பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, July 9, 2020

இஸ்லாத்தை அறிந்து - 28

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 28 👈👈👈* 


 *20. 🧕🧕🧕பாகம் 1🧕🧕🧕பெண்கள்🧕 தங்க 👙👙நகைகள்👙 👙அணியலாமா❓ஓர் 🧕ஆய்வு🧕🧕🧕* 


 *🧕பெண்கள் தங்க நகைகள் அணியலாமா❓🧕* 


 *பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று இலங்கையைச் சேர்ந்த சிலர் அர்த்தமற்ற வாதங்களைச் செய்து வருவது நம் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவர்களின் ஆய்வு முற்றிலும் அபத்தமாகவும் உளறலாகவும் அமைந்திருந்ததால் மக்களுக்கு உண்மையை விளக்குவதற்காக இரண்டு மறுப்புத் தொடர்கள் வெளியிட்டோம். அந்த மறுப்புகளுக்கு எதிராக நன்பர் என்பவர் அபத்தமான மறுப்புக் கட்டுரையை மூன்று தொடர்களாக வெளியிட்டிருந்தார். அவரது மறுப்பு அவரது ஆய்வைப்போலவே அபத்தமாக உள்ளது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் அந்த மூன்று தொடர்களுக்கும் தக்க மறுப்பு வெளியிட்டோம். இவை அனைத்தும் தனித் தனி கட்டுரைகளாக இடம்பெற்றதால் வாசிக்க சிரமம் ஏற்படும் என்பதைக் கவணத்தில் கொண்டு அனைத்தயும் ஒன்றன் பின் ஒன்றாக தொகுத்து வெளியிட்டுள்ளோம்.* 


 *தொடர்_1* 

இந்தப் பிரச்சனை குறித்து அப்பாஸ் அலி அவர்கள் ஆய்வு செய்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு தேவையான மாற்றம் செய்து வெளியிடுகிறோம்- பீ.ஜைனுல் ஆபிதீன்

 *இந்தக் கருத்து அவ்வப்போது வரலாற்றில் எடுத்து வைக்கப்படுவதும், இது அபத்தமான வாதம் என்று நிரூபிக்கப்படுவதும் வழக்கமாக இருந்து வருகிறது. நவீன தொழில் நுட்ப சாதனங்களின் வசதியால் இலங்கையில் சொல்லப்படும் இக்கருத்து தமிழ் கூறும் அனைவரையும் எளிதில் சென்று அடைந்து விடுகிறது. எனவே அதே தொழில் நுட்ப சாதனங்கள் வழியாகவே அதைத் தெளிவுபடுத்தும் அவசியம் நமக்கு ஏற்படுகிறது. எனவே பெண்கள் தங்க நகை அணிவது குறித்த விஷயத்தில் இலங்கையைச் சேர்ந்த சிலர் கூறுவது சரிதானா? என்பதை இங்கே தெளிவுபடுத்துகிறோம். இது போல் இலங்கைக் குழப்பங்கள் ஒவ்வொன்றாகத் தெளிவுபடுத்தப்படும்..* 

பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று இலங்கையில் சிலர் கூறும் கருத்தும் அதை நியாயப்படுத்த எடுத்து வைக்கும் வாதங்களும் வரிக்கு வரி வார்த்தைக்கு வார்த்தை முன்னரே சிலரால் சொல்லப்பட்டவை தான்.

 *அதைத் தான் இலங்கையைச் சேர்ந்த சிலரும் எடுத்து வைக்கின்றனர்.* 

ஆனால் அவர்கள் இதை நிரூபிக்க எடுத்து வைக்கும் ஆதாரங்களுக்கும் வாதங்களுக்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை என்பதே உண்மையாகும். மேலும் பெண்கள் வளைந்த தங்க நகை அணியக் கூடாது வளையாத தங்க நகை அணியலாம் என்று வாதிடுவதும் அறியாமையின் உச்ச கட்டமாகும்.

 *இந்தக் கருத்துடையவர்கள் முஸ்னத் அஹ்மதிலும், நஸயியிலும் இடம் பெற்ற கீழ்க்காணும் இரண்டு ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டு தங்கள் வாதத்தை நிலை நாட்டுகிறார்கள்.* 

ـ حدّثنا عبد الله حدَّثني أبي حدثنا عبد الصمد حدثنا همام حدثنا يحيى حدَّثني زيد بن سلام أن جده حدَّثه أن أبا أسماء حدَّثه أن ثوبان ـ مولى رسول الله صلى الله عليه وسلّم ـ حدَّثه : أن ابنة هبيرة دخلت على رسول الله صلى الله عليه وسلّم وفي يدها خواتيم من ذهب، يقال لها: الفتخ، فجعل رسول الله صلى الله عليه وسلّم يقرع يدها بعصية معه، يقول لها: أَيَسُرُّكِ أن يجعل الله في يدك خواتيم من نار؟! فأتت فاطمة فشكت إليها ما صنع بها رسول الله صلى الله عليه وسلّم، قال: وانطلقتُ أنبانا مع رسول الله صلى الله عليه وسلّم، فقام خلف الباب ـ وكان إذا استأذن قام خلف الباب، ـ قال: فقالت لها فاطمة: انظري إلى هذه السلسلة التي أهداها إلي أبو حس، قال: وفي يدها سلسلة من ذهب، فدخل النبي صلى الله عليه وسلّم فقال: يا فاطمة، بالعدل أن يقول الناس فاطمة بنت محمد وفي يدك سلسلة من نار؟! ثم عذمها عذماً شديداً ثم خرج ولم يقعد، فأمرت بالسلسلة فبيعت، فاشترت بثمنها عبداً فأعتقته، فلما سمع بذلك النبي صلى الله عليه وسلّم كبَّر وقال: الحمد لله الذي نجى فاطمة من النار اسم الكتاب: مسند الإمام أحمد

– أخبرنا عبيد الله بن سعيد قال حدثنا معاذ بن هشام قال حدثني أبي عن يحيى بن أبي كثير قال حدثني زيد عن أبي سلام عن أبي أسماء الرحبي أن ثوبان مولى رسول الله صلى الله عليه و سلم حدثه قال : جاءت بنت هبيرة إلى رسول الله صلى الله عليه و سلم وفي يدها فتخ فقال كذا في كتاب أبي أي خواتيم ضخام فجعل رسول الله صلى الله عليه و سلم يضرب يدها فدخلت على فاطمة بنت رسول الله صلى الله عليه و سلم تشكو إليها الذي صنع بها رسول الله صلى الله عليه و سلم فانتزعت فاطمة سلسلة في عنقها من ذهب وقالت هذه أهداها إلي أبو حسن فدخل رسول الله صلى الله عليه و سلم والسلسلة في يدها فقال يا فاطمة أيغرك أن يقول الناس ابنة رسول الله وفي يدها سلسلة من نار ثم خرج ولم يقعد فأرسلت فاطمة بالسلسلة إلى السوق فباعتها واشترت بثمنها غلاما وقال مرة عبدا وذكر كلمة معناها فأعتقته فحدث بذلك فقال الحمد لله الذي أنجى فاطمة من الناراسم الكتاب: سنن النسائي الصغرى

 *மேற்கண்ட ஹதீஸ்களுக்கு இவர்கள் செய்த தமிழாக்கம் இது தான்.* 

தவ்பான் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்: ஹுபைறா என்பவரின் மகள் (ஹிந்த்) அழ்ழாஹ்வின் தூதரிடத்தில் தங்க மோதிரம் அணிந்தவளாக வந்தாள். அப்பெண்னின் கையை அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தட்டி விட்டார்கள். நபிகள் நாயகத்தின் இச்செயலை அப்பெண் பாத்திமா (ரலி) அவர்களிடத்தில் முறைப்பட்டாள்.உடனே பாத்திமா (ரலி) அவர்கள் தான் அணிந்திருந்த தங்க மாலையைக் கழட்டி இதனை ஹஸனின் தந்தை(அலி ரலி) அவர்கள் தான் எனக்கு அன்பளிப்பாகத் தந்தார்கள் எனக் கூறினார். பாத்திமா (ரலி) அவர்களின் கரத்தில் தங்கமாலை இருக்கும் சமயத்தில் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு வந்தார்கள். பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா? எனக் கேட்டு விட்டு அங்கு உட்காரமல் திரும்பி விட்டார்கள். உடனே பாத்திமா (ரலி) அவர்கள் அம்மாலையைக் கழட்டி கடையில் விற்று வருமாறு ஆளப்பினார்கள். மாலை விற்றவுடன் அப்பணத்தினால் ஒரு அடிமையை வாங்கிக் கொண்டார்கள். பாத்திமாவின் இச்செயல் அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் கிடைத்த போது நரக நெருப்பை விட்டு பாத்திமாவைக் காப்பாற்றிய அந்த அழ்ழாஹ்வுக்கே புகழ் அனைத்தும் எனக் கூறினார்கள்.

ஆதாரம்:ஸுனனுன் நஸாயீ

 *ஹதீஸ் இலக்கம்:5140* 

அறிவிப்பாளர்: தவ்பான் (ரலி)

 *ஒரு ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு வாதிடுபவர் தான் கூறுகின்ற அக்கருத்து அந்த ஹதீஸில் உள்ளதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும். குறிப்பாக நடைமுறையில் உள்ளதற்கு மாற்றமாக ஒன்றைச் சொல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பெண்கள் தங்க நகை அணிவது கூடாது என்று வாதிடும் இலங்கை அறிஞர்களிடம் இந்தப் பொறுப்புணர்வை நாம் காண முடியவில்லை. மேலும் தங்களின் கருத்தை நிலை நாட்டிடுவதற்கு ஏற்ற வகையில் தமிழாக்கத்திலும் கை வரிசையைக் காட்டியுள்ளனர்.* 

நீல நிறத்தில் நாம் சுட்டிக்காட்டிய இடங்களில் இவர்கள் கைவரிசை காட்டியதால் தான் இவ்வாறு இவர்களால் வாதிட முடிகின்றது.

 *இந்த ஹதீஸ் தங்க நகை அணிவது பற்றிய ஹதீஸ் அல்ல. ஹுபைராவின் மகளுடைய கையில் மோதிரங்கள் கனமான மோதிரங்கள் இருந்தன என்று தான் மூலத்தில் உள்ளது. இச்சொல் கையில் வைத்திருப்பதையும் குறிக்கும். அணிந்திருப்பதையும் குறிக்கும். கையில் இருந்தன என்று மொழியாக்கம் செய்யாமல் அணிந்திருந்தனர் என்று தமிழாக்கம் செய்து தங்கள் கருத்துக்கு ஏற்ப ஹதீஸை வளைத்துள்ளனர். இந்தச் சொல்லுக்கு இரண்டு விதமான அர்த்தம் செய்ய இடம் இருந்தாலும் இந்த இடத்தில் கையில் வைத்திருந்தார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். ஏனெனில் அதைக் கண்டவுடன் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தட்டி விட்டனர் என்று கூறப்படுகிறது. கையில் வைத்திருந்தால் தான் தட்டிவிட முடியும். கையில் அணிந்திருந்தால் கழட்ட வேண்டுமே தவிர தட்டி விடுவதில் பயனில்லை. மேலும் பின்னால் நாம் அளிக்கும் விளக்கமும் இந்த அர்த்தம் தான் சரி என்பதைச் சந்தேகமற உறுதிப்படுத்தும்.* 

அடுத்ததாக இந்தச் செய்தியை ஃபாத்திமா ரலி அவர்களிடம் ஹுபைராவின் மகள் சொல்கிறார். இதை கேட்ட ஃபாத்திமா ரலி அவர்கள் தமது கழுத்தில் இருந்த தங்க மாலையைக் கழட்டி விடுகிறார்கள். அப்போது தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகிறார்கள். கழுத்தில் தங்க மாலையை அணிந்திருக்கும் போது வரவில்லை. அப்போது நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறியது என்ன?

 *பாத்திமாவே! முஹம்மதின் மகள் பாத்திமாவின் கரத்தில் நரக நெருப்பினால் ஆன மாலை இருக்கின்றது என மக்கள் பேசிக் கொள்வது உனக்கு மகிழ்ச்சியளிக்கின்றதா?* 

என்று தான் கூறினார்கள். ஃபாத்திமாவின் கரத்தில் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியது மிகவும் கவனிக்கத் தக்கதாகும். மோதிரமாக இருந்தால் கூட கையில் அணிந்திருந்தார்கள் என்று சமாளிக்க முடியும். ஆனால் கழுத்தணியைக் கையில் அணிய முடியாது. வைத்திருக்கத் தான் முடியும். இந்த ஹதீஸில் இருந்து வாதம் செய்வதாக இருந்தால் தங்க நகையை அறவே வைத்திருக்கக் கூடாது என்று தான் வாதிட முடியும். அதற்குத் தான் இந்த ஹதீஸ் இடம் தருகிறதே தவிர அணியக் கூடாது என்ற கருத்தைத் தரவில்லை.

 *அடுத்து ஃபாத்திமா (ரலி )அம்மாலையைக் கழட்டி விற்று விடச் சொன்னார்கள் என்பதும் இவர்களின் கைச்சரக்காகும்.* 

ஏற்கனவே அவர்கள் கழட்டி விட்டார்கள் எனும் போது மீண்டும் ஏன் கழட்ட வேண்டும் என்ற சிந்தனையும் இவர்களுக்கு இல்லை. மூலத்தில் இப்படி கூறப்படவே இல்லை என்பதும் இவர்களின் கண்களுக்குத் தெரியவில்லை. முதலில் கழட்டியதாகத் தான் மூலத்தில் உள்ளது. இரண்டாம் தடவை கழட்டியதாக இல்லை. ஆனாலும் பெண்கள் தஙக நகை அணியக் கூடாது என்பதை எப்படியாவது நிறுவ வேண்டும் என்பதற்காக இந்த வார்த்தையை நுழைத்து தங்க நகை அணிவது தான் தவறு என்று காட்ட முயற்சித்துள்ளனர்.

 *தங்க நகையை அணிவது தவறு என்றால் ஃபாத்திமா (ரலி) அதை விற்கத் தேவை இல்லை. அனியாமல் ஒரு சொத்தாக அதை வைத்துக் கொள்ளலாம். தங்கத்தை வைத்துக் கொள்வதே கூடாது என்பதால் தான் அவர்கள் விற்பனை செய்துள்ளார்கள்.* 

இந்த ஹதீஸ் தங்கத்தை வைத்துக் கொள்ளவே கூடாது என்று தான் கூறுகிறதே தவிர அணிவதைப் பற்றி பேசவே இல்லை.

 *எனவே இவர்கள் எடுத்து வைக்கும் இந்த ஹதீஸுக்கும் பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பதற்கும் எந்தச் சம்மந்தமும் இல்லை.* 

எனவே தங்கத்தை வைத்திருந்தால் நரகம். அதை விற்று நற்காரியங்களுக்கு செலவு செய்து விட்டால் நரகத்திலிருந்து தப்பிக்கலாம் என்ற கருத்தையே இந்தச் செய்தி அழுத்தமாகக் கூறிக் கொண்டிருக்கிறது.

 *தங்கத்தை வைத்திருக்கவே கூடாதா என்றால் இந்த ஹதீஸின் கருத்து இது தான். ஆனால் ஆரம்ப காலத்தில் இவ்வாறு சட்டம் இருந்து பின்னர் மாறப்பட்டு விட்டது.* 

 *☪️மாற்றப்பட்ட சட்டம்☪️* 

அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்! (என்று கூறப்படும்)

 *அல்குர்ஆன் (9 : 34)* 

இந்த வசனம் தங்கத்தையும், வெள்ளியையும் சேமித்து வைக்கக் கூடாது என்ற கருத்தைத் தருகின்றது. இதை மட்டும் வைத்து ஒருவர் முடிவெடுப்பாராயின் பொருளாதாரத்தைச் சேமிப்பது கூடாது என்ற முடிவுக்கே வருவார். மேற்கண்ட ஹதீஸும் இதே கருத்தையே தருகின்றது.

 *ஆனால் இவ்வசனம் கூறும் இந்தச் சட்டம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்னால் இருந்தது. ஸகாத் கடமையாக்கப்பட்ட பிறகு இச்சட்டம் மாற்றப்பட்டு பொருளுக்குரிய ஸகாத்தைக் கொடுத்துவிட்டால் அதைச் சேமிப்பது தவறில்லை என்று அனுமதி தரப்பட்டது. இதைப் பின்வரும் ஆதாரங்கள் தெளிவுபடுத்துகின்றது.* 

) ـ وقال أحمدُ بنُ شَبيبِ بنِ سعيدٍ حدَّثَنا أبي عن يونُسَ عنِ ابنِ شهابٍ عن خالدِ بِن أسلمَ قال خرَجْنا معَ عبدِ اللّهِ بنِ عمرَ رضيَ اللّهُ عنهما. فقال أعرابيٌّ: أخبِرْني عن قولِ اللّهِ {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةَ وَلاَ يُنفِقُونَهَا فِي سَبِيلِ اللَّهِ} (التوبة: 34) قال ابنُ عمرَ رضيَ اللّهُ عنهما: مَن كَنزَها فلم يُؤَدِّ زكاتَها فويلٌ لهُ، إنّما كان هذا قَبْلَ أن تُنزَلَ الزكاةُ، فلمَّا أُنْزِلَتْ جَعَلها اللّهُ طُهْراً للأمْوَالِ اسم الكتاب: صحيح البخاري

 *காலித் பின் அஸ்லம் கூறுகிறார் :* 

நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ… என்ற வசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், யார் அவற்றைப் பதுக்கி வைத்து அதற்கான ஸகாத்தைக் கொடுக்காமலிருக்கின்றாரோ அவருக்குக் கேடு தான். இவ்வசனம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் சுத்தீகரிக்கக் கூடியதாக ஸகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான் என்றார்கள்.

 *புகாரி (1404)* 

 *நபித்தோழர்களின் கருத்து மார்க்க ஆதாரமாகாது என்பதற்கு இது முரணானது என்று நினைக்கக் கூடாது. ஒரு வசனம் எப்போது அருளப்பட்டது என்பதை நபித்தோழர்கள் தான் கூற முடியும். (இது குறித்து சர்ச்சை வந்தால் பின்னர் விரிவாக விளக்குவோம்.)* 

 *1665* ) ـ حدثنا عُثْمانُ بنُ أبي شَيْبَةَ أخبرنا يَحْيَى بنُ يَعْلَى المَحَارِبيُّ أخبرنا أبي حدثنا غَيْلاَنُ عن جَعْفَرِ بن إيَاسٍ عن مُجَاهِدٍ عن ابنِ عَبَّاسٍ ، قال: لَمَّا نَزَلَتْ هَذِهِ الآَيةُ {وَالَّذِينَ يَكْنِزُونَ الذَّهَبَ وَالْفِضَّةِ} قال كَبُرَ ذلِكَ عَلَى المُسْلِمِينَ فَقَالَ عُمَرُ أَنَا أُفَرِّجُ عَنْكُمْ فَانْطَلِقُوا فَقَالُوا: يَا نَبِيَّ الله إِنَّهُ كَبُرَ عَلَى أَصْحَابِكَ هذِهِ الآيَةُ، فَقالَ رَسُولُ الله صلى الله عليه وسلّم: إِنَّ الله لَمْ يَفْرِضْ الزَّكَاةَ إِلاَّ لِيُطَيِّبَ مَا بَقِيَ مِنْ أَمْوَالِكُمْ وَإِنَّمَا فَرَضَ المَوَارِيثَ لِتَكُونَ لِمَنْ بَعْدَ كُمْ قالَ: فَكَبَّرَ عُمَرَ ثُمَّ قالَ لَهُ أَلاَ أُخْبِرُكَ بِخَيْرٍ مَا يَكْنِزُ المَرْءُ: المَرْأَةُ الصَّالِحةُ إِذَا نَظَرَ إِلَيْهَا سَرَّتْهُ وَإِذَا أَمَرَهَا أَطَاعَتْهُ وَإِذَا غَابَ عَنْهَا حَفِظَتْهُ. اسم الكتاب: سنن أبي داوود

 *இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :* 

அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு என்று எச்சரிப்பீராக! (9 : 34) இந்த வசனம் இறங்கிய உடன் இது முஸ்லிம்களுக்குப் பெரும் பிரச்சனையாகி விட்டது. உங்கள் பிரச்சனையை நான் அகற்றுகிறேன் என்று கூறி உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இறைத் தூதர் அவர்களே இவ்வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரும் பிரச்சனையாகி விட்டது என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்கள் செல்வங்களில் எஞ்சி இருப்பதைத் தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லை. உங்களுக்குப் பின் வருபவர்களுக்கு செல்வம் கிடைக்க வேண்டும் என்பதற்காகத் தான் வாரிசுரிமை சட்டத்தையே அல்லாஹ் கடமையாக்கி இருக்கிறான். (எனவே ஸகாத் கொடுத்துவிட்டால் தங்கம் வெள்ளியைச் சேர்ப்பது குற்றமில்லை) என்று கூறினார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் இறைவன் மிகப் பெரியவன் என்று கூறினார்கள்.

 *நூல் : அபூதாவுத் (1417)* 

எனவே மேற்கண்ட ஃபாத்திமா (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட செய்தியில் கூறப்பட்ட சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்பதை உணரலாம்.

 *இலங்கை அறிஞர்கள் இரண்டு ஹதீஸ்களைத் தான் ஆதாரமாகக் காட்டுகிறார்கள். அதில் ஒரு ஹதீஸ் பற்றிய நிலை இது தான். அடுத்த ஹதீஸ் பற்றி அடுத்த வியாழன் பார்க்கலாம். இது மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட வேண்டும் என்பதற்காக இரண்டு தொடராக வெளியிடப்படுகிறது* .

 *பெண்கள் தங்க நகை அணியலாமா_2* 

 *தொடர்-2* 

பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று கூறுவோர் பொதுவாக பலவீனமான ஹதீஸ்களையும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களையும் கலந்து ஆதாரமாக எடுத்து வைப்பது வழக்கம். ஆனால் இலங்கையில் இப்பிரச்சனையைக் கிளப்பியவர்கள் இரண்டு ஹதீஸ்களை மட்டுமே எடுத்து வைத்துள்ளனர். அந்த இரண்டு ஹதீஸ்களில் ஒரு ஹதீஸைப் பற்றி சென்ற தொடரில் விளக்கியுள்ளோம். அந்த ஹதீஸ் தங்கத்தை அணிவது பற்றி நேரடியாகவோ, மறைமுகமாகவோ பேசவில்லை என்பதால் அது இவர்களின் வாதத்துக்கு ஆதாரமாகாது என்பதைத் தெளிவுபடுத்தினோம்.

 *அடுத்ததாக அவர்கள் பின்வரும் ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.* 

حدثنا عبد الله بن مسلمة حدثنا عبد العزيز يعني ابن محمد عن أسيد بنأبي أسيد البرادعن نافع بن عياش عن أبي هريرة أن رسول الله صلى اللهعليه وسلم قال من أحب أن يحلق حبيبه حلقة من نار فليحلقه حلقة من ذهب ومنأحب أن يطوق حبيبه طوقا من نار فليطوقه طوقا من ذهب ومن أحب أن يسورحبيبه سوارا من نار فليسوره سوارا من ذهب ولكن عليكم بالفضة فالعبوا بهارواه أبو دود في سننه,وأحمد في مسنده

 *(உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு (மனைவி, சகோதரி, தாய், உறவுமுறைப்பெண்) ஆகியோருக்கு நரக நெருப்பினால் ஒரு வளையத்தை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கத்தினால் ஒரு வளையலை அவளுக்கு அணிவிக்கட்டும்.(உங்களில்) யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் ஒரு கழுத்தணியை அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்க மாலையை அவளுக்கு அணிவிக்கட்டும். உங்களில் யார் தான் நேசிக்கின்றவளுக்கு நரக நெருப்பினால் காப்பு அணிவிக்க விரும்புகின்றாரோ அவர் தங்கக் காப்பை அணிவித்துக் கொள்ளட்டும். என்றாலும் வெள்ளியை உங்களுக்கு நான் ஏவுகின்றேன். அவற்றை தாராளமாகப் பயன்படுத்துங்கள்! என அழ்ழாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்கூறினார்கள்.*

 *(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரழி),நூற்கள்: முஸ்னத் அஹ்மத்,ஸுனன் அபீதாவுத்-4236)* 

இது தான் அவர்கள் எடுத்துக் காட்டும் இரண்டாவது ஹதீஸாகும்.

 *மேற்கண்ட ஹதீஸுக்கு அவர்கள் செய்துள்ள அர்த்ததைத் தான் நாம் அப்படியே மேலே வெளியிட்டுள்ளோம்.* 

முதல் ஹதீஸில் தங்கள் கைச் சரக்கைச் சேர்த்து எப்படி வாதிட்டார்களோ அது போல் இந்த ஹதீஸிலும் தாங்கள் என்ன வாதிடுகிறார்களோ அதற்கு ஏற்றவாறு ஹதீஸை வளைத்திருக்கிறார்கள்.

 *அதாவது அடிக்கோடிட்ட இடங்களில் பெண்பாலாகக் குறிப்பிட்டுள்ளனர். அதை உறுதிப்படுத்தும் விதமாக அடைப்புக் குறிக்குள் (மனைவி, சகோதரி, தாய், உறவுமுறைப்பெண்) என்று கூறி தங்களின் கருத்தைத் திணித்துள்ளனர்.* 

நேசிக்கின்றவளுக்குஎன்று மொழி பெயர்த்த இடத்தில் அரபு முலத்தில் ஹபீப் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஹபீப், ரஹீம், ரஷீத், அலீம் என்ற வடிவமைப்பைக் கொண்டுள்ள சொற்கள் ஆண்பாலாகவும் பயன்படுத்தப்படும். பெண்பாலாகவும் பயன்படுத்தப்படும் என்று காரணம் கூறி இதன் காரணமாக தாங்கள் பெண்பாலாக அர்த்தம் செய்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

 *அவர்கள் கூறியதை அப்படியே தருகிறோம்* 

மேற்படி நபிமொழியில்ஹபீப் எனும் அறபு வார்த்தை நேசிக்கப்படும் ஆண் அல்லது சிறுவர்களைத் தான் குறிக்கும் என வாதிடுவது தவறானதாகும். காரணம் ஃபயீல் எனும் அமைப்பில் அமைந்திருக்கும் பெயர்ச் சொல் மாதிரிகள் ஆண், பெண் இருபாலருக்கும் பொதுவாகவே அறபு இலக்கணத்தில் பயன்படுத்தப்படும்.

 *பொதுவாக ஹபீப் என்ற வார்த்தைக்கு நேசத்திற்குரிய ஆண் என்று மாத்திரம் அர்த்தம் இருந்தால் உங்கள் வாதப்படி அது நியாயமானதாகும். ஆனால் அறபு மொழிவிதியின் பிரகாரம் இவ்வாறான வார்த்தைகளுக்கு நேசத்திற்குரிய ஆண் என்றும் மொழி பெயர்க்கலாம் நேசத்திற்குரிய பெண் என்றும் மொழி பெயர்க்கலாம் இரண்டுஅர்த்தங்களை கொண்டிருக்கும் போது அது நேசத்திற்குரிய பெண் என்பதைத் தான் குறிக்கின்றது என்று நாம் கூறுவதற்கு பிரதானமாக இரண்டு காரணிகளைக் கூறமுடியும்.* 

என்று தாங்கள் செய்த அர்த்தத்தை நியாயப்படுத்துகிறார்கள்

 *இவர்களின் இந்த வாதம் அரபு இலக்கணத்தை அரைகுறையாக விளங்கியதால் ஏற்பட்டதாகும்.* 

 *இது பற்றி அரபு இலக்கணம் கூறுவது என்ன?* 

ஹபீப் என்பது போன்ற வடிவில் இல்லாத மற்ற அமைப்புடைய சொற்களுடன் பெண்ணைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்துக் கூறினால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாகக் கூற வேண்டும். உதாரணமாக ஆலிம் என்ற சொல்லை எடுத்துக் கொள்வோம். தமிழில் அறிஞன் என்று பொருள் கொண்டாலும் அரபியில் அவ்வாறு கூற முடியாது. ஆணுக்கும் பெண்ணுக்கும் தனித்தனி சொல்லமைப்பைப் பயன் படுத்த வேண்டும் ஆண்ஆலிம்என்றும் பெண்ஆலிமாஎன்றும் கூற வேண்டும்

 *ஹபீப் என்ற சொல் அமைப்பு மட்டும் இதில் இருந்து வேறுபட்டதாகும். இது போன்ற வடிவமைப்பில் உள்ள சொற்களுடன்பெண்ணைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்துக் கூறினால்அதற்கேற்ப ஹபீபா என்று பெண்பாலாக இச்சொல்லை மாற்ற வேண்டியதில்லை. ஆணுக்கும் பயன் படுத்தும் ஹபீப் என்ற சொல்லையே பெண்ணுக்கும் கூறலாம்.* 

அதாவதுஆண் ஹபீப்,பெண் ஹபீப்என்று கூறலாம்.

 *ஆனால்பெண்ணைக் குறிக்கும் வார்த்தையைச்சேர்க்காமல்வெறும்ஹபீப் என்று மட்டும் கூறினால் ஆணைக் குறிப்பிடுகிறோமா பெண்ணைக் குறிக்கிறோமா என்ற குழப்ப்ம் ஏற்படும். இது போன்ற இடங்களில் நாம் பெண்ணைத் தான் குறிக்கிறோம் என்றால ஹபீபா என்று பெண்பாலாக மாற்றித் தான் பயன்படுத்த் வேண்டும்.* 

நான் எனது ஹபீபை (நேசரை) பார்த்தேன் என்று கூறினால் இதில் பெண்ணைக் குறிக்கும் எந்த வார்த்தையும் சேர்க்கப்படவில்லை. இதற்கு ஆண் என்று மட்டுமே அர்த்தம். பெண் ஹபீபைப் பார்த்தேன் என்று கூறினால் ஹபீப் எனும் சொல் ஆண்பால் வடிவில் இருந்தாலும் அதைப் பெண்பாலாகக் கருத வேண்டும். இது தான் அரபு இலக்கணத்தில் கூறப்பட்டுள்ளது.

 *இதற்கான ஆதாரங்கள் வருமாறு:* 


أوضح المسالك إلى ألفية ابن مالك – ( / 0)

والثاني: فعيل بمعنى مفعول6، نحو: رجل جريح امرأة جريح وشذ:ملحفة جديدة؛ فإن كان فعيل بمعنى فاعل، لحقته التاء1، نحو: امرأة رحيمة، وظريفةفإن قلت: ;مررت بقتيلة بني فلان ألحقت التاء خشية الإلباس؛ لأنك لم تذكر الموصوف.

 *ஒரு கதீல் (கொல்லப்பட்டவன்கொல்லப்பட்டவள்) ஐ நான் கடந்து சென்றேன் என்று கூறினால் ஆணைக் குறிப்பிடுகிறோமா பெண்ணைக் குறிப்பிடுகிறோமா என்று கூறப்படாததால் கேட்பவருக்கு குழப்பம் ஏற்படும். பெண்ணைக் குறிப்பது தான் நமது நோக்கம் என்றால் கதீல் என்று கூறாமல் கதீலா என்று பெண்பாலாக மாற்றிக் கூற வேண்டும்* 

حاشية العلامة الصبان على شرح الشيخ الأشموني: على ألفية الإمام ابن مالك – *(4 / 135)* 

ومن فعيل بمعنى مفعول كقتيل بمعنى مقتول وجريح بمعنى مجروح إن تبع موصوفهغالبًا التا تمتنع فيقال:رجل قتيل وجريح، وامرأة قتيل وجريح. والاحتراز بقوله: كقتيل من فعيل بمعنى فاعل نحو: رحيم وظريف، فإنه تلحقه التاء فتقول: امراة رحيمة وظريفة،وبقوله: إن تبع موصوفه من أن يستعمل استعمال الأسماء غير جارٍ على موصوف ظاهر ولا منوي لدليل فإنه تلحقه التاء نحو: رأيت قتيلًا وقتيلة؛ فرارًا من اللبس. ولو قال: ومن فعيل كقتيل إن عُرف موصوفه غالبًا التا تنحَذِفلكان أجود؛ ليدخل في كلامه نحو: رأيت قتيلًا من النساء، فإنه مما يحذف فيه التاء للعلم بموصوفه؛ ولهذا قال في شرح الكافية: فإن قصدت الوصفية وعلم الموصوف جرد من التاء. وأشار بقوله: غالبًا إلى أنه قد تلحقه تاء الفرق حملًا على الذي بمعنى فاعل؛ كقول العرب: صفة ذميمة، وخصلة حميدة، كما حمل الذي بمعنى فاعل عليه في التجرد نحو: {إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ} [الأعراف: 56]، {قَالَ مَنْ يُحْيِي الْعِظَامَ وَهِيَ رَمِيمٌ} [يس:78]

 *இந்த இலக்கண விதியின் படி மேற்கண்ட ஹதீஸை அணுகினால் இவர்கள் செய்த அர்த்தம் தவறு என்பது நிரூபனமாகும்.* 

இந்த ஹதீஸில் ஹபீப் என்ற சொல் பெண்ணைக் குறிக்கும் எந்த வார்த்தையும் சேர்க்கப்படாமல் கூறப்பட்டுள்ளது.இவ்வாறு பயன்படுத்தப்பட்டால் பெண் என்று அர்த்தம் செய்ய இலக்கணத்தில் இடமில்லை. ஆண் என்ற ஒரு பொருள் மட்டுமே இந்த இடத்தில் கொடுக்க முடியும்.

 *இதன் படி இந்த ஹதீஸின் பொருள் இது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் :* 

தனது பிரியமானவனுக்குநெருப்பால் ஆன வளையத்தை ஒருவர் அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன வளையத்தை அவனுக்கு அணிவிக்கட்டும்.தனது பிரியமானவனுக்குநெருப்பால் ஆன மாலையை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன மாலையை அவனுக்கு அணிவிக்கட்டும். தனது பிரியமானவனுக்கு நெருப்பால் ஆன காப்பை அணிவிக்க விரும்பினால் அவர் தங்கத்தால் ஆன காப்பை அவனுக்கு அணிவிக்கட்டும். எனவே வெள்ளியை உபயோகித்து அதன் மூலம் (ஆபரணங்களை செய்து) விளையாடுங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) அவர்கள்

 *நூல் : அபூதாவுத் (3698)* 

மேலும் இந்த ஹதீஸில் கூறப்பட்ட வாசகங்கள் அனைத்தும் ஆண்பாலாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது.

 *அவனுக்கு என்று மொழியாக்கம் செய்த இடங்கள் அனைத்திலும்ஹாஎன்ற பெண்பால் பயன்படுத்தப்படாமல்ஹுஎன்ற (அவனுக்கு) ஆண்பால் பயன்படுத்தப்பட்ட்டுள்ளது.* 

அது போல் உங்களுக்கு என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் ஆணைக் குறிக்கும்கும்என்ற் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. பெண்ணைக் குறிக்கும்குன்னஎன்ற சொல் பயன்படுத்தப்படவில்லை.

 *பயன்படுத்துங்கள் என்ற சொல் அமைப்பும் ஆண்பால் முன்னிலை பன்மையாகத் தான் பயன் படுத்தப்பட்டுள்ளது.* 

எனவே இந்த ஹதீஸ் பெண்கள் பற்றியே பேசவில்லை.

 *ஆண்கள தஙக் நகை அணியக் கூடாது; வெள்ளி நகை அணியலாம் என்பதைத் தவிர இதற்கு வேறு அர்த்தம் இல்லை.* 

ஆண்கள் தஙக் நகை அணிவதற்கு அனுமதிக்கும் பல ஹதீஸ்கள் உள்ளன. அதைத் தான் இந்த ஹதீஸும் சொல்கிறது.

 *(ஆண்கள் தஙக நகை அணியக் கூடாது என்ற ஹதீஸ் சரியானது என்று இவர்களே குறிப்பிட்டிருப்பதால் அதை இங்கே எடுத்துக் காட்ட அவசியம் இல்லை.)* 

அரபு இலக்கனத்துக்கு மாற்றமாக் பொருள் செய்து விட்டு அதை இன்னொரு வகையிலும் இவர்கள் நியாயப்படுத்துகின்றனர்.
அது ஆணைத் தான் குறிக்கின்றது என்றால் ஆண்களுக்குதங்கம் ஏற்கனவே தடைசெய்யப்பட்டு விட்டது. தடை செய்யப்பட்டு விட்டதன்பின்னால் அழ்ழாஹ்வின் துதர் மீண்டும் அதனைக் கூறினால் அவ்வார்த்தைக்குஅர்த்தம் இல்லாமல் போய் விடுகின்றது.
இதுவும் அறியாமையின் காரணமாக எடுத்து வைக்கப்படும் வாதமாகும்.

 *தொழுகையை நிலை நாட்டுங்கள் என்று ஒரு தடவை கூறி விட்டதால் இன்னொரு தடவை அதைக் கூறுவது அர்த்தமற்றது என்று சொல்வார்களா? ஒரு விஷயம் ஐம்பதுக்கு மேற்பட்ட வார்த்தைகளில் ஹதீஸ்களில் கூறப்ப்ட்டுள்ளன. 49 தடவை கூறியது அர்த்தமற்றது என்பார்களா? ஒரு வாக்கியத்தில் ஒரு நேரத்தில் இவ்வாறு பயன்படுத்தப்படும் போது இரண்டு அர்த்தத்துக்கு இடம் இருந்தால் அவ்வாறு கூறுவதில் அர்த்தம் இருக்கும்* .

இவர்கள் கூறுவது போல் பொருள் கொள்ள இலக்கணத்தில் இடமில்லை. மேலும் தங்கத்தை அனுமதிக்கும் மற்ற ஹதீஸ்கள் இந்த் ஹதீஸின் ஒரு பகுதி அல்ல. எனவே இவர்கள் கூறும் இந்தக் காரணமும் அர்த்தமற்றதாகும்.

 *அடுத்து இன்னொரு காரணத்தையும் முன் வைக்கிறார்கள்* 

அது பெண்களைத்தான் குறிக்கின்றது என்பதற்கு ஆதாரமாகஇன்னுமொரு அறிவிப்பு முஸ்னத் அஹ்மத் என்ற கிரந்தத்தில் வருகின்றது. அந்தஅறிவிப்பில் தான் நேசிக்கின்றவளுக்கு என்று இடம் பெற்றுள்ளது.அந்தஅறிவிப்பiயும் சிலர் பலவீனப்படுத்த முயற்சிக்கலாம். அதனால் அது பற்றியவிவரங்களையும் நாம் தருகின்றோம்.

 *இந்த அறிவிப்பில் இடம்பெறும் அறிவிப்பாளரானஅப்துர்ரஹ்மான் பின்அப்துல்லாஹிப்னு தீனார்என்பவர் இடம் பெறுகிறார். இவரைப் பற்றிக்கூறப்படும் கருத்துக்களைப் பார்ப்போம். இமாம் யஹ்யா பின் மயீன்:என்னிடத்தில் இவரது ஹதீதில் சற்று பலவீனம் உண்டு* 

இமாம் இப்னு ஹஜர்:தவறிழைக்கும் சாதாரன நம்பகத்தன்மை கொண்டவர்

 *இமாம் அபுஹாதம்: இவரது ஹதீத் எழுதப்படும் அவரை ஆதாரம் பிடிக்கப்பட மாட்டாது* 

இப்னு அதீ: இவர் அறிவிப்பவற்றில் மறுக்கப்பட வேண்டிய சிலதும் உண்டு.மேலும்,இவர் அறிவிப்பவற்றை வழி மொழியும் துணை ஆதாரமும் கிடையாது ஆகமொத்தத்தில் இவரது ஹதீத் எழுதப்படும்.

 *இவை அனைத்தும் இவர் பற்றி கூறப்பட்ட சில குற்றச்சாட்டுக்கள் இவர் பற்றி கூறப்பட்ட நல்ல கருத்துக்கள்:* 

இமாம் பகவீ: இவர் ஹதீதில் ஏற்றுக் கொள்ளப்படுவதற்கு தகுதியானவர்

 *இமாம் அலீ பின் மத்யனீ: இவர் சாதாரன நம்பகத்தன்மை கொண்டவர்* 

இமாம் ஹர்பீ: ஏனையோர் இவரை விட அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவர்கள்

 *மேலே நாம் சுட்டிக் காட்டியுள்ள விமர்சனங்களையும் நியாயங்களையும்நோக்கும் போது இந்த அறிவிப்பாளருடைய குறை ஹதீதினை பலவீனப்படுத்துமளவிற்குகிடையாது இவரை விட ஏனையோர் அதிக நம்பகத்தன்மை வாய்ந்தவர் என்று இமாம்ஹர்பீ கூறிய கூற்றிலிருந்தே இவர் சாதாரன நம்பகத்தன்மை கொண்டவர் என்பதுதெளிவாக விளங்குகின்றது.* 

இது போன்ற தரத்தில் உள்ள அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்கள் என்பது இந்த ஹதீஸை மேற்கோளாகக் காட்டும் இவர்களுக்கே தெரிகிறது. இதனால் தான் இதை முதன்மை ஆதாரமாகக் காட்டாமல் வலுப்படுத்தும் துணை ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

 *இவர்கள் கூறுகிற படி இந்த அறிவிப்பாளர் ஓரளவு நம்பிக்கையாளர் என்று வைத்துக் கொண்டாலும் இந்த அறிவிப்பு பலவீனமானது என்பது உறுதியாகிவிடும்.* 

ஏனெனில் இவரை விட நம்பகமானவர் அறிவிக்கும் அறிவிப்பில் ஹபீப் என்று ஆனணக் குறிக்கும் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இவர் மட்டும் பெண்ணைக் குறிக்கும் ஹபீபா எனற் சொல்லைக் கூறுகிறார். எனவே நம்பகமான அறிவிப்பாளருக்கு மாற்றமாக இவர் அறிவித்திருக்கும் போது இவரது அறிவிப்பு நிற்காது.

 *எனவே பெண்கள் தங்க நகை அணியலாம் என்பதற்குத் தெளிவான அனுமதி அளிக்கும் ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் அதைத் தடை செய்யும் வகையில் ஏற்கத்தக்க எந்த ஆதாரமும் இல்லை.* 

அடுத்து இன்னொரு தத்துவத்தையும் இவர்கள் கூறுகிறார்கள்.

 *எமது இஸ்லாமிய சமுதாய மக்களில் பலர் அறியாத,அழ்ழாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் தடைசெய்தஒரு விடயம் தான் பெண்கள் வளைந்த வடிவம் கொண்டதங்கநகைகள் அணிவது ஹராம் என்பதாகும்.* 

இஸ்லாத்தின் பார்வையில் காப்பு,மாலை உள்ளடங்கலாக வளைந்த வடிவம் கொண்டதங்கநகைகள் அணிவது ஹராமாகும். மாறாக,வளையல் அல்லாததங்கநகைகளை தாரளமாகஅணிந்து கொள்ளலாம்.

 *என்பது இவர்களின் அந்தத் தத்துவமாகும்.* 

எனது சமுதாயத்தில் தங்கம் பெண்களுக்கு ஹலால் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். தங்கம் என்பது ஒரு உலோகத்தின் பெயரே தவிர ஒரு வடிவத்தின் பெயர் அல்ல அது எந்த வடிவமாக இருந்தாலும் பிரச்சனையில்லை என்பதே இதிலிருந்து நமக்கு விளங்குகிறது.

 *யமன் நாட்டைச் சார்ந்த பெண்மனி தனது மகளுடன் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது அவரது மகளின் கையில் தடிமனான இரண்டு தங்கக் காப்புகள் இருந்தன. இக்காப்புகள் வட்ட வடிவமானவை. வட்ட வடிவத்தில் தங்கம் அணிவது கூடாதென்றால் அதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருப்பார்கள். வட்டமாக இருப்பதைக் கண்ணால் நபி (ஸல்) அவர்கள் கண்ட பிறகும் அதை அணியக் கூடாது என்று அவர்கள் தடுக்காமல் இருந்திருக்கும் போது அதை நாம் தடுப்பதற்கு எந்த அதிகாரமும் இல்லை.* 

பெண்கள் வட்ட வடிவத்தில் தங்கம் அணியக் கூடாதென்றால் வட்ட வடிவத்தில் இருந்த தங்க மோதிரத்தை தனது பேத்திக்கு நபி (ஸல்) அவர்கள் கொடுத்திருக்க மாட்டார்கள். அவர்கள் அதை எடுத்துக் கொடுத்திருப்பது தங்கம் முழுவதும் பெண்களுக்கு ஹலால் தான். இதில் வடிவம் ஒரு பிரச்சனையில்லை என்பதையே காட்டுகிறது.

 *ஏன்?இவர்கள் வைக்கும் ஹதீஸிலும் தங்கத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லப்பட்ட பிறகு அதற்கு மாற்று வழியாக வெள்ளியை உபயோகித்துக் கொள்ளுங்கள் என்றே கூறப்படுகிறது.* 

இவர்கள் கூறுவது போல் வட்டமில்லாத தங்கத்தைப் பெண்கள் அணியலாம் என்றால் அது கூறப்பட வேண்டிய இடம் இது தான். வட்டமில்லாத தங்க நகையை அணிந்து விளையாடுங்கள் என்று சொல்லாமல் வெள்ளியில் விளையாடுங்கள் என்று கூறி இருப்பார்கள்.

 *மேலும் வடிவம் தான் பிரச்சனை என்றால் முத்ல் தொடரில் எடுத்துக் காட்டிய ஹதீஸில் தங்க மாலையை வேறு வடிவமாக மாற்றுமாறு நபிகள் நாயகம் ஸல் அவர்கள் தமது மகளுக்குக் கூறி இருப்பார்கள். இவர்கள் கூறுகின்ற இவ்விளக்கத்தைக் கவனிக்கும் போது இது அறிவற்ற வாதம் என்பதை உணரலாம். வட்ட வடிவத்தில் உள்ள தங்கம் கூடாது. மற்ற வடிவத்தில் உள்ள தங்கம் கூடும் என்று கூறினால் தங்கம் ஆகுமானது தான். வடிவம் ஆகுமானதல்ல என்ற கருத்து வருகிறது. எனவே வடிவம் தான் இவர்களுக்குப் பிரச்சனையாக இருக்கிறது.* 

தங்கத்தில் இவர்கள் தடை செய்கின்ற வடிவம் வெள்ளியில் இருந்தால் அதை இவர்கள் அனுமதிக்கிறார்கள். தடை செய்வதில்லை. இந்தத் தடுமாற்றம் ஹலால் ஹராம் சம்பந்தமான விஷயத்தில் வந்திருப்பது நமக்கு ஆச்சர்யமாக இருக்கிறது.

 *தொடர்-3* 

பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று இலங்கையில் சிலர் தவறான வாதங்களை எடுத்து வைப்பது குறித்து நாம் இரண்டு தொடர்களை வெளியிட்டோம்.

 *அதற்கு இரண்டு மறுப்புக்கள் வெளியிடப்பட்டுள்ளன. முதல் மறுப்பு தாருல் அதர் எனும் அமைப்பின் சார்பில் நவ்பர் என்பார் வெளியிட்டுள்ளார். அந்த மறுப்புக்குரிய நமது விளக்கத்தை முன் வைக்கிறோமோ. நவ்பர் வெளியிட்ட மறுப்பில் பெண்கள் தங்க நகை அணிவது தொடர்பாக நாம் கேட்ட எந்தக் கேள்விக்கும் பதில் இடம் பெறவில்லை. தொடரும் என்று போட்டிருப்பதால் அடுத்தடுத்த தொடரில் தான் வெளியிடுவார் என்று நினைக்கிறன். முதல் தொடரில் அவர் எடுத்து வைத்த தலைப்புடன் தொடர்பில்லாத வாதங்களூக்கு இங்கே பதில் தருகிறோம்.* 

 *முதல் வாதம்* 

 *அன்புச் சகோதரர் பி ஜைனுல் ஆபிதீன் அவர்களுக்கு!* 

அஸ்ஸலாமு அலைகும் (வறஹ்)

 *பெண்கள் தங்க நகைகள் அணியலாமா?என்ற தலைப்பில் தாங்களது பிரேத்தியேகஇணைய தளத்தில் வெளியான இரு தொடர்களையும் கண்டோம்.அது தொடர்பான எமதுமாற்றுக் கருத்துகளையும் ஆட்சேபனைகளையும் ஏன் சிலஆலோசனைகளையுங் கூடஇந்த பதிலினூடாக உங்கள் முன் பதிவு செய்து கொள்ள விரும்புகிறோம்.* 

முதலில்இந்தப் பிரச்சனை குறித்து அப்பாஸ் அலி அவர்கள் ஆய்வு செய்திருந்தார். அதை அடிப்படையாகக் கொண்டு தேவையான மாற்றம் செய்து வெளியிடுகிறோம்_பீ ஜைனுல் ஆபிதீன்என உங்கள் மறுப்பை தொடக்கியுள்ளீர்கள்.

 *உங்களது பிரேத்தியேகஇணைய தளத்தில் குறித்த பிரச்சனை தொடர்பாக உங்களது ஆய்வை (நீங்கள் இது குறித்து ஆய்வு செய்திருந்தால்) வெளியிடாமல் அப்பாஸ் அலி அவர்களது ஆய்வை வெளியிட்டிருக்கிறீர்கள்* .
 விவாதங்கள்,நிகழ்வுடன் சம்ப்ந்தப்பட்டவர்களது நேரடித் தகவல்கள் (உதாரனம் தமுமுக விவகாரம்) போண்றவை அல்லாமல் உங்களோடு மாற்றுக் கருத்துள்ளவர்களுக்குநீங்களே பதில் எழுதும் உங்கள் வழமைக்கு மாற்றமாகஅதுவும் உங்கள் தனிப்பட்ட இணைய தளத்தில் முதன் முறையாக எமக்கு பதில் எழுதும் போது மாத்திரம் அப்பாஸ் அலி என்பவரது ஆய்வை தேவையான மாற்றம் செய்து வெளியிட்டிருக்கிறீர்கள்.அவர் குறித்த விடயத்தில் ஆய்வு செய்திருக்கிறார்.நாம் இது தொடர்பான எமது வாதங்களை முன்வைத்தபின் அவரது ஆய்வில் செய்யப்பட்டதேவையான மாற்றம்என்ன என்பது ஒரு புறமிருக்க, அவரது ஆய்வையே நீங்கள் சரி கண்டு உங்கள் இனைய தளத்திலே பிரசுரித்து உள்ளதால் அதை உங்கள் ஆய்வாகவே கருதியும்நபர்களை எதிர் கொள்வது முக்கியமில்லை கருத்தை எதிர்கொள்வதே முக்கியம்என்ற எமது நடைமுறைக்கேற்பவும் இப்பதிலை உங்கள் முன்னிலையில் பதிவு செய்கிறோம்.

 *இந்த வாதத்தில் உருப்படியான ஒரு விஷயமும் இல்லை. தவறான கருத்துக்களுக்கு நாமே பதில் எழுதும் எந்த வழிமுறையயும் நாம் அறிவிக்கவில்லை. தகுதியானவர்களை ஊக்குவிப்பதும் அவர்களை முன்னிலைப் படுத்துவதும் தான் நமது வழிமுறை. களியக்காவிளை விவாதத்தில் மற்ற அறிஞர்கள் வாதிட்டனர். ரசாத் கலீபா கூட்டத்துடனும் இளம் மவ்லவிகள் தான் வாதிட்டனர். நாத்திகருடன் நடந்த விவாதத்தில் கூட நானே ஆக்ரமித்துக் கொள்ளவில்லை. மற்றவர்களை விட என் பங்கு குறைவாகவே இருந்தது. நான் மட்டும் தான் விவாதிக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்த போது மட்டும் (உதாரணம் ஜகாத் விவாதம் , முஜீப் விவாதம்) தான் நான் மட்டும் களம் இறங்கினேன். மற்றபடி அனைவருக்கும் நானே பதில் சொல்வது என்று எந்தக் கொள்கை முடிவும் எம்மிடம் இல்லை.* 

அடுத்து அவரது ஆய்வையே நீங்கள் சரி கண்டு உங்கள் இனைய தளத்திலே பிரசுரித்து உள்ளதால் அதை உங்கள் ஆய்வாகவே கருதியும் என்று குறிப்பிட்டுள்ளனர்.

 *அதாவது நமது இணையடளத்தில் வெளியிட்டுள்ளதால் நான் அந்த ஆய்வுக்குப் பொறுப்பு என்று கண்டுபிடித்துள்ளார்கள். ஆன்லைன் பீஜே இனையதளம் ஆகஸ்ட் மாதத்துக்கு முன் எனது பொறுப்பில் நடக்கவில்லை. அதில் இடம்பெறும் ஆக்கங்கள் செய்திகள் அனைத்தும் வெப்மாஸ்டர் பொறுப்பில் தான் நடந்தது. ஆகஸ்ட் முதல் டைனமிக வடிவில் இணையதளம் இயங்கிய போது தான் அதன் ஒவ்வொரு செய்திக்கும் நான் பொறுப்பேற்றுக் கொண்டேன்* .

நமது இணையதளம் புது வடிவில் இயங்க ஆரம்பித்தபோது முதல் நாளே ஒரு அறிவிப்பை வெளியிட்டோம். அந்த அறிவிப்பு ஆன்லைன் பீஜே பற்றி என்ற தலைப்பில் இன்றும் உள்ளது.

 *அதில் நாம் குறிப்ப்ட்ட விஷயம் இது தான்* 

இந்த இணைய தளம் இஸ்லாத்தின் பெயரால் நடத்தப்படும் பல இணையதளங்களில் இருந்து பல விதங்களில் மாறுபட்டுள்ளதை நீங்கள் காணலாம். அதில் முக்கியமான் வேறுபாடு இதில் வெளியாகும் அனைத்துக்கும் நாமே பொறுப்பேற்றுக் கொள்வதாகும்.

 *எந்தக் கருத்து சரியானது என்று நமக்குத் தோன்றுகிறதோ அதைத் தான் மக்களிடம் நாம் வைக்க வேண்டும். தவறானது என்று நமக்குத் தோன்றுவதையும், சரியா தவறா என்று நமக்கே சந்தேகமானதையும் நாம் மக்களிடம் வைக்கக் கூடாது.* 

ஆனால் பெரும்பாலான இணைய தளங்கள் யாருடைய எந்தக் கருத்தையும் வெளியிடுவதுடன் இதில் வெளியிடப்படுவதற்கு நாம் பொறுப்பல்ல என்று பொறுப்பற்று நடப்பதைக் காண்கிறோம்.

 *நாங்கள் பொறுப்பல்ல என்று மக்கள் மத்த்யில் இவர்கள் அறிவித்தாலும் அல்லாஹ்விடம் இவர்கள் தான் அதற்குப் பொறுப்பாளர்கள். இவர்கள் வெளியிட்டதை நம்பி தவறாதைப் பின்பற்றியவர்களின் பாவமூட்டைகளை இவர்கள் சுமப்பார்கள்.* 

அது போல் தனி நபர்களைப் பற்றி எழுதப்படும் தரக் குறைவான விமர்சனங்களையும் வெளியிட்டு இதற்கு நாங்கள் பொறுப்பல்ல என்று அறிவிப்புச் செய்கின்றனர்.

 *அனைத்து வகையான உணவுகளையும் பரிமாறும் உணவு விடுதியில் இங்கே பரிமாறப்படும் பன்றி இறைச்சிக்கு நாங்கள் பொறுப்பல்ல; அதைச் சமைத்தவர் தான் பொறுப்பு என்று அறிவிப்பு பலகை தொங்க விடுவது போல் இவர்களின் இந்தச் செயல் அமைந்துள்ளது* .

பொறுப்பற்ற கேவலமான இந்த இழி செயலை இந்த இணைய தளம் செய்யாது. தனக்குச் சரி என்று பட்டதை மட்டுமே வெளியிடும். இதில் ஏற்படும் தவறுகளுக்கு பொறுப்பேற்றுக் கொள்ளும்.

قال قال رسول الله صلى الله عليه وسلم كفى بالمرء كذبا أن يحدث بكل ما سمع

 *கேள்விப்படுவதை எல்லாம் எடுத்துச் சொல்பவன் பொய்யன் என்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையை இவர்களுக்குச் சுட்டிக் காட்டுகிறோம்.* 

 *நூல் : முஸ்லிம் 6* 

இது எனது சொந்தப் பொறுப்பிலும் சொந்தச் செலவிலும் நடத்தப்படுகிறது என்பதையும் இந்த இணைய தளத்தின் அனைத்துக்கும் நானே பொறுப்பாளி என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 *அன்புடன்* 

 *பீ.ஜைனுல் ஆபிதீன்* 

இவ்வளவு தெளிவாக நான் அறிவித்துள்ள பின் இதை இவர்கள் புதிதாகக் கண்டு பிடித்துள்ளனர். இப்போதும் நான் சொல்கிறேன். இந்த இணைய தளத்த்தில் யாருடைய ஆக்கமும் இடம் பெறும். யாருடைய ஆக்கம் இடம் பெற்ற்றாலும் அதை நானும் வாசித்து அதன் அனைத்து விஷயங்களிலும் முழு திருப்தி அடைந்த பிறகு தான் வெளியிடுவேன். ஒரு வேளை அந்த ஆக்கம் தவறு என்றால அது கட்டுரையாளர் தவறு என்று நான் கூற மாட்டேன். அதற்கு நானே பொறுப்பேற்றுக் கொள்வேன் என்று திட்டவட்டமாக நான் அறிவித்த பின் யார் பெயரில் மறுப்பு வெளியானால் என்ன?

 *நான் பொறுப்பேற்பதற்கு முன் மற்றவரின் பொறுப்பில் வெளியான விஷ்யங்களுத் தான் நான் பொறுப்பாளியாக மாட்டேன். ஆகஸ்டுக்குப் பின் வெளியிடப்படும் ஒவ்வொரு கருத்துக்கும் நானே பொறுப்பாளி என்று நானே அறிவித்த விஷயத்தைத் தான் புதிதாகக் கண்டு பிடித்து கூறுகின்றனர்.* 

அப்பாஸ் என்றதும் தான் இந்த இடத்தில் எமக்கு இன்னுமொரு விடயம் ஞாபகத்திற்கு வருகிறது. ஏற்கனெவே உங்கள் அமைப்பின் இணையத்தள நிர்வாகி எஸ் எம் அப்பாஸ் என்பவர் இரண்டாம் ஜமாஅத் தொடர்பாக சகோதரர் அலி ********* என்பவருக்கு வழங்கிய தவறான பத்வாவும் அது தொடர்பாக அவர் எம்மிடம் விளக்கம் கேட்ட போது நாம் எழுதிய மறுப்புக்கு இன்று வரை அதைத் தாங்கள் ஏற்றுக் கொண்டதாகவோ அல்லது உரிய பதிலோ எழுதாமல் மௌனம் சாதிக்கும் தாங்கள் (பார்க்க :ஒரு பள்ளியில் முதல் ஜமாஅத் முடிந்தபின் இன்னுமொரு ஜமாஅத் நடாத்த அணுமதி உண்டா?)

 *குறித்த தங்க நகை விடயத்தில் இன்னுமொரு அப்பாஸை களமிறக்கியிருப்பத்பதற்கும்மாற்றுக் கருத்துடையவர்களுக்கு உடனுக்குடன் பதில் அளிப்போம்எனக் கூறும் உங்கள் நிலைப்பாட்டுக்கும் தெளிவான முரண்பாடாகத் தென்படவில்லையா ? அல்லது எதற்கு உங்களிடம் பதில் இல்லையோ அதை அப்படியே ஒரு புறம் ஒதுக்கி வைத்து விட்டு எதற்கு பதில் சொல்லமுடியுமோ அல்லது பதில் என்று எதையாவது சொல்ல முடியுமோ அதற்கு மாத்திரம் பதில் அளிப்பதுதான் உங்களது நிலைப்பாடா என்பதை தயவு செய்து தெளிவு படுத்துங்கள்.* 

அடுத்து இவர்கள் குறிப்பிடும் வாதமும் அபத்தமானது. நமது இணையதளத்தின் முழுப்பொறுப்பையும் நான் ஏற்றுக் கொண்டது புதிய வடிவத்தில் வந்த பிறகு தான். அதன் பிறகு நம்முடைய கவனத்துக்கு வரும் ஒவ்வொரு தவறான வாதங்களுக்கும் மறுப்பு எழுதி வருகிறோம்.

 *(ஒரே நேரத்தில் அனைத்துக்கும் பதில் எழுத இயலாது. ஒவ்வொன்றாகத் தான் பதில் எழுத முடியும். இவர் அவசரப்படுவதால் இரண்டாம் ஜமாஅத் குறித்து இவரது அபத்தமான ஆய்வுக்கும் மறுப்பு வெளியிடப்பட்டு விட்டது. அதன் பிறகு இன்று வரை மவுனம் சாதிக்கிறார்.)* 

அது சரி இதற்கும் பெண்கள் தஙக் நகை அணியக் கூடாது என்ற வாதத்துக்கும் என்ன தொடர்பு?

 *பதில் எழுதப்படாத பல வாதங்கள் இன்னும் உள்ளன.. இவர்களைப் போல் தான் இஸ்மாயீல் சஃலபியும் சொன்னார். எதற்கு பதில் உள்ளத்கோ அதை மட்டும் எழுதுகிறார்கள் என்று கூறிய அவர் இப்போது உண்மையை உணர்ந்திருப்பார். இன்ஷா அல்லாஹ் அது போல் உங்கள் வாதஙகள் ஒவ்வொன்றும் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படும். மக்களிடம் ஒரு விஷ்யம எந்த அளவுக்குப் பரவியுள்ளதோ அந்த வகையில் முன்னுரிமை அளிக்கப்படும்* .

அடுத்துபெண்கள் தங்க வளையல் அணியலாமா என்ற சர்ச்சை இண்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் முன் வைக்கப்பட்டு அது குறித்த வாதங்கள் நடந்து வருகின்றன.என்று 02/11/2009 அன்று தாங்கள் வெளியிட்ட முதல் தொடரில் குறிப்பிட்டுள்ளீர்கள். ஏதோ இக்கட்டுரை வெளியிடப்படும் காலப் பகுதியில்தான் நாம் இக்கருத்தை முன்வைத்தது போலும் அது குறித்த வாதப் பிரதி வாதங்கள் இலங்கயில் பரவலாக நடந்து வருகிறது போலும் அது பற்றிய தெளிவை உரிய நேரத்தில் வழங்க வேண்டும் என்ற காரனத்தால் சுடச் சுட தாங்கள் பதிலளிப்பது போண்ற ஒரு பிரம்மையை தமிழ் நாட்டில் வாழும் மக்கள் மத்தியில் குறிப்பாக அல் குர் ஆனும் ஆதார பூர்வமான நபி மொழியும் மாத்திரம்தான் இஸ்ஸாலாத்தின் மூலாதாரங்கள் என்ற உறுதியன நம்பிக்கையுடன் வாழும் கொள்கைச் சகோதரர்கள் மத்தியில் ஏற்படுத்த முயற்சித்திருக்கிறீர்கள்.

 *ஆனால் உன்மை நீங்கள் குறிப்பிட்டதற்கு மாற்றமாக அல்லவா அமைந்துள்ளது.!! நாம் குறித்த தங்க வளையல் நகை தொடர்பான கருத்தை முன்வைத்தது27/05/2009அன்றாகும்.* 

பெண்கள் தங்க நகைகள் அணியலாமா?Posted on மே 27, 2009 by darulathar(பார்க்க எமது இணையதளம்)என்ற கட்டுரை மூலமாக ஐந்தாம் மாத இறுதியில் எமது கருத்தை வெளியிடுகிறோம். வழமையாக நாம் அல் குர் ஆன் அஸ்ஸுன்னா அடிப்படையில் ஒரு கருத்தை வெளியிடும் போது ஏற்படுவது போண்ற சிறு சலசலப்பு ஏற்படுவது வழக்கம் அந்த வகையில் இஸ்மாயில் மதனி என்ற சகோதரர் ஒரு மஸ்அலா இஜ்திஹாத் என்ற வகையில் பதில் பேச அதற்கான எமது தரப்பு பதில்களும் அளிக்கப்பட்டதே அன்றிநீங்கள்அது குறித்த வாதங்கள் நடந்துவருகின்றனஎன்று எழுதியுள்ளது போல் எந்த வாதங்களும் நடக்க வில்லை

 *இவர்களின் புரிந்து கொள்ளும் திறன் பற்றி நமக்குச் சந்தேகம் ஏற்படுகிறது. இவர்களுக்கும் இவர்களுக்கு எதிர் கருத்து கொண்ட உலமாக்களூக்கும் மத்தியில் விவாதம் நட்ந்தது என்று நாம் குறிப்பட்டது போல் சித்தரித்து அப்படி எந்த விவாதமும் நடக்கவில்லை என்று கூறியுள்ளனர். நாம் எழுதிய வாசகம் என்ன? இது குறித்து இலங்கை முஸ்லிம்க்ள் மத்தியில் விவாதங்கள் நடக்கின்றன என்று தான் எழுதினோம். இலங்கை முஸ்லிம்கள் இது குறித்து தமக்கிடையே விவாதிக்கிறார்கள் என்று நாம் எழுதியதை இஸ்மாயில் ஸலஃபியைப் போல் புரிந்து கொண்டு எழுதியுள்ளனர்.* 

மே மாதத்தின் இறுதி நான்கு நாட்களையும் கழித்து விட்டுப் பார்த்தால் கூட ஜூன், ஜூலை, ஓகெஸ்ட்,செப்டம்பர், ஒக்டோபர் என முழுமையாக ஐந்து மாதங்கள் கடந்து விட்ட நிலையிலும் நீங்களோ அல்லது உங்களுக்கென்று இலங்கையில் இருக்கும் அமைப்போ அல்லது அதன் பிரச்சாரகர்களோ வாய் திறக்கவுமில்லை,கருத்து வெளியிடவுமில்லை. ஒரு வேளை இவ்வாறான ஆய்வியல் விடயங்களில் அபிப்பிராயம் வெளியிடும் தகுதியோ திறனோ வாய்ந்த உலமாக்கள் இலங்கையில் உங்கள் அமைப்பில் இல்லை என்ற ஒரு நியாயமான காரனம் இருந்தாலும் குறைந்த பட்சம் நீங்களாவது இந்த நீன்ட காலப் பகுதியில் உங்கள் கருத்தை வெளியிட்டு இருக்கலாம் அல்லவா?

 *இஸ்மாயீல் ஸலபிக்கு மறுப்பு, முஜீபு,அப்துர் ரஹ்மான்களுக்கு மறுப்பு என நீங்கள் வேலைப் பழுக்களுடன் இருந்தாலும் ஏற்கனவே செய்யப்பட்ட அப்பாஸ் அவர்களது ஆய்வை வெளியிடவா உங்களுக்கு இவ்வளவு காலம் தேவைப் பட்டது என்ற ஒரு நியாயமான கேள்விக்கு நீங்கள் பதில் கூறக் கடமைப் பட்டிருக்கிறீர்கள் அல்லவா?மேலும், வழமையாகஆளை,அவர் சார்ந்திருக்கும் அமைப்பை அடையாளப் படுத்தி எழுதும் நீங்கள்பெண்கள் தங்க வளையல் அணியலாமா என்ற சர்ச்சை இன்று இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் முன் வைக்கப்பட்டு.. என்றும் இலங்கையைச் சேர்ந்த சிலர் கூறுவது சரிதானா?என்றும் செயெற்பாட்டு விணையிலும் யாரோ முகவரியும் அடையாளமும் இல்லாத சிலர் மேற்படி கருத்தை முன்வைப்பது போலவும் எழுதியுள்ளதற்கான காரணம் என்ன?! நாம் யார் , எமது அமைப்பு என்ன, எமது அழைப்பு என்ன என்பதை அடையாளப் படுத்தினால் அல்குஆன் அஸ்ஸுன்னாவை யார் சொன்னாலும் அதைப் பின்பற்றி மறுமையில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் வாழும் சகோதரர்கள் குறிப்பாக இலங்கை வாழ் கொள்கை சகோதரர்கள் எமது கருத்துகளில், வாதங்களில், நிலைப்பாடுகளில் உள்ள நியாயத்தையும் உன்மையையும் பின்பற்ற ஆரம்பித்து எமது மக்கம் இணைந்து விடுவார்கள் என்பதைத் தவிர வேறு காரனம் இருக்கிறதா என்பதை விளக்குவீர்கள் என எதிபார்க்கிறோம்.* 

இதுவும் அர்த்தமற்ற வாதமே. எங்கள் வேலைப்பளுவுக்கு இடையில் எப்போது இயலுமோ அப்போது தான் வெளியிடுவோம். பிறருடைய ஆய்வு என்றாலும் கண்ணை மூடிக் கொண்டு வெளியிடுவதாக இருந்தால் ஒரு நாளைக்கு எத்தனை மறுப்பு வேண்டுமானாலும் வெளியிட முடியும். நாம் பரிசீலித்து சிந்தித்து வெளியிடுவதால் கிடைக்கும் நேரத்துக்கு ஏற்பவே வெளியிட முடியும்.

 *குறிப்பாக இலங்கை வாழ் கொள்கை சகோதரர்கள் எமது கருத்துகளில், வாதங்களில், நிலைப்பாடுகளில் உள்ள நியாயத்தையும் உன்மையையும் பின்பற்ற ஆரம்பித்து எமது மக்கம் இணைந்து விடுவார்கள் என்பதைத் தவிர வேறு காரனம் இருக்கிறதா என்பதை விளக்குவீர்கள் என எதிபார்க்கிறோம்.* 

என்று எழுதியது இவ்பர்களின் கோபத்துக்குரிய காரணம் என்ன என்பதை விளக்குகிறது. தங்க நகை ககட்டுரைக்கு நாம் எழுதிய மறுப்பு இவ்ர்களின் அறியாமையை மக்கள் புரிந்து கொள்ள காரணமாகியுள்ளது. ஆளாளுக்கு பதில் சொல்ல முடியாத கேள்விகளை இவர்களிட,ம் கேட்க ஆரம்பித்துள்ளனர். அதைத்தான் மேற்கண்ட வாசகம் மூலம் தெளிவுபடுத்துகிறார்கள்.

 *சரியான கருத்தைச் சொல்ல வேண்டும் என்பதே நமது நோக்கம்,. ஆட்கள் சேர்ப்பது நோக்கம் இல்லை. ஆட்கள் சேரப்பதை நோக்கமாகக் கொண்டு தவறான கருத்தைச் சொன்னவர்கள் அதனால் பாதிக்கப்பட்டால் அதற்கு நாங்கள் என்ன செய்ய முடியும்?* 

இஸ்மாயீல் ஸலபி வைத்த வாதம் போல் வாத்ததை வைக்காமல் பெண்கள் வளைந்த தஙக நகை அணியக் கூடாது என்பதை நிரூபிக்கும் வழியைப் பாருங்கள். நீங்கள் அர்த்தமற்ற கருத்தை மக்கள் மத்தியில் வைத்து பின்னர் அது தவறு என்பது நிரூபணமானால் மக்கள் உங்களை விட்டுப் போகத் தான் செய்வார்கள். எதிர்க் கேள்வி கேட்கத் தான் செய்வார்கள். மக்கள் நம்மை விட்டு போகிறார்களே என்று ஆத்திரப்படுவதில் அர்த்தம் இல்லை.

 *இதன் பின்னர் தங்களைப் பற்றி பெருமை அடிக்கும் வகையில் விரிவாக எழுதியுள்ளனர். அது பதில் சொல்லத் தேவையற்றது.* 


தங்க நகை அணிவது பற்றி இவர்கள் எடுத்து வைக்கும் ஆய்வுக்காகக் காத்திருக்கிறோம். பொதுவாக இவர்களுக்கு ஒரு அறிவுரையைக் கூறுகிறோம். வாதம் செய்யும் போது முக்கிய தலைப்பு குறித்த விஷயங்கள் தான் பெரும்பாலும் இடம் பெற வேண்டும். மிகக் குறைந்த அளவில் இடையிடையே தலைப்புடன் நேரடியாகத் தொடர்பு இல்லாத விஷயங்களை குறிப்பிடுவது தவறல்ல. தலைப்புக்கே வராமல் முழுக்கட்டுரையையும் சுய தம்பட்டம் அடிக்க பயன்படுத்த வேண்டாம் என்பதே அந்த அறிவுரை

 *தொடர்-4* 

பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று கூறி தவறான ஃபத்வாக் கொடுக்கும் இலங்கையைச் சேர்ந்த சிலரின் அபத்தமான வாதங்களுக்கு அப்பாஸ் அலி அவர்கள் தக்க பதில் கொடுத்தார். அதை மறுத்த அந்த இலங்கைவாசி தனது முழு மறுப்பிலும் தனது வாதத்தை நிறுவ முடியவில்லை. நாம் எழுதியது குறித்து சில கேள்விகளைக் கேட்கிறாரே தவிர பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பதை நிரூபிக்கவே முடியவில்லை. அப்பாஸ் எழுதிய அந்த இரண்டு தொடர்களையும், மேற்படியாரின் மூன்று தொடரையும் ஒருவர் வாசித்தால் பெண்கள் வளைந்த அல்லது வளையாத தங்க நகை அணியக் கூடாது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்வார். ஒரு ஆய்வாளர் எதிர்க்கருத்து உடையவர்களிடம் கேள்வி கேட்கலாம். ஆனால் தனது கருத்தை முதலில் அவர் நிரூபிக்க வேண்டும். இப்படிச் சொன்னது ஏன்? அப்படிச் சொன்னது ஏன் என்றெல்லாம் கேள்விகள் மட்டுமே கேட்கிறார்.

 *இது பதில் சொல்லத் தேவையற்றது என்ற தரத்தில் தான் அமைந்துள்ளது. அறிவின்றி மக்களை வழி கெடுக்கும் இவரை இனம் காட்டும் அவசியம் கருதி அப்பாஸ் அலி எழுதிய மறுப்பின் முதல் பாகம் வெளியிடப்படுகிறது* .

 *பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம்* 



*20. 🧕🧕🧕 தொடர் 2 🧕🧕🧕பெண்கள்🧕 தங்க 👙👙நகைகள்👙 👙அணியலாமா❓ஓர் 🧕ஆய்வு🧕🧕🧕* 


 
 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 29* 


 *🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment