*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️*
*🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕*
*🌹🌹
*🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋*
*🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐*
*📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*
*👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*
*👉👉👉 தொடர் பாகம் 31 👈👈👈*
*20. 🧕🧕🧕இறுதி பாகம் 4🧕🧕🧕பெண்கள்🧕 தங்க🧕நகைகள்🧕அணியலாமா❓🧕ஓர் 🧕ஆய்வு🧕🧕🧕*
*குழப்பம் : 7*
*இந்த இடத்தில் ஒரு முக்கிய விடயத்தை வாசகர்களுக்குச் சுட்டிக் காட்ட விரும்புகிறோம். நாம் இங்கு குறிப்பிட விரும்புவது அறிஞர்களுடைய சட்டம் சம்பந்தமான கூற்றுகளை அல்ல. மாறாக அறபு மொழி சம்பந்தப் பட்ட ஒரு சொல்லை பிஜே அவர்கள் குறிப்பிட்டிருப்பது போல் அவர்களும் அரைகுறையாக இலக்கணத்தை விளங்கியிருந்தார்களா அல்லது அறபு இலக்கணத்தை பிஜே அவர்களை விடவும் நன்கு விளங்கியிருந்தார்களா என்பதைக் காட்டுவதற்காகவே, குறித்த ஹதீஸை அறிஞர்கள் ஆணுக்குரியதாக விளங்கினார்களா அல்லது பெண்ணுக்குரியதாக விளங்கினார்களா என்பதை இங்கு சுட்டிக் காட்டுகிறோம்.*
1. குறித்த ஹதீஸ் இடம் பெறும் கிரந்தங்களில் ஒன்றான ஸுனன் அபீ தாவுத் எனும் கிரந்தத்தில் இந்த ஹதீஸை இமாம் அபூதாவுத் அவர்கள் باب ما جاء في الذهب للنساء பெண்கள் தங்கம் அணிவது தொடர்பாக இடம் பெற்ற ஹதீஸ்கள் என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார்கள்.
*2. குறித்த ஹதீஸ் இடம் பெறும் மற்றுமொரு கிரந்தமான ஸுனன் அல் பைஹகி அல்குப்றா எனும் கிரந்தத்தின் ஆசிரியர் இமாம் பைஹகி அவர்கள் இந்த ஹதீஸையும் பெண்கள் தங்கம் அணிவது கூடாது என வலியுறுத்தும் சில ஹதீஸ்களையும் باب سياق أخبار تدل على تحريم التحلي بالذهب தங்கம் அணிவது கூடாது என்பதைக் காட்டும் ஹதீஸ்கள் என்ற தலைப்பில் பதிவு செய்துள்ளார்கள்.*
3. குறித்த ஹதீஸ் இடம் பெறும் ஸுனன் அபீதாவுத் கிரந்தத்தின் முக்கிய விரிவுரை நூலான ஔனுல் மஃபூத் கிரந்தத்தின் ஆசிரியர் முஹம்மத் ஷம்ஸுல் ஹக் அல் அளீம் ஆபாதி அவர்கள் இந்த ஹதீஸின் ஹபீப் எனும் வார்த்தையை விளக்கும் போது,
حبيبه ) أي محبوبه من زوجة أو ولد أو غيرهما ) அதாவது தனது நேசத்துக்குரிய மனைவி பிள்ளை பேண்றவர்களுக்கு. என விளக்கமளித்துள்ளதையும் பார்க்கிறோம்.
*4.குறித்த ஹதீஸுக்கு விளக்கமளிக்கும் போது பிரபல்ய அறபு மொழிப் பண்டிதர் முஹம்மத் அல் அமீன் அஷ்ஷின்கீதி (ரஹ்) அவர்கள் தனது அழ்வாஉல் பயான் எனும் அல்குர்ஆன் விரிவுரையில் ( 2ற 355, 356 ) சிலர் இந்த ஹதீஸில் ஹபீப் எனும் வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளதால் இது ஆணையே குறிக்கிறது, பெண்ணைக் குறிக்குமென்றால் ஹபீபா என இடம் பெற்றிருக்க வேண்டும் எனக் கூறுவது தவறு என்றும் ஹபீப் எனும் வார்த்தை அறபு மொழியில் பெண்ணைக் குறிக்க பரவலாக பயன்படுத்தப்படும் என்பதை ஹஸ்ஸான் பின் தாபித் (ரழி) அவர்களது கவி வரிகளையும் குதையிர் அஸ்ஸா (كثير عزة) எனும் கவிஞனின் வரிகளையும் ஆதாரம் காட்டி விளக்கியுள்ளதையும் காண்கிறோம்.*
*நமது பதில் :*
ஹதீஸில் உள்ள ஹபீப் என்ற வார்த்தை பெண்ணை மட்டுமே குறிக்கிறது என்ற இவர்களின் வாதத்தை ஹதீஸிலிருந்து நிரூபிக்க முடியவில்லை. அரபு இலக்கணத்தின் மூலமாகவும் நிரூபிக்க முடியவில்லை.
*எனவே இப்போது தங்கள் வாதத்தை நிலைநாட்ட சில அறிஞர்களின் கூற்றின் பக்கம் தாவியுள்ளனர். அறிஞர்களின் சட்டம் சம்பந்தமான கூற்றுக்களை இங்கே குறிப்பிடவில்லை என்ற பொய்யை வேறு சொல்லிக் கொள்கிறார்*
.
ஹபீப் என்ற வார்த்தை யாரைக் குறிக்கிறது என்பதில் தான் பெண்கள் தங்கம் அணியலாமா? கூடாதா? என்ற முடிவு அடங்கியிருக்கிறது. எனவே இந்த வார்த்தையை அந்த அறிஞர்கள் புரிந்தது போன்று தான் நாமும் புரிய வேண்டும் என்று கூறினால் அவர்கள் கூறும் சட்டத்தையே நாமும் கூற வேண்டும் என்பதே இதன் பொருள்.
*அறிஞர்கள் கூறும் சட்டங்கள் எப்படி ஆதாரங்களுடன் இருந்தால் மட்டும் ஏற்கப்படுமோ அது போல் அவர்கள் செய்யும் அர்த்தம் அதற்கான ஆதாரங்களின் அடிப்படையில் அமைந்திருக்க வேண்டும். சட்டங்களில் எப்படி அறிஞர்கள் தவறிழைக்க வாய்ப்பு உள்ளதோ அது போல் அர்த்தம் செய்வதிலும் தவறிழைக்க வாய்ப்பு உண்டு.*
எனவே எந்த அறிஞராக இருந்தாலும் அவர் செய்யும் அர்த்தம் சரியானதாக இருக்க வேண்டும். அரபு இலக்கண விதி கூறுவதற்கு முரணாக ஒரு அறிஞர்கள் அர்த்தம் செய்திருந்தால் அதுவும் நிராகரிக்கப்பட வேண்டும். இந்தச் சாதாரண உண்மை கூட தெரியாமல் அறிஞர்களுக்கு எந்த இலக்கண வரம்பும் கிடையாது; அவர்கள் விருப்பம் போல் அர்த்தம் செய்து கொள்ளலாம் என்று அறிவீனமான வாதத்தை முன் வைக்கிறார்.
*மேலும் அறிஞர்கள் விளங்கியது போன்று ஹபீப் என்ற பதத்தை நாம் விளங்க வேண்டும் என்ற வாதம் மத்ஹப் கொள்கையின் பக்கம் அழைத்துச் செல்லக் கூடியதாகும்.*
அறிஞர்கள் ஹதீஸ்களைத் தவறுதலாகப் புரிந்து தவறான சட்டத்தை எடுப்பதற்கு வாய்ப்புள்ளது என்பதால் தான் அவர்களின் சட்ட சம்பந்தமான கூற்றுக்களை இவர்கள் உட்பட நாமும் ஆதாரமாக எடுப்பதில்லை.
*அறிஞர்கள் மார்க்கத் தீர்ப்புகளில் தவறான முடிவை எடுப்பது சாத்தியம் என்றால் ஹதீஸில் கூறப்பட்ட ஒரு வார்த்தையைத் தவறுதலாக அவர்கள் விளங்கிவிடுவதற்கும் சாத்தியம் இருக்கத் தான் செய்கிறது.*
ஒரு அரபுச் சொல் சம்பந்தப்பட்ட சட்டத்தை அரபு இலக்கணத்தைச் சுட்டிக் காட்டியே விளக்க வேண்டும். இதை விட்டுவிட்டு அரபு இலக்கணத்தை பீஜே அரைகுறையாக விளங்கினாரா? அல்லது அறிஞர்கள் விளங்கினாரா? என்ற கேள்வி ஆய்விற்கு அப்பாற்பட்டிருப்பதுடன் முட்டாள்தனமானது.
*தங்களுடைய வாதங்கள் தோற்றுப் போகும் போது அசத்தியவாதிகள் கேட்கும் கேள்வியையே இவரும் கேட்டுள்ளார்.*
அறிஞர்கள் செய்யும் அர்த்ததை நாமும் செய்ய வேண்டும் என்றால் மாற்றமாகவும் அறிஞர்கள் அர்த்தம் செய்துள்ளார்களே? அதை என்ன செய்யப்போகிறார்?
*இப்னு ஹஸ்ம் என்ற அறிஞர் பின்வருமாறு விளக்கியுள்ளார்.*
قال أبو محمد هذا مجمل يجب أن يخص منه قول رسول الله صلى الله عليه وآله وسلم إن الذهب حرام على ذكور أمتي حلال لإناثها لأنه أقل لمعان منه ومستثنى بعض ما فيه
*தனது ஹபீபிற்கு (நேத்திற்குரியவருக்கு) நெருப்பால் ஆன வளையத்தை அணிவிக்க விரும்புபவர் தங்கத்தால் ஆன வளையத்தை அணிவிக்கட்டும் என்ற ஹதீஸில் நேசத்திற்குரியவர் என்று மூடலாகவே கூறப்பட்டுள்ளது. தங்கம் அணியக் கூடாது என்று இதில் கூறப்படுகின்ற சட்டம் ஆணுக்கா? அல்லது பெண்ணுக்கா? என்ற விபரம் கூறப்படவில்லை.*
ஆனால் நபி (ஸல்) அவர்கள் எனது சமுதாயத்தில் ஆண்களுக்கு தங்கம் ஹராம். பெண்களுக்கு ஹலால் என்று வித்தியாசப்படுத்திக் கூறிவிட்டதால் ஹதீஸில் கூறப்பட்ட தங்கம் அணியக் கூடாது என்ற சட்டம் பெண்களைக் குறிக்காது. ஆண்களை மட்டுமே குறிக்கும் என்ற கருத்தில் இப்னு ஹஸ்ம் மேற்கண்ட அரபு வாசகத்தைக் கூறியுள்ளார்.
*ஹபீப் என்ற வார்த்தை பெண்களை மட்டுமே குறிக்கிறது என இவர்கள் விளங்கியது போல் இப்னு ஹஸ்ம் விளங்கவில்லை. மாறாக இது ஆணையும் பெண்ணையும் குறிக்கின்ற மூடலான வார்த்தை என்றும் இந்த இடத்தில் அது ஆணை மட்டுமே குறிக்கும் என்றே கூறுகிறார். இப்னு ஹஸ்ம் அரபு மொழியில் திறன் பெற்ற சிறந்த அறிஞராவார். எனவே இவர் ஹபீப் என்ற வார்த்தையை விளங்கியது போல் இவர்கள் விளங்குவார்களா?*
இப்படி தேவையில்லாத விஷயங்களில் நுழைந்து இவர்களுக்கு எதிரான ஆதாரங்களை இவர்களே நமக்கு எடுத்துத் தருகிறார்கள்.
*குழப்பம் : 9*
*அத்துடன் குறித்த ஹதீஸ் பெண்களைத் தான் குறிக்கிறது என்பதை அறபு சமுதாய ஆண்கள் குறிப்பாக நபித்தோழர் சமூக ஆண்கள் இந்த ஹதீஸில் இடம் பெற்றிருக்கும் மாலை, காப்பு ஆகிய ஆபரனங்களை அணியும் வழக்கம் இருந்த்ததில்லை என்பதையும் ஆபரணங்கள் அணியும் வழக்கு அன்றிருந்த பெண்களிடம் தான் இருந்தது என்பதையும் அத்தியாயம் அஸ்ஸுஹ்ருஃப் (அலங்காரம்) பதினெட்டாம் வசனமான,*
( أومن ينشأ في الحلية وهو في الخصام غير مبين) ஆபரணங்களில் வளர்க்கப்படும், வழக்கை தெளிவாக எடுத்துரைக்கவும் முடியாத பெண்களையா (அவர்கள் அல்லாஹ்வுக்கென ஆக்குய்கிறார்கள்) என்ற வசனம் உறுதி செய்கிறது.
*எனவே மேற்படி இலக்கண மற்றும் இலக்கிய சான்றுகளுடன் நோக்கும் போது கீழ் வரும் இவர்களது வார்த்தைகளுக்கு எந்த வித பெறுமானமும் கிடையாது.*
*நமது பதில் :*
இந்த வாதமும் அறியாமையின் மீது எழுப்பப்பட்டுள்ளது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒன்றை அனுமதித்தால் அது அன்றைய அரபுகளிடம் வழக்கத்தில் இருக்க வேண்டும் என்பது உலகில் யாருமே இதுவரை கண்டு பிடிக்காத அற்புதக் கண்டு பிடிப்பாக உள்ளது.
*நபிகள் நாயகம் ஸல் அவர்கள் அன்றைய மக்களிடம் வழக்கத்தில் உள்ளதா இல்லையா என்று பார்த்து சட்டம் சொல்ல மாட்டார்கள். வழக்கத்தில் இருக்கலாமா கூடாதா என்பதைத் தான் அவர்கள் பார்ப்பார்கள். வழக்கத்தில் உள்ளபடி நடக்கலாம் என்றால் தூதருக்கு ஒரு வேலையும் இல்லை. அன்றைய அரபுகளிடம் வழக்கத்தில் இல்லாவிட்டாலும் அனுமதிக்கப்பட்டவைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொல்லியாக வேண்டும்.*
செருப்பு போட்டு இறைவனை வணங்கும் வழக்கம் அந்த மக்களிடம் இருக்கவில்லை. அப்படி இருந்தும் செருப்பு அணிந்து தொழலாம் என்று அனுமதிக்கவில்லையா? நபிகள் நாயகம் காலத்தில் இந்த வழக்கம் இல்லாததால் இது ஹதீஸ் இல்லை என்று இவர் கூறினாலும் கூறுவார்.
*நபிகள் நாயகம் காலத்தில் வழக்கத்தில் இருப்பதோ இல்லாமல் இருப்பதோ பிரச்சனை இல்லை. அனுமதி அளித்தார்களா இல்லையா என்பது தான் பிரச்சனை.*
(நபிகள் நாயகம் காலத்தில் ஆண்கள் நகை அணியும் வழக்கம் இருந்தது என்பது தனி விஷயம்)
*குழப்பம் : 10*
*அடுத்து இன்னுமொரு இலக்கண ரீதியான தவறான ஒரு விளக்கத்தையும் தொடர்ந்து எழுதுகிறார்கள்.*
அவனுக்கு என்று மொழியாக்கம் செய்த இடங்கள் அனைத்திலும் ஹா என்ற பெண்பால் பயன்படுத்தப்படாமல் ஹுஎன்ற (அவனுக்கு) ஆண்பால் பயன்படுத்தப்பட்ட்டுள்ளது.
*அதாவது இந்த இடத்தில் அவளுக்கு என பெண்பால் பிரதிப் பெயர்ச் சொல்லுக்கு அறபியில் பயன்படுத்தும் ஹா பயன்படுத்தப்படாமல் அவனுக்கு என்பதைக் குறிக்கும் ஹூ என்பது பயன்படுத்தப்பட்டுள்ளதால் இந்த ஹதீஸ் ஆணையே குறிக்கிறது என்பது இவர்களது (தவறான) விளக்கமாகும்!!.*
காரணம் அறபு மொழியில் ஒரு சொல்லின் கருத்தைக் கவனத்திற் கொண்டு அதன் பிரதிப் பெயர்ச் சொல்லைப் பயன்படுத்துவதும் அல்லது அந்த சொல்லின் கட்டமைப்பைக் கவனத்திற் கொண்டும் அதன் பிரதிப் பெயர்ச் சொல்லைப் பயன்படுத்துவதும் சர்வ சாதாரணமாகும்.
*உதாரணமாக, ஸூறா யூஸுபின் وجاءت سيارة فأرسلوا واردهم என்ற பத்தொன்பதாவது வசனத்தை எடுத்துக் கொண்டால் ஒரு பிரயாணக் கூட்டம் வந்தது என சொல்லின் கட்டமைப்பைக் கருத்திற் கொண்டு அஃறினையாக (அறபு மொழியில் பெண்பால் ஒருமையில்) பயன்படுத்திய அல்லாஹ் அதே தொடரில் அவர்கள் தங்களது தண்ணீர் பிடித்துவருபவரை அனுப்பினார்கள் என அந்த சொல் குறிக்கும் கருத்தைக் கவனத்திற் கொண்டு ஆண்பால் பன்மையில் பயன் படுத்தியுள்ளதைப் பார்க்கிறோம்.*
*நமது பதில் :*
ஒரு வார்த்தையின் கருத்தைக் கவனித்து அதற்குரிய பிரதிப் பெயர்ச்சொல்லைக் குறிப்பிடுவதும் அவ்வார்த்தையின் கட்டமைப்பைக் கருத்தில் கொண்டு அதனுடைய பிரதிப்பெயர்ச்சொல்லைக் குறிப்பிடுவதும் அரபுமொழியில் இருக்கத் தான் செய்கிறது. இதை நாம் மறுக்கவில்லை.
*ஆணைக் குறிக்கின்ற ஒரு வார்த்தையைப் பெண்ணைக் குறிக்க பயன்படுத்துவதாக இருந்தால் நாடப்படுபவர் பெண் தான் என்பதை உணர்த்தும் வகையில் வாக்கியத்தில் ஏதாவது சான்று இருக்க வேண்டும்.*
இது போன்ற ஒரு வார்த்தையின் பிரதிப் பெயர்ச்சொல் பெண்பாலாக வந்திருந்தால் அவ்வார்த்தை பெண்ணையே குறிக்கிறது என முடிவு செய்வதற்கு இந்த பெண்பால் பிரதி பெயர்ச்சொல்லே போதுமான சான்றாகிவிடும்.
*ஆனால் ஹதீஸ் இந்தச் சான்றுக்கும் இடம் தராமல் அமைந்துள்ளது என்பதே நமது வாதம்.*
இவர்கள் சுட்டிக்காட்டிய ஒரு கவிதை வரியை இவர்களின் இக்கேள்விக்கு பதிலாகத் தருகிறோம்.
مَنَعَ النَّوْمَ بِالْعِشَاءِ الْهُمُومُ … وَخَيَالٌ إِذَا تَغَارُ النُّجُومُ
مِنْ حَبِيبٍ أَصَابَ قَلْبَكَ مِنْهُ سَقَمٌ … فَهُوَ دَاخِلٌ مَكْتُومٌ
*அள்வாஉல் பயான் நூலின் ஆசிரியர் இக்கவிதையில் கூறப்பட்ட ஹபீப் என்பது பெண்ணைத் தான் குறிக்கிறது என்பதை இவர்களைப் போன்று ஆதாரமில்லாமல் கூறவில்லை.*
وَمُرَادُهُ بِالْحَبِيبِ أُنْثَى ; بِدَلِيلِ قَوْلِهِ بَعْدَهُ :
لَمْ تَفُتْهَا شَمْسُ النَّهَارِ بِشَيْءٍ … غَيْرِ أَنَّ الشَّبَابَ لَيْسَ يَدُومُ
மாறாக ஹபீபின் பிரதிபெயர்ச்சொல் ஹா என்று பெண்பாலாக வந்திருப்பதையே ஹபீப் என்ற வார்த்தை பெண்ணைக் குறிக்கிறது என்பதற்கு ஆதாரமாகக் காட்டினார்.
*இக்கவிதையில் இந்த ஆசிரியர் ஆதாரத்துடன் நிரூபித்ததைப் போன்று இவர்கள் நிரூபிக்கவில்லை. நிரூபிப்பதற்கு எந்த ஆதாரமும் ஹதீஸில் இல்லை என்பதை உணர்த்தவே மேற்கண்டவாறு எழுதியிருந்தோம். இதை இவர் புரிந்து கொள்ளாமல் வேறொரு இலக்கண விதிக்குத் தாவிவிட்டார்.*
*குழப்பம் : 11*
அடுத்து ஆய்வாளர்!! அது போல் உங்களுக்கு என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் ஆணைக் குறிக்கும் கும் என்ற் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணைக் குறிக்கும் குன்ன என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.
*பயன்படுத்துங்கள் என்ற சொல் அமைப்பும் ஆண்பால் முன்னிலை பன்மையாகத் தான் பயன் படுத்தப்பட்டுள்ளது.*
எனவே இந்த ஹதீஸ் பெண்கள் பற்றியே பேசவில்லை. என வாதிட முற்படுவதும் தவறாகும்.
*காரணம் இந்த ஹதீஸ் பெண்களுக்குத் தங்க நகையை வழங்குபவர்கள், அன்பளிப்புச் செய்பவர்கள், அணிவித்து விடுபவர்கள் ஆண்கள் என்பதைக் கருத்திற் கொண்டு கூறப்பட்டதாகும் என்ற விபரம் ஹதீஸிலேயே தெளிவாக உள்ளதால் ஆண் பால் முன்னிலைப் பண்மையைக் குறிக்கும் பிரதிப் பெயர்ச் சொல்லான கும் அறபி வார்த்தை பயன்படுத்தப் பட்டுள்ளது.*
அத்துடன் பயன்படுத்துங்கள் என்ற சொல் அமைப்பே ஹதீஸில் இடம் பெறவில்லை என்பதுடன் عليكم என்ற வார்த்தையில் தொக்கி நிற்கும் ஏவல் பயன் படுத்துங்கள் (அணியுங்கள் ) என்பதல்ல அணிவியுங்கள் என்பதே என்ற விபரத்தையும் ஹதீஸின் ஆரம்பவரிகளான அணிவிக்கட்டும் என்ற பதம் உணர்த்துகிறது.
*நமது பதில்* :
*மாறாக வெள்ளியை உங்களுக்கு ஏவுகிறேன் என்ற வாக்கியத்தில் கூறப்பட்ட உங்கள் என்பது ஆண்களைத் தான் குறிக்கும் என்பதை இவர் ஒத்துக் கொண்டுள்ளார். ஆனால் ஹதீஸில் பயன்படுத்துங்கள் என்ற வார்த்தை இல்லை என்று கூறுகிறார்.*
இவர்களது அமைப்பில் முன்னால் பிரச்சாரராக இருந்த ஸஹ்ரான் பயன்படுத்துங்கள் என்றே மொழிபெயர்த்திருந்தார். ஆனால் இதை இவர்கள் மறுக்கிறார்கள்.
*ஹதீஸில் உங்களுக்கு வெள்ளியை ஏவுகிறேன் என்பதைத் தொடர்ந்து எனவே அதன் மூலம் விளையாடிக் கொள்ளுங்கள் என்றும் கூறப்படுகிறது.*
وَلَكِنْ عَلَيْكُمْ بِالْفِضَّةِ فَالْعَبُوا بِهَا
உங்களுக்கு என்ற வார்த்தை ஆண்களைக் குறிக்கும் என்றால் விளையாடிக் கொள்ளுங்கள் என்ற கட்டளையும் ஆண்களையே குறிக்கிறது. வெள்ளியை வைத்து விளையாடிக் கொள்ளுங்கள் என்ற வாசகம் ஆண்கள் வெள்ளியை அணிந்து கொள்ளலாம் என்பதையே காட்டுகிறது.
*எனவே வெள்ளியை மட்டுமே ஆண்கள் அணிந்து கொள்ளலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதிலிருந்து தங்கம் அணியக் கூடாது என்ற தடை இந்த ஹதீஸில் ஆண்களுக்குத் தான் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பதும் ஹபீப் என்ற வார்த்தை ஆணையே குறிக்கிறது என்பதும் மேலும் தெளிவாகிறது.*
ஹபீப் என்ற வார்த்தை இந்த ஹதீஸில் ஆணையே குறிக்கிறது என்பதை முன்பே நாம் நிரூபித்து விட்டோம். ஒரு ஆணுக்குத் தங்க ஆபரணத்தை அணிவிக்கக் கூடாது என்றால் அதைத் தானும் அணிந்து கொள்ளக் கூடாது. தான் எதை அணியலாமோ அதை அடுத்த ஆணுக்கு அணிவிப்பதில் தவறில்லை.
*அணிவதற்கும் அணிவிப்பதற்கும் இடையே பொருள் ரீதியில் ஒரு வித்தியாசம் இருந்தாலும் இவ்விரண்டிற்கும் உரிய சட்டம் ஒன்று தான். எனவே உங்களுக்கு வெள்ளியை ஏவுகிறேன் என்ற வாசகம் அணிவதைக் குறிக்கவில்லை. அணிவிப்பதையே குறிக்கிறது என தேவையற்ற வித்தியாசத்தை காண்பிக்கக் கூடாது.*
*குழப்பம் : 12*
மேற்படி ஹதீஸ் பெண்கள் தங்க நகை அணிவது பற்றித் தான் பேசுகிறது என்பதைத் தக்க சான்றுகளுடன் ஏற்கனவே நிரூபித்து விட்டோம்.
*ஆனால் இல்லை இந்த ஹதீஸ் பெண்கள் தங்க நகை அணிவது பற்றிப் பேசவில்லை என தவறாக வாதிட முற்பட்டவர் கூறும் முடிவைப் பாருங்கள்.*
ஆண்கள தங்க நகை அணியக் கூடாது; வெள்ளி நகை அணியலாம் என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை. என்ற வார்த்தையின் படி ஆண்கள் ஹதீஸில் கூறப்பட்ட வெள்ளி நகைகளான காப்பு!!, மாலை!!! மற்றும் வெள்ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்கள் செய்து) விளையாடுங்கள் என்ற வழிகாட்டலும் ஆண்களையே குறிக்கிறது என்ற இவர்களது ஆய்வின் முடிவின் படி கொலுசு!!, காதணி என்பதெல்லாம் ஆண்கள் அணிந்து திருநங்கைகள் போல் திரியலாம் என்பது தான் இவர்களது ஆய்வின்!!!? சுருக்கம்.
*நமது விளக்கம்* :
*இவர் ஹதீஸின் அடிப்படையில் வாதிடாமல் மனோ இச்சை அடிப்படையில் வாதிடுகிறார் என்பது இந்த வாதத்தில் இருந்து உறுதியாகிறது. அல்லாஹ்வுடைய தூதர் ஒன்றை அனுமதித்து இருக்கிறார்களா இல்லையா என்பது தான் நாம் கவனிக்க வேண்டியவை. இதைச் செய்தால் திரு நங்கைகள் போல் திரிய வேண்டிய நிலை வரும் என்று வாதிடுவதில் இருந்து இது உறுதியாகிறது. நபிகள் நாயகம் அவர்கள் ஒன்றை அனுமதித்தாலும் இவரது மனோ இச்சைக்கு ஒப்ப இருந்தால் தான் ஏற்றுக் கொள்வார் போலும்.*
ஏனென்றால் தங்க வளையத்தை அதாவது மோதிரத்தை ஆண்கள் அணியும் வழக்கம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இருந்துள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸ்கள் தெளிவுபடுத்துகிறது.
அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தங்க மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள். அதன் குமிழைத் தமது உள்ளங்கையை ஒட்டியவாறு (உள் பக்கமாக அமையும்படி) வைத்துக் கொண்டார்கள். (இதைக் கண்ட) மக்களும் (அதைப் போன்று) மோதிரம் செய்து (அணிந்து) கொண்டார்கள். (இதைக் கண்ட) நபி (ஸல்) அவர்கள் தமது தங்க மோதிரத்தை(க் கழற்றி) எறிந்துவிட்டு வெள்ளி மோதிரம் ஒன்றைத் தயாரித்து (அணிந்து) கொண்டார்கள்.*
*புகாரி (5865)*
அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
*அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மனிதர் தமது கையில் தங்க மோதிரம் அணிந்திருப்பதைக் கண்ட போது, அதைக் கழற்றச் செய்து தூக்கியெறிந்தார்கள். பிறகு உங்களில் ஒருவர் (நரக) நெருப்பின் கங்கை எடுத்து, அதைத் தமது கையில் வைத்துக் கொள்கிறார் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற பிறகு அந்த மனிதரிடம், உமது மோதிரத்தை(க் கழற்றி) எடுத்து நீ (வேறு வகையில்) பயனடைந்துகொள் என்று கூறப்பட்டது. அவர், இல்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீசியெறிந்துவிட்டதை அல்லாஹ்வின் மீதாணையாக ஒரு போதும் நான் எடுக்க மாட்டேன் என்று சொல்லி விட்டார்.*
*முஸ்லிம் (4243)*
நபிகள் நாயகம் ஸல் அவர்களும் அவர்களின் தோழர்களும் வெள்ளி மோதிரம் அதாவது வளைந்த வடிவிலான நகை அணிந்துள்ளார்களே அவர்கள் திருநங்கைகள் என்று இவர் கூறாமல் கூறுகிறார்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :
*நான் தூங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) என் இரு கைகளிலும் இரு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவை என்னைக் கவலையில் ஆழ்த்தின. உடனே, அதை ஊதி விடுவீராக!என்று கனவில் எனக்கு (இறைக் கட்டளை) அறிவிக்கப்பட்டது. அவ்வாறே, நான் அவற்றை ஊதி விட, அவையிரண்டும் பறந்து போய் விட்டன. நான் அவ்விரண்டும் எனக்குப் பின் தோன்றவிருக்கின்ற (தம்மை இறைத் தூதர்கள் என்று வாதிக்கப் போகும்) இரு பொய்யர்கள் என்று (அவற்றுக்கு) விளக்கம் கண்டேன். அவ்வாறே அவ்விருவரில் ஒருவன் (அஸ்வத்) அல்அன்ஸிய்யாகவும் மற்றொருவன் யமாமா வாசியான பெரும் பொய்யன் முஸைலமாவாகவும் அமைந்தார்கள்.*
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
*புகாரி (3621)*
இன்னும் சில அறிவிப்புகளில் தங்கக் காப்புகளை நபி (ஸல்) அவர்கள் அணிந்திருந்தவாறு கனவு கண்டதாக தெளிவாக கூறப்பட்டுள்ளது.
*நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தம்மை திருநங்கையாக கனவில் கண்டார்கள் என்று இந்த அறிவாளி கூறினாலும் கூறுவார்.*
மேலும் சொர்க்கவாசிகளுக்கு அவர்கள் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மறுமையில் தங்கக் காப்புகளும் வெள்ளிக்காப்புகளும் அணிவிக்கப்படும் என்று குர்ஆன் கூறுகிறது.
*அவர்களுக்கு நிலையான சொர்க்கச் சோலைகள் உள்ளன. அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். தங்கக் காப்புகள் அவர்களுக்கு அணிவிக்கப்படும். ஸுந்துஸ், இஸ்தப்ரக் எனும் பச்சைப் பட்டாடைகளை அவர்கள் அணிவார்கள். அதில் உள்ள ஆசனங்களில் அவர்கள் சாய்ந்திருப்பார்கள். இதுவே சிறந்த கூலி. அழகிய தங்குமிடம்.*
*அல்குர்ஆன் (18 : 31)*
அவர்கள் மீது பச்சை நிற ஸுந்துஸ் எனும் பட்டும், இஸ்தப்ரக் எனும் பட்டும் இருக்கும். வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப்படுவார்கள். அவர்களின் இறைவன் தூய பானத்தை அவர்களுக்குப் பருகத் தருவான்.
*அல்குர்ஆன் (76 : 21)*
இந்த உலகத்தில் மனிதன் எதையெல்லாம் விரும்புகின்றானோ அந்த இன்பங்கள் மறுமையில் கிடைக்கும் என்பதை உணர்த்தக் கூடிய வகையில் தான் இறைவன் சொர்க்கத்து பாக்கியங்களை விவரிக்கின்றான். அப்படியானால் சொர்க்கத்தில் அனைவரும் திரு நங்கைகளாகி விடுவார்களா?
*மேலும் கழுத்து மாலையைச் சிறுவர்களுக்கு அதாவது ஆண் குழந்தைகளுக்கு அணிவித்துவிடும் வழமை நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்துள்ளது.*
அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :
நான் மதீனா கடைவீதிகளில் ஒன்றில் (பனூ கைனுகா கடைவீதியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்குள் செல்லவே நானும் (அவர்களுடன்) சென்றேன். (வீட்டுக்கு வந்ததும்,) பொடிப் பையன் எங்கே? என்று மும்முறை கேட்டார்கள். பிறகு அலீயின் மகன் ஹசனைக் கூப்பிடுங்கள் என்று சொன்னார்கள். அப்போது அலீ (ரலி) அவர்களுடைய புதல்வர் ஹசன் (ரலி) அவர்கள் கழுத்தில் நறுமண மாலை ஒன்றை அணிந்தபடி நடந்து வந்தார்கள். அவர்களைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள் இப்படித் தமது கையை விரித்தபடி அவரை நோக்கிச் சென்றார்கள். ஹசன் (ரலி) அவர்களும் இவ்வாறு தமது கையை விரித்த படி நபி (ஸல்) அவர்களை அணைத்திட அவர்களை நோக்கி வந்தார்கள்.
*நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களை அணைத்துக் கொண்டு, இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரையும் இவரை நேசிப்பவர்களையும் நேசிப்பாயாக என்று பிரார்த்தனை செய்தார்கள்.*
*புகாரி (5884)*
முஸ்லிமில் இடம்பெற்றுள்ள ஒரு அறிவிப்பில் ஃபாத்திமா (ரலி) அவர்களே இதை ஹசன் (ரலி) அவர்களுக்கு அணிவித்து விட்டதாகக் கூறப்பட்டுள்ளது. எனவே கழுத்து மாலையை ஆண்கள் அணியும் வழக்கமும் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் இருந்துள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம்.
அப்படியானால் ஹஸன் ரலி திரு நங்கை என்று சொல்லப் போகிறாரா?
*நபி (ஸல்) அவர்களின் போதனை அன்றைய காலத்திற்கு மட்டுமல்ல எல்லாக் காலத்து மக்களுக்கும் பொருந்தக்கூடியவை. ஹதீஸில் கூறப்பட்ட தங்க வளையம் (மோதிரம்) தங்கக் காப்பு தங்கச் சங்கிலி இவை மூன்றையும் நமது காலத்தில் ஆண்கள் அணிவதைக் கண்கூடாகப் பார்க்கிறோம்.*
இதைத் தான் இந்த ஹதீஸ் கண்டிக்கிறது. இந்த அளவிற்குக் கச்சிதமாக இந்த ஹதீஸ் ஆண்களுக்குப் பொருந்துவதால் இது பெண்களை மட்டுமே குறிக்கிறது என்ற இவர்களின் வாதம் அடியோடு சாய்கிறது.
*அதுமட்டுமின்றி தற்காலத்தில் நடைமுறையிலும் இம்மூன்று ஆபரணங்கள் ஆண் பெண் ஆகிய இரு பாலருக்கும் பொதுவான அணிகலன்களாகவே உள்ளன.*
எனவே இவற்றை அணிந்தால் இவர்கள் கூறுவது போல் பெண்களுக்கு ஒப்பாகும் நிலை ஏற்படாது. திருநங்கைகள் போல் திரிய வேண்டிய நிலையும் ஏற்படாது.
*இதைப் புரிந்து கொள்ளாத இவர்கள் நமது ஆய்வை விகாரப்படுத்தும் விதத்தில் கொலுசு காதணி போன்றவற்றை அணியலாம் என்று நாம் கூற வருவது போல் பொய்யான தோற்றத்தைச் சித்தரிக்கிறார்கள்.*
இவ்வாறு நாம் கூறவில்லை. கொலுசு காதணி ஆகிய ஆபரணங்கள் ஹதீஸில் கூறப்படவில்லை. அத்துடன் இவை பெண்களுக்கு மட்டும் உரிய அணிகலன்களாக இருக்கின்றன.
*பெண்களுக்கு ஒப்பாக நடக்கக் கூடாது என்று மார்க்கம் உத்தரவிட்டுள்ளது. எனவே வெள்ளியில் அணிகலன்களைச் செய்து விளையாடுங்கள் என்ற கட்டளையை இதற்கு முரண் இல்லாத வகையில் விளங்கிக் கொள்ள வேண்டும்.*
ஒரு ஆபரணத்தை ஆண் அணியும் போது அது வெள்ளியாக இருந்தாலும் பெண்ணுக்கு ஒப்பாக நடக்கும் சூழ்நிலை உருவானால் அதை அவன் அணியக் கூடாது. அதே நேரத்தில் பெண்ணுக்கு ஒப்பாகாத வகையில் வெள்ளியில் அவன் எந்த வகையான ஆபரணத்தையும் அணியலாம். உதாரணமாக மோதிரம் சங்கிலி காப்பு பிரஸ்லெட் (கைச் சங்கிலி) போன்றவை.
*இவ்வாறு முறையான அடிப்படையில் புரிவதை விட்டுவிட்டு அநாகரீகமாகச் சிந்தித்து அச்சிந்தனையை நமது சிந்தனை போல் காட்டுகிறார்கள்.*
*குழப்பம் : 13*
உன்மையில் இந்த இடத்தில் குறித்த அறிவிப்பாளரான அப்துர் ரஹ்மான் பின் அப்துல்லாஹ் பின் தீனார் என்பவர் இமாம் புஹாரி அவர்களின் ஸஹீஹுல் புஹாரியின் அறிவிப்பாளர்களில் ஒருவராவார். இவர் அறிவிக்கும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட ஹதீஸ்கள் புஹாரியில் மாத்திரமே இடம்பெறுவதைப் பார்க்கிறோம். ஏன் அதில் சில ஹதீஸ்களை இவர்களே தங்களது பேச்சுகளிலும் எழுத்துகளிலும் பயன் படுத்தியுள்ளார்கள். எனவே ஆழம் தெரியாமல் காலை விட்ட இவர்கள் குறித்த அறிவிப்பாளர் பலவீனமானவர் தான் என்பதை திட்டவட்டமாக அறிவிக்கட்டும். அப்போது இது பற்றி மேலதிகமாக நாம் விரிவாக விளக்குவோம். குறித்த விடயம் நேரடியாகவே எமது தலைப்புடன் சம்பந்தப் படாததால் இந்த இடத்தில் இந்த அளவுடன் மட்டும் சுருக்கிக் கொள்கிறோம்.
*அடுத்து ஆய்வாளர்!! இவ்வாறு கூறுகிறார்*
ஏனெனில் இவரை விட நம்பகமானவர் அறிவிக்கும் அறிவிப்பில் ஹபீப் என்று ஆனணக் குறிக்கும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர் மட்டும் பெண்ணைக் குறிக்கும் ஹபீபா எனற் சொல்லைக் கூறுகிறார். எனவே நம்பகமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக இவர் அறிவித்திருக்கும் போது இவரது அறிவிப்பு நிற்காது.
*மேற்படி வாதமும் தவறானது. காரணம் இவரை விட நம்பகமானவர் அறிவிக்கும் ஹபீப் எனும் வார்த்தையே பெண்களைக் குறிக்கும் என்பதை நாம் நிரூபித்து விட்டதால் இந்த அறிவிப்பும் அதே கருத்தை வலியுறுத்துவதால் இரண்டு அறிவுப்புகளுக்குமிடையில் எந்தவித முரண்பாடும் கிடையாது என்பதே உண்மையாகும்.*
*நமது பதில்* :
ஹபீபதஹு (தனது பிரியமானவளுக்கு) என பெண்பாலில் ஒரு அறிவிப்பு வந்துள்ளது. இந்த அறிவிப்பில் இடம்பெறும் அப்துர் ரஹ்மான் பின் அப்தில்லாஹ் என்பவரை நாம் குறை கூறியிருந்தோம். ஆனால் இவரது அறிவிப்புக்களை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம் என்பது இவரது நிலைபாடு.
*இவர் பலவீனமானவர் தான் என திட்டவட்டமாக நாம் அறிவிக்க வேண்டும் என்று இவர் எதிர்பார்க்கிறார்.*
அப்துர் ரஹ்மானைப் பொறுத்தவரை இவரது நம்பகத்தன்மையில் குறை இல்லை. எனவே தான் இமாம் அலீ பின் மதீனீ அவர்கள் இவரை சதூக் அதாவது நம்பகமானவர் என்று கூறியுள்ளார். இதில் நமக்கும் மாற்றுக் கருத்தில்லை.
*ஆனால் ஒரு அறிவிப்பாளர் ஆதாரத்திற்குத் தகுதியானவர் என்றால் அவரிடம் நம்பகத்தன்மை இருப்பதுடன் அவர் சரியான மனனத்தன்மை உள்ளவராகவும் இருக்க வேண்டும்.*
இவர் சரியான நினைவாற்றல் உள்ளவர் என்று எந்த அறிஞரும் இவருக்குச் சான்றளிக்கவில்லை. மாறாக இவரது நினைவாற்றலில் குறை கூறும் விதமாகவே இமாம்களின் விமர்சனம் அமைந்துள்ளது.
*இமாம் யஹ்யா பின் முயீன் இவரது செய்தியில் பலவீனம் உள்ளது என்று கூறுகிறார். இமாம் இப்னு அதீ இவரது செய்தியை எழுதிக் கொள்ளலாம். ஆனால் ஆதாரமாக எடுக்க முடியாது என்று கூறுகிறார். இமாம் இப்னு ஹிப்பான இவர் தனது அறிவிப்புக்களில் மோசமான தவறுகளைச் செய்யக் கூடியவர் என்று கூறுகிறார். இமாம் தஹபீ அவர்கள் இவரைப் பலவீனமானவர்களின் பட்டியலில் கொண்டு வந்துள்ளார்.*
இவர் ஒரு ஹதீஸில் கூடுதலாக ஒரு விஷயத்தைக் குறிப்பிட்ட போது அதை இமாம் தாரகுத்னீ அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
*எனவே இமாம் புகாரி அவர்களைத் தவிர்த்து பல அறிஞர்கள் இவரை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது என்றே கூறியுள்ளனர். இவர் விஷயத்தில் இமாம் புகாரி அவர்கள் மட்டும் அறிஞர்களுக்கு மாற்றமான முடிவை எடுத்துள்ளார் என இமாம் தாரகுத்னீ அவர்கள் கூறுகிறார்கள்.*
சில பலவீனமான அறிவிப்பாளர்கள் புகாரியில் இருப்பது போல் இந்த அறிவிப்பாளரும் புகாரியில் இடம் பெற்றுள்ளார். இவர் தொடர்பாக அறிஞர்கள் கூறிய விமர்சனங்களின் சுருக்கத்தை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கூறும் போது இவர் நம்பகமானவர் தவறிழைப்பவர் என்று கூறியுள்ளார்.
*எனவே இவர் ஒரு விஷயத்தைத் தனித்து அறிவித்தால் அதை ஏற்கக் கூடாது என்று இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். குறிப்பாக நம்பகமானவர்கள் ஒருவாறு அறிவித்திருக்க இவர் அதற்கு மாற்றமாக அறிவித்தாலோ அல்லது கூடுதலான வார்த்தைகளைக் குறிப்பிட்டாலோ இவர் மாற்றமாகவும் வேறுபட்டும் அறிவித்திருப்பதே இவர் தவறிழைத்துள்ளார் என்பதை உறுதி செய்யும்.*
ஹபீப் என்ற வாசகம் இடம் பெற்ற ஹதீஸை அசீத் என்பவரிடமிருந்து அப்துர் ரஹ்மானாகிய இவரும் அப்துல் அஸீஸ் மற்றும் ஸுஹைர் ஆகிய மூவர் அறிவிக்கிறார்கள். அப்துல் அஸீஸ் ஸுஹைர் ஆகிய இருவரும் அப்துர் ரஹ்மானை விட உறுதியானவர்கள்.
*இவ்விருவரும் இவர் கூறியது போன்று ஹபீபா என பெண்பாலில் கூறாமல் ஹபீப் என்று ஆண்பாலிலேயே கூறியுள்ளனர். (ஹதீஸில் கூறப்பட்ட ஹபீப் என்பது ஆணையே குறிக்கிறது என்பதை மேலே நாம் நிரூபித்திருக்கிறோம்.)*
அப்துர் ரஹ்மான் இவ்விருவருக்கும் மாற்றமாக அறிவித்துள்ளார். தகவலில் தவறு செய்தது போல் அறிவிப்பாளர் தொடரிலும் தவறு செய்துள்ளார்.
*மற்ற இருவரும் அபூஹுரைரா (ரலி) அவர்களிடமிருந்து நாஃபிஉம், நாஃபிஉவிடமிருந்து அசீதும் அறிவிப்பதாக கூறுகின்றனர். ஆனால் அப்துர் ரஹ்மான் இவர்களுக்கு மாற்றமாக சனதையே மாற்றி அபூமூசா (ரலி) அவர்களிடமிருந்து அவரது மகன் அறிவிப்பதாக அல்லது அபூகத்தாதா (ரலி) அவர்களிடமிருந்து அவரது மகன் அறிவிப்பதாக சந்தேகத்துடன் கூறி முரண்பட்டுள்ளார்.*
இந்த அறிவிப்பாளர் தொடரில் இவருக்கு ஏற்பட்ட இத்தடுமாற்றங்கள் இவர் இச்செய்தியைச் சரியான அடிப்படையில் அறிவிக்கவில்லை என்பதை மேலும் உறுதி செய்கிறது.
*அசீத் இச்செய்தியைக் கேட்டது இப்னு அபீ மூசாவிடமா? அல்லது இப்னு அபீகத்தாதாவிடமா? என்ற சந்தேகம் இவருக்கு ஏற்பட்டுள்ளது. இப்னு அபீ மூசாவும் இப்னு அபீ கத்தாதாவும் நம்பகமானவர்களாக இருந்தால் இந்தச் சந்தேகத்தால் இந்தச் செய்திக்கு எந்தப் பாதிப்பும் வராது.*
ஆனால் இப்னு அபீ மூசாவைப் பொறுத்த வரை அவர் நம்பகமானவர் என்று அறிஞர்கள் உறுதி செய்யவில்லை. எனவே இவர் பலவீனமானவர் ஆவார். இச்செய்தியை அறிவித்தவர் இப்னு அபீ கத்தாதா என்ற நம்பகமானவரா? அல்லது இப்னு அபீ மூசா என்ற பலவீனமானரா? என்ற சந்தேகம் வந்துள்ளதால் இதனடிப்படையிலும் இச்செய்தி நம்பகத்தன்மையை இழக்கிறது.
*மொத்தத்தில் இச்செய்தி தவறானது என்பது சந்தேகத்திற்கு இடமின்றி தெளிவாகிறது. எனவே இதை வைத்து பெண்கள் தங்கம் அணியக் கூடாது என இவர்கள் வாதிட்டது தவறாகும்.*
*குழப்பம் : 14*
அடுத்து எனவே பெண்கள் தங்க நகை அணியலாம் என்பதற்குத் தெளிவான அனுமதி அளிக்கும் ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அதைத் தடை செய்யும் வகையில் ஏற்கத்தக்க எந்த ஆதாரமும் இல்லை. என்ற இவரது கூற்றுக்கும் எந்தவித அர்த்தமுமில்லை. நாம் தங்க வளையல் நகை பெண்கள் அணியக் கூடாது என்பதற்கு ஆதாரமாக எடுத்து வைத்த ஹதீஸ்ளுக்கு இவர்கள் அளித்த விளக்கங்கள் தான் தவறு என்பதால் பெண்களுக்கு தங்கம் அனுமதிக்கப்பட்டுள்ளது என்ற பொதுவான ஹதீஸை வளையல் நகை கூடாது என்ற குறிப்பான ஹதீஸுடன் சேர்த்தே அமுல்படுத்த வேண்டும் என்பது தான் உன்மையும் யதார்த்தமுமாகும்.
*நமது பதில் :*
*நாம் தற்போது பேசிக் கொண்டிருக்கின்ற அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் செய்தி வளையம் காப்பு மாலை ஆகிய மூன்று மட்டும் கூடாது என்று கூறுவதாக இவர் சொல்கிறார். எனவே இதை குறிப்பான செய்தி என்றும் பெண்களுக்கு தங்கம் ஹலால் என்ற செய்தி பொதுவானது என்றும் கூறி பொதுவானதிலிருந்து குறிப்பானதை விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்* .
ஆனால் உண்மையில் இந்த ஹதீஸ் குறிப்பானதில்லை. இந்த மூன்று மட்டுமே பெண்களுக்கு ஹலால் என்ற கருத்து ஹதீஸில் இல்லவே இல்லை. மாறாக பொதுவாக எந்த வடிவத்திலும் தங்க ஆபரணங்களை அணியக் கூடாது என்ற கருத்தையே இந்த ஹதீஸ் கூறுகிறது.
*காணரம் நபி (ஸல்) அவர்கள் இந்த மூன்று வடிவங்களைக் கூறி தமது பேச்சை முடித்துக் கொள்ளவில்லை. எதை அணியலாம் என்ற வழிகாட்டலையும் சேர்த்துக் கூறுகிறார்கள். அதாவது தங்கத்திற்கு மாற்றுவழியாக வெள்ளியை உங்களுக்கு ஏவுகிறேன் என்று கூறுகிறார்கள்.*
நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்துள்ள இந்த மாற்றுவழி தங்கம் முழுவதும் கூடாது என்பதையே காட்டுகிறது. இவர்கள் கூறுவது போல் குறிப்பிட்ட மூன்று வடிவங்கள் மட்டுமே தடை என்றால் இம்மூன்று அல்லாத வேறு வடிவங்களில் தங்கத்தை அணியலாம் என்று கூறியிருப்பார்கள்.
*எனவே இது குறிப்பான ஹதீஸ் என்ற இவர்களின் வாதம் தவறு. இவர்கள் கருத்துப்படி பெண்கள் தங்கம் அணியக் கூடாது என்ற கருத்தை இந்த ஹதீஸ் தந்தால் பெண்கள் தங்கம் அணிவதை அனுமதிக்கின்ற ஹதீஸ்களுடன் இது மோதவே செய்கிறது.*
நமது கருத்துப்படி இது ஆண்கள் தங்கம் அணிவதையே தடுக்கிறது என்று கூறினால் மற்ற எந்த ஆதாரத்துடன் இச்செய்தி மோதும் நிலை ஏற்படாது. மாறாக மற்ற ஆதாரங்களுடன் ஒத்துப்போகிறது.
*குழப்பம் : 15*
*எனது சமுதாயத்தில் தங்கம் பெண்களுக்கு ஹலால் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். தங்கம் என்பது ஒரு உலோகத்தின் பெயரே தவிர ஒரு வடிவத்தின் பெயர் அல்ல அது எந்த வடிவமாக இருந்தாலும் பிரச்சனையில்லை என்பதே இதிலிருந்து நமக்கு விளங்குகிறது.*
அதாவது, ஏதோ அறிவுபூர்வமான வாதம் ஒன்றை முன்வைப்பது போல் தங்கம் பெண்களுக்கு ஹலால் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் அது எந்த வடிவமாக இருந்தாலும் பிரச்சனையில்லை என்ற வரட்டுத் தத்துவம் தான் அது.
*இந்த வாதத்தின் அபத்தத்தை அறிய பின்வரும் நபிமொழியைக் கவனியுங்கள்*
صحيح مسلم جزء 3 – صفحة *1634*
وحدثني زيد بن يزيد أبو معن الرقاشي حدثنا أبو عاصم عن عثمان ( يعني ابن مرة ) حدثنا عبدالله بن عبدالرحمن عن خالته أم سلمة قالت :قال رسول الله صلى الله عليه وسلم : من شرب في إناء من ذهب أو فضة فإنما يجرجر في بطنه نارا من جهنم
*யார் தங்க, வெள்ளிப் பாத்திரத்தில் அருந்துகிறாரோ அவர் நரக நெருப்பை தனது வயிற்றில் வார்த்துக் கொள்கிறார்.*
அறிவிப்பாளர்: உம்மு ஸலமா(ரழி)
*ஆதாரம் : ஸஹீஹ் முஸ்லிம் 1634*
ஆக பெண்களுக்கு தங்கம் அனுமதி என்பதால் அது எந்த வடிவில் இருந்தாலும் பிரச்சனையில்லை என்று கூறும் இவர்கள் பெண்களுக்குத் தங்க வெள்ளிப் பாத்திரங்களை உபயோகிப்பதற்கும் அனுமதிப்பார்களா அல்லது அந்த ஹதீஸ் பொதுவானது இந்த ஹதீஸ் பாத்திர வடிவங்களைப் பற்றி குறிப்பானது எனக் கூறி பாத்திர வடிவங்கள் கூடாது என்று கூறப் போகிறார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
*எனவே குழப்பங்களைத் தெளிவுபடுத்துகிறோம் என்ற பேரில் ஹதீஸின் போதனைகளுக்கெதிராக மனோ இச்சைப்படி வாதம் எழுப்புபவர்கள் முஃதஸிலா வகையறாக்களை விட சமுதாயத்துக்கு ஆபத்தானவர்கள் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.*
ஆனால் எம்மைப் பொறுத்தவரை அனைத்தும் நபி(ஸல்) அவர்களது ஹதீஸ்கள் தான், வழிகாட்டல் தான் என்ற அடிப்படையில் பொதுவாக இடம் பெற்றுள்ள பெண்களுக்கு தங்கம் அனுமதிக்கப் பட்டுள்ளது என்ற ஹதீஸை ஏற்றுக்கொள்வதுடன், முன்னர் குறிப்பிட்ட பாத்திர வடிவ ஹதீஸை வைத்து பெண்களுக்கு தங்கம் பாத்திர வடிவில் இருந்தால் கூடாது என்றுதான் அது தொடர்பான குறிப்பான ஹதீஸ் இடம் பெற்றிருப்பதால் கூறுகிறோம். அப்படித் தான் சகல அறிஞர்களும் இயக்க, மத்ஹபு வேறுபாடுகளுக்கும் அப்பால் கூறிக் கொண்டு இருக்கிறார்கள்.
*ஆனால் இதே முறையில் விளங்க வேண்டிய, அமுல் படுத்த வேண்டிய வளையல் நகை ஹதீஸ்களுக்கு மாத்திரம் தவறான விளக்கங்கள் கொடுக்க முற்பட்டு தடுமாறுகிறார்கள்.*
ஆக இவர்களது இரண்டாவது தொடரின் அடிப்படை வாதமான ஹபீப் என்ற பதத்திற்கு ஆண் என்று மட்டுமே அர்த்தம் என்ற வாதத்தின் பலவீனத்தை இவர்களே உணர்ந்ததன் காரனமாக புதிதாக இரண்டு ஹதீஸ்களை எடுத்து வைத்துள்ளார்கள்.
*நமது பதில்* :
*தங்கம் மற்றும் வெள்ளிப் பாத்திரங்களில் பருகுவது கூடாது என்று ஹதீஸ் கூறுகிறது. இந்தச் செய்தி தங்கம் அணிவதைப் பற்றிப் பேசவில்லை. மாறாக தங்கப் பாத்திரத்தில் பருகுவதைப் பற்றியே பேசுகிறது. மேலும் இத்தடை ஆண்களுக்கும் பெண்களுக்கும் பொருந்தக் கூடிய பொதுவான தடையாகவும் உள்ளது* .
ஆனால் எனது சமுதாயத்தில் தங்கம் பெண்களுக்கு ஹலால் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வரும் ஹதீஸில் தங்கத்துடன் சேர்த்து பட்டும் கூறப்பட்டுள்ளது. பட்டை அணியத் தான் முடியும். அதில் யாரும் உண்ணவோ பருகவோ மாட்டார்கள். எனவே இந்த ஹதீஸ் தங்கத்தையும் பட்டையும் அணிவதைப் பற்றியே பேசுகிறது என்பதை அறிவுள்ளவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.
*மேலும் இச்செய்தியில் தங்கம் ஆண்களுக்கு ஹராம் என்றும் பெண்களுக்கு ஹலால் என்றும் வெவ்வேறு சட்டம் கூறப்படுகிறது. ஆனால் தங்கப் பாத்திரத்தில் பருகக் கூடாது என்ற கட்டளை ஆண் பெண் இருபாலருக்கும் உரியது.*
எனவே இந்த ஹதீஸ் தங்கம் அணிவது தொடர்பானது. இவர்கள் சுட்டிக்காட்டிய செய்தி தங்கப் பாத்திரத்தில் பருகுவது தொடர்பானது. இவ்விரண்டிற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
*ஒன்றுக்கொன்று சம்பந்தமில்லாமல் வெவ்வேறு விஷயங்களைப் பற்றி பேசும் இரு செய்திகளில் ஒன்றை இன்னொன்றிலிருந்து எப்படி விதிவிலக்கு செய்ய முடியும்?*
இரண்டும் ஒரே அம்சத்தைப் பற்றி பேசும் போது அதில் ஒன்று பொதுவானதாகவும் மற்றொன்று குறிப்பானதாகவும் இருந்து அவையிரண்டும் முரண்பட்டாலே பொதுவானதிலிருந்து குறிப்பானதை விதிவிலக்குச் செய்ய முடியும்.
*ஆனால் இங்கு இவை இரண்டும் ஒரே அம்சத்தைப் பற்றி பேசவில்லை. ஒன்று குறிப்பாகவும் இன்னொன்று பொதுவானதாகவும் அமையவில்லை. இவை இரண்டும் முரண்படவும் இல்லை. இந்நிலையில் பொதுவானதிலிருந்து குறிப்பானதை விதிவிலக்கு செய்ய வேண்டிய அவசியம் இங்கு ஏற்படவே இல்லை. இதைக் கூட இவரால் புரிந்து கொள்ள முடியவில்லை.*
பொதுவானதிலிருந்து குறிப்பானதை விதிவிலக்குத் தர வேண்டும் என்ற விதியில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. ஆனால் இவ்விதி அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸிற்கும் தங்கம் பெண்களுக்கு ஹலால் என்று கூறும் ஹதீஸிற்கும் பொருந்தவில்லை என்பதே நமது நிலைபாடு.
*காரணம் அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி குறிப்பானதில்லை. பொதுவானது தான் என்பதை முன்பே நாம் நிரூபித்து விட்டோம்.*
*குழப்பம் : 16*
யமன் நாட்டைச் சார்ந்த பெண்மனி தனது மகளுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது அவரது மகளின் கையில் தடிமனான இரண்டு தங்கக் காப்புகள் இருந்தன. இக்காப்புகள் வட்ட வடிவமானவை. வட்ட வடிவத்தில் தங்கம் அணிவது கூடாதென்றால் அதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருப்பார்கள். வட்டமாக இருப்பதைக் கண்ணால் நபி (ஸல்) அவர்கள் கண்ட பிறகும் அதை அணியக் கூடாது என்று அவர்கள் தடுக்காமல் இருந்திருக்கும் போது அதை நாம் தடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை.
*பெண்கள் வட்ட வடிவத்தில் தங்கம் அணியக் கூடாதென்றால் வட்ட வடிவத்தில் இருந்த தங்க மோதிரத்தை தனது பேத்திக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்திருக்க மாட்டார்கள். அவர்கள் அதை எடுத்துக் கொடுத்திருப்பது தங்கம் முழுவதும் பெண்களுக்கு ஹலால் தான். இதில் வடிவம் ஒரு பிரச்சனையில்லை என்பதையே காட்டுகிறது.*
இங்கு இவர்கள் குறிப்பிட்டுள்ள முதலாவது ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசை என்ன, எந்த கிரந்தத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரங்கள் இல்லாமல் இவர்கள் வெறுமனே குறிப்பிட்டுள்ளதால் நாமும் அவை பற்றிய விரிவான விளக்கத்துக்குள் நுழையாமல் இரு ஹதீஸ்களுக்கும் சேர்த்தே ஒரு பொதுவான விளக்கத்தை அளிக்கிறோம்.
*மேற்படி இரு ஹதீஸ்களும் கூறுவதன் சுருக்கம் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் தங்க வளையல் நகைகளை அணிந்துள்ளார்கள் என்பதுதான்* .
மேற்படி நபி(ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் தங்க நகைகள் அணிந்துள்ளார்கள் என்ற செய்தி தங்கத்தை வைத்திருப்பதே கூடாது என்று இவர்கள் தங்களது முதல் தொடரிலே எடுத்துவைத்த (தவறான) வாதத்துடன் முரண்படுகிறதே என்று இவர்களிடம் நாம் கேட்டால் இது தடை நீக்கப் பட்டதற்கு பிந்தைய காலத்துக்குரியது என்ற பதிலைத் தான் சொல்வார்கள்.
*அதே போல் தான் நாமும் மேற்படி ஹதீஸ்கள் பெண்களுக்கு தங்கம் பொதுவாக அனுமதிக்கப் பட்டிருந்த, வளையல் நகை தடை செய்யப்படுவதற்கு முன்னுள்ள காலத்துக்குரியது என்று கூறுகிறோம்.*
இது தொடர்பாக மேலதிக வாதங்களை முன்வைத்தால் சட்டக் கலையில் இரு ஆதாரங்கள் முரண்படும் போது எவ்வாறு அணுக வேண்டும் என்ற தலைப்பில் விரிவாக விளக்குவோம் என்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
*நமது பதில்* :
*பெண்கள் தங்கம் வைத்திருப்பது கூடாது என்ற கருத்தை தற்போதும் நாம் கூறுவது போல் ஒரு தோற்றத்தை உருவாக்குகிறார்கள். ஆனால் இப்படிப்பட்ட ஒரு சட்டம் ஆரம்பத்தில் இருந்து பின்பு மாற்றப்பட்டு விட்டது என்றே கூறுகிறோம்.*
தங்கம் வளையமாக இருந்தாலும் பெண்கள் அதை அணியலாம் என்று மேலே சுட்டிக்காட்டப்பட்டுள்ள இரு ஹதீஸ்கள் கூறுகிறது. இந்த அனுமதி முன்னர் பிறப்பிக்கப்பட்ட தடைக்குப் பிந்தியது என்றே பதில் கூறுவோம். இவ்வாறு பதில் கூறுவதற்கு நமக்குத் தார்மீக உரிமை உள்ளது.
*ஏனென்றால் தங்கத்தைச் சேமித்து வைத்திருப்பது கூடாது என்ற சட்டம் ஆரம்பத்தில் இருந்தது. பின்னர் மாற்றப்பட்டு விட்டது என்ற கருத்தை நாம் யூகமாகக் கூறவில்லை. மாறாகத் தக்க ஆதாரங்களுடன் தெளிவாக முந்தைய தொடரில் விவரித்திருக்கிறோம். எனவே இவ்வாறு பதிலளிப்பதற்கு நமக்கு உரிமை உண்டு.*
ஆனால் ஆரம்பத்தில் பெண்கள் தங்கம் அணிவதற்கு அனுமதி இருந்தது. பின்னர் இந்த அனுமதி ரத்து செய்யப்பட்டு தங்கம் அணியக் கூடாது என்று கூறப்பட்டது என்று இவர்கள் கூறுவதற்கு ஒரு ஆதாரத்தைக் கூட காட்டவில்லை.
*நமது வாதத்திற்கு ஒரு நபித்தோழரின் அபிப்பிராயத்தைக் காட்ட முடிந்தது. ஆனால் இவர்களின் இந்த வாதத்திற்கு இதைக் கூட காட்ட முடியாது? ஏனென்றால் அப்படி ஒரு சட்டத்தை இஸ்லாம் பிறப்பிக்கவே இல்லை.*
எனவே நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள் வளைய வடிவில் தங்க நகை அணிந்துள்ளார்கள் என்ற கருத்தைத் தரக்கூடிய இரு ஹதீஸ்களும் பெண்கள் வளைய வடிவில் தங்கம் அணியக் கூடாது என்ற சட்டம் வருவதற்கு முந்தியது என்ற இவர்களின் வாதம் ஆதாரமற்றது. உண்மைக்குப் புறம்பானது.
*குழப்பம் : 17*
*அடுத்து இவர்கள் கூறும் ;மேலும் வடிவம் தான் பிரச்சனை என்றால் முதல் தொடரில் எடுத்துக் காட்டிய ஹதீஸில் தங்க மாலையை வேறு வடிவமாக மாற்றுமாறு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது மகளுக்குக் கூறி இருப்பார்கள்.*
இவர்கள் கூறுகின்ற இவ்விளக்கத்தைக் கவனிக்கும் போது இது அறிவற்ற வாதம் என்பதை உணரலாம். வட்ட வடிவத்தில் உள்ள தங்கம் கூடாது. மற்ற வடிவத்தில் உள்ள தங்கம் கூடும் என்று கூறினால் தங்கம் ஆகுமானது தான். வடிவம் ஆகுமானதல்ல என்ற கருத்து வருகிறது. எனவே வடிவம் தான் இவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது.
*தங்கத்தில் இவர்கள் தடை செய்கின்ற வடிவம் வெள்ளியில் இருந்தால் அதை இவர்கள் அனுமதிக்கிறார்கள். தடை செய்வதில்லை. இந்தத் தடுமாற்றம் ஹலால் ஹராம் சம்பந்தமான விஷயத்தில் வந்திருப்பது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.*
என்ற கூற்றுகளுக்குக்கு எமது இரண்டாம் தொடரிலேயே தக்க பதில் எழுதியுள்ளோம்.
*அத்துடன் தங்கம் கூடும் என்றால் அதன் அனைத்து வடிவமும் கூடுமாக இருக்க வேண்டும் என்ற இவர்களது வரட்டுத் தத்துவத்திற்கும் தங்கத்தின் பாத்திர வடிவம் பற்றிய ஹதீஸைக் குறிப்பிட்டு ஏற்கனவே பதில் சொல்லிவிட்டோம்.*
எனவே, இத்தகைய தடுமாற்றங்கள் இவர்களுக்கு ஹறாம் ஹலால் விடயத்தில் அதுவும் ஒரு நிலைப்பாடு தொடர்பாக ஆய்வு செய்த வேளையில் இடம் பெற்றுள்ளது எமக்கு ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக இருக்கிறது.
*நமது பதில் :*
*இவர்கள் வெளியிட்ட மூன்று தொடர்களில் இரண்டாம் தொடரில் நாம் எழுதிய நியாயமான வாதங்களுக்குத் தவறான விளக்கங்களை கூறியிருந்தார்கள். அதில் உள்ள அபத்தங்களை நமது முதல் தொடரில் விளக்கி இருக்கிறோம்* .
பாத்திர வடிவ ஹதீஸிற்கும் இவர்களது வாதத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்றும் பாத்திர வடிவ ஹதீஸைப் போன்று இவர்கள் வாதிடும் குறித்த அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அமையவில்லை என்றும் முன்னரே இத்தொடரில் தெளிவாக விளக்கி விட்டோம்.
*எனவே இவர்கள் விருப்பு வெறுப்புகளை மறந்துவிட்டு இறையச்சத்தை முன்னிறுத்தி தயங்காமல் உண்மையை ஏற்றுக் கொள்ள வேண்டும்.*
ஹலால் ஹராம் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில் இவ்வாறு பலவீனமான வாதங்களை முன்வைத்து பெண்களுக்கு ஹலாலன தங்க ஆபரணங்களை ஹராமாக்கிவிட வேண்டாம் என்ற அறிவுரையோடு நமது இத்தொடரை நிறைவு செய்கிறோம்.
பெண்கள் தங்க நகை அணிவது குறித்து ஸஹ்ரான் என்ற அறிஞரும் மறுப்பு எழுதி இருந்தார். அந்த மறுப்புக்குரிய நமது பதில் வருமாறு:
ஸஹ்ரானுக்கு மறுப்பு
*பெண்கள் தங்க நகை அணியலாமா என்ற கருத்தை மறு ஆய்வு செய்து நாம் ஒரு இரண்டு தொடர்களை வெளியிட்டிருந்தோம். அது குறித்து நவ்பர் அவர்கள் வெளியிட்ட மறுப்புக்குரிய நமது பதிலை நவ்பருக்கு மறுப்பு என்ற தலைப்பில் வெளியிட்டுள்ளோம். அது போல் ஸஹ்ரான் அவர்களும் ஒரு மறுப்பை வெளியிட்டுள்ளார். நவ்பர் அவர்களின் மறுப்பில் இருந்தது போன்ற வரட்டு வாதமும் தற்பெருமையும் இல்லாமல் ஆய்வுக் கண்ணோட்டத்துடன் இவரது மறுப்பு அமைந்துள்ளது. எனவே அந்த மறுப்பை முழுமையாக வெளியிட்டு நம்முடைய விளக்கத்தை முன் வைக்கிறோம்.*
பெண்கள் தங்க நகைகள் அணியலாமா? எனும் பீஜேயின் ஆய்வு பற்றி எனது நிலைப்பாடு.
*சில க்கு முன்னால் அறிஞர்களான பீஜேஅப்பாஸ் அலி ஆகியோரால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வை www.onlinepj.com எனும் இணையதளத்தில் படிக்கும் சந்தர்ப்பம் அல்லாஹ்வின் அருளால் எனக்குக் கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ்.பெண்கள் தங்க நகைகளை அணிவது அல்லாஹ்வின் தூதர்(ஸல்)அவர்களால் தடைசெய்யப்பட்ட விடயம் என்று தக்க சான்றுகளுடன் பிரச்சாரம் செய்துவரும் பிரச்சாரகர்களுல் நானும் ஒருவன். இக்கருத்தை ஆய்வில்லாமல் கண்மூடித்தனமாக நாம் கூறவில்லை.*
மூன்று நபிமொழிகளை முன்னிருத்தியே இக்கருத்தைக் கூறியிருக்கின்றேன். பெண்கள் தங்க நகைகள் அணிவது ஹராம் எனும் நிலைப்பாடிற்கு சான்றாக முன்வைக்கும் செய்திகளில் இரு செய்தியை மேற்குறித்த அறிஞர்கள் ஆய்வு ரீதியாக விமர்சனம் செய்திருந்தனர். இவ்வாறு ஆய்வு ரீதியாக விமர்சனம் செய்வது ஆரோக்கியமானதும் வரவேற்கத்தக்கதும் என்பதில் எனக்கு மாற்றுக் கருத்தில்லை. குறித்த இரு அறிஞர்களின் ஆய்விற்கு பதிலளிப்பதற்கு முன்னால் சில அடிப்படையான தகவல்களை இங்கு பதிவு செய்து கொள்ள விரும்புகின்றேன். இந்த ஆக்கத்தை பதிப்பிக்கும் நான் வெளிநாட்டுப் பணத்திற்காக தஃவா செய்யும் ஒரு தாயியோ அல்லது ஸஹாபாக்களின் சொந்தக் கூற்றுக்களை குர்ஆன்ஸுன்னாவுக்கு அடுத்து துணை ஆதாரங்களாக சமர்ப்பிக்கும் ஸலபிஸ வழிகேட்டு அழைப்பாளனோ அல்ல என்பதனையும் யார் எக்கருத்தைக் கூறினாலும் ஆதாரங்கள் வலுவாக அமைந்தால் விமர்சனங்களை கவனத்தில் கொள்ளாது கருத்தை ஏற்கும் மனோ பக்குவம் படைத்தவன் என்பதையும் தாழ்மையுடன் ஆரம்பத்தில் கூறிக் கொள்கின்றேன். அறிஞர் பீஜே அவர்களது ஆய்வுக்கு நான் மறுப்பு எழுதுவதால் சத்தியத்தை விட்டு திசை மாறிய பலவேஷத்தில் உள்ளவன் என்றோ தொடர்புள்ளவன் என்றோ தப்பாக என்னை எண்ணி விட வேண்டாமென இரு அறிஞர்களையும் கேட்டுக் கொள்கின்றேன்.
*பெண்கள் தங்க நகைகள் அணியலாமா? எனும் முதலாம் தொடரில் ஆரம்பத்திலேயே அறிஞர் அவர்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்கள்.பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று இலங்கையில் சிலர் கூறும் கருத்தும் அதை நியாயப்படுத்த எடுத்து வைக்கும் வாதங்களும் வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை முன்னரே சிலரால் சொல்லப்பட்டவை தான்.அதைத் தான் இலங்கையைச் சேர்ந்த சிலரும் எடுத்து வைக்கின்றனர்.*
ஒரு கருத்து முன்வைக்கப்பட்டால் இந்தக் கருத்து முன்னரே சொல்லப்பட்டவை அதைத் தான் இவர்கள் சொல்லுகின்றார்கள் எனக் குறிப்பிடுவது ஒரு ஆய்வாளருக்கு அழகானதல்ல என்பது எனது கருத்தாகும். ஏனெனில் அறிஞர் பீஜே அவர்கள் கூட கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் மீண்டும் ஸகாத் தொடுக்கத் தேவையில்லை எனக் கூறிய போது இதை யாராவது சொல்லியிருக்கின்றார்களா? இல்லையா? என்றெல்லாம் நாம் பார்க்கவில்லை சொல்லியிருந்தால் என்ன? சொல்லாவிட்டால் தான் என்ன? வருடா வருடம் என்பதற்கு ஸஹீஹான செய்தி இருக்கா? இல்லை என்றவுடன் அறிஞர் அவர்களின் கூற்றே சத்தியமானது என முடிவெடுத்தோம்.அதையே பிரச்சாரமும் செய்து வருகின்றோம். அதே போன்று அல் குர்ஆனுக்கு ஆதாரபூர்வமானஹதீஸ்கள் முரண்படும் எனும் கருத்தையும் பீஜே அவர்களும் அப்பாஸ் அலி(தமிழ் நாடு தவ்ஹீத் ஜமாஅத்)அறிஞர்கள் ஆய்வு ரீதியாக குறிப்பிட்ட போது கண்மூடித்தனமாக எதிர்க்காமலும் கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளாமலும் ஆய்வுக்குட்படுத்தி அதை ஏற்றிருக்கின்றேன். இன்னும் சொல்லப் போனால் நபிகளார்(ஸல்)அவர்கள் சூனியம் செய்யப்படவில்லை என பீஜே அவர்கள் குறிப்பிடும் கருத்து அறிஞர் அவர்களுக்கு முன்னரே சிலரால் சொல்லப்பட்டவையாக இருந்தும் அறிஞரின் கருத்தை ஆய்வுக்குட்படுத்தி ஏற்றுக் கொண்டோமே தவிர மதனிகளும் மக்கிகளும் உமரிகளும் குறிப்பிடுவது போன்று இது முஃதஸிலாக்களின் கருத்து அதைத் தான் பீஜே வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை கூறுகின்றார் என நாம் கூறவில்லை கூறவும் மாட்டேன். அவ்வாறு கூறுவது அர்த்தமற்றதும் அறியாமையின் உச்ச கட்டமுமாகும்.
*நாம் முன்வைக்கும் தவ்பானின் மேற்குறித்தஹதீஸை முதலில் இரு அறிஞர்களும் ஆதாரபூர்வமானது என ஏற்றுக் கொண்டுள்ளார்கள். அதன் காரணமாகவே குறித்த செய்தியை பலவீனம் எனக் குறிப்பிடாமல் அதை ஏற்றுக் கொண்டு வாதங்களை மாத்திரம் முன்வைத்துள்ளார்கள்*
அவர்களது வாதம்:பாத்திமா (ரலி)அவர்களின் கரத்தில் தங்க மாலை இருப்பதைக் கண்ட நபிகளார் (ஸல்) அவர்கள் பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா? எனக் கேட்டார்கள் என்று தவ்பானின் செய்தியில் இடம் பெறுகின்றது. பாத்திமாவின் கரத்தில் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது மிகவும் கவனிக்கத் தக்கதாகும். மோதிரமாக இருந்தால் கூட கையில் அணிந்திருந்தார்கள் என்று சமாளிக்க முடியும். ஆனால் கழுத்தணியை கையில் அணிய முடியாது.வைத்திருக்கத் தான் முடியும். இந்தஹதீஸிலிருந்து வாதம் செய்வதாக இருந்தால் தங்க நகையை அறவே வைத்திருக்கவே கூடாது என்று தான் வாதிட முடியும். அதற்குத் தான் இந்த ஹதீஸ் இடம் தருகிறதே தவிர அணியக் கூடாது என்ற கருத்தைத் தரவில்லை. தங்கம்வெள்ளியைச் சேமித்து வைக்கக் கூடாது எனும் சட்டம் ஸகாத் கடமையானதன் பின் மாற்றப்பட்டு விட்டது. ஆகவே மேற் குறித்த பாத்திமாவின் நிகழ்வு ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன் நடைபெற்ற நிகழ்வு.
*எமது பதில்:அறிஞர் பீஜே அவர்களுக்கு அல்லாஹ் ரஹ்மத் செய்வானாக! இவ்வாதத்தை அவர் வேன்டுமென்று எடுத்து வைத்திருக்க மாட்டார் என நான் நல்லெண்னம் கொள்கின்றேன். அறிஞர்களுக்கு ஆய்வில் சில நேரங்களில் தவறுகள் நிகழுவது இயல்பானதே! அதடிப்படையில் இதனை நான் நோக்குகின்றேன். எமக்கு முன் வாழ்ந்த அறிஞர்களில் சிலர் இச்செய்திக்கு விளக்கமளிக்கும் போது, பீஜே அவர்கள் கூறுவதைப் போன்று இச்சட்டம் மாற்றப்பட்டு விட்டதாக அவர்களும் கூறியுள்ளார்கள். ஆனால் அறிஞர் பீஜே அவர்களின் ஆய்வுக்கு மறுப்பாக இதை நாம் ஒருக்காலும் குறிப்பிட மாட்டோம். பாத்திமா (ரலி) அவர்களின் இந்நிகழ்வு ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்னால் நடைபெற்றது என அறிஞர் அவர்கல் குறிப்பிடுவது தவறானதாகும். ஏனெனில் பாத்திமாவின் (ரலி) அவர்கள் சம்பந்தப்படும் இந்த ஹதீஸை கவனமாக நாம் கவனித்தால் இவ்வாதத்தை எடுத்து வைக்க முடியாது. இச்செய்தியில் ஹுபைராவின் மகள் (ஹிந்த்)க்கு பாத்திமா (ரலி) அவர்கள் தன்னிடமிருந்த தங்க மாலையை சுட்டிக்காட்டி கூறும் போது பின்வரும் வாசகத்தைப் பயன்படுத்துகின்றார்கள். இதை ஹஸனின் தந்தை (அலி ரலி) அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள் ஹஸனின் தந்தை என பாத்திமா (ரலி) கூறுவதாக இருந்தால் ஹஸன் (ரலி) அவர்கள் பிறந்ததன் பின்பே கூறியிருக்க முடியும். ஹஸன் (ரலி)அவர்கள் எப்போது பிறந்தார்கள் என நாம் தேடிப் பார்த்தால் நபிகளார் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் சென்ற மூன்றாம் ஆண்டு பிறந்திருக்கின்றாரகள்.(பார்க்க:உஸுதுல் காபாஃ லிப்னு ஹஜர்)எமது சக்திக்கேற்ப நாம் தேடிய வகையில் எந்தஹதீஸ் கிரந்தத்திலும் ஹிஜ்ரி எத்தனையாம் ஆண்டு ஸகாத் கடமையாக்கப்பட்டது என்பதற்கு ஆதாரங்களைக் காண முடியவில்லை. ஆனாலும் முஸ்னத் அஹ்மதில் இடம் பெற்ற பிரபலமான ஒருஹதீஸின் ஊடாக ஸகாத் கடமையாக்கப்பட்டது மக்காவில் தான் என்பதை சந்தேகமின்றிப் புரிந்து கொள்ளலாம்.*
மக்காவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஸ்லாத்தைப் பிரச்சாரம் செய்த போது இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட மக்களுக்கு இறை நிராகரிப்பாளர்கள் தொடர்ச்சியான துன்பங்களைக் கொடுத்து வந்தனர்.அதனால் அபீஸீனியாவுக்கு சில முஸ்லிம்கள் புலம் பெயர்ந்து வாழ்ந்து வந்த நிகழ்வு நாம் அனைவரும் அறிந்ததே!அபீஸீனியாவில் வாழும் போது மன்னர் நஜ்ஜாஷி முஸ்லிம்களை விசாரனைக்கு அழைத்தார்.அந்நேரத்தில் முஸ்லிம்களின் சார்பில் ஜஃபர் பின் அபீதாலிப்(ரலி)அவர்கள் முன் வந்து சில விடயங்களை மன்னருக்கு விளக்கினார்கள்.விளக்கும் போது முஹம்ம்த் எங்களுக்கு தொழுகையையும் ஸகாத்தையும் ஏவுகின்றார் என்று கூறியதாக முஸ்னத் அஹ்மதில் ஆதாரபூர்வமாக இடம் பெற்றுள்ளது. *(பார்க்க:முஸ்னத் அஹ்மத்:1674)* மக்காவில் வாழ முடியாமல் முஸ்லிம்கள் அபீஸீனியாவுக்கு ஹிஜ்ரத் சென்ற போது நடைபெற்ற நிகழ்வே மேற்குறித்த நிகழ்வாகும். அப்படியாயின் ஹஸன் (ரலி) அவர்கள் பிறப்பதற்கு முன்பே அதாவது மக்காவில் வைத்தே ஸகாத் கடமையாக்கப்பட்டுள்ளது. ஆகவே ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன் இந்நிகழ்வு இடம் பெற வாய்ப்பில்லை. இன்னும் சொல்லப் போனால் ஹஸன் (ரலி) அவர்கள் மக்காவில் பிறக்கவில்லை என்பதும் குறித்த நிகழ்வு மதீனாவில் தான் இடம் பெற்றிருக்கின்றது என்பதை நிரூபணம் செய்கின்றது.
*ஆகவே பாத்திமா (ரலி) அவர்களின் இந்த ஹதீஸை இரு அறிஞர்களும் மீண்டும் ஆய்வுக்குட்படுத்தினால் ஒரு வேளை இந்த உண்மையை அறிந்து கொள்ள முடியும் என்பது எனது கருத்தாகும். இஸ்லாத்தை தூய வடிவில் மக்களுக்கு முன் வைக்கும் இந்த அறிஞர்கள் எனது சுருக்கமான பதிலுக்கு தங்களது ஆய்வை இணையத்தில் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கின்றேன். அத்தோடு குறித்த பதிலில் ஏதேனும் குறைபாடுகளைக் கண்டால் அவற்றை உடன் எனக்கு சுட்டிக் காட்டுமாறும் கேட்டுக் கொள்கின்றேன்.தாங்கள் வெளியிட்ட முதலாம் தொடருக்கான எனது பதிலே இதுவாகும்.எல்லாம் வல்ல அல்லாஹ் ஆய்வுசெய்யும் இது போன்ற அறிஞர்களை இச்சமூகத்தில் தொடர்ந்தும் நல்ல தேக ஆரோக்கியத்துடன் வாழவைப்பானாக!*
இது தான் ஸஹ்ரான் மவ்லவி அவர்களின் வாதம்.
*இவர்கள் எடுத்து வைக்கும் வாதம் சரியா என்பதைப் பிறகு ஆராய்வோம். இவர்களின் வாதம் சரி என்று வைத்துக் கொள்வதால் பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்ற கருத்து நிரூபணமாகாது. மேற்கண்ட ஹதீஸ் எதைப் பற்றிக் கூறுகிறது என்பதில் சந்தேகத்தைத் தான் இந்த வாதம் ஏற்படுத்துமே தவிர இத்னால் பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்ற கருத்து நிரூபணமாகாது. இது குறித்து நாம் கேட்ட கேள்விகள் அப்படியே உள்ளன.*
*நாம் கேட்டதை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்* .
இந்த ஹதீஸ் தங்க நகை அணிவது பற்றிய ஹதீஸ் அல்ல. ஹுபைராவின் மகளுடைய கையில் மோதிரங்கள் கனமான மோதிரங்கள் இருந்தன என்று தான் மூலத்தில் உள்ளது. இச்சொல் கையில் வைத்திருப்பதையும் குறிக்கும். அணிந்திருப்பதையும் குறிக்கும். கையில் இருந்தன என்று மொழியாக்கம் செய்யாமல் அணிந்திருந்தனர் என்று தமிழாக்கம் செய்து தங்கள் கருத்துக்கு ஏற்ப ஹதீஸை வளைத்துள்ளனர். இந்தச் சொல்லுக்கு இரண்டு விதமான அர்த்தம் செய்ய இடம் இருந்தாலும் இந்த இடத்தில் கையில் வைத்திருந்தார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் அதைக் கண்டவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தட்டி விட்டனர் என்று கூறப்படுகிறது. கையில் வைத்திருந்தால் தான் தட்டிவிட முடியும். கையில் அணிந்திருந்தால் கழட்ட வேண்டுமே தவிர தட்டி விடுவதில் பயனில்லை. மேலும் பின்னால் நாம் அளிக்கும் விளக்கமும் இந்த அர்த்தம் தான் சரி என்பதைச் சந்தேகமற உறுதிப்படுத்தும்.
*அடுத்ததாக இந்தச் செய்தியை ஃபாத்திமா ரலி அவர்களிடம் ஹுபைராவின் மகள் சொல்கிறார். இதை கேட்ட ஃபாத்திமா ரலி அவர்கள் தமது கழுத்தில் இருந்த தங்க மாலையைக் கழட்டி விடுகிறார்கள். அப்போது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகிறார்கள்.கழுத்தில்தங்க மாலையைஅணிந்திருக்கும் போது வரவில்லை. அப்போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியது என்ன?*
பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா?
*என்று தான் கூறினார்கள். ஃபாத்திமாவின் கரத்தில் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது மிகவும் கவனிக்கத் தக்கதாகும். மோதிரமாக இருந்தால் கூட கையில் அணிந்திருந்தார்கள் என்று சமாளிக்க முடியும். ஆனால் கழுத்தணியை கையில் அணிய முடியாது. வைத்திருக்கத் தான் முடியும். இந்த ஹதீஸில் இருந்து வாதம் செய்வதாக இருந்தால் தங்க நகையை அறவே வைத்திருக்கவே கூடாது என்று தான் வாதிட முடியும். அதற்குத்தான் இந்த ஹதீஸ் இடம் தருகிறதே தவிர அணியக்கூடாது என்ற கருத்தைத் தரவில்லை.*
அடுத்து ஃபாத்திமா ரலிஅம்மாலையைக் கழட்டிவிற்று விடச் சொன்னார்கள் என்பதும் இவர்களின் கைச்சரக்காகும்.
*ஏற்கனவே அவர்கள் கழட்டி விட்டார்கள் எனும் போது மீண்டும் ஏன் கழட்ட வேண்டும் என்ற சிந்தனையும் இவர்களுக்கு இல்லை. மூலத்தில் இப்படி கூறப்படவே இல்லை என்பதும் இவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. முதலில் கழட்டியதாகத் தான் மூலத்தில் உள்ளது. இரண்டாம் தடவை கழட்டியதாக இல்லை. ஆனாலும் பெண்கள் தஙக நகை அணியக் கூடாது என்பதை எப்படியாவது நிறுவ வேண்டும் என்பதற்காக இந்த வார்த்தையை நுழைத்து தங்க நகை அணிவது தான் தவறு என்று காட்ட முயற்சித்துள்ளனர்.*
தங்க நகையை அணிவது தவறு என்றால் ஃபாதிமா ரலி அதை விற்கத் தேவை இல்லை. அனியாமல் ஒரு சொத்தாக அதை வைத்துக் கொள்ளலாம். தங்கத்தை வைத்துக் கொள்வதே கூடாது என்பதால் தான் அவர்கள் விற்பனை செய்துள்ளார்கள்.
*இந்த ஹதீஸ் தங்கத்தை வைத்துக் கொள்ளவே கூடாது என்று தான் கூறுகிறதே தவிர அணிவதைப் பற்றி பேசவே இல்லை.*
எனவே இவர்கள் எடுத்து வைக்கும் இந்த ஹதீஸுக்கும் பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.
*எனவே தங்கத்தை வைத்திருந்தால் நரகம். அதை விற்று நற்காரியங்களுக்கு செலவு செய்து விட்டால் நரகத்திலிருந்து தப்பிக்கலாம் என்ற கருத்தையே இந்தச் செய்தி அழுத்தமாகக் கூறிக் கொண்டிருக்கிறது.*
இந்த வாதங்களை மறுக்க மேற்கண்ட கேள்விகள் பயன்படாது என்பதை முதலில் தெரிவிக்கிறோம். பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று கூறுவோர் அந்தக் கருத்தைக் கூறும் தெளிவான ஹதீஸை எடுத்துக் காட்டித் தான் வாதம் செய்ய வேண்டும்.
*ஃபாத்திமா (ரலி) சம்மந்தப்பட்ட ஹதீஸ் தங்கத்தை அணிவதைத் தடை செய்யவில்லை. தங்கம் வைத்திருப்பதைத் தான் தடை செய்கிறது. என்பதில் எந்தச் சந்தேகத்துக்கும் இடமில்லை.*
பாத்திமா (ரலி) தொடர்பான ஹதீஸில் மூன்று முடிவுகள் நம் முன்னே உள்ளன.
*இது தங்க நகை அணிவது பற்றியது முதல் நிலை. இந்தக் கருத்துக்கு அந்த ஹதீஸில் இடம் இல்லை என்பதை நாம் தெள்வு படுத்தி விட்டோம். அதற்கு மறுப்பு இல்லாததால் அந்த முடிவை எடுக்க முடியாது.*
அப்படியானால தங்கத்தை வைத்திருக்கக் கூடாது என்பதைத் தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது என்பது தான் இந்த ஹதீஸின் கருத்து என்பது உறுதியாகின்றது. இப்போது இது குறித்து இரண்டில் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும். ஸஹ்ரான் அவர்களும் ஒரு முடிவுக்கு வந்தாக வேண்டும்.
*தங்கத்தை அறவே வைத்துக் கொள்ளக் கூடாது என்பது முன்னர் இருந்த நிலை. இப்போது அது மாற்றப்பட்டு விட்டது என்று நாங்கள் முடிவுக்கு வந்து விட்டோம்.*
இதை ஸஹ்ரான் அவர்கள் மறுத்து மாற்றப்படவில்லை என்று வாதிட்டால் தங்கத்தை வைத்திருக்கவே கூடாது என்று ஸஹ்ரான் அவர்கள் அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்காவிட்டால ஹதீஸை மறுத்த குற்றம் சேரும்.
*ஒரு ஹதீஸில் எதிர்க் கேள்வி கேட்பதுடன் ஒரு ஆய்வாளரின் கடமை முடிந்து விடாது. அவரது நிலைபாடு என்ன என்பதும் தெளிவுபடுத்தப்பட வேண்டும்.*
இது விஷயத்தில் ஸஹ்ரான் அவர்களின் நிலை என்ன என்பதை அவர் தெளிவு படுத்த வேண்டும்.
*அடுத்து ஹஸன் அவர்களின் தந்தை இதை எனக்கு வாங்கித் தந்தார் என்று ஃபாதிமா (ரலி) கூறுவதால் ஹஸன் பிறந்த பிறகு தான் இதைக் கூறியிருக்க வேண்டும் என்பது சரியான வாதமே.*
ஜகாத் என்பது மக்காவில் கடமையாகி விட்டது என்பதும் ஓரளவுக்குச் சரியானதே. இது குறித்து ஹதீஸ் மட்டுமின்றி குர்ஆனிலும் ஆதாரம் உள்ளது. ஆனால் பொதுவாக இயன்றதை தர்மம் செய்தல் என்பதே இதன் கருத்தாக இருக்க முடியும்.
*நிர்ணயிக்கப்பட்ட சதவிகிதம், யார் யாருக்கு வினியோகிக்க வேண்டும் என்ற விபரம், அரசின் மூலம் திரட்டுதல், ஜகாத் நிதி திரட்டுவோருக்கு ஜகாத்தில் இருந்தே வழங்குதல் போன்றவை மக்காவில் அருளப்படவில்லை. அரசாங்கம் இல்லாத காலத்தில் இது போன்ற கட்டளையைப் பிறப்பிக்க முடியாது.*
ஜகாத் என்பது இந்தப் பொருளிலும் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.
*நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப் படுகிறது. எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்! அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவர்கள் ஸகாத் கொடுக்க மாட்டார்கள். மறுமையையும் மறுப்பவர்கள்.*
*திருக்குர் ஆன் 41:6,7*
ஜகாத் முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய மார்க்கக் கடமை என்பது இப்போது அனைவருக்கும் தெரியும். ஆனால் மேற்கண்ட வசனத்தில் ஜகாத் கொடுக்காத முஷ்ரிக்குகளுக்கு (இணை வைப்பவர்களுக்குக்) கேடு என்று கூறப்படுகிறது. சாதாரணமான தர்மத்தைத் தான் இது குறிக்க முடியும். துவக்க காலத்தில் ஜகாத் எனும் சொல் இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
*ஹஸன் (ரலி) அவர்கள் பிறந்த பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கத்தை வைத்துக் கொள்வதைத் தடுத்தார்கள் என்றால் அது வரை இப்போது சட்டமாக உள்ள ஜகாத் கடமையாக இருக்கவில்லை என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.*
மேலும் தங்கத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்பது ஜகாத் கடமையாவதற்கு முன்னுள்ள நிலை என்ற இப்னு உமர் அவர்களின் கூற்றையும் நாம் மறுக்க முடியாது, இப்னு உமர் ஹிஜ்ரத் செய்யும் போது பத்து வயதுடையவர்களாக இருந்தனர். மதீனா வந்த பிறகு தான் மார்க்கத்தைப் புரிந்து கொள்ளும் பருவத்தை அடைகிறார்கள். எனவே மதீனா வந்த பின் ஜகாத் பற்றிய கட்டளை அருளப்பட்டிருந்தால் தான் அவர்களால் இது பற்றிக் கூற முடியும்.
*இப்னு உமர் (ரலி) ஃபாதிமா (ரலி) ஆகிய இருவர் ஹதீஸையும் இணைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஒன்றை ஏற்று ஒன்றை மறுக்கக் கூடாது என்று நாங்கள் கூறுகிறோம்.*
இந்த விளக்கத்தில் ஸஹ்ரான் மவ்லவி அவர்களுக்கோ வேறு யாருக்குமோ உடன்பாடு இல்லை என்றால் அது மாற்றப்படவில்லை என்பதில் உறுதியாக இருந்தால் இந்தச் சட்டம் மாற்றப்படவில்லை என்று அறிவித்து யாரும் எந்தத் தங்கத்தையும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று தீர்ப்பளிக்க வேண்டும்.
*ஆனால் எப்படி தீர்ப்பளித்தாலும் பெண்கள் தங்க அணியக் கூடாது என்ற வாதம் முற்றிலும் தவறு என்பதில் ஐயம் இல்லை.*
*🌐🌐🌐 21. ஜனநாயகம் நவீன இணை வைத்தலா❓ஓர் ஆய்வு🌐🌐🌐*
*இன்ஷா அல்லாஹ் தொடரும் பாகம் 32*
🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰
No comments:
Post a Comment