பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, April 15, 2020

அல்குர்ஆன்* *வசனமும் - 30

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*📖அல்குர்ஆன்*
                     *வசனமும்📖*
                                  ⤵️
           *📖இறங்கியதற்க்கான*
                             *காரணங்களும்📖*

                    *✍🏻....தொடர் : { 30 }*

*☄️நபித்துவமும்*
               *நபிகளாரின்*
                       *வாழ்க்கையும் { 21 }*

*☄️உலக வாழ்வா❓*
             *மறுமை வாழ்வா❓*

_*🍃“இவ்வுலக வாழ்வையும், இதன் அலங்காரத்தையும் நீங்கள் விரும்பினால் வாருங்கள்! உங்களுக்கு வசதியளித்து அழகிய முறையில் உங்களை விடுவித்து விடுகிறேன்’’ என்று நபியே உமது மனைவியரிடம் கூறுவீராக! நீங்கள் அல்லாஹ்வையும், அவனது தூதரையும், மறுமை வாழ்வையும் விரும்பினால் உங்களில் நன்மை செய்வோருக்கு அல்லாஹ் மகத்தான கூலியைத் தயாரித்துள்ளான்.*_

*📖அல்குர்ஆன் 33:28,29📖*

ﻭﺣﺪﺛﻨﻲ ﺃﺑﻮ اﻟﻄﺎﻫﺮ، ﺣﺪﺛﻨﺎ اﺑﻦ ﻭﻫﺐ، ﺣ ﻭﺣﺪﺛﻨﻲ ﺣﺮﻣﻠﺔ ﺑﻦ ﻳﺤﻴﻰ اﻟﺘﺠﻴﺒﻲ، ﻭاﻟﻠﻔﻆ ﻟﻪ، ﺃﺧﺒﺮﻧﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻭﻫﺐ، ﺃﺧﺒﺮﻧﻲ ﻳﻮﻧﺲ ﺑﻦ ﻳﺰﻳﺪ، ﻋﻦ اﺑﻦ ﺷﻬﺎﺏ، ﺃﺧﺒﺮﻧﻲ ﺃﺑﻮ ﺳﻠﻤﺔ ﺑﻦ ﻋﺒﺪ اﻟﺮﺣﻤﻦ ﺑﻦ ﻋﻮﻑ، *ﺃﻥ ﻋﺎﺋﺸﺔ، ﻗﺎﻟﺖ: ﻟﻤﺎ ﺃﻣﺮ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﺑﺘﺨﻴﻴﺮ ﺃﺯﻭاﺟﻪ، ﺑﺪﺃ ﺑﻲ، ﻓﻘﺎﻝ: «ﺇﻧﻲ ﺫاﻛﺮ ﻟﻚ ﺃﻣﺮا، ﻓﻼ ﻋﻠﻴﻚ ﺃﻥ ﻻ ﺗﻌﺠﻠﻲ ﺣﺘﻰ ﺗﺴﺘﺄﻣﺮﻱ ﺃﺑﻮﻳﻚ»، ﻗﺎﻟﺖ: ﻗﺪ ﻋﻠﻢ ﺃﻥ ﺃﺑﻮﻱ ﻟﻢ ﻳﻜﻮﻧﺎ ﻟﻴﺄﻣﺮاﻧﻲ ﺑﻔﺮاﻗﻪ، ﻗﺎﻟﺖ: ﺛﻢ ﻗﺎﻝ: " ﺇﻥ اﻟﻠﻪ ﻋﺰ ﻭﺟﻞ ﻗﺎﻝ: {ﻳﺎ ﺃﻳﻬﺎ اﻟﻨﺒﻲ ﻗﻞ ﻷﺯﻭاﺟﻚ ﺇﻥ ﻛﻨﺘﻦ ﺗﺮﺩﻥ اﻟﺤﻴﺎﺓ اﻟﺪﻧﻴﺎ ﻭﺯﻳﻨﺘﻬﺎ ﻓﺘﻌﺎﻟﻴﻦ ﺃﻣﺘﻌﻜﻦ ﻭﺃﺳﺮﺣﻜﻦ ﺳﺮاﺣﺎ ﺟﻤﻴﻼ ﻭﺇﻥ ﻛﻨﺘﻦ ﺗﺮﺩﻥ اﻟﻠﻪ ﻭﺭﺳﻮﻟﻪ ﻭاﻟﺪاﺭ اﻵﺧﺮﺓ ﻓﺈﻥ اﻟﻠﻪ ﺃﻋﺪ ﻟﻠﻤﺤﺴﻨﺎﺕ ﻣﻨﻜﻦ ﺃﺟﺮا ﻋﻈﻴﻤﺎ} [اﻷﺣﺰاﺏ: 29] "، ﻗﺎﻟﺖ: ﻓﻘﻠﺖ: ﻓﻲ ﺃﻱ ﻫﺬا ﺃﺳﺘﺄﻣﺮ ﺃﺑﻮﻱ؟ ﻓﺈﻧﻲ ﺃﺭﻳﺪ اﻟﻠﻪ ﻭﺭﺳﻮﻟﻪ ﻭاﻟﺪاﺭ اﻵﺧﺮﺓ، ﻗﺎﻟﺖ: ﺛﻢ ﻓﻌﻞ ﺃﺯﻭاﺝ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ ﻣﺜﻞ ﻣﺎ ﻓﻌﻠﺖ*

_ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:_

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தொன்பது நாட்கள் தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தார்கள். பிறகு “நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்” என்று தொடங்கி, “உங்களில் நல்லவர்களுக்காக மகத்தான கூலியை அல்லாஹ் தயார் செய்துள்ளான்” என்று முடியும் இந்த (33:28,29) வசனங்கள் அவர்களுக்கு அருளப்பெற்றன.*_

_*இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, “ஆயிஷா! நான் உன்னிடம் ஒரு விஷயத்தை முன்வைக்க விரும்புகிறேன். அது தொடர்பாக நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து)விடக் கூடாது என விரும்புகிறேன்” என்று கூறினார்கள்.*_

_*அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், “அது என்ன, அல்லாஹ்வின் தூதரே?” என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (33:28ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ்வின் தூதரே! உங்கள் (உறவைத் துண்டிக்கும்) விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்? இல்லை! நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே தேர்ந்தெடுக்கிறேன்” என்று சொல்லிவிட்டு, “நான் கூறியதைத் தாங்கள் மற்ற துணைவியரில் எவரிடமும் தெரிவிக்க வேண்டாமென உங்களைக் கேட்டுக்கொள்கிறேன்” என்றார்கள்.*_

_*அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அவர்களில் எவரேனும் என்னிடம் (நீ சொன்னதைப் பற்றிக்) கேட்டால் நான் அவர்களிடம் அதைத் தெரிவிக்காமல் இருக்கமாட்டேன். அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ளவனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறைநெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்” என்றார்கள்.*_

      *📚நூல்: முஸ்லிம் (2946)📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment