*💐அஸ்ஸலாமு அலைக்கும்💐*
*📖அல்குர்ஆன்*
*வசனமும்📖*
⤵️
*📖இறங்கியதற்க்கான*
*காரணங்களும்📖*
*✍🏻....தொடர் : 09*
*☄️ஒரே வசனத்திற்க்கு*
*ஒன்றுக்கும் மேற்பட்ட*
*ஸபபுன்னுஸுல்*
*வருதல் [ 04 ]*
*☄️4- இரண்டு அறிவிப்புகளும் ஒன்றை விட ஒன்றை முன்னிலைப்படுத்த முடியாத அளவுக்கு வலுவில் சமமாக இருந்தால் இரண்டையும் இணைத்து ஒரு முடிவு செய்வது. இரண்டு நிகழ்ச்சிகள் அடுத்தடுத்து நடந்தால் அவ்விரண்டையும் காரணமாக வைத்து அந்த வசனம் இறங்கியதாக முடிவு செய்வது.*
*👇 இதற்கு உதாரணமாக 👇*
*🏮🍂 லிஆன் (சாப பிரமாண) வசனங்கள் என்று கூறப்படும் சூரத்துன்னூரின் 6 முதல் 9 வரையிலான வசனம்க்களுக்கு கூறப்படும் இரு ஸபபுன்னுஸுல்களை எடுத்துக்கொள்ளலாம்.*
_*🍃இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:*_
_*ஹிலால் பின் உமய்யா தன் மனைவியை ஷதீத் பின் ஸஹ்மாவோடு தொடர்பு படுத்தி குற்றம் சுமத்தியபோது சூரத்துன்னுரின் 6 முதல் 9 வரையிலான வசனங்கள் இறங்கியது.*_
*📚 நூல் : (புகாரி: 4747) 📚*
_(இச்செய்தியை முழுமையாக முன்பு படித்துள்ளோம்)._
_*🍃ஸஹ்ல் பின் ஸஃது (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:*_
_*ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து யாரசூலல்லாஹ், ஒருவர் தன் மனைவியுடன் ஒரு ஆணைக்கண்டு அவனை அவர் கொல்ல அவரை நீங்கள் கொல்வீர்களா❓ அல்லது அவர் எப்படிச் செய்ய வேண்டும் எனக் கேட்டார். அப்போது, சாபப்பிராணம் பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளவற்றை (சூரத்துன்னூரின் 6 முதல் 9 வரையிலான வசனங்களை) அல்லாஹ் இறக்கிவைத்தான்.*_
*📚 (புகாரி 4746) 📚*
_மேற்குறிப்பிட்ட வசனங்கள்:_
_*🍃24:6 எவர்கள் தம் மனைவிமார்களை அவதூறு கூறி (அதை நிரூபிக்கத்) தங்களையன்றி அவர்களிடம் வேறு சாட்சிகள் இல்லாமலிருந்தால் அவன், நிச்சயமாக தாம் உண்மையே கூறுவதாக அல்லாஹ்வின்மீது நான்கு முறை சத்தியம் செய்து கூறி*_
_*24:7 ஐந்தாவது முறை, “(இதில்) தான் பொய் சொல்வதாக இருந்தால், நிச்சயமாக அல்லாஹ்வுடைய சாபம் தன்மீது உண்டாகட்டும்” என்றும் (அவன் கூற வேண்டும்).*_
_*24:8 இன்னும் (அவனுடைய மனைவி குற்றத்தை மறுத்து) தன் மீதுள்ள தண்டனையை விலக்க, “நிச்சயமாக அவன் பொய்யர்களில் நின்றுமுள்ளவன்” என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து நான்கு முறை கூறி*_
_*24:9 ஐந்தாவது முறை, “அவன் உண்மையாளர்களிலுள்ளவனானால் நிச்சயமாக அல்லாஹ்வுடைய கோபம் தன்மீது உண்டாவதாக என்றும் (அவள் கூற வேண்டும்).*_
*🏮🍂ஆக சூரத்துன்னூரின் ஆறு முதல் ஒன்பது வரையிலான வசனங்கள் இறங்க மேற்பட்ட இரண்டு நிகழ்வுகளும் காரணமாக இருந்திருக்கின்றன.* இரண்டு நிகழ்வுகளும் அடுத்தடுத்து நடந்திருக்கின்றன என்பது தெளிவாகிறது. *ஆகவே இரு நிகழ்வுகளையும் அந்த வசனங்களுக்கு ஸபபுன்னுஸுலாகக் கொள்ளலாம்.*
🔜🔜🔜🔜⤵⤵⤵🔜🔜🔜🔜
*இன்ஷா அல்லாஹ்*
⤵⤵⤵
*✍🏼...தொடரும்*
🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻🌻
No comments:
Post a Comment