பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, July 9, 2020

இஸ்லாத்தை அறிந்து - 29

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 



 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 29 👈👈👈* 


 *20. 🧕🧕🧕பாகம் 2🧕🧕🧕பெண்கள்🧕 தங்க 👙👙நகைகள்👙 👙அணியலாமா❓ஓர் 🧕ஆய்வு🧕🧕🧕* 


 *🧕பெண்கள் தங்க நகைகள் அணியலாமா❓🧕* 

 *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்* 

 *பெண்கள் வளைய வடிவிலான தங்க நகைகளை அணியக் கூடாது. மற்ற வடிவங்களில் அணியலாம் என்ற கருத்தை இலங்கையில் சிலர் கிளப்பினார்கள். இக்கருத்து சரி தானா?என்பதை நாம் ஆய்வு செய்து பார்க்கையில் இது தவறான முடிவு என்பதை அறிந்தோம். இதைத் தெளிவுபடுத்தும் வகையில் இரண்டு தொடர்களாக நமது ஆய்வை இணையதளத்தில் நாம் வெளியிட்டிருந்தோம்.* 

நமது கருத்தை மறுத்து சகோதரர் நவ்ஃபர் என்பவர் அவரது ஆய்வுக் கட்டுரையை மூன்று தொடர்களாக வெளியிட்டுள்ளார்.

 *இதில் முதலாவது தொடரில் ஆய்வு சம்பந்தப்பட்ட எந்தத் தகவலையும் அவர் கூறவில்லை. உருப்படியான விமர்சனங்களும் அதில் இல்லை. அவரது இயக்கத்தைப் பற்றிய வரலாறைக் கூறும் கட்டுரையாகவே அது இருந்தது. எனவே இதற்குப் பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை.* 

தனது இரண்டாவது தொடரில் நமது ஆய்வுக்குத் தேவையில்லாத சில்லரைத் தனமான பல விஷயங்களில் நுழைந்து அவரது ஆய்வை விரும்பத் தகாத முறையில் கொண்டு சென்றுள்ளார். ஆய்வுக்குச் சம்பந்தமில்லாமல் ஒன்றுக்கும் உதவாத அவரது விமர்சனங்களுக்கு நாம் பதிலளித்து நமது ஆய்வை அலங்கோலமாக்க நாம் விரும்பவில்லை.

 *எனவே அவரது இரண்டாவது தொடரிலும் மூண்றாவது தொடரிலும் ஆய்வு தொடர்பாக அவர் எழுதிய விஷயங்கள் அனைத்திற்கும் இங்கு ஒன்று விடாமல் பதிலளிக்கப்படும் இன்ஷா அல்லாஹ்.* 

இவர் நமது வாதங்களுக்குப் பதிலைத் தந்துள்ளாரா?அந்தப் பதில் உண்மையில் சரியானவையா?நாம் எழுப்பிய எந்தக் கேள்விக்கு இவர் பதிலைக் கூறவில்லை?இந்த ஆய்வில் அவர் எங்கே தடுமாறுகிறார்?எங்கே தவறு செய்கிறார்?இவர் நம்மிடம் கேட்கும் கேள்விகளுக்கு நாம் கூறும் பதில் என்ன?இன்னும் பல விஷயங்களை இந்தத் தொடரில் நாம் தெளிவுபடுத்த இருக்கிறோம்.

 *இதைப் படிப்பதற்கு முன்னால் ஏற்கனவே நாம் வெளியிட்ட இரண்டு தொடர்களையும் படிக்குமாறு வாசகர்களுக்கு அறிவுறுத்திக் கொள்கிறோம்.* 

 *குழப்பம் :1* 

பெண்களுக்குத் தங்கம் அனுமதிக்கப்பட்டது என ஒரு ஹதீஸில் கூறிய நபி (ஸல்) அவர்கள் இன்னுமொரு ஹதீஸில் நரக நொருப்பினால் ஆன வளையம்.. தங்கத்தினால் ஆன வளையம் எனக் கூறியதன் அடிப்படையில் தங்க வளையல் என நாம் ஹதீஸின் கருத்தை கூற (அது ஆணுக்கா பெண்ணுக்கா என்பது பின்னர் விளக்கப்படும்) அதை வளையல்,வளையல் அல்லாத என்று வித்தியாசப்படுத்துவதைஅறியாமையின் உச்சகட்டம் என கருத்துத் தெரிவிப்பது தான் உண்மையில் அறியாமையின் உச்சகட்டமாகும்.

 *இவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை அனைவருக்கும் புரியும் வகையில் முதலில் பார்ப்போம்* .

பெண்கள் தங்க நகை அணிவது குறித்து வாதிடும் போது வளைந்த வடிவிலான தங்க நகை கூடாது. வளைந்த வடிவம் அல்லாத தங்க நகை கூடும் என்று இவர்கள் வாதிடுவது அறியாமை என்று நாம் குறிப்பிட்டிருந்தோம்.

 *அதற்குத் தான் அவர் பதில் சொல்லி இருக்கிறார்.* 

வளைந்த வடிவம், வளைவு இல்லாத வடிவம் என்று வகைப்படுத்தியது அறியாமை இல்லை; அவ்வாறு விளங்குவதற்கு ஹதீஸ் இடம் இடம் தருகிறது. எனவே இது அறியாமை அல்ல; அறியாமை என்று கூறுவது தான் அறியாமை என்று இவர் வாதிடுகிறார்.

3698حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسَْمَةَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ عَنْ أَسِيدِ بْنِ أَبِي أَسِيدٍ الْبَرَّادِ عَنْ نَافِعِ بْنِ عَيَّاشٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَحَبَّ أَنْ يُحَلِّقَ حَبِيبَهُ حَلْقَةً مِنْ نَارٍ فَلْيُحَلِّقْهُ حَلْقَةً مِنْ ذَهَبٍ وَمَنْ أَحَبَّ أَنْ يُطَوِّقَ حَبِيبَهُ طَوْقًا مِنْ نَارٍ فَلْيُطَوِّقْهُ طَوْقًا مِنْ ذَهَبٍ وَمَنْ أَحَبَّ أَنْ يُسَوِّرَ حَبِيبَهُ سِوَارًا مِنْ نَارٍ فَلْيُسَوِّرْهُ سِوَارًا مِنْ ذَهَبٍ وَلَكِنْ عَلَيْكُمْ بِالْفِضَّةِ فَالْعَبُوا بِهَا رواه أبو داود

 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:* 

தனது பிரியமானவருக்கு நெருப்பால் ஆனவளையத்தைஒருவர் அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆனவளையத்தைஅவருக்கு அணிவிக்கட்டும். தனது பிரியமானவருக்கு நெருப்பால் ஆன மாலையை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன மாலையை அவருக்கு அணிவிக்கட்டும். தனது பிரியமானவருக்கு நெருப்பால் ஆன காப்பை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன காப்பை அவருக்கு அணிவிக்கட்டும். மாறாக வெள்ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்களை செய்து) விளையாடுங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்

 *நூல் : அபூதாவுத் (3698)* 

 *எப்படி இவர் வாதிடுகிறார்? பின் வரும் ஹதீஸில் நெருப்பினாலான வளையம் தங்கத்தாலான வளையம் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதிலிருந்தே வளைந்த வடிவத்தையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள் என்பது தான் இவரது வாதம்.* 

 *நமது பதில்* 

இந்த வாதம் ஏற்கனவே இவர்கள் செய்த வாதம் தான். அது தவறு என்பதைத் தான் நாம் தக்க காரணத்துடன் விளக்கினோம். அந்தக் காரணத்தைக் கண்டு கொள்ளாமல் முன்பு சொன்னதையே அப்படியே சொல்லி இருக்கிறார்.

 *ஆனால் உண்மையில் இச்செய்தியில் இவரது கருத்தைத் தகர்த்தெறியக்கூடிய அம்சம் மட்டுமே இருக்கிறது.* 

இந்தச் செய்தி குறிப்பிட்ட வடிவம் பற்றி பேசவில்லை: தங்கம் என்ற உலோகம் பற்றியே பேசுகிறது என்பதை ஆதாரத்துடன் நாம் விளக்கி இருந்தும் அதை அப்படியே கண்டு கொள்ளாமல் நழுவுகிறார்.

 *இது பற்றி நம்முடைய இரண்டாவது தொடரில் எழுதியதைப் பாருங்கள்!* 

ஏன்?இவர்கள் வைக்கும் ஹதீஸிலும் தங்கத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட பிறகு அதற்கு மாற்று வழியாக வெள்ளியை உபயோகித்துக் கொள்ளுங்கள் என்றே கூறப்படுகிறது.

 *இவர்கள் கூறுவது போல் வட்டமில்லாத தங்கத்தைப் பெண்கள் அணியலாம் என்றால் அது கூறப்பட வேண்டிய இடம் இது தான். வட்டமில்லாத தங்க நகையை அணிந்து விளையாடுங்கள் என்று சொல்லாமல் வெள்ளியில் விளையாடுங்கள் என்று கூறி இருப்பார்கள்.* 

இவர் வளைந்த வடிவம் என்று எந்த ஹதீஸை ஆதாரமாகக் காட்டினாரோ அந்த ஹதீஸ் வளைந்த வடிவம் பற்றி பேசவில்லை என்பதற்கு அழுத்தமான இந்த வாதத்துக்கு அவரால் பதில் சொல்ல முடியவில்லை.

 *நமது அந்த வாதத்தை இன்னும் தெளிவாக விளக்குகிறோம்.* 

ஒரு செய்தியில் சரியான கருத்து எது என்பதில் குழப்பம் ஏற்பட்டால் அதன் எதிர்க் கருத்தை வைத்து சரியான அர்த்தத்தைக் கண்டு பிடிக்கலாம். இது சிந்திக்கும் வழிவகைகளில் ஒன்றாகும்.

 *மேற்கண்ட ஹதீஸில் எதிர்க் கருத்து இல்லாமல் ஒரு கருத்து மட்டும் இருந்தால் இவர் குழம்புவது போல் குழம்ப வழி இருக்கும். ஆனால் இந்த ஹதீஸில் எதிர்க் கருத்தும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது.* 

அதாவது எது தடுக்கப்பட்டது என்று கூறுவதுடன் எது தடுக்கப்படவில்லை என்பதும் கூறப்படுகிறது.

 *வளைந்த வடிவத்திலான தங்கத்தைத் தடுப்பது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் நோக்கம் என்றால்தங்க வளையத்தை அணிய வேண்டாம்; வளையம் இல்லாத வேறு வடிவத்தை அணியுங்கள்என்று தான் கூற வேண்டும்* .

ஆனால் அப்படிக் கூறாமல் தங்க வளையத்தை அணிய வேண்டாம்வெள்ளியை அணிந்து விளையாடுங்கள்என்று கூறப்பட்டால் தங்கம் என்ற உலோகம் தான் கூடாது என்ற கருத்து தான் அதில் உள்ளது.

 *நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்க வளையம் என்பதற்கு எதிராக வெள்ளியைக் கூறியதன் மூலம் தங்கம் என்ற உலோகம் பற்றியே கூறப்படுகிறது என்பதை அறியலாம்.* 

எனவே தான் இவரது வாதத்தை அறியாமை என்று நாம் குறிப்பிட்டோம். இதற்கு அவர் பதில்சொல்ல முடியாததில் இருந்து அது உறுதியாகிறது.

 *இந்த ஹதீஸின் இறுதியில் இடம் பெற்றுள்ளமாறாக வெள்ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்களைச் செய்து) விளையாடுங்கள்என்ற வாசகம் தங்கம் வட்டமாக இருந்தாலும் வேறு வடிவத்தில் இருந்தாலும் அது முழுவதுமாகப் புறக்கணிக்கப்பட வேண்டும். வெள்ளியை மட்டுமே பயன்படுத்த வேண்டும் என்ற கருத்தைத் தருகிறது.* 

வளையமில்லாத வேறு வடிவிலான தங்கம் கூடும் என்றால் அதைச் சொல்ல வேண்டிய இடம் இது தான். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அதைப் பற்றி இங்கு பேசாமல் தங்கத்திற்கு மாற்று வழியாக வெள்ளியை உபயோகித்துக் கொள்ளுங்கள் என்றே கூறுகிறார்கள்.

 *எனவே இவர்களின் விபரீதக் கருத்திற்கு ஆதாரமாக இவர்கள் காட்டுகின்ற இந்த ஹதீஸ் இவர்களின் வாதத்தை வேறோடு சாய்த்து விடுகிறது.* 

நாம் எழுப்பிய இந்தக் கேள்விக்கு மழுப்பலான பதிலை கூட ஏன் இவரால் கூற முடியவில்லை?இவர் செய்த இந்த காரியத்தை அறியாமையின் உச்சகட்டம் என்று நாம் எழுதியது தவறு என்றால்?தில்லுமுல்லு வேலை என்றுதான் கூற வேண்டும்.

 *குழப்பம் :2* 

 *ஹுபைராவின் மகள் கையில் மோதிரத்தை வைத்திருந்தார்கள் என்று தான் ஹதீஸில் வாசகம் உள்ளது. அணிந்திருந்தார்கள் என்று இல்லை. எனவே இந்த ஹதீஸ் தங்கம் அணிவதைப் பற்றி பேசவில்லை என நாம் எழுதியிருந்தோம்.* 

இதற்கு மாற்றமாக ஹுபைராவின் மகள் தங்க மோதிரத்தை அணிந்து இருந்தார்கள் என்பது தான் சரி என தனது கருத்தை நிறுவவதற்கு பின்வருமாறு அவர் கூறியுள்ளார்.

 *எனினும் மோதிரங்கள் என்றும் கையில் என்றும் வாக்கியம் அமைந்திருப்பதால் கையில் அணிந்திருந்தார்கள் என்ற அர்த்தமே மேலோங்கியுள்ளது.* 

 *நமது பதில்:* 

பெண்கள் தங்கம் அணிவதை ஹராமாக்கக் கூடிய இவர் எவ்வளவு பலவீனமான வாதத்தை எழுப்பியுள்ளார் என சற்று சிந்திக்க வேண்டும்?

 *மோதிரங்கள் என்றும்விரல்கள் என்றும்ஹதீஸில் வந்திருந்தால் தான் இவர் கூறுவது போல் அணிவது என்ற அர்த்தம் வரும்.* 

மோதிரம் என்றும்கையில் என்றும்வருவதால் அணிதல் என்ற அர்த்தம் எப்படி மேலோங்கும்?

 *அணிதல் என்று கூறுவது இவரது கருத்திற்கு தோதுவாக உள்ளது என்ற ஒரு காரணத்தைத் தவிர்த்து வேறு அறிவுப்பூர்வமான காரணம் இதில் என்ன இருக்கிறது?* 

அணிவதற்கும் அணியாமல் கையில் வைத்திருப்பதற்கும் சம அளவில் இடம்பாடுள்ள இந்த வாசகத்தை அணிவது தான் மேலோங்கியுள்ளது எனக் கூறி தனது கருத்தின் பக்கம் ஆதாரமில்லாமல் வளைக்கிறார். ஹலால் ஹராம் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இப்படித் தான் யூகத்தை அடிப்படையாக வைத்து ஹலாலான ஒன்றை ஹராமாக்குவதா?

 *குழப்பம் :3* 

 *2434* أَخْبَرَنَا إِسْمَعِيلُ بْنُ مَسْعُودٍ قَالَ حَدَّثَنَا خَالِدٌ عَنْ حُسَيْنٍ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ امْرَأَةً مِنْ أَهْلِ الْيَمَنِ أَتَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِنْتٌ لَهَا فِي يَدِ ابْنَتِهَا مَسَكَتَانِ غَلِيظَتَانِ مِنْ ذَهَبٍ فَقَالَ أَتُؤَدِّينَ زَكَاةَ هَذَا قَالَتْ لَا قَالَ أَيَسُرُّكِ أَنْ يُسَوِّرَكِ اللَّهُ عَزَّ وَجَلَّ بِهِمَا يَوْمَ الْقِيَامَةِ سِوَارَيْنِ مِنْ نَارٍ قَالَ فَخَلَعَتْهُمَا فَأَلْقَتْهُمَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ هُمَا لِلَّهِ وَلِرَسُولِهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه النسائي

அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அறிவிக்கிறார்கள்:

 *யமன் நாட்டைச் சார்ந்த ஒரு பெண்மனி தனது மகளுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரது மகளின் கையில் தங்கத்தால் ஆன தடிமனான இரு காப்புகள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் இதற்குரிய ஸகாத்தை நீ கொடுத்து விட்டாயா?என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண் இல்லை என்று கூறினார். இவ்விரண்டு காப்புகளுக்கு பதிலாக மறுமை நாளில் நெருப்பால் ஆன இரு காப்புகளை அல்லாஹ் உனக்கு அணிவிப்பது உனக்கு மகிழ்ச்சியூட்டுமா?என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். உடனே அப்பெண் அவ்விரண்டு காப்புகளையும் கழற்றி நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்துவிட்டு இவ்விரண்டும் சங்கையும் மகத்துவமும் மிக்க அல்லாஹ்விற்கு உரியதாகும். மேலும் அவனது தூதருக்கும் உரியாதாகும் என்று கூறினார்.* 

 *நஸயீ (2434)* 

மேற்கண்ட செய்தியில் கையில் காப்பு இருந்தது என்று உள்ளது. ஆனால் இதிலிருந்து காப்பை அணிந்திருந்தார்கள் என்ற கருத்தை கூறினோம்.

 *இதை இவர் தனது விகாரமான பாணியில் பின்வருமாறு விமர்சனம் செய்திருந்தார்* .

யமன் நாட்டைச் சேர்ந்த பெண்மனி தனது மகளுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது அவரது மகளின் கையில் தடிமனான இரண்டு தங்கக் காப்புகள் இருந்தன. இக்காப்புகள் வளைந்த வடிவமானவை. வளைந்த வடிவத்தில் தங்கம் அணிவது கூடாது என்றால் அதை நபி (ஸல்) அவர்கள் கூடாதென்றால் அதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருப்பார்கள். வளையமாக இருப்பதைக் கண்ணால் நபி (ஸல்) அவர்கள் அவர்கள் கண்ட பிறகும் அதை அணியக் கூடாது என்று அவர்கள் தடுக்காமல் இருந்திருக்கும் போது அதை நாம் தடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லைஎன எழுதி மூலத்தில் وفي يد إبنتها مسكتان غليظتان من ذهبகையில் இருந்தனஎன்பதை அணிந்திருந்தாள் என மொழிபெயர்த்துள்ளார்.

 *பொய் சொல்பவருக்கு மாத்திரம் அல்ல,தவறான விளக்கம் கொடுப்பவருக்கும் ஞாபக சக்தி அதிகம் இருக்க வேண்டும். அப்போது தான் தான் முதல் தொடரில் எவ்வாறு பிழையான விளக்கம் கொடுத்தோம் என்பதற்கு ஏற்ப இரண்டாவது தொடரிலும் அதே விளக்கம் கொடுக்க முடியும் என்பதையும் இவர்கள் உணரவில்லை.* 

 *நமது பதில்:* 

ஆம் மேற்கண்ட ஹதீஸில் காப்புகள் கையில் இருந்தன என்று தான் கூறப்பட்டுள்ளது. இந்த வாசகம் கையில் வைத்திருப்பதையும் குறிக்கும். அணிந்திருப்பதையும் குறிக்கும். ஆனால் மேற்கண்ட செய்தி இவ்விரு கருத்துக்களுக்கும் இடம்பாடில்லாத வகையில் அணிதல் என்ற ஒரு கருத்தை மட்டும் தெளிவாகத் தரக்கூடிய வகையில் அமைந்துள்ளது.

 *ஏனென்றால் இந்த ஹதீஸில் இவ்விரண்டு காப்புகளுக்கு பதிலாக மறுமை நாளில் நெருப்பால் ஆன இரு காப்புகளை அல்லாஹ் உனக்குஅணிவிப்பதுஉனக்கு மகிழ்ச்சியூட்டுமா?என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள் என்று கூறப்பட்டுள்ளது* .

அணிவிப்பது உனக்கு மகிழ்ச்சியூட்டுமா?என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதிலிருந்து அப்பெண் குழந்தை தங்கக் காப்பை கையில் வைத்திருக்கவில்லை. அணிந்து தான் இருந்தார் என்பது உறுதியாகிறது.

 *மேலும் இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியவுடன் அவ்விருகாப்புக்களைஅப்பெண்கழற்றிப் போட்டார்என்றும் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.அணிந்தால் தான் கழற்றிப் போட்டார்கள்என்று கூற முடியும். கையில் வைத்திருந்தால் இவ்வாறு கூற முடியாது.* 

தடிமனான இரு காப்புகள் கையில் இருந்தன என்ற வாசகத்தை பிரத்யேகமாக குறிப்பிட்டுக் காட்டிய இவர் கழற்றிப் போட்டார்கள் என ஹதீஸில் கூறப்பட்ட வாசகத்தையும் குறிப்பிட்டுக் காட்டி இருக்கக் கூடாதா?

 *நடைமுறையில் உள்ள விஷயத்திற்கு மாற்றமான முடிவை எடுக்கும் போது கூடுதல் கவனத்தைக் கடைப்பிடியுங்கள் என நாம் கூறியதற்கு நானும் கடைப்பிடிக்கிறேன். நீங்களும் கடைப்பிடியுங்கள் என்று அழகாக பதிலளிப்பதை விட்டுவிட்டு அப்படியெல்லாம் கடைப்பிடிக்க முடியாது என ஆணவத்துடன் கூறியுள்ளார்.* 

உங்களிடம் கூடுதல் கவனத்தை எதிர்பார்ப்பது நியாயமற்றது என பொறுப்புணர்வின்றி பேசியுள்ளார்.

 *ஆனால் இவருடைய ஆய்வைப் பார்க்கும் போது இவரிடம் கூடுதல் கவனம் என்ன?சாதாரண ஒரு சராசரி மனிதனிடத்தில் இருக்கின்ற கவனம் கூட இல்லை என்பதே தெரிகிறது. கூடுதல் கவனம் செலுத்த மாட்டேன் என்ற இவரது அகம்பாவம் இவரை எங்கே கொண்டு சென்று நிறுத்தியுள்ளது என்பதை சற்று யோசியுங்கள்* .

எனவே ஹுபைராவின் மகள் சம்பந்தப்பட்ட ஹதீஸில் அணிவது தான் கூறப்பட்டுள்ளது என இவர் ஹதீஸின் கருத்துக்கு மாற்றமாக முடிவு செய்ததைப் போன்று இந்த ஹதீஸில் நாங்கள் முடிவு செய்யவில்லை. ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ள வாசகங்கள் அனைத்தையும் கவனத்தில் கொண்டு முடிவு செய்தோம்.

 *இது போன்று இவர் அந்த ஹதீஸில் எந்தச் சான்றுகளைக் கவனத்தில் கொண்டு அணிவது என முடிவு செய்தார்?.இவர் இவ்வாறு முடிவு செய்ததற்கு தனது தவறான யூகம் மட்டுமே சான்று என ஒப்புக் கொண்டுள்ளார்.* 

அடுத்து அவர் மேலே பின்வரும் கருத்த்கையும் பதிவு செய்து தன்னை அடையாளம் காட்டி விடுகிறார்.

 *பொய் சொல்பவருக்கு மாத்திரம் அல்ல,தவறான விளக்கம் கொடுப்பவருக்கும் ஞாபக சக்தி அதிகம் இருக்க வேண்டும். அப்போது தான் தான் முதல் தொடரில் எவ்வாறு பிழையான விளக்கம் கொடுத்தோம் என்பதற்கு ஏற்ப இரண்டாவது தொடரிலும் அதே விளக்கம் கொடுக்க முடியும் என்பதையும் இவர்கள் உணரவில்லை.* 

`அதாவது தவறான கருத்தைக் கூறி விட்டு அதை ஒப்புக் கொள்ளும் பண்புடைய எங்களுக்கு இந்தத் திறமை இல்லை. ஆனால் தான் தவறாக சொன்னதை நியாயப்படுத்தும் கெட்ட குணம் தன்னிடம் உள்ளதை அவரே இதன் மூலம் வெளிப்படுத்தி விட்டார்.

 *குழப்பம் :4* 

 *இந்த இடத்தில் ஆய்வாளர் சுட்டிக் காட்டாத ஒரு தவறும் எமது மொழி பெயர்ப்பில் உள்ளதை நாம் வாசகர்கள் கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறோம்.* 

அது,கையைத் தட்டி விட்டார்கள் என்ற வார்த்தையே ஹதீஸில் கிடையாது என்பது தான். மாறாக நஸாயியில் இடம் பெறும் அறிவிப்பில்فجعل رسول الله صلى الله عليه وسلم يضرب يدهاநபியவர்கள் அப்பெண்மணியின் கரத்தில் அடிக்கலானார்கள்என்றும் அஹ்மதில் இடம் பெறும் அறிவிப்பில்

فجعل رسول الله صلى الله عليه وسلم يقرع يدها بعصية معهநபியவர்கள் தன்னிடமிருந்த ஒரு குச்சியினால் அப்பெண்ணின் கையில் அடித்தார்கள் என்று சற்று மேலதிக விளக்கத்துடன் இடம் பெற்றுள்ளது.

 *எனவே ஹதீஸில் கையைத் தட்டி விட்டார்கள் என்ற கருத்து கிடையவே கிடையாது என்பது இதன் மூலம் தெளிவாக விளங்குவதுடன் இத்தவறான கருத்தின் அடிப்படையில் கையில் வைத்திருந்தார்கள் என்ற கருத்தை நிறுவ முற்பட்ட ஆய்வாளரின் விளக்கமும் தவறு என்பது நிரூபனமாகிறது.* 

அத்துடன் ஸஹ்றான் மௌலவி அவர்கள் மேற்படி மொழிபெயர்ப்பில் தவறு விட்டிருக்கிறார் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம் (அவர் ஹதீஸ்களில் சேர்த்திருக்கும் ஏராளமான கைச் சரக்குகளுடன் ஒப்பிடும் போது இது எவ்வளவோ பரவாயில்லை!!!?)

 *ஆனால் மேற்படி மொழி பெயர்ப்பில் தவறு காண விளைந்த ஆய்வாளர்களது கண்களுக்கு இத்தவறு தென்படவில்லையா அல்லது தென்பட்டும் தங்களது தவறான வாதத்திற்கு இந்த தவறான பொழிபெயர்ப்பு உதவும் என்பதால் கண்டு கொள்ளவில்லையா என்பதை அல்லாஹ்வே அறிவான்.* 

 *நமது பதில்:* 

ஹுபைராவின் மகளுடைய கையில் நபி (ஸல்) அவர்கள் தட்டி விட்டார்கள் என்று ஹதீஸில் கூறப்படுகிறது. மோதிரங்களை அணியாமல் கையில் வைத்திருந்தாலே தட்டிவிட முடியும். எனவே கையில் மோதிரங்களை வைத்திருந்தார்கள் என்பதே சரி என நாம் எழுதியிருந்தோம்.

 *தட்டி விட்டார்கள் என்றே இவர்களும் மொழி பெயர்த்திருந்தார்கள். ஆனால் மேற்கண்டவாறு நாம் வாதத்தை வைத்த உடன் இதற்குப் பதில் கூறவே முடியாது என்பதை உணர்ந்த இவர்கள் நாங்கள் மொழிபெயர்த்தது தவறு எனக் கூறி அந்தர் பல்டி அடித்து எப்படியாவது தங்கம் அணிவது பெண்களுக்கும் ஹராம் என நிறுவப் பார்க்கிறார்கள்.* 

இவர் எத்தனை பல்டிகள் அடித்தாலும் இவரால் இந்தத் தவறான கருத்தை நிறுவவே முடியாது.

 *மேலும் இவரது நிலைபாட்டை தகர்த் தெரியக்கூடிய ஒரு மொழிபெயர்ப்பை தவறுதல் என்று இவரே குறிப்பிடுகிறார் என்றால் சாதாரண கவனம் கூட இவரிடம் இல்லை என்பது உறுதியாகிறது.* 

இந்த இலட்சணத்தில் கூடுதல் கவனம் செலுத்த மாட்டேன் என இவர் அடிம்பிடிப்பது வினோதமாகவும், விசித்திரமாகவும் உள்ளது.

 *மேலும் இத்தவறு தங்களுக்குத் தென்படவில்லையா?அல்லது தவறு என்று தெரிந்தும் தனது கருத்திற்கு இது ஒத்துப்போவதால் கண்டு கொள்ளவில்லையா?என்று எங்களைப் பார்த்துக் கேள்வி எழுப்புகிறார்.* 

தவறு செய்தது இவர். இவரது குறையை மறைக்க அத்தவறுக்கு எங்களைக் குற்றவாளியாக ஆக்க முனைவது எவ்வளவு பெரிய அநியாயம்?எங்களது மொழி பெயர்ப்பாக இருந்தால் அதில் இவர் குதர்க்கமும் குழப்பமும் செய்வதற்கு வாய்ப்பு இருக்கும் என்பதால் தான் இவரது மொழியாக்கத்தையே குறிப்பிட்டு பதிலளித்திருந்தோம்.

 *மேலும் தட்டி விட்டார்கள் என இவர் மொழி பெயர்த்திருந்ததை நாங்கள் தவறு என்று நினைக்கவுமில்லை. தற்போது கூறவுமில்லை. ஹதீஸில் யள்ரிபு யக்ரஉ ஆகிய அரபு வினைச் சொற்கள் கூறப்பட்டுள்ளன.* 

இதனுடைய பொருள் அடித்தல் என்பது தான் என நீங்கள் கூறுகிறீர்கள். இவ்விரு வார்த்தைகளுக்கான பொருளை அரபு அகராதியில் சென்று பார்த்தீர்களானால் அடித்தல் என்ற அர்த்தம் இவைகளுக்கு இருப்பது போல் தட்டுதல் என்ற அர்த்தமும் இவைகளுக்கு உண்டு என்பதை சந்தேகமற உணரலாம்.

 *கதவைத் தட்டுவதற்கும் இவ்விரு வார்த்தைகள் பயன்படுத்தப்படுவதுண்டு. எனவே இல்லாத அர்த்தத்தை இவர் தவறுதலாக கூறியிருந்து அதை நாங்கள் சரி கண்டிருந்தால் தான் நாங்கள் தவறைக் கண்டு கொள்ளாமல் அதை ஆதரித்தோம் என்ற குற்றச்சாட்டு வரும்.* 

அடித்தல் தட்டுதல் இன்னும் பல அர்த்தங்களைக் கொண்டு இவ்வார்த்தைக்கு தட்டுதல் என இவரே மொழி பெயர்த்து விட்டார். இம்மொழிபெயர்ப்பு தவறில்லை. இவ்வாறு மொழிபெயர்ப்பதற்கு அரபுமொழியில் இடம் உண்டு என்பதால் அதை நாங்களும் சரி கண்டு எழுதியிருந்தோம். இப்போதும் அவ்வாறு மொழி பெயர்ப்பது தவறில்லை என்றே கூறுவோம்.

 *நாங்கள் வலுவான வாதத்தை எழுப்பிய பிறகு தட்டி விட்டார்கள் என்று மொழி பெயர்த்தால் பெண்கள் தங்கம் அணிவதை தடை செய்ய முடியாது என்பதை உணர்ந்த இவர்மொழிபெயர்ப்பில் நாங்கள் தவறிழைத்து விட்டோம்என்று கூறி பின்வாங்குவது சந்தர்ப்பவாதமாகத் தெரியவில்லையா?இப்படி புரண்டு பேசுபவர்களிடத்தில் உண்மை எப்படி இருக்கும் என்பதை மக்கள் நடுநிலையோடு யோசிக்க வேண்டும்* .

