பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Saturday, April 18, 2020

மண்ணறை வாழ்க்கை - 32

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 32 ]*

*நல்லோர்களின் மண்ணறை*
                  *வாழ்க்கை [ 07 ]*

*☄சொர்க்கம் எடுத்துக் காட்டப்படும்☄*

*🏮🍂நல்லடியார் சந்தோஷமாக மண்ணறை வாழ்வைக் கழிக்க வேண்டும் என்பதற்காக அடிக்கடி அவருக்கு சொர்க்கம் காட்டப்படும். அதைப் பார்த்து அவர் சந்தோஷம் அடைந்து கொண்டே இருப்பார்.*

_*🍃அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : உங்களில் ஒருவர் இறந்து விட்டால் அவர் தங்குமிடம் அவருக்குக் காலையிலும் மாலையிலும் எடுத்துக் காட்டப்படும். அவர் சொர்க்கவாசியாக இருந்தால் சொர்க்கத்தில் இருப்பதாகவும், நரகவாசியாக இருந்தால் நரகத்தில் இருப்பதாகவும் (எடுத்துக் காட்டப்படும்). மேலும், ”அல்லாஹ் மறுமை நாளில் உன்னை எழுப்புகின்ற வரை இதுவே (கப்றே) உனது தங்குமிடம்” என்றும் கூறப்படும்.*_

*🎙அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),*

*📚 நூல் : புகாரி (1379) 📚*

_*🍃நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நல்லடியாருக்கு நரகத்தின் ஒரு வாசலைக் காட்டுங்கள் என்று கூறப்படும். நரகத்தின் ஒரு வாசல் அவருக்கு காண்பிக்கப்பட்டு நீ அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்திருந்தால் இது தான் உனது இடமாக ஆகியிருக்கும். (ஆனால் நீ மாறு செய்யவில்லை. எனவே இதிலி­ருந்து தப்பித்து விட்டாய்.) என்று கூறப்படும். அப்போது அவர் மிகவும் சந்தோஷமும், பரவசமும் அடைவார். பிறகு இவருக்கும் சொர்க்கத்தின் ஒரு வாசலைத் திறந்து விடுங்கள் என்று கூறப்படும். சொர்க்கத்தின் வாசல் அவருக்காக திறக்கப்பட்டு இது தான் அல்லாஹ் உனக்கு ஏற்படுத்திய உனது இடமாகும் என்று கூறப்படும். அப்போது அவர் சந்தோஷமும் பரவசமும் அடைவார்.*_

*🎙அறிவிப்பவர் : அபூஹரைரா (ரலி),*

*📚 நூல் : தப்ரானி (2680) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment