பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Friday, July 10, 2020

இஸ்லாத்தை அறிந்து - 30

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 30 👈👈👈* 


 *20. 🧕🧕🧕 பாகம் 3 🧕🧕🧕பெண்கள்🧕 தங்க 👙👙நகைகள்👙 👙அணியலாமா❓ஓர் 🧕ஆய்வு🧕🧕🧕* 



 *குழப்பம் :13* 


 *இந்த அடிப்படையில் இவர்கள் முதலில் காட்டிய இப்னு உமர் (ரலி)யின்இவ்வசனம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்னுள்ளதாகும்என்ற கூற்றுக்கு நாம் பதில் சொல்லத் தேவையே இல்லாமல் போய் விடுகிறது. காரனம் நபியவர்களின் நேரடி வாக்கு மூலம் ஸகாத் என்பது இவ்வசனத்திற்கு முன் கடமையாக்கப் பட்டிருந்தது என்றிருக்க அதற்கு மாற்றமான* 

மேற்படி இறை வசனம் ஸகாத் கடமையாக்கப் படுவதற்கு முன் இறங்கியதுஎன்ற நபித்தோழரின் கூற்றுக்கு என்ன பெறுமானம் என்பதை இவர்கள் விளக்க வேண்டும். எனவே நீங்கள் விரிவாக விளக்க வேண்டியதுஒரு வசனம் எப்போது அருளப்பட்டது என்பதை நபித் தோழர்கள் தான் கூற முடியும். (இது குறித்து சர்ச்சை வந்தால் பின்னர் விரிவாக விளக்குவோம்.என்பதையல்ல.

 *மாறாக அல்குர் ஆன் யாருக்கு இறங்கியதோ அந்த நபி (ஸல்) அவர்களது நேரடி கூற்றுக்கு மாற்றமான நபித்தோழர்களின் அபிப்பிராயங்களை எடுக்க முடியுமா என்பதையே நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.* 

 *நமது பதில்:* 

நாம் முதலாவது சுட்டிக் காட்டிய இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்திக்கு முதலில் இவர் பதில் கூறவில்லை. மாறாக இரண்டாவது சுட்டிக் காட்டிய இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸிற்குப் பதில் என்ற பெயரில் குதர்க்கம் செய்து அந்தக்குதர்க்கத்தை வைத்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸை ஓரங்கட்டப் பார்க்கிறார். இவரின் வாதம் தவறு என்பதை மேலே நாம் உறுதிபடுத்தி விட்டோம்.

 *இவர் இரண்டு தவறான வாதங்களை வைத்து இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை நிராகரிக்கிறார். தங்கம் வெள்ளியைச் சேமித்து வைக்கக் கூடாது என்ற சட்டம் ஸகாத்துடைய வசனம் இறங்குவதற்கு முன்புள்ளது என்ற கருத்து இப்னு உமர் (ரலி) அவர்களின் சுயக் கருத்து என்றும் இக்கருத்திற்கு மாற்றமாக இப்னு அப்பாஸ் (ரலி) அறிவிக்கும் ஹதீஸில் அந்த வசனம் ஸகாத் அருளப்படுவதற்குப் பிந்தியது தான் என நபி (ஸல்) அவர்கள் கூறுவதால் அதற்கு மாற்றமான இப்னு உமர் (ரலி) அவர்களின் கூற்றை எடுக்க முடியாது என்றும் வாதிடுகிறார்.* 

இந்த வசனம் ஸகாத்துடைய வசனத்திற்குப் பிந்தியதல்ல. முந்தியது தான் என்பதை நாம் மேலே தெளிவாக நிரூபித்திருக்கிறோம். எனவே இப்னு உமர் (ரலி) அவர்களின் கூற்று நபியவர்களின் கூற்றுக்கு எதிரானது என்ற வாதம் மண்ணைக் கவ்வுகிறது.

 *அடுத்து இது இப்னு உமர் (ரலி) அவர்களின் சுயக் கருத்து என்ற வாதத்திற்கு வருவோம். காலித் பின் அஸ்லம் கூறுகிறார்:* 

நாங்கள் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடன் வெளியில் புறப்பட்டோம். அப்போது ஒரு கிராமவாசி, யார் பொன்னையும் வெள்ளியையும் சேமித்து வைத்துக் கொண்டு அவற்றை அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதிருக்கின்றார்களோ…என்ற வசனத்தைப் பற்றி எனக்கு அறிவியுங்கள்எனக் கூறினார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள்,யார் அவற்றைப் பதுக்கி வைத்து அதற்கான ஸகாத்தைக் கொடுக்காமலிருக்கின்றாரோ அவருக்குக் கேடு தான். இவ்வசனம் ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்புள்ளதாகும். ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் தூய்மைப்படுத்தக் கூடியதாக ஸகாத்தை அல்லாஹ் ஆக்கி விட்டான்என்றார்கள்.

 *புகாரி (1404)* 

 *இவர்களின் விதண்டா வாதத்திற்கு எல்லையே இல்லை. நபித்தோழரின் சுயக் கருத்து என்று கூறி அநியாயமாக மேற்கண்ட ஹதீஸை ஒதுக்குகிறார்கள்.* 

எந்த வசனம் முந்தியது?எந்த வசனம் பிந்தியது?என்ற தகவலை ஒரு நபித்தோழர் எப்படி சுயமாகக் கூற முடியும்?நபித்தோழர் சுயமாகத் தான் கூறினார் என்றால் இறை வசனத்தில் துணிந்து பொய் கூறுகிறார் என்ற அபத்தமான கருத்தைக் கூற வேண்டியது வரும். அவ்வாறு கூறுவதை விட்டும் அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக.

 *வசனங்கள் இறங்கிய வரலாறை நபித்தோழர்கள் தான் அறிவிக்கின்றார்கள். இவர்கள் தான் இதை அறிவிக்க முடியும். இவையனைத்தயும் நபித்தோழர்களின் கூற்று எனக் கூறி இவர்கள் நிராகரிக்கத் தயாரா?* 

குர்ஆன் வசனங்கள் இறங்கிய காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் இதை அறிவித்தால் அதை ஏற்கக் கூடாதென்றால் இதை வேறு யார் அறிவிப்பது.?யார் அறிவித்தால் இவர்கள் ஏற்பார்கள்?

 *அதுமட்டுமில்லை.9 : 34வது வசனம் மாற்றப்பட்டது என்ற தகவலும் இந்த ஹதீஸில் அடங்கியிருக்கிறது. ஒரு வசனம் மாற்றப்பட்டதா?இல்லையா?என்பதை அறிஞர்கள் பல முறைகளில் முடிவு செய்வார்கள். நபித்தோழர்கள் இதைத் தெளிவுபடுத்தினால் அதை ஏற்க வேண்டும் என்பதையும் ஒரு வழிமுறையாக குறிப்பிட்டுள்ளார்கள்.* 

நபித்தோழர்கள் வழியாக சட்டம் மாற்றப்பட்டதாக அறிவிக்கப்படும் அத்தனை செய்திகளையும் நபித்தோழர்களின் சுயக் கருத்து என்று கூறி இவர்கள் ஒதுக்கி விடத் தயாரா?

 *மேற்கண்ட இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்றுக்கு முரண்படுகிறது என்ற தப்பான வாதத்தை வைத்தார்கள். இந்தச் செய்தியையும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இரண்டும் ஒரே கருத்தைத் தருவதைப் பார்க்கலாம்.* 

நபி (ஸல்) அவர்கள் கூறிய கருத்தையே இங்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியிருக்கிறார்கள் என்பதையும் உணரலாம்.

 *உங்கள் செல்வங்களில் எஞ்சி இருப்பதை தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஸகாத்தைக் கடமையாக்கவில்லை* 
 *நூல் : அபூதாவுத் (1417)* 

இப்போது இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறும் வாசகத்தைக் கவனியுங்கள்.

 *ஸகாத் பற்றிய வசனம் அருளப்பட்டதும் செல்வங்களைப் தூய்மைப்படுத்தக் கூடியதாக ஸகாத்தை அல்லாஹ் ஆக்கிவிட்டான்என்றார்கள்.* 

 *புகாரி (1404)* 

இரண்டு செய்திகளும் ஒரே கருத்தைத் தருவதை உணரலாம். எனவே இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி சுயக் கருத்தல்ல என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

 *மேலும் இப்னு (ரலி) அறிவிக்கும் இந்தச் செய்தி குர்ஆன் வசனத்திற்கும் பல ஹதீஸ்களுக்கும் முறையான பதிலைத் தரக் கூடிய வகையில் இருக்கிறது.* 

தங்கம் வெள்ளியைச் சேமித்து வைக்கக் கூடாது என்ற கருத்தைத் தரக்கூடிய9 : 34வது வசனம் மாற்றப் பட்டதல்ல என்று கூறினால் அதை தற்போது சட்டமாக்கி செயல்படுத்துவது நம் மீது கடமையாகி விடும். ஆனால் இவ்வசனத்திற்கு இந்த செய்தி அழகான தீர்வாக அமைந்துள்ளது.

 *இந்த வசனத்திற்கு மட்டுமல்ல செல்வத்தைச் சேமித்து வைக்கக் கூடாது என்ற கருத்துப்பட வரும் அத்தனை ஆதாரங்களுக்கும் தீர்வாக அமைந்துள்ளது. உதாரணமாக.* 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 *ஆதமின் மகனே! (மனிதனே!) உன் தேவைபோக எஞ்சியதை நீ தர்மம் செய்வதே உனக்கு நல்லதாகும். அதை நீ வைத்துக் கொள்வது உனக்குத் தீமையாகும். தேவையுள்ள அளவு சேமித்து வைத்தால் நீ பழிக்கப்பட மாட்டாய். உன் வீட்டாரிலிருந்தே உனது தர்மத்தைத் தொடங்கு. மேல் கை தான் கீழ்க் கையை விடச் சிறந்ததாகும்.* 

இதை அபூஉமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 *நூல் : முஸ்லிம் (1875)* 

எஞ்சியதை வைத்துக் கொள்வது தீமையானது. தேவையான அளவுக்கு அதிகமாக வைத்தால் அது பழிக்கப்படுகின்ற செயல் என்று மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது.

 *இதுவும்9 : 34வது வசனத்தைப் போல் மேல் மிச்சமானதை வைத்துக் கொள்ளக் கூடாது என ஆரம்பத்தில் கூறப்பட்ட சட்டத்தை நினைவூட்டுகிறது.* 

அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

 *நான் குறைஷிக் குலத்தார் சிலருடன் (ஓர் அவையில்) இருந்தேன். அப்போது அவ்வழியாகச் சென்ற அபூதர் (ரலி) அவர்கள்செல்வத்தைக் குவித்து வைப்பவர்களுக்கு (பழுக்கக் காய்ச்சப்பட்ட கம்பியால்) அவர்களது முதுகில் சூடு போடப்படும். அது அவர்களது விலாவிலிருந்து வெளியேறும். அவர்களது பிடரிப் பகுதியில் ஒரு சூடு போடப்படும். அது அவர்களின் நெற்றியிலிருந்து வெளியேறும் என நற்செய்தி கூறுங்கள்என்று கூறிவிட்டு,அங்கிருந்து விலகிப் போய் (ஓரிடத்தில்) அமர்ந்தார்கள். நான்இவர் யார்?என்று கேட்டேன். மக்கள்இவர் தாம் அபூதர் (ரலி)என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து அவர்களிடம் சென்று, சற்று முன்பாகத் தாங்கள் ஏதோ கூறிக் கொண்டிருந்தீர்களே அது என்ன?என்று கேட்டேன். அதற்கு அவர்கள்அவர்களுடைய நபி (முஹம்மத்-ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்ற ஒரு செய்தியையே நான் கூறினேன்என்றார்கள். நான்,(தலைவர்கள் முஸ்லிம்களுக்கு வழங்கும்) இந்த நன்கொடை தொடர்பாகத் தாங்கள் என்ன கூறுகிறீர்கள்?என்று கேட்டேன். அதற்கு அபூதர் (ரலி) அவர்கள், அதை நீங்கள் பெற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில்,இன்று அது உங்களுக்கு உதவியாக இருக்கும். அது உங்களது மார்க்கத்திற்கான கூலியாக இருக்குமாயின்,அதை விட்டு விடுங்கள் (பெற்றுக் கொள்ளாதீர்கள்)என்று பதிலளித்தார்கள்.* 

 *முஸ்லிம் (1814)* 

புகாரியில் உள்ள அறிவிப்பில் பின்வரும் தகவல் கூடுதலாக இடம் பெற்றுள்ளது.

 *நபி (ஸல்) அவர்கள்அபூதர்ரே! உஹுது மலையை நீர் பார்த்திருக்கிறீராஎனக் கேட்டார்கள். தமது வேலை ஏதோ ஒன்றுக்காக நபி (ஸல்) என்னை அங்கு அனுப்பப் போகிறார்கள் என எண்ணி) பகல் முடிய இன்னும் எவ்வளவு நேரம் உள்ளது என அறிந்து கொள்வதற்காக சூரியனைப் பார்த்து விட்டு, ஆம்என்றேன்.உஹுது மலையளவுக்குத் தங்கம் என்னிடம் இருந்து அதில் மூன்று தீனார்களைத் தவிர வேறு எதையும் செலவிடாமலிருப்பதை நான் விரும்பவில்லைஎன்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். இவர்களோ இதை அறியாதவர்களாயிருக்கிறார்கள். இவர்கள் உலக ஆதாயங்களையே சேகரிக்கிறார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை இவ்வுலகப் பொருட்களை இவர்களிடம் கேட்க மாட்டேன்;மார்க்க விஷயங்களைப் பற்றியும் இவர்களிடம் தீர்ப்பு கேட்க மாட்டேன்என அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.* 

அஹ்மதில் இடம் பெற்றுள்ள அறிவிப்பையும் இங்கே குறிப்பிடுகிறோம்.

அஹ்னஃப் பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

 *நான் மதீனாவில் இருந்த போது ஒரு மனிதரைக் கண்டேன். மக்கள் அவரைக் கண்ட போது அவரை விட்டும் விலகிச் சென்றனர். நான் அவரிடத்தில் நீங்கள் யார்?என்று வினவினேன். அதற்கு அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழரான அபூதர் என்று பதிலளித்தார். மக்கள் ஏன் உங்களை விட்டும் விலகிச் செல்கிறார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவர்களை எதை விட்டும் தடுத்தார்களோ அந்த செல்வக் குவியலை விட்டும் இவர்களை நான் தடுக்கிறேன். (அதனால் இவர்கள் என்னை விட்டும் விலகிச் செல்கிறார்கள்.) என்று பதிலளித்தார்கள்.* 

 *நூல் : அஹ்மத் (20478)* 

அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் மேற்கண்ட ஹதீஸை நன்கு கவனியுங்கள். செல்வத்தை சேர்க்கக் கூடாது என்ற சட்டத்தை ஆரம்பத்தில் நபி (ஸல்) அவர்கள் பிறப்பித்திருந்தார்கள் என்பதைச் சந்தேகமற அறியலாம்.

 *இச்சட்டம் மாற்றப்பட்டது என்ற தகவல் அபூதர் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை என்பதால் இதுவே எப்போதும் கடைப்பிடிக்க வேண்டிய சட்டம் என தவறுதலாகக் கருதி மக்களுக்குப் போதிக்கிறார்கள். இந்தச் செய்திக்கும் இப்னு உமர் (ரலி) அவர்களின் கூற்று அழகிய தீர்வை கூறக் கூடியதாக இருக்கிறது.* 

எனவே மொத்தத்தில்9 : 34வது வசனம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் இப்னு உமர் (ரலி) அறிவிக்கும் ஹதீஸ் அபூ உமாமா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் மற்றும் அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் ஆகிய ஐந்து ஆதாரங்கள் செல்வத்தை சேமித்து வைக்கக் கூடாது என்ற சட்டம் ஆரம்பத்தில் இருந்தது என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

 *குழப்பம் :14* 

பொதுவாக இவர்கள் கூறுவது போல் அல்குர்ஆன் அத்தியாயங்களை இது மக்காவில் இறங்கியது இது மதீனாவில் இறங்கியது என ஒட்டுமொத்தமாகப் பிரிப்பதற்கு ஆதாரம் இல்லை என்பது உன்மைதான்.

 *ஆனால் சில அல்குர் ஆன் வசனங்களை அந்த வசனத்தில் காணப்படும் மொழி நடை,அந்த வசனம் யாரை அல்லது எந்த சமூகத்தைப் பற்றி,விளித்துப் பேசுகிறது அல்லது அந்த வசனத்தில் கூறப்படும் இடம் மற்றும் காலம் எனபதை வைத்து ஆரம்பகாலத்து மக்கா வசனமா அல்லது பிந்தைய மதீனா வசனமா என்பதைப் புரிந்து எளிதில் புரிந்து கொள்ளலாம்.* 

இந்த ஒரு அடிப்படையில் இவர்கள் எடுத்துக் காட்டியஅல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும் வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டுஎன்ற வசனத்தை எடுத்து இதில் இவர்கள் மொழிபெயர்க்காமல் விட்டு விட்டமேலும் என்ற சொல்லைச் சேர்த்துப் பார்த்தால் இந்த இன்னுமொரு வசனத்தின் தொடர் என்பதை நாம் புரிந்து கொள்ளலாம்.

 *அது என்ன வசனம் என்பதற்கு நாம் பெரிதாக அலையத் தேவையில்லை. சகோதரர் பிஜே அவர்களது (கருத்தைக் கவனத்திற் கொண்டு நிரந்தர இலக்கங்கள் உடைய வசனங்களை சேர்த்தும் பிரித்தும் செய்யப்பட்ட) அல்குர் ஆன் மொழியாக்கத்தையே எடுத்துக் கொள்வோம்.* 

அதில் மேற்படி வசனத்திற்கு முந்தைய வசனத்துடன்விசுவாசிகளே யூத கிருஸ்தவ மதகுருமார்களில் அதிகமானவர்கள்என்ற வசனத்துடன் இணைத்தே பொருள் செய்யப் பட்டிருப்பதைக் காணலாம்.

 *எனவே மேற்படி தங்கம் வெள்ளி பற்றிக் குறிப்பிடும் வசனம் மதீனாவில் நபி(ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் எதிர் நோக்கிய,இஸ்லாத்திற்கு தடையாக இருந்த யூத,கிருஸ்தவ மதகுருமார்களைப் பற்றியது என்பது தெளிவாகிறது.* 

மேற்படி வேதங் கொடுக்கப்பட்டவர்களையும் இந்த வசனம் குறிக்கிறது என்பதை பின்வரும் நபித்தோழர்களுக்கிடையில் நடை பெற்ற புஹாரியில் பதிவு செய்யப்பட்ட சம்பவம் இன்னும் உறுதி செய்கிறது.

صحيح البخاري جزء 2 – صفحة *509* 

حدثنا علي سمع هشيما أخبرنا حصين عن زيد بن وهب قال : مررت بالربذة فإذا أنا بأبي ذر رضي الله عنه فقلت له ما أنزلك منزلك هذا ؟ قال كنت بالشأم فاختلفت أنا ومعاوية في { الذين يكنزون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله } . قال معاوية نزلت في أهل الكتاب فقلت نزلت فينا وفيهم

ஸைத் பின் வஹப் கூறுகிறார்:

 *நான் றபதா பகுதியைக் கடந்து சென்ற போது அங்கே அபூ தர் (ரலி) அவர்களை சந்தித்தேன். அவரிடம்என்ன இங்கிருக்கிறீர்கள்?எனக் கேட்டேன். அதற்கவர்நான் ஷாமில் இருந்தேன் நானும் முஆவியா (ரலி) அவர்களும்தங்கம் வெள்ளியை சேமித்து வைப்போருக்குஎனும் வசனம் தொடர்பாக கருத்து முரண்டாடு கொண்டோம் அவர்அது வேதங் கொடுக்கப் பட்டவர்கள் சம்மந்தமாக இறங்கியதுஎன்றார் நான்இல்லை அது அவர்கள் சம்பந்தமாகவும் முஸ்லிம்கள் சம்பந்தமாகவுமே இறங்கியதுஎன்று கூறினேன்* . .

மேற்படி சம்பவத்தினால் நாம் சொல்லவருவது குறித்த (9:34)வசனம் யூத நஸாறாக்கள் பற்றியது முஸ்லிம்கள் பற்றியதல்ல என்பது எமது வாதமல்ல. மாறாக நபி (ஸல்) அவர்கள் மதீனாவில் எதிர் கொண்ட யூத கிருஸ்தவர்களைப் பற்றியும் இவ்வசனம் குறிப்பதால் இந்த வசனம் மதீனாவில் இறங்கியது என்பதையே தெளிவு படுத்த விரும்புகிறோம். ஏனினில் குறித்த சம்பவத்தில் வேதங்கொடுக்கப்பட்டவர்கள் தொடர்பில் இவ்வசனம் இறங்கியது என்பதில் இரு நபித்தோழர்களும் உடன்படுகிறார்கள். முஸ்லிம்கலையும் குறிக்கின்றதா இல்லையா என்பதில் தான் கருத்து முரண்பாடு கொள்கிறார்கள்.

 *அத்துடன்ஒரு வசனம் எப்போது அருளப்பட்டது என்பதை நபித்தோழர்கள்தான் கூற முடியும்.என கொட்டை எழுத்தில் எழுதியுள்ள இவர்கள் ஒரு வசனம் யார் குறித்து இறங்கியது என்பதில் ஒண்றுக்கு இரண்டு நபித்தோழர்களின் கருத்தை கன்டிப்பாக ஏற்றுக் கொள்வார்கள். கொள்ள வேண்டும்.* 

 *நமது பதில்* :

இந்த வசனம் மதீனாவில் வாழ்ந்த யூத கிறிஸ்தவர்களைப் பற்றியது என்று கூறி எனவே இந்த வசனம் மதீனாவில் இறங்கியது என்ற பிழையான வாதத்தை வைக்கிறார்.

 *இவருடைய மனதில் படுவது தான் மார்க்கம். அதற்கு ஆதாரம் இல்லாவிட்டாலும் அதை எப்படியாவது மக்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நினைப்பது எந்த வகையில் நியாயம்?மேற்கண்ட வாதத்தை இவர் எழுப்பியதன் மூலம் இதையே கூற வருகிறார்.* 

இந்த வசனம் முஸ்லிம்களையும் யூத கிறிஸ்தவர்களையும் குறிக்கிறது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தில்லை. எனவே இவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவித்த ஹதீஸை அநியாயமாக மறுத்ததைப் போல் இவர்கள் குறிப்பிட்ட அபூதர் (ரலி) முஆவியா (ரலி) ஆகிய இருவருக்கும் இடையே நடந்த உரையாடல் பற்றிய செய்தியை நாம் மறுக்கவில்லை.

 *ஆனால் மதீனாவில் வாழ்ந்த யூத கிரிஸ்தவர்களைக் குறிக்கிறது என்று இவர்கள் ஆதாரமில்லாமல் எழுதியிருப்பதைத் தான் ஏற்றுக் கொள்ள முடியாது.  மதீனாவில் மட்டும் தான் யூத கிறிஸ்தவர்கள் வாழ்ந்தார்களா?மக்காவிலோ அபீசீனியாவிலோ பிற பகுதிகளிலோ இவர்கள் வாழவில்லையா?ஒரு பேச்சிற்கு மதீனாவில் வாழ்ந்த யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் பற்றியே இது பேசுகிறது என்று வைத்துக் கொண்டாலும் இதனால் மதீனாவில் இறங்கியது என எப்படிக் கூற முடியும்?ஏன் இவ்வசனம் மதீனாவில் உள்ள இவர்களைப் பற்றி மக்கா வாழ்க்கையின் போது பேசியிருக்கலாமே?* 

இவர்களின் வாதப்படி இவ்வசனம் மதீனாவில் தான் இறங்கியது என்பதை ஏற்றுக் கொண்டாலும் இந்த வாதம் இவ்வசனம் ஸகாத்துடைய வசனத்திற்கு முந்தியது என்ற நமது நிலைபாட்டிற்கு எதிரானதல்ல. ஏனென்றால் ஸகாத்துடைய சட்டமும் மதீனாவில் தான் இறங்கியது. மதீனாவில் இவ்வனம் இறங்கிய பிறகு இதை மாற்றி ஸகாத்துடைய வசனம் இறங்கியது என்று புரிவதால் எந்தப் பிரச்சனையும் இல்லை.

 *9 : 34வது வசனம் முந்தியது. ஸகாத்துடைய வசனம் பிந்தியது என்ற நமது நிலைபாட்டை தகர்ப்பதற்காகத் தான் இவ்வசனம் மதீனாவில் இறங்கியது எனவும் ஸகாத்துடைய வசனம் மக்காவில் இறங்கியது எனவும் நிறுவ முயற்சிக்கிறார்கள்.* 

ஆனால் உண்மை இதற்கு மாற்றமாக உள்ளது.9 : 34வது வசனம் மதீனாவில் இறங்கியது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்பதை மேலே தெளிவாக விவரித்து விட்டோம்.

 *அடுத்து ஸகாத்துடைய வசனம் மக்காவில் இறங்கியது என்ற இவர்களின் வாதம் எந்த அளவிற்குச் சரி என்பதை பார்ப்போம். ஸகாத் மக்கா வாழ்க்கையின் போது கடமையாக்கப்படவில்லை. மதீனாவில் தான் கடமையாக்கப்பட்டது என்பதற்கு ஹதீஸில் தெளிவான ஆதாரங்கள் உள்ளது.* 

கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

 *ஸகாத் அருளப்படுவதற்கு முன்னால் நோன்புப் பெருநாள் தர்மத்தை நிறைவேற்றுமாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களுக்கு உத்தரவிட்டார்கள். ஸகாத் அருளப்பட்ட உடன் (நோன்புப் பெருநாள் தர்மத்தை நிறைவேற்றுமாறு) அவர்கள் எங்களுக்கு ஏவவுமில்லை. அதை நாங்கள் கொடுத்துக் கொண்டிருக்கையில் எங்களைத் தடுக்கவும் இல்லை.* 

 *நஸாயீ (2460)* 


மேலுள்ள ஆதாரப்பூர்வமான செய்தி ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்பாகவே நோன்பு கடமையாக்கப்பட்டுவிட்டது என்ற கருத்தை தெளிவாகக் கூறுகிறது.

 *நோன்பு கடமையாக்கப்பட்ட பிறகே ஸகாத் கடமையாக்கப்பட்டது என்பதை இதிலிருந்து அறிந்து சந்தேகத்திற்கிடமின்றி உணரலாம்.* 

நோன்பு எப்போது கடமையாக்கப்பட்டது என்றால் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்து குறிப்பிட்ட காலம் கழிந்த பிறகே நோன்பு கடமையாக்கப்படுகிறது. இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவாக விளக்குகிறது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

 *அறியாமைக் காலக் குறைஷியர் ஆஷூரா நாளில் நோன்பு நோற்றனர்;நபி (ஸல்) அவர்களும் நோற்றனர். நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்த போது,தாமும் அந்நாளில் நோன்பு நோற்று மக்களையும் நோன்பு நோற்குமாறு பணித்தார்கள். ரமளான் நோன்பு கடமையாக்கப்பட்டதும் ஆஷூரா நோன்பை விட்டு விட்டனர். விரும்பியவர் அந்நாளில் நோன்பு நோற்றனர்;விரும்பாதவர் விட்டு விட்டனர்.* 

 *புகாரி (2002)* 

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த உடன் கூட நோன்பு கடமையாக்கப்படவில்லை. குறிப்பிட்ட காலம் ஆஷூரா நாளில் நோன்பு வைக்கிறார்கள். மக்களையும் நோன்பு நோற்குமாறு பணிக்கிறார்கள். இதற்குப் பிறகு நோன்பு கடமையாக்கப்படுகிறது. நோன்பு கடமையாக்கப்பட்ட பிறகே ஸகாத்தும் கடமையாக்கப்படுகிறது.

 *எனவே ஸகாத் மக்கா வாழ்க்கையில் கடமையாக்கப்பட்டது என்ற வாதம் தவறு. மதீனாவில் தான் கடமையாக்கப்பட்டது என்பது மேற்கண்ட இரு ஹதீஸ்கள் மூலம் தெள்ளத் தெளிவாகிறது.* 

மேலும் இவர் அந்த வசனம் யூத கிறிஸ்தவர்களையும் குறிக்கும் என்பதற்கு ஆதாரமாக நபித்தோழர்களுக்கு இடையே நடந்த உரையாடலைக் காட்டினார். இவ்வசனம் யூதக் கிறிஸ்தவர்களையும் குறிக்கும் என்பதில் நமக்கு மாற்றுக் கருத்து இல்லை.

 *ஆனால் நபித்தோழரின் சுயக் கூற்றாக இருக்க வாய்ப்பே இல்லாத இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறிய ஹதீஸை நபித்தோழரின் சுயக் கருத்து எனக் கூறி அதை ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியாது என இவர் வாதிட்டார். அப்படிப்பட்ட இவர் தனது கூற்றிற்கு நபித்தோழர்களுக்கிடையே நடந்த உரையாடலை எப்படி ஆதாரமாகக் காட்டலாம்?இவர் ஒரு நிலைபாட்டில் இருக்க மாட்டார். தடுமாறக் கூடியவர் என்பதையே இவரின் இச்செயல்பாடு காட்டுகிறது.* 

அதுமட்டுமின்றி இவர் குறிப்பிட்ட செய்தி தனது கருத்துக்கு ஆதாரம் எனக் கருதி இதைக் கூறியுள்ளனர். ஆனால் இதில் அவரது நிலைபாட்டிற்கு எதிரான அம்சமே உள்ளது.

 *தங்கம் வெள்ளியைச் சேமித்து வைக்கக் கூடாது என்ற சட்டம் ஆரம்பத்தில் அருளப்படவில்லை என்பது இவரின் நிலைபாடு.* 

9 : 34வது வசனம் முஸ்லிம்களையும் குறிக்கும் என அபூதர் (ரலி) அவர்கள் கூறியதற்கான அடிப்படைக் காரணம் இப்படிப்பட்ட சட்டம் இஸ்லாத்தில் சொல்லப்பட்டது தான் என்பதை நிறுவுவதற்காகும். ஆனால் அச்சட்டம் மாற்றப்பட்டு விட்டது என்ற தகவல் அபூதர் (ரலி) அவர்களுக்குத் தெரியவில்லை. இதை நாம் விரிவாக ஏற்கனவே விவரித்து விட்டோம்.

 *இவர் சுட்டிக் காட்டிய செய்தியில் இவரின் நிலைபாட்டிற்கு எதிரான அம்சமே இருக்கிறது என்பதைச் சுட்டிக் காட்டுவதே நமது நோக்கம்.* 

மக்காவில் ஜகாத் கடமையாக்கப்பட்டது என்ற கருத்தில் சில ஆதாரங்கள் உள்ளன. அது குறித்து ஸஹ்ரான் அவர்களுக்கு எழுதப்பட்ட மறுப்பில் தெளிவு படுத்தியுள்ளோம்.

அதையும் கீழே தருகிறோம்

 *இப்னு உமர் (ரலி) ஃபாதிமா (ரலி) ஆகிய இருவர் ஹதீஸையும் இணைத்து ஒரு முடிவுக்கு வர வேண்டும். ஒன்றை ஏற்று ஒன்றை மறுக்கக் கூடாது என்று நாங்கள் கூறுகிறோம்.* 

 *குழப்பம் :15* 

ஆனால் ஸகாத் எப்போது கடமையாக்கப் பட்டது என்பதை இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் குறிப்பாக மக்காவாழ்க்கையில் நபி (ஸல்) அவர்கள் தனது தோழர்களில் சிலரை அபூ ஸீனியாவுக்கு ஹிஜ்றத் அனுப்பிய போது அங்கு ஜஃபர் பின் அபூதாலிப் அவர்களை நஜ்ஜாஷி மன்னர் விசாரனைக்கு உட்படுத்திய போது நபியவர்கள் எதை உங்களுக்கு ஏவுகிறார்?என வினவிய போது ஜஃபர் (ரழி) அவர்கள் அளித்த அவர்தொழுகையையும் ஸகாத்தையும் நோன்பையும் எங்களுக்கு ஏவுகிறார்என்ற பதிலில் நிச்சயம் குறித்த இறை வசனத்தின் முன்பு தான் ஸகாத் கடமையாக்கப் பட்டிருந்தது என்பது சந்தேகமற உறுதியாகிறது.

 *பார்க்க:* 

مسند أحمد بن حنبل جزء *5* – صفحة *290* 

 *22551* – حدثنا عبد الله حدثني أبي ثنا يعقوب ثنا أبي عن محمد بن إسحاق حدثني محمد بن مسلم بن عبيد الله بن شهاب عن أبي بكر بن عبد الرحمن بن الحرث بن هشام المخزومي عن أم سلمة ابنة أبي أمية بن المغيرة زوج النبي صلى الله عليه وسلم قالت : لما نزلنا أرض الحبشة . وأمرنا أن نعبد الله وحده لا نشرك به شيئا وأمرنا بالصلاة والزكاة والصيام ..

 *ஆக,இவர்கள் சுற்றிச் சுற்று சொல்ல வந்த தங்கம் வெள்ளியை வைத்திருப்பது ஆரம்பத்தில் தடை செய்யப்பட்டிருந்தது ஸகாத் கடமையாக்கப்பட்டதன் பின் அதற்கு அனுமதியளிக்கப்பட்டது என்ற எடுகோலே பிழை என்றாகி விட்ட பின் அதன் அடிப்படையில் இவர்கள் எழுத்திய வாதங்கள்,சொன்ன விளக்கங்கள் அனைத்தும் அர்த்தமற்றவை என்றாகி விட்டது.* 

 *நமது பதில்:* 

ஸகாத் மக்கா வாழ்க்கையில் தான் கடமையாக்கப்பட்டது என்பதற்கு இவர்கள் மேற்கண்ட ஹதீஸை ஆதாரமாகக் காட்டுகிறார்கள்.

 *இந்த ஹதீஸை மேலோட்டமாகப் பார்த்தால் ஸகாத் மக்கா வாழ்வின் போதே கடமையாக்கப்பட்டது போல் தோன்றும். ஆனால் உண்மை அதுவல்ல.* 

இந்த செய்தியில் ஜஃபர் (ரலி) அவர்கள் ஸகாத்தை மட்டும் குறிப்பிடவில்லை. அதனுடன் சேர்த்து நோன்பையும் குறிப்பிடுகிறார்கள். நோன்பு மதீனாவில் தான் கடமையாக்கபட்டிருக்கும் போது அதை அவர்கள் அப்போது குறிப்பிடுகிறார்கள் என்றால் ரமளான் நோன்பை அவர்கள் குறிப்பிடவில்லை. மாறாக மக்கா வாழ்க்கையிலேயே நபி (ஸல்) அவர்கள் கடைப்பிடித்து வந்த ஆஷுரா மற்றும் உபரியான இதர நோன்பையே குறிப்பிடுகிறார்கள் என்பதை அறியலாம்.

 *இதே போன்று தான் அவர்கள் ஸகாத்தைக் குறிப்பிட்டதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஏனென்றால் ஸகாத்தும் நோன்பு கடமையாக்கப்பட்ட பிறகு மதீனாவில் தான் கடமையாக்கப்பட்டது என்பதை முன்பே பார்த்தோம்.* 

எனவே ஜஃபர் (ரலி) அவர்கள் குறிப்பிட்ட ஸகாத் என்பது கடமையான தர்மத்தைப் பற்றியதல்ல. மாறாக உபரியான தர்மமாகும். ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்னால் தங்கம் வெள்ளியைச் சேமித்து வைக்காமல் தர்மம் செய்து விட வேண்டும் என்ற சட்டம் இருந்தது என நாம் நிரூபித்திருக்கிறோம்.

 *ஸகாத் என்ற வார்த்தை கடமையான தர்மத்திற்கு மட்டுமின்றி உபரியான தர்மங்களுக்கும் யன்படுத்தப்பட்டிருக்கின்றது* .

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனேஎன்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப்படுகிறது. எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்! அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறது என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவர்கள் ஸகாத் கொடுக்க மாட்டார்கள். மறுமையையும் மறுப்பவர்கள்.

 *அல்குர்ஆன் (41 : 6)* 


 *மறுமை நாளை நம்பாத இணை வைப்பவர்கள் ஸகாத்கொடுக்க மாட்டார்கள் என்றால் தர்மம் செய்ய மாட்டார்கள் என்று பொருள். ஏனென்றால் அவர்கள் இஸ்லாத்தையே ஏற்றுக் கொள்ளவில்லை என்கிற போது இஸ்லாத்தின் கடமைகளில் ஒன்றான ஸகாத்தைக் கொடுக்க மாட்டார்கள் எனக் கூறுவது பொருத்தமில்லை. எனவே ஸகாத் என்பது சாதாரண தர்மம் என்ற பொருளிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதன் மூலம் அறியலாம்.* 

உபரியான தர்மம் என்ற இதே பொருளில் தான் ஜஃபர் (ரலி) அவர்கள் குறிப்பிட்ட ஸகாத் என்ற வாசகத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

 *இவர்களின் வாதப்படி ஸகாத்துடைய சட்டம் முந்தியது. இவ்வசனம் பிந்தியது என்று கூறினால் தங்கம் வள்ளியை சேமித்து வைக்கக் கூடாது என இவ்வசனம் கூறும் சட்டம் மாற்றப்படவில்லை. ஏனென்றால் இது தான் பிந்தியது. எனவே இவ்வசனத்தின் அடிப்படையில் தற்போது யாரும் செல்வத்தை சேமித்து வைக்கக் கூடாது என்று கூற வேண்டிய அபத்தம் ஏற்படும். ஆனால் இவர்கள் இவ்வாறு கூறுவதில்லை. இவர்களே ஏற்றுக் கொள்ளாத அபத்தமான ஒரு விஷயத்தையே இவர்கள் கூறிக் கொண்டிருக்கிறார்கள்* .

எனவே ஸகாத்துடைய வசனம் இறங்கிய பிறகே9 : 34வது வசனம் இறங்கியது என்ற இவர்களின் வாதம் அடிபட்டுப் போகிறது. ஸகாத் கடமையாக்கப்படுவதற்கு முன்பு தான் அந்த வசனம் இறங்கியது என்பதும் அவ்வசனத்தின் கருத்தை ஸகாத்துடைய சட்டம் மாற்றி விட்டது என்பதும் உறுதியாகிறது.

 *இது குறித்து ஸஹ்ரான் அவர்களுக்கு அளித்த பதிலையும் இங்கே நினைவு படுத்த விரும்புகிறோம்.* 

அடுத்து ஹஸன் அவர்களின் தந்தை இதை எனக்கு வாங்கித் தந்தார் என்று ஃபாதிமா (ரலி) கூறுவதால் ஹஸன் பிறந்த பிறகு தான் இதைக் கூறியிருக்க வேண்டும் என்பது சரியான வாதமே.

 *ஜகாத் என்பது மக்காவில் கடமையாகி விட்டது என்பதும் ஓரளவுக்குச் சரியானதே. இது குறித்து ஹதீஸ் மட்டுமின்றி குர்ஆனிலும் ஆதாரம் உள்ளது. ஆனால் பொதுவாக இயன்றதை தர்மம் செய்தல் என்பதே இதன் கருத்தாக இருக்க முடியும்* .

நிர்ணயிக்கப்பட்ட சதவிகிதம்,யார் யாருக்கு வினியோகிக்க வேண்டும் என்ற விபரம்,அரசின் மூலம் திரட்டுதல்,ஜகாத் நிதி திரட்டுவோருக்கு ஜகாத்தில் இருந்தே வழங்குதல் போன்றவை மக்காவில் அருளப்படவில்லை. அரசாங்கம் இல்லாத காலத்தில் இது போன்ற கட்டளையைப் பிறப்பிக்க முடியாது.

 *ஜகாத் என்பது இந்தப் பொருளிலும் குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது.* 

நான் உங்களைப் போன்ற மனிதன் தான். உங்கள் இறைவன் ஒரே இறைவனே என்று எனக்கு தூதுச் செய்தி அறிவிக்கப் படுகிறது. எனவே அவனிடம் உறுதியாக இருங்கள்! அவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்!இணை கற்பிப்போருக்குக் கேடு தான் இருக்கிறதுஎன்று (முஹம்மதே!) கூறுவீராக!அவர்கள் ஸகாத் கொடுக்க மாட்டார்கள்.மறுமையையும் மறுப்பவர்கள்.

 *திருக்குர் ஆன் 41:6,7* 

ஜகாத் முஸ்லிம்களுக்கு மட்டும் உரிய மார்க்கக் கடமை என்பது இப்போது அனைவருக்கும் தெரியும். ஆனால் மேற்கண்ட வசனத்தில் ஜகாத் கொடுக்காத முஷ்ரிக்குகளுக்கு (இணை வைப்பவர்களுக்குக்) கேடு என்று கூறப்படுகிறது. சாதாரணமான தர்மத்தைத் தான் இது குறிக்க முடியும். துவக்க காலத்தில் ஜகாத் எனும் சொல் இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.

 *ஹஸன் (ரலி) அவர்கள் பிறந்த பிறகு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தங்கத்தை வைத்துக் கொள்வதைத் தடுத்தார்கள் என்றால் அது வரை இப்போது சட்டமாக உள்ள ஜகாத் கடமையாக இருக்கவில்லை என்று தான் புரிந்து கொள்ள வேண்டும்.* 

மேலும் தங்கத்தை வைத்துக் கொள்ளக் கூடாது என்பது ஜகாத் கடமையாவதற்கு முன்னுள்ள நிலை என்ற இப்னு உமர் அவர்களின் கூற்றையும் நாம் மறுக்க முடியாது,இப்னு உமர் ஹிஜ்ரத் செய்யும் போது பத்து வயதுடையவர்களாக இருந்தனர். மதீனா வந்த பிறகு தான் மார்க்கத்தைப் புரிந்து கொள்ளும் பருவத்தை அடைகிறார்கள். எனவே மதீனா வந்த பின் ஜகாத் பற்றிய கட்டளை அருளப்பட்டிருந்தால் தான் அவர்களால் இது பற்றிக் கூற முடியும்.

 *குழப்பம் :16* 

இன்னுமொரு விடயத்தையும் இங்கு மேலதிகமாக சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

 *மேற்படி (9:34)இறை வசனத்தில் தங்கம் வெள்ளியை சேமித்து அல்லாஹ்வின் பாதையில் செலவிடாதவர்களுக்கான தண்டனைஅவை அந்நாளில் நரக நொருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு அதனால் அவர்களின் நெற்றிகளிலும்,விலாப்புறங்களிலும்,முதுகுகளிலும் சூடு போடப்படும்என்பதாகும்* .

ஆனால் குறித்த தௌபான் (ரலி) அவர்களது ஹதீஸில் கூறப்பட்டுள்ள ஹுபைறாவின் மகள் மற்றும் பாத்திமா(ரலியல்லாஹு அன்ஹுமா) ஆகிய இருவருக்கும் எச்சரிக்கை செய்யப் பட்ட தண்டனையோ அதே வடிவிலான நரக நொருப்பு அணிவிக்கப் படும் என்பதாகும். .

 *எனவே இவ்வாறு வித்தியாசமான முறையில் சொல்லப் பட்டிருக்கும் தண்டனைகளைக் கவனித்திருந்தாலே மேற்படி இறை வசனத்திற்கும் ஹதீஸுக்குமிடையில் முடிச்சுப் போட்டிருக்கமாட்டார்கள் என்பதையும் இங்கு இறுதியாக ஞாபகமூட்டிக் கொள்கிறோம்.* 

இன்ஷா அல்லாஹ் அடுத்த தொடரில் எமது அடுத்த ஹதீஸ் பற்றிய தவறான கருத்துளுக்கு பதில் சொல்வோம் எனக் கூறி முடித்துக் கொள்கிறோம்.

 **நமது பதில் தங்களது நிலைபாட்டைச் சரிகாணுவதற்காக*எல்லையில்லாமல் உளற ஆரம்பித்து விட்டார். அந்த வசனத்தில் சொல்லப்பட்ட பழுக்கக் காய்ச்சப்பட்டு ஊற்றப்படும் என்ற தண்டனையும் ஃபாத்திமா (ரலி) சம்பந்தப்பட்ட ஹதீஸில் சொல்லப்பட்ட அந்த நகைகள் நெருப்பாக மாறும் என்பதும் வெவ்வேறான தண்டனை. எனவே இவ்விரண்டு ஆதாரங்களும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை அல்ல என்பதே இவரது உளறல்.* 

அந்த வசனத்தில் பழுக்கக் காய்ச்சப்பட்டு என்று பொருள் செய்த இடத்தில் யுஹ்மா அலைஹா என்ற வார்த்தை கூறப்பட்டுள்ளது. இந்த வார்த்தையின் நேரடிப் பொருளே சூடாக்குதல் என்பதாகும். இதன் நேரடிப் பொருளில் மொழிபெயர்த்தால் அந்த தங்கம் வெள்ளி சூடாக்கப்பட்டு உறுப்புக்களில் அவைகளைக் கொண்டு சூடு போடப்படும் என்பது பொருள்.

 *ஒரு ஆபரணத்தை நன்கு சூடாக்கினால்0 அவை நெருப்பாக மாறும். இதைத் தான் ஃபாத்திமா (ரலி) அவர்கள் சம்பந்தப்பட்ட ஹதீஸ் கூறுகிறது. எனவே சூடாக்கப்படும் என்பதும் நகைகள் அதே வடிவில் நெருப்பு மாலையாக இருக்கும் என்பதும் வேறுவேறானவை அல்ல. இவ்விரண்டும் ஒரே மாதிரியான தண்டனை தான் என்பது சாதாரண அறிவுள்ளவர்களுக்குக் கூட விளங்கும்.* 

தங்கம் நெருப்பாக மாற்றப்பட்டு அதன் மூலம் சூடு போடப்படும் என்ற அம்சம் வசனத்திலும் ஹதீஸிலும் இருப்பதே இவையிரண்டும் ஒரே விஷயத்தைப் பற்றியவை என்பதற்குப் போதுமானதாகும்.

 *இவரது வாதம் தவறு என்பதை இன்னொரு வகையிலும் நாம் புரிந்து கொள்ளலாம். தங்கத்தை உருக்கி சூடுபோடுதல் என்பதும் வடிவம் மாற்றப்படாமல் அதே பொருளை நெருப்பாக மாற்றி சூடு போடுதல் என்பதும் வெவ்வேறானவை. எனவே இத்தண்டனைகளுக்குக் கூறப்பட்ட சட்டங்களும் வெவ்வேறானவை என்று வாதிடுகிறார்கள்* .

ஆனால் உண்மையில் இவ்விரு தண்டனைகளும் ஒரே சட்டத்திற்குக் கூறப்பட்டுள்ளன. ஸகாத்தைக் கொடுக்காதவர்களுக்கு இவ்விரு தண்டனைகளும் தரப்படும் என ஹதீஸில் உள்ளது. இதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து புரியலாம்.

 *பொன்,வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக் கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு,மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி,உலோகப் பாளமாக மாற்றி,அவருடைய விலாப்புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.* 

 *முஸ்லிம் (1803)* 

மேலுள்ள ஹதீஸில் பொன் வெள்ளி பழுக்கக் காய்ச்சப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. ஆனால் பின்வரும் ஹதீஸைப் பாருங்கள்.

 *யமன் நாட்டைச் சார்ந்த ஒரு பெண்மனி தனது மகளுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். அவரது மகளின் கையில் தங்கத்தால் ஆன தடிமனான இரு காப்புகள் இருந்தன. நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணிடம் இதற்குரிய ஸகாத்தை நீ கொடுத்து விட்டாயா?என்று கேட்டார்கள். அதற்கு அப்பெண் இல்லை என்று கூறினார். இவ்விரண்டு காப்புகளுக்கு பதிலாக மறுமை நாளில் நெருப்பால் ஆன இரு காப்புகளை அல்லாஹ் உனக்கு அணிவிப்பது உனக்கு மகிழ்ச்சியூட்டுமா?என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.* 

 *நஸாயீ (2434)* 

இந்தச் செய்தியில் ஸகாத்தைக் கொடுக்காவிட்டால் காப்புகள் நெருப்பாக மாற்றப்படும் என்று கூறப்படுகிறது. இவ்விரு தண்டனைகளும் ஸகாத் கொடுக்காமல் இருத்தல் என்ற ஒரு அம்சத்திற்காகத் தான் கூறப்பட்டுள்ளது.

 *இவர்களின் வாதப்படி இவ்விரு தண்டனைகளுக்கும் வித்தியாசம் இருப்பதால் இந்த இரண்டு செய்திகளுக்கும் சம்பந்தமில்லை. இவை ஒரு விஷயத்தைப் பற்றி பேசவில்லை. ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத வேறு வேறு விஷயங்களைப் பற்றிப் பேசுகின்றன என இவர்கள் கூறுவார்களா?* 

எனவே இவர்களின் இந்த உளறல் தவறு என்பது நிரூபிக்கப்படுவது மட்டுமல்லாமல்9 : 34வது வசனமும் ஸவ்பான் (ரலி) அரிவிக்கும் ஹதீஸும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. தங்கம் வெள்ளியை சேமித்து வைக்கக் கூடாது என்ற ஒரே அம்சத்தைப் பற்றி பேசுபவை என்பதும் வெட்ட வெளிச்சமாகிறது.

 *இன்ஷா அல்லாஹ் இவர்கள் வெளியிட்ட மூன்றாவது தொடருக்கான பதில் விரைவில்!* 

 *தொடர்-5* 

இறைவன் பெயரால்…..
வளைய வடிவில் உள்ள தங்க ஆபரணங்களை பெண்கள் அணிவது ஹராம் என்ற கருத்தை இலங்கையில் சிலர் கூறி வந்தனர். இவர்கள் ஆதாரமாகக் கருதும் செய்தியின் உண்மை நிலையையும், இஸ்லாம் இவ்வாறு கூறவில்லை என்பதையும் விளக்கி இரண்டு தொடர்களாக நமது இணையதளத்தில் நம் ஆய்வை வெளியிட்டிருந்தோம்.

 *இலங்கையைச் சார்ந்த நவ்ஃபர் என்ற சகோதரர் இவ்விரு தொடர்களுக்கும் தனது மறுப்பை மூன்று தொடர்களாக வெளியிட்டிருந்தார். இவர் வெளியிட்ட முதல் தொடரில் ஆய்வு சம்பந்தமான எந்த அம்சமும் இல்லை. எனவே அதற்குப் பதில் சொல்ல வேண்டிய அவசியம் நமக்கு இல்லை என்பதை முன்னரே விளக்கியுள்ளோம்.* 

இவரது இரண்டாவது தொடருக்கான முழுமையான பதில் சில தினங்களுக்கு முன்னால் நமது இணைய தளத்தில் வெளியிடப்பட்டது. இது வரை இதற்கான எந்தப் பதிலும் இவரிடமிருந்து வரவில்லை.

 *மூன்றாவது தொடரில் இவர் எழுப்பியிருந்த வாதங்களுக்கு உரிய பதிலை இப்போது காண்போம்.* 

 *குழப்பம் : 1* 

தங்க நகை அணியக் கூடாது என்று கூறும் நாம் இரண்டு ஹதீஸ்களை மட்டுமே எடுத்து வைக்கவில்லை என்பதையும் இவர்கள் தான் நாம் கூறிய ஹதீஸ்களில் இரண்டு ஹதீஸ்களை மாத்திரம் எடுத்து வைத்து ஆய்வைத் தொடக்கியிருக்கிறார்கள் என்பதையும் நாம் எமது சென்ற தொடரில் விளக்கியுள்ளோம்.

என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

 *நமது பதில் :* 

 *பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்பதற்கு பல ஹதீஸ்களை இவர்கள் ஆதாரமாக எடுத்து வைத்தது போலவும், அவற்றில் இரண்டு ஹதீஸ்களுக்கு மட்டும் நாம் மறுப்பு எழுதிவிட்டு மற்ற ஹதீஸ்களைக் கண்டு கொள்ளாதது போலவும் தோற்றத்தை இவர் ஏற்படுத்துகிறார்.* 

இன்னும் பல ஹதீஸ்கள் இவர்களது வாதத்திற்கு ஆதாரமாக இருக்கின்றது என ஒரு போலி பிரம்மிப்பை ஏற்படுத்தும் இவர் அந்த ஹதீஸ்கள் எவை? எவை? என்பதைக் குறிப்பிட்டிருக்க வேண்டாமா? இன்னும் பல ஆதாரங்கள் உள்ளன எனக் கூறும் இவர் அவற்றைப் பட்டியல் போடப் போகிறார் என்று பார்த்தால் கடைசி வரை அந்த ஆதாரங்களில் ஒன்றைக் கூட குறிப்பிடவில்லை.

 *தற்போது இவருக்கும், நமக்கும் இந்த விஷயத்தில் வாதப் பிரதிவாதங்கள் நடந்து கொண்டிருப்பதால் இன்னும் ஹதீஸ்கள் உள்ளன என்று ஜாலம் செய்யாமல் அந்த ஹதீஸ்களை எடுத்துக் காட்டி தனது வாதத்தை நிலை நாட்ட வேண்டும். தனது கூற்றை மெய்ப்பிக்க வேண்டும்.* 

 *குழப்பம் : 2* 

இந்த இடத்தில் அறபு இலக்கணத்தை அரைகுறையாக விளங்குதல் என ஒரு குற்றச் சாட்டு வைக்கப்பட்டுள்ளதால் இது தொடர்பாக சற்று விரிவாகவே விளக்க வேண்டிய அவசியம் எமக்கு ஏற்படுகிறது.

 *முந்தைய ஹதீஸை விளக்கும் போது அப்பெண்ணின் கையை நபி (ஸல்) அவர்கள் அடிக்கலானார்கள் (فجعل رسول الله يضرب يدها) என நிகழ்காலத் தொடர்வினையில் ( أفعال الشروع) மொழிபெயக்க வேண்டிய இடத்தில் கையைத் தட்டிவிட்டார்கள் என இறந்த கால வினையில் தவறாக செய்யப்பட்டிருந்த மொழி பெயர்ப்பை, இவர்களது இலக்கண அறிவை!! ஒரு புறம் வைத்துவிட்டு, இந்த வாக்கியத்தை வைத்து வாதங்கள் எழுப்பியிருந்ததன் மூலம் யார் அரைகுறை இலக்கண அறிவுடன் ஆய்வு செய்ய ஆரம்பித்துள்ளார்கள் என்பதை நாம் எளிதில் புரிந்து கொள்ளலாம்.* 

 *நமது பதில்* 

இவரது இலக்கண அறிவும் சிந்திக்கும் திறனும் எந்த லட்சணத்தில் உள்ளன என்பதற்கு இந்த வாதமும் ஒரு சான்றாக உள்ளது.

 *நமது இலக்கண அறிவைக் குறை காணும் முயற்சியில் ஈடுபட்டு தனது இலக்கண அறிவின் இலட்சணத்தை இங்கே வெளிப்படுத்தியுள்ளார்.* 

அதாவது மேற்கண்ட சொல்லுக்கு அடித்தார்கள் என்று சென்ற கால வினையாகப் பொருள் கொள்ளாமல் அடிக்கலானார்கள் என்று நிகழ்காலமாக மொழி பெயர்க்க வேண்டும் என்பது இவரது வாதம். அடித்தார்கள் என்பது எப்படி இறந்த காலத்தைக் குறிக்குமோ அது போல் அடிக்கலானார்கள் என்பதும் இறந்த காலத்தைத் தான் குறிக்கும். சாதாரண அறிவு உள்ள ஒவ்வொருவரும் இதை அறிந்து கொள்வார்கள். ஆனால் இலக்கண மேதைக்கு இது கூட தெரியவில்லை.

 *நிகழ்காலத் தொடர் வினையில் இவ்வாசகத்தைக் கூறுவதென்றால் நபி (ஸல்) அவர்கள் அடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்று தான் கூற முடியும். இறந்த கால வினையை நிகழ்கால வினை என்று இவர் கூறியிருப்பது இவரது இலக்கண அறிவின் அவலட்சணத்தைக் காட்டுகிறது.* 

தட்டலானார்கள் என்பதும் தட்டிவிட்டார்கள் என்பதும் இறந்த காலம் என்ற ஒரே காலத்தையே குறிக்கிறது என்பதால் தட்டிவிட்டார்கள் என்று நாம் மொழி பெயர்த்துள்ளோம். இதில் இலக்கணப் பிழை ஒன்றும் இல்லை.

 *நிகழ் காலத்துக்குரிய சொல்லாக இருந்தாலும் ஒரு செயல் நிகழ்ந்து கொண்டிருக்கும் போது அதைப் பேசினால் தான் நிகழ் காலமாகப் பொருள் கொள்ள வேண்டும். ஒரு செயல் நடந்து முடிந்த பின் பிற்காலத்தில் அதைச் சொல்லிக் காட்டினால் நிகழ்காலமாகப் பொருள் கொள்வது அறியாமையாகும்.* 

ஒருவர் இன்னொருவரை அடித்துக் கொண்டிருக்கும் போது தான் அடிக்கிறார் என்று கூற முடியும். ஒருவர் இன்னொருவரை அடிப்பதைப் பார்த்தவர் பிறிதொரு சமயத்தில் மற்றவரிடம் பேசினால் அடித்தார் என்று தான் என்று தான் கூறுவாரே தவிர அடிக்கிறார் என்று கூற மாட்டார். இலக்கண அறிவு இல்லாதவர் கூட தெரிந்திருக்கும் சாதாரண விஷயம் கூட இவருக்குத் தெரியவில்லை.

 *இந்தச் செய்தியை அறிவிக்கும் ஸவ்பான் (ரலி) அவர்கள் நடந்து முடிந்த சம்பவத்தை ஒரு தாபியீக்கு எடுத்துரைக்கிறார்கள். அப்படியானால் இவ்வாசகத்தை நிகழ்காலத் தொடர்வினையில் அவர்கள் எவ்வாறு கூறியிருக்க முடியும்?* 

இவரது மொழியாக்கத்தை ஆய்வு செய்யப் புகுந்தால் இவரது இலக்கணப் பிழைக்கு ஏராளமான உதாரணங்களை நம்மால் கூற முடியும். இது ஆய்வைத் தாண்டிய விஷயம் என்பதால் இத்துடன் நிறுத்திக் கொள்கிறோம்.

 *குழப்பம் : 3* 

 *இந்த இலக்கண விளக்கத்தில் நிறைந்து காணப்படும் தவறுகளை ஒவ்வொன்றாக அலசுவோம்* .

முதலில், ஹபீப் என்பது போன்ற வடிவில் இல்லாத மற்ற அமைப்புடைய சொற்களுடன் பெண்ணைக் குறிக்கும் சொல்லைச் சேர்த்துக் கூறினால் ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித் தனியாகக் கூற வேண்டும் என்ற இவர்களது கருத்து தவறாகும். காரணம் இவர்கள் மேற்கோள் காட்டியுள்ள நூலிலேயே அதே பாடத்திலேயே ஹபீப் என்பது போன்ற வடிவில் உள்ள சொற்கள் மாத்திரமல்ல ஏனைய فعول மற்றும் مفعال மற்றும் مفعيل மற்றும் مفعل என்ற வடிவில் உள்ள சொற்கட்டமைப்புகளுக்குங் கூட ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாகக் கூற வேண்டியதில்லை என தெளிவுபடுத்தப்பட்டிருப்பது வெறுமனே அறபு மென் பொருளில் இருந்து மூல நூலாசிரியரின் கூற்று எது விரிவுரையாளரின் கூற்று எது என்று வித்தியாசப்படுத்தாமல் (ومِن فَعِيلٍ) بمعنى مفعول (كَقَتِيْلٍ) بمعنى مقتول وجريح.

 *மென் பொருளில் காணப்படும் எழுத்துப் பிழைகளைக் கூட களையாமல் !!رجل جريحامرأة அப்படியே வெட்டி,ஒட்டியிருக்கும் இவர்களுக்கு எங்கே தெரியப் போகிறது.!!* 

அவ்வாறே அடுத்த பந்தியின் ஆரம்பத்தில் மீண்டும் அதே தவறை ஹபீப் என்ற சொல் அமைப்பு மட்டும் இதில் இருந்து வேறுபட்டதாகும் என எழுதியுள்ளார்!!.

 *நமது பதில் :* 

 *மூல நூலாசிரியரின் கருத்து எது? விரிவுரையாளரின் கருத்து எது? என்பது ஒரு பிரச்சனையே அல்ல. இலக்கணத்தில் நாம் கூறும் விதி உள்ளதா என்பது தான் பிரச்சனை. நமது வாதத்தை மறுப்பதாக இருந்தால் இந்த விதி அரபு இலக்கணத்தில் இல்லை என்று கூறி மறுக்க வேண்டும். இந்த விதி மூலத்தில் இல்லை; விரிவுரையில் உள்ளது என்று கூறுவது கோமாளித்தனமாகும் என்பது கூட இவருக்குத் தெரியவில்லை.* 

தவறான ஒரு தவறான சட்டம் குறிப்பிட்ட மத்ஹப் நூலில் 200 ஆம் பக்கத்தில் உள்ளது என்று நாம் விமர்சித்த போது 200ஆம் பக்கத்தில் உள்ளதாகக் கூறுவது தவறு. 210ஆம் பக்கத்தில் தான் அப்படி உள்ளது என்று மத்ஹப்வாதிகள் பதில் கூறியது போல் இவரும் பதில் அளிக்கிறார். விரிவுரையில் இருந்தால் என்ன? மூலத்தில் இருந்தால் என்ன? அப்படி ஒரு விதி இருக்கிறதா? இல்லையா என்பது தான் பிரச்சனை.

 *ஹபீப் என்ற வடிவத்துக்கு இந்த இலக்கண விதி உள்ளது என்று நாம் கூறியதை மறுக்கப் புகுந்த இவர் இவர்கள் மேற்கோள் காட்டியுள்ள நூலிலேயே அதே பாடத்திலேயே ஹபீப் என்பது போன்ற வடிவில் உள்ள சொற்கள் மாத்திரமல்ல ஏனைய فعول மற்றும் مفعال மற்றும் مفعيل மற்றும் مفعل என்ற வடிவில் உள்ள சொற்கட்டமைப்புகளுக்குங் கூட ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாகக் கூற வேண்டியதில்லை என தெளிவுபடுத்தப்பட்டிருப்பது என்று கூறுகிறார். அதாவது தனக்கு எதிராக தானே வாதிடுகிறார்.* 

நவ்பர் பொய் சொல்கிறார் என்று நாம் கூறும் போது நவ்பரும் இன்னும் பலரும் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்று பதில் கூறுவது எந்தத் தரத்தில் இருக்குமோ அந்தத் தரத்தில் இவரது பதில் அமைந்துள்ளது. ஹபீப் என்ற சொல்லுக்கு மட்டுமின்றி இன்னும் பல சொற்களுக்கும் இந்த விதி உண்டு என்று இவர் கூறுவதன் மூலம் நாம் எடுத்துக் காட்டிய இலக்கண விதியை ஒப்புக் கொள்கிறார்.

 *ஹபீப் என்ற வடிவமைப்புடைய சொற்களூக்கு நாம் கூறிய இலக்கண விதி உண்டா இல்லையா என்பது தான் பிரச்சனை. அது போல் இன்னும் பல சொற்களுக்கு அது போன்ற விதி இருப்பதால் ஹபீப் என்ற வடிவமைப்புக்கு அந்த விதி இல்லை என்று ஆகிவிடுமா?* 

ஹபீப் என்ற வார்த்தைக்கு என்ன சட்டம் என்பதைப் பற்றியே நாம் பேசிக் கொண்டிருக்கிறோம். مفعل مفعيل مفعال فعول ஆகிய அமைப்புகளைப் பற்றி நாம் பேசவில்லை. நமது ஆய்வு ஃபயீல் என்ற அமைப்புடன் மட்டுமே சம்பந்தப்பட்டிருப்பதால் ஃபயீல் அமைப்பைப் பற்றி பேசியிருந்தோம்.

 *வெட்டி ஒட்டுதல் என்ற வார்த்தையையும் பய்ன்படுத்தியுள்ளார். ஒரு வாக்கியத்தில் இல்லாத ஒன்றை நாமாக எழுதி நுழைப்பது தான் வெட்டி ஒட்டுதல் என்று சொல்லப்படும். ஒரு நூலில் இருப்பதை அப்படியே எடுத்துப் பயன்படுத்துவது வெட்டி ஒட்டுதல் ஆகாது* .

அரபு மூலத்தைப் பய்ன்படுத்தும் போது அதைக் கம்போஸ் செய்யாமல் சிரமத்தைக் குறைப்பதற்காக மூல நூலில் உள்ளதை காப்பி செய்து பயன்படுத்துவது அனைவரும் கடைப்பிடிக்கக் கூடிய ஒரு வழிமுறை தான்.

 *இவர் தனது ஆய்வில் அரபியில் குறிப்பிடும் வார்த்தைகள் கூட வேறு நூல்களில் இருந்து வெட்டி ஒட்டப்பட்டவையே* .

மூல நூலில் சில வேளை எழுத்துப் பிழை இருந்தால் அதைக் கவனிக்காமல் பயன்படுத்துவதும் இயல்பான ஒன்று தான். رجل جريحامرأة என்ற இடத்தில் ஒரு ஸ்பேஸ் (இடைவெளி) விடாமல் கம்போஸ் செய்திருப்பதால் جريح امرأةஎன்பது جريحامرأة என்று உள்ளது. இது விவாதத்துக்கு உரிய விஷயமே இல்லை.

 *மொழி பெயர்க்க என்று எழுதும் இடத்தில் மொழிபெயக்க என்று இவர் தமிழில் பிழை விட்டது போல் அரபியில் கம்போஸ் செய்பவர்களுக்கும் பிழை ஏற்படும். இது போன்ற எழுத்துப் பிழைகளை விவாதமாக்குவதில் இருந்தே இவரது விசாலமான அறிவு புலப்படுகிறது.* 

 *குழப்பம் : 4* 

முதலில் எனது ஹபீபைப் பார்த்தேன் என்று கூறினால் அது ஆணை மாத்திரம் குறிக்கும் எனக் குறிப்பிட்டவர் அதற்கு முந்தைய வரிகளில் எனது ஹபீபைப் பார்ர்த்தேன் எனக் குறிப்பிட்டால் ஆணைக் குறிப்பிடுகிறோமா அல்லது பெண்ணைக் குறிப்பிடுகிறோமா என்ற குழப்பம் ஏற்படும் எனவும் எழுதி தனக்குத்தானே முரண்பட்டுக் கொள்வதைப் பார்க்கிறோம்.

 *எனவே, இவர்கள் தவறாக விளங்கியுள்ளது போல் வெறுமனே ஹபீப் என்ற என்ற சொல் ஆணை மாத்திரம் தான் குறிக்கும் என்றிருந்தால் நான் ஹபீபை பார்த்தேன் எனக் கூறும் போது ஆணைக் குறிப்பிடுகிறோமா அல்லது பெண்ணைக் குறிப்பிடுகிறோமா என்று எவ்வாறு குழப்பம் ஏற்படும். எனவே இவர்கள் குறிப்பிட்டுள்ளது போல் ஏற்கனவே ஒரு ஆணையோ பெண்ணையோ குறிப்பிடாமல் ஹபீப் என்ற சொல்லைப் பயன்படுத்தினால் அது ஆணை மட்டும்தான் குறிக்கும் என்ற இவர்களது இலக்கண விளக்கம்!! தவறு என்று நிரூபணமாவதுடன் ஹபீப் எனும் பதம் குறித்த ஆணையோ பெண்ணையோ குறிப்பிடாமல் வெறுமனே பயன்படுத்தும் போது ஆண், பெண் இருவரையும் உள்ளடக்கும் என்பதும் தெளிவாகப் புரிகிறது.* 

எனவே இவர்கள் குறிப்பிட்டது போல் இலக்கண விதிப்படி ஹபீப் என்ற வார்த்தைக்கு ஆண் என்ற கருத்து மாத்திரம் தான் இருக்கும் என்றிருந்தால் ஆணைக் குறிக்குமா பெண்ணைக் குறிக்குமா என்று குழப்பம் ஏற்படும்என்ற பேச்சுக்கே இடம் கிடையாதல்லவா?!

 *நமது பதில் :* 

 *இவருக்கு கொஞ்சமாவது புரிந்து கொள்ளும் திறன் உள்ளதா என்று சந்தேகிக்கப்படும் அளவுக்கு இவரது இந்த வாதம் அமைந்துள்ளது. ஒருவரது வாதத்தை மறுக்க முன்வருபவர் அந்த வாதத்தை முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஒருவர் என்ன சொல்கிறார் என்பதை விளங்காமல் சம்மந்தமில்லாமல் உளறுவது தான் இவரது ஆய்வாக உள்ளது.* 

ஹபீப் என்ற வார்த்தை ஆணையும் பெண்ணையும் குறிக்கும் என்று பொத்தாம் பொதுவாக இவர் எழுதியிருந்தார். இவ்வாறு பொத்தாம் பொதுவாக கூறுவதற்கு அரபு இலக்கணத்தில் ஆதாரம் இல்லை என்று கூறி இதனை நாம் மறுத்திருந்தோம்.

 *பெண் என அறியப்பட்ட ஒருவரை வர்ணிக்கும் போது தான் ஹபீப் (நேசமானவர்) என்ற வார்த்தை பெண்ணைக் குறிப்பதற்குப் பயன்படுத்தப்படும். வர்ணிக்கப்படுபவர் ஆணா? பெண்ணா? என்ற விவரம் கூறப்படாமல் இருந்தால் அப்போது ஹபீப் என்ற வார்த்தை பெண்ணைக் குறிக்காது. ஆணை மட்டுமே எடுத்துக் கொள்ளும்.* 

எனவே ஹபீப் என்ற வார்த்தையை மட்டும் வைத்துக் கொண்டு அது பெண்ணைத் தான் குறிக்கிறது என வாதிடுவது தவறு. அந்த வார்த்தை யாரைப் பார்த்து கூறப்பட்டதோ அந்நபர் பெண்ணாக இருக்கிறார் என்பது உறுதியானாலே ஹபீப் என்ற சொல் பெண்ணைக் குறிக்கிறது என்று கூற முயும் எனக் கூறி இதற்கான ஆதாரத்தை அரபு இலக்கணத்தில் காட்டினோம்.

 *ஹபீப் என்ற வார்த்தை இடம்பெற்ற ஹதீஸில் பொத்தாம் பொதுவாக நேசமானவர் என்றே கூறப்பட்டுள்ளது. பெண்ணைக் குறிக்கின்ற எந்த அம்சமும் அந்த ஹதீஸில் இல்லாததால் இந்த இலக்கண விதியின் அடிப்படையில் ஹதீஸில் சொல்லப்பட்ட ஹபீப் என்பது பெண்ணைக் குறிக்காது. ஆணை மட்டுமே குறிக்கும் என்று கூறியிருந்தோம். இதில் எந்த முரண்பாடும் இல்லை. குழப்பமும் இல்லை.* 

நாம் கூறிய இலக்கண விதி இல்லை என்றோ அல்லது தவறு என்று இவரால் மறுக்க முடியவில்லை. ஹபீப் என்று பொதுவாகக் கூறினாலும் அது பெண்ணைக் குறிக்கும் என்று வாதிடும் இவர் அதற்கான இலக்கண ஆதாரத்தை எடுத்துக் காட்ட வேண்டும். ஆனால் அவ்வாறு எடுத்துக் காட்ட முடியாததால் நாம் எழுதிய வாசகத்தில் குதர்க்கம் செய்து முரண்பாட்டைக் கொண்டு வர முயற்சித்துள்ளார். பொய்யான இந்த முரண்பாட்டை வைத்து இவர்களது கருத்து உண்மை என்பதை நிறுவ முயற்சிக்கிறார்.

 *எனவே ஹபீப் என்ற வார்த்தை எல்லா இடங்களிலும் பெண்ணையும் குறிக்கும் என்ற இவர்களின் வாதத்திற்கு நாம் குறிப்பிட்டுக் காட்டிய இலக்கண விதி சாவுமணி அடிக்கிறது.* 

முதலில் எனது ஹபீபைப் பார்த்தேன் என்று கூறினால் அது ஆணை மாத்திரம் குறிக்கும் எனக் குறிப்பிட்டவர் அதற்கு முந்தைய வரிகளில் எனது ஹபீபைப் பார்ர்த்தேன் எனக் குறிப்பிட்டால் ஆணைக் குறிப்பிடுகிறோமா அல்லது பெண்ணைக் குறிப்பிடுகிறோமா என்ற குழப்பம் ஏற்படும் எனவும் எழுதி தனக்குத்தானே முரண்பட்டுக் கொள்வதைப் பார்க்கிறோம் என்று கூறுகிறார்.

 *இதில் எந்த முரண்பாடும் இல்லை. வெறுமனே ஹபீபைப் பார்த்தேன் என்று கூறினால் அது ஆணை மட்டுமே குறிக்கும் என்பதை முதலில் நாம் குறிப்பிடுகிறோம். இவ்வாறு தான் இலக்கண விதியும் கூறுகிறது. இதுவே நமது நிலைபாடு என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. இவ்வாறு முடிவு எடுத்தால் தான் எந்தக் குழப்பமும் ஏற்படாது.* 

ஆனால் இவ்வாறு முடிவு எடுக்காமல் இவர்கள் கூறுவது போல் ஹபீப் என்ற வார்த்தை ஆணையும் குறிக்கும் பெண்ணையும் குறிக்கும் என்று முடிவெடுத்தால் அப்போது தான் இந்தக் குழப்பம் வரும். ஹபீபைப் பார்த்தேன் என்றால் இங்கு ஹபீப் என்பது ஆணா? பெண்ணா? என்ற குழப்பம் வருகிறது.

 *ஹபீபைப் பார்த்தேன் என்ற வாசகத்தில் உள்ள ஹபீப் என்பது ஆணை மட்டுமே குறிக்கும் என்று சட்டம் வகுத்து விட்டால் இங்கு ஆணா? பெண்ணா? என்ற குழப்பம் வராது. இதில் என்ன முரண்பாடு உள்ளது.* 

இடம் பொருள் ஏவலை வைத்து முரண்பாடில்லாமல் இவ்வாறு விளங்குவதை விட்டு விட்டு அங்கு ஒரு துண்டையும் இங்கு ஒரு துண்டையும் எடுத்துப் போட்டு முரண்பாட்டை உருவாக்க முயற்சிக்கிறார்.

 *எனவே ஹபீப் என்று பொதுவாகக் கூறினால் அது ஆணை மட்டுமே குறிக்கும் என்ற சட்டம் இயற்றப்பட்டதின் நியாயமான காரணத்தை விளக்குவதற்காகவும் அவ்வாறு சட்டம் கூறாவிட்டால் ஏற்படும் விளைவை விவரிப்பதற்காகவுமே குழப்பம் ஏற்படும் என்று நாம் கூறியிருந்தோம்.* 

ஹபீப் என்ற வார்த்தை பொதுவாகவே ஆணையும் பெண்ணையும் குறிக்கும் என்பது இவர்களின் வாதம். இந்த வாதத்தால் குழப்பம் ஏற்படும் என்பதை அரபு இலக்கணத்தை ஆதாரமாகக் காட்டி நாம் கூறியிருந்தோம்.

 *இவர் தனது வாதத்தில் உண்மையாளராக இருந்தால் குழப்பம் ஏற்படும் என்று நாம் கூறியதை முறையான அடிப்படையில் மறுத்து குழப்பம் ஏற்படாது என நிரூபித்திருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு நிரூபிக்காமல் நாம் கூறிய வாசகத்தில் குதர்க்கத்தை மட்டும் செய்துள்ளார்.* 

எனவே நாம் நாடாத அர்த்தத்தை நமது வார்த்தைகளில் திணித்து அதன் மூலம் நமது வாதம் தவறு எனவும் இவரது வாதம் சரி எனவும் நிறுவுவதற்கு இவர் எடுத்த முயற்சி இவருக்கே எதிராகத் திரும்புகிறது.

 *குழப்பம் : 5* 

 *அடுத்து இவர்கள் மேற்கோள் காட்டியுள்ள, அரைகுறயாக மொழி பெயர்த்துள்ள இலக்கண விதியில் இவர்கள் மொழிபெயர்க்காமல் விட்டு விட்ட சில வரிகளையும் நாம் மொழிபெயர்க்கிறோம்* 

1.ولو قال : ومن فعيل كقتيل إن عرف موصوفه غالباً التاء تنخذف لكان أجود

(விரிவுரையாளர் கூறுகிறார் ) :(மூல நூலாசிரியர்) பஈல் எனும் அமைப்பில் கொல்லப்பட்டவர் என்பது போன்று செயற்பாட்டு பெயரில் (ஹபீப் என்பது போல்) இடம் பெறும் சொற்களின் மூலம் நாடப்படுவது ஆணா பெண்ணா என்பது அறியப்பட்டால் இறுதியில் இடம் பெறும் தா التاء நீங்கிவிடும் என்று கூறியிருந்தால் சிறப்பாக அமைந்திருக்கும்.

 *2.இதன் காரனமாகவே மூல நூலாசிரியர் தனது ஷறஹுல் காபியாஎனும் நூலில் வர்ணனையை நோக்காகக் கொண்டு வர்ணிக்கப்படுபவர் யார் என்று அறியப்பட்டால் இறுதியில் இடம் பெறும் தா நீக்கப்படும் என்று கூறியுள்ளார்.* 

 *நமது பதில்* :

நமக்கு மறுப்பு சொல்வதாக எண்ணிக் கொண்டு தன்னையே இவர் மறுத்துக் கொள்கிறார். இவர் எடுத்துக் காட்டும் ஆதாரத்தின் மூலம் நமது ஆதாரத்தில் ஒன்றை அதிகமாக்கியுள்ளார். எப்படி என்று பார்ப்போம்.

 *ஃபயீல் என்ற அமைப்பில் உள்ள சொற்களின் மூலம் நாடப்படுவது ஆணா? பெண்ணா? என்பது அறியப்பட்டால் இறுதியில் உள்ள தா நீங்கிவிடும். அதாவது பெண்ணைக் குறிப்பதற்காக ஹபீப் என்ற சொல்லின் இறுதியில் தாவைச் சேர்த்து ஹபீபா என்று கூறாமல் ஹபீப் என்றே கூற வேண்டும் என்ற விதியை எடுத்துக் காட்டி இதைத் தன்க்குரிய ஆதாரமாகக் காட்டுகிறார்.* 

இவர் குறிப்பிட்டுள்ள இவ்விதி நாம் ஏற்கனவே கூறிய கருத்தை உறுதிப்படுத்தும் விதமாகவும் இவரது கருத்தைத் தரைமட்டமாக்கும் விதமாகவும் அமைந்துள்ளது.

 *நாடப்படுபவர் பெண் என அறியப்பட்டால் தா நீங்கிவிடும். நாடப்படுபவர் பெண் என அறியப்படாவிட்டால் அப்போது தாவை நீக்கக் கூடாது என்று இவ்விதி கூறுகிறது.* 

இந்த விதியை நன்கு கவனித்தால் ஹபீப் என்ற வார்த்தையை மட்டும் வைத்து பெண் என்று தீர்மானிக்க முடியாது. அதன் மூலம் பெண் நாடப்படுகிறார் என்பது அறியப்பட்டால் தான் அது பெண்ணைக் குறிக்கும். அவ்வாறு அறியப்படாவிட்டால் ஹபீப் எனக் கூறாமல் ஹபீபா என்று தான் கூற வேண்டும் என்று தான் இவர் எடுத்துக் காட்டிய இலக்கண விதி கூறுகிறது. அதாவது எந்த இலக்கண விதியை வைத்து ஹபீப் என்ற சொல்லுக்கு பெண் என்று பொருள் கொள்ளக் கூடாது என்று நாம் வாதிட்டோமே அதே விதியைத்தான் இவர் எடுத்துக் காட்டும் ஆதாரமும் கூறுகிறது.

 *ஒரு பெண்ணைப் பார்த்து ஒருவன் நீ என்னுடைய ஹபீப் என்று கூறினால் இங்கே ஹபீப் என்பது பெண்ணைக் குறிக்கிறது என்று அர்த்தம். இங்கே ஹபீபா என்று கூற வேண்டியதில்லை. ஹபீப் என்று கூறினாலே போதுமானது.* 

இந்த உதாரணத்தில் ஹபீப் என்பது பெண்ணைக் குறிக்கிறது என நாம் முடிவு செய்தது ஹபீப் என்ற வார்த்தையை வைத்து அல்ல. அது பெண்ணைப் பார்த்து கூறப்பட்டதாலே இங்கு இது பெண்ணைக் குறிக்கிறது என்று அறிந்து கொள்கிறோம்.

 *நாடப்படுபவர் பெண் தான் எனத் தெரியாவிட்டால் அப்போது பெண்ணைக் குறிப்பதாக இருந்தால் ஹபீப் எனக் கூறாமல் ஹபீபா என்று தான் கட்டாயம் கூற வேண்டும். இதைத் தான் இவ்விதி கூறுகிறது.* 

நமது கருத்தும் அதற்கு நாம் எடுத்துக் காட்டும் ஆதாரமும் ஒன்றுடன் ஒன்று பொருந்தக் கூடியதாக இருக்கிறது.

 *ஆனால் இவரது வாதமும் அதற்கு எடுத்துக் காட்டும் ஆதாரமும் ஒன்றுக் கொன்று சம்மந்தமில்லாமல் இருக்கிறது.* 

இவரது வாதம் என்ன? ஹபீப் என்ற சொல் ஆணைக் குறிக்கிறதா பெண்ணைக் குறிக்கிறதா என்பது தெளிவுபடுத்தப்படாத இடங்களிலும் பெண்ணைக் குறிக்கும் என்பது தான் இவரது வாதம். (அப்படி வாதிட்டால் தான் பெண்கள் தங்க நகை அணியத் தடை என்று சமாளிக்க முடியும்) இவரது இந்த வாதத்தை நிரூபிக்கும் வகையில் இலக்கண ஆதாரத்தை இவர் காட்டவே இல்லை. தனக்கு எதிராகவே ஆதாரத்தைக் காட்டி இருக்கிறார். எனவே பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று இவர் எடுத்து வைத்த வாதம் நொறுங்கிப் போகிறது.

 *தனது ஹபீபிற்கு நெருப்பால் ஆன வளையத்தை அணிவிக்க விரும்புபவர் தங்கத்தால் ஆன வளையத்தை அணிவிக்கட்டும் என்று ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. இந்த ஹதீஸில் கூறப்பட்ட ஹபீப் என்பது பெண்ணையே குறிக்கிறது என்ற வாதத்தை முன்வைத்து பெண்கள் தங்கம் அணிவது ஹராம் என இவர்கள் கூறுகிறார்கள்.* 

மேலுள்ள இலக்கண விதியின் படி ஹதீஸீல் கூறப்பட்ட ஹபீப் என்ற வார்த்தையின் மூலம் பெண் நாடப்பட்டிருப்பது அறியப்பட்டாலே அது பெண்ணைக் குறிக்கிறது என வாதிட முடியும். ஆனால் ஹதீஸில் எந்தப் பெண்ணைப் பற்றியும் கூறப்படவில்லை. வெறுமனே பிரியத்திற்குரியவர் என்று தான் கூறப்பட்டுள்ளது.

 *ஹபீப் என்பது பெண்ணைத் தான் குறிக்கிறது என இவர்கள் வாதிடுவதாக இருந்தால் முதலில் ஹபீபின் மூலம் நாடப்படுவது பெண் தான் என்பதை அந்த வாக்கியத்தில் இருந்து நிரூபிக்க வேண்டும். ஆனால் இவர்கள் அவ்வாறு நிரூபிக்கவில்லை. இந்தத் தவறான வாதத்தின் அடிப்படையில் பெண்கள் தங்கம் அணியக் கூடாது என இவர்கள் வாதிட்டதும் தவறு என்பது தெளிவாகிறது.* 

எனவே ஹதீஸில் கூறப்பட்ட ஹபீப் என்ற வார்த்தையின் மூலம் பெண் நாடப்படுள்ளார் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாததால் இவ்வார்த்தை ஆணை மட்டுமே குறிக்கிறது என்பது உறுதியாகிறது. .

 *நாம் சொல்வதை எப்படி இவர் புரிந்து கொள்ளமல் இருக்கிறாரோ அது போல் தான் எடுத்து வைக்கும் ஆதாரத்தையும் அதன் கருத்தையும் கூட புரியாதவராக இருக்கிறார். புரிந்து கொள்ளும் திறன் குறைந்தவராகவே இவரைக் காண முடிகிறது. இல்லாவிட்டால் தன் கருத்தை மறுக்கும் ஆதாரங்களை எல்லாம் தனது ஆதாரமாகக் காட்டுவாரா?* 

 *குழப்பம் : 6* 

எனவே மேற்படி இலக்கண விதிகளின் சுருக்கத்தை பின்வருமாறு தொகுத்துக் கூறலாம்.

 *1. ஹபீப் எனும் பதம் ஏற்கனவே ஆணையோ பெண்ணையோ குறிப்பிடாமல் பயன்படுத்தப்பட்டால் அது ஆணையும் பெண்ணையும் குறிக்கும்.* 

2.ஹபீப் எனும் வார்த்தை மூலம் ஆணைக் குறிப்பிடுகிறோமா அல்லது பெண்ணைக் குறிப்பிடுகிறோமா என்பது (ஏதோ ஒரு வகையில்) அறியப்பட்டாலும் ஹபீபா என தா சேர்க்காமல் ஹபீப் என்றே குறிப்பிட வேண்டும்.

 *நமது பதில் :* 

 *இவர் முதலில் குறிப்பிடுகின்ற விதிக்கு எந்த ஆதாரத்தையும் இவர் அரபு இலக்கணத்திலிருந்து காட்டவில்லை. இவரது குதர்க்கத்தையே இதற்கு ஆதாரமாகக் காட்டினார்.* 

இவர் இரண்டாவதாகக் குறிப்பிட்ட விதிக்கு இலக்கணத்தில் ஆதாரம் உண்டு. ஆனால் இவ்விதிக்கும் இவரது வாதத்திற்கும் சம்பந்தம் இல்லை. மாறாக இது அவருக்கு எதிரான விதி என்பதையும் நமது கருத்திற்கே ஆதாரமானது என்பதையும் முன்பு விவரித்திருக்கிறோம்.

 *குழப்பம் : 7* 

    

 *20. 🧕🧕🧕இறுதி பாகம் 4🧕🧕🧕பெண்கள்🧕 தங்க 👙👙நகைகள்👙 👙அணியலாமா❓ஓர் 🧕ஆய்வு🧕🧕🧕* 



 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 31* 


 *🌹🌹

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment