பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Thursday, April 23, 2020

ரமலானை 🔥* ⤵ *🔥வரவேற்போம் - 1

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

      *🔥 ரமலானை 🔥*
                          ⤵
              *🔥வரவேற்போம் 🔥*

               *தொடர்...... 0⃣1⃣*

              *☄ முன்னுரை ☄*

*🏮🍂புணிதமும், கண்ணியமும், ரஹ்மத்தும் நிறைந்த மாதமான ரமலான் நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது.* ஈமான் கொண்ட அனைவரும் இந்த மாதத்தை எதிர்நோக்கியவாறு தங்களுடைய *ஐந்து கடமைகளில் ஒன்றான நோன்பை நிறைவேற்றி  அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைய ஆவலாகவும், சந்தோஷமாகவும் உள்ளனர்...*

*🏮🍂 ஏனென்றால் நோன்பு முஸ்லிம்களின் உள்ளங்களிலும், வாழ்க்கையிலும் நல்லதொரு மாற்றங்களை ஏற்ப்படுத்துவது மட்டும்மல்லாமல் அடுத்து வருகின்ற பதினொரு மாதங்களுக்கான ஒரு பயிற்ச்சியாகவும் உள்ளது.* மேலும் முஸ்லிம்களுக்கு இது ஒரு வசந்த காலம் என்று கூறும் அளவுக்கு நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன.

*🏮🍂 இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், நோன்பு நோற்றல், ஐவேளை தொழுதல், இரவு நேர வணக்கங்கள், சொல்- செயல்-எண்ணங்கள் என்று அனைத்திலும் இறையச்சத்தை பேணுதல் என்று ஒரு அமைதியான,* நிம்மதியான சூழலை ரமலான் நம்மிடம் ஏற்ப்படுத்தி விடுகின்றது. ரமானின் முழு பலனையும் அடைய வேண்டும் என்பதில் எந்த ஒரு முஸ்லீமுக்கும் இறு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது....

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

     *☄நோன்பின் சிறப்புகள் [ 01 ]*

     *☄நோன்பு ஒரு கேடயம் ☄*

ﺣﺪﺛﻨﺎ ﻋﺒﺪ اﻟﻠﻪ ﺑﻦ ﻣﺴﻠﻤﺔ، ﻋﻦ ﻣﺎﻟﻚ، ﻋﻦ ﺃﺑﻲ اﻟﺰﻧﺎﺩ، ﻋﻦ اﻷﻋﺮﺝ، *ﻋﻦ ﺃﺑﻲ ﻫﺮﻳﺮﺓ ﺭﺿﻲ اﻟﻠﻪ ﻋﻨﻪ، ﺃﻥ ﺭﺳﻮﻝ اﻟﻠﻪ ﺻﻠﻰ اﻟﻠﻪ ﻋﻠﻴﻪ ﻭﺳﻠﻢ، ﻗﺎﻝ: " اﻟﺼﻴﺎﻡ ﺟﻨﺔ ﻓﻼ ﻳﺮﻓﺚ ﻭﻻ ﻳﺠﻬﻞ، ﻭﺇﻥ اﻣﺮﺅ ﻗﺎﺗﻠﻪ ﺃﻭ ﺷﺎﺗﻤﻪ ﻓﻠﻴﻘﻞ: ﺇﻧﻲ ﺻﺎﺋﻢ ﻣﺮﺗﻴﻦ "*

_*🍃நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயமாகும். எனவே நோன்பாளி கெட்ட பேச்சுக்களைப் பேச வேண்டாம். முட்டாள் தனமான செயல்களில் ஈடுபட வேண்டாம். யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால், நான் நோன்பாளி என்று இரு முறை கூறட்டும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர்:*
               *அபூஹுரைரா (ரலி),*

   *📚 நூல்: புகாரி 1894 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄மணமான வாசனையும்*
            *மகத்தான கூலியும்☄*

_அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:_

_*🍃என் உயிர் எவன் கைவசம் இருக்கின்றதோ அவன் மேல் ஆணையாக, நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும். “எனக்காக நோன்பாளி தனது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டு விடுகின்றார். நோன்பு எனக்கு உரியது. அதற்கு நானே கூலி கொடுப்பேன். ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்காகும்” (என்று அல்லாஹ் கூறுகின்றான்)*_

*🎙அறிவிப்பவர்:*
              *அபூஹுரைரா (ரலி),*

*📚 நூல்: புகாரி 1894 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment