பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, April 25, 2020

ரமலானை 🔥* ⤵ *🔥வரவேற்போம் - 3

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ரமலானை 🔥*
                          ⤵
              *🔥வரவேற்போம் 🔥*

               *தொடர்...... 0⃣3⃣*

*🏮🍂அல்லாஹ் ஒரு முஃமினுக்க வழங்குகின்ற சந்தர்பங்களில் மிகப் பெரும் சந்தர்பம் ரமலானை அடைவதும், அதனை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்வதும்தான். அப்படிபட்ட உன்னதமான சந்தர்பத்தை விரைவில் அடையவிருக்கும் நாம் அதனை உரிய முறையில் வரவேற்க தயாராக இருக்க வேண்டும்.*

          *👇 எப்படி 👇*

*☄1.  உடலை தயார் நிலையில்*
              *வைத்துக் கொள்வது:*

*عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَقَدَّمُوا رَمَضَانَ بِصَوْمِ يَوْمٍ وَلَا يَوْمَيْنِ إِلَّا رَجُلٌ كَانَ يَصُومُ صَوْمًا، فَلْيَصُمْهُ»* م : 1082

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ரமலானுக்கு முந்தைய நாளும் அதற்கு முந்தைய நாளும் நோன்பு நோற்காதீர்கள். (வழக்கமாக அந்த நாளில்) ஏதேனும் நோன்பு நோற்கும் மனிதரைத் தவிர! அவர் அந்நாளில் நோன்பு நோற்கட்டும்.*_

*🎙 அறிவிப்பர் :*
                *அபூஹுரைரா (ரலி)* 

*📚 நூல் : முஸ்லிம் 1802 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄2.  துஆ செய்வதன் மூலம்:*

*🏮🍂அல்லாஹ் ரமலானை அடையச் செய்ய பிரார்த்திக்க வேண்டும். ஏனெனில் நம்முடன் கடந்த ரமலானில் இருந்தவர்கள் இந்த ரமலானில் இல்லாமல் இருக்கலாம்.* அவர்களுக்கு இந்த ரமலானை அடையும் வாய்ப்பை அல்லாஹ் வழங்க வில்லை. எனினும் நமக்கு அல்லாஹ் முழுமையாக வழங்க வேண்டி துஆச் செய்ய வேண்டும்.

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄3.    அல்லாஹ்வுக்கு நன்றி*
        *செலுத்துவதன் மூலம்:*

*🏮🍂ஒரு அருட் கொடை திரும்ப கிடைக்குமெனில் அது அல்லாஹ் நமக்கு செய்துள்ள உபகாரம்தான். அந்த உபகாரத்தை வழங்கியமைக்கு நாம் நன்றி செலுத்தினால் அந்த அருட் கொடை நமக்கு மீண்டும் மீண்டும் கிடைக்கப்பெறும்.*

*وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِنْ شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِنْ كَفَرْتُمْ إِنَّ عَذَابِي لَشَدِيدٌ* ( إبراهيم :7)

_*🍃இதற்காக எனக்கு) நீங்கள் நன்றி செலுத்தினால் உங்களுக்கு நிச்சயமாக நான் (என்னருளை) அதிகமாக்குவேன்; (அவ்வாறில்லாது) நீங்கள் மாறு செய்தீர்களானால் நிச்சயமாக என்னுடைய வேதனை மிகக் கடுமையானதாக இருக்கும்” என்று உங்களுக்கு இறைவன் அறிக்கை இட்டதையும் (நினைவு கூறுங்கள்)*_

*📖 அல்குர்ஆன் 14 : 07 📖*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄4.  மகிழ்ச்சியை*
            *வெளிப்படுத்துவதன்*
                     *மூலம்:*

*عن أبي هريرة قال: قال رسول الله صلى الله عليه وسلم: «أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه، تفتح فيه أبواب السماء، وتغلق فيه أبواب الجحيم، وتغل فيه مردة الشياطين، لله فيه ليلة خير من ألف شهر، من حرم خيرها فقد حرم»*

_*🍃நபி (ஸல்) அவர்கள் பரகத் பொருந்திய மாதமான ரமலான் மாதம் உங்களிடம் வந்துள்ளது. அதில் அல்லாஹ் உங்கள் மீது நோன்பை கடமையாக்கியுள்ளான். அம்மாதத்தில் சுவனத்து வாசல்கள் திறக்கப்பட்டு, நரகத்து வாசல்கள் அடைக்கப்படுகின்றது. மேலும் ஷைத்தான்கள் விலங்கிடப்படுகின்றனர். அதில் ஓர் இரவு உள்ளது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்ததாகும். எவன் அதன் நன்மையைவிட்டும் தடுக்கப்பட்டானோ அவன் (அனைத்து நன்மைகளை விட்டும்)தடுக்கப்பட்டவனாவான்.*_

*📚நூல் : நஸயி : 2106 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment