சொர்க்கத்தை நாம் அடைய அதுவே காரணமாக அமைந்து விடும். அந்த அளவுக்கு உயர்ந்த செயலாக இதை இறைவன் மதிப்பிடுகிறான்.

*ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது ‘நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்’* என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.

திருக்குர்ஆன் 2.155, 156, 157

*‘பருவ வயதை அடையாத மூன்று குழந்தைகளை ஒரு முஸ்லிம் இழந்து விட்டால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் நுழைக்காமல் இருப்பதில்லை’* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 1248, 1381

*‘எந்தப் பெண்ணுக்காவது மூன்று குழந்தைகள் மரணித்து விட்டால் அக்குழந்தைகள் அவளை நரகம் செல்லாமல் தடுப்பவர்களாகத் திகழ்வார்கள்’* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒரு பெண்மணி *இரண்டு குழந்தைகள்?’* எனக் கேட்டார். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் *இரண்டு குழந்தைகளும் தான்’* என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)
நூல்: புகாரி 102, 1250, 7310

*‘மூமின்களின் காரியங்கள் வியப்பாக உள்ளன. அவரது அனைத்துக் காரியங்களும் அவருக்கு நன்மையாகவே அமைந்து விடுகின்றன. மூமினைத் தவிர மற்றவர்களுக்கு இந்த நிலை இல்லை. அவருக்கு மகிழ்ச்சி ஏற்படால் நன்றி செலுத்துகிறார். எனவே அது அவருக்கு நன்மையாக அமைகிறது. அவருக்குத் துன்பம் ஏற்பட்டால் பொறுத்துக் கொள்கிறார். எனவே அதுவும் அவருக்கு நன்மையாகி விடுகிறது’* என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸுஹைப் (ரலி)
நூல்: *முஸ்லிம் 5318*

No comments:

Post a Comment