பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, April 15, 2020

வெட்கம்-ஈமானின் ஒரு பகுதி

—————————————
*வெட்கம்-ஈமானின் ஒரு பகுதி*
—————————————-
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
ஈமான் என்பது அறுபதுக்கும் மேற்பட்ட கிளைகளாகும். *வெட்கம் ஈமானுடைய கிளைகளில் ஒன்றாகும்.*

அறிவிப்பவர்: *அபூஹுரைரா* (ரலி)
நூல்: *புகாரி 9*

அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு மனிதர் தமது சகோதரர் (அதிகம்) வெட்கப்படுவதைக் கண்டித்துக் கொண்டிருந்த போது அவ்வழியே நபி (ஸல்) அவர்கள் சென்றார்கள். உடனே, *அவரை(க் கண்டிக்காதீர்கள்) விட்டு விடுங்கள். ஏனெனில் நிச்சயமாக வெட்கம் ஈமானின் ஓரம்சம்* என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: *அப்துல்லாஹ் பின் உமர்* (ரலி)
நூல்: *புகாரி 24*

*மார்க்கத்தை அறிய வெட்கப்படக் கூடாது !*
———————————————————
*பெண்களில் அன்சாரிப் பெண்கள் மிகச் சிறந்தவர்கள். (ஏனென்றால்) மார்க்கச் சட்டங்ளை அறிந்து கொள்வதை விட்டும் வெட்கம் அவர்களைத் தடுக்கவில்லை.*

அறிவிப்பவர்: *ஆயிஷா* (ரலி)
நூல்: *முஸ்லிம் 500*

*வெட்கம் தான் ஒரு காரியத்தை அழகாக்கும்*
———————————————————-
கெட்ட வார்த்தை பேசுபவர் வெட்கமில்லாதவர் என்று கூறுகிறது இந்த ஹதீஸ்..

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
*கெட்ட வார்த்தை பேசும் குணம் எதில் இருந்தாலும் அதை அது அசிங்கப்படுத்தாமல் இருப்பதில்லை. வெட்கம் எப்பொருளில் இருந்தாலும் அந்தப் பொருளை அது அழகாக்காமல் இருப்பதில்லை.*

அறிவிப்பவர்: *அனஸ்* (ரலி)
நூல்: *திர்மிதி 1897*

*வெட்கம் நல்லதைத் தவிர வேறெதையும் கொண்டு வராது* என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: *இம்ரான் பின் ஹுஸைன்* (ரலி)
நூல்: *புகாரி 6117*

*பெண்களை விடவும் அதிகம் வெட்கப்பட்ட மாமனிதர்*
——————————————————
நபி (ஸல்) அவர்கள் திரைக்குள் இருக்கும் கன்னிப் பெண்ணை விடவும் அதிக வெட்கமுள்ளவராக இருந்தார்கள்.

அறிவிப்பவர்: *அபூசயீத் அல்குத்ரீ* (ரலி)
நூல்: *புகாரி 3562*

*மறைவிடங்களை பேணுதல்*
—————————————
நபி (ஸல்) அவர்கள் மலம் கழிக்கும் இடத்திற்குச் சென்றால் தூரமாகச் சென்று விடுவார்கள்.

அறிவிப்பவர்: *அல்முகீரா பின் ஷுஅபா* (ரலி)
நூல்: *நஸயீ 17*

*உங்களில் யாரேனும் குளித்தால் அவர் மறைப்பை ஏற்படுத்திக் கொள்ளட்டும்* என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: *யஃலா பின் உமய்யா* (ரலி)
நூல்: *நஸயீ 403*

ஒருவரிடம் வெட்க உணர்வு இல்லையென்றால் அதுவே அவனை எதையும் செய்யத் தூண்டும் :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 
*மக்கள் இறைத்தூதர்களின் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான் நீ வெட்கப்படவில்லை என்றால் விரும்பியதையெல்லாம்* செய்து கொள் என்பதாகும்.

அறிவிப்பவர்: *உக்பா பின் அம்ர்* (ரலி)
நூல்: *புகாரி 3483*

ஏகத்துவம்

No comments:

Post a Comment