பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மானிர் ரஹீம்

எங்கள் இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகின்றோம். மேலும் உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகின்றோம். எங்களுக்கு நீ நேரான வழியை காண்பிதருள்வாயாக! (அல்குர் ஆன்-1:4-5)

Ayyampet ALEEM

Abdul Aleem.
Ayyampet.
aleem_beatz@yahoo.com


Sunday, November 15, 2020

இஸ்லாத்தை அறிந்து - 107

*☪️☪️மீள்☪️ பதிவு☪️☪️* 


 *🧕🧕🧕இஸ்லாமிய  மகளிர் தாவா குழு வழங்கும்🧕🧕🧕* 


 *🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹* 


 *❤❤❤மனக்குழப்பத்திற்கு மகத்தான தீர்வு❤❤❤* 


 *🕋🕋🕋இஸ்லாத்தை அறிந்து கொள்வோம்🕋🕋🕋* 
                                                                         

 *🌐🌐🌐 இஸ்லாம் சமந்தமான சந்தேகங்களும் தெளிவான விளக்கங்களும்🌐🌐🌐* 

 
 *📚📚📚அல்குர்ஆன் மற்றும்📚📚📚 ஹதீஸ்ஆதாரங்களுடன் ஒரு தேடல் உங்கள் பார்வைக்கு📚📚📚*


 *👉 👉 👉 இது ஒரு நீண்ட கட்டுரை பொறுமையாக படிக்கவும் 👈 👈👈*


 *👉👉👉  தொடர்  பாகம் 107 👈👈👈* 
 

*📚📚📚 தலைப்பு  10  குர்ஆன் வசனம் இறங்கிய காரணம் 📚📚📚* 


 *21. ☪️☪️☪️நபியின்🕋🕋 முன் 🧶சப்தத்தை🟣 உயர்த்திய🟡 போது🟠 இறங்கிய ⚫வசனம்📚📚📚* 


 *22. 📚📚📚தெளிவான 🕋🕋வெற்றி☪️☪️ அத்தியாயம்🔰🔰 இறக்கப்படல்📚📚📚* 


 *23. 🙋‍♂️🙋‍♂️🙋‍♂️குறைஷிகள்🙋‍♀️🙋‍♀️ இரகசியம்🟣🟣 பேசிய போது🟡🟡 இறங்கியது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 



 *24. 👹👹👹பாவங்களுக்கு🔰🔰 பரிகாரம் 🧶🧶 உண்டா❓🟡🟡 என்று 🟣🟣கேட்ட🟠🟠 போது⚫⚫ இறங்கியது📚📚📚* 


 *25. 🧕🧕🧕பர்தா🧕🧕 எனும் ⚫திரை🟣 சம்மந்தமான🟡 சட்டம்🟠 இறங்கியது📚📚📚* 


 *21. ☪️நபியின்🕋 முன் 🧶சப்தத்தை🟣 உயர்த்திய🟡 போது🟠 இறங்கிய ⚫வசனம்📚* 


 *✍️✍️✍️இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:* 
 *(ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக் கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்த போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாஷிஉ குலத்தவரான அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். மற்றொருவர் (அபூபக்ர்), இன்னொருவரை (கஅகாஉ பின் மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். அந்த இன்னொருவருடைய பெயர் எனக்குத் தெரியாது என்று அறிவிப்பாளர் களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.- அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், எனக்கு மாறுசெய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கூறினார்கள்🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *✍️✍️✍️உமர் (ரலி) அவர்கள், தங்களுக்கு மாறுசெய்வது என் விருப்பமன்று என்று சொன்னார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன.* 
 *அப்போது, இறை நம்பிக்கை கொண்டவர் களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! எனும் (அல்குர்ஆன் 49:2ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.2✍️✍️✍️* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:* 
 *இந்த வசனம் அருளப்பெற்ற பின் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்து கொள்வார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *(புகாரி 4845)* 


 *✍️✍️✍️அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *(அல்குர்ஆன் 49:2ஆவது வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒரு மனிதர் அவரைக் குறித்த செய்தியை தங்களுக்காக நான் அறிந்து வருகிறேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். அவரிடம் அந்த மனிதர் சென்றார். அப்போது அவர் தமது தலையைக் கவிழ்த்தபடி (கவலையோடு) தமது வீட்டில் அமர்ந்து கொண்டிருக்கக் கண்டார். அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், உங்களுக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டார். அதற்கு ஸாபித் (ரலி) அவர்கள், (எனது நிலை) மோசம்தான். நான் நபி (ஸல்) அவர்களின் குரலுக்கு மேல் எனது குரலை உயர்த்தி(ப் பேசி) வந்தேன். நான் நரக வாசிகளில் ஒருவன்தான் என்று கூறினார். (செய்தியறிந்த) அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஸாபித் பின் கைஸ் இப்படி இப்படிச் சொன்னார் என்று தெரிவித்தார்✍️✍️✍️.* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அறிவிப்பாளர்களில் ஒருவரான மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:* 

 *அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து,)மகத்தான நற்செய்தியை வாங்கிக் கொண்டு மீண்டும் ஒருமுறை சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் சென்று நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே என்று சொல்! என்று கூறினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 

 *(புகாரி 4846)* 


 *22. 📚தெளிவான 🕋வெற்றி☪️ அத்தியாயம்🔰 இறக்கப்படல்📚* 


 *✍️✍️✍️அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:* 
 *அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களும் நபி அவர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள்.* 
 *அப்போது உமர் (ரலி) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறித்து நபி (ஸல்) அவர் களிடம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை.* 
 *பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. பிறகு (மூன்றாம் முறையாக) உமர் கேட்டார்கள். அப்போதும் நபிகளார் பதிலளிக்கவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தம்மைத் தாமே கடிந்து கொண்டவர்களாக), உம்மை உமரின் தாய் இழக்கட்டும்! மூன்று முறை (கேள்வி கேட்டு) அல்லாஹ்வின் தூதரை வற்புறுத்தினாய். அந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் உனக்கு பதிலளிக்கவில்லையே என்று கூறினார்கள்.✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️மேலும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதற்குப் பிறகு நான் எனது ஒட்டகத்தைச் செலுத்தி மக்களுக்கு முன்னால் வந்தேன். (அல்லாஹ்வின் தூதரிடம் இப்படி நான் நடந்து கொண்டதற்காக) என் விஷயத்தில் ஏதாவது குர்ஆன் (வசனம்) அருளப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன்.* 
 *சற்று நேரத்திற்குள் என்னை ஒருவர் சப்தமிட்டு அழைப்பதைக் கேட்டேன். நான் நினைத்த படி என் விஷயத்தில் குர்ஆன் (வசனம்) இறங்கிவிட்டிருக்கும் என அஞ்சினேன் என்று சொல்லிக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன்.* 
 *அப்போது அவர்கள் இந்த இரவு எனக்கு ஒரு (குர்ஆன்) அத்தியாயம் அருளப்பட்டுள்ளது. சூரியன் எதன் மீது உதயமாகிறதோ அ(ந்த உலகத்)தை விட எனக்கு அந்த அத்தியாயம் மிகவும் விருப்பமானதாகும் என்று கூறிவிட்டு, உங்களுக்கு நாம் பகிரங்கமான வெற்றியை அளித்துள்ளோம் என்று (தொடங்கும் திருக்குர்ஆன் 48:1ஆவது இறைவசனத்தை) ஓதினார்கள்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *(புகாரி 4833)* 

 
 *✍️✍️✍️ஹுபைப் பின் அபீஸாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:* 
 *நான் அபூ வாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் (காரிஜிய்யா எனும் கிளர்ச்சியாளர்கள் குறித்து) கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்:* 
 *நாங்கள் ஸிஃப்பீன் எனுமிடத்தில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது (அப்துல்லாஹ் பின் அல்கவ்வாஎன்றழைக் கப்படும்) ஒரு மனிதர், அல்லாஹ்வின் வேதத்தின்பால் (தீர்ப்புக்காக) அழைக்கப்படு கின்றவர்களை நீங்கள் காணவில்லையா? என்று கேட்டார். அதற்கு அலீ (ரலி) அவர்கள், ஆம். (அல்லாஹ்வின் வேதம் கூறுகின்ற தீர்ப்புப்படி செயல்பட அழைப்புவிடுக்கப் பெற்றால் அதை நான் ஏற்றுக் கொள்வேன்) என்று கூறினார்கள். அப்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:✍️✍️✍️* 

 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️(இப்போரில் கலந்து கொள்ளாததற்காக யார் மீதும் குற்றம் சாட்டாதீர்கள். மாறாக,) உங்களையே குற்றம் சாட்டிக் கொள்ளுங்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை நடை பெற்ற ஹுதைபியா நாளில் எங்களை நான் பார்த்திருக்கிறேன். அன்று, நாங்கள் போர் புரிவது உசிதமென்று கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் இணைவைப்பவர்கள் விதித்த பாதகமான நிபந்தனைகளைக் கூட ஏற்றுக் கொண்டோம்). அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, (அல்லாஹ்வின் தூதரே!) நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா? (சத்தியத்திற்காகப் போராடி) போரில் கொலையுண்டுவிடும் போது நம் வீரர்கள் சொர்கக்கத்திலும் எதிரிகளுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அப்படியிருக்க, நாம் நமது மார்க்கத்தின் விஷயத்தில் எதற்காகத் தாழ்ந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையில் தீர்ப்பளிக்காமல் இருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்?என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கத்தாபின் புதல்வரே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்க மாட்டான் என்று கூறினார்கள். (முஸ்லிம்களை இழிவுக்குள்ளாக்க நினைக்கும் இணை வைப்பாளர்கள் மீது) உமர் (ரலி) அவர்கள் கோபம் கொண்ட நிலையில் திரும்பிச் சென்றார்கள். தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து அபூபக்ர் அவர்களே! நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா? என்று ளநபி (ஸல்) அவர்களிடம் கேட்டது போன்றேன கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் கத்தாபின் புதல்வரே! நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள். அவர்களை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்க மாட்டான் என்று கூறினார்கள். அப்போது அல்ஃபத்ஹ் எனும் (48ஆவது) அத்தியாயம் இறங்கிற்று.13🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *(புகாரி 4844)* 


 *23. 🙋‍♂️குறைஷிகள்🙋‍♀️ இரகசியம்🟣 பேசிய போது🟡 இறங்கியது🙋‍♀️* 


 *✍️✍️✍️அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *(ஒருமுறை) குறைஷியரில் இருவரும் அவர்களுடைய துணைவியரின் உறவினரான ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த ஒருவரும் அல்லது ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷிக் குலத்தைச் சேர்ந்த அவர்களுடைய மனைவிமார்களின் உறவுக்காரர் ஒருவரும் (ஆக மூவருமாக) ஒரு வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தனர்.* 
 *அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் நமது பேச்சை அல்லாஹ் கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? என்று கேட்டார்.* 
 *அவர்களில் ஒருவர், (நமது பேச்சுகளில்) சிலவற்றை மட்டும் அவன் கேட்கிறான் என்று பதிலளித்தார்.* 
 *மற்றொருவர் நமது பேச்சுகளில் சிலவற்றை அவன் கேட்டுக் கொண்டிருப்பதானால் அனைத்தையும் அவன் கேட்கத்தானே செய்வான் என்று கூறினார்.* 
 *அப்போது தான் , ”(உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்த போது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை” எனும் இந்த வசனம் (திருக்குர்ஆன் 41:22) அருளப்பெற்றது✍️✍️✍️.* 


 *(புகாரி 4816)* 


 *24. 👹பாவங்களுக்கு🔰 பரிகாரம் 🧶 உண்டா❓🟡 என்று 🟣கேட்ட🟠 போது⚫ இறங்கியது📚* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:* *இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர்; விபசாரம் அதிக மாகச் செய்திருந்தனர். (ஒரு நாள்) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகின்ற(போதனை முதலிய)வையும் நீங்கள் அழைப்புவிடுக்கின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்து விட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே) என்று கூறினர்.* 
 *அப்போது, (ரஹ்மானின் உண்மை யான அடியார்களான) அவர்கள் அல்லாஹ் வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது) என்று அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி அவர்கள் கொலை புரிவதில்லை; மேலும் விபசாரம் செய்வதில்லை… எனும் (திருக்குர்ஆன் 25:68 ஆவது) வசனம் அருளப்பெற்றது.* 
 *மேலும், (நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொண்டுவிடாதீர்கள்… எனும் (திருக்குர்ஆன் 39:53ஆவது) வசனமும் அருளப்பெற்றது🙋‍♀️🙋‍♀️🙋‍♀️.* 


 *(புகாரி 4810)* 


 *25. 🧕பர்தா🧕 எனும் ⚫திரை🟣 சம்மந்தமான🟡 சட்டம்🟠 இறங்கியது📚* 


 *✍️✍️✍️அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:* 
 *பர்தா (சட்டம்) தொடர்பான இந்த இறைவசனத்தை மக்களிலேயே அதிகமாக அறிந்தவன் நான்தான். ளநபி (ஸல்) அவர்களின் துணைவியாரானன ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மணப்பெண்ணாக அனுப்பி வைக்கப்பட்டு அவர்களுடன் வீட்டில் இருந்தார்கள்.* 
 *அப்போது நபி (ஸல்) அவர்கள் (வலீமா விருந்துக்கான) உணவைத் தயாரித்து மக்களை அழைத்தார்கள். மக்கள் (சாப்பிட்டு விட்டு) பேசிக் கொண்டே அமர்ந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் வெளியே வரவும் திரும்பச் செல்லவுமாக இருந்தார்கள். மக்களோ பேசிக் கொண்டே அமர்ந்திருந்தனர்✍️✍️✍️.* 


 *🙋‍♂️🙋‍♂️🙋‍♂️அப்போது தான் அல்லாஹ் இறை நம்பிக்கை கொண்டவர்களே! நபியின் இல்லங்களில் (அழைப்பின்றி) நுழையாதீர்கள். அவ்வாறு (நபியின் இல்லத்தில் நடக்கும்) விருந்துக்காக உங்களுக்கு அனுமதியளிக்கப்பட்டா லும், அப்போதும்கூட உணவு தயாராவதை எதிர்பார்த்து (அங்கே காத்து) இராதீர்கள். மாறாக, (உணவு தயார்; வாருங்கள் என) நீங்கள் அழைக்கப்படும் போது நுழையுங்கள். சாப்பிட்டு முடிந்ததும் கலைந்து சென்றுவிடுங்கள். பேசிக் கொண்டிருப்ப தில் ஆர்வமாய் இருந்து விடாதீர்கள். நிச்சயமாக உங்களது இச்செயல் நபிக்கு வேதனை அளிக்கின்றது. ஆயினும், இதனை உங்களிடம் கூற அவர் வெட்கப்படுகிறார். ஆனால், அல்லாஹ்வோ சத்தியத்தைக் கூற வெட்கப்படுவதில்லை.* *நபியின் துணைவியரிடம் நீங்கள் ஏதேனும் ஒரு பொருளை (அவசியப்பட்டு) கேட்கவேண்டுமென்றால், திரைக்குப் பின்னாலிருந்து கேளுங்கள் எனும் (திருக்குர்ஆன் 33:53ஆவது) வசனத்தை அருளினான். இதையடுத்துத் திரை போடப்பட்டது. மக்களும் எழுந்து விட்டனர்.🙋‍♀️🙋‍♀️🙋‍♀️* 


 *(புகாரி 4792)* 


 *26. ☪️☪️☪️அபுதாலிஃபிற்கு🟣🟣 பாவமன்னிப்பு🧶🧶 கேட்டபோது⚫⚫ இறங்கியது📚📚📚* 


 *இன்ஷா அல்லாஹ் தொடரும்  பாகம் 108* 


 *🌹🌹கட்டுரை தொகுப்பு அமீர் ஹம்ஷா திருச்சி 20🌹🌹* 

🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰🔰

No comments:

Post a Comment