 *குழப்பம் :5* 

1.ஹுபைறாவின் மகள் கையில் கனமான மோதிரங்கள் அணிந்திருந்ததனால் அவர் கையில் தன்னிடமிருந்த குச்சியினால் அடித்த நபி (ஸல்) அவர்கள்அல்லாஹ் உனது கரத்தில் நரக நொருப்பினால் ஆன மோதிரங்களை அல்லாஹ் ஆக்கிவிடுவது உனக்கு மகிழ்சியளிக்குமா?என மோதிரங்கள் அணிவதை எச்சரிக்கை செய்கிறார்களே தவிர தங்கமே வைத்திருக்கக் கூடாது எனக் கூறி அவைகளை விற்று அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் படி கூறவில்லை.

 *நமது பதில்:* 


 *உனது கரத்தில் நரக நொருப்பினால் ஆன மோதிரங்களை அல்லாஹ் ஆக்கிவிடுவது உனக்கு மகிழ்ச்சியளிக்குமா?* 

இந்த வாசகத்தை நபி (ஸல்) அவர்கள் ஹுபைராவின் மகளிடத்தில் கூறுவதால் அவர் தங்க மோதிரத்தை அணிந்து தான் இருந்தார் என சிரமப்பட்டு நிறுவுவதற்கு முன்வருகிறார்.

 *ஹுபைராவின் மகளிடத்தில் இந்த வாசகத்தை நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹம்மாம் என்பவர் மட்டுமே அறிவித்துள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் சில நேரங்களில் தவறிழைப்பவராவார்.* 

ஹம்மாமைத் தவிர வேறு நம்பகமானவர்கள் இதை அறிவிக்கும் போது இந்த இடத்தில் இந்த வாசகத்தை அவர்கள் கூறவில்லை. ஏன் இந்த வாசகத்தை அறிவித்த ஹம்மாம் சில நேரங்களில் இந்த வாசகத்தை குறிப்பிட்டும் சில நேரங்களில் இந்த வாசகத்தைக் குறிப்பிடாமலும் அறிவித்துள்ளார்.

 *எனவே இந்த வாசகம் நபி (ஸல்) அவர்கள் கூறியது தானா?என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்க இப்படிக் கூறியிருந்தாலும் இதன் மூலம் மோதிரங்களை அணிந்து தான் இருந்தார்கள் என்ற பொருள் எப்படி வரும்?* 

அல்லாஹ் உனது கையில் நெருப்பால் ஆன மோதிரங்களை அணிவிப்பது உனக்கு மகிழ்ச்சியூட்டுமா?என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருந்தால் தான் ஹுபைராவின் மகள் மோதிரத்தை அணிந்திருந்தார் என்ற பொருள் வரும். ஆனால் இங்கு நெருப்பால் ஆன மோதிரங்களை அல்லாஹ் ஆக்கிவிடுவது என்றே கூறப்பட்டுள்ளது. ஆக்குதல் என்பதற்கும் அணிவித்தல் என்பதற்குமுள்ள வித்தியாசத்தை இவர் உணராத காரணத்தால் மிகவும் சிரமப்பட்டு அணிந்து தான் இருந்தார்கள் என நிறுவப் பார்க்கிறார்.

 *மோதிரத்தை அணிதல் என்பதற்கு தகத்தம என்ற வாசகம் அரபு மொழியில் இருந்தும் கூட அந்த வாசகத்தை நபி (ஸல்) அவர்கள் இங்கு குறிப்பிடவில்லை. அணிவிப்பதற்கும் அணிவிக்காமல் கையில் வைத்திருக்கச் செய்வதற்கும் சாத்தியமான ஆக்குதல் என்ற வாசகமே கூறப்பட்டுள்ளது. எனவே இதை வைத்து அணிந்து தான் இருந்தார் என வாதிட முடியாது.* 

ஒரு பேச்சிற்கு ஹுபைராவின் மகள் தங்க மோதிரங்களை அணிந்து தான் இருந்தார் என்று வைத்துக் கொண்டாலும் அப்போதும் இந்த ஹதீஸில் நாம் எழுப்பிய வாதம் இருந்து கொண்டே தான் இருக்கும்.

 *தங்கத்தைச் சேமித்து வைத்திருப்பதையே இந்த ஹதீஸ் கண்டிக்கிறது என்பதே நமது வாதம். தங்கத்தைச் சேமித்து வைக்கக் கூடாது என்ற தடைக்குள் அணிவதும் அடங்கியிருக்கிறது. ஏனென்றால் தங்கத்தை அணிவது தங்கத்தை சேமிப்பதாகும்.* 

இந்த அடிப்படையில் ஹுபைராவின் மகள் தங்க மோதிரத்தை அணிந்து தான் இருந்தார் என்று வைத்துக் கொண்டாலும் அது நமது வாதத்திற்கு எதிராக அமையாது.

 *தங்கத்தை சேமித்து வைப்பது கூடாது என்ற கருத்தையே இந்த ஹதீஸ் கூறுகிறது என்பதை இன்னொரு வகையிலும் ஆணித்தரமாக நாம் விளக்கியிருந்தோம்.* 

தங்கம் அணிவது மட்டும் தான் கூடாதென்றால் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தங்கச் சங்கிலியை அணியாமல் கழற்றி தனது கையில் வைத்திருந்த போது அதை நெருப்புச் சங்கிலி என நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள்.

 *தங்கத்தை வைத்திருப்பதே கூடாது என்பதால் தான் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அதை வைத்திருந்த போது நபி (ஸல்) அவர்கள் எச்சரித்துள்ளார்கள். மேலும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அதை விற்று ஒரு அடிமையை விடுதலை செய்த தகவல் நபியவர்களுக்கு எட்டிய பிறகே அல்லாஹ் ஃபாத்திமாவை நரகத்திலிருந்து காப்பாற்றி விட்டான் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.* 

தங்கம் அணிவது மட்டுமே கூடாது என்ற இவர்களது கருத்து சரியாக இருக்குமேயானால் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அச்சங்கிலியை அணியாமல் கழற்றி கையில் வைத்திருக்கும் போது அல்லாஹ் ஃபாத்திமாவை நரகத்திலிருந்து காப்பாற்றி விட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருப்பார்கள். ஆனால் நரகம் என்ற இந்த எச்சரிக்கையை ஃபாத்திமா (ரலி) அவர்கள் கையில் வைத்திருந்த போது விடுக்கிறார்கள். அந்த நகையை விற்ற பிறகே இந்த எச்சரிக்கையிலிருந்து ஃபாத்திமா (ரலி) விடுபட்டதாக அறிவிக்கிறார்கள்.

 *இவ்வளவு தெள்ளத் தெளிவாக இந்த ஹதீஸில் தங்கத்தை வைத்துக் கொள்வது கூடாது என்ற கருத்து இருக்கும் போது இதற்குப் பதிலைக் இவர்கள் கூறாமல் அர்த்தமற்ற கேள்வி கேட்டு தப்பித்துச் செல்ல நினைக்கிறார்கள்.* 

ஹுபைராவின் மகள் சம்பந்தப்பட்ட நிகழ்வில் குதர்க்கம் செய்ய வாய்ப்பு இருந்ததால் அங்கு குதர்க்கம் செய்தார்கள். அந்த குதர்க்கமும் தவறு என நிரூபிக்கப்பட்டு விட்டது. ஆனால் இங்கு குதர்க்கம் செய்ய முடியவில்லை என்பதால் இதற்கான பதிலைக் கூறாமல் குறுக்கீடுகளை மட்டும் செய்கிறார்கள். அந்தக் குறுக்குக் கேள்விக்கான பதிலை பின்னர் விளக்குவோம்.

 *எனவே ஃபாத்திமா (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட நிகழ்வில் தங்கத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்ற கருத்தே அடங்கியிருக்கிறது என சந்தேகத்திற்கிடமின்றி நிரூபனமாகிறது. ஹுபைராவின் மகள் தங்க மோதிரங்களை அணிந்து தான் இருந்தார்கள் என வைத்துக் கொண்டாலும் அதுவும் தங்கம் வைத்துக் கொள்ளக்கூடாது என்ற பொதுவான இத்தடைக்குள் நுழைந்து கொள்ளும். எதிரானதல்ல.* 

மேலும் தங்க மோதிரங்களை வைத்துக் கொள்ளக் கூடாதென்றால் அதை விற்று அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு ஏன் நபி (ஸல்) அவர்கள் ஹுபைராவின் மகளிடத்தில் கூறவில்லை?என்று குறுக்குக் கேள்வியை இவர்கள் எழுப்புகிறார்கள்.

 *தங்கம் வைத்திருக்கக் கூடாது என்ற சட்டம் முன்னர் இருந்தது என்பதை மறுக்க இக்கேள்வி உதவாது.இதை என்ன செய்ய வேண்டும் என்ற தகவல் இங்கு சொல்லப்படவில்லையே என்ற அடிப்படையில் தான் இந்தக் கேள்வியைக் கேட்க முடியும்.* 

இந்தக் கேள்வியை இங்கு கேட்பதும் அர்த்தமற்றதாகும். ஏனென்றால் தங்கம் வெள்ளியை சேமித்து வைக்கக் கூடாது என்ற சட்டம் கூறப்பட்டதே அதை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதற்காகத் தான். தங்கத்தை சேமிக்கக் கூடாது என்ற கட்டளையில் அதை நல்வழியில் செலவு செய்ய வேண்டும் என்ற வழிகாட்டலும் அடங்கியிருக்கிறது.

 *எனவே அல்லாஹ்வின் பாதையில் செலவு செய் என்று தனியாகக் கூற வேண்டிய அவசியமில்லை என்பதால் அவ்வாறு நபி (ஸல்) அவர்கள் ஹுபைராவின் மகளிடத்தில் கூறவில்லை.* 

இவர்கள் ஹதீஸ்களைத் துண்டு துண்டாக விளங்குவதால் தான் இந்தக் கேள்வியை எழுப்புகிறார்கள். ஹதீஸ் முழுவதையும் படித்துவிட்டு முறையாகச் சிந்திப்பார்களானால் இந்தக் கேள்வியைக் கேட்டிருக்க மாட்டார்கள்.

 *ஃபாத்திமா (ரலி) அவர்கள் தங்கச் சங்கிலியை விற்று நற்காரியத்தில் செலவு செய்த பிறகே நரகத்திலிருந்து ஃபாத்திமா (ரலி) அவர்கள் விடுதலை பெற்றதாக நபி (ஸல்) அவர்கள் அறிவிக்கிறார்கள். இதிலிருந்து தங்கத்தை நல்வழியில் செலவு செய்ய வேண்டும் என்ற வழிமுறை கூறப்படுகிறது.* 

மேலும் ஒரு பிரச்சனைக்குத் தீர்வு ஒரே ஹதீஸில் தான் இருக்க வேண்டும் என நினைப்பது தவறு. வேறு வேறு ஆதாரங்களில் இருந்தாலும் அதை ஏற்பதே சரியான நடைமுறை.

 *தங்கத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்ய வேண்டும் என்ற வழிமுறை அதே ஹதீஸில் இறுதியில் கூறப்படுகிறது. மேலும் பின்வரும் வசனத்திலும் கூறப்படுகிறது.* 

எனவே ஹுபைராவின் மகளிடமும் ஃபாத்திமா (ரலி) அவர்களிடமும் தங்கத்தை அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யுமாறு நபி (ஸல்) அவர்கள் ஏன் கூறவில்லை என்ற கேள்வி அர்த்தமற்றதாகி விடுகிறது.

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ كَثِيرًا مِنْ الْأَحْبَارِ وَالرُّهْبَانِ لَيَأْكُلُونَ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَيَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلَا يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ فَبَشِّرْهُمْ بِعَذَابٍ أَلِيمٍ(34)يَوْمَ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَذَا مَا كَنَزْتُمْ لِأَنفُسِكُمْ فَذُوقُوا مَا كُنتُمْ تَكْنِزُونَ(35)9

 *அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும்,வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டுஎன்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு,அதனால் அவர்களின் நெற்றிகளிலும்,விலாப்புறங்களிலும்,முதுகுகளிலும் சூடு போடப்படும்.இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்! (என்று கூறப்படும்* 

 *அல்குர்ஆன் (9 : 34)* 

 *குழப்பம் :6* 

2.ஹுபைறாவின் மகள் நபியவர்களது மேற்படி செயலை பாத்திமா (ரழி) அவர்களிடம் கூறிய போது உடனே பாத்திமா (ரழி) அவர்கள் கழுத்திலிருந்த மாலையைக் கழற்றி விடுகிறார்களே தவிர விற்பதற்கு ஆளனுப்பவில்லை.

 *எனவே தங்கம் அணிவதைத் தான் நபி (ஸல்) அவர்கள் கண்டித்தார்கள் என்பதும் இதை ஹுபைறாவின் மகள் பாத்திமா (ரழி) அவர்களிடம் சொன்ன போது அதானால் தான் பாத்திமா (ரழி) அவர்கள் மாலையைக் கழற்றி விட்டார்கள் என்பதும் இதன் மூலம் உறுதியாகிறது.* 

 *நமது பதில்:* 

இவர்களின் மேற்கண்ட வாதமும் தவறு. ஃபாத்திமா (ரலி) அவர்கள் கழுத்தில் கிடந்த தங்கச் சங்கிலியைக் கழற்றினார்கள் என்று தான் ஹதீஸில் உள்ளது. அதை அணியக் கூடாது என்பதால் தான் கழற்றினார்கள் என்று காரணம் கற்பிப்பது இவர்களின் கைச்சரக்காகும்.

 *ஃபாத்திமா (ரலி) அவர்கள் சங்கிலியைக் கழற்றி இது அலீ (ரலி) அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கியது என்று கூறியதாக ஹதீஸில் உள்ளது. இந்த அடிப்படையில் அச்சங்கிலியைப் பற்றி ஹுபைராவின் மகளிடத்தில் விவரிப்பதற்காகத் தான் சங்கிலியைக் கழற்றினார்கள் என்று காரணம் கூற வாய்ப்புள்ளதே தவிர இவர்கள் கூறும் காரணத்திற்கு ஆதாரம் இல்லை.* 

ஹுபைராவின் மகள் நபி (ஸல்) அவர்கள் தன்னிடம் நடந்து கொண்ட விஷயத்தை ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் கூறிய உடன் அவர்கள் அதை ஏன் விற்கவில்லை?என்ற அர்த்தமற்ற கேள்வியையும் கேட்கிறார்கள்.

 *இவர்கள் நினைப்பது போல் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அன்று செயல்பட்டிருக்க வேண்டும் என்று நினைப்பது எந்த வகையில் நியாயம்?ஃபாத்திமா (ரலி) அவர்கள் சங்கிலியை நீண்ட காலம் கழற்றி வைத்திருந்தால் தான் அவர்கள் ஏன் செலவிடவில்லை என்ற கேள்வி வரும்* .

ஆனால் ஃபாத்திமா (ரலி) அவர்கள் சங்கிலியைக் கழற்றி பேசிக் கொண்டிருக்கும் போதே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து விடுகிறார்கள். கண்டனத்தைப் பதிவு செய்கிறார்கள். பிறகு அச்சங்கிலியை ஃபாத்திமா (ரலி) நல்வழியில் செலவிடுகிறார்கள். இதைக் கூட இவர்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நினைக்கும் போது மிகவும் வேதனையாக உள்ளது.

 *ஃபாத்திமா (ரலி) அவர்கள் அம்மாலையைக் கழற்றி விற்றுவர ஆளனுப்பினார்கள் என ஸஹ்ரான் தவறாக மொழிபெயர்த்தார் என இவர்கள் கூறி இந்தத் தவறுக்கு ஸஹ்ரான் தான் பொறுப்பு. நாங்கள் இல்லை என்ற தோற்றத்தைக் கொண்டு வருகிறார்கள்.* 

இவரது அமைப்பில் இருந்து கொண்டு இல்லாதவற்றையெல்லாம் ஒருவர் கூறினால் அதைப் பார்த்துக் கொண்டு இவ்வளவு நாள் ஏன் அமைதியாக இருந்தார்?இந்தத் தவறை இதற்கு முன் ஏன் மக்களுக்கு இவர் தெளிவுபடுத்தவில்லை. ஸஹ்ரான் செய்த தவறு இவரது கருத்தை நிலைநாட்டுவதற்கு உதவும் என்பதால் அதைக் கண்டு கொள்ளாமல் விட்டாரா?

 *குதர்க்கம் :7* 

 *3.நபியவர்கள் வந்து பாத்திமா (றழி) அவர்களது கையிலிருந்த மாலையைக் கண்டிக்கிறார்களே தவிர அதை விற்று அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்யும் படி அறிவுறுத்தவில்லை. பாத்த்திமா (றழி) அவர்களாகவே அதை விற்று ஒரு அடிமையை வாங்கி உரிமை விடுகிறார்கள்.* 

 *நமது பதில்:* 

ஒரு ஹதீஸைச் சரியான அடிப்படையில் புரிவதற்கான ஒழுங்கு முறையே இவர்களுக்குத் தெரியவில்லை. ஃபாத்திமா (ரலி) அவர்கள் சங்கிலியை விற்ற பிறகே நரகத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது என நபி (ஸல்) கூறியதிலிருந்து தங்கத்தை நல்வழியில் செலவு செய்தால் தான் நரகத்திலிருந்து தப்பிக்க இயலும் என்பதைச் சந்தேகமற விளங்க முடிகிறது. இதை ஏற்றுக் கொள்ளாமல் குறுக்குக் கேள்வியை மட்டும் கேட்பது எந்த வகையில் நியாயம்?

 *ஃபாத்திமா (ரலி) அவர்கள் சுய விருப்பத்தின் அடிப்படையில் தான் அதை நல்வழியில் செலவு செய்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் அவ்வாறு செய்தால் தான் நரகத்திலிருந்து தப்பிக்க முடியும் என நபி (ஸல்) அவர்கள் கூறியது அல்லாஹ்வின் பாதையில் தங்கத்தை செலவு செய்வது கட்டாயம் என்பதைக் காட்டவில்லையா?* 

தங்கத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்ற கட்டளையில் அதை நல்வழியில் செலவு செய்து விட வேண்டும் என்ற அம்சமும் அடங்கியிருக்கிறது.

 *உதாரணமாக மூன்று நாட்களுக்கு மேல் குர்பானி இறைச்சியை வைத்துக் கொள்வதற்கு ஆரம்ப நேரத்தில் ஒரு தடை இருந்தது. மூன்று நாட்களுக்கு மேல் இறைச்சியை வைத்துக் கொள்ளக் கூடாது என்ற சட்டத்திலிருந்து மூன்று நாட்களைக் கடந்தால் அந்த இறைச்சியை ஏழைகளுக்குக் கொடுத்து விட வேண்டும் என்ற அம்சமும் அத்தடையினுள் அடங்கியிருக்கிறது.* 

இந்த அடிப்படையில் தான் தங்கம் வைத்துக் கொள்ளக் கூடாது என்ற கட்டளையிலிருந்து அதை நல்வழியில் செலவு செய்துவிட வேண்டும் என்ற கருத்தும் அடங்கியிருக்கிறது. எனவே நபி (ஸல்) அவர்கள் தங்கத்தை நல்வழியில் செலவு செய்துவிடு என தனியாக ஃபாத்திமா (ரலி) அவர்களுக்குக் கூறவில்லை.

 *இந்த நுட்பத்தை ஃபாத்திமா (ரலி) அவர்களும் புரிந்து கொண்டு அதை செலவு செய்து விடுகிறார்கள். ஆனால் இந்த நுட்பம் இவர்களுக்கு விளங்கவில்லை.* 

 *குதர்க்கம் :8* 

ஏன் தங்க மாலையை அணிவது கூடாது என்றால் அதை அணியமல் ஒரு சொத்தாக வைத்திருந்திருக்கலாமே என்ற வாதத்தை முன்வைத்தவர்களுக்கு தங்கத்தை வைத்திருப்பதே கூடாது என்றால் அதை வேறு ஒரு (தள பாடமாக வீட்டுப் பாவனைப் பொருட்களாக) சொத்தாக மாற்றி வைத்திருக்கலாமே என்ற வாதம் எழுமே என்ற சிந்தனையும் இல்லை.

 *நமது பதில்:* 

 *தங்கத்தை அணிவது மட்டுமே கூடாதென்றால் அதை அணியாமல் ஒரு சொத்தாக ஃபாத்திமா (ரலி) அவர்கள் வைத்திருக்கலாமே?அதை அவர்கள் ஏன் விற்க வேண்டும்?என்ற கேள்வியை நாம் கேட்டிருந்தோம். அதற்கு எதிராகத் தான் மேற்கண்ட இந்தக் கேள்வியை இவர்கள் எழுப்பியுள்ளார்கள்.* 

குறுக்குக் கேள்வி கேட்பதில் தான் குறியாய் இருக்கிறார்களே தவிர நாம் கேட்ட கேள்விக்கு பதிலைக் கூற மறுக்கிறார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அந்த நகையை விற்க வேண்டியதின் அவசியம் என்ன?என்று நாம் கேட்டதற்கு முறையான பதிலை இவர்கள் இன்னும் கூறவில்லை. ஏன் மழுப்பலான பதிலைக் கூட இவர்கள் கூறவே இல்லை.

