பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Monday, April 6, 2020

மண்ணறை வாழ்க்கை - 25

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 25 ]*

*மண்ணறை தண்டனைக்கான*
             *காரணங்கள் [ 08 ]*

*☄வாங்கிய கடனை*
         *ஒப்படைக்காமல் இருத்தல்☄*

*🏮🍂 வாங்கிய கடனை உரியவரிடத்தில் முறையாக ஒப்படைக்காவிட்டால் அது பெரும் குற்றமாகும்.* கடனை அடைக்காமல் இறந்து விட்டால் இறந்தவரின் உறவினர்கள் அக்கடனை அடைக்க வேண்டும். *இல்லாவிட்டால் மரணத்திற்கு பிறகு கிடைக்கும் பாக்கியங்களை மரணித்தவரால் அனுபவிக்க முடியாத துர்பாக்கியமான நிலை ஏற்படும்.*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இறைநம்பிக்கையாளரின் ஆத்மா அவர் வாங்கிய கடன் காரணத்தால் அவர் சார்பில் அது நிறைவேற்றப்படுகிற வரை (அந்தரத்தில்) தொங்கவிடப்படுகிறது.*_

*🎙அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)*

*📚 நூல் : திர்மிதி (999) 📚*

_*🍃ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் தொழுதுவிட்டு இங்கே இன்னாருடைய கூட்டத்தாரில் யாராவது (புதைக்கப்பட்டார்களா❓) என்று மூன்று முறை கேட்டார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு யாரும் பதில் கூறவில்லை. இறந்து விட்ட இந்த மனிதர் தன் மீதிருந்த கடன் காரணத்தால் சொர்க்கத்தை விட்டும் தடுக்கப்பட்டுவிட்டார். நீங்கள் விரும்பினால் அவருக்கு பதிலாக நீங்கள் அவரின் கடனை நிறைவேற்றுங்கள். இல்லையென்றால் அல்லாஹ்வின் வேதனையின்பால் அவரை ஒப்படைத்துவிடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர் : சமூரா பின் ஜுன்துப் (ரலி)*

*📚 நூல் : மஸானீது ஃபிராஸ் (16) 📚*

🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙

*☄இதுவரை மண்ணறை வாழ்க்கை என்பது உண்மையானது. மண்ணறை வாழ்க்கையில் பாவிகளுக்கு கிடைக்கும் தண்டனைகள் மற்றும் தண்டனைக்கான காரணங்கள் ஆகியவற்றைப் பற்றி முழுமையாக அறிந்துக் கொண்டோம்.*

*☄ இன்ஷா அல்லாஹ் நாளை முதல் நல்லோர்களின் மண்ணறை வாழ்க்கை எப்படி இருக்கும் என்பதை குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் அறிந்துக் கொள்வோம்.*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment