பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Wednesday, April 15, 2020

மண்ணறை வாழ்க்கை - 31

*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*

*💁🏻‍♂ குர்ஆன் ஹதீஸ் ஔியில்*
                               ⤵
         *மண்ணறை வாழ்க்கை*

          *✍🏼...தொடர்- [ 31 ]*

*நல்லோர்களின் மண்ணறை*
                  *வாழ்க்கை [ 06 ]*

*☄அழகான மாளிகை☄*

*🏮🍂மண்ணறை வாழ்வு என்று சொல்லப்படுவதால் புதைக்கப்பட்ட இடத்தில் தான் இறந்தவர்கள் இருப்பதாக எண்ணிவிடக் கூடாது.* மரணிக்கும் மக்களில் அதிகமானோரை மண்ணில் புதைப்பதால் மண்ணறை வாழ்க்கை என்று நாம் அழைக்கிறோம். *கட­ல் மூழ்கி மீனிற்கு இரையாகியவர்கள், தீயில் கருகி சாம்பலானவர்கள், மிருகங்களால் வேட்டையாடப்பட்டு உண்ணப்பட்டவர்கள் இவர்களுக்கெல்லாம் கப்ரு என்பது கிடையாது. ஆனால் மண்ணில் புதைக்கப்பட்டவர்கள் சந்திக்கும் மறைமுகமான வாழ்வை இவர்களும் கண்டிப்பாகச் சந்திப்பார்கள்.*

*🏮🍂இறந்து விட்ட நல்லடியார்களுக்கு அற்புதமான அழகான வீடு தயார் செய்து தரப்படும். அங்கே அவர்கள் மண்ணறை வாழ்வு என்ற மறைமுகமான வாழ்வை இன்பமாகக் கழித்துக் கொண்டிருப்பார்கள்.* நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் இரவின் போது *நல்லவர்களுக்கு இப்படிப்பட்ட பாக்கியம் இருப்பதை உணர்ந்து கொண்டார்கள்.*

_*ﻭاﻟﺪاﺭ اﻷﻭﻟﻰ اﻟﺘﻲ ﺩﺧﻠﺖ ﺩاﺭ ﻋﺎﻣﺔ اﻟﻤﺆﻣﻨﻴﻦ، ﻭﺃﻣﺎ ﻫﺬﻩ اﻟﺪاﺭ ﻓﺪاﺭ اﻟﺸﻬﺪاء، ﻭﺃﻧﺎ ﺟﺒﺮﻳﻞ، ﻭﻫﺬا ﻣﻴﻜﺎﺋﻴﻞ، ﻓﺎﺭﻓﻊ ﺭﺃﺳﻚ، ﻓﺮﻓﻌﺖ ﺭﺃﺳﻲ، ﻓﺈﺫا ﻓﻮﻗﻲ ﻣﺜﻞ اﻟﺴﺤﺎﺏ، ﻗﺎﻻ: ﺫاﻙ ﻣﻨﺰﻟﻚ، ﻗﻠﺖ: ﺩﻋﺎﻧﻲ ﺃﺩﺧﻞ ﻣﻨﺰﻟﻲ، ﻗﺎﻻ: ﺇﻧﻪ ﺑﻘﻲ ﻟﻚ ﻋﻤﺮ ﻟﻢ ﺗﺴﺘﻜﻤﻠﻪ ﻓﻠﻮ اﺳﺘﻜﻤﻠﺖ ﺃﺗﻴﺖ ﻣﻨﺰﻟﻚ "*_

_*🍃பிறகு அவ்விருவரும் என்னை அம்மரத்தில் ஏற்றிக் கொண்டு போய் அங்கு ஒரு வீட்டில் பிரவேசிக்கச் செய்தார்கள். நான் இது வரை அப்படி ஓர் அழகான வீட்டைப் பார்த்ததேயில்லை. அதில் சில ஆண்களும் வயோதிகர்களும், இளைஞர்கள், பெண்கள், சிறுவர்கள் ஆகியோரும் இருந்தனர். பிறகு அவ்விருவரும் அங்கிருந்து என்னை அழைத்து மரத்தில் ஏற்றி இன்னொரு மாளிகையில் பிரவேசிக்கச் செய்தனர். அது மிகவும் அழகானதும் சிறப்பானதுமாக இருந்தது. அதில் வயோதிகர்களும் இளைஞர்களும் இருந்தனர். பிறகு நான் இருவரிடமும் ”இரவு முழுவதும் என்னை நீங்கள் சுற்றிக் காண்பீத்தீர்களே, அப்போது நான் கண்டவற்றைப் பற்றிய விவரங்களைச் சொல்லுங்கள்!” எனக் கேட்டேன். அதற்கு இருவரும் ”ஆம்,.. நீர் நுழைந்த முதல் மாளிகை சராசரி மூமின்களின் இருப்பிடம். அடுத்த மாளிகையோ உயிர்த் தியாகிகளின் இருப்பிடம். நான் ஜிப்ரீல். இவர் மீக்காயீல்’ என்று கூறிவிட்டு, ‘இப்போது உமது தலையை உயர்த்தும்!’ என்றனர். நான் எனது தலையை உயர்த்தியதும் எனக்கு மேற்புறம் மேகம் போல் இருந்தது. அப்போது இருவரும் ‘இதுவே (மறுமையில்) உமது இருப்பிடம்’ என்றதும் நான் ”எனது இருப்பிடத்தில் என்னை நுழைய விடுங்களேன்’ என்றேன். அதற்கு இருவரும் ‘உமது வாழ் நாள் இன்னும் மிச்சமிருக்கிறது; அதை நீர் இன்னும் பூர்த்தி செய்யவில்லை. எனவே அதனை நீர் பூர்த்தி செய்ததும் நீர் உமது இருப்பிடம் வருவீர்’ என்றனர்” என்று கூறினார்கள்.*_

*🎙அறிவிப்பவர் : சமுரா பின்த் ஜ‚ன்துப் (ரலி),*

*📚 நூல் : புகாரி (1386) 📚*

🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜

        *இன்ஷா அல்லாஹ்*
                            ⤵⤵⤵
                           ✍🏼...தொடரும்

🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻

No comments:

Post a Comment