 *நமது கேள்விக்கு இவர்களிடம் பதில் இல்லை என்பது வெட்ட வெளிச்சமாகிறது. பதில் இல்லாத காரணத்தால் பெண்கள் தங்கம் அணியக் கூடாது என்ற இவர்களின் நிலைபாடும் தவறு என்பது உறுதியாகி விடுகிறது.* 

இப்போது இவர்கள் கேட்ட குறுக்குக் கேள்விக்கு வருவோம். தங்கத்தை வைத்திருக்கக் கூடாது என்றால் அதை வேறு ஒரு சொத்தாக மாற்றி வைத்திருக்கலாமே என்ற கேள்வியைக் கேட்கிறார்கள்.

 *தங்கத்தை வைத்திருந்தால் அதை நல்வழியில் செலவு செய்தால் தான் நரகத்திலிருந்து வெற்றியடைய முடியும் என்பதை ஃபாத்திமா (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸும் அல்குர்ஆன் (9 : 34)வது வசனமும் தெளிவாகக் கூறுகிறது.* 

தங்கத்தை வேறு பொருளாக மாற்றி வைத்துக் கொள்ளும் போது அதை நல்வழியில் செலவு செய்வது தடுக்கப்படுகிறது. தங்கம் வெள்ளியை சேமித்து வைக்கக் கூடாது என்ற தடையே அதை நல்வழியில் செலவு செய்ய வேண்டும் என்பதற்காகத் தான் பிறப்பிக்கப்பட்டிருக்கும் போது அதை வேறு பொருளாக மாற்றினால் மேற்கண்ட ஹதீஸையும் குர்ஆன் வசனத்தையும் மீறியதாக அமையும்.

 *தங்கத்தை மாற்றி வேறு பொருளாக வைத்துக் கொள்ளலாமே என்ற கேள்வி மிகவும் ஆபத்தானது. அபத்தமானது. நல்வழியில் செலவு செய்ய வேண்டும் என்ற இறைவனுடைய உத்தரவை தந்திரத்தின் மூலம் மீறுவதற்கான வழியையே இவர்கள் காட்டுகிறார்கள்.* 

சனிக்கிழமை மீண் பிடிக்கக் கூடாது என்று இறைவன் உத்தரவிட்டிருக்கும் போது அதை மீறுவதற்காக வெள்ளிக்கிழமையே வலையை வரித்து ஞாயிற்றுக்கிழமை மீண் பிடித்து இறைவனுடைய கோபத்திற்கு இஸ்ரவேலர்கள் ஆளானார்கள். அதே தந்திர வேலையை தங்கம் விஷயத்தில் ஃபாத்திமா (ரலி) அவர்களும் செய்திருக்கலாமே?என்ற அசிங்கமான எண்ணம் இவர்களிடத்தில் வரலாமா?

 *ஃபாத்திமா (ரலி) அவர்கள் பொருளாசை பேராசை உள்ளவர்களாக இருந்தால் தான் இவர்கள் கூறுவது போல் அவர்கள் தங்கச் சங்கிலியை மாற்றி வேறு பொருளாக வைத்திருப்பார்கள். ஆனால் உண்மையில் அவர்கள் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்பட்டவர்கள் என்பதால் தான் தந்திரத்தைக் கையாள்வதை விட்டுவிட்டு நல்வழியில் செலவு செய்து விடுகிறார்கள்.* 

தங்கச் சங்கிலியை அணிவது தான் கூடாது. அதை அணியாமல் சொத்தாக வைத்துக் கொள்ளலாம் என்பது இவர்களின் நிலைபாடு. எனவே தான் ஃபாத்திமா (ரலி) அவர்கள் தங்கச் சங்கிலியை அணியாமல் சொத்தாக வைத்துக் கொண்டிருக்கலாமே?என்று நாம் கேட்டோம். ஆனால் இதற்கு அவர்களிடம் எந்த பதிலும் இல்லை.

 *குதர்க்கம் :9* 

 *உன்மையில் இந்த ஹதீஸ் தங்கத்தின் நகை வடிவைப் பற்றியதே அல்லாமல் தங்கதின் பன வடிவைப் பற்றியது அல்ல என குறிப்பாக இருக்கும் போது தங்கத்தை வைத்துக் கொள்ளவே கூடாது எனக் கூறி பொதுவானதாக ஆக்குகிறோமே என்ற கவனமும் இல்லை. இந்தத் தவறான வாதத்தினால் அன்றிருந்த நாணய வடிவான தீனாரின் ஒன்றைக் கூட வைத்திருக்கக் கூடாது என இஸ்லாம் சட்டமியற்றியதாக ஒரு அறிவு பூர்வமற்ற கருத்தைக் கூற வேண்டி வருமே என்ற சிந்தனையும் இவர்களிடம் இல்லை.* 

 *நமது பதில்:* 

தங்கமே வைத்திருக்கக் கூடாது என்றால் அன்றைய காலத்தில் தங்கத்தில் இருந்த தீனாரையே வைத்துக் கொள்ளக் கூடாது என்று இஸ்லாம் சட்டம் இயற்றியதாக அமையுமே?என்று இவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.

 *தங்கம் வைத்திருக்கக் கூடாது என்ற சட்டம் இன்று வரை உள்ளது என நாம் கூறவில்லை. மாறாக ஒரு குறிப்பிட்ட காலத்தில் இவ்வாறு கூறப்பட்டு பிறகு மாற்றப்பட்டு விட்டது என்றே கூறுகிறோம் என்பதை இவ்விடத்தில் வாசகர்களுக்கு நினைவூட்டிக் கொள்கிறோம்.* 

மேற்கண்ட இந்தக் கேள்வி குர்ஆன் ஹதீஸ்களை வைத்து எழுப்பப்பட்ட கேள்வியல்ல. மாறாக இவர்களின் மனோ இச்சை அடிப்படையில் எழுந்த கேள்வியாகும்.

 *தங்கத்தை வைத்திருக்கக் கூடாது என்ற சட்டம் கருத்தை நாம் சுயமாகக் கூறவில்லை. குர்ஆன் ஹதீஸ்கள் மூலமே இதை நாம் நிரூபித்தோம். இனியும் சந்தேகமற நிரூபிப்போம்.* 

அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும்,வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டுஎன்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு,அதனால் அவர்களின் நெற்றிகளிலும்,விலாப்புறங்களிலும்,முதுகுகளிலும் சூடு போடப்படும்.இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்! (என்று கூறப்படும்)

 *அல்குர்ஆன் (9 : 34)* 

 *தங்கத்தை வைத்திருக்கக் கூடாது என்ற சட்டம் ஆரம்ப நேரத்தில் இருந்தது என்ற நமது கூற்றை இவர்கள் தவறாக புரிந்து கொண்டார்கள். தங்கம் வெள்ளியை மேல்மிச்சமாக வைத்திருக்கக் கூடாது என்ற கருத்தில் தான் நாம் இவ்வாறு கூறியிருந்தோம்.* 

மேற்கண்ட வசனத்தில் கூறப்பட்ட சேர்த்தல் என்பது தனது தேவையை விட மேல் மிச்சமானதை சேமிப்பது பற்றியதாகும். சேமிப்பது என்றாலே தன் தேவை போக மேல்மிச்சமானதை வைத்துக் கொள்வதையே குறிக்கும். ஒருவர் தனது தேவைகள் நிறைவேற்றப்படாமல் இருக்க செல்வத்தை தன் வசம் வைத்திருந்தால் அப்போது அதை கன்ஸ் சேமிப்பு என்று கூற முடியாது.

 *இந்த அடிப்படையில் தனது அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதற்காக ஒருவர் அந்நேரத்தில் தங்க நாணயம் என்ன?வேறு வடிவிலான தங்கத்தையே வைத்திருந்தால் கூட அது தவறில்லை. அதை இந்த வசனம் கண்டிக்கவுமில்லை. தனது தேவையை விட எஞ்சியுள்ளதையே பிறருக்குக் கொடுக்குமாறு இஸ்லாம் ஆரம்ப நேரத்திலும் கூறியது. தற்போதும் கூறுகிறது. இதைப் பின்வரும் வசனத்திலிருந்து புரிந்து கொள்ளலாம்* .

தாங்கள் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர்.உபரியானதைஎனக் கூறுவீராக! நீங்கள் சிந்திப்பதற்காக உங்களுக்குத் தனது வசனங்களை அல்லாஹ் இவ்வாறு தெளிவு படுத்துகிறான்.

 *அல்குர்ஆன் (2 : 219)* 

 *குழப்பம் :10* 

 *அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டுஎன்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காச்சப்பட்டு,அதனால் அவர்கள் நெற்றிகளிலும்,விலாப்புறங்களிலும்முதுகுகளிலும் சூடு போடப்படும் இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்ததை அணுபவியுங்கள் (என்று கூறப்படும்)* 

 *அல்குஆன் (9:34)* 

இந்த வசனம் தங்கத்தையும்,வெள்ளியையும் சேமித்து வைக்கக் கூடாது என்ற கருத்தைத் தருகிறது. இதை மட்டும் வைத்து ஒருவர் முடிவெடுப்பாராயின் பொருளாதாராத்தைச் சேமிப்பது கூடாது என்ற முடிவுக்கே வருவார். மேற்கண்ட ஹதீஸும் இதே கருத்தையே தருகிறது.என எழுதியுள்ளார்.

 *மேற்படி வனனத்தில் பயன்படுத்தப் பட்டுள்ள அறபி வார்த்தையானيكنزونஎன்பதற்கு ஒரே அர்த்தத்தைத் தரக் கூடியசேர்த்து வைத்தல்சேகரித்து வைத்தல்சேமித்து வைத்தல்பொருள் செய்துள்ளனர்.இதில் எமக்கு எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது .ஆனால் பந்தியின் இறுதியில்மேற்கண்ட ஹதீஸும் இதே கருத்தையே தருகிறது.என்பதில் தான் இவர்களது பிழையான விளக்கம் ஒழிந்துள்ளது.* 

சேமித்து வைத்தல் என்பதற்கும் பாவித்தல் என்பதற்குமிடையில் உள்ள சாதாரன பொருளியல் பிரயோகங்களை இவர்கள் சரியாக விளங்கவில்லை.

 *உதாரனமாக ஒருவர் பத்தாயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார்.அதை அப்படியே செலவளிக்கிறார். இதைப் பனப் பாவனை என்போம்.இன்னுமொருவர் ஆயிரம் ரூபாய் சம்பாதிக்கிறார். அதில் நூறு ரூபாயை சேர்த்து வைக்கிறார். இதை சேமிப்பு என்போம்.* 

எனவே மேற்படி வசனம் தங்கம் வெள்ளியை (வெள்ளியை என்ற எமது வார்த்தையை வாசகர்கள் நன்கு ஞாபகம் வைத்திருங்கள் எமது அடுத்த தொடரில் அடுத்த ஹதீஸ் பற்றி விளக்கும் போது இது உதவியாக இருக்கும்) சேமிப்பது கூடாது என்பதையே விளக்குகிறது.

 *ஆனால் ஹதிஸோ பெண்களின் அண்றாட பாவனைப் பொருளான மாலை,மோதிரங்கள் பற்றிக் குறிப்பிடுகின்றன.* 

எனவே மேற்படி சேமித்து வைத்தல் என்பதைக் குறிக்கு ம்வசனத்திற்கும் தங்க நகைகளின் பாவனையைக் குறிக்கும் மேற்படி ஹதீஸுக்கும் எந்த சம்பந்தமுமில்லை என்பது இதன் மூலம் தெளிவாகுவதுடன் யார் தங்களது வாதத்திற்கு சம்பந்தமில்லாத ஆதாரங்களைக் காட்டுகிறார்கள் என்பதும் இங்கு நிரூபணமாகிறது.

 *நமது பதில்:* 

 *9 : 34வது வசனமும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸும் தங்கத்தை சேமிப்பாக வைத்துக் கொள்ளக் கூடாது என்ற கருத்தைத் தருகின்றன என நாம் கூறியிருந்தோம்.* 

இதை மறுக்கும் விதமாக தவறான ஒரு விளக்கத்தைக் கூறுகிறார். சேமித்து வைப்பது கூடாது என்ற கருத்தை வசனம் கூறுகிறது. ஆனால் அந்த குறித்த ஹதீஸ் பெண்கள் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது என்று கூறுகிறது. தங்கத்தைச் சேமிப்பது என்பதும் அணிவது என்பதும் வெவ்வேறான விஷயம். எனவே வசனம் கூறுகின்ற பொருளை ஹதீஸ் தரவில்லை என்று வாதிடுகிறார்.

 *சேமித்தல் என்ற வார்த்தைக்கு சரியான பொருளை இவர் புரிந்து கொள்ளாததால் இந்த தவறான விளக்கத்தை கூறியுள்ளார். தன் தேவைக்கு அதிகமான பொருளை வைத்திருந்தாலே அது சேமிப்புத் தான். அப்பொருளை பெட்டிக்குள் பூட்டி வைத்திருந்தாலும் அல்லது வெளிப்படையாக எல்லோரும் பார்க்கும் வகையில் ஆபரணமாக செய்து அணிந்திருந்தாலும் சரியே.* 

இன்றைக்கும் கூட பொருளாதாரத்தைச் சேமிக்க விரும்பும் பலர் தங்க ஆபரணங்களைச் செய்து கொள்வதைப் பார்க்கிறோம். இது சேமிப்பு இல்லை என்று எவ்வாறு கூற முடியும்?

 *சேமிப்புப் பொருளுக்கு ஸகாத் கொடுக்க வேண்டும் என்று ஹதீஸில் உள்ளது. சேமிப்புப் பொருளைக் குறிப்பதற்கு கன்ஸ் என்ற வார்த்தை ஹதீஸில் பயன்படுத்தப்பட்டுள்ளது. மேற்கண்ட வசனத்தில் சேமிப்பதற்கு கூறப்பட்ட யக்னிஸுன் என்ற வார்த்தையும் ஹதீஸில் கூறப்பட்ட கன்ஸ் என்ற வார்த்தையும் ஒரே வேர்ச் சொல்லிலிருந்து வந்தவை. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.* 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தையளித்து அதற்கான ஸகாத்தை அவர் செலுத்தவில்லையாயின் (மறுமையில்) அவரது செல்வம் கொடிய நஞ்சுடைய (கிழட்டுப்) பாம்பாக அவருக்கு காட்சி தரும். அதற்கு (அதன் நெற்றியில்) இரு கருப்புப் புள்ளிகள் இருக்கும். மறுமை நாளில் அது (அவரது கழுத்தில் மாலையாக) சுற்றிக் கொள்ளும். பிறகு அந்தப் பாம்பு அவரது முகவாய்க் கட்டையை – அதாவது அவரது தாடைகளைப் பிடித்துக் கொண்டு,நான் தான் உனது செல்வம்;நான் தான் உனது கருவூலம்என்று சொல்லும்.

 *புகாரி (1403)* 

 *மேற்கண்ட ஹதீஸில் கருவூலம் என்ற வார்த்தைக்கு கன்ஸ் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. சேமிப்புப் பொருள் என்பது இதன் அர்த்தம். இவர்களின் வாதப்படி பெண்கள் அணியும் ஆபரணங்கள் சேமிப்புப் பொருளுக்குள் அடங்காது என்றால் மேற்கண்ட ஹதீஸில் சொல்லப்பட்ட எச்சரிக்கை தங்க ஆபரணங்களுக்குப் பொருந்தாது. எனவே ஆபரணங்களுக்கு ஸகாத் கொடுக்க வேண்டியதில்லை என்று கூற வேண்டி வரும். இவ்வாறு கூறுவதற்கு இவர் தயாரா?* 

தங்களது வாதத்திற்கு பொருந்தாத உதாரணத்தை வேறு கூறிக் கொள்கிறார்கள். பத்தாயிரம் ரூபாயைச் சம்பாதிப்பவர் ஐயாயிரம் ரூபாயை தன் தேவைக்கு செலவிட்டு அதைக் கரைத்து விட்டார். மீதமுள்ள ஐயாயிரம் ரூபாய்க்கு தங்க நகை வாங்குகிறார். இப்போது இவர் ரூபாய் வடிவில் சேமிக்காமல் நகை வடிவில் சேமிக்கிறார் என்று கூறுவோம். இவர் நினைத்தால் எப்போது வேண்டுமானாலும் அந்த நகையை விற்று காசாக்க முடியும். இவர் சேமிக்கவே இல்லை என்று சாதாரண அறிவு படைத்தவன் கூட கூற மாட்டான்.

 *எனவே சேமித்தல் என்பதற்குள் ஆபரணங்களைப் பயன்படுத்துவது அடங்காது. இவை இரண்டும் வெவ்வேறானவை என்ற வாதம் அறிவற்ற வாதம். எனவே9 : 34வது வசனமும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸும் ஒன்றுக்கொன்று சம்மந்தமுள்ளவை. ஒரே கருத்தைத் தரக்கூடியவை.* 

 *குதர்க்கம் :11* 

ஆனால் ஒரு நிலைப்பாடை விமர்சிக்கும் ஆய்வில்وقال أحمد بن شبيبஎன அறிவிப்பாளர் தொடர் தொடர்பற்றதாக ஆரம்பிக்கும் ஹதீஸை மேற்கோள் காட்டுகிறோமே,இது பற்றி கேள்விகள் எழுவதைத் தவிர்ப்பதற்காக அதன் அறிவிப்பாளர் தொடர் பூரனமாக விடம் பெறும் அறிவிப்பை தேடியெடுத்து மேற்கோள் காட்ட வேண்டும் என்ற பொறுப்புணர்வையும் இவர்களிடம் காணவில்லை.!!

 *நமது பதில்:* 

 *9 : 34வது வசனம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்னால் உள்ளது. ஸகாத் கடமையாக்கப்பட்டவுடன் மேல்மிச்சமாக செல்வத்தை சேமிப்பதற்கு அனுமதி தரப்பட்டது என்ற கருத்தில் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை நாம் முதல் ஆதாரமாகக் குறிப்பிட்டிருந்தோம்.* 

இதன் மூலம் தங்கம் வெள்ளியை சேமித்து வைக்கக் கூடாது என்ற சட்டம் ஆரம்பத்தில் இருந்து பின்பு மாற்றப்பட்டது என்ற வாதத்தை வைத்தோம்.

 *இந்த ஹதீஸ் சரியானது என்றாலும் நாம் சுட்டிக் காட்டிய குறிப்பிட்ட தொடர், தொடர்பு முறிந்தது என விமர்சித்துள்னர். தன்னிடத்தில் கொஞ்சம் கூட ஹதீஸ் கலையைப் பற்றி அறிவு இல்லை என்பதை இந்த விமர்சனத்தின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார்.* 

நாம் சுட்டிக்காட்டிய அறிவிப்பு தொடர்பு முறியாத முழுமையான அறிவிப்பாளர் தொடரைக் கொண்ட அறிவிப்புத் தான். இவர் தன்னை அறிவாளிகளைப் போன்றும் பொறுப்புணர்வுள்ளவர்களைப் போன்றும் காட்டிக் கொள்வதற்காக இவ்வாறு தேவையற்ற விமர்சனத்தைச் செய்துள்ளனர்.

 *நாம் சுட்டிக் காட்டியது தொடர்பு முறிந்த அறிவிப்பு என்றால் தொடர்பு முறியாத முழுமை பெற்ற அறிவிப்பை இவர்களால் காட்ட முடியுமா?நாம் குறிப்பிட்டுள்ள அறிவிப்பாளர் தொடரில் விடுபட்ட நபர் யார் என கூற முடியுமா?தங்களிடம்ஆயிரம் ஓட்டைகளை வைத்துக் கொண்டு மற்றவர்கள் மீது குற்றத்தை திணிக்க முற்படுகிறார்கள்.* 

 *குழப்பம் :12* 

அபூதாவுதில் இடம் பெறும் பின்வரும் செய்தியை இரண்டாவது ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

 *அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டுஎன்று எச்சரிப்பீராக!(9:34)இந்த வசனம் இறங்கிய உடன் இது முஸ்லிம்களுக்கு பெரும் பிரச்சனையாகி விட்டது.உங்கள் பிரச்சினையை நான் அகற்றுகிறேன் என்று கூறி உமர் (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் சென்று இறைத் தூதர் அவர்களே இவ்வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரும் பிரச்சனையாகி விட்டது என்று கூறினார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் உங்கள் செல்வங்களில் எஞ்சியிருப்பதைத் தூயமைப் படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லைஎன்ற ஹதீஸையும் குறிப்பிட்டுள்ளார்.* 

இவர்களது தவறை (அறியாமையை அல்ல) விளக்குவதற்காக வேண்டி முதலில் இவர் இரண்டாவதாகக் குறிப்பிட்ட ஹதீஸையே எடுத்துக் கொள்வோம்.

 *மேற்படி தங்கம் வெள்ளியை சேமித்து வைத்தல் என்ற வசனம் இறக்கப் பட்ட தன் பின்புதான் ஸகாத் கடமையாக்கப் பட்டது என்ற வாதத்திற்கான ஆதாரம் இந்த ஹதீஸில் எங்கே இருக்கிறது. மாறாக நபியவர்களின்உங்கள் செல்வங்களில் எஞ்சியிருப்பதைத் தூயமைப் படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லைஎன்ற தெளிவான வாக்குமூலம் ஏற்கனவே ஸகாத் கடமையாகி இருந்தது என்பதையல்லவா உணர்த்துகிறது* .

அதாவது மேற்படி இறைவசனம் இறங்கிய உடன் முஸ்லிம்களுக்கு பிரச்சனையாகி விட்டது. இந்த இடத்தில் இவர்கள் தமிழாக்கம் செய்யாமல் விட்டு விட்டفقال عمرஎன்ற வசனத்தின்فயும் சேர்த்தால் உடனே உமர் (ரலி) அவர்கள் நபியவர்களிடம் சென்று முறையிடுகிறார்கள். அப்போது நபியவர்களுக்கு ஸகாத் வசனம் இறங்கியது என்றிருந்தால் இவர்களின் வாதத்தில் அர்த்தமிருக்கிறது. ஆனால் ஹதீஸில் இருப்பதோஉங்கள் செல்வங்களில் எஞ்சியிருப்பதைத் தூயமைப் படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லைஎன்ற ஸகாத் என்பது ஏற்கனவே கடமையாக்கப் பட்டிருந்தது என்ற கருத்தை உறுதி செய்யும் நபி (ஸல்) அவர்களது கூற்றுதானே இருக்கிறது.

 *இப்போது தங்களது வாதத்திற்கு சிறிது சம்பந்தமில்லாத ஆதாரத்தை எடுத்துவைப்பது மட்டுமின்றி தங்களது வாதத்திற்கு எதிரான ஆதாரத்தையே யார் எடுத்து வைக்கிறார்கள் என்பது தெளிவாக விளங்குகிறது அல்லவா?!* 

 *நமது பதில்:* 

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

 *அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும்,வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று எச்சரிப்பீராக! (9 : 34)* 

இந்த வசனம் இறங்கிய உடன் இது முஸ்லிம்களுக்கு பெரும் பிரச்சனையாகி விட்டது. உங்கள் பிரச்சனையை நான் அகற்றுகிறேன் என்று கூறி உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இறைத்தூதர் அவர்களே இவ்வசனம் உங்கள் தோழர்களுக்கு பெரும் பிரச்சனையாகி விட்டது என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் செல்வங்களில் எஞ்சி இருப்பதை தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லை.

 *உங்களுக்குப் பின் வருபவர்களுக்கு செல்வம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் வாரிசுரிமை சட்டத்தையே அல்லாஹ் கடமையாக்கி இருக்கிறான். (எனவே ஸகாத் கொடுத்து விட்டால் தங்கம் வெள்ளியைச் சேர்ப்பது குற்றமில்லை) என்று கூறினார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் இறைவன் மிகப் பெரியன் என்று கூறினார்கள்* .

 *நூல் : அபூதாவுத் (1417)* 

மேற்கண்ட இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸிலிருந்து நாம் கேட்ட கேள்விக்கு பதிலைக் கூறாமல் அதிலிருந்து குறுக்குக் கேள்வியை மட்டும் கேட்கிறார். இவ்வாறு செய்வதால் இவரது வாதம் சரி என்று ஆகிவிட முடியாது. நாம் கேட்ட கேள்விக்குப் பதிலை முதலில் கூறிவிட்டு பிறகு அதிலிருந்து கேள்வியை எழுப்புவதே சரியான ஆய்வாளருக்கு அழகு.

 *9 : 34வது வசனம் தங்கம் வெள்ளியை சேமித்து வைக்கக் கூடாது என்று கூறுகிறது. இந்த வசனத்தை இப்படிப் புரிந்த காரணத்தால் தான் நபித்தோழர்கள் இவ்வசனம் குறித்த விளக்கத்தைத் தேடி நபியவர்களிடத்தில் வருகிறார்கள்.* 

அப்போது நபி (ஸல்) அவர்கள் இன்று இவர்கள் இவ்வசனத்திற்கு தவறாக விளக்கம் கூறுவது போல் இந்த வசனம் தங்கம் வெள்ளியை சேமித்து வைக்கக் கூடாது என்ற கருத்தைத் தரவில்லை என்றோ அல்லது அதிலிருந்து நீங்கள் இக்கருத்தை புரிந்தது தவறு என்றோ அல்லது இவ்வசனம் உங்களுக்குப் பொருந்தாது. வேதமுடையவர்கள் சம்பந்தப்பட்டது என்றோ நபித்தோழர்களிடம் கூறவில்லை.

 *மாறாக அவ்வசனம் அப்பொருளைத் தான் தருகிறது என்பதை ஆமோதிக்கவே செய்கிறார்கள். ஆனால் இவ்வசனம் கூறுவதை தாங்கள் செயல்படுத்த வேண்டியதில்லை. இது மாற்றப்பட்டு விட்டது என்பதை உணர்த்தக் கூடிய வகையில் இவ்வசனத்தைப் பற்றி பேசாமல் பொருளாதாரத்தைச் சேமித்து வைக்கலாம் என்பதற்கு ஆதாரமாக அல்லாஹ் வழங்கிய ஸகாத் மற்றும் வாரிசுரிமை சட்டங்களைச் சுட்டிக் காட்டுகிறார்கள்.* 

மேலும் நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு பதிலளிக்கையில் உங்கள் செல்வங்களில் எஞ்சியதைத் தூய்மைப்படுத்துவதற்காகத் தான் ஸகாத்தை அல்லாஹ் கடமையாக்கினான் என்ற வாசகத்தைக் கூறுகிறார்கள். அதாவது ஸகாத் கொடுத்தது போக மீதமுள்ள செல்வத்தை சேமித்துக் கொள்வதற்காகத் தான் ஸகாத்தே கடமையாக்கப்பட்டுள்ளது என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.

 *இந்த வாசகத்தை நன்கு கவனியுங்கள். ஸகாத் தான் செல்வத்தை தூய்மைப்படுத்தி அதைச் சேமிப்பதை அனுமதிக்கிறது என்றால் அந்த ஸகாத்துடைய சட்டம் வருவதற்கு முன்னால் செல்வங்கள் தூய்மையாக்கப்படவில்லை. இதற்கான அனுமதியும் இருக்கவில்லை என்றக் கருத்து இதன் மூலம் எவ்வளவு தெளிவாக விளங்குகிறது.* 

ஸகாத் சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் இருந்த நிலையையே அந்த வசனம் சுட்டிக் காட்டுகிறது. அது மாற்றப்பட்ட சட்டம் என்பதால் அதைச் செயல்படுத்த வேண்டியதில்லை என்பதை நபி (ஸல்) அவர்கள் தம் வாயாலேயே உணர்த்துகிறார்கள்.

 *மேலும் அந்த வசனத்தின் கருத்தைச் செயல்படுத்துமாறு நபித்தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறாததிலிருந்து இந்த வசனம் மாற்றப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாக விளங்குகிறது. ஒரு சட்டத்தை மாற்றுவதாக இருந்தால் அது முந்திக் கூறப்பட்டதாக இருந்தாலே மாற்ற முடியும். எனவே அந்த வசனம் ஸகாத்துடைய வசனத்திற்கு முந்தியது என்பது இதன் மூலம் தெளிவாகிறது.* 

இந்த வலுவான வாதத்திற்கு ஆதாரமாகத் தான் இந்தச் செய்தியை நாம் குறிப்பிட்டிருந்தோம். இந்த வாதத்திற்கு அவர் பதில் கூறாமல் எதிர்க் கேள்வியை மட்டும் கேட்பதிலிருந்து இவரிடத்தில் உண்மை இல்லை என்பதும் இந்த வசனம் தொடர்பாக நாம் கூறுகின்ற கருத்தே உண்மை என்பதும் தெளிவாகிறது.

 *இனி இவர் கேட்ட அந்தக் குறுக்குக் கேள்விக்கு வருவோம். இந்த வசனம் இறங்கிய பிறகு இதற்குரிய விளக்கத்தை நபித்தோழர்கள் கேட்கிறார்கள். அதற்கு பதிலாக ஸகாத்துடைய வசனத்தை நபி (ஸல்) அவர்கள் பதிலாகக் குறிப்பிடுகிறார்கள். எனவே இவ்வசனத்திற்கு முன்பாகவே ஸகாத்துடைய வசனம் அருளப்பட்டு விட்டது என்ற கருத்து வருகிறதே என்ற வாதத்தை வைக்கிறார்கள்.* 

மேலே நாம் கூறிய சரியான விளக்கத்திற்கு இந்தக் கேள்வி ஒன்றும் முரண் இல்லை. அந்த வசனம் ஸகாத் சட்டம் வருவதற்கு முன்பு உள்ளது என்பதை மேலே நாம் நிரூபித்திருக்கிறோம். அதற்கு முரண் இல்லாத வகையில் இந்த கேள்விக்கான பதிலை நாம் காண வேண்டும். பதிலை அறிந்து கொள்வதற்கு முன் ஒரு உண்மையை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

 *ஒரே வசனம் பல முறை இறங்கியதற்கான ஆதாரப்பூர்வமான தகவல்கள் ஹதீஸ்களில் இருக்கின்றன. இது எல்லோரும் ஏற்றுக் கொண்ட ஒரு விஷயம். இனி தேவை இருக்குமானால் இதற்கான ஆதாரங்கள் அடுக்கடுக்காக எடுத்து வைப்பதற்குத் தயாராக இருக்கிறோம்.* 

முதலில் இந்த வசனம் இறங்குகிறது. அப்போது பொருளாதாரத்தைச் சேமித்து வைக்கக் கூடாது என்ற தடை விதிக்கப்படுகிறது. இந்த வசனத்தை மாற்றுகின்ற வகையில் பிறகு ஸகாத்துடைய வசனம் இறங்குகிறது. இந்நிலையில் முதலில் இறங்கிய வசனத்தை அல்லாஹ் மீண்டும் இறக்குகிறான். உடனே நபித்தோழர்கள் இவ்வசனம் குறித்து கேள்வி எழுப்ப இவ்வசனம் கூறும் சட்டம் ஸகாத்துடைய வசனத்தால் ஏற்கனவே மாற்றப்பட்டு விட்டது என பதிலளிக்கப்படுகிறது.

 *அந்த வசனத்தின் சட்டம் தற்போது இல்லை என்ற உண்மையை நபித்தோழர்களுக்கு விளக்குவதற்காகக் கூட இறைவன் அதை மீண்டும் அருளி இருக்கலாம்.* 

இவ்வாறு விளங்கிக் கொண்டால் ஸகாத்துடைய வசனம் ஏற்கனவே இருந்துள்ளதே என்று இவர்கள் கேட்ட கேள்விக்கும் பதில் கிடைத்து விடுகிறது. அந்த வசனம் மாற்றப்பட்டது என ஹதீஸ் கூறும் கருத்தை நாம் மறுக்க வேண்டிய அவசியமும் இருக்காது.


 *குழப்பம் :13* 


*20. 🧕🧕🧕 தொடர் 3 🧕🧕🧕பெண்கள்🧕 தங்க 👙👙நகைகள்👙 👙அணியலாமா❓ஓர் 🧕ஆய்வு🧕🧕🧕*


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 30* 


 *🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment