*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*💁🏻♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
⤵
*மண்ணறை வாழ்க்கை*
*✍🏼...தொடர்- [ 35 ]*
*மண்ணறை வெற்றிக்கான*
*காரணங்கள் [ 03 ]*
*🏖 இறுதி பாகம் 🏖*
*☄உயிர் தியாகம் செய்யாதவருக்கும் ஷஹீதுடைய அந்தஸ்து☄*
*🏮🍂அல்லாஹ்வின் பாதையில் போரிட்டுக் கொல்லப்பட வேண்டிய நிலை வந்தால் உயிரைத் தியாகம் செய்வதற்கு நாம் தயாராக இருக்க வேண்டும்.* அல்லாஹ்விற்காக போரிட்டு மரணிக்கும் பாக்கியத்தை மனப்பூர்வமாக இறைவனிடம் கேட்க வேண்டும்.
*இதனால் போரிட்டு இறக்காமல் சாதாரணமாக இறந்தாலும் கூட அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு கொல்லப்பட்டவர்களுக்குக் கிடைக்கும் சிறப்புகள் நமக்குக் கிடைக்கும். விசாரனை இல்லாமல் மண்ணறை வேதனையிருந்து ஷஹீதுகள் பாதுகாக்கப்படுவதைப் போல் நாமும் பாதுகாக்கப்படுவோம்.*
_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் உண்மையான மனதுடன் இறை வழியில் வீரமரணம் அடைவதை வேண்டுகிறாரோ, அவர் அ(தற்குரிய அந்தஸ்)தை அடைந்து கொள்வார்; அவரை வீரமரணம் தழுவாவிட்டாலும் சரியே!*_
*🎙அறிவிப்பவர் : அனஸ் பின் மாரிக் (ரலி),*
*📚 நூல் : முஸ்லீம் (3869) 📚*
_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் உண்மையான மனதுடன் இறைவனிடம் வீர மரணத்தை வேண்டுவாரோ, அவரை உயிர்த் தியாகிகளின் தகுதிகளுக்கு அல்லாஹ் உயர்த்துவான்; அவர் தமது படுக்கையில் (இயற்கை) மரணமடைந்தாலும் சரியே!*_
*🎙அறிவிப்பவர் : சஹ்ல் பின் ஹனைஃப் (ரஹ்),*
*📚 நூல் : முஸ்லீம் (3870) 📚*
🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙🥙
*☄சிரமங்களைப் பொறுத்துக் கொள்ள வேண்டும்☄*
*🏮🍂மறுமையில் நிறைய பலன்களை அடைய வேண்டும் என்பதற்காக இந்த உலகத்தில் அல்லாஹ் நமக்கு நோய்களையும் சிரமங்களையும் தருகிறான்.* இதை சகித்துக் கொள்ளாதவர்கள் இறைவனை ஏசி நன்றி கெட்ட தனமாக நடந்து கொள்கிறார்கள். இது தவறாகும்.
*எவ்வளவு சிரமங்கள் வந்தாலும் அதைப் பொறுத்துக் கொண்டு மருத்துவம் செய்பவர்களுக்கு இறைவனின் அன்பும் அருளும் கிடைக்கிறது.*
*🏮🍂 வயிற்று வயால் இறந்தவர்கள் கப்ரில் வேதனை செய்யப்பட மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.*
_*🍃சுலைமான் பின் ஸ‚ரத் மற்றும் ஹாத் பின் உர்ஃபுதா ஆகியோருடன் நான் அமர்ந்திருந்தேன். வயிற்று நோயால் இறந்து போன ஒருவருரை (புதைப்பதற்காக) பின்தொடர்ந்து செல்ல வேண்டும் என்று அவ்விருவரும் எண்ணிக் கொண்டிருந்தார்கள். அப்போது வயிற்று நோயால் இறந்து விடுபவர் மண்ணறையில் வேதனை செய்யப்பட மாட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள். இல்லையா❓ என்று அவர்களில் ஒருவர் இன்னொருவரிடம் கேட்டார். அதற்கு ஆம் என்று இன்னொருவர் பதிலளித்தார்.*_
*🎙அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் யஸார் (ரஹ்)*
*📚 நூல் : அஹ்மத் (17591) 📚*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*தொடர் முடிந்தது*
⤵⤵⤵
அல்ஹம்துலில்லாஹ்
